4655. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، وَأَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ فِي تِلْكَ الْحَجَّةِ فِي مُؤَذِّنِينَ، بَعَثَهُمْ يَوْمَ النَّحْرِ يُؤَذِّنُونَ بِمِنًى أَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ثُمَّ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ. قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ يَوْمَ النَّحْرِ فِي أَهْلِ مِنًى بِبَرَاءَةَ، وَأَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 2
“ஆகவே, (இணைவைப்பாளர் களே!) நீங்கள் (விரும்பியபடி) பூமியில் நான்கு மாதங்கள் (எங்கு வேண்டுமானாலும்) நடமாடலாம். நீங்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியாது என்பதையும் அல்லாஹ் மறுப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்” எனும் (9:2ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “சீஹூ' எனும் சொல்லுக்கு “நடமாடுங்கள்' என்பது பொருள்.
4655. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க் கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது” என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் அனுப்பிவைத்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்:
எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று மினாவாசிகளிடையே, “(இணை வைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்தும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.3
அத்தியாயம் : 65

4656. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فِي تِلْكَ الْحَجَّةِ فِي الْمُؤَذِّنِينَ، بَعَثَهُمْ يَوْمَ النَّحْرِ يُؤَذِّنُونَ بِمِنًى أَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. قَالَ حُمَيْدٌ ثُمَّ أَرْدَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ. قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ فِي أَهْلِ مِنًى يَوْمَ النَّحْرِ بِبَرَاءَةَ، وَأَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 3
“மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களைவிட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நிச்சயமாக விலகிவிட்டார்கள். ஆகவே, (இறைமறுப்பிலிருந்தும் ஒப்பந்த மீறலிலிருந்தும்) நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்குத்தான் நல்லது. (அவ்வாறன்றி) நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்துகொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான தண்டனை உண்டெனும் “நற்செய்தி'யை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக” எனும் (9:3ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “அதான்' எனும் சொல்லுக்கு “அறிவிப்பு' என்பது பொருள்.
4656. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின்போது “துல்ஹிஜ்ஜா மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய) நாளில் மினாவில் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் (ஒருவனாக) அனுப்பிவைத்தார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.
ஆகவே, எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டனர் என்றும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.4

4657. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهَا قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ أَنْ لاَ يَحُجَّنَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. فَكَانَ حُمَيْدٌ يَقُولُ يَوْمُ النَّحْرِ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ. مِنْ أَجْلِ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ.
பாடம் : 4
...ஆயினும், இணைவைப்பாளர் களில் எவருடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது உடன்படிக்கையை நிறைவேற்றுவதில்) உங்களுக்கு எந்தக் குறைபாடும் வைக்காமலும் உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கிறார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு (எனும் 9:4ஆவது இறைவசனம்)
4657. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது' என்றும், “நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பிவைத்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் (இந்த) ஹதீஸின் அடிப்படையில், “(துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளான) நஹ்ருடைய நாள்தான் பெரிய ஹஜ் நாளாகும்” என்று சொல்லிவந்தார்கள்.

4658. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، قَالَ كُنَّا عِنْدَ حُذَيْفَةَ فَقَالَ مَا بَقِيَ مِنْ أَصْحَابِ هَذِهِ الآيَةِ إِلاَّ ثَلاَثَةٌ، وَلاَ مِنَ الْمُنَافِقِينَ إِلاَّ أَرْبَعَةٌ. فَقَالَ أَعْرَابِيٌّ إِنَّكُمْ أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم تُخْبِرُونَا فَلاَ نَدْرِي فَمَا بَالُ هَؤُلاَءِ الَّذِينَ يَبْقُرُونَ بُيُوتَنَا وَيَسْرِقُونَ أَعْلاَقَنَا. قَالَ أُولَئِكَ الْفُسَّاقُ، أَجَلْ لَمْ يَبْقَ مِنْهُمْ إِلاَّ أَرْبَعَةٌ. أَحَدُهُمْ شَيْخٌ كَبِيرٌ لَوْ شَرِبَ الْمَاءَ الْبَارِدَ لَمَا وَجَدَ بَرْدَهُ.
பாடம் : 5
(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்துவிட்டு உங்களது மார்க்கத் தைத் தாக்க முற்பட்டால் (இத்தகைய) இறைமறுப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள். ஏனென்றால், அவர்களுக்குச் சத்தியங்கள் (என்பதெல்லாம்) கிடையாது. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்களிலிருந்து) ஒதுங்கியிருக்கக்கூடும் (எனும் 9:12ஆவது இறைவசனம்)
4658. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “இந்த இறைவசனத்தில் (9:12) குறிப்பிடப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூறினார்கள்.5
அப்போது கிராமவாசி ஒருவர், “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர்தரமான பொருள்களைத் திருடிச் செல்கின்ற இவர்களின் நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லையே” என்று கேட்டார்.
அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அவர்கள் பாவிகளே! (இறை மறுப்பாளர்களோ நயவஞ்சகர்களோ அல்லர்.) ஆம்! அவர்களில் நால்வர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த கிழவர். (எந்த அளவுக்கு முதியவரென்றால்,) குளிர்ந்த நீரைப் பருகினால்கூட அதன் குளிர்ச்சி அவருக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

4659. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ ".
பாடம் : 6
“எவர் தங்கத்தையும் வெள்ளியை யும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின் றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) வசனத்தொடர்
4659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது கருவூலம் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

4660. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ مَرَرْتُ عَلَى أَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ فَقُلْتُ مَا أَنْزَلَكَ بِهَذِهِ الأَرْضِ قَالَ كُنَّا بِالشَّأْمِ فَقَرَأْتُ {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ} قَالَ مُعَاوِيَةُ مَا هَذِهِ فِينَا، مَا هَذِهِ إِلاَّ فِي أَهْلِ الْكِتَابِ. قَالَ قُلْتُ إِنَّهَا لَفِينَا وَفِيهِمْ.
பாடம் : 6
“எவர் தங்கத்தையும் வெள்ளியை யும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின் றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) வசனத்தொடர்
4660. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (மதீனாவிற்கு அருகிலுள்ள) “ரபதா' எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், “இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தோம். அப்போது நான், “எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) இறைவசனத்தை ஓதினேன்.
அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா (ரலி) அவர்கள், “இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்கள் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத்தான்) அருளப்பட்டது” என்று சொன்னார்கள். நான், “இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிக்கை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன்” எனப் பதிலளித்தார்கள்.7

4661. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَقَالَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ، الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلأَمْوَالِ.
பாடம் : 7
“(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக!) அந்நாளில் (தங்கம், வெள்ளி ஆகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டுப் பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும் விலாப் புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். இவைதான் நீங்கள் உங்களுக்காகச் சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றைச் சுவையுங்கள் (என்று சொல்லப்படும்)” எனும் (9:35ஆவது) இறைவசனம்
4661. காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றோம். அப்(பயணத்தின்)போது அவர்கள் (9:35ஆவது இறைவசனத்தைப் பற்றி), “இது ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெறுவதற்கு முந்தையதாகும். ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப் பெற்றபோது செல்வங்களைத் தூய்மைப் படுத்தக்கூடியதாய் ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.8

4662. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا، أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ، ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ ".
பாடம் : 8
“உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள்முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியனவாகும். இதுதான் சரியான நெறிமுறையாகும்” எனும் (9:36ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கய்யிம்' எனும் சொல்லுக்கு “நிலையானது' என்பது பொருள்.
4662. (“விடைபெறும் ஹஜ்'ஜில் உரை யாற்றியபோது) நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போர் புரிவது விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்ற வையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹிஜ்ஜா, முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ் ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து “ரஜப்' மாதம் ஆகும்.9
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4663. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا ثَابِتٌ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَارِ، فَرَأَيْتُ آثَارَ الْمُشْرِكِينَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَنَّ أَحَدَهُمْ رَفَعَ قَدَمَهُ رَآنَا. قَالَ " مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا ".
பாடம் : 9
“அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாம வராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கி, “கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை அருளினான்” எனும் (9:40ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சகீனா' (மனஅமைதி) எனும் சொல் “சுகூன்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து “ஃபஈலா' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4663. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்' எனும்) அந்தக் குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவர் தமது காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவாரே!” என்று (அச்சத்துடன்) சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள், “எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்?” என்று கேட்டார்கள்.10

4664. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ حِينَ وَقَعَ بَيْنَهُ وَبَيْنَ ابْنِ الزُّبَيْرِ قُلْتُ أَبُوهُ الزُّبَيْرُ، وَأُمُّهُ أَسْمَاءُ، وَخَالَتُهُ عَائِشَةُ، وَجَدُّهُ أَبُو بَكْرٍ، وَجَدَّتُهُ صَفِيَّةُ. فَقُلْتُ لِسُفْيَانَ إِسْنَادُهُ. فَقَالَ حَدَّثَنَا، فَشَغَلَهُ إِنْسَانٌ وَلَمْ يَقُلِ ابْنُ جُرَيْجٍ.
பாடம் : 9
“அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாம வராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கி, “கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை அருளினான்” எனும் (9:40ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சகீனா' (மனஅமைதி) எனும் சொல் “சுகூன்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து “ஃபஈலா' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4664. இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது நான் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,) “இப்னு ஸுபைருடைய தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும், அவர்களுடைய தாயார் அஸ்மா (ரலி) அவர்களும், அவர்களுடைய சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்களும், அவர்களுடைய பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களும், அவர்களுடைய பாட்டி ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஆயிற்றே! (இத்தகைய சிறப்புகள் மிக்க இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து, ஏன் கலீஃபாவாக ஏற்கக் கூடாது?)” என்று கேட்டேன்.11
(இதன் அறிவிப்பாளரும் புகாரீ (ரஹ்) அவர்களின் ஆசிரியருமான) அப்துல்லாஹ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “இதன் அறிவிப்பாளர் தொடர் எத்தகையது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “எமக்கு அறிவித்தார்' (ஹத்தஸனா) என்று சொல்லத் தொடங்கினார். அதற்குள் ஒருவர் அவரது கவனத்தை (வேறொரு கேள்வியால்) திசை திருப்பவே (இன்னார் அறிவித்தார் என்று) இப்னு ஜ‚ரைஜின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்துவிட்டார்.
(இதனால், இப்னு ஜ‚ரைஜிடமே அவர் நேரடியாகக் கேட்டிருக்கலாம்; அல்லது வேறொருவர் வாயிலாக இப்னு ஜ‚ரைஜிடமிருந்து அறிவித்திருக்கலாம்.)

4665. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ وَكَانَ بَيْنَهُمَا شَىْءٌ فَغَدَوْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ فَقُلْتُ أَتُرِيدُ أَنْ تُقَاتِلَ ابْنَ الزُّبَيْرِ، فَتُحِلُّ حَرَمَ اللَّهِ. فَقَالَ مَعَاذَ اللَّهِ، إِنَّ اللَّهَ كَتَبَ ابْنَ الزُّبَيْرِ وَبَنِي أُمَيَّةَ مُحِلِّينَ، وَإِنِّي وَاللَّهِ لاَ أُحِلُّهُ أَبَدًا. قَالَ قَالَ النَّاسُ بَايِعْ لاِبْنِ الزُّبَيْرِ. فَقُلْتُ وَأَيْنَ بِهَذَا الأَمْرِ عَنْهُ أَمَّا أَبُوهُ فَحَوَارِيُّ النَّبِيِّ صلى الله عليه وسلم، يُرِيدُ الزُّبَيْرَ، وَأَمَّا جَدُّهُ فَصَاحِبُ الْغَارِ، يُرِيدُ أَبَا بَكْرٍ، وَأُمُّهُ فَذَاتُ النِّطَاقِ، يُرِيدُ أَسْمَاءَ، وَأَمَّا خَالَتُهُ فَأُمُّ الْمُؤْمِنِينَ، يُرِيدُ عَائِشَةَ، وَأَمَّا عَمَّتُهُ فَزَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم، يُرِيدُ خَدِيجَةَ، وَأَمَّا عَمَّةُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَدَّتُهُ، يُرِيدُ صَفِيَّةَ، ثُمَّ عَفِيفٌ فِي الإِسْلاَمِ، قَارِئٌ لِلْقُرْآنِ. وَاللَّهِ إِنْ وَصَلُونِي وَصَلُونِي مِنْ قَرِيبٍ، وَإِنْ رَبُّونِي رَبَّنِي أَكْفَاءٌ كِرَامٌ، فَآثَرَ التُّوَيْتَاتِ وَالأُسَامَاتِ وَالْحُمَيْدَاتِ، يُرِيدُ أَبْطُنًا مِنْ بَنِي أَسَدٍ بَنِي تُوَيْتٍ وَبَنِي أُسَامَةَ وَبَنِي أَسَدٍ، إِنَّ ابْنَ أَبِي الْعَاصِ بَرَزَ يَمْشِي الْقُدَمِيَّةَ، يَعْنِي عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ، وَإِنَّهُ لَوَّى ذَنَبَهُ، يَعْنِي ابْنَ الزُّبَيْرِ.
பாடம் : 9
“அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாம வராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கி, “கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை அருளினான்” எனும் (9:40ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சகீனா' (மனஅமைதி) எனும் சொல் “சுகூன்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து “ஃபஈலா' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4665. இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக் கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் காலையில் சென்று, “நீங்கள் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் போரிட்டு அல்லாஹ்வின் (புனிதத் தலமான) ஹரமை (இரத்தம் சிந்த) அனுமதிக்கப்பட்ட இடமாக (ஹலாலானதாக) ஆக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “இறைவன் காப்பாற்றட்டும். இப்னு ஸுபைரையும் பனூ உமய்யாக்களையும்தான் ஹரமில் போர் புரிவதை அனுமதிக்கின்றவர்களாக அல்லாஹ் எழுதிவைத்துள்ளான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்கள் (என்னிடம்) “இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்' என்று சொன்னார்கள். நான், “இந்த ஆட்சியதிகாரம் அவரைவிட்டு எங்கே போய்விடும்? அவருடைய தந்தையோ -அதாவது ஸ‚பைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களோ- நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவியாளராவார். அவருடைய பாட்டனாரோ -அதாவது அபூபக்ர் (ரலி) அவர்களோ- (நபி (ஸல்) அவர்களின்) குகைத்தோழர் ஆவார். அவருடைய தாயாரோ -அதாவது அஸ்மா (ரலி) அவர்களோ- “கச்சுடையாள்' (என்று நபி (ஸல்) அவர்களால் சிறப்புப் பெயர் சூட்டப்பெற்றவர்) ஆவார்.
அவர்களுடைய சிறிய தாயாரோ -அதாவது ஆயிஷா (ரலி) அவர்களோ- இறைநம்பிக்கையாளர்களின் அன்னை யாவார். அவர்களுடைய அத்தையோ -அதாவது ஹதீஜா (ரலி) அவர்களோ- நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆவார். நபி (ஸல்) அவர்களின் அத்தையோ -அதாவது ஸஃபிய்யா (ரலி) அவர்களோ- அவருடைய பாட்டியாவார். மேலும் அவர், இஸ்லாத்தில் நெறி பிறழாதவர்; குர்ஆனை நன்கறிந்தவர். அல்லாஹ்வின் மீதாணையாக! உமய்யாக்கள் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றால் சொந்தத்தின் காரணத்தால் உறவாடுகிறார்கள்.12
எனக்கு அவர்கள் ஆட்சியாளர் களானால் அதற்குத் தகுதியுடையோராயும் சிறந்த பாரம்பரியமுடையோராயுமே ஆட்சியாளர்களாகின்றனர். (அப்படியிருந்தும் நான் அவர்களைக் கைவிட்டு, இப்னு ஸுபைருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய உறுதிபூண்டேன். ஆனால்) அவரோ “துவைத்'களுக்கும், “உசாமா'க்களுக்கும், “ஹுமைத்'களுக்கும் (என்னைவிட) முன்னுரிமை அளித்துவிட்டார். (இப்னு ஸுபைருடைய குலத்தாரான) “பனூ அசத்' குலத்தைச் சேர்ந்த பனூ துவைத், பனூ உசாமா, பனூ ஹுமைத் ஆகிய குடும்பங்களையே குறிப்பிடுகின்றார்கள்.13
இப்னு அபில்ஆஸ் -அப்துல் மலிக் பின் மர்வான்- அவர்கள் (தம் சகாக்களிடையே பல சிறப்புகள் பெற்று) முன்னேறிச் செல்கிறார். இவரோ -இப்னுஸ் ஸுபைரோ- பின்னடைவுக்கு ஆளாகிவிட்டார்.

4666. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، دَخَلْنَا عَلَى ابْنِ عَبَّاسٍ فَقَالَ أَلاَ تَعْجَبُونَ لاِبْنِ الزُّبَيْرِ قَامَ فِي أَمْرِهِ هَذَا فَقُلْتُ لأُحَاسِبَنَّ نَفْسِي لَهُ مَا حَاسَبْتُهَا لأَبِي بَكْرٍ وَلاَ لِعُمَرَ، وَلَهُمَا كَانَا أَوْلَى بِكُلِّ خَيْرٍ مِنْهُ، وَقُلْتُ ابْنُ عَمَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَابْنُ الزُّبَيْرِ، وَابْنُ أَبِي بَكْرٍ، وَابْنُ أَخِي خَدِيجَةَ، وَابْنُ أُخْتِ عَائِشَةَ فَإِذَا هُوَ يَتَعَلَّى عَنِّي وَلاَ يُرِيدُ ذَلِكَ فَقُلْتُ مَا كُنْتُ أَظُنُّ أَنِّي أَعْرِضُ هَذَا مِنْ نَفْسِي، فَيَدَعُهُ، وَمَا أُرَاهُ يُرِيدُ خَيْرًا، وَإِنْ كَانَ لاَ بُدَّ لأَنْ يَرُبَّنِي بَنُو عَمِّي أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ يَرُبَّنِي غَيْرُهُمْ.
பாடம் : 9
“அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாம வராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கி, “கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை அருளினான்” எனும் (9:40ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சகீனா' (மனஅமைதி) எனும் சொல் “சுகூன்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து “ஃபஈலா' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4666. இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த (ஆட்சியதிகாரத்தின்) விஷயத்தில் (அது தனக்கே சேர வேண்டு மென்று) இப்னு ஸுபைர் அவர்கள் உறுதியாக நிற்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? “நான் இப்னு ஸுபைருக்காக (அவருக்கு ஆதரவு கொடுப்பதா, வேண்டாமா என்பதில்) என் மனசாட்சியுடன் விவாதித்து வருகிறேன். (இந்த அளவுக்கு) நான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்காகவோ உமர் (ரலி) அவர்களுக்காகவோ வாதாடிய தில்லை. அவர்கள் இருவருமோ இப்னு ஸுபைரைவிட அனைத்து நன்மைகளுக் கும் தகுதி வாய்ந்தோராய் இருந்தனர்” என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன்.
“இப்னு ஸுபைர் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் அத்தை (ஸஃபிய்யா) உடைய (புதல்வரின்) புதல்வரும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் புதல்வரும் ஆவார். மேலும், அவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் (புதல்வி அஸ்மாவின்) புதல்வரும், கதீஜா (ரலி) அவர்களின் சகோதரர் (அவ்வாம்) உடைய (புதல்வர் ஸுபைரின்) புதல்வருமாவார். இன்னும் அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அஸ்மா) உடைய புதல்வரும் ஆவார்” என்று (மக்களிடம்) கூறினேன்.
ஆனால், இப்னு ஸுபைரோ, தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு என்னைவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். நான் அவருக்கு நெருக்கமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.
“மேலும், நானாக முன்வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தால் அதை அவர் ஏற்கவே செய்வார் என்றே நான் கருதியிருந்தேன். (இனியும் எனக்கு) அவர் நன்மை ஏதேனும் செய்வார் என்று நான் கருதவில்லை. (அப்படி) அவர் (தமது நிலையில்) உறுதியாக இருப்பாரென்றால், என்னுடைய தந்தை உடன்பிறந்தவரின் மக்கள் (பனூ உமய்யா) என்மீது ஆட்சி செலுத்துவதே மற்றவர்கள் (பனூ அசத்) என்மீது ஆட்சி செலுத்துவதைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று நான் எண்ணிக்கொண்டேன்.

4667. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيد ٍ ـ رضى الله عنه ـ قَالَ بُعِثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَىْءٍ، فَقَسَمَهُ بَيْنَ أَرْبَعَةٍ وَقَالَ " أَتَأَلَّفُهُمْ ". فَقَالَ رَجُلٌ مَا عَدَلْتَ. فَقَالَ " يَخْرُجُ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمٌ يَمْرُقُونَ مِنَ الدِّينِ ".
பாடம் : 10
“உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கும் (“ஸகாத்' எனும் தானம் உரியதாகும்)” எனும் (9:60ஆவது) வசனத்தொடர்
“நன்கொடை மூலம் மக்களின் உள்ளங்களை இணக்கமாக்குபவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்” என முஜாஹித் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.
4667. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பிவைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், “இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்” என்று சொன்னார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒரு மனிதர், “நீங்கள் நீதியாக நடந்துகொள்ளவில்லை” என்று சொன்னார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவருடைய பரம்பரையில் ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். (வேட்டைக்காரனின் அம்பு வேட்டைப் பிராணியைத் துளைத்துவிட்டு வெகுவிரைவில் வெளியேறுவதைப் போன்று) அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்” என்று கூறினார்கள்.14

4668. حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ أَبُو مُحَمَّدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ لَمَّا أُمِرْنَا بِالصَّدَقَةِ كُنَّا نَتَحَامَلُ فَجَاءَ أَبُو عَقِيلٍ بِنِصْفِ صَاعٍ، وَجَاءَ إِنْسَانٌ بِأَكْثَرَ مِنْهُ، فَقَالَ الْمُنَافِقُونَ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ صَدَقَةِ هَذَا، وَمَا فَعَلَ هَذَا الآخَرُ إِلاَّ رِئَاءً. فَنَزَلَتْ {الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ} الآيَةَ.
பாடம் : 11
“(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையோரென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காகச்) சிரமப்பட்டுச் சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதாவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அவர் களை அல்லாஹ் நகைக்கின்றான். மேலும், அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “யல்மிஸூன' எனும் சொல்லுக்கு “குறை பேசுகிறார்கள்' என்பது பொருள்.
“ஜுஹ்தஹும்' என்பதற்கு “அவர்களால் முடிந்ததை-சக்திக்குட்பட்டதை' என்பது பொருள்.
4668. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலிக்குச் சுமை சுமக்கும் வேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு “ஸாஉ' (பேரீச்சம்பழம்) கொண்டுவந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், “(அரை “ஸாஉ' கொண்டுவந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டுவந்திருக்கிறார்” என்று (குறை) சொன்னார்கள்.
அப்போதுதான், “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தானதர்மங் களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காகச்) சிரமப்பட்டுச் சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அவர்களை அல்லாஹ் நகைக்கின்றான். மேலும், அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.15

4669. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ أَحَدَّثَكُمْ زَائِدَةُ عَنْ سُلَيْمَانَ عَنْ شَقِيقٍ عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ بِالصَّدَقَةِ، فَيَحْتَالُ أَحَدُنَا حَتَّى يَجِيءَ بِالْمُدِّ، وَإِنَّ لأَحَدِهِمِ الْيَوْمَ مِائَةَ أَلْفٍ. كَأَنَّهُ يُعَرِّضُ بِنَفْسِهِ.
பாடம் : 11
“(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையோரென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காகச்) சிரமப்பட்டுச் சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதாவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அவர் களை அல்லாஹ் நகைக்கின்றான். மேலும், அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “யல்மிஸூன' எனும் சொல்லுக்கு “குறை பேசுகிறார்கள்' என்பது பொருள்.
“ஜுஹ்தஹும்' என்பதற்கு “அவர்களால் முடிந்ததை-சக்திக்குட்பட்டதை' என்பது பொருள்.
4669. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “தர்மம் செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரு கையளவு (தானியம் தர்ம மாகக்) கொண்டுவருவதற்குக்கூடக் கடுமையாக உழைப்போம். (ஆனால்,) எங்களில் சிலருக்கு இன்று ஒரு லட்சம் (தீனார்/திர்ஹம்) உள்ளது” என்று - தம்மைப் பற்றியே குறிப்பிடுவதைப் போன்று - கூறினார்கள்.16

4670. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ يُكَفِّنُ فِيهِ أَبَاهُ فَأَعْطَاهُ، ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُصَلِّيَ فَقَامَ عُمَرُ فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي عَلَيْهِ وَقَدْ نَهَاكَ رَبُّكَ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ فَقَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً} وَسَأَزِيدُهُ عَلَى السَّبْعِينَ ". قَالَ إِنَّهُ مُنَافِقٌ. قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ}.
பாடம் : 12
“(நபியே!) இந்த நயவஞ்சகர் களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது பாவமன்னிப் புக் கோராமல் இருப்பீராக!. (இரண் டும் ஒன்றுதான். ஏனெனில்,) எழு பது தடவை இவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். ஏனென்றால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்கள் மறுத்துவிட்டார்கள். பாவம் புரியும் மக்களை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை” எனும் (9:80ஆவது) இறைவசனம்
4670. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்கு கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் மேலங்கியைக் கேட்டார்கள்.17
அவரிடம் நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று (அதாவது நயவஞ்சகருக்கு பாவமன்னிப்புக் கோர வேண்டாமென்று) உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்!” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாவன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் விருப்ப உரிமையளித்துள்ளான்” என்று கூறிவிட்டு, “(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமல் இருப்பீராக! (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவர் நயவஞ்சகராயிற்றே!” என்று சொன்னார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நீர் நிற்க வேண்டாம்” எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.18

4671. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ،. وَقَالَ غَيْرُهُ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ لَمَّا مَاتَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ دُعِيَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُصَلِّيَ عَلَيْهِ فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَثَبْتُ إِلَيْهِ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَتُصَلِّي عَلَى ابْنِ أُبَىٍّ وَقَدْ قَالَ يَوْمَ كَذَا كَذَا وَكَذَا قَالَ أُعَدِّدُ عَلَيْهِ قَوْلَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ " أَخِّرْ عَنِّي يَا عُمَرُ ". فَلَمَّا أَكْثَرْتُ عَلَيْهِ قَالَ " إِنِّي خُيِّرْتُ فَاخْتَرْتُ، لَوْ أَعْلَمُ أَنِّي إِنْ زِدْتُ عَلَى السَّبْعِينَ يُغْفَرْ لَهُ لَزِدْتُ عَلَيْهَا ". قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ انْصَرَفَ فَلَمْ يَمْكُثْ إِلاَّ يَسِيرًا حَتَّى نَزَلَتِ الآيَتَانِ مِنْ بَرَاءَةَ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا} إِلَى قَوْلِهِ {وَهُمْ فَاسِقُونَ} قَالَ فَعَجِبْتُ بَعْدُ مِنْ جُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.
பாடம் : 12
“(நபியே!) இந்த நயவஞ்சகர் களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது பாவமன்னிப் புக் கோராமல் இருப்பீராக!. (இரண் டும் ஒன்றுதான். ஏனெனில்,) எழு பது தடவை இவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். ஏனென்றால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்கள் மறுத்துவிட்டார்கள். பாவம் புரியும் மக்களை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை” எனும் (9:80ஆவது) இறைவசனம்
4671. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்தபோது அவருக்கு ஜனாஸா தொழு கையை முன்னின்று நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்த போது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகிறீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படியெல்லாம் சொன்னாரே!” என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்குப் பட்டியóட்டுக் காட்டினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்துவிட்டு, “எனக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள், உமரே!” என்று சொன்னார்கள்.
நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், “இவருக்காகப் பாவமன்னிப்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டுள்ளது. நான் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதைத் தேர்ந் தெடுத்துக்கொண்டேன்.) நான் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப் புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரிய வருமாயின் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுவித்துவிட்டுத் திரும்பினார்கள்.
சற்று நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் “பராஅத்' (9ஆவது) அத்தியாயத்திலிருந்து, “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் ஜனாஸா தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் நீர் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள்” எனும் (9:84, 85 ஆகிய) இரு வசனங்கள் அருளப்பெற்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குமுன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்.

4672. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَاهُ قَمِيصَهُ وَأَمَرَهُ أَنْ يُكَفِّنَهُ فِيهِ ثُمَّ قَامَ يُصَلِّي عَلَيْهِ، فَأَخَذَ عُمَرُ بْنُ الْخَطَّابِ بِثَوْبِهِ فَقَالَ تُصَلِّي عَلَيْهِ وَهْوَ مُنَافِقٌ وَقَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تَسْتَغْفِرَ لَهُمْ. قَالَ " إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ أَوْ أَخْبَرَنِي فَقَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} فَقَالَ سَأَزِيدُهُ عَلَى سَبْعِينَ ". قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَلَّيْنَا مَعَهُ ثُمَّ أَنْزَلَ اللَّهُ عَلَيْهِ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ}
பாடம் : 13
“அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் இறுதித் தொழுகை தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகே யும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீர் நிற்க வேண்டாம்” எனும் (9:84ஆவது) வசனத்தொடர்
4672. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்டபோது அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அவரிடம் கொடுத்து அப்துல்லாஹ் பின் உபையை அதில் கஃபனிடும்படி உத்தர விட்டார்கள். பிறகு அவருக்கு ஜனாஸா தொழுவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “நயவஞ்சகராயிருந்த இவருக்கு நீங்கள் தொழுவிக்கிறீர்களா? அல்லாஹ்வோ, இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டாம் என்று உங்களைத் தடுத்துள்ளானே!” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம் அல்லது கோராமலும் இருக்கலாம் என்று) “எனக்கு அல்லாஹ் நான் விரும்பியதைச் செய்துகொள்ள விருப்ப உரிமை அளித்துள்ளான்' அல்லது “அல்லாஹ் எனக்கு இவ்வாறு அறிவித்துள்ளான்' என்று கூறி, “(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமல் இருப்பீராக. (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவ மன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான்” எனும் (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
பிறகு, “நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காக அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள். பின்னர் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். பிறகு அல்லாஹ், “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் இறுதித்தொழுகை தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீர் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள்” எனும் (9:84ஆவது) வசனத்தை நபிகளாருக்கு அருளினான்.

4673. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، حِينَ تَخَلَّفَ عَنْ تَبُوكَ، وَاللَّهِ، مَا أَنْعَمَ اللَّهُ عَلَىَّ مِنْ نِعْمَةٍ بَعْدَ إِذْ هَدَانِي أَعْظَمَ مِنْ صِدْقِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ أَكُونَ كَذَبْتُهُ فَأَهْلِكَ كَمَا هَلَكَ الَّذِينَ كَذَبُوا حِينَ أُنْزِلَ الْوَحْىُ {سَيَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ إِذَا انْقَلَبْتُمْ إِلَيْهِمْ} إِلَى {الْفَاسِقِينَ}.
பாடம் : 14
“நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும்” எனும் (9:95ஆவது) இறைவசனம்
4673. அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் “தபூக்' போரில் கலந்துகொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை நான் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நல்வழியில் செலுத்தியபிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போல) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான்.
அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால், பொய் கூறிய (மற்ற)வர்கள் அழிந்ததைப் போல நானும் அழிந்துபோயிருப்பேன்.
“நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்கள்மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள்மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்கள்மீது ஒருபோதும் திருப்தி கொள்ளமாட்டான்” எனும் வசனங்கள் (9:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்துபோனார்கள்.19

4674. حَدَّثَنَا مُؤَمَّلٌ ـ هُوَ ابْنُ هِشَامٍ ـ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، وَحَدَّثَنَا عَوْفٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدُبٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَنَا " أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ فَابْتَعَثَانِي، فَانْتَهَيْنَا إِلَى مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ، فَتَلَقَّانَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ، وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍ قَالاَ لَهُمُ اذْهَبُوا فَقَعُوا فِي ذَلِكَ النَّهْرِ. فَوَقَعُوا فِيهِ ثُمَّ رَجَعُوا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذَلِكَ السُّوءُ عَنْهُمْ، فَصَارُوا فِي أَحْسَنِ صُورَةٍ قَالاَ لِي هَذِهِ جَنَّةُ عَدْنٍ، وَهَذَاكَ مَنْزِلُكَ قَالاَ أَمَّا الْقَوْمُ الَّذِينَ كَانُوا شَطْرٌ مِنْهُمْ حَسَنٌ وَشَطْرٌ مِنْهُمْ قَبِيحٌ فَإِنَّهُمْ خَلَطُوا عَمَلاً صَالِحًا وَآخَرَ سَيِّئًا تَجَاوَزَ اللَّهُ عَنْهُمْ ".
பாடம்
“நீங்கள் அவர்கள்மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்கள்மீது ஒருபோதும் திருப்தி கொள்ளமாட்டான்” எனும் (9:96ஆவது) இறைவசனம்20
பாடம் : 15
மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறுசிலரும் (அவர்களில்) உள்ளனர்; அவர்கள் நற்செயலுடன் தீய செயலையும் கலந்துவிட்டிருக்கிறார்கள். (ஆயினும்,) அவர்(களின் குற்றங்)களை அல்லாஹ் மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான் (எனும் 9:102 ஆவது இறைவசனம்)
4674. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
இன்றிரவு என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்து என்னை (தூக்கத்திலிருந்து) எழுப்பி (அழைத்து)ச் சென்றார் கள். அவர்கள் இருவரும் தங்கச் செங்கல்லாலும் வெள்ளிச் செங்கல்லாலும் கட்டப்பெற்றிருந்த ஒரு நகரத்திற்கு சென்று சேர்ந்தார்கள். அப்போது எங்களைச் சில மனிதர்கள் எதிர்கொண்டார்கள். அவர்களின் உடலமைப்பில் பாதி நீ பார்த்ததிலேயே மிக அழகானதாயும், மற்றொரு பாதி நீ பார்த்ததிலேயே மிக அருவருப்பானதாயும் இருந்தது.
அ(ந்த வான)வர்கள் இருவரும் அந்த மனிதர்களிடம், “நீங்கள் சென்று அந்த ஆற்றில் விழுங்கள்” என்று கூற அவர்களும் அவ்வாறே அதில் விழுந்தனர். பிறகு எங்களிடம் திரும்பிவந்தனர். (அதற்குள்) அந்த அருவருப்பான தோற்றம் அவர்களை விட்டுச் சென்றுவிட்டிருந்தது. அவர்கள் மிக அழகான தோற்றமுடையவர்களாக மாறிவிட்டிருந்தனர்.
(என்னை அழைத்துச் சென்ற) அந்த இருவரும் என்னிடம், “இதுதான் “அத்ன்' எனும் சொர்க்கம். இதுதான் உங்கள் தங்குமிடம்” என்று கூறிவிட்டுப் பிறகு, “பாதி (தோற்றம்) அழகானதாயும் பாதி (தோற்றம்) அருவருப்பானதாயும் இருந்தவர்கள் (உலக வாழ்வில்) நற்செயலையும் வேறு தீய செயலையும் கலந்துவிட்டவர்கள். அவர்களின் குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான்” என்று (விளக்கம்) சொன்னார்கள்.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.