4595. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ ح، وَحَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ الْكَرِيمِ، أَنَّ مِقْسَمًا، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} عَنْ بَدْرٍ وَالْخَارِجُونَ إِلَى بَدْرٍ.
பாடம் : 18
இநைம்பிக்கையாளர்களில்- இடை யூறு உள்ளவர்கள் தவிர- அறப் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (எனும் 4:95ஆவது வசனத்தொடர்)
4595. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் வசனம் (4:95) பத்ர் போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65

4596. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ، وَغَيْرُهُ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو الأَسْوَدِ، قَالَ قُطِعَ عَلَى أَهْلِ الْمَدِينَةِ بَعْثٌ فَاكْتُتِبْتُ فِيهِ، فَلَقِيتُ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ فَأَخْبَرْتُهُ، فَنَهَانِي عَنْ ذَلِكَ أَشَدَّ النَّهْىِ، ثُمَّ قَالَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ نَاسًا مِنَ الْمُسْلِمِينَ كَانُوا مَعَ الْمُشْرِكِينَ يُكَثِّرُونَ سَوَادَ الْمُشْرِكِينَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِي السَّهْمُ فَيُرْمَى بِهِ، فَيُصِيبُ أَحَدَهُمْ فَيَقْتُلُهُ أَوْ يُضْرَبُ فَيُقْتَلُ، فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلاَئِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ} الآيَةَ. رَوَاهُ اللَّيْثُ عَنْ أَبِي الأَسْوَدِ.
பாடம் : 19
“(மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறைமறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர் களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, (அவர்களை நோக்கி, “மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள், “பூமியில் நாங்கள் பலவீன மானவர்களாய் இருந்தோம்” எனப் பதிலளிப்பார்கள். “அல்லாஹ் வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்” எனும் (4:97ஆவது) இறைவசனம்
4596. முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் அபுல்அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
மதீனாவாசிகள் ஒரு படைப்பிரிவை அனுப்ப வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டனர்.25 அந்தப் படைப்பிரிவில் என் பெயரும் பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித் தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மை யாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் முஸ்óம்களில் சிலர் இணைவைப்பாளர் களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ர் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப் பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். ஆகவே, (முஸ்óம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (4:97) அருளினான்:
(மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி, “இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள், “பூமியில் நாங்கள் பலவீனமானவர்களாய் இருந்தோம்” எனப் பதிலளிப்பார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.26
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4597. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {إِلاَّ الْمُسْتَضْعَفِينَ} قَالَ كَانَتْ أُمِّي مِمَّنْ عَذَرَ اللَّهُ.
பாடம் : 20
ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல் உண்மையி லேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! (எனும் 4:98ஆவது வசனம்)27
4597. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை களைத் தவிர!” எனும் (4:98ஆவது) இறை வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
இயலாதவர்கள் என அல்லாஹ் அறிவித்தவர்களில் என் தாயார் (உம்முல் ஃபள்ல்) அவர்களும் ஒருவராயிருந்தார்.28

4598. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الْعِشَاءَ إِذْ قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ". ثُمَّ قَالَ قَبْلَ أَنْ يَسْجُدَ " اللَّهُمَّ نَجِّ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ نَجِّ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ نَجِّ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ نَجِّ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ ".
பாடம் : 21
“அத்தகையோரின் பிழைகளை அல்லாஹ் பொறுக்கக்கூடும். அல்லாஹ் மிகவும் பிழை பொறுப் பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்” எனும் (4:99ஆவது) இறைவசனம்
4598. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது கொண்டிருந்தபோது, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தா செய்வதற்கு முன்பாக, “இறைவா! (மக்காவில் சிக்கித் தவிக்கும்) அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக!
இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கிக் கடுமைப்படுத்துவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.29

4599. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {إِنْ كَانَ بِكُمْ أَذًى مِنْ مَطَرٍ أَوْ كُنْتُمْ مَرْضَى} قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفِ كَانَ جَرِيحًا.
பாடம் : 22
“(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக் கையாகவே இருங்கள்” எனும் (4:102ஆவது) இறைவசனம்
4599. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை” எனும் (4:102ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது, “அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது)” என்று சொன்னார்கள்.

4600. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ} إِلَى قَوْلِهِ {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ}. قَالَتْ هُوَ الرَّجُلُ تَكُونُ عِنْدَهُ الْيَتِيمَةُ، هُوَ وَلِيُّهَا وَوَارِثُهَا، فَأَشْرَكَتْهُ فِي مَالِهِ حَتَّى فِي الْعِذْقِ، فَيَرْغَبُ أَنْ يَنْكِحَهَا، وَيَكْرَهُ أَنْ يُزَوِّجَهَا رَجُلاً، فَيَشْرَكُهُ فِي مَالِهِ بِمَا شَرِكَتْهُ فَيَعْضُلَهَا فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ.
பாடம் : 23
“(நபியே!) பெண்கள் விஷயத்தில் விளக்கம் அளிக்கும்படி உம்மிடம் அவர்கள் கோருகின்றனர். நீர் கூறுவீராக: அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கு விளக்கம் அளிக்கின்றான். மேலும், எந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட (மஹ்ர் போன்ற)வற்றை நீங்கள் கொடுக்காமல், அவர்களை நீங்களே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர் களோ அந்தப் பெண்கள் விஷயத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்டுவருகின்ற சட்டமும் (உங்களுக்கு விளக்கம் அளிக்கின்றது)” எனும் (4:127 ஆவது) வசனத்தொடர்
4600. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும் வாரிசாகவும் இருந்துவருவார். பேரீச்சமரம் உள்பட அவரது செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணமுடித்துக்கொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகின்ற வ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்து வந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார்.
அப்போதுதான், “ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால் கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்துகொள்வதே நலம் தரக்கூடியதாகும்” எனும் (4:128ஆவது) வசனம் அருளப்பெற்றது.30
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(4:35ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஷிகாக்' எனும் சொல்லுக்கு “பரஸ்பரப் பிணக்கு' என்பது பொருள்.

4601. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا}. قَالَتِ الرَّجُلُ تَكُونُ عِنْدَهُ الْمَرْأَةُ لَيْسَ بِمُسْتَكْثِرٍ مِنْهَا يُرِيدُ أَنْ يُفَارِقَهَا فَتَقُولُ أَجْعَلُكَ مِنْ شَأْنِي فِي حِلٍّ. فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ.
பாடம் : 24
மனித உள்ளங்கள் உலோபித்தனத்திற்கு(ம் குறுகிய எண்ணத்திற்கும் விரைவாக) உட்பட்டுவிடுகின்றன (எனும் 4:128ஆவது வசனத் தொடர்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அஷ்ஷுஹ்ஹு' எனும் சொல், மனிதன் ஒன்றின் மீது பேராசை கொண்டு அதிகமாக விரும்புவதைக் குறிக்கும்.
(4:129ஆவது வசனத்திலுள்ள)”கல்முஅல்லகா' (அந்தரத்தில் தொங்கவிடப் பட்டவள் போல) எனும் சொல், அவள் விதவையாகவும் இல்லாமல் கணவன் உடையவளாகவும் இல்லாமல் இருக்கும் (தொங்கு) நிலையைக் குறிக்கும்.
(4:128ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “நுஷுஸ்' (நல்ல விதமாக நடந்துகொள்ளாமை) எனும் சொல்லுக்கு “வெறுப்பு கொள்ளல்' என்பது பொருள்.
4601. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், “ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன்-மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை” எனும் (4:128 ஆவது) வசனம் குறித்துக் கூறுகையில், “தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்துவிட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள், “எனது (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக்கொடுத்துவிடுகிறேன்; (என்னை மணவிலக்குச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்க வேண்டும்)' என்று கோருகிறாள்.
இது தொடர்பாகவே இவ்வசனம் (4:128) அருளப்பெற்றது” என்று குறிப்பிட்டார்கள்.31

4602. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، قَالَ كُنَّا فِي حَلْقَةِ عَبْدِ اللَّهِ فَجَاءَ حُذَيْفَةُ حَتَّى قَامَ عَلَيْنَا، فَسَلَّمَ ثُمَّ قَالَ لَقَدْ أُنْزِلَ النِّفَاقُ عَلَى قَوْمٍ خَيْرٍ مِنْكُمْ. قَالَ الأَسْوَدُ سُبْحَانَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَقُولُ {إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ} فَتَبَسَّمَ عَبْدُ اللَّهِ، وَجَلَسَ حُذَيْفَةُ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَقَامَ عَبْدُ اللَّهِ فَتَفَرَّقَ أَصْحَابُهُ، فَرَمَانِي بِالْحَصَا، فَأَتَيْتُهُ فَقَالَ حُذَيْفَةُ عَجِبْتُ مِنْ ضَحِكِهِ، وَقَدْ عَرَفَ مَا قُلْتُ، لَقَدْ أُنْزِلَ النِّفَاقُ عَلَى قَوْمٍ كَانُوا خَيْرًا مِنْكُمْ، ثُمَّ تَابُوا فَتَابَ اللَّهُ عَلَيْهِمْ.
பாடம் : 25
நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டிலேயே இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் ஒருபோதும் நீர் காணமாட்டீர் (எனும் 4:145ஆவது வசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அத்தர்க்குல் அஸ்ஃபல்' எனும் சொல்லுக்கு “நரகத்தின் கீழ்த்தட்டு' என்பது பொருள்.
(6:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நஃபக்' (சுரங்கப் பாதை) எனும் சொல்லுக்கு “வழி' என்பது பொருள்.
4602. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் அவையில் இருந்தோம். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் வந்து எங்கள் அருகே நின்று சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு, “உங்களைவிடச் சிறந்த கூட்ட(த்தாரான நபிகளார் கால)த்தவர் மத்தியிலேகூட நயவஞ்சகம் இறக்கிவைக்கப்(பட்டுச் சோதிக்கப்)பட்டது” என்று சொன்னார்கள். நான், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்.) “நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டில் இருப்பார்கள்' என்று அல்லாஹ் கூறுகிறானே!” என்று சொல்ல, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் புன்னகைத்தார்கள்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எழுந்து நிற்க, அவர்களுடைய தோழர்கள் கலைந்து சென்றுவிட்டனர். உடனே ஹுதைஃபா (ரலி) அவர்கள் பொடிக் கற்களை என்மீது எறிந்(து என்னை அழைத்)தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், “நான் அப்துல்லாஹ்வின் சிரிப்பைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள். உங்களைவிடச் சிறந்தவர்களாயிருந்த ஒரு சமுதாயத்தார் மீதும் நயவஞ்சகம் இறக்கிவைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர்; அவர்களின் குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான்” என்றார்கள்.32

4603. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 26
“(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்ததைப் போன்றே நிச்சயமாக உமக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக் கும் மற்றும் யஅகூப் உடைய வழித்தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்தோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம்” எனும் (4:163ஆவது) இறைவசனம்
4603. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்' என்று (என்னைப் பற்றி) எவரும் கூறுவது அவருக்குத் தகாது.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33

4604.
பாடம் : 26
“(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்ததைப் போன்றே நிச்சயமாக உமக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக் கும் மற்றும் யஅகூப் உடைய வழித்தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்தோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம்” எனும் (4:163ஆவது) இறைவசனம்
4604. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் :

4605. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ بَرَاءَةَ، وَآخِرُ آيَةٍ نَزَلَتْ {يَسْتَفْتُونَكَ }
பாடம் : 27
(நபியே!) “கலாலா' (அதாவது மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாத நிலை) பற்றி உம்மிடம் அவர்கள் விளக்கம் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: “கலாலா' பற்றி அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) விளக்கம் கூறுகின்றான்: குழந்தை இல்லாத ஒருவர் இறந்து, அவருக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவர் விட்டுச்சென்ற (சொத்)தில் பாதி அவளுக்குக் கிடைக்கும். குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரர் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவர் (முழு) வாரிசாவார்.
சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவர் விட்டுச்சென்ற (சொத்)தில் மூன்றில் இரு பங்கு கிடைக்கும். சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான (பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும் (எனும் 4:176ஆவது வசனத்தொடர்)
(இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) “கலாலா' எனும் சொல், யாருக்கு வாரிசாகத் தந்தையோ மகனோ இல்லையோ அவரைக் குறிக்கும். இது “தகல்லலஹுந் நசபு' (வமிசாவளி அற்றவன்) எனும் வினைச்சொல்லின் வேர்ச்சொல்லாகும்.
4605. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் “பாராஅத்' எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக அருளப்பெற்ற வசனம், “(நபியே!) உங்களிடம் மக்கள் விளக்கம் கேட்கிறார்கள்” எனும் (இந்த 4:176ஆவது) வசனமாகும்.34

4606. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَتِ الْيَهُودُ لِعُمَرَ إِنَّكُمْ تَقْرَءُونَ آيَةً لَوْ نَزَلَتْ فِينَا لاَتَّخَذْنَاهَا عِيدًا. فَقَالَ عُمَرُ إِنِّي لأَعْلَمُ حَيْثُ أُنْزِلَتْ، وَأَيْنَ أُنْزِلَتْ، وَأَيْنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أُنْزِلَتْ يَوْمَ عَرَفَةَ، وَإِنَّا وَاللَّهِ بِعَرَفَةَ ـ قَالَ سُفْيَانُ وَأَشُكُّ كَانَ يَوْمَ الْجُمُعَةِ أَمْ لاَ – {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ}
பாடம்:
5. “அல்மாயிதா' அத்தியாயம்1
பாடம் : 1
“அல்மாயிதா' அத்தியாயத்தின் பதவுரை
(5:1ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஹுரும்' (இஹ்ராம் கட்டியவர்கள்) எனும் சொல்லின் ஒருமை “ஹராம்' என்பதாகும்.
(5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப பிமா நக்ளிஹிம் மீஸாக்கஹும்' என்பதற்கு “அவர்கள் தம் வாக்குறுதியை முறித்துவிட்ட காரணத்தால்' என்று பொருள்.
(5:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்லத்தீ க(த்)தபல்லாஹு' எனும் வாக்கியத்திற்கு “அல்லாஹ் உங்களுக்காக அமைத்து (வைத்)துள்ள (புனித பூமியினுள் நுழையுங்கள்)' என்று பொருள்.
(5:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தபூஅ' எனும் சொல்லுக்கு “நீயே சுமந்து கொண்டு' என்பது பொருள்.
(5:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாயிரத்துன்' எனும் சொல்லுக்கு “ஏதேனும் துன்பம்' என்பது பொருள்.
மற்றவர்கள் கூறுகின்றனர்:
(5:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஃக்ரய்னா' (ஊட்டினோம்) எனும் வினைச்சொல்லின் வேர்ச்சொல்லான) “இஃக்ராஉ' என்பதற்கு “சாட்டுதல்' என்பது பொருள்.
(5:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உ—þரஹுன்ன' எனும் சொல்லுக்கு “அப்பெண்களுக்குரிய மஹ்ர் (மணக் கொடை)களை' என்பது பொருள்.
(5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்முஹைமின்' எனும் சொல்லுக்கு “நம்பகமான காவலன்' (அல்அமீன்) என்பது பொருள். அதாவது இந்த குர்ஆன் தனக்கு முந்தியுள்ள வேதம் ஒவ்வொன்றையும் நம்பகமான முறையில் பாதுகாக்கக் கூடியது.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
குர்ஆனிலுள்ள, “வேதக்காரர்களே! தவ்ராத்தையும் இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (இதர வேதங்கள் யா)வற்றையும் முழுமையாகச் செயல்படுத்தாத வரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று (நபியே! தெளிவாகக்) கூறிவிடுவீராக!” எனும் (5:68) வசனத்தைவிட எனக்குக் கடுமையானது வேறெதுவுமில்லை.2
(5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஃக்மஸா' எனும் சொல்லுக்கு “பசி' என்பது பொருள்.
(5:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மன் அஹ்யாஹா' (யார் ஓர் உயிரை வாழவைக்கிறாரோ...) என்பதற்கு, “நியாயமான காரணம் இருந்தால் அன்றி, ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து விலகிக்கொள்கின்றவர் மக்கள் அனைவரையுமே வாழவைத்தவர் ஆவார்' என்பது இதன் கருத்தாகும்.
(5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷிர்அத்தன் வ மின்ஹா—ன்' என்பதற்கு “பாதை மற்றும் நடைமுறை' என்பது பொருள்.
(5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப இன் உஸிர' எனும் சொல்லுக்கு “வெளிப்பட்டால், - தெரியவந்தால்' என்பது பொருள்.
(5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அவ்லயானி' (அதிகத் தகுதி வாய்ந்த இருவர்) எனும் சொல்லின் ஒருமை “(அல்)அவ்லா' என்பதாகும்.
பாடம் : 2
“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள்மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை (உங்களது மார்க்கமாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்” எனும் (5:3ஆவது) வசனத்தொடர்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “மஃக்மஸா' எனும் சொல்லுக்கு “பசி' என்பது பொருள்.
4606. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓது கிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்க ளிடையே அருளப்பெற்றிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று கூறினர்.
உமர் (ரலி) அவர்கள், “அது எப்போது அருளப்பெற்றது? எங்கே அருளப்பெற்றது? அது அருளப்பெற்ற வேளையில் அரஃபா (ஃதுல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்” என்று கூறினார்கள்.3
(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்” எனும் (5:3ஆவது) வசனம் அருளப்பெற்ற நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக் கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகின்றேன்.4

4607. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْتِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَقَالُوا أَلاَ تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِالنَّاسِ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ قَالَتْ عَائِشَةُ فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، وَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى فَخِذِي، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ. قَالَتْ فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَإِذَا الْعِقْدُ تَحْتَهُ.
பாடம் : 3
“நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்துவிட்டு) கழிப்பிடத்திóருந்து வந்திருந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி “தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (அதாவது) அதில் உங்கள் கரங் களைப் பதித்து முகங்களிலும் கரங்களிலும் தடவிக்கொள்ளுங்கள்” எனும் (5:6ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “தயம்மமூ' எனும் சொல்லுக்கு “நாடுங்கள்' என்பது (சொற்)பொருள்.
(5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆம்மீன' எனும் சொல்லுக்கு “நாடியவர்களாக' என்பது பொருள். “அம்மம்த்து' என்பதும் “தயம்மம்த்து' என்பதும் (“நாடினேன்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(குர்ஆனில் இடம்பெற்றுள்ள) லமஸ்த்தும், தமஸ்ஸூஹுன்ன, வல்லாத்தீ தகல்த்தும் பிஹின்ன, அல்இஃப்ளாஉ ஆகிய சொற்கள் திருமணத்தை (தாம்பத்திய உறவை)க் குறிக்கும்.5
4607. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணம் ஒன்றில் (பனுல் முஸ்த்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' அல்லது “தாத்துல் ஜைஷ்' எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது, எனது கழுத்தணி அறுந்து விழுந்து (காணாமற் போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட்டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் (முகாமிட்டுத்) தங்கினர்.
அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று, “(உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள்.
அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்ó என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித் தெழுந்தபோதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போதுதான் “தயம்மும்' (மாற்று அங்கத் தூய்மை) உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(இது குறித்து) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட நலன்களில் (பரக்கத்) இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன)” என்று கூறினார்கள்.
(பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற் போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.6

4608. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ سَقَطَتْ قِلاَدَةٌ لِي بِالْبَيْدَاءِ وَنَحْنُ دَاخِلُونَ الْمَدِينَةَ، فَأَنَاخَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَزَلَ، فَثَنَى رَأْسَهُ فِي حَجْرِي رَاقِدًا، أَقْبَلَ أَبُو بَكْرٍ فَلَكَزَنِي لَكْزَةً شَدِيدَةً وَقَالَ حَبَسْتِ النَّاسَ فِي قِلاَدَةٍ. فَبِي الْمَوْتُ لِمَكَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَوْجَعَنِي، ثُمَّ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَيْقَظَ وَحَضَرَتِ الصُّبْحُ فَالْتُمِسَ الْمَاءُ فَلَمْ يُوجَدْ فَنَزَلَتْ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاَةِ} الآيَةَ. فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ لَقَدْ بَارَكَ اللَّهُ لِلنَّاسِ فِيكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ، مَا أَنْتُمْ إِلاَّ بَرَكَةٌ لَهُمْ.
பாடம் : 3
“நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்துவிட்டு) கழிப்பிடத்திóருந்து வந்திருந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி “தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (அதாவது) அதில் உங்கள் கரங் களைப் பதித்து முகங்களிலும் கரங்களிலும் தடவிக்கொள்ளுங்கள்” எனும் (5:6ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “தயம்மமூ' எனும் சொல்லுக்கு “நாடுங்கள்' என்பது (சொற்)பொருள்.
(5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆம்மீன' எனும் சொல்லுக்கு “நாடியவர்களாக' என்பது பொருள். “அம்மம்த்து' என்பதும் “தயம்மம்த்து' என்பதும் (“நாடினேன்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(குர்ஆனில் இடம்பெற்றுள்ள) லமஸ்த்தும், தமஸ்ஸூஹுன்ன, வல்லாத்தீ தகல்த்தும் பிஹின்ன, அல்இஃப்ளாஉ ஆகிய சொற்கள் திருமணத்தை (தாம்பத்திய உறவை)க் குறிக்கும்.5
4608. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பனுல் முஸ்த்தலிக் போர் முடிந்து) மதீனாவிற்கு வந்துகொண்டிருந்தபோது (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' எனுமிடத்தில் என் கழுத்து மாலையொன்று (அறுந்து) விழுந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அங்கே தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, இறங்கி, எனது மடியில் தலை வைத்து உறங்கினார்கள். (அப்போது என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை நோக்கி வந்து, என்னை வேகமாகக் குத்தி, “ஒரு கழுத்து மாலைக்காக (பயணத்தைத் தொடர விடாமல்) மக்களைத் தடுத்து நிறுத்திவிட்டாயே” என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் மடிமீது தலை வைத்துப் படுத்து) இருந்த காரணத்தால் நான் (அசையாமல்) உயிரற்(ற சடலம் போன்)றுஇருந்துவிட்டேன். அதனால் எனக்குக் கடும் வேதனை ஏற்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள். சுப்ஹ் தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் தேடப்பட்டது. அது கிடைக்க வில்லை.
அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்களுடைய கரங்களையும் கழுவிக்கொள்ளுங்கள்” என்று தொடங்கி “தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி “தயம்மும்' செய்துகொள்ளுங்கள்” என்று கூறும் (5:6 ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அப்போது உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களால் மக்களுக்கு அருள்வளம் (பரக்கத்) பொழிந்துள்ளான், அபூபக்ரின் குடும்பத்தாரே! நீங்களே அவர்களுக்கு ஓர் அருள்வளம்தான்” என்று சொன்னார்கள்.

4609. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مُخَارِقٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْتُ مِنَ الْمِقْدَادِ ح وَحَدَّثَنِي حَمْدَانُ بْنُ عُمَرَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا الأَشْجَعِيُّ عَنْ سُفْيَانَ عَنْ مُخَارِقٍ عَنْ طَارِقٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ الْمِقْدَادُ يَوْمَ بَدْرٍ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَ نَقُولُ لَكَ كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى {فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلاَ إِنَّا هَا هُنَا قَاعِدُونَ} وَلَكِنِ امْضِ وَنَحْنُ مَعَكَ. فَكَأَنَّهُ سُرِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَرَوَاهُ وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ مُخَارِقٍ عَنْ طَارِقٍ أَنَّ الْمِقْدَادَ قَالَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 4
“(மூசா!) நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்” (என்று இஸ்ரவேலர்கள் கூறினர்) எனும் (5:24ஆவது) வசனத்தொடர்
4609. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மிக்தாத் (ரலி) அவர்கள், பத்ர் போரின்போது, “அல்லாஹ்வின் தூதரே! இஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம், “நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின் றோம்' என்று சொன்னதைப் போல் உங்களிடம் நாங்கள் சொல்லமாட்டோம். மாறாக, செல்லுங்கள்; நாங்களும் உங்களுடன் இருப்போம்” என்று சொன்னார்கள்.
இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிட்டதைப் போலிருந்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஓர் அறிவிப்பில், “மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் சொன்னபோது நான் (அங்கு) இருந்தேன்” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகத் தொடங்குகிறது.7

4610. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنِي سَلْمَانُ أَبُو رَجَاءٍ، مَوْلَى أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّهُ كَانَ جَالِسًا خَلْفَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، فَذَكَرُوا وَذَكَرُوا فَقَالُوا وَقَالُوا قَدْ أَقَادَتْ بِهَا الْخُلَفَاءُ، فَالْتَفَتَ إِلَى أَبِي قِلاَبَةَ وَهْوَ خَلْفَ ظَهْرِهِ، فَقَالَ مَا تَقُولُ يَا عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ أَوْ قَالَ مَا تَقُولُ يَا أَبَا قِلاَبَةَ قُلْتُ مَا عَلِمْتُ نَفْسًا حَلَّ قَتْلُهَا فِي الإِسْلاَمِ إِلاَّ رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانٍ، أَوْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ، أَوْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم. فَقَالَ عَنْبَسَةُ حَدَّثَنَا أَنَسٌ بِكَذَا وَكَذَا. قُلْتُ إِيَّاىَ حَدَّثَ أَنَسٌ قَالَ قَدِمَ قَوْمٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَلَّمُوهُ فَقَالُوا قَدِ اسْتَوْخَمْنَا هَذِهِ الأَرْضَ. فَقَالَ " هَذِهِ نَعَمٌ لَنَا تَخْرُجُ، فَاخْرُجُوا فِيهَا، فَاشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا ". فَخَرَجُوا فِيهَا فَشَرِبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا وَاسْتَصَحُّوا، وَمَالُوا عَلَى الرَّاعِي فَقَتَلُوهُ، وَاطَّرَدُوا النَّعَمَ، فَمَا يُسْتَبْطَأُ مِنْ هَؤُلاَءِ قَتَلُوا النَّفْسَ وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ، وَخَوَّفُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ تَتَّهِمُنِي قَالَ حَدَّثَنَا بِهَذَا أَنَسٌ. قَالَ وَقَالَ يَا أَهْلَ كَذَا إِنَّكُمْ لَنْ تَزَالُوا بِخَيْرٍ مَا أُبْقِيَ هَذَا فِيكُمْ أَوْ مِثْلُ هَذَا.
பாடம் : 5
யார் அல்லாஹ்வோடும் அவனு டைய தூதரோடும் போரிட்டு பூமியில் கலகம் விளைவிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது சிலுவையில் அறையப்பட வேண்டும்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும் (எனும் 5:33ஆவது வசனத்தொடர்)
(இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) “அல்லாஹ்வுடன் போரிடுதல்' என்பதற்கு, “அவனை மறுத்தல்' என்பது கருத்தாகும்.
4610. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (உமய்யா கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். (அறியாமைக் காலத்து “அல்கசாமா' எனும் சத்தியமுறை பற்றி அன்னார் கேட்க, அது பற்றி) மக்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். (இதில் பழிவாங்கல் இருப்பது உண்மைதான். உங்களுக்கு முன்பிருந்த) கலீஃபாக்கள் இதன்படி பழிவாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் சொன்னார்கள்.
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தம் முதுகுக்குப் பின்னால் அமர்ந்திருந்த என் பக்கம் திரும்பி, “அப்துல்லாஹ் பின் ஸைத் அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்' அல்லது “அபூகிலாபாவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், “திருமணமான பின்பு விபசாரம் புரிந்த மனிதரையும், அல்லது உயிருக்குப் பதிலாக அன்றி (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றவரையும், அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களையும் எதிர்த்துப் போரிட்டவரையும் தவிர, வேறு எந்த மனிதரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை” என்று சொன்னேன்.
அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “என்னிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (“அல்கசாமா' மற்றும் “உரைனா' சம்பவம் குறித்து) இப்படி இப்படியெல்லாம் அறிவித்தார்கள்” என்று சொன்னார்கள்.
நான் சொன்னேன்:
“அனஸ் (ரலி) அவர்கள் என்னிடம்கூட (இப்படிச்) சொன்னார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சமுதாயத்தார் (“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்து உரையாடினார்கள். அப்போது அவர்கள், “இந்தப் பூமி (மதீனா)எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை (நாங்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டோம்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இதோ, எங்களின் (தர்ம காரியத்திற் காக வந்துள்ள) இந்த ஒட்டகங்கள் (மேய்ச்சலுக்காக நகருக்கு) வெளியே செல்லவிருக்கின்றன. நீங்களும் இவற்று டன் சென்று இவற்றின் பாலையும் இவற்றின் சிறுநீரையும் அருந்துங்கள்” என்று சொன்னார்கள்.
அவ்வாறே அவர்கள் அவற்றுடன் வெளியே சென்று அவற்றின் சிறுநீரையும் அவற்றின் பாலையும் அருந்தி (நோய் நீங்கி) குணமடைந்தனர். பின்னர், ஒட்டகம் மேய்ப்பவரின்மீது பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டனர்; ஒட்டகங்களை ஓட்டியும் சென்றுவிட்டனர்.
ஓர் உயிரை (அநியாயமாகக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருட னும் போர் புரிந்து, அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்ட முடியுமா, என்ன?
அப்போது அன்பஸா (ரஹ்) அவர்கள், (வியப்புத் தெரிவிப்பது போல) “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று சொன்னார்கள்.
நான், “என்னை நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(இல்லை) இதை எங்களுக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறிவிட்டு, “இந்த ஊர் (ஷாம்)வாசிகளே! இவரையும் இவரைப் போன்றவர் களையும் அல்லாஹ் உங்களிடையே வாழவைத்திருக்கும்வரை நீங்கள் நன்மையிலேயே நீடிப்பீர்கள்” என்று சொன்னார்கள்.8

4611. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَسَرَتِ الرُّبَيِّعُ ـ وَهْىَ عَمَّةُ أَنَسِ بْنِ مَالِكٍ ـ ثَنِيَّةَ جَارِيَةٍ مِنَ الأَنْصَارِ، فَطَلَبَ الْقَوْمُ الْقِصَاصَ، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْقِصَاصِ. فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ عَمُّ أَنَسِ بْنِ مَالِكٍ لاَ وَاللَّهِ لاَ تُكْسَرْ سِنُّهَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ ". فَرَضِيَ الْقَوْمُ وَقَبِلُوا الأَرْشَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ".
பாடம் : 6
“(குற்றவியல் தண்டனையில்) காயங்களுக்கும் பழிவாங்கல் உண்டு” எனும் (5:45ஆவது) வசனத்தொடர்
4611. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரி-ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி)-ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸே! (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும் (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் திருப்தியுடன் ஈட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர். (ருபய்யிஉவைப் பழிவாங்காமல் மன்னித்துவிட்டனர்.)
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றிவிடுகின்றான்” என்று சொன்னார்கள்.9

4612. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا مِمَّا أُنْزِلَ عَلَيْهِ، فَقَدْ كَذَبَ، وَاللَّهُ يَقُولُ {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ} الآيَةَ.
பாடம் : 7
(எம்) தூதரே! உம்முடைய இறை வனிடமிருந்து உமக்கு அருளப் பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! (எனும் 5:67ஆவது வசனத்தொடர்)
4612. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள், தம்மீது அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்களிடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ, “(எம்) தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக!” என்று கூறுகின்றான்.10

4613. حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنِ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ {لاَ يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ} فِي قَوْلِ الرَّجُلِ لاَ وَاللَّهِ، وَبَلَى وَاللَّهِ.
பாடம் : 8
“நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தி யங்களுக்காக அல்லாஹ் உங்களுக் குத் தண்டனை வழங்குவதில்லை” எனும் (5:89ஆவது) வசனத்தொடர்
4613. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தியங் களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை” எனும் (5:89ஆவது) இறைவசனம், “லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!') என்றும், “பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!') என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகின்றவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.

4614. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ أَبَاهَا، كَانَ لاَ يَحْنَثُ فِي يَمِينٍ حَتَّى أَنْزَلَ اللَّهُ كَفَّارَةَ الْيَمِينِ. قَالَ أَبُو بَكْرٍ لاَ أَرَى يَمِينًا أُرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلاَّ قَبِلْتُ رُخْصَةَ اللَّهِ، وَفَعَلْتُ الَّذِي هُوَ خَيْرٌ.
பாடம் : 8
“நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தி யங்களுக்காக அல்லாஹ் உங்களுக் குத் தண்டனை வழங்குவதில்லை” எனும் (5:89ஆவது) வசனத்தொடர்
4614. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்), சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்துவந்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன்” என்று சொன்னார்கள்.11