4680. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், "நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒருசில நரைமுடிகூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடி தென்படும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43

4681. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலை மற்றும் தாடியின் முன்பகுதி பழுப்பேறி (வெண்மையாகி) இருந்தது. அவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்திருந்தால் அந்த வெண்மை தென்படாது. அவர்கள் (எண்ணெய் தேய்க்காமல்) பரட்டை தலையுடன் இருந்தால் அந்த வெண்மை தென்படும். அவர்களது தாடியில் அதிகமான முடிகள் இருந்தன" என்று கூறினார்கள்.
அப்போது (அங்கிருந்த) ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் வாளைப் போன்று (மின்னிக்கொண்டு நீண்டதாக) இருந்ததா?" என்று கேட்டார். ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் (அதை மறுத்து), "இல்லை; அவர்களது முகம் சூரியனைப் போன்றும் சந்திரனைப் போன்றும் இருந்தது; வட்டமானதாக இருந்தது. அவர்களது முதுகில் தோள்பட்டை அருகில் நபித்துவ முத்திரையை நான் கண்டேன். அது புறா முட்டை போன்று அவர்களது உடலின் நிறத்திலேயே இருந்தது" என்று கூறினார்கள்.

பாடம் : 30 நபி (ஸல்) அவர்களது உடலில் நபித்துவ முத்திரை இருந்தது என்பதற்கான சான்றும், அதன் தன்மையும், அவர்களது உடலில் அது அமைந்திருந்த இடமும்.
4682. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முதுகில் (நபித்துவ) முத்திரை இருந்ததை நான் பார்த்தேன். அது புறா முட்டை போன்று இருந்தது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4683. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் தாயின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்" என்று சொன்னார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்(து மிச்சம் வைத்)த தண்ணீரில் நான் சிறிது குடித்தேன்.
பிறகு நான் அவர்களுடைய முதுகுக்குப் பின்னே நின்றேன். அப்போது அவர்களுடைய தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4684. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அவர்களுடன் "ரொட்டி இறைச்சி" அல்லது "தக்கடி உணவு" சாப்பிட்டேன்" என்று கூறினார்கள்.
அவர்களிடம் நான், "உங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள், "ஆம்; உங்களுக்கும்தான் (பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள்)" என்று கூறிவிட்டு, "(நபியே!) உம்முடைய பாவத்திற்காகவும் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் நீர் பாவமன்னிப்புக் கோருவீராக" (47:19) எனும் இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
மேலும் கூறினார்கள்: பிறகு நான் நபி (ஸல்) அவர்க(ளுடைய முதுகு)க்குப் பின்னே சுற்றிவந்தேன். அப்போது அவர்களுடைய இரு தோள்பட்டைகளுக்கிடையே இடப் பக்கத் தோளின் மேற்புறத்தில் கை முஷ்டியைப் போன்று (துருத்திக்கொண்டும்) கொப்புளங்களைப் போன்று தழும்பாகவும் உள்ள நபித்துவ முத்திரையைக் கண்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பும் அவர்கள் நபியாக அனுப்பப்பெற்றதும் அவர்களின் வயதும்.
4685. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு மிக உயரமானவர்களாகவும் இல்லை;குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடிவுடையவர்களாகவும் இல்லை.
நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள்.
அறுபதாம் வயதின் தொடக்கத்தில் அவர்களை இறைவன் இறக்கச் செய்தான். அப்போது அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "அவர்கள் ஒளிரக்கூடியவர்களாக இருந்தார்கள்" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

பாடம் : 32 நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை?
4686. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.

4687. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 33 நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?
4688. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்ட பின்னர்) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "பத்து ஆண்டுகள்" என்று பதிலளித்தார்கள். நான், "ஆனால், பதிமூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்" என்று சொன்னேன்.
- அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உர்வா (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்ட பின்பு) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்து ஆண்டுகள்" என்று பதிலளித்தார்கள். "ஆனால்,பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்களே?" என்று நான் கேட்டேன்.
அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், "அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" என்று பாவ மன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்துவிட்டு, "இப்னு அப்பாஸ், அந்த (அபூகைஸ் என்ற) கவிஞரின் வரிகளிலிருந்தே அதை எடுத்துரைக்கிறார்"என்று சொன்னார்கள்.

4689. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4690. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்காவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். (புலம் பெயர்ந்தபின்) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.

4691. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அ(ங்கிருந்த)வர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயது பற்றிப் பேசிக்கொண்டனர். சிலர், "அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட அதிக வயதுடையவராக இருந்தார்கள்" என்று கூறினர். அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்று வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அறுபத்து மூன்றாம் வயதில் கொல்லப் பட்டார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஆமிர் பின் சஅத் (ரஹ்) எனப்படும் ஒருவர் கூறினார்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு எங்களிடம் கூறினார்கள்:
(ஒரு முறை) நாங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அ(ங்கிருந்த)வர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வயது பற்றிப் பேசிக் கொண்டனர். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்று வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அறுபத்து மூன்று வயதில் கொல்லப் பட்டார்கள்" என்று கூறினார்கள்.

4692. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றும்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அறுபத்து மூன்றாம் வயதிலேயே இறந்தனர். நானும் அறுபத்து மூன்றாம் வயதிலேயே (இறக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
முஆவியா (ரலி) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றும்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அறுபத்து மூன்றாம் வயதிலேயே இறந்தனர். நானும் அறுபத்து மூன்றாம் வயதிலேயே (இறக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4693. பனூ ஹாஷிம் குலத்தாரின் முன்னாள் அடிமையான அம்மார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு எத்தனை வயது நடந்துகொண்டிருந்தது?" என்று கேட்டேன். "ஒரு கூட்டத்தில் உள்ள உம்மைப் போன்ற ஒருவருக்கு இந்த விவரம்கூட தெரியாமலிருக்கும் என்று நான் கருதவில்லை" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், "இதைப் பற்றி மக்களிடம் நான் கேட்டு விட்டேன். ஆனால், அவர்கள் மாறுபட்ட கருத்தை என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, அதில் தங்களது கருத்தை அறிய விரும்பினேன்" என்று சொன்னேன்.
உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீர் எண்ணிக் கணக்கிடுவாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "நாற்பது வயதிலிருந்து தொடங்குவீராக. நாற்பதாவது வயதில் அவர்கள் நபியாக அனுப்பப்பெற்றார்கள். பதினைந்து ஆண்டுகள் மக்காவில் (சில வேளை எதிரிகளைப் பற்றிய) பயமின்றியும் (சில வேளை) பயத்துடனும் இருந்தார்கள். மதீனாவிற்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4694. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து ஐந்தாம் வயதில் இறந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து ஐந்தாம் வயதில் இறந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4695. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபித்துவத்துக்குப்பின்) மக்காவில் பதினைந்து ஆண்டுகள் தங்கினார்கள். (அங்கு வானவர்) யாரையும் (நேரடியாகப்) பார்க்காமல் வெறும் (அசரீரி) சப்தத்தைக் கேட்டுக்கொண்டும் (வானவரின்) ஒளியைப் பார்த்துக்கொண்டும் ஏழு ஆண்டுகள் இருந்தார்கள். மேலும், எட்டு ஆண்டுகள் வேதஅறிவிப்பு (குர்ஆன்) அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்தார்கள். (புலம்பெயர்ந்தபின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்.

பாடம் : 34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள்.
4696. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ" (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் (ஏக) இறைமறுப்பு அழிக்கப்படுகிறது. நான் "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் இல்லை.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4697. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ" (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை" என்று கூறினார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் "ரஊஃப்" (பேரன்புடையவர்) என்றும் "ரஹீம்" (இரக்கமுடையவர்) என்றும் பெயர் சூட்டியுள்ளான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் "ஆகிப்" என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "தமக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லாதவர்" என்று பதிலளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
மஅமர், உகைல் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "(என் மூலம் ஏக இறை)மறுப்பாளர்களை (அல்லாஹ் அழிக்கிறான்)"என்று இடம்பெற்றுள்ளது. ஷுஐப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இறைமறுப்பை (அழிக்கிறான்)" என்று இடம்பெற்றுள்ளது.

4698. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பல பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். "நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்), "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் போற்றுபவர்), "முகஃப்பீ" (இறுதியானவர்), "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்), "நபிய்யுத் தவ்பா" (பாவமன்னிப்புடன் வந்த தூதர்), "நபிய்யுர் ரஹ்மத்" (இரக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு போதிக்க வந்த தூதர்) ஆவேன்" என்று கூறினார்கள்.

பாடம் : 35 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிகவும் அறிந்திருந்ததும் அவனை மிகவும் அஞ்சி நடந்ததும்.
4699. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செயலைத் தாமும் செய்துவிட்டு (மற்றவர் களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். இச்செய்தி நபித்தோழர்களில் சிலருக்கு எட்டியபோது, அதை விரும்பாததைப் போன்று அதைச் செய்வதிலிருந்து அவர்கள் தவிர்ந்து கொண்டனர்.
இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) நின்று உரையாற்றினார்கள்.
அப்போது "சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் ஒன்றைச் செய்வதற்கு அனுமதியளித்த செய்தி அவர்களுக்கு எட்டியும்கூட அதை அவர்கள் வெறுத்து, அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களையெல்லாம் விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.