4615. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه قَالَ كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَيْسَ مَعَنَا نِسَاءٌ فَقُلْنَا أَلاَ نَخْتَصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ، فَرَخَّصَ لَنَا بَعْدَ ذَلِكَ أَنْ نَتَزَوَّجَ الْمَرْأَةَ بِالثَّوْبِ، ثُمَّ قَرَأَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ }
பாடம் : 9 “இறைநம்பிக்கை கொண்டவர் களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க்கொள்ளாதீர்கள்” எனும் (5:87ஆவது) வசனத்தொடர்
4615. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “எங்களுடன் துணைவியர் யாரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஓர்) அறப் போரில் கலந்துகொண்டிருந்தோம். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?' என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க்கொள்ளாதீர்கள்” எனும் (5:87ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.12

அத்தியாயம் : 65
4616. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَإِنَّ فِي الْمَدِينَةِ يَوْمَئِذٍ لَخَمْسَةَ أَشْرِبَةٍ، مَا فِيهَا شَرَابُ الْعِنَبِ.
பாடம் : 10 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும்” எனும் (5:90ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்அஸ்லாம்' என்பது, (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்திவந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 “நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: “அல்அஸ்லாம்' என்பதன் ஒருமை யான “அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். “இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப் போட்டு, “வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், “செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (“செய்யலாம்', “செய்ய வேண்டாம்'; “செய்தால் நல்லது', “செய்யா விட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறிபார்த்துவந்தார்கள். இதிலிருந்து “ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் “கஸம்த்து' எனும் கடந்த கால வினையும் “குஸூம்' எனும் வேர்ச்சொல்லும் வரும்.
4616. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது பானத்தைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பெற்ற காலகட்டத் தில் ஐந்து வகையான மது பானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.14


அத்தியாயம் : 65
4617. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ مَا كَانَ لَنَا خَمْرٌ غَيْرُ فَضِيخِكُمْ هَذَا الَّذِي تُسَمُّونَهُ الْفَضِيخَ. فَإِنِّي لَقَائِمٌ أَسْقِي أَبَا طَلْحَةَ وَفُلاَنًا وَفُلاَنًا إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ وَهَلْ بَلَغَكُمُ الْخَبَرُ فَقَالُوا وَمَا ذَاكَ قَالَ حُرِّمَتِ الْخَمْرُ. قَالُوا أَهْرِقْ هَذِهِ الْقِلاَلَ يَا أَنَسُ. قَالَ فَمَا سَأَلُوا عَنْهَا وَلاَ رَاجَعُوهَا بَعْدَ خَبَرِ الرَّجُلِ.
பாடம் : 10 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும்” எனும் (5:90ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்அஸ்லாம்' என்பது, (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்திவந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 “நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: “அல்அஸ்லாம்' என்பதன் ஒருமை யான “அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். “இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப் போட்டு, “வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், “செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (“செய்யலாம்', “செய்ய வேண்டாம்'; “செய்தால் நல்லது', “செய்யா விட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறிபார்த்துவந்தார்கள். இதிலிருந்து “ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் “கஸம்த்து' எனும் கடந்த கால வினையும் “குஸூம்' எனும் வேர்ச்சொல்லும் வரும்.
4617. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் “ஃபளீக்' என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களிடம் இருக்கவில்லை. (ஒருமுறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, “உங்களுக்குச் செய்தி எட்டியதா?” என்று கேட்டார். அங்கு இருந்தவர்கள், “என்ன அது?” என்று கேட்டனர். அவர், “மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று பதிலளித்தார்.

அப்போது அவர்கள், “அனஸே! இந்த (மது) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடுங்கள்” என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.


அத்தியாயம் : 65
4618. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، قَالَ صَبَّحَ أُنَاسٌ غَدَاةَ أُحُدٍ الْخَمْرَ فَقُتِلُوا مِنْ يَوْمِهِمْ جَمِيعًا شُهَدَاءَ، وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِهَا.
பாடம் : 10 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும்” எனும் (5:90ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்அஸ்லாம்' என்பது, (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்திவந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 “நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: “அல்அஸ்லாம்' என்பதன் ஒருமை யான “அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். “இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப் போட்டு, “வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், “செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (“செய்யலாம்', “செய்ய வேண்டாம்'; “செய்தால் நல்லது', “செய்யா விட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறிபார்த்துவந்தார்கள். இதிலிருந்து “ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் “கஸம்த்து' எனும் கடந்த கால வினையும் “குஸூம்' எனும் வேர்ச்சொல்லும் வரும்.
4618. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

மக்கள் சிலர், உஹுத் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும்.15


அத்தியாயம் : 65
4619. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عِيسَى، وَابْنُ، إِدْرِيسَ عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ عَلَى مِنْبَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ أَمَّا بَعْدُ أَيُّهَا النَّاسُ إِنَّهُ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَهْىَ مِنْ خَمْسَةٍ، مِنَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْعَسَلِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ، وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ.
பாடம் : 10 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும்” எனும் (5:90ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்அஸ்லாம்' என்பது, (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்திவந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 “நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: “அல்அஸ்லாம்' என்பதன் ஒருமை யான “அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். “இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப் போட்டு, “வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், “செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (“செய்யலாம்', “செய்ய வேண்டாம்'; “செய்தால் நல்லது', “செய்யா விட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறிபார்த்துவந்தார்கள். இதிலிருந்து “ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் “கஸம்த்து' எனும் கடந்த கால வினையும் “குஸூம்' எனும் வேர்ச்சொல்லும் வரும்.
4619. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை யிóருந்தபடி, “(இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத் தடை(ச் சட்டம்) அருளப்பெற்றுவிட்டது. திராட்சை, பேரீச்சம்பழம், தேன், கோதுமை, தீட்டப்படாத கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப் படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மதுதான்” என்று கூறி னார்கள்.16

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4620. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ الْخَمْرَ، الَّتِي أُهْرِيقَتِ الْفَضِيخُ. وَزَادَنِي مُحَمَّدٌ عَنْ أَبِي النُّعْمَانِ قَالَ كُنْتُ سَاقِيَ الْقَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ فَنَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ، فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى. فَقَالَ أَبُو طَلْحَةَ اخْرُجْ فَانْظُرْ مَا هَذَا الصَّوْتُ قَالَ فَخَرَجْتُ فَقُلْتُ هَذَا مُنَادٍ يُنَادِي أَلاَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ. فَقَالَ لِي اذْهَبْ فَأَهْرِقْهَا. قَالَ فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ. قَالَ وَكَانَتْ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الْفَضِيخَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ قُتِلَ قَوْمٌ وَهْىَ فِي بُطُونِهِمْ قَالَ فَأَنْزَلَ اللَّهُ {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا}.
பாடம் : 11 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக் கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடை செய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்கள்மீது (அது) குற்றமாகாது. ஆனால், அவர்கள் (இறையை) அஞ்சி, (முழுமையாக) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பின்னரும் (இறையை) அஞ்சி இறைநம்பிக்கை(யில் நிலையாக இருந்து)கொண்டு, பின்னரும் (இறையை) அஞ்சி நன்மை செய்திருக்க வேண்டும். (இவ்வாறு) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான் (எனும் 5:93ஆவது இறைவசனம்)
4620. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(மதுபானம் தடை செய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்.

அபுந்நுஅமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் வழியாக இதே ஹதீஸ் கூடுதல் தகவலுடன் வந்துள்ளது. அந்தத் தகவலாவது:

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடை செய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது (முழு) மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பெற்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவிப்புச் செய்தார்.

இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், “வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)” எனச் சொன்னார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), “இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மது பானம் தடை செய்யப்பட்டுவிட்டது என்று அறிவிக்கிறார்” என்று சொன்னேன். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ போய், இதைக் கொட்டி விடு!” என்று சொன்னார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களது மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது.

அப்போது மக்களில் சிலர், “(உஹுத் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!” என்று கூறினர். அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடை செய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்கள்மீது (அது) குற்றமாகாது” எனும் (5:93ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.17

அத்தியாயம் : 65
4621. حَدَّثَنَا مُنْذِرُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجَارُودِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خُطْبَةً مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ، قَالَ " لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا ". قَالَ فَغَطَّى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وُجُوهَهُمْ لَهُمْ خَنِينٌ، فَقَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ فُلاَنٌ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ {لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ}. رَوَاهُ النَّضْرُ وَرَوْحُ بْنُ عُبَادَةَ عَنْ شُعْبَةَ.
பாடம் : 12 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித்துருவிக்) கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் (5:101ஆவது) இறைவசனம்
4621. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருநாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், “நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒரு மனிதர், “என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இன்னார்' என்று சொன்னார்கள். அப்போதுதான், “இறைநம்பிக்கைகொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித்துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் இந்த (5:101ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4622. حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا أَبُو الْجُوَيْرِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ قَوْمٌ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتِهْزَاءً، فَيَقُولُ الرَّجُلُ مَنْ أَبِي وَيَقُولُ الرَّجُلُ تَضِلُّ نَاقَتُهُ أَيْنَ نَاقَتِي فَأَنْزَلَ اللَّهُ فِيهِمْ هَذِهِ الآيَةَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ} حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ كُلِّهَا.
பாடம் : 12 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித்துருவிக்) கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் (5:101ஆவது) இறைவசனம்
4622. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “என் தந்தை யார்?” என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர், “என் ஒட்டகம் எங்கே?” என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத்தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். (5:101)

அத்தியாயம் : 65
4623. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ الْبَحِيرَةُ الَّتِي يُمْنَعُ دَرُّهَا لِلطَّوَاغِيتِ فَلاَ يَحْلُبُهَا أَحَدٌ مِنَ النَّاسِ. وَالسَّائِبَةُ كَانُوا يُسَيِّبُونَهَا لآلِهَتِهِمْ لاَ يُحْمَلُ عَلَيْهَا شَىْءٌ. قَالَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ، كَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ "". وَالْوَصِيلَةُ النَّاقَةُ الْبِكْرُ تُبَكِّرُ فِي أَوَّلِ نِتَاجِ الإِبِلِ، ثُمَّ تُثَنِّي بَعْدُ بِأُنْثَى. وَكَانُوا يُسَيِّبُونَهُمْ لِطَوَاغِيتِهِمْ إِنْ وَصَلَتْ إِحْدَاهُمَا بِالأُخْرَى لَيْسَ بَيْنَهُمَا ذَكَرٌ. وَالْحَامِ فَحْلُ الإِبِلِ يَضْرِبُ الضِّرَابَ الْمَعْدُودَ، فَإِذَا قَضَى ضِرَابَهُ وَدَعُوهُ لِلطَّوَاغِيتِ وَأَعْفَوْهُ مِنَ الْحَمْلِ فَلَمْ يُحْمَلْ عَلَيْهِ شَىْءٌ وَسَمَّوْهُ الْحَامِيَ. وَقَالَ لي أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ سَعِيدًا، قَالَ يُخْبِرُهُ بِهَذَا قَالَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحْوَهُ. وَرَوَاهُ ابْنُ الْهَادِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 13 (கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்குகளான) பஹீரா, சாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. மாறாக, (ஏக இறையை)மறுத்தோர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும் பாலோர் விளங்கிக்கொள்வதில்லை (எனும் 5:103ஆவது இறைவசனம்) (5:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இஃத் காலல்லாஹ்' எனும் சொற்றொடரில் உள்ள “கால' (சொன்னான்) எனும் (இறந்தகால வினைச்)சொல்லுக்கு “சொல்வான்' என்று (எதிர்கால வினையின்) பொருளாகும். இந்த வசனத்திலுள்ள “இஃத்' எனும் சொல் “சொல்லிடை இணைப்புக் குறி' (ஸிலா) ஆகும். (5:112ஆவது வசனத்திலுள்ள வினையாலணையும் பெயரான) “அல்மாயிதா' எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொறுத்த வரை “விருந்தாக்கப்படும் உணவு' எனும்) செயப்பாட்டு எச்ச வினையாகும். “ஈஷத்துன் ராளியா' (திருப்தியான வாழ்க்கை), “தத்லீக்கத்துன் பாயினா' (பிரிவை ஏற்படுத்தும் மணவிலக்கு) ஆகிய சொற்றொடர்களைப் போல. (இதன்படி “அல்மாயிதா' என்பதன்) சொற்பொருள் “விருந்தாளிக்கு அளிக்கப் படும் நல்ல உணவு' என்பதாகும். (“இஷ்திகாக்' எனும் “சொல் திரிபு வேறுபாட்டில்' இச்சொல்லை “ஃபஅல, யஃப்இலு' எனும் வாய்பாட்டில்) “மாத, யமீது' (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (3:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தவஃப்பீக்க' எனும் சொல்லுக்கு “உம்மை இறக்கச்செய்வோம்' என்பது கருத்தாகும்.18
4623. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“பஹீரா' என்பது, (அறியாமைக் காலச்) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள்.

“சாயிபா' என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரிய விடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படுவதில்லை. (அது நினைத்த தண்ணீரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்கமாட்டார்கள்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ' தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக “சாயிபா' (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான்.19

“வஸீலா' என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டி ஈனுகின்ற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டுவந்தனர். இரண்டு (ஈற்று)க்குமத்தியில் ஆண்குட்டி ஈனாமல் ஒன்றை யடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதால் (இதை “தொடர்ந்து வரக்கூடியது' எனும் பொருளில்) “வஸீலா' என்று அழைத்தனர்.

“ஹாம்' என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல் கொள்ளச்செய்த (பொலி) ஒட்டகமாகும். இவ்வாறு சூல் கொள்ளச்செய்தபின் அந்த (பொலி) ஒட்டகத்தை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக அப்படியே விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டனர்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்படவில்லை. இதை “ஹாமீ' (தன் முதுகைப் பாதுகாத்துக்கொண்ட ஒட்டகம்) என்று பெயரிட்டு அழைத்தனர்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4624. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ أَبُو عَبْدِ اللَّهِ الْكَرْمَانِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَأَيْتُ جَهَنَّمَ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا، وَرَأَيْتُ عَمْرًا يَجُرُّ قُصْبَهُ، وَهْوَ أَوَّلُ مَنْ سَيَّبَ السَّوَائِبَ ".
பாடம் : 13 (கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்குகளான) பஹீரா, சாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. மாறாக, (ஏக இறையை)மறுத்தோர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும் பாலோர் விளங்கிக்கொள்வதில்லை (எனும் 5:103ஆவது இறைவசனம்) (5:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இஃத் காலல்லாஹ்' எனும் சொற்றொடரில் உள்ள “கால' (சொன்னான்) எனும் (இறந்தகால வினைச்)சொல்லுக்கு “சொல்வான்' என்று (எதிர்கால வினையின்) பொருளாகும். இந்த வசனத்திலுள்ள “இஃத்' எனும் சொல் “சொல்லிடை இணைப்புக் குறி' (ஸிலா) ஆகும். (5:112ஆவது வசனத்திலுள்ள வினையாலணையும் பெயரான) “அல்மாயிதா' எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொறுத்த வரை “விருந்தாக்கப்படும் உணவு' எனும்) செயப்பாட்டு எச்ச வினையாகும். “ஈஷத்துன் ராளியா' (திருப்தியான வாழ்க்கை), “தத்லீக்கத்துன் பாயினா' (பிரிவை ஏற்படுத்தும் மணவிலக்கு) ஆகிய சொற்றொடர்களைப் போல. (இதன்படி “அல்மாயிதா' என்பதன்) சொற்பொருள் “விருந்தாளிக்கு அளிக்கப் படும் நல்ல உணவு' என்பதாகும். (“இஷ்திகாக்' எனும் “சொல் திரிபு வேறுபாட்டில்' இச்சொல்லை “ஃபஅல, யஃப்இலு' எனும் வாய்பாட்டில்) “மாத, யமீது' (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (3:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தவஃப்பீக்க' எனும் சொல்லுக்கு “உம்மை இறக்கச்செய்வோம்' என்பது கருத்தாகும்.18
4624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக்கொண்டி ருப்பதை நான் கண்டேன். “அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ' நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்றுகொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து) திரிய விட்டவர் அவர்தான்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4625. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ مَحْشُورُونَ إِلَى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلاً ـ ثُمَّ قَالَ ـ {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} إِلَى آخِرِ الآيَةِ ـ ثُمَّ قَالَ ـ أَلاَ وَإِنَّ أَوَّلَ الْخَلاَئِقِ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ، أَلاَ وَإِنَّهُ يُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِي فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ يَا رَبِّ أُصَيْحَابِي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ. فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ} فَيُقَالُ إِنَّ هَؤُلاَءِ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ ".
பாடம் : 14 (மர்யமின் மைந்தர் ஈசா கூறினார்:) நான் அவர்களுடன் இருந்த வரையில், அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! நீயோ அனைத்தையும் கண் காணிப்பவனாக இருக்கின்றாய் (எனும் 5:117ஆவது வசனத்தொடர்)
4625. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போன்று நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.

பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தான்.

அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக் கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு, “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும்.

அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!” என்று பதிலளிப்பேன்.

அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததி óருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டுதான் இருந்தார்கள்” என்று கூறப்படும்.20

அத்தியாயம் : 65
4626. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّكُمْ مَحْشُورُونَ، وَإِنَّ نَاسًا يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ} إِلَى قَوْلِهِ {الْعَزِيزُ الْحَكِيمُ }"
பாடம் : 15 “(இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடி யார்களே! நீ அவர்களை மன்னித் தாலும் (அப்போதும் அவர்கள் உன் அடியார்களே!) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய் (என்றும் மர்யமின் மைந்தர் ஈசா கூறுவார்)” எனும் (5:118ஆவது) இறைவசனம்
4626. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படவிருக்கிறீர்கள். சிலபேர் இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல், “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன் அடியார்களே!) நீயே யாவற்றையும் மிகைத்தவ னும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117,118) என்று சொல்வேன்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



அத்தியாயம் : 65
4627. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَفَاتِحُ الْغَيْبِ خَمْسٌ إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ، وَيُنَزِّلُ الْغَيْثَ، وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ، وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا، وَمَا تَدْرِي نَفْسٌ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ، إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ".
பாடம்: 6. “அல்அன்ஆம்' அத்தியாயம்1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (6:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபித்னத்துஹும்' எனும் சொல்லுக்கு “அவர்கள் கூறும் காரணம், (அல்லது) சாக்குப்போக்கு' என்பது பொருள். (6:141ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஅரூஷாத்' எனும் சொல்லுக்கு “திராட்சை முதலான (பந்தல்களில்) படரும் கொடிகள்” என்பது பொருள். (6:142ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹமூலத்' எனும் சொல்லுக்கு “சுமை சுமக்கும் பிராணி' என்று பொருள். (6:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லபஸ்னா' எனும் சொல்லுக்கு “நாம் சந்தேகத்தில் ஆழ்த்தியவர்களாகியிருப்போம்' என்று பொருள். (6:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யன்அவ்ன' எனும் சொல்லுக்கு “தொலைவாகிவிடுகிறார்கள்' என்பது பொருள். (6:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துப்சல' எனும் சொல்லுக்கு “இழிவுபடுத்தப்படும்' என்று பொருள். “உப்சிலூ' என்பதற்கு “அவர்கள் இழிவுபடுத்தப் பட்டனர்' என்று பொருள். (6:93ஆவது வசனத்தின் மூலத்தில்) “பாசித்தூ அய்தீஹிம்' என்பதிலுள்ள (பாசித்தூ எனும் சொல்லின் வேர்ச்சொல்லான) “அல்பஸ்த்' எனும் சொல்லுக்கு “அடித்தல்' என்பது பொருள். (6:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தக்ஸர்த்தும்' எனும் சொல்லுக்கு “பலரைக் கெடுத்துவிட்டீர்கள்' என்பது பொருள். (6:136ஆவது வசனத்தின் விளக்கமாவது:) இணைவைப்பாளர்கள் தங்களின் (பயிர், கால்நடை முதலியவற்றின்) பலன்களிலிருந்தும் செல்வத்திலிருந்தும் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்கென்றும், மற்றொரு பகுதியை ஷைத்தான் மற்றும் சிலைகளுக்கென்றும் படைக்கின்றனர். (6:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அகின்னத்' (திரைகள்) எனும் சொல்லின் ஒருமை: கினான். (6:143ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அம்மஷ்த்தமலத்' எனும் சொற்றொடரின் விளக்கமாவது: ஆண், பெண் ஆகிய இரு வகைகளையே ஆடுகள் கர்ப்பத்தில் சுமக்கின்றன. பிறகேன் (சில கால்நடைகளின் வயிற்றிலுள்ளவற்றை) சிலருக்குத் தடை விதிக்கிறீர்கள்; மற்றச் சிலருக்கு அனுமதிக்கிறீர்கள் (என்பதாகும்).2 (6:145ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்ஃபூஹ்' (வடியக்கூடிய) எனும் சொல்லுக்கு “சிந்தப்படும் (இரத்தம்)' என்பது பொருள். (6:157ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸதஃப' எனும் சொல்லுக்கு “புறக் கணித்தான்' என்பது பொருள். (6:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “முப்லிசூன்' (“நம்பிக்கை இழந்தவர்கள்') எனும் சொல்லின் வினைச்சொல்லான) “உப்லிசூ' எனும் சொல்லுக்கு “நம்பிக்கை இழந்து (செயலற்று)விட்டனர்' என்பது பொருள். (6:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உப்சிலூ' எனும் சொல்லுக்கு “(அழிவுக்கு) ஆளாக்கப்பட்டார்கள்' என்பது பொருள். (6:96ஆவது வசனத்தின் கருத்தில் அமைந்த 28:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சர்மதன்' எனும் சொல்லுக்கு “நிரந்தரமானது' என்பது பொருள். (6:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தஹ்வத்ஹு' எனும் சொல்லுக்கு “அவனை வழிதவற செய்துவிட்டன' என்பது பொருள். (6:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தம்தரூன்' எனும் சொல்லுக்கு “நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்' என்று பொருள். (6:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வக்ர்' எனும் சொல்லுக்கு “செவிட்டுத்தனம்' என்பது பொருள். (இதே சொல்லின் இகரமான) “விக்ர்' எனும் சொல்லுக்கு “சுமை' என்பது பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அசாத்தீர்' எனும் சொல்லுக்கு “கட்டுக்கதைகள்' என்பது பொருள். இதன் ஒருமை “உஸ்த்தூரத்' மற்றும் “இஸ்த்தாரத்' ஆகும். (6:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்பஃஸா' எனும் சொல், “பஃஸ்' (துன்பம்) எனும் சொல்லிருந்து பிறந்ததாகும். “புஃஸ்' (வறுமை) எனும் சொல்லிருந்தும் பிறந்திருக்கலாம். (6:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “—ஹ்ரத்' எனும் சொல்லுக்கு “நேருக்கு நேர்' என்பது பொருள். (6:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸுவர்' எனும் சொல் “ஸƒரத்' (உருவம்) எனும் சொல்லின் பன்மையாகும். “சூரத்' (எல்லைச் சுவர்) என்பதையும் (அதன் பன்மையான) “சுவர்' (எல்லைச் சுவர்கள்) என்பதையும் போல்.3 (6:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மலக்கூத்' எனும் சொல்லுக்கு “ஆட்சி' என்பது பொருள். (“மலக்கூத்' என்பதிலுள்ள இறுதி எழுத்துகளான வாவும் தாவும் அதிகப்படியானவை; எவ்வாறென்றால்) “ரஹபூத் கைருன் மின் ரஹமூத்' என்ப(தில் உள்ள ரஹபூத், ரஹமூத் ஆகிய சொற்களின் இறுதியிலுள்ள வாவும் தாவும் கூடுதலானவையாக இருப்ப)தைப் போல. இதையே, “துர்ஹபு கைருன் மின் அன் துர்ஹம” என்றும் கூறலாம்.4 (6:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “—ன்ன' எனும் சொல்லுக்கு “இருள் கவ்வியது' என்பது பொருள். (6:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தஆலா' எனும் சொல்லுக்கு “உயர்ந்தான்' என்பது பொருள். (6:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இன் தஅதில்' என்று தொடங்கும் வசனத்திற்கு “பிரதியாகக் கொடுத்தால், அந்நாளில் அது அங்கீகரிக்கப்படமாட்டாது' என்று பொருள். (6:96ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹுஸ்பான்' எனும் சொல்லுக்கு “(காலத்தின்) கணக்கை அறிதல்' என்பது பொருள். “அலல்லாஹி ஹுஸ்பானுஹு' (“அதன் கணக்கு வழக்கு அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது') என்று கூறப் படுவதுண்டு. “ஹுஸ்பான்' எனும் (இந்தச்) சொல்லுக்கு “(வானுலகச் செய்திகளை) ஒட்டுக்கேட்க வரும் ஷைத்தான்களை நோக்கி எறியப்படும் அம்பு' என்ற பொருளும் உண்டு. (6:98ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஸ்தகர்ருன்' எனும் சொல்லுக்கு “(தந்தையின்) முதுகந்தண்டில் தங்கவைக்கப்பட்டது' என்பது பொருள். “முஸ்தவ்தஉன்' எனும் சொல்லுக்கு “(தாயின்) கர்ப்பத்தில் பாதுகாக்கப்பட்டது' என்பது பொருள். (6:99ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கின்வான்' எனும் சொல்லுக்கு “பழக் குலைகள்' என்பது பொருள். இதன் ஒருமை “கின்வ்' என்பதாகும். இதன் இருமை “கின்வானி' என்பதாகும். பன்மையும் “கின்வான்' என்பதே ஆகும். “சின்வ்' (ஒருமை;) “சின்வான்' (இருமை மற்றும் பன்மை) என்பதைப்போல. (ஒரே வேரிலிருந்து தோன்றும் இரு பேரீச்சமரங்கள் என்பது இதன் பொருளாகும்.) பாடம் : 1 மறைவானவற்றின் திறவுகோல்கள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை (எனும் 6:59ஆவது வசனத்தொடர்)
4627. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:) “நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். (பெண்களின்) கருப்பைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவுள்ளவனாகவும் இருக்கின் றான். (31:34)5

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

அத்தியாயம் : 65
4628. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعُوذُ بِوَجْهِكَ ". قَالَ {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} قَالَ " أَعُوذُ بِوَجْهِكَ" {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ} قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَذَا أَهْوَنُ ". أَوْ " هَذَا أَيْسَرُ ".
பாடம் : 2 “(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்களின் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேத னையை உங்கள்மீது அனுப்பவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “யல்பிசகும்' எனும் சொல்லுக்கு “கலந்துவிடுவது' என்பது பொருள். இது “இல்த்திபாஸ்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். “ஷியஉ' எனும் சொல்லுக்கு “பிரிவுகள்' என்பது பொருள்.
4628. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேத னையை உங்கள்மீது அனுப்பவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக் களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கிவைக்கவும் அவன் ஆற்றலுள்ளவன்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைவா!) உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள்.

“உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்து' என்பதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள், “உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். “அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (முந்தைய வேதனைகளைவிட) “எளிதானது' அல்லது “இது சுலபமானது' ஆகும்” என்று சொன்னார்கள்.7

அத்தியாயம் : 65
4629. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُهُ وَأَيُّنَا لَمْ يَظْلِمْ فَنَزَلَتْ {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}
பாடம் : 3 எவர் (இறை)நம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி அடைந்தவர்கள் ஆவர் (எனும் 6:82ஆவது இறைவசனம்)
4629. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“எவர் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) வசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள், “எங்களில் எவர்தான் (தமக்குத் தாமே) அநீதியிழைக்கவில்லை?” என்று கேட்டனர். அப்போது, “இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்” எனும் (31:13ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.8

அத்தியாயம் : 65
4630. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ حَدَّثَنِي ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 4 “(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யசஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நல்வழியில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும்விட இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் மேன்மை யாக்கினோம்” எனும் (6:86ஆவது) இறைவசனம்
4630. அபுல்ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்:

“நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.9


அத்தியாயம் : 65
4631. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 4 “(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யசஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நல்வழியில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும்விட இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் மேன்மை யாக்கினோம்” எனும் (6:86ஆவது) இறைவசனம்
4631. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது.10

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4632. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ مُجَاهِدًا، أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ ابْنَ عَبَّاسٍ أَفِي " ص " سَجْدَةٌ فَقَالَ نَعَمْ. ثُمَّ تَلاَ {وَوَهَبْنَا} إِلَى قَوْلِهِ {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} ثُمَّ قَالَ هُوَ مِنْهُمْ. زَادَ يَزِيدُ بْنُ هَارُونَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ وَسَهْلُ بْنُ يُوسُفَ عَنِ الْعَوَّامِ عَنْ مُجَاهِدٍ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ فَقَالَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ.
பாடம் : 5 “(நபியே!) அல்லாஹ்வால் நல்வழியில் செலுத்தப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆகவே, இவர்களின் நல்வழியையே நீரும் பின்பற்று வீராக!” எனும் (6:90ஆவது) வசனத்தொடர்
4632. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (38:24ஆவது வசனத்தில் சஜ்தா உண்டு)” என்று கூறிவிட்டு, “நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததி களாக) வழங்கினோம்” என்று தொடங்கி, “இவர்களுடைய நல்வழியையே நீரும் பின்பற்றுவீராக!” என்பதுவரை (6:84-90 வசனங்களை) ஓதினார்கள்.

பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தாவூத் (அலை) அவர்கள் இந்த (வசனத் தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிந்திய மூன்று தொடர்களில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறுகிறார்கள்:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள், “முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப் பட்டவர்களில் உங்கள் நபி (ஸல்) அவர்களும் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.11

அத்தியாயம் : 65
4633. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، قَالَ عَطَاءٌ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، لَمَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِمْ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوهَا "". وَقَالَ أَبُو عَاصِمٍ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَىَّ عَطَاءٌ سَمِعْتُ جَابِرًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 6 நகமுடைய பிராணிகள் ஒவ்வொன்றையும் யூதர்களுக்கு நாம் தடை செய்திருந்தோம். அவர்களுக்கு ஆடு மாடுகளின் கொழுப்பையும் தடை செய்திருந்தோம் (எனும் 6:146ஆவது இறைவசனம்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நகமுடைய ஒவ்வொரு பிராணியும் என்பது, ஒட்டகத்தையும் தீக்கோழியையும் குறிக்கும். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹவாயா' என்பது குடல்களைக் குறிக்கும்.12 மற்றவர்கள் கூறுகின்றனர்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாதூ' என்பதற்கு “யூதர்களாய் ஆகிவிட்டவர்கள்' என்பது பொருள். (இதே சொல்லிலிருந்து பிறந்த 7:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹுத்னா' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரினோம்' என்பது பொருள். (இதன் வினையாலணையும் பெயரான) “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோருகின்றவர்' என்பது பொருள்.
4633. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணி களின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.13

அத்தியாயம் : 65
4634. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ " لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ شَىْءَ أَحَبُّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ، لِذَلِكَ مَدَحَ نَفْسَهُ ". قُلْتُ سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ. قُلْتُ وَرَفَعَهُ قَالَ نَعَمْ.
பாடம் : 7 “மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவா னவை எதையும் நெருங்காதீர் கள்” எனும் (6:151ஆவது) வசனத்தொடர்
4634. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்க மானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்).

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக் கேட்டீர்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். நான், “இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதில் சொன்னார்கள்.

அத்தியாயம் : 65