4219. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "உன் தாயாரா இவ்வாறு (செம்மஞ்சள் நிறச் சாயமிடுமாறு) உமக்குக் கட்டளையிட்டார்?" என்று கேட்டார்கள். நான், "அவ்விரண்டையும் கழுவி (செம்மஞ்சள் நிறச் சாயத்தை அகற்றி)க் கொள்கிறேன்" என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இல்லை, அவ்விரண்டையும் எரித்துவிடு" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 37

4220. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியவேண்டாம் என்றும், பொன் மோதிரம் அணிய வேண்டாமென்றும், (தொழுகையில்) ருகூஉவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும் தடை செய்தார்கள்.- இதை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4221. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (தொழுகையில்) ருகூஉவிலிருக்கும்போது குர்ஆனை ஓத வேண்டாமென்றும், தங்கம் அணிய வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் என்னைத் தடுத்தார்கள்.

4222. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தங்கமோதிரம் அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை அணிய வேண்டாமென்றும், ருகூஉ மற்றும் சஜ்தாவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் தடைசெய்தார்கள்.

பாடம் : 5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு.
4223. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "எந்த ஆடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?" என்று கேட்டோம். "(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை" என்று பதிலளித்தார்கள்.

4224. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான துணியாக இருந்தது.
அத்தியாயம் : 37
(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான துணியாக இருந்தது.
அத்தியாயம் : 37
பாடம் : 6 ஆடையில் (எளிமையும்) பணிவு(ம்) மேற்கொள்வதும்; ஆடை, விரிப்பு உள்ளிட்டவற்றில் கெட்டியானதையும் எளிமையானதையும் வைத்துப் போதுமாக்கிக் கொள்வதும்; முடியாலான ஆடை, கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்டவை ஆகியவற்றை அணியலாம் என்பதும்.
4225. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எங்களிடம் யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கெட்டியான கீழங்கி ஒன்றையும் "அல்முலப்பதா" (ஒட்டாடை) எனப் பெயர் பெற்ற மற்றோர் ஆடையையும் எடுத்துக்காட்டி, "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இரண்டு ஆடைகளையும் அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது" என்று சொன்னார்கள்.

4226. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதா வது:
ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் கீழங்கி ஒன்றையும் (இரண்டை ஒன்றாகச் சேர்த்து) ஒட்டப்பட்ட மற்றொரு கெட்டியான ஆடையையும் எடுத்துக்காட்டி, "இவற்றை அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கெட்டியான கீழங்கியொன்றையும்" என்று இடம்பெற்றுள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் அபூபுர்தா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "கெட்டியான கீழங்கியொன்றையும்" என்றே இடம்பெற்றுள்ளது.

4227. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள், கோடுபோட்ட கறுப்பு முடியாலான ஆடை அணிந்து வெளியே புறப்பட்டார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4228. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்துகொள்ளும் தலையணை, பதனிடப்பட்ட தோலால் அமைந்திருந்தது. அது ஈச்ச நாரினால் நிரப்பப்பெற்றிருந்தது.

4229. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கும் விரிப்பு, ஈச்ச நாரால் நிரப்பப்பெற்ற பதனிடப்பட்ட தோலால் அமைந்திருந்தது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("விரிப்பு" என்பதைக் குறிக்க "ஃபிராஷ்" என்பதற்குப் பதிலாக) "ளிஜாஉ" எனும் சொல் இடம்பெற்றுள்ளது. அபூ முஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உறங்கும் (விரிப்பு)" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

பாடம் : 7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
4230. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணமானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "படுக்கை விரிப்புகள் அமைத்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான், "எங்களிடம் எவ்வாறு படுக்கை விரிப்புகள் இருக்கும்?" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தெரிந்துகொள். விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4231. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மணமானபோது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "படுக்கை விரிப்புகள் அமைத்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "எங்களிடம் எவ்வாறு படுக்கை விரிப்புகள் இருக்கும்?" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தெரிந்துகொள். விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும்" என்றார்கள்.
(பின்னாளில் ஒரு சமயம்) என் துணைவியிடம் படுக்கை விரிப்பொன்று இருந்தது. நான் அவரிடம் "அதை என்னிடமிருந்து அப்புறப்படுத்து (என்னிடம் அதைக் கொண்டுவராதே)" என்று சொல்ல, அதற்கு என் துணைவி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும் என்று சொன்னார்களே?" என்று கேட்டார்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(என் துணைவி அவ்வாறு பதிலளித்ததும்) அவ்வாறாயின், அவற்றை நான் (அப்படியே) விட்டுவிடுகிறேன்"என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

பாடம் : 8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத்தக்கதன்று.
4232. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஒரு விரிப்பு ஆணுக்குரியது. மற்றொரு விரிப்பு அவன் துணைவிக்குரியது. மூன்றாவது விரிப்பு விருந்தாளிக்குரியது. நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது" என்று சொன்னார்கள்.

பாடம் : 9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வது தடை செய்யப்பட்டதாகும் என்பதும், அணியும் ஆடை எந்த அளவுக்குக் கீழே இறங்கலாம், அதில் விரும்பத்தக்க அளவு என்ன என்பது பற்றிய விளக்கமும்.
4233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆடையை (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதினோரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "மறுமை நாளில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.

4234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தற்பெருமையால் தனது ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்பவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

4235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தற்பெருமையால் தனது ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "தன் ஆடைகளை" என்று (பன்மையாக) இடம்பெற்றுள்ளது.

4236. முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, "நீர் யார்?" என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில்படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்" என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தனது கீழாடையை" என்றே இடம்பெற்றுள்ளது. "தனது ஆடையை" என (பொதுவாக) இல்லை. அபூயூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("முஸ்லிம் பின் யந்நாக்" என்ற அறிவிப்பாளரின் பெயர்) "முஸ்லிம் அபில்ஹசன்" என (குறிப்புப் பெயருடன்) இடம்பெற்றுள்ளது.

4237. முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நான் நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமை யான முஸ்லிம் பின் யசார் (ரஹ்) அவர்களுக்கும் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் நடுவே அமர்ந்திருந்தேன்.
அப்போது முஸ்லிம் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் "தற்பெருமையுடன் தனது ஆடையைத் தரையில் படும்படி இழுத்துக்கொண்டு செல்பவன் குறித்துத் தாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் செவியுற்றீர்களா?" என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்கச் சொன்னேன். (அவ்வாறே அவர் கேட்டார்.)
அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ் மறுமை நாளில் அவனை ஏறெடுத்துப் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்றார்கள்.

4238. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை (கணுக்காலுக்குக்) கீழே இருந்தது. அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்! உமது கீழாடையை உயர்த்திக் கட்டு" என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். பிறகு "இன்னும் சிறிது (உயர்த்து)" என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் சிறிது உயர்த்தினேன். பின்னர் அதையே நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
(இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், "எதுவரை உயர்த்த வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "கணைக்கால்களின் பாதியளவுக்கு" என்று பதிலளித்தார்கள்.