4700. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்வதற்கு (மக்களுக்கு) அனுமதி யளித்தார்கள். மக்களில் சிலர் அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்துகொண்டனர். (அதைச் செய்வதை வெறுத்தனர்.) இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால் கோபம் அவர்களது முகத்தில் வெளிப்பட்டது.
பிறகு, "சிலருக்கு என்ன நேர்ந்தது? எனக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள ஒரு விஷயத்தை வெறுக்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களையெல்லாம்விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43

பாடம் : 36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பது கடமையாகும்.
4701. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகள், தம் பேரீச்சந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்ச பயன்படுத்திவந்த "ஷிராஜுல் ஹர்ரா" எனும் கால்வாய் தொடர்பாக அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் தகராறு செய்தார். அந்த அன்சாரித் தோழர், "மடையைத் திறந்துவிடுங்கள்; தண்ணீர் பாயட்டும்!" என்று சொன்னார். ஸுபைர் (ரலி) அவர்கள், (மடையைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இதையடுத்து) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களிடம், "ஸுபைரே! (உங்கள் தோப்புக்கு) நீர் பாய்ச்சிவிட்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்குத் தண்ணீரைத் திறந்துவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
உடனே அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, "அவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவர் முதலில் நீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு எனக்குத் திறந்துவிடும்படி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?" என்று கேட்டார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. அவர்கள் (என் தந்தையிடம்), "ஸுபைரே! நீங்கள் உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சுங்கள். பிறகு வரப்புகள் எட்டும்வரை தண்ணீரை (மடை கட்டி)த் தேக்கி நிறுத்தி விடுங்கள்" என்று சொன்னார்கள்.
ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! "உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்குகின்ற தீர்ப்பால் தம் உள்ளங்களில் அவர்கள் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள்" (4:65) எனும் இறைவசனம் இந்த விவகாரத்தில்தான் அருளப்பெற்றது என்று நான் எண்ணுகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும், அவர்களிடம் தேவையற்ற விஷயங்கள் அல்லது மார்க்க விதிகளுக்குத் தொடர்பில்லாதவை மற்றும் நிகழாத விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகமாகக் கேள்விகள் கேட்காமலிருப்பதும்.
4702. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை(ச் செய்ய வேண்டாமென) உங்களுக்குத் தடை செய்துள்ளேனோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் எதை(ச்செய்யுமாறு) உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4703. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் எதை(ச் செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களிடம் (உங்களது முடிவுக்கு) எது விடப்பட்டுள்ளதோ (அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டு விடுங்கள்). ஏனெனில், உங்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம்..." என்று (சிறிது வேறுபாட்டுடன்) காணப்படுகிறது.

4704. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றி (என்னிடம்) கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டு விடுமானால், அவர்தான் முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்குப் பெரும் குற்றம் இழைத்தவர் ஆவார்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4705. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்விகேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே மக்களுக்கு அது (இறைவனால்) தடை செய்யப்பட்டுவிடுமானால், அவர் தான் முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்குப் பெருங்குற்றம் இழைத்தவர் ஆவார்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவிக்கும்போது,) "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை நான் மனனமிட்டுள்ளதைப் போன்று இந்த ஹதீஸை நான் (நன்கு) மனனமிட்டுள்ளேன்" என்று கூறியதாகவும் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர் (தடை செய்யப்படாத) ஒன்றைப் பற்றிக் கேட்டார்;அதைப் பற்றி துருவித் துருவி வினவினார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

4706. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, தம் தோழர்கள் (ஒன்றைக் குறித்து அதிருப்தியாகப்) பேசியது தொடர்பாகத் தகவல் கிடைத்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (அதில்) அவர்கள், "(சற்று முன்னர்) எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று வேறெந்த நாளிலும் நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை. நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்;அதிகமாக அழுவீர்கள்" என்று குறிப்பிட்டார்கள்.
அதைவிட (மனவேதனை அளித்த) கடினமான ஒரு நாள் நபித்தோழர்களுக்கு வந்ததில்லை. அவர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதனர்.
உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "அல்லாஹ்வை (மட்டுமே) இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்" என்று கூறினார்கள்.
அ(ங்கிரு)ந்த மனிதர் (ஒருவர்) எழுந்து, "என் தந்தை யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன மனிதர்தான் உம்முடைய தந்தை" என்று சொன்னார்கள். அப்போதுதான் "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தம் தரும்" (5:101) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4707. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன மனிதர்தான் உம்முடைய தந்தை" என்று கூறினார்கள். மேலும், (அதையொட்டியே) "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தம் தரும்" (5:101) எனும் இறைவசனம் முழுமையாக அருளப்பெற்றது.

4708. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து மக்களுக்கு லுஹர் தொழுகை தொழுவித்தார்கள்.
(தொழுகை முடிந்து) சலாம் கொடுத்ததும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி யுக முடிவு நாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளுக்கு முன்பாக பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். பிறகு "எதைப் பற்றியேனும் யாரேனும் என்னிடம் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமலிருக்கமாட்டேன்" என்றும் சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு மக்கள் அதிகமாக அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கேளுங்கள் என்னிடம்" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, "என் தந்தை, யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உம்முடைய தந்தை ஹுதாஃபாதான்" என்று கூறிவிட்டு, "கேளுங்கள் என்னிடம்" எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்" என்று கூறினார்கள்.
இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். பின்னர், "(நீங்கள் விரும்பாதவை நிகழும் நாள்) நெருங்கிவிட்டது. முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சற்று முன்னர் (நான் தொழுதுகொண்டிருந்தபோது) இந்தச் சுவரி(ன் திசையி)ல் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை" என்று சொன்னார்கள்.
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் தம்மிடம் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தை யார் என்று வினவியதால் அவருடைய) தாயார்,அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களிடம், "உன்னைவிட பெற்ற தாயைப் புண்படுத்திய ஒரு மகனைப் பற்றி ஒருபோதும் நான் கேள்விப்பட்டதேயில்லை. அறியாமைக் காலப்பெண்கள் செய்யும் பாவச்செயல்களில் ஒன்றை உன் தாயும் செய்திருக்க, அவளை நீ மக்கள்முன் அம்பலப்படுத்தினால் (அவளுக்கு அவமானம் ஏற்படாது என) நீ அச்சமற்று இருப்பாயா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு கறுப்பு அடிமையுடன் இணைத்து (அவர்தான் உன் தந்தை என்று) கூறியிருந்தாலும் நிச்சயமாக அவரோடு என்னை நான் இணைத்துக்கொண்டிருப்பேன். (அவருடைய பிள்ளை என்று என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே செய்வேன்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

4709. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்தி கேள்வி கேட்டுவந்தனர். ஆகவே, ஒரு நாள் அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, "கேளுங்கள் என்னிடம்; (இன்று) நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப்போவதில்லை" என்று (கோபத்துடன்) கூறினார்கள்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு மக்கள் வாய்மூடி அமைதியாகி விட்டனர். நபியவர்கள் ஏதோ அசாதாரண நிலையில் இருக்கலாம் என்று மக்கள் பயந்து விட்டனர்.
அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது, (அங்கிருந்த) ஒவ்வொருவரும் தமது ஆடையால் தலையைச் சுற்றிப் போர்த்தியபடி அழுதுகொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதர் பேசத் தொடங்கினார். அம்மனிதர் பிறருடன் வழக்காடும்போது, அவருடைய தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என அழைக்கப்பட்டுவந்தார்.
அவர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் தந்தை ஹுதாஃபாதான்" என்று சொன்னார்கள். பிறகு (நபியவர்களின் நிலையைக் கண்ட) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், குழப்பங்களின் தீமையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியபின் "நாங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் மனநிறைவுடன் ஏற்றோம்" என்று கூறலானார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் நான் கண்டேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

4710. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு அதிகமாக வினவப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்து விட்டார்கள். பிறகு மக்களிடம், "நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர் "என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உம்முடைய தந்தை ஹுதாஃபா தான்" என்று கூறினார்கள். மற்றொருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஷைபாவின் முன்னாள் அடிமையாயிருந்த சாலிம்தான் உம்முடைய தந்தை"என்று சொன்னார்கள். (இக்கேள்வியால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் தென்பட்ட கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று கூறினார்கள்.

பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள் (விவசாயம் போன்ற) உலக நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனை என்ற முறையில் குறிப்பிட்டவை தவிர, மார்க்க விஷயங்களில் அவர்கள் கூறிய அனைத்துக்கும் கட்டுப்படுவது கடமையாகும்.
4711. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது,அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்து கொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்" என்று சொன்னார்கள்.

4712. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். மக்கள் "(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்துவருகிறோம்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்" என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் "உதிர்ந்துவிட்டன" அல்லது "குறைந்து விட்டன".
அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், "நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே" என்று சொன்னார்கள்.
(இவ்வாறே சொன்னார்கள்) அல்லது இதைப் போன்று சொன்னார்கள் என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆகவே, (அந்த ஆண்டில்) கனிகள் உதிர்ந்துவிட்டன" என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது.

4713. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்த மக்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, "நீங்கள் (இவ்வாறு) செய்யாமலிருந்தால் நன்றாயிருக்குமே!" என்று சொன்னார்கள். ஆகவே, (அவர்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். அதனால் அந்த மகசூலில்) நன்றாகக் கனியாத தாழ்ந்த ரகக் காய்களே காய்த்தன.
அப்போது அவர்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, "உங்கள் (பேரீச்ச) மரங்களுக்கு என்ன நேர்ந்தது?"என்று கேட்டார்கள். மக்கள், "நீங்கள் இப்படி இப்படிச் சொன்னீர்கள். (அதனால் நாங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது)" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 39 நபி (ஸல்) அவர்களைப் பார்த்தல், அவர்களைப் பார்க்க வேண்டுமென ஆசைப்படல் ஆகியவற்றின் சிறப்பு.
4714. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயமாக உங்களிடம் ஒரு நாள் வரும். (அன்று) என்னை நீங்கள் காண இயலாது. (நான் இறந்துபோயிருப்பேன்.) ஆனால், உங்களில் ஒருவர் (அன்று சிறிது நேரம்) என்னைப் பார்ப்ப(தற்கு வாய்ப்புக் கிடைப்ப)தானது, அவருடைய குடும்பத்தாரையும் செல்வங்கள் அனைத்தையும்விட அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும்.
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
என்னைப் பொறுத்தவரை இந்த ஹதீஸின் பொருளாவது: அவர்களுடன் என்னையும் அவர் பார்ப்பதானது, அவருடைய குடும்பத்தாரையும் செல்வங்களையும்விட அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். இந்த ஹதீஸின் வாசகங்கள், முன் பின்னாக இடம்பெற்றுள்ளது என்பதே என் கருத்தாகும்.

பாடம் : 40 (இறைத்தூதர்) ஈசா (அலை) அவர்களின் சிறப்புகள்.
4715. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மர்யமின் மைந்தருக்கு (ஈசாவுக்கு) மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈசா அவர்களுக்குமிடையே வேறு எந்த இறைத்தூதரும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4715. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மர்யமின் மைந்தருக்கு (ஈசாவுக்கு) மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈசா அவர்களுக்குமிடையே வேறு எந்த இறைத்தூதரும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4716. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஈசா (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈசா அவர்களுக்குமிடையே வேறெந்த இறைத்தூதரும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
நான் ஈசா (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈசா அவர்களுக்குமிடையே வேறெந்த இறைத்தூதரும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4717. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இம்மையிலும் மறுமையிலும் மர்யமின் மைந்தர் ஈசா அவர்களுக்கு மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன்" என்று கூறினார்கள்.
அப்போது "அது எப்படி, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நபிமார்களின் அன்னையர்கள் (வேறுபட்ட) பலராய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். அவர்கள் அனைவரது மார்க்கமும் ஒன்றே. எங்கள் (இருவர்) இடையே எந்த இறைத்தூதரும் இல்லை" என்று சொன்னார்கள்.

4718. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அதை ஷைத்தான் தீண்டாமல் இருப்பதில்லை. ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை வீறிட்டழுகிறது; மர்யமின் புதல்வரையும் அவருடைய தாயார் மர்யமையும் தவிர" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால், "இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் நான் கோருகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)" (3:36) எனும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குழந்தை பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை வீறிட்டழுகிறது" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
ஷுஐப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("ஷைத்தான் தீண்டுவதால்" என்பதைக் குறிக்க "மிம் மஸ்ஸத்திஷ் ஷைத்தான்"என்பதற்குப் பகரமாக) "மிம் மஸ்ஸிஷ் ஷைத்தான்" என்று (சிறிய மாற்றத்துடன்) காணப்படுகிறது.

4719. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவரையும், தாய் வயிற்றிலிருந்து அவன் பிறக்கும் நாளில் ஷைத்தான் தீண்டவே செய்கிறான்; மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர.