4720. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷைத்தான் தீண்டுவதாலேயே குழந்தை பிறக்கும்போது வீறிட்டழுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43

4721. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மர்யமின் புதல்வர் (ஈசா (அலை) அவர்கள்), ஒரு மனிதர் திருடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், "நீ திருடினாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! இல்லை (நான் திருடவில்லை)" என்றான்.
உடனே ஈசா (அலை) அவர்கள், "அல்லாஹ்வை (முன்னிறுத்தி சத்தியமிட்டு அவன் கூறுவதால் அவன் கூறியதை) நான் நம்பினேன். (திருடுவதைப் போன்று நானாகவே எண்ணிக்கொண்டதால்) என்னை நான் நம்ப மறுக்கிறேன்" என்று கூறினார்கள்.

பாடம் : 41 இறையன்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்..
4722. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!" என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது இப்ராஹீம் (அலை) அவர்கள்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே..." என்று கூறினார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
- மேற்கண்ட அதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது எண்பதாவது வயதில் வாய்ச்சியினால் விருத்த சேதனம் செய்துகொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது எண்பதாவது வயதில் வாய்ச்சியினால் விருத்த சேதனம் செய்துகொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4724. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களைவிடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே,சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக" என்று கேட்ட போது, "(அதை) நீர் நம்பவில்லையா?"என (அல்லாஹ்) கேட்டான். அதற்கு அவர் "அவ்வாறன்று (நம்பியிருக்கிறேன்); எனினும், எனது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே (கேட்கிறேன்)" என்று கூறினார். (2:260)
லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.
யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவுக்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால், (விடுதலையளிக்க) அழைத்தவரிடம் (அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) நான் ஒப்புக்கொண்டிருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

4725. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அருள்வானாக. வலுவான ஓர் ஆதரவாளனிடமே அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

4726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை:
1. (இணைவைக்கும் திருவிழாவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களை மக்கள் அழைத்தபோது) "நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு, மக்கள் "இப்படிச் செய்தது யார்?"என்று கேட்டபோது) "ஆயினும், இவர்களில் பெரியதான சிலைதான் இதைச் செய்தது" என்று கூறியது.
3. இன்னொரு பொய் (தம் துணைவி) சாரா விஷயத்தில் அவர்கள் சொன்னதாகும்: (அதன் விவரம் வருமாறு:)
(ஒரு நாள்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய நாட்டுக்குச் சென்றார்கள். சாரா (அலை) அவர்கள் மக்களிலேயே மிகவும் அழகிய பெண்மணியாக இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் சாரா அவர்களிடம், "இந்தக் கொடுங்கோல் மன்னன், நீ என் துணைவி என அறிந்து கொண்டால் உன்னை என்னிடமிருந்து கைப்பற்றிக்கொள்வான். (நீ யார் என) அவன் உன்னிடம் கேட்டால் "நீ என் சகோதரி" என்று கூறிவிடு. ஏனெனில், இஸ்லாத்தில் நீ என் சகோதரிதான். மேலும், பூமியில் உன்னையும் என்னையும் தவிர முஸ்லிம்கள் வேறெவரும் இருப்பதாக நான் அறியவில்லை" என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்தபோது, அந்த மன்னனுக்கு வேண்டியவர்களில் ஒருவன் சாரா அவர்களைப் பார்த்து விட்டு மன்னனிடம் சென்று, "(மன்னா!) உங்கள் நாட்டுக்குப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். உங்களுக்குரியவளாக இருப்பதைத் தவிர வேறெதுவும் அவளுக்குத் தகாது" என்று சொன்னான். ஆகவே, மன்னன்,சாரா அவர்களிடம் ஆளனுப்பினான். சாரா அவனிடம் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுவதற்காக நின்றுகொண்டார்கள். சாரா மன்னனிடம் சென்றபோது,அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல் சாராவை நோக்கித் தனது கையை நீட்டினான். உடனே அவனது கை (வலிப்பு நோயால்) கடுமையாக இழுத்துக்கொண்டது. உடனே அவன் சாரா அவர்களிடம், "அல்லாஹ்விடம் (என் கைகளை) விடுவிக்கும்படி எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கிழைக்கமாட்டேன்" என்று சொன்னான்.
அவ்வாறே அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவன் குணமடைந்ததும்) மீண்டும் அவன் (அவர்களை நோக்கி) கையை நீட்டினான். அப்போது முன்பைவிடக் கடுமையாக அவனுடைய கை இழுத்துக்கொண்டது. அவன் முன்பு போன்றே மீண்டும் (பிரார்த்திக்கும்படி) கூறினான். அவ்வாறே சாராவும் பிரார்த்தித்தார்கள்.
(குணமடைந்ததும்) மறுபடியும் அவன் கையை நீட்டியபோது முந்தைய இரு தடவைகள் இழுத்துக்கொண்டதைவிட மிகக் கடுமையாக அவனது கை இழுத்துக்கொண்டது. அப்போது அவன் எனது கையை விடும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். உனக்கு அல்லாஹ்வே சாட்சி. (இனி) உனக்கு நான் தீங்கிழைக்கமாட்டேன்" என்று கூறினான்.
அவ்வாறே சாரா அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவனது கை விடுவிக்கப்பட்டது. சாராவை அழைத்து வந்தவனை மன்னன் அழைத்து, "நீ ஒரு மனுஷியை என்னிடம் கொண்டுவரவில்லை. ஒரு ஷைத்தானையே என்னிடம் கொண்டுவந்துள்ளாய். இவளை எனது நாட்டிலிருந்து வெளியேற்றி விடு. இவளுக்கு ஹாஜர் எனும் (அடிமைப்) பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்துவிடு" என்று கூறினான்.
சாரா தம்மை நோக்கி நடந்துவருவதை இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்டபோது (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள். அவரிடம் "என்ன நடந்தது?" என்று கேட்டார்கள். சாரா அவர்கள், "நல்லதே நடந்தது. அத் தீயவனின் கையை இறைவன் தடுத்துவிட்டான். ஒரு பணியாளரையும் கொடுத்தான்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"மாஉஸ் ஸமாஉ" (வான் மழை) குலத்தாரே! அவர் (ஹாஜர்)-தான் உங்கள் தாயார்.

பாடம் : 42 மூசா (அலை) அவர்களின் சிறப்புகள்..
4727. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஒருவர் மற்றவரது வெட்கத்தலத்தைப் பார்த்துக்கொண்டு நிர்வாணமாகவே குளிப்பார்கள்; மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். ஆகவே, இஸ்ர வேலர்கள், "இறைவன் மீதாணையாக! மூசாவுக்கு விரைவீக்கம் உள்ளது. எனவேதான், அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை" என்று (குறை) கூறினர்.
ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிப்பதற்குச் சென்றார்கள்; அப்போது ஆடையை(க் கழற்றி) ஒரு கல்மீது வைத்தார்கள். அவர்களது ஆடையோடு அந்தக் கல் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அந்தக் கல்லைப் பின்தொடர்ந்து "கல்லே! எனது ஆடை! கல்லே! எனது ஆடை! என்று சப்தமிட்டுக்கொண்டு வேகமாக ஓடினார்கள்.
இறுதியில் இஸ்ரவேலர்கள் (இருந்த பகுதிக்கு வந்தபோது அவர்கள்) மூசா (அலை) அவர்களின் வெட்கத்தலத்தைப் பார்த்துவிட்டு, "இறைவன் மீதாணையாக! மூசாவுக்கு எந்தக் குறையுமில்லை" என்று கூறினர்.
பின்னர் அந்தக் கல் அப்படியே நின்றது. அதற்குள் அனைவரும் மூசா (அலை) அவர்களை (நன்கு) பார்த்துவிட்டனர். பின்னர் மூசா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக் கொண்டு (தமது கையிலிருந்த தடியால்) கல்லை அடிக்கலானார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா (அலை) அவர்கள் அந்தக் கல்மீது அடித்ததால் அதன்மீது ஆறோ ஏழோ வடுக்கள் ஏற்பட்டன.

4728. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுகின்ற மனிதராக இருந்தார்கள். ஆகவே, நிர்வாணமாக அவர்கள் காணப்படவேமாட்டார்கள். எனவே, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் "மூசாவுக்கு விரைவீக்கம் உள்ளது" என்று கூறிக்கொண்டனர்.
இந்நிலையில் மூசா (அலை) அவர்கள் ஒரு குட்டையில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை ஒரு கல்மீது வைத்தார்கள். அந்தக் கல் (ஆடையோடு) விரைந்தோடலாயிற்று. மூசா (அலை) அவர்கள் தமது தடியால் அதை அடித்துக்கொண்டு, "கல்லே! எனது ஆடை!" "கல்லே! எனது ஆடை!" என்று கூறிக்கொண்டே அதை விரட்டிக்கொண்டு ஓடினார்கள்.
இறுதியில் அந்தக் கல் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் பிரமுகர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று நின்றது. (இது குறித்தே) "நம்பிக்கை கொண்டோரே! மூசாவுக்குத் தொல்லை தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்" (33:69) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.

4729. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மலக்குல் மவ்த்" (உயிரை எடுத்துச்செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் வானவர் வந்த போது, மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பறித்துவிட்டார்கள். உடனே அந்த வானவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று "மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்!" என்று கூறினார்.
அந்த வானவருக்கு மீண்டும் கண்ணைக் கொடுத்த இறைவன், "நீர் அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் வைக்கச் சொல்வீராக. (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கை மறைக்கின்றதோ அதில் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு இந்த உலகில் வாழ அவருக்கு அனுமதி உண்டு"என்று சொல்வீராக" என்றான்.
(அவ்வாறே அந்த வானவர் மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) மூசா (அலை) அவர்கள், "இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடித்த) பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டார்கள். இறைவன் "மரணம்தான்" என்று பதிலளித்தான்.
மூசா (அலை) அவர்கள், "அப்படியென்றால், இப்போதே (என் உயிரை எடுத்துக்கொள்)" என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் எனும்) புனித பூமிக்கு நெருக்கமாக, அங்கிருந்து கல்லெறி தூரத்தில் தமது அடக்கத்தலம் அமைய வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதை எடுத்துரைத்தபோது), "நான் அந்த இடத்தில் இருந்தால் செம்மணற்குன்றின் கீழே சாலையோரத்தில் அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்"என்று சொன்னார்கள்.

4730. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மலக்குல் மவ்த்" (உயிரை எடுத்துச்செல்லவரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் வந்து, உங்கள் இறைவன் (உங்கள் உயிரை எடுத்து வருமாறு உத்தரவிட்டுள்ளான். அவனது) உத்தரவுக்குப் பணியுங்கள்" என்று கூறினார்.
உடனே மூசா (அலை) அவர்கள் வானவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பெயர்த்துவிட்டார்கள். அந்த வானவர் இறைவனிடம் திரும்பிச் சென்று, "மரணத்தை விரும்பாத உன் அடியார் ஒருவரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்! அவர் எனது கண்ணைப் பறித்துவிட்டார்" என்று கூறினார்.
அவருக்கு மீண்டும் கண்ணை வழங்கிய இறைவன், "நீர் என் அடியாரிடம் திரும்பிச் சென்று, நீங்கள் உயிர்வாழத்தானே விரும்புகிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (இன்னும் நீண்ட நாட்கள்) உயிர்வாழ விரும்பினால், ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் கையை வையுங்கள்; (அதன் முதுகிலுள்ள முடிகளில்) உங்களது கை மறைக்கும் அளவுக்கு ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில்) நீங்கள் வாழலாம்" என்று சொல்வீராக என்று கூறினான்.
(அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) மூசா (அலை) அவர்கள், "(அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டார்கள். வானவர், "பிறகு நீங்கள் மரணிக்கத்தான் வேண்டும்" என்றார்.
மூசா (அலை) அவர்கள், "அப்படியானால் இப்போதே விரைவாக (என் உயிரை எடுத்துக் கொள். இறைவா! பைத்துல் மக்திஸ் எனும் புனித பூமியிலிருந்து கல்லெறி தூரத்தில் என்னை இறக்கச் செய்து (அங்கேயே அடக்கம் செய்து)விடு"என்று வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (இப்போது) அந்த இடத்தில் இருந்தால், செம்மணற்குன்றின் கீழே சாலையோரமாக அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4731. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர் ஒருவர் (சந்தையில்) தமது சரக்கை எடுத்துக் காட்டியபோது, அவருக்குப் "பிடிக்காத" அல்லது "அவர் விரும்பாத" (குறைந்த) விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. (அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஐயம்.)
அப்போது அந்த யூதர், "மனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக! இல்லை (இந்த விலை கட்டுப்படியாகாது)" என்று கூறினார். இதை அன்சாரி (முஸ்லிம்)களில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே அந்த யூதரை முகத்தில் அறைந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக! என்றா நீ கூறுகிறாய்?" என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல்காசிமே! (சிறுபான்மை மக்களான எங்கள் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக எங்களிடம் நீங்கள் வாக்குறுதி அளித்திருக்கும் அடிப்படையில்) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். இன்ன மனிதர் எனது முகத்தில் அறைந்துவிட்டார்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமிடம்), "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?" என்று கேட்டார்கள். "(அல்லாஹ்வின் தூதரே!), தாங்கள் எங்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கவே இவர் மனிதர்கள் அனைவரையும்விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!" என்று (மூசா (அலை) அவர்களைச் சிறப்பித்துக்) கூறினார்" என்றார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால், கோபக்குறி அவர்களது முகத்தில் தென்பட்டது. பிறகு கூறினார்கள்: இறைத் தூதர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்" என்று) ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ("ஸூர்") ஊதப்படும். உடனே வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்துவிடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர.
பிறகு மற்றொரு முறை எக்காளம் ஊதப்படும். அப்போது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை அரியணையைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் "தூர் சினாய்" (மலையில் இறைவனைச் சந்தித்த) நாளில் மூர்ச்சையாகி விழுந்தது கணக்கி லெடுக்கப்(பட்டு,அங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டுவிட்டாரா?" என்பது எனக்குத் தெரியாது. மேலும், யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட ஒருவர் சிறந்தவர் என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன்.

4732. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதரும் ஒரு முஸ்லிமும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அந்த முஸ்லிம், "உலகத்தார் அனைவரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மை அளித்தவன் மீதாணையாக!" என்று (ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுக்) கூறினார். அதற்கு (பதிலாக) அந்த யூதர், "உலகத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களுக்கு மேன்மை அளித்தவன் மீதாணையாக!" என்று கூறினார்.
அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை வரவழைத்து), "மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (உயர்த்திப் பேசி)விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் (மறுமை நாளில்) மூர்ச்சையாகிவிடுவார்கள். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது மூசா (அலை) அவர்கள் இறை அரியணையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்துவிட்டிருப்பாரா? அல்லது அவருக்கு மட்டும் இறைவன் (மூர்ச்சையடை வதிலிருந்து) விதிவிலக்கு அளித்திருப்பானா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4733. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

4734. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "யூதர் ஒருவர் (ஒரு முஸ்லிமிடம்) முகத்தில் அறை வாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்"என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
ஆயினும், அதில் "மூர்ச்சையடைந்துவிட்டவர்களில் மூசா (அலை) அவர்கள் (முதலாவதாக) மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது தூர்சினாய் மலையில் (இறைவனைப் பார்க்க முற்பட்டபோது) அடைந்த மூர்ச்சைக்குக் பகரமாக அத்தோடு போதுமென விடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (சிறு வேறுபாட்டுடன்) காணப்படுகிறது.

4735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்" என) ஏற்றத்தாழ்வு கற்பிக்காதீர்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

4736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹத்தாப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன்" என்று இடம்பெற்றுள்ளது.

4737. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் தொழுதுகொண்டிருந்தார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச்செல்லப்பட்ட இரவில் கடந்து சென்றேன்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

பாடம் : 43 யூனுஸ் (அலை) அவர்கள் பற்றிய குறிப்பும், "நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்" என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியாருக்கும் தகாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.
4738. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் அடியார் ஒருவர் (தம்மைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது" என்று அல்லாஹ் கூறினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4738. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் அடியார் ஒருவர் (தம்மைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது" என்று அல்லாஹ் கூறினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4739. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக் கூறுவது) எந்த அடியாருக்கும் தகாது" என்று கூறினார்கள். இவ்வாறு யூனுஸ் (அலை) அவர்களை, அவர்களுடைய தந்தையுடன் இணைத்து (மத்தாவின் மகன் யூனுஸ் என்று) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.