4239. முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்தபோது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக்கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு "(இதோ! பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்" என்று (இடித்துக்) கூறலானார்கள்.
பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மர்வான் பின் அல்ஹகம், அபூஹுரைரா (ரலி) அவர்களை (இடைக்கால) ஆட்சியராக நியமித்திருந்தார்" என்று காணப்படுகிறது. முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூஹுரைரா (ரலி) அவர்கள் மதீனாவின் (இடைக்கால) ஆட்சியராக நியமிக்கப் பட்டிருந்தார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37

பாடம் : 10 தம் ஆடைகளைக் கண்டு ஒருவர் பெருமிதம் கொண்டு, கர்வத்தோடு நடப்பது தடை செய்யப்பட்டதாகும்.
4240. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
(முற்காலத்தில்) ஒரு மனிதன் தோள்கள் வரை தொங்கும் தனது தலை முடியையும் தான் அணிந்திருந்த இரு ஆடைகளையும் எண்ணிப் பெருமிதத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பூமிக்குள் அவன் புதையுண்டு போனான். அவன் மறுமை நாள் நிகழும்வரை பூமிக்குள் குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

4241. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு மனிதன் தற்பெருமை கொண்டவனாகத் தன் ஆடைகளை அணிந்து கொண்டு கர்வத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் நிகழும்வரை (அவ்வாறே) பூமிக்குள் குலுங்கியபடியே அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு மனிதன் தன்னிரு ஆடைகளை அணிந்து கர்வப்பட்டுக்கொண்டிருந்த போது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.

அதில், "உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் ஒருவன் தனது ஆடையை அணிந்து கர்வம் கொண்டான்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே முடிகிறது.

பாடம் : 11 ஆண்கள் தங்கமோதிரம் அணிவது தடை செய்யப்பட்டதாகும்; இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மாற்றப்பட்டுவிட்டது.
4242. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தங்கமோதிரம் அணிய வேண்டாமென (ஆண்களுக்கு)த் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

4243. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தமது கையில் தங்கமோதிரம் அணிந்திருப்பதைக் கண்டபோது, அதைக் கழற்றச்செய்து தூக்கியெறிந்தார்கள். பிறகு "உங்களில் ஒருவர் (நரக) நெருப்பின் கங்கை எடுத்து, அதைத் தமது கையில் வைத்துக் கொள்கிறார்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு அந்த மனிதரிடம், "உமது மோதிரத்தை(க் கழற்றி) எடுத்து நீ (வேறு வகையில்) பயனடைந்துகொள்" என்று கூறப்பட்டது. அவர், "இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீசியெறிந்துவிட்டதை அல்லாஹ்வின் மீதாணையாக ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டார்.

4244. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கமோதிரம் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தார்கள். அதை அணியும்போது அதன் குமிழ் பகுதி தமது உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைச் செய்துகொண்டனர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழற்றிவிட்டு, "நான் இந்த மோதிரத்தை அதன் குமிழ் பகுதி உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தே அணிந்துகொண்டிருந்தேன்" என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள்.
பிறகு "அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்" என்று சொன்னார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை (கழற்றி) எறிந்தனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உக்பா பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அ(ந்த மோதிரத்)தைத் தமது வலக்கையில் அணிந்திருந்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

பாடம் : 12 நபி (ஸல்) அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை அணிந்திருந்ததும் அதை நபியவர்களுக்குப் பின் (மூன்று) கலீஃபாக்களும் அணிந்திருந்ததும்.
4245. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு (முதலாவது கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு (இரண்டாவது கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது.
பிறகு (மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து "அரீஸ்” எனும் கிணற்றில் (தவறி)விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்றிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

4246. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (முதலில்) தங்கமோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்தார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்தார்கள். மேலும், "எனது மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைப் போன்று வேறு யாரும் (அரசு) இலச்சினை பொறிக்க வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அவர்கள் அதை அணியும்போது அதன் குமிழ் பகுதி உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். அந்த மோதிரம் தான் "அரீஸ்” எனும் கிணற்றில், முஐகீப் (பின் அபீஃபாத்திமா - ரலி) அவர்களின் கையிலிருந்து விழுந்துவிட்டது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்தார்கள். மேலும், மக்களிடம் "நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்துள்ளேன். ஆகவே, வேறு யாரும் அதைப் போன்று (அரசு) இலச்சினை பொறிக்க வேண்டாம்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" (எனும் இலச்சினை அமைந்திருந்தது) எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

பாடம் : 13 நபி (ஸல்) அவர்கள் அரபியரல்லாத (வெளிநாட்ட)வருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது (முத்திரையிடுவதற்காக) மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டது.
4247. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது மக்கள், "ரோமர்கள் முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் வாசிக்கமாட்டார்கள்" என்று கூறினர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் (ஒளிர்ந்த) அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4247. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது மக்கள், "ரோமர்கள் முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் வாசிக்கமாட்டார்கள்" என்று கூறினர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் (ஒளிர்ந்த) அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4248. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரபியர் அல்லாதோருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது, "அரபியர் அல்லாதோர் முத்திரை இல்லாத கடிதம் எதையும் ஏற்கமாட்டார்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டது, எனவே,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்துகொண்டார்கள்.
அவர்களது கையில் (ஒளிர்ந்த) அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

4249. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சீசர், குஸ்ரூ, நீகஸ் (கிஸ்ரா, கைசர், நஜாஷீ) ஆகிய மன்னர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது, "இ(ம்மன்ன)வர்கள் முத்திரை இல்லாத எந்தக் கடிதத்தையும் ஏற்கமாட்டார்கள்" என்று கூறப்பட்டது. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி வளைய மோதிரம் ஒன்றை வார்த்து அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்துக்கொண்டார்கள்.

பாடம் : 14 மோதிரங்களை(க் கழற்றி) எறிதல்.
4250. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றைக் கண்டேன். (அதைக் கண்ட) மக்களும் வெள்ளி மோதிரங்களைச் செய்து அணிந்துகொண்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (முன்பு அணிந்திருந்த) தமது (பொன்) மோதிரத்தை (கழற்றி) எறிந்துவிடவே, மக்களும் தம் (பொன்) மோதிரங்களை (கழற்றி) எறிந்துவிட்டனர்.

4251. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளி மோதிரத்தைக் கண்டேன். பிறகு மக்களும் வெள்ளி மோதிரங்களை வார்த்து, அவற்றை அணிந்து கொண்டனர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முன்பு அணிந்திருந்த) தமது (தங்க) மோதிரத்தை எறிந்துவிட்டார்கள். எனவே, மக்களும் தம் (தங்க) மோதிரங்களை எறிந்துவிட்டனர்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 15 அபிசீனியக் குமிழ் உள்ள வெள்ளி மோதிரம்.
4252. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் அபிசீனியக் குமிழ் (அல்லது கறுப்புக் கல்) உள்ளதாக இருந்தது.

4253. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தில் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். அதன் குமிழ் அபிசீனியாவைச் சேர்ந்ததாயிருந்தது. அதன் குமிழ் பகுதியைத் தமது உள்ளங்கை பக்கம் அமையும்படி அணிந்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 16 கையின் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது.
4254. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்" என்று கூறி, தமது இடக்கையின் சுண்டுவிரலை நோக்கி சைகை செய்தார்கள்.

பாடம் : 17 நடு விரலிலும் அதற்கடுத்துள்ள ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதற்கு வந்துள்ள தடை.
4255. அபூபுர்தா ஆமிர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இந்த விரலில் அல்லது அதற்கடுத்த விரலில் மோதிரம் அணிய வேண்டாம் என என்னைத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள்.
-அது எந்த இரு விரல்கள் என அறிவிப்பாளர் ஆஸிம் பின் குலைப் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.-
மேலும், "கஸ்" வகைத் துணியை அணியவேண்டாம் என்றும் (சிவப்பு) மென்பட்டு விரிப்புகளில் (மீஸரா) அமர வேண்டாமென்றும் எனக்குத் தடை செய்தார்கள்.
மேலும், அலீ (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
"கஸ்" வகைத் துணி என்பது, எகிப்து அல்லது சிரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்புகளைப் போல வரிவரியாகக் கோடுகள் இருக்கும். இன்னவற்றுக்கு அது ஒப்பாயிருக்கும். "மீஸரா" என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக ஒட்டகச் சேணத்தில் அமைக்கும் சிவப்பு நிற மென்பட்டுத் திண்டுகளைப் போன்ற விரிப்புகளாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூமூசாவின் புதல்வர் (அபூபுர்தா) கூறினார்" என அறிவிப்பாளர்தொடரில் இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அல்லது நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடை செய்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.

4256. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விரலில் அல்லது இந்த விரலில் மோதிரம் அணியவேண்டாம் என்று என்னைத் தடை செய்தார்கள்" என்று கூறி, நடுவிரலையும் அதற்கடுத்த (ஆட்காட்டி) விரலையும் சுட்டிக் காட்டினார்கள்.

பாடம் : 18 காலணி அல்லது அது போன்றதை அணிவது விரும்பத்தக்கதாகும்.
4257. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட ஒரு போர் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள், "காலணியை அணிந்துகொள்ளுங்கள். ஏனெனில்,ஒரு மனிதர் காலணி அணிந்திருக்கும்வரை அவர் வாகனத்திலேயே இருக்கிறார்" என்று கூறினார்கள்.

பாடம் : 19 காலணி அணியும்போது முதலில் வலக் காலில் அணிவதும் கழற்றும்போது முதலில் இடக்காலில் இருந்து கழற்றுவதும் விரும்பத்தக்கதாகும்; ஒரேயொரு காலணியில் நடப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4258. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் காலணி அணியும் போது முதலில் வலக் காலில் அணியட்டும். அதைக் கழற்றும்போது முதலில் இடக் காலில் இருந்து கழற்றட்டும். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் ஒருசேரக் கழற்றிவிடட்டும்.