4675. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَىْ عَمِّ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ". فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ، أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ ". فَنَزَلَتْ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ}
பாடம் : 16 “இறைவனுக்கு இணைவைப்ப வர்கள் நரகவாசிகள்தான் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் - அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் - அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை” எனும் (9:113ஆவது) இறைவசனம்
4675. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அபூதாலிபுக்கு மரணவேளை வந்தபோது அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் இருக்க, நபி (ஸல்) அவர்கள் வந்து, “என் பெரிய தந்தையே! “லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன்” என்று சொன்னார்கள்.

அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூதாóபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டனர்.

நபி (ஸல்) அவர்கள், “(என் தந்தையின் சகோதரரே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போதுதான், “இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தான் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும்- அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும்கூட- அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை” எனும் (9:113 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது.21

அத்தியாயம் : 65
4676. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، قَالَ أَحْمَدُ حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبٍ ـ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ ـ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، فِي حَدِيثِهِ {وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُوا} قَالَ فِي آخِرِ حَدِيثِهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَرَسُولِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَمْسِكْ بَعْضَ مَالِكَ، فَهْوَ خَيْرٌ لَكَ ".
பாடம் : 17 “நிச்சயமாக, அல்லாஹ் (தன்) தூதர்மீது அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர் கள் மற்றும் அன்சாரிகள்மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் தடுமாறிக்கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள்மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்” எனும் (9:117ஆவது) இறைவசனம்
4676. அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (இறுதி நாட்களில்) கண்பார்வை அற்றவராக இருந்தபோது அவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்த அன்னாருடைய புதல்வரான (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்:

(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில் தாம் கலந்து கொள்ளாததைப் பற்றிய) தமது செய்தியை விவரித்தபோது, “எவரது விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்ததோ அவர்களது குற்றத்தை அல்லாஹ் மன்னித்துவிட்டான்” என்று தொடங்கும் (9:118ஆவது) இறைவசனம் குறித்துச் சொன்னவற்றை நான் செவியுற்றேன்.

கஅப் (ரலி) அவர்கள் தமது பேச்சின் இறுதியில் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) என் பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வத்தின் மீதான (எனது) உரிமையை விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அதைத் தர்மமாக அளித்துவிடுகிறேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்று சொன்னார்கள்.22

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4677. حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ رَاشِدٍ، أَنَّ الزُّهْرِيَّ، حَدَّثَهُ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبِي كَعْبَ بْنَ مَالِكٍ،، وَهْوَ أَحَدُ الثَّلاَثَةِ الَّذِينَ تِيبَ عَلَيْهِمْ أَنَّهُ لَمْ يَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا قَطُّ غَيْرَ غَزْوَتَيْنِ غَزْوَةِ الْعُسْرَةِ وَغَزْوَةِ بَدْرٍ. قَالَ فَأَجْمَعْتُ صِدْقَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ضُحًى، وَكَانَ قَلَّمَا يَقْدَمُ مِنْ سَفَرٍ سَافَرَهُ إِلاَّ ضُحًى وَكَانَ يَبْدَأُ بِالْمَسْجِدِ، فَيَرْكَعُ رَكْعَتَيْنِ، وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ كَلاَمِي وَكَلاَمِ صَاحِبَىَّ، وَلَمْ يَنْهَ عَنْ كَلاَمِ أَحَدٍ مِنَ الْمُتَخَلِّفِينَ غَيْرِنَا، فَاجْتَنَبَ النَّاسُ كَلاَمَنَا، فَلَبِثْتُ كَذَلِكَ حَتَّى طَالَ عَلَىَّ الأَمْرُ، وَمَا مِنْ شَىْءٍ أَهَمُّ إِلَىَّ مِنْ أَنْ أَمُوتَ فَلاَ يُصَلِّي عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ يَمُوتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَكُونَ مِنَ النَّاسِ بِتِلْكَ الْمَنْزِلَةِ، فَلاَ يُكَلِّمُنِي أَحَدٌ مِنْهُمْ، وَلاَ يُصَلِّي عَلَىَّ، فَأَنْزَلَ اللَّهُ تَوْبَتَنَا عَلَى نَبِيِّهِ صلى الله عليه وسلم حِينَ بَقِيَ الثُّلُثُ الآخِرُ مِنَ اللَّيْلِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ أُمِّ سَلَمَةَ، وَكَانَتْ أُمُّ سَلَمَةَ مُحْسِنَةً فِي شَأْنِي مَعْنِيَّةً فِي أَمْرِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أُمَّ سَلَمَةَ تِيبَ عَلَى كَعْبٍ ". قَالَتْ أَفَلاَ أُرْسِلُ إِلَيْهِ فَأُبَشِّرَهُ قَالَ " إِذًا يَحْطِمَكُمُ النَّاسُ فَيَمْنَعُونَكُمُ النَّوْمَ سَائِرَ اللَّيْلَةِ ". حَتَّى إِذَا صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْفَجْرِ آذَنَ بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا، وَكَانَ إِذَا اسْتَبْشَرَ اسْتَنَارَ وَجْهُهُ حَتَّى كَأَنَّهُ قِطْعَةٌ مِنَ الْقَمَرِ، وَكُنَّا أَيُّهَا الثَّلاَثَةُ الَّذِينَ خُلِّفُوا عَنِ الأَمْرِ الَّذِي قُبِلَ مِنْ هَؤُلاَءِ الَّذِينَ اعْتَذَرُوا حِينَ أَنْزَلَ اللَّهُ لَنَا التَّوْبَةَ، فَلَمَّا ذُكِرَ الَّذِينَ كَذَبُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمُتَخَلِّفِينَ، وَاعْتَذَرُوا بِالْبَاطِلِ، ذُكِرُوا بِشَرِّ مَا ذُكِرَ بِهِ أَحَدٌ قَالَ اللَّهُ سُبْحَانَهُ {يَعْتَذِرُونَ إِلَيْكُمْ إِذَا رَجَعْتُمْ إِلَيْهِمْ قُلْ لاَ تَعْتَذِرُوا لَنْ نُؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّأَنَا اللَّهُ مِنْ أَخْبَارِكُمْ وَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ} الآيَةَ.
பாடம் : 18 தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிட்டி ருந்ததெனில்) பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகி விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அவர்களை அல்லாஹ் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான் (எனும் 9:118ஆவது இறைவசனம்)
4677. அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையும் (தபூக் போரில் கலந்துகொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“அல்உஸ்ரா' (எனும் தபூக்) போர், பத்ர் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட எந்த அறப்போரிலும் நான் கலந்துகொள்ளாமல் ஒருபோதும் இருந்ததில்லை.

மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முற்பகலில் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள்.

(அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக் போரில் கலந்துகொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.

(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.

ஆகவே, மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு இறுதித் தொழுகை தொழுவிக்காமல் இருந்துவிடுவார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு இறுதித் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பதுதான்.

அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக் கூடாதென மக்களுக்குத் தடை விதித்ததிலிருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள் என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு சலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்க விடாமல் செய்து விடுவார்கள்” என்றார்கள்.

ஆக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது குறித்து (மக்களுக்கு) அறிவிப்புச் செய்தார்கள். -நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.

(போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப்போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில்தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளி னான்.

போரில் கலந்துகொள்ளாமலிருந்த வர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அது போல் யாரைக் குறித்தும் பேசப் பட்டதில்லை. தூயோன் அல்லாஹ் கூறுகின்றான்:

(இறைநம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப்போக்குக் கூறுகின்றனர். (ஆகவே, அவர்களை நோக்கி, நபியே!) நீர் கூறுவீராக: நீங்கள் சாக்குப்போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் நம்பவேமாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான்.

இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள் மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (9:94)23

அத்தியாயம் : 65
4678. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ ـ وَكَانَ قَائِدَ كَعْبِ بْنِ مَالِكٍ ـ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ حِينَ تَخَلَّفَ عَنْ قِصَّةِ، تَبُوكَ. فَوَاللَّهِ مَا أَعْلَمُ أَحَدًا أَبْلاَهُ اللَّهُ فِي صِدْقِ الْحَدِيثِ أَحْسَنَ مِمَّا أَبْلاَنِي، مَا تَعَمَّدْتُ مُنْذُ ذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى يَوْمِي هَذَا كَذِبًا، وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم {لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ} إِلَى قَوْلِهِ {وَكُونُوا مَعَ الصَّادِقِينَ}
பாடம் : 19 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள் (எனும் 9:119ஆவது இறைவசனம்)
4678. அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமலிருந்துவிட்ட செய்தியை அறிவித்தபோது நான் அவர்களிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன்:

அல்லாஹ்வின் மீதாணையாக!உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததை விடச் சிறப்பாக வேறெவரையும் அல்லாஹ் சோதித்ததாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இந்த நாள்வரை நான் திட்டமிட்டுப் பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின்வரும் வசனங்களை அருளினான்:

நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர்மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகள்மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக்கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்கள்மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள்மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.

மேலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிட்டிருந்த தெனில்,) பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது குறுகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகிவிட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அவர்களை அல்லாஹ் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள். (9:117-119)

அத்தியாயம் : 65
4679. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ ـ رضى الله عنه ـ وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الْوَحْىَ قَالَ أَرْسَلَ إِلَىَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ، فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِالنَّاسِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ الْقُرْآنِ، إِلاَّ أَنْ تَجْمَعُوهُ، وَإِنِّي لأَرَى أَنْ تَجْمَعَ الْقُرْآنَ. قَالَ أَبُو بَكْرٍ قُلْتُ لِعُمَرَ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ. فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي، وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ. قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لاَ يَتَكَلَّمُ. فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ وَلاَ نَتَّهِمُكَ، كُنْتَ تَكْتُبُ الْوَحْىَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَتَبَّعِ الْقُرْآنَ فَاجْمَعْهُ. فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَىَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلاَنِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ، فَقُمْتُ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنَ الرِّقَاعِ وَالأَكْتَافِ وَالْعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ، حَتَّى وَجَدْتُ مِنْ سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مَعَ خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، لَمْ أَجِدْهُمَا مَعَ أَحَدٍ غَيْرِهِ {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} إِلَى آخِرِهِمَا، وَكَانَتِ الصُّحُفُ الَّتِي جُمِعَ فِيهَا الْقُرْآنُ عِنْدَ أَبِي بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ. تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ وَاللَّيْثُ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ وَقَالَ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ. وَقَالَ مُوسَى عَنْ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ مَعَ أَبِي خُزَيْمَةَ. وَتَابَعَهُ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ. وَقَالَ أَبُو ثَابِتٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ وَقَالَ مَعَ خُزَيْمَةَ، أَوْ أَبِي خُزَيْمَةَ.
பாடம் : 20 “உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். நீங்கள் படும் துன்பம் அவருக்குப் பாரமாக இருக்கும். மேலும், உங்கள்மேல் அதிக அக்கறை கொண்டவர்; இறைநம்பிக்கையாளர்கள்மீது அதிகப் பரிவும் கருணையும் உள்ளவர் ஆவார்” எனும் (9:128ஆவது) இறைவசனம் (இவ்வசனத்தில், “அதிகப் பரிவுடையவர்' என்பதைச் சுட்டும்) “ரஊஃப்' எனும் சொல், “அர்ரஅஃபத்' (பரிவு) எனும் வேர்ச்சொல்லிலில் இருந்து பிறந்ததாகும்.
4679. ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) -அன்னார் வேத அறிவிப்பை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார்- அவர்கள் கூறியதாவது:

யமாமா போர் நடைபெற்றபின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை அழைத்துவர ஆளனுப்பினார்கள்.24

(நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:

உமர் அவர்கள் என்னிடம் வந்து, “இந்த யமாமா போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். (இறைமறுப் பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (ஆகவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்றுசேர்க்க வேண்டுமென நான் கருதுகின்றேன்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?” என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள்.

இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும்வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (உசிதமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர் (ரலி) அவர்கள் (ஏதும்) பேசாமல் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.

(பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்), “நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக வேத அறிவிப்புகளை எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்றுதிரட்டுங்கள்” என்று கூறினார்கள்.25

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டு மென எனக்கு அவர்கள் கட்டளை யிட்டிருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், “நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்” என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக்கொண்டிருந்தேன்.

முடிவில் எதற்காக அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன்வந்தேன்.) ஆகவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுத் தோல்கள், அகலமான எலும்புகள், பேரீச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களுடைய நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன்.

(இவ்வாறு திரட்டியபோது) “அத்தவ்பா' எனும் (9ஆவது) அத்தியாயத்தின் (கடைசி) இரு வசனங்களை குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.

(அவை:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். நீங்கள் படும் துன்பம் அவருக்குப் பளுவாக இருக்கும். மேலும், உங்கள்மேல் அதிக அக்கறை கொண்டவர், இறை நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும் கருணையும் உள்ளவர் ஆவார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியணையின் (அர்ஷின்) அதிபதியாயிருக்கின்றான். (9:128, 129)

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப் பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது.26

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “(அவ்விரு வசனங்கள்) “குஸைமா' (ரலி) அல்லது “அபூகுஸைமா' (ரலி) அவர்களிடம் இருந்தன” என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 65
4680. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَالْيَهُودُ تَصُومُ عَاشُورَاءَ فَقَالُوا هَذَا يَوْمٌ ظَهَرَ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ " أَنْتُمْ أَحَقُّ بِمُوسَى مِنْهُمْ، فَصُومُوا ".
பாடம்: 10. “யூனுஸ்' அத்தியாயம்1 பாடம் : 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (10:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபக்த்தலத்த' (அது கலந்தது) என்பதன் கருத்தாவது: அந்த (மழை) நீரால் பல்வேறு நிறங்களில் (மனிதனும் மிருகமும் புசிக்கின்ற புற்பூண்டுகளாக) அவை முளைத்தன. (அல்லாஹ் கூறுகின்றான்:) அல்லாஹ் (தனக்கு) ஒரு குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். (ஆனால்) அவன் தூயவன். அவன் (சந்ததி முதóயவற்றின்) தேவையற்றவன். (10:68) ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (10:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கதம ஸித்கின்' (நல்ல முன்முயற்சி)எனும் சொல், முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிக்கிறது. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: (கதம ஸித்கின் எனும்) இச்சொல்லுக்கு, “(முன்னேற்பாடாகச் செய்த) நன்மை' என்பது பொருள். (10:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தில்க்க ஆயாத்' (இவை இவ்வேதத்தின் வசனங்களாகும்) எனும் வாக்கியத்திற்கு, “இவை இவ்வேதத்தின் குறியீடுகளாகும்” என்பது பொருள்.2 இதைப் போன்றே (10:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஜரைன பிஹிம்' (அவர்களை நடத்திச் சென்றது) என்பதற்கு “பிக்கும்' (உங்களை நடத்திச் சென்றது) என்று பொருள். (10:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தஅவாஹும்' எனும் சொல்லுக்கு “அவர்களது பிரார்த்தனை' என்பது பொருள். (10:22ஆவது வசனத்தில்) “நிச்சயமாக நாம் (அலைகளால் நாலா பக்கங்களிலிருந்தும்) சூழ்ந்துகொள்ளப்பட்டோம்” என்பதற்கு “அழிவை நெருங்கிவிட்டோம்' என்பது பொருள். (அல்லாஹ் கூறுகின்றான்:) “அவர்களின் பாவம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது” (2:81) (10:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபஅத்பஅஹும்' எனும் சொல்லும் (அதே வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த) “ஃபத்தபஹும்' எனும் சொல்லும் (“அவர்களைப் பின்தொடர்ந்தனர்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அத்வ்' எனும் சொல் “உத்வான்' (எல்லை மீறல்) எனும் சொல் வகையைச் சேர்ந்ததாகும். முஜாஹித் ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: “மனிதர்கள் நன்மையைப் பெற அவசரப்படுவதைப் போல், (அவர்கள் அவசரப்பட்டுக் கோரும்) தீமையை அவர்களுக்கு அல்லாஹ் அவசரமாக வழங்கினால், அவர்களின் ஆயுள் அவர்களுக்கு (என்றோ) முடிக்கப்பட்டி ருக்கும்” எனும் (10:11ஆவது) வசனத்தின் கருத்தாவது: மனிதன் கோபப்படுகின்றபோது தன் குழந்தை மற்றும் செல்வத்தைப் பார்த்து, “அல்லாஹ்வின் சாபம் இதன் மீது உண்டாகட்டும்! இதில் வளம் (பரக்கத்) இல்லாமல் போகட்டும்!” என்று பிரார்த்திக்க, அதை அல்லாஹ் அவசரப்பட்டு நடை முறைப்படுத்தினால், யாருக்கெதிராக இது கூறப்பட்டதோ அவர் (உடனுக்குடன்) அழிக்கப்பட்டிருப்பார்; அவரை அல்லாஹ் இறக்கச்செய்திருப்பான். “நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமும் கிடைக்கும்” எனும் (10:26ஆவது) வசனத்தின் கருத்தாவது: நன்மை செய்தவர்களுக்கு அது போன்ற நன்மையும், அதைவிடக் கூடுதலாகப் பாவமன்னிப்பும் கிடைக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: அதைவிடக் கூடுதலாக அல்லாஹ்வின் தரிசனமும் கிடைக்கும். (10:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கிப்ரியாஉ' எனும் சொல், “ஆட்சியதிகாரத்தை'க் குறிக்கும். பாடம் : 2 நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும் அநீதியும் அக்கிரமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது, “இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன்மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும், (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்' என்று கூறினான் (எனும் 10:90ஆவது இறைவசனம்) (10:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நுன்ஜீக்க' (அல்லது “நுனஜ்ஜீக்க') எனும் சொல்லுக்கு “உன்னை (பூமியின்) மேடான ஓரிடத்தில் (ஒதுக்கிப்)போடுவோம்” என்பது பொருள்.
4680. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தார்கள். (அங்கு) யூதர்கள் “ஆஷூரா' (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பு நோற்றுக்கொண்டிருந்தார்கள். அன்றி அவர்கள், “இது மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “(யூதர்களான) இவர்களைவிட மூசா (அலை) அவர்களுக்கு நீங்கள்தான் அதிக உரிமையுடையவர்கள்; எனவே, (அந்நாளில்) நீங்கள் நோன்பு நோற்பீர்களாக!” என்று சொன்னார்கள்.3

அத்தியாயம் : 65
4681. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقْرَأُ {أَلاَ إِنَّهُمْ تَثْنَوْنِي صُدُورُهُمْ} قَالَ سَأَلْتُهُ عَنْهَا فَقَالَ أُنَاسٌ كَانُوا يَسْتَحْيُونَ أَنْ يَتَخَلَّوْا فَيُفْضُوا إِلَى السَّمَاءِ، وَأَنْ يُجَامِعُوا نِسَاءَهُمْ فَيُفْضُوا إِلَى السَّمَاءِ، فَنَزَلَ ذَلِكَ فِيهِمْ.
பாடம்: 11. “ஹூத்' அத்தியாயம்1 அபூமைசரா அம்ர் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அவ்வாஹ்' எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் “இரக்க சிந்தனையுடையவர்' என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பாதியர் ரஃயி' (எங்கள் பார்வையில்) எனும் சொற்றொடருக்கு “எங்களுக்குத் தென்பட்ட வகையில்' என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:44ஆவது வசனத்திலுள்ள) “ஜூதீ' என்பது (இப்னு உமர்) தீவிலுள்ள ஒரு மலையாகும்.2 ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:87ஆவது வசனத்திலுள்ள) “நிச்சயமாக நீர் கருணைமிக்க நேர்மையாளர்தான்' எனும் வாக்கியத்தை (மத்யன் நகர மக்கள்) ஷுஐப் (அலை) அவர்களிடம் பரிகாசமாகவே கூறினர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அக்லிஈ' எனும் சொல்லுக்கு “(வானமே!) நிறுத்திக்கொள்' என்பது பொருள். (11:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸீப்' எனும் சொல்லுக்கு “கடுமையானது' என்பது பொருள். (11:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா ஜரம' எனும் சொற்றொடருக்கு “ஆம் (மெய்யாகவே)' என்று பொருள். (11:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ ஃபாரத் தன்னூர்' (அடுப்பு பொங்கியது) எனும் வாக்கியத்திற்கு “வெள்ளம் பீறிட்டது' என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (“அத்தன்னூர்' எனும்) இச்சொல்லுக்கு “பூமியின் மேற்பரப்பு' என்பது பொருள். பாடம் : 1 இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விட மிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள் கிறார்கள். தெரிந்துகொள்ளுங்கள்: இவர்கள் ஆடைகளால் தங்களைமூடி மறைத்துக் கொண்டபோதி லும் அவர்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துகின்ற வற்றையும் அல்லாஹ் நன்கறி கின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் (எனும் 11:5ஆவது இறைவசனம்) (11:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாக்க' எனும் சொல்லுக்கு “இறங்கியது' என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) “யஹீக்கு' என்பதற்கு “இறங்கும்' என்று பொருள். (11:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஊஸுன்' (நம்பிக்கையிழந்தவன்) எனும் சொல் “யஇஸ்த்து (நம்பிக்கையிழந்தேன்) என்பதிலிருந்து “பஃஊல்' எனும் வாய்பாட்டில் வந்ததாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (11:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தப்தயிஸ்' எனும் சொல்லுக்கு “கவலைப் படுதல்' என்று பொருள். (11:5ஆவது வசனத்திலுள்ள) “அவனிடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள்கிறார் கள்” என்பதன் கருத்தாவது: முடிந்தால் அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் சத்தியத்தில் சந்தேகம் கொள்கிறார்கள்.
4681. முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த (11:5ஆவது) வசனத்தை (வேறோர் ஓதல் முறையின்படி), “அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்” என ஓத நான் கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள், “மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்துவிடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து)கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 65
4682. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَأَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَرَأَ {أَلاَ إِنَّهُمْ تَثْنَوْنِي صُدُورُهُمْ} قُلْتُ يَا أَبَا الْعَبَّاسِ مَا تَثْنَوْنِي صُدُورُهُمْ قَالَ كَانَ الرَّجُلُ يُجَامِعُ امْرَأَتَهُ فَيَسْتَحِي أَوْ يَتَخَلَّى فَيَسْتَحِي فَنَزَلَتْ {أَلاَ إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ}
பாடம்: 11. “ஹூத்' அத்தியாயம்1 அபூமைசரா அம்ர் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அவ்வாஹ்' எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் “இரக்க சிந்தனையுடையவர்' என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பாதியர் ரஃயி' (எங்கள் பார்வையில்) எனும் சொற்றொடருக்கு “எங்களுக்குத் தென்பட்ட வகையில்' என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:44ஆவது வசனத்திலுள்ள) “ஜூதீ' என்பது (இப்னு உமர்) தீவிலுள்ள ஒரு மலையாகும்.2 ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:87ஆவது வசனத்திலுள்ள) “நிச்சயமாக நீர் கருணைமிக்க நேர்மையாளர்தான்' எனும் வாக்கியத்தை (மத்யன் நகர மக்கள்) ஷுஐப் (அலை) அவர்களிடம் பரிகாசமாகவே கூறினர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அக்லிஈ' எனும் சொல்லுக்கு “(வானமே!) நிறுத்திக்கொள்' என்பது பொருள். (11:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸீப்' எனும் சொல்லுக்கு “கடுமையானது' என்பது பொருள். (11:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா ஜரம' எனும் சொற்றொடருக்கு “ஆம் (மெய்யாகவே)' என்று பொருள். (11:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ ஃபாரத் தன்னூர்' (அடுப்பு பொங்கியது) எனும் வாக்கியத்திற்கு “வெள்ளம் பீறிட்டது' என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (“அத்தன்னூர்' எனும்) இச்சொல்லுக்கு “பூமியின் மேற்பரப்பு' என்பது பொருள். பாடம் : 1 இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விட மிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள் கிறார்கள். தெரிந்துகொள்ளுங்கள்: இவர்கள் ஆடைகளால் தங்களைமூடி மறைத்துக் கொண்டபோதி லும் அவர்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துகின்ற வற்றையும் அல்லாஹ் நன்கறி கின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் (எனும் 11:5ஆவது இறைவசனம்) (11:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாக்க' எனும் சொல்லுக்கு “இறங்கியது' என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) “யஹீக்கு' என்பதற்கு “இறங்கும்' என்று பொருள். (11:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஊஸுன்' (நம்பிக்கையிழந்தவன்) எனும் சொல் “யஇஸ்த்து (நம்பிக்கையிழந்தேன்) என்பதிலிருந்து “பஃஊல்' எனும் வாய்பாட்டில் வந்ததாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (11:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தப்தயிஸ்' எனும் சொல்லுக்கு “கவலைப் படுதல்' என்று பொருள். (11:5ஆவது வசனத்திலுள்ள) “அவனிடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள்கிறார் கள்” என்பதன் கருத்தாவது: முடிந்தால் அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் சத்தியத்தில் சந்தேகம் கொள்கிறார்கள்.
4682. முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்” என்று இந்த (11:5ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், “அபுல்அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள “அவர்களின் நெஞ்சங்கள் திரும்பிக் கொள்கின்றன' என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அவர்கள், “சிலர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும்போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்துவிடுகின்றதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு)வந்தார்கள். அப்போது இந்த இறைவசனம் அருளப்பட்டது” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 65
4683. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ قَرَأَ ابْنُ عَبَّاسٍ {أَلاَ إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ أَلاَ حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ} وَقَالَ غَيْرُهُ عَنِ ابْنِ عَبَّاسٍ {يَسْتَغْشُونَ} يُغَطُّونَ رُءُوسَهُمْ {سِيءَ بِهِمْ} سَاءَ ظَنُّهُ بِقَوْمِهِ. {وَضَاقَ بِهِمْ} بِأَضْيَافِهِ {بِقِطْعٍ مِنَ اللَّيْلِ} بِسَوَادٍ. وَقَالَ مُجَاهِدٌ {أُنِيبُ} أَرْجِعُ.
பாடம்: 11. “ஹூத்' அத்தியாயம்1 அபூமைசரா அம்ர் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அவ்வாஹ்' எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் “இரக்க சிந்தனையுடையவர்' என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பாதியர் ரஃயி' (எங்கள் பார்வையில்) எனும் சொற்றொடருக்கு “எங்களுக்குத் தென்பட்ட வகையில்' என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:44ஆவது வசனத்திலுள்ள) “ஜூதீ' என்பது (இப்னு உமர்) தீவிலுள்ள ஒரு மலையாகும்.2 ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:87ஆவது வசனத்திலுள்ள) “நிச்சயமாக நீர் கருணைமிக்க நேர்மையாளர்தான்' எனும் வாக்கியத்தை (மத்யன் நகர மக்கள்) ஷுஐப் (அலை) அவர்களிடம் பரிகாசமாகவே கூறினர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அக்லிஈ' எனும் சொல்லுக்கு “(வானமே!) நிறுத்திக்கொள்' என்பது பொருள். (11:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸீப்' எனும் சொல்லுக்கு “கடுமையானது' என்பது பொருள். (11:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா ஜரம' எனும் சொற்றொடருக்கு “ஆம் (மெய்யாகவே)' என்று பொருள். (11:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ ஃபாரத் தன்னூர்' (அடுப்பு பொங்கியது) எனும் வாக்கியத்திற்கு “வெள்ளம் பீறிட்டது' என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (“அத்தன்னூர்' எனும்) இச்சொல்லுக்கு “பூமியின் மேற்பரப்பு' என்பது பொருள். பாடம் : 1 இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விட மிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள் கிறார்கள். தெரிந்துகொள்ளுங்கள்: இவர்கள் ஆடைகளால் தங்களைமூடி மறைத்துக் கொண்டபோதி லும் அவர்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துகின்ற வற்றையும் அல்லாஹ் நன்கறி கின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் (எனும் 11:5ஆவது இறைவசனம்) (11:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாக்க' எனும் சொல்லுக்கு “இறங்கியது' என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) “யஹீக்கு' என்பதற்கு “இறங்கும்' என்று பொருள். (11:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஊஸுன்' (நம்பிக்கையிழந்தவன்) எனும் சொல் “யஇஸ்த்து (நம்பிக்கையிழந்தேன்) என்பதிலிருந்து “பஃஊல்' எனும் வாய்பாட்டில் வந்ததாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (11:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தப்தயிஸ்' எனும் சொல்லுக்கு “கவலைப் படுதல்' என்று பொருள். (11:5ஆவது வசனத்திலுள்ள) “அவனிடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள்கிறார் கள்” என்பதன் கருத்தாவது: முடிந்தால் அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் சத்தியத்தில் சந்தேகம் கொள்கிறார்கள்.
4683. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங் களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்ப தற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்” எனும் (11:5ஆவது) இறைவசனத்தை (பிரபல ஓதல் முறையின் படி) “அலா இன்னஹும் யஸ்னூன ஸுதூரஹும்' என்றே ஓதினார்கள்.

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களல்லாத மற்றச் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஸ்தஃக்ஷூன' எனும் சொல்லுக்கு, “அவர்கள் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்” என்று பொருள்.

(11:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சீஅ பிஹிம்' என்பதற்கு “லூத் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரைக் குறித்த நல்லெண்ணத்தை இழந்தார்கள்' என்று பொருள். “ளாக்க பிஹிம்' என்பதற்கு “தம் விருந்தினர்களைக் குறித்து (அவர்களைத் தீய செயலுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தம் சமுதாயத்தார் முயல்வார்களோ எனும்) சங்கடம் லூத் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது” என்று பொருள்.

(11:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பிகித்இம் மினல் லைல்' என்பதற்கு “இரவின் இருட்டு இருக்கும்போதே' என்பது பொருள்.

(11:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இலைஹி உனீப்' எனும் வாக்கியத்திற்கு “அவன் பக்கமே நான் திரும்புகிறேன்' என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4684. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ ـ وَقَالَ ـ يَدُ اللَّهِ مَلأَى لاَ تَغِيضُهَا نَفَقَةٌ، سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ ـ وَقَالَ ـ أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاءَ وَالأَرْضَ فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَدِهِ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَبِيَدِهِ الْمِيزَانُ يَخْفِضُ وَيَرْفَعُ "". {اعْتَرَاكَ} افْتَعَلْتَ مِنْ عَرَوْتُهُ أَىْ أَصَبْتُهُ، وَمِنْهُ يَعْرُوهُ وَاعْتَرَانِي {آخِذٌ بِنَاصِيَتِهَا} أَىْ فِي مِلْكِهِ وَسُلْطَانِهِ. عَنِيدٌ وَعَنُودٌ وَعَانِدٌ وَاحِدٌ، هُوَ تَأْكِيدُ التَّجَبُّرِ، {اسْتَعْمَرَكُمْ} جَعَلَكُمْ عُمَّارًا، أَعْمَرْتُهُ الدَّارَ فَهْىَ عُمْرَى جَعَلْتُهَا لَهُ. {نَكِرَهُمْ} وَأَنْكَرَهُمْ وَاسْتَنْكَرَهُمْ وَاحِدٌ {حَمِيدٌ مَجِيدٌ} كَأَنَّهُ فَعِيلٌ مِنْ مَاجِدٍ. مَحْمُودٌ مِنْ حَمِدَ. سِجِّيلٌ الشَّدِيدُ الْكَبِيرُ. سِجِّيلٌ وَسِجِّينٌ وَاللاَّمُ وَالنُّونُ أُخْتَانِ، وَقَالَ تَمِيمُ بْنُ مُقْبِلٍ وَرَجْلَةٍ يَضْرِبُونَ الْبَيْضَ ضَاحِيَةً ضَرْبًا تَوَاصَى بِهِ الأَبْطَالُ سِجِّينَا
பாடம் : 2 “(அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது” எனும் (11:7ஆவது) வசனத்தொடர்
4684. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீ (என் அன்பை அடைந்திட) (அறவழியில்) செலவு செய். உனக்காக நான் செலவு செய்வேன்” என்று சொன்னான்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள் ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கின்றது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டது எதுவும் அவனது கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியணை (அர்ஷ்) நீரின் மேóருந்தது. அவனது கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகின்றான்; உயர்த்துகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(11:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஉதராக்க' எனும் சொல் “அரவ்த்துஹு' எனும் (வினைச்)சொல்லிலிருந்து “இஃப்தஅல்த்த' எனும் வாய்பாட்டு வினையெச்சத்தில் அமைந்துள்ளது. “அரவ்த்துஹு' என்பதற்கு “அவனுக்கு நான் கேடு உண்டாக்கினேன்' என்று பொருள். இ(ந்த மூலத்)திலிருந்துதான் “யஉரூஹு' (அவனுக்குப் பாதிப்பை உண்டாக்குவான்), “இஉதரானீ' (எனக்கு அவன் பாதிப்பை உண்டாக்கினான்) ஆகிய வினைச்சொற்கள் பிறந்தன.

“ஒவ்வோர் உயிரினத்தின் குடுமியும் அவனது பிடியிலேயே இருக்கிறது” எனும் (11:56ஆவது) வசனத்தின் கருத்தாவது: அவனது ஆட்சியதிகாரத்திலேயே உள்ளது.

(11:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அநீத்' எனும் சொல்லும் (அதே போன்ற) “அநூத்', “ஆநித்' ஆகிய சொற்களும் (“இறுக்கமான பிடிவாதக்காரன்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(11:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யகூலுல் அஷ்ஹாத்' (சாட்சியாளர்கள் கூறுவர்) எனும் தொடரில் “அல்அஷ்ஹாத்' என்பதன் ஒருமை “ஷாஹித்'; “அஸ்ஹாப்' என்பதன் ஒருமை “ஸாஹிப்' (நண்பன்) என்பதைப் போல.

(11:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தஅமரக்கும்' எனும் சொல்லுக்கு “உங்களை (அதில்) வசிப்பவர்களாக ஆக்கினான்' என்று பொருள். இதே வகையைச் சேர்ந்ததே “அஉமர்த்துஹுத் தார' என்பதும். இதன் பொருள்: அவனுக்கு இவ்வீட்டை (அவன் வாழ்நாள் முழுவதும்) உடைமையாக்கிக் கொடுத்தேன்.

(11:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நகிரஹும்' எனும் சொல்லும், (அதே போன்ற) “அன்கரஹும்', “இஸ்தன்கரஹும்' ஆகிய சொற்களும் (“அவர்களைப் புதிராகப் பார்த்தார்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(11:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹமீதுன் மஜீத்' என்பதில் “மஜீத்' (மாட்சிமை மிகுந்தவன்) எனும் சொல் “மாஜித்' எனும் (வினையாலணையும் பெயர்ச்) சொல்லில் இருந்து “ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.

“ஹமீத்' (புகழுக்குரியவன்) எனும் சொல் “ஹமித' எனும் (வினைச்)சொல்லிலிருந்து செயப்பாட்டு எச்சவினையின் (மஹ்மூத்) பொருள் கொண்டதாகும்.

(11:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சிஜ்ஜீல்' எனும் சொல்லுக்கு “கெட்டியான, பெரிய' என்று பொருள். “சிஜ்ஜீல்', “சிஜ்ஜீன்' இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இச்சொற்களின் இறுதியிலுள்ள) “லாம்', நூன்' ஆகிய எழுத்துகள் (உச்சரிப்பில்) நெருக்கமானவையாகும்.

(கவிஞர்) தமீம் பின் முக்பில் கூறினார்:

எத்தனையோகாலாட் படையினர்முற்பகல் வேளையில்கடுமையாக (சிஜ்ஜீன்)தாக்கிவிடுகின்றனர்தலைக் கவசங்களில்!மாபெரும் வீரர்கள்கூடஅதைப் பற்றி அறிவுறுத்துவர்இறுதி மூச்சின்போது.3

அத்தியாயம் : 65
4685. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَهِشَامٌ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، قَالَ بَيْنَا ابْنُ عُمَرَ يَطُوفُ إِذْ عَرَضَ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ ـ أَوْ قَالَ يَا ابْنَ عُمَرَ ـ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " يُدْنَى الْمُؤْمِنُ مِنْ رَبِّهِ ـ وَقَالَ هِشَامٌ يَدْنُو الْمُؤْمِنُ ـ حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ، فَيُقَرِّرُهُ بِذُنُوبِهِ تَعْرِفُ ذَنْبَ كَذَا يَقُولُ أَعْرِفُ، يَقُولُ رَبِّ أَعْرِفُ مَرَّتَيْنِ، فَيَقُولُ سَتَرْتُهَا فِي الدُّنْيَا وَأَغْفِرُهَا لَكَ الْيَوْمَ ثُمَّ تُطْوَى صَحِيفَةُ حَسَنَاتِهِ، وَأَمَّا الآخَرُونَ أَوِ الْكُفَّارُ فَيُنَادَى عَلَى رُءُوسِ الأَشْهَادِ هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ ". وَقَالَ شَيْبَانُ عَنْ قَتَادَةَ حَدَّثَنَا صَفْوَانُ.
பாடம் : 3 “மத்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம் தூதராக நியமித்தோம்)” (எனும் 11:84ஆவது வசனத்தொடர்) அதாவது “மத்யன்வாசிகளுக்கு (நாம் நியமித்தோம்)” என்று பொருள்.ஏனென்றால், “மத்யன்' என்பது ஓர் ஊராகும். இதைப் போன்றுதான் (12:82ஆவது வசனத்திலுள்ள), “அந்த ஊரைக் கேளுங்கள்; அந்த ஒட்டகக் கூட்டத்தைக் கேளுங்கள்” என்பதற்கு அந்த ஊர்வாசிகளையும் ஒட்டகக் கூட்டத்தாரையும் (கேளுங்கள்)” என்று பொருள். (11:92ஆவது வசனத்திலுள்ள) “நீங்கள் அவனைப் புறக்கணித்துவிட்டீர்கள்” என்பதற்கு, “இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பவில்லை என ஷுஐப் (அலை) அவர்கள் (அந்த மத்யன்வாசிகளிடம்) சொன்னார்கள்” என்று பொருள். (இதன் மூலத்திலுள்ள “ழிஹ்ரிய்யு' என்பதற்கு “முதுகுக்கப்பால்' என்பது பொருள். பொதுவாக) ஒரு மனிதன் தன் தேவை நிறைவேறாதபோது “ழஹர்த்த பி ஹாஜத்தீ' (என் தேவையைப் புறக்கணித்துவிட்டாய்) என்றும், “வ ஜஅல்த்தனீ ழிஹ்ரிய்யன்' (என்னை முதுகுக்கப்பால் ஆக்கிவிட்டாய்) என்றும் கூறுவதுண்டு. ஒரு வாகனப் பிராணியை, அல்லது ஒரு பையை உதவிக்காக உடன் எடுத்துச் செல்வதற்கும் “ழிஹ்ரிய்யு' என்பர். (11:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அராஃதில்' எனும் சொல்லுக்கு “தரம் தாழ்ந்தோர்' என்பது பொருள். (11:35ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “இஜ்ராமீ' (என் குற்றம்) என்பது “அஜ்ரம்த்து' எனும் (வினைச்)சொல்லின் வேர்ச்சொல்லாகும். “ஜரம்த்து' எனும் (வினைச்)சொல்(லின் வேர்ச்சொல்) என்றும் சிலர் கூறுகின்றனர். (11:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபுல்க்' எனும் சொல்லே ஒருமைக்கும் பன்மைக்கும் உரியதாகும். பொருள்: மரக்கலம், மரக்கலங்கள். (11:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஜ்ராஹா' எனும் சொல்லுக்கு “அது ஓடுகின்றபோது' என்று பொருள். இச்சொல் “அஜ்ரைத்து' எனும் (வினைச்)சொல்லின் வேர்ச்சொல்லாகும். (இதிலுள்ள “முர்சாஹா' (நிறுத்தும்போது) எனும் சொல்) “அர்சைத்து' எனும் (வினைச்)சொல்லின் (வேர்ச்சொல்லாகும். இதன்) பொருள்: நிறுத்தினேன். (இதே சொல் இன்னோர் ஓதல் முறையில்) “மர்சாஹா' என்றும் ஓதப்படுகிறது. (இப்போது அச்சொல்) “ரசத் ஹிய' (அது அசையாமல் நின்றது) என்ற வினைச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும் “மஜ்ராஹா' என்பது “ஜரத் ஹிய' (அது ஓடியது) என்பதிலிருந்து திரிபுற்றதாகும். முஜ்ரீஹா, முர்சீஹா எனும் சொற்கள், செயப்பாட்டு வினைச்சொற்களாகும். “அர்ராசியாத்' எனும் சொல்லுக்கு “அசையாத' என்பது பொருள்.4 பாடம் : 4 “அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிடக் கொடிய அக்கிரமக்காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவனின் திருமுன் கொண்டுவரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள், “இவர் கள்தான் தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்த வர்கள்” என்று கூறுவார்கள். எச்ச ரிக்கை! இத்தகைய அநீதியாளர் கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்” எனும் (11:18ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஹாத்' (சாட்சியாளர்கள்) எனும் சொல்லின் ஒருமை “ஷாஹித்' என்பதாகும். இது (வாய்பாட்டில்) ஸாஹிப், அஸ்ஹாப் (தோழர்கள்) போன்றதாகும்.
4685. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அபூஅப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, “அபூஅப்திர் ரஹ்மானே!' அல்லது “இப்னு உமரே!' (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர் “அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார்.' அல்லது “இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.' அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான்.

அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்), “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா” என்(று கேட்)பான். அவர், “(ஆம்) அறிவேன். என் இறைவா!” என்று இரண்டு முறை கூறுவார்.

அப்போது இறைவன், “இவற்றை யெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகின்றேன்” என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட் டப்படும். “மற்றவர்கள்' அல்லது “இறைமறுப்பாளர்கள்' சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர் கள்தான், தம் இறைவன்மீது பொய் யைப் புனைந்துரைத்தவர்கள்” என அறிவிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்றார்கள்.5

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4686. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ ". قَالَ ثُمَّ قَرَأَ {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهْىَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ}
பாடம் : 5 “அநீதி இழைக்கும் ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதும் ஆகும்” எனும் (11:102ஆவது) இறைவசனம் (11:99ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அர்ரிஃப்த்' எனும் சொல்லுக்கு “உதவி' என்பது பொருள். “அல்மர்ஃபூத்' எனும் சொல்லுக்கு “உதவியாளர்' என்பது பொருள். (அதன் இறந்த கால வினைச்சொல்லான) “ரஃபத்துஹு' எனும் சொல்லுக்கு “அவனுக்கு நான் உதவி புரிந்தேன்' என்பது பொருள். (11:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தர்கனூ' எனும் சொல்லுக்கு “சாய்ந்து விடுதல்' என்பது பொருள். (11:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப லவ் லா கான' எனும் சொற்றொட ருக்கு “இருந்திருக்க வேண்டாமா' என்று பொருள். “உத்ரிஃபூ' என்பதற்கு “(ஆசாபாசங்களைப் பின்பற்றி) அழிந்துபோயினர்' என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸஃபீர்' எனும் சொல்லுக்கு “கடுமையான (கூச்சல்)' என்பது பொருள். “ஷஹீக்' எனும் சொல்லுக்கு “பலவீனமான குரல்' என்பது பொருள்.
4686. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அநீதியாளனுக்கு விட்டுக்கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவேமாட்டான்” என்று கூறிவிட்டு, பிறகு,”அநீதி இழைக்கும் ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனது பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதும் ஆகும்” எனும் (11:102ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அத்தியாயம் : 65
4687. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ ـ هُوَ ابْنُ زُرَيْعٍ ـ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَأُنْزِلَتْ عَلَيْهِ {وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ}. قَالَ الرَّجُلُ أَلِيَ هَذِهِ قَالَ " لِمَنْ عَمِلَ بِهَا مِنْ أُمَّتِي ".
பாடம் : 6 “பகலின் இரு முனைகளிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுங்கள். நிச்சய மாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்” எனும் (11:114ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஸுலஃப்' எனும் சொல்லுக்கு “ஒரு நேரத்திற்குப்பின் ஒரு நேரம்' என்று பொருள். “ஸுலஃப்' எனும் சொல்லிலிருந்துதான் “அல்முஸ்தலிஃபா' (இரவில் சிறிது நேரம் மக்கள் கூடுமிடம்) என்ற பெயர் (மக்காவிலுள்ள ஓரிடத்திற்கு) வந்தது. “அஸ்ஸுலஃப்' எனும் இச்சொல்லுக்கு “ஒரு நிலைக்குப்பின் ஒரு நிலை' என்ற பொருளும் உண்டு. (38:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸுல்ஃபா' என்பது “நெருக்கம்' என்ற பொருள் கொண்ட வேர்ச்சொல்லாகும். “இஸ்தலஃபூ' எனும் சொல்லுக்கு “ஒன்றுகூடினர்' என்பது பொருள். (26:64ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “அஸ்லஃப்னா' எனும் சொல்லுக்கு “நாம் ஒன்றுகூட்டினோம்' என்பது பொருள்.
4687. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருவரை முத்தமிட்டுவிட்டார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார்.

அப்போது “பகலின் இரு முனைகளிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுங்கள். நிச்சயமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்” எனும் (11:114ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.6

அத்தியாயம் : 65
4688. وَقَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَرِيمُ بْنُ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ ".
பாடம்: 12. “யூசுஃப்' அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (12:31ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல்முறைப்படி இடம்பெற்றுள்ள) “முத்கஅன்' எனும் சொல்லுக்கு “நாரத்தை பழம்' (அல்உத்ருஜ்ஜு) என்று பொருள். இதை “ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான்' (ரஹ்) அவர்களிடமிருந்து “ஃபுளைல் பின் இயாள்' (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் (பெயர் குறிப்பிடாத) ஒருவரிடமிருந்து சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். ஃபுளைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபிசீனிய மொழியில் நாரத்தைப் பழத்திற்கு “முத்கன்' எனப்படும். கத்தியால் வெட்டப்(பட்டு உண்ணப்)படும் எல்லாப் பொருள்களுக்கும் “முத்கன்' எனறு சொல்லப்படும். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (12:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல ஃதூ இல்ம்' எனும் சொற்றொடருக்கு “அறிந்தபடி செயலாற்றுபவர்' என்பது பொருள். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (12:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸுவாஉ' எனும் சொல், (மேற்)பாகங்கள் இணைந்த (குறுகலான) பாரசீகர்களின் மரக்கால் அளவையைக் குறிக்கும்; அரபியரல்லாதோர் அதை (நீர்) அருந்துவதற்குப் பயன்படுத்திவந்தனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (12:94ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துஃபன்னிதூன்' எனும் சொல்லுக்கு “என்னை நீங்கள் முட்டாளாக்கிவிடுவீர்கள்' என்பது பொருள். மற்றவர்கள் கூறுகின்றனர்: (12:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகயாபத்' எனும் சொல் பொதுவாக, உனது கண்ணைவிட்டு ஒன்றை மறைக்கின்ற யாவற்றையும் குறிக்கும். சுற்றுச் சுவர் எழுப்பப்படாத (பாழுங்)கிணறு “ஜுப்பு' எனப்படும். (12:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வமா அன்த்த பி முஃமினின் லனா' எனும் வாக்கியத்திற்கு, “எங்களை நீங்கள் நம்பவேமாட்டீர்கள்” என்பது பொருள். (12:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷுத்தஹு' எனும் சொல், ஒருவருக்கு (முதுமையின்) பலவீனம் தொடங்கும் முன்புள்ள பருவத்தைக் குறிக்கும். “பலஃக அஷுத்தஹு' (அவன் தன் வாலிபத்தை அடைந்தான்), “பலஃகூ அஷுத்தஹும்' (அவர்கள் தம் வாலிபத்தை அடைந்தனர்) என்று (ஒருமை, பன்மை இரண்டுக்குமே “அஷுத்து' என்றே) கூறப்படுகிறது. “அஷுத்து' எனும் சொல்லின் ஒருமை “ஷத்துன்' என்றும் சிலர் கூறுவர். (12:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தகஅன்' எனும் சொல், “உண்ண, பருக, உரையாட நீ எதன்மீது சாய்ந்து அமர்ந்தாயோ அ(ந்தப் பொருள்)தனைக் குறிக்கும். “(“முத்தகஅன்' என்பதற்கு) “நாரத்தைப் பழம்' என்று பொருள் கொள்பவர்களின் கருத்துப் பொருத்தமற்றதாகும். அரபியரின் மொழி வழக்கில் “நாரத்தைப் பழம்' எனும் பொருளில் இச்சொல் வரவேயில்லை. “முத்தகஉ' என்பதற்கு “சாய்ந்துகொள்ளப் பயன்படும் திண்டு' என்பதே பொருள் என நிரூபிக்கப்பட்டவுடன், (மாற்றுப் பொருள் கூறுவோர்) “எலுமிச்சை' என்பதைக் குறிப்பது “முத்க்' எனும் சொல்லே என்று கூறி, அதைவிட மோசமானதொரு பொரு ளுக்கு ஓடுகிறார்கள். ஏனெனில் “முத்க்' எனும் சொல் பெண்குறியின் ஓரத்தையே குறிக்கும். இதனாலேயே பெண்ணை “மத்கா' (நுனித்தோல் அகற்றப்படாதவள்) என்றும், அவளுடைய மகனை “இப்னுல் மத்கா' என்றும் கூறுவர். அப்படி ஒருகால் அங்கே (12:31ஆவது வசனம் கூறுகின்ற நிகழ்ச்சியில்) நாரத்தைப் பழம் இருந்திருப்பின், அது சாய்வுத் திண்டு (வைக்கப்பட்டது)க்குப் பிறகே இருந்திருக்கும். (12:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “ஷஃகஃபஹா' எனும் சொல்லுக்கு, “அவளது இதயத்திரைவரை காதல் வந்துவிட்டது” என்பது பொருள். (இதே சாயலில் உள்ள) “ஷஅஃபஹா' எனும் சொல்லுக்கு, “அவளது இதயத்தைக் காதல் எரித்துவிட்டது' என்று பொருள். (12:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்பு' எனும் சொல்லுக்கு “சாய்ந்து விடுவேன்' என்பது பொருள். (12:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அள்ஃகாஸு அஹ்லாம்' எனும் சொற்றொடருக்கு “விளக்கம் கூற முடியாத (வீண்) கனவுகள்' என்பது பொருள். இதன் ஒருமை “ளிஃக்ஸ்' என்பதாகும். (எனினும்,) “ஒரு பிடி (புல்) கற்றையை கையில் எடுங்கள்” எனும் (38:44ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள “ளிஃக்ஸ்' எனும் சொல் இதன் ஒருமையன்று. “ஒரு கைப்பிடி புல் போன்றது' என்பதே இதன் பொருளாகும். (12:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நமீரு' (நாம் உணவு தானியங்கள் வாங்கி வருவோம்) எனும் (வினைச்)சொல், “மீரத்' எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். “நஸ்தாது கைல பஈர்' எனும் வாக்கியத்திற்கு “ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவுக்குக் கூடுதலாக தானியம் பெற்று வருவோம்' என்று பொருள். (12:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆவா இலைஹி' எனும் வாக்கியத்திற்கு “தம்முடன் சேர்த்துக்கொண்டார்' என்பது பொருள். (12:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸிக்காயா' எனும் சொல்லுக்கு “அளவைப் படி' என்று பொருள். (12:80ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தய்அஸூ' எனும் சொல்லுக்கு “யஇஸூ' (அவர்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்) என்று பொருள். (12:87ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ லா தைஅஸூ மின் ரவ்ஹில்லாஹ்' எனும் வாக்கியத்திற்கு “அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழந்துவிடாதீர்கள்' என்று பொருள். (12:80ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கலஸூ நஜிய்யா' எனும் வாக்கியத்திற்கு “அவர்கள் இரகசியமாக ஒப்புக்கொண்டனர்' என்பது பொருள். (“நஜிய்யு' எனும் சொல்லின்) பன்மை: “அன்ஜியா' என்பதாகும். (அதன் எதிர்கால வினைச்சொல்:) “யத்தனாஜூன' என்பதாகும். ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்திலும் “நஜிய்யு' என்பர். பன்மையில் “அன்ஜியா' என்றும் கூறுவர். (12:85ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தஃப்தஉ (தஃத்குரு)' எனும் சொல்லுக்கு “எப்போதும் (நினைத்துக்கொண்டே) இருப்பீர்' என்று பொருள். “ஹரள்' எனும் (வேர்ச்சொல்லுக்கு “முஹ்ரள்' (உடல் இளைத்துப்போனவர்) எனும் (செயப்பாட்டு வினை எச்சத்தின்) பொருளாகும். “கவலை உங்களை உருக்கிவிடும்' என இதற்குப் பொருள் விரியும். (12:87ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தஹஸ்ஸஸூ' எனும் சொல்லுக்கு “தகவல் அறிந்து வாருங்கள்' என்று பொருள். (12:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஸ்ஜாத்' எனும் சொல்லுக்கு “அற்பமானது' என்பது பொருள். (12:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகாஷியா' எனும் சொல்லுக்கு “நன்கு சூழ்ந்துகொள்ளக்கூடியது' என்று பொருள். பாடம் : 1 “இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர்மீது தன் அருட்கொடையை அவன் நிறைவு செய்ததைப் போன்று உம்மீதும், யஅகூபின் குடும்பத்தார்மீதும் நிறைவுசெய்வான்” எனும் (12:6ஆவது) வசனத்தொடர்
4688. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 65
4689. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ النَّاسِ أَكْرَمُ قَالَ " أَكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاهُمْ ". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ " فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ ". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ " فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي ". قَالُوا نَعَمْ. قَالَ " فَخِيَارُكُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا ". تَابَعَهُ أَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ.
பாடம் : 2 “திண்ணமாக, (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர் களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக்குப் படிப் பினைகள் பல உள்ளன” எனும் (12:7ஆவது) இறைவசனம்
4689. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம், “மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், “நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி (இஸ்ஹாக்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி (யஅகூப்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி யூசுஃப் அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள்.

மக்கள், “இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள், “ஆம்' என்றனர். நபி (ஸல்) அவர்கள், “அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள்தான் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர் களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.3

அத்தியாயம் : 65
4690. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ،. قَالَ وَحَدَّثَنَا الْحَجَّاجُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ الأَيْلِيُّ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا فَبَرَّأَهَا اللَّهُ، كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ، وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ ". قُلْتُ إِنِّي وَاللَّهِ لاَ أَجِدُ مَثَلاً إِلاَّ أَبَا يُوسُفَ {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} وَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ} الْعَشْرَ الآيَاتِ.
பாடம் 3 “இல்லை; உங்கள் மனம் ஒரு (மாபாவச்) செயலை(க்கூட) உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. ஆகவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று)” எனும் (12:18ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சவ்வலத்' எனும் சொல்லுக்கு “அலங்கரித்துக் காட்டியது' என்று பொருள்.
4690. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது ஆயிஷா (ரலி) குற்றமற்றவர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிட மிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்ற மற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு” என்று சொன்னார்கள்.

அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையை விட(ச் சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்” (12:18) என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “இந்த அவதூறைப் புனைந்து கொண்டுவந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்...” என்று (தொடங்கும் 24:11 முதல் 20 வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4691. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ حَدَّثَنِي مَسْرُوقُ بْنُ الأَجْدَعِ، قَالَ حَدَّثَتْنِي أُمُّ رُومَانَ، وَهْىَ أُمُّ عَائِشَةَ قَالَتْ بَيْنَا أَنَا وَعَائِشَةُ أَخَذَتْهَا الْحُمَّى، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَعَلَّ فِي حَدِيثٍ تُحُدِّثَ ". قَالَتْ نَعَمْ وَقَعَدَتْ عَائِشَةُ قَالَتْ مَثَلِي وَمَثَلُكُمْ كَيَعْقُوبَ وَبَنِيهِ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ.
பாடம் 3 “இல்லை; உங்கள் மனம் ஒரு (மாபாவச்) செயலை(க்கூட) உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. ஆகவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று)” எனும் (12:18ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சவ்வலத்' எனும் சொல்லுக்கு “அலங்கரித்துக் காட்டியது' என்று பொருள்.
4691. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “(அவரைப் பற்றிப்) பேசப்பட்டுவரும் பேச்சின் காரணத்தால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!” என்று கூறினார்கள். நான், “ஆம்! (அப்படித்தான்)” என்றேன்.

ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஅகூப் (அலை) அவர்களும் அவர்களுடைய பிள்ளை களும் ஆவர். இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவி கோர வேண்டும்” (12:18) என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4692. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ هَيْتَ لَكَ قَالَ وَإِنَّمَا نَقْرَؤُهَا كَمَا عُلِّمْنَاهَا {مَثْوَاهُ} مُقَامُهُ {أَلْفَيَا} وَجَدَا {أَلْفَوْا آبَاءَهُمْ} {أَلْفَيْنَا} وَعَنِ ابْنِ مَسْعُودٍ {بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ}
பாடம் : 4 “அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத் துத் தாழிட்டுவிட்டு, “வாரும்' என்று அழைத்தாள்” எனும் (12:23ஆவது) வசனத்தொடர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹய்த்த லக்க' என்பதற்கு “ஹவ்ரானியா' (ஓரான்டீஸ்) எனும் (சிரியா) மொழியில் “இங்கே வா!' என்று பொருள். இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களும், இச்சொல்லின் பொருள் “வா!' என்பதுதான் என்று கூறுகிறார்கள்.
4692. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(12:23ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “காலத் ஹைத்த லக்க' எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள்ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(12:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்வாஹு' எனும் சொல்லுக்கு “இவரைத் தங்கவைத்தல்' என்பது பொருள்.

(12:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபயா' எனும் சொல்லுக்கு “அவர்கள் இருவரும் கண்டனர்' என்று பொருள்.

(37:69ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள “அல்ஃபவ் ஆபாஅஹும்' என்பதற்கு “அவர்கள் தம் மூதாதையரைக் கண்டார்கள்' என்று பொருள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், (37:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “பல் அஜிப்த்த வ யஸ்கரூன்' என்பதை) “பல் அஜிப்த்து வ யஸ்கரூன்' (நான் ஆச்சரியப்படுகின்றேன்; அவர்களோ பரிகசிக்கின்றனர்) என்று ஓதினார்கள்.


அத்தியாயம் : 65
4693. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ قُرَيْشًا لَمَّا أَبْطَئُوا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالإِسْلاَمِ قَالَ " اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ " فَأَصَابَتْهُمْ سَنَةٌ حَصَّتْ كُلَّ شَىْءٍ حَتَّى أَكَلُوا الْعِظَامَ حَتَّى جَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَى السَّمَاءِ فَيَرَى بَيْنَهُ وَبَيْنَهَا مِثْلَ الدُّخَانِ قَالَ اللَّهُ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} قَالَ اللَّهُ {إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلاً إِنَّكُمْ عَائِدُونَ} أَفَيُكْشَفُ عَنْهُمُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ، وَقَدْ مَضَى الدُّخَانُ وَمَضَتِ الْبَطْشَةُ.
பாடம் : 4 “அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத் துத் தாழிட்டுவிட்டு, “வாரும்' என்று அழைத்தாள்” எனும் (12:23ஆவது) வசனத்தொடர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹய்த்த லக்க' என்பதற்கு “ஹவ்ரானியா' (ஓரான்டீஸ்) எனும் (சிரியா) மொழியில் “இங்கே வா!' என்று பொருள். இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களும், இச்சொல்லின் பொருள் “வா!' என்பதுதான் என்று கூறுகிறார்கள்.
4693. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடுவாயாக!” என்று (அவர்களுக்கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) அனைத் தையும் அழித்துவிட்டது.

எந்த அளவுக்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர்; (கடும் பசி, பட்டினியால் கண் பஞ்சடைந்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால், அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார்.

அல்லாஹ் கூறுகின்றான்: “இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும்” (44:10).

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் சற்று வேதனையை அகற்றி விடுகின்றோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே) திரும்புகிறீர்கள் (44:15). இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களைவிட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படப் போவதில்லை.)

ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்தப் புகையும் வந்துவிட்டது; பத்ர் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.5

அத்தியாயம் : 65
4694. حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ لأَجَبْتُ الدَّاعِيَ، وَنَحْنُ أَحَقُّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ لَهُ {أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي}"
பாடம் : 5 “அரசர், அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். (அரசரின்) தூதுவர் யூசுஃபிடம் வந்தபோது, யூசுஃப் அவரிடம், “நீர் உம் எசமானிடம் திரும்பிச் சென்று, தம் கரங்களை அறுத்துக்கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று? என்று கேட்டு வாரும். நிச்சய மாக, என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை நன்கு அறிந்த வனாவான்' என்று கூறினார். பிறகு அரசர் அப்பெண்களிடம், “நீங்கள் யூசுஃபை உங்கள் ஆசைக்கு இணங்கவைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனு பவம் என்ன?' என்று வினவினார். அதற்கு அப்பெண்கள், “அல்லாஹ் தூய்மையானவன்! நாங்கள் அவரிடம் எந்தத் தீய அம்சத்தையும் காணவில்லை' என்று கூறினர்” எனும் (12:50, 51 ஆகிய) வசனங்கள் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாஷ' மற்றும் “ஹாஷா' ஆகிய சொற்களுக்கு “தூயவன்' என்றும் “தவிர' என்றும் (அரபி மொழி வழக்கில்) பொருள். “ஹஸ்ஹஸ' எனும் சொல்லுக்கு “தெளிவாகிவிட்டது' என்று பொருள்.
4694. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) “லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டு வானாக! அன்னார் வலுவான ஓர் ஆதர வாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவுக்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க்கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம்.

அவர்களிடம் அல்லாஹ், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டபோது அவர்கள், “ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்துபோனதை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65