4169. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ قُلْتُ لِسَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَلَى أَىِّ شَىْءٍ بَايَعْتُمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ. قَالَ عَلَى الْمَوْتِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4169. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதவாது:
நான், சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?” என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், “மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள்.235
அத்தியாயம் : 64

4170. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِشْكَابٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الْعَلاَءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَقِيتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ فَقُلْتُ طُوبَى لَكَ صَحِبْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَبَايَعْتَهُ تَحْتَ الشَّجَرَةِ. فَقَالَ يَا ابْنَ أَخِي إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثْنَا بَعْدَهُ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4170. முசய்யப் பின் ராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்து, “தங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும். தாங்கள் நபி (ஸல்) அவர்களின் நட்பைப் பெற்றதோடு, அவர்களிடம் அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணமும் செய்து கொடுத்தீர்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “என் சகோதரர் மகனே! (நபி -ஸல்) அவர்களுக்குப் பிறகு நாங்கள் உருவாக்கி விட்டதை (எல்லாம்) நீ அறியமாட்டாய்” என்று (பணிவுடன்) கூறினார்கள்.236

4171. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ ـ هُوَ ابْنُ سَلاَّمٍ ـ عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ ثَابِتَ بْنَ الضَّحَّاكِ، أَخْبَرَهُ أَنَّهُ، بَايَعَ النَّبِيَّ صلى الله عليه وسلم تَحْتَ الشَّجَرَةِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4171. “அந்த மரத்தின் கீழ் நான் நபி (ஸல்) அவர்களிடம் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தேன்” என்று ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
இதை அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4172. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} قَالَ الْحُدَيْبِيَةُ. قَالَ أَصْحَابُهُ هَنِيئًا مَرِيئًا فَمَا لَنَا فَأَنْزَلَ اللَّهُ {لِيُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ} قَالَ شُعْبَةُ فَقَدِمْتُ الْكُوفَةَ فَحَدَّثْتُ بِهَذَا كُلِّهِ عَنْ قَتَادَةَ ثُمَّ رَجَعْتُ فَذَكَرْتُ لَهُ فَقَالَ أَمَّا {إِنَّا فَتَحْنَا لَكَ} فَعَنْ أَنَسٍ، وَأَمَّا هَنِيئًا مَرِيئًا فَعَنْ عِكْرِمَةَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4172. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” (48:1) எனும் வசனம் ஹுதைபியா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக்கூடியது) ஆகும்” என்று நான் கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், “(நபியவர்களே,) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (தங்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துவிட்டதாக அந்த வசனத்தின் தொடர்ச்சியில் கூறுகின்றானே, அந்த வெற்றியால்) எங்களுக்கு என்ன (பயன்)?” என்று கேட்டனர்.
அப்போது, “இறைநம்பிக்கையாளர் களான ஆண்களையும் பெண்களையும் சொர்க்கங்களில் நுழையச் செய்வதற்காகவே (இவ்வாறு நாம் வெற்றியளித்தோம்); அந்தச் சொர்க்கங்களுக்கிடையே நதிகள் ஓடிக்கொண்டிருக்கும்” (48:5) எனும்வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு நான் கூஃபாவுக்கு வந்து, இந்த ஹதீஸையெல்லாம் கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதாக (அங்குள்ளவர்களிடம்) அறிவித்தேன். பிறகு நான் கூஃபாவிலிருந்து திரும்பி (கத்தாதா (ரஹ்) அவர்களிடம்) வந்து அவர்களிடம் இது பற்றிக் கூறினேன்.
அப்போது அவர்கள், “நாம் உங்களுக்கு வெற்றியளித்தோம் எனும் வசனம் ஹுதைபியாவைக் குறிக்கிறது என்பதை எனக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். தங்களுக்கு இனிய வாழ்த்துகள் என்று (தொடங்கும் ஹதீஸை) இக்ரிமா (ரஹ்) அவர்களே எனக்கு அறிவித்தார்கள் (முழு ஹதீஸையும் ஒரே நபரிடமிருந்து நான் கேட்டு அறிவிக்கவில்லை)” என்று கூறினார்கள்.

4173. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ الأَسْلَمِيِّ، عَنْ أَبِيهِ ـ وَكَانَ مِمَّنْ شَهِدَ الشَّجَرَةَ ـ قَالَ إِنِّي لأُوقِدُ تَحْتَ الْقِدْرِ بِلُحُومِ الْحُمُرِ إِذْ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4173. மஜ்ஸஆ பின் ஸாஹிர் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை ஸாஹிர் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் அந்த மரத்தின் கீழ் (நடந்த “பைஅத்துர் ரிள்வான்' உறுதிமொழி ஏற்பில்) கலந்துகொண்டவர்களாவார். அன்னார் கூறினார்கள்:
(நாட்டுக்)கழுதை இறைச்சி (வெந்துகொண்டிருந்த) சட்டிக்குக் கீழே நான் (நெருப்பு) மூட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அறிவிப்பாளர், “கழுதை இறைச்சியை (உண்ண வேண்டாமென) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை விதிக்கிறார்கள்” என்று அறிவித்தார்.

4174. وَعَنْ مَجْزَأَةَ، عَنْ رَجُلٍ، مِنْهُمْ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ اسْمُهُ أُهْبَانُ بْنُ أَوْسٍ وَكَانَ اشْتَكَى رُكْبَتَهُ، وَكَانَ إِذَا سَجَدَ جَعَلَ تَحْتَ رُكْبَتِهِ وِسَادَةً.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4174. மஜ்ஸஆ பின் ஸாஹிர் பின் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
என்னுடைய (பனூ அஸ்லம்) குலத்தைச் சேர்ந்தவரும், அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவருமான உஹ்பான் பின் அவ்ஸ் (ரலி) அவர்களுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டிருந்தது. அவர்கள் (தொழுகையில் தரையில் முழங்கால் மூட்டு அழுந்தாமலிருப்பதற்காக) சஜ்தா செய்யும்போது தமது முழங்காலுக்குக் கீழே தலையணை ஒன்றை வைத்துக்கொள்வார்கள்.

4175. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ أُتُوا بِسَوِيقٍ فَلاَكُوهُ. تَابَعَهُ مُعَاذٌ عَنْ شُعْبَةَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4175. புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' உடன்படிக்கை செய்தவ)ர்களில் ஒருவரான சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள், “(கைபருக்கு அருகிலுள்ள “ஸஹ்பா' என்னுமிடத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் மாவு கொண்டுவரப்பட்டது. அப்போது அதை அவர்கள் சாப்பிட்டார்கள்” என்று கூறினார்கள்.237
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4176. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا شَاذَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَأَلْتُ عَائِذَ بْنَ عَمْرٍو ـ رضى الله عنه ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ هَلْ يُنْقَضُ الْوِتْرُ قَالَ إِذَا أَوْتَرْتَ مِنْ أَوَّلِهِ، فَلاَ تُوتِرْ مِنْ آخِرِهِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4176. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், நபித்தோழர்களில் ஒருவரும், அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' உடன்படிக்கை செய்தவ)ர்களில் ஒருவருமான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், “வித்ர் தொழுகை உடைக்கப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆரம்பத்திலேயே நீ வித்ர் தொழுதிருந்தால் இறுதியில் நீ வித்ர் தொழ வேண்டாம்” என்று பதிலளித்தார்கள்.238

4177. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسِيرُ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَسِيرُ مَعَهُ لَيْلاً، فَسَأَلَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَنْ شَىْءٍ فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ، ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ وَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثَكِلَتْكَ أُمُّكَ يَا عُمَرُ، نَزَرْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مَرَّاتٍ، كُلُّ ذَلِكَ لاَ يُجِيبُكَ. قَالَ عُمَرُ فَحَرَّكْتُ بَعِيرِي ثُمَّ تَقَدَّمْتُ أَمَامَ الْمُسْلِمِينَ، وَخَشِيتُ أَنْ يَنْزِلَ فِيَّ قُرْآنٌ، فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِخًا يَصْرُخُ بِي ـ قَالَ ـ فَقُلْتُ لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِيَّ قُرْآنٌ. وَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ "" لَقَدْ أُنْزِلَتْ عَلَىَّ اللَّيْلَةَ سُورَةٌ لَهِيَ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ، ثُمَّ قَرَأَ {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا}.""
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4177. (உமர் (ரலி) அவர்களால் விடுதலைசெய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் இரவில் பயணம் செய்து கொண்டி ருந்தார்கள்.239 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நபியவர்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபிகளார் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.
“உமரே! உன்னை உன் தாய் இழக்கட்டும். மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்குப் பதிலளிக்க வில்லையே” (என்று தம்மைத்தாமே) உமர் (ரலி) அவர்கள் (கடிந்து) கூறினார்கள்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி முஸ்óம் களுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிடுமோ என்று அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் அழைப்பதைக் கேட்டேன். (நான் நினைத்ததைப் போன்றே) என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.
அப்போது அவர்கள், “இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பெற்றுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறினார்கள். பிறகு, “உங்களுக்கு நாம் வெளிப்படையானதொரு வெற்றியை அளித்துள்ளோம்” என்று (தொடங்கும் - 48:1ஆம் வசனத்தை) ஓதினார்கள்.

4178. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، حِينَ حَدَّثَ هَذَا الْحَدِيثَ،، حَفِظْتُ بَعْضَهُ، وَثَبَّتَنِي مَعْمَرٌ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ بْنِ الْحَكَمِ، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ قَالاَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ قَلَّدَ الْهَدْىَ، وَأَشْعَرَهُ، وَأَحْرَمَ مِنْهَا بِعُمْرَةٍ، وَبَعَثَ عَيْنًا لَهُ مِنْ خُزَاعَةَ، وَسَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى كَانَ بِغَدِيرِ الأَشْطَاطِ، أَتَاهُ عَيْنُهُ قَالَ إِنَّ قُرَيْشًا جَمَعُوا لَكَ جُمُوعًا، وَقَدْ جَمَعُوا لَكَ الأَحَابِيشَ، وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ الْبَيْتِ وَمَانِعُوكَ. فَقَالَ " أَشِيرُوا أَيُّهَا النَّاسُ عَلَىَّ، أَتَرَوْنَ أَنْ أَمِيلَ إِلَى عِيَالِهِمْ وَذَرَارِيِّ هَؤُلاَءِ الَّذِينَ يُرِيدُونَ أَنْ يَصُدُّونَا عَنِ الْبَيْتِ، فَإِنْ يَأْتُونَا كَانَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَدْ قَطَعَ عَيْنًا مِنَ الْمُشْرِكِينَ، وَإِلاَّ تَرَكْنَاهُمْ مَحْرُوبِينَ ". قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ، خَرَجْتَ عَامِدًا لِهَذَا الْبَيْتِ، لاَ تُرِيدُ قَتْلَ أَحَدٍ وَلاَ حَرْبَ أَحَدٍ، فَتَوَجَّهْ لَهُ، فَمَنْ صَدَّنَا عَنْهُ قَاتَلْنَاهُ. قَالَ " امْضُوا عَلَى اسْمِ اللَّهِ ".
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4178. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியஇருவரும்-ஒருவர் மற்றவரைவிடக் கூடுதலாகக்- கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “ஹுதைபியா' ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாளமும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் “குஸாஆ' குலத்தாரில் (புஸ்ர் பின் சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள்.
“ஃகதீருல் அஷ்தாத்' எனும் இடத்தில் நபியவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களின் உளவாளி வந்து, “குறைஷியர் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல்வேறு குலத்தாரை (ஓரிடத்தில்) ஒன்றுதிரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல(வோ, மக்காவிற்குள் நுழையவோ) விடாமல் தடுப்பார்கள்” என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததி களிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர் புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணைவைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.240 அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்.” என்று கூறினார்கள்.
(அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடித்தானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே. எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மை எவன் தடுக்கின் றானோ அவனுடன் நாம் போரிடுவோம்” என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்” என்று கூறினார்கள்.241
4180, 4181 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மர்வான் பின் அல் ஹகம் ஆகிய இருவரும் ஹுதைபியா (ஆண்டில் நடந்த)”உம்ரா' (நிகழ்ச்சி) குறித்துக் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா தினத்தன்று (குறைஷியரின் தலைவரான) சுஹைல் பின் அம்ரிடம் ஒரு (குறிப்பிட்ட) கால வரம்பிட்டுச் சமாதான ஒப்பந்தம் (செய்துகொள்வதாகப் பத்திரம்) எழுதியபோது, சுஹைல் பின் அம்ர் (பின்வரும்) சில நிபந்தனைகளையும் விதித்தார்:
எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் திருப்பி அனுப்பியே ஆக வேண்டும்; அவரைவிட்டு நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய சுஹைல் மறுத்தார். (ஆனால், தங்களுக்குப் பாதகமான) இதை இறைநம்பிக்கை யாளர்கள் வெறுத்தார்கள். மேலும், (இதற்குச் சம்மதிக்கச்) சிரமப்பட்டார்கள். அதுபற்றி (வியந்து) பேசவும் செய்தார்கள்.
சுஹைல் இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டபோது (அந்த நிபந்தனை களை ஏற்று) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒப்பந்தப் பத்திரத்தை) எழுதினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வந்து சேர்ந்த) சுஹைலின் மகன் அபூஜந்தலை அன்றைய தினமே அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்.
மேலும், அந்த (ஒப்பந்த)க் காலத்தில் தம்மிடம் வந்த எந்த ஆண் மகனையும் -அவர் முஸ்லிமாக இருந்தாலும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (அப்போது) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு (ஹிஜ்ரத் செய்து) வந்தவர்களில் உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்ஸூமும் இருந்தார்.
அவர் இளம் பெண்ணாக இருந்தார். அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பிவிட வேண்டுமெனக் கோரியபடி அவர்களின் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் விஷயத்தில் தனது (60:10ஆம்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.242
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4182. قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُ مَنْ هَاجَرَ مِنَ الْمُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ}. وَعَنْ عَمِّهِ قَالَ بَلَغَنَا حِينَ أَمَرَ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم أَنْ يَرُدَّ إِلَى الْمُشْرِكِينَ مَا أَنْفَقُوا عَلَى مَنْ هَاجَرَ مِنْ أَزْوَاجِهِمْ، وَبَلَغَنَا أَنَّ أَبَا بَصِيرٍ. فَذَكَرَهُ بِطُولِهِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4182. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தால்...' என்று தொடங்கும் இந்த (60:12ஆம்) வசனத்தின் காரணத்தால் (தம்மிடம்) ஹிஜ்ரத் செய்து வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரிசோதித்துவந்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரரிடமிருந்து பின்வருமாறு அறிவிக் கின்றார்கள்:
இணைவைப்பாளர்களின் மனைவியரில் எவர் ஹிஜ்ரத் செய்து வந்து (முஸ்லிம்களை மணமுடித்துக்கொண்டு) விட்டார்களோ அவர்களுக்காக அவர் களுடைய (இணை வைப்பாளர்களான) கணவன்மார்கள் (மணக்கொடையாகச்) செலவிட்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான். இதைக் கூறிவிட்டு, தொடர்ந்து அபூபஸீர் (ரலி) அவர்கள் தொடர்பான அறிவிப்பையும் முழுமையாகக் கூறினார்கள்.243

4183. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ خَرَجَ مُعْتَمِرًا فِي الْفِتْنَةِ فَقَالَ إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ، صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَهَلَّ بِعُمْرَةٍ مِنْ أَجْلِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الْحُدَيْبِيَةِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4183. (இப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், குழப்ப(ம் நிறைந்த கால)த்தில் உம்ராவிற்காக (மக்காவிற்குப்) புறப்பட்டுச் சென்றார்கள்.244 அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட ஹுதைபியா சம்பவத்தின் போது) செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக (இஹ்ராம் கட்டி) “தல்பியா' சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியதே இதற்குக் காரணமாகும்.245

4184. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ أَهَلَّ وَقَالَ إِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ لَفَعَلْتُ كَمَا فَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ حَالَتْ كُفَّارُ قُرَيْشٍ بَيْنَهُ. وَتَلاَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4184. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக) இஹ்ராம் கட்டியிருந்தார்கள். மேலும், (இறையில்லத்திற்குச் செல்ல முடியாமல்) நான் தடுக்கப்பட்டால், இறை யில்லம் செல்ல விடாமல் (ஹுதைபியா ஆண்டு) நபி (ஸல்) அவர்களை குறைஷியர் தடுத்தபோது நபி (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்”246 என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) எனும் வசனத்தை ஓதினார்கள்.

4185. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَاهُ أَنَّهُمَا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ. وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ بَعْضَ بَنِي عَبْدِ اللَّهِ، قَالَ لَهُ لَوْ أَقَمْتَ الْعَامَ، فَإِنِّي أَخَافُ أَنْ لاَ تَصِلَ إِلَى الْبَيْتِ. قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَدَايَاهُ، وَحَلَقَ وَقَصَّرَ أَصْحَابُهُ، وَقَالَ "" أُشْهِدُكُمْ أَنِّي أَوْجَبْتُ عُمْرَةً "". فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ صَنَعْتُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَارَ سَاعَةً ثُمَّ قَالَ مَا أُرَى شَأْنَهُمَا إِلاَّ وَاحِدًا، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي. فَطَافَ طَوَافًا وَاحِدًا وَسَعْيًا وَاحِدًا، حَتَّى حَلَّ مِنْهُمَا جَمِيعًا.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4185. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்டிருந்த குழப்பமான கால கட்டத்தில், உம்ராவிற்காக மக்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர்-உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ், சாலிம் பின் அப்தில்லாஹ் ஆகிய இருவரும் என ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது- “இந்த வருடம் தாங்கள் (உம்ராவிற்குச் செல்லாமல் இங்கேயே) தங்கிவிடலாமே. ஏனென்றால், நீங்கள் கஅபாவிற்குப் போய் சேரமாட்டீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்.
அதற்கு அவர்கள், “நாங்கள் (ஹுதைபியா ஆண்டு) நபி (ஸல்) அவர்களுடன் (உம்ரா செய்வதற்காக மக்கா) புறப்பட்டுச் சென்றோம்; அப்போது, குறைஷி குல இறைமறுப்பாளர்கள் எங்களை கஅபாவுக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டுத் (தமது) தலையை மழித்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தலைமுடியைக் குறைத்துக்கொண்டனர். (அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்)” என்று கூறினார்கள்.
தொடர்ந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன். கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் “தவாஃப்' செய்வேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்” என்று கூறினார்கள்.
பின்னர் சிறிது நேரம் நடந்துவிட்டு, “(இஹ்ராமிலிருந்து விடுபடுகிற விஷயத்தில் ஹஜ், உம்ரா ஆகிய) அந்த இரண்டையும் நான் ஒன்று போலவே கருதுகிறேன். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என்மீது) கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள். (பிறகு மக்காவிற்குப் போனபோது) ஒரேயொரு தவாஃபும் ஒரேயொரு சஃயும் செய்து (ஹஜ் உம்ரா ஆகிய) இரண்டிலிருந்தும் விடுபட்டார் கள்.247
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4186. حَدَّثَنِي شُجَاعُ بْنُ الْوَلِيدِ، سَمِعَ النَّضْرَ بْنَ مُحَمَّدٍ، حَدَّثَنَا صَخْرٌ، عَنْ نَافِعٍ، قَالَ إِنَّ النَّاسَ يَتَحَدَّثُونَ أَنَّ ابْنَ عُمَرَ، أَسْلَمَ قَبْلَ عُمَرَ، وَلَيْسَ كَذَلِكَ، وَلَكِنْ عُمَرُ يَوْمَ الْحُدَيْبِيَةِ أَرْسَلَ عَبْدَ اللَّهِ إِلَى فَرَسٍ لَهُ عِنْدَ رَجُلٍ مِنَ الأَنْصَارِ يَأْتِي بِهِ لِيُقَاتِلَ عَلَيْهِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُبَايِعُ عِنْدَ الشَّجَرَةِ، وَعُمَرُ لاَ يَدْرِي بِذَلِكَ، فَبَايَعَهُ عَبْدُ اللَّهِ، ثُمَّ ذَهَبَ إِلَى الْفَرَسِ، فَجَاءَ بِهِ إِلَى عُمَرَ، وَعُمَرُ يَسْتَلْئِمُ لِلْقِتَالِ، فَأَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُبَايِعُ تَحْتَ الشَّجَرَةِ ـ قَالَ ـ فَانْطَلَقَ فَذَهَبَ مَعَهُ حَتَّى بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَهِيَ الَّتِي يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ ابْنَ عُمَرَ أَسْلَمَ قَبْلَ عُمَرَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4186. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“உமர் (ரலி) அவர்களுக்கு முன்பே (அவர்களுடைய புதல்வரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் முஸ்óமாகிவிட்டார்கள்' என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். (நடந்தது) அவ்வாறல்ல. மாறாக, ஹுதைபியா தினத்தில் உமர் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரிடமிருந்த தமது குதிரையை அதன் மீது (அமர்ந்து) போர் புரிவதற்காக வாங்கி வருமாறு (தம் புதல்வர்) அப்துல்லாஹ்வை அனுப்பினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தின் கீழ் (தம் தோழர்களிடம்) உறுதிமொழி வாங்கிக்கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களுக்கு இது தெரியவில்லை. அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு போய் அந்தக் குதிரையை வாங்கி, அதை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவந்தார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் போருக்காக (தமது உருக்குச் சட்டையை) அணிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தின் கீழ் உறுதிமொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தார்கள். இதைத்தான் மக்கள், “உமர் அவர்களுக்கு முன்பாகவே (அவர்களுடைய புதல்வர்) இப்னு உமர் முஸ்லிமாகிவிட்டார்' என்று பேசிக்கொள்கிறார்கள்.

4187. وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْعُمَرِيُّ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّاسَ، كَانُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ، تَفَرَّقُوا فِي ظِلاَلِ الشَّجَرِ، فَإِذَا النَّاسُ مُحْدِقُونَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا عَبْدَ اللَّهِ، انْظُرْ مَا شَأْنُ النَّاسِ قَدْ أَحْدَقُوا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَهُمْ يُبَايِعُونَ، فَبَايَعَ ثُمَّ رَجَعَ إِلَى عُمَرَ فَخَرَجَ فَبَايَعَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4187. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நாளில் நபி (ஸல்) அவர்களுடனிருந்த மக்கள், பல்வேறு மரங்களின் நிழலில் பிரிந்து சென்று (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தனர். அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வரை நோக்கி), “அப்துல்லாஹ்வே! மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம் என்று பார்” என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் போய்ப் பார்த்தபோது அல்லாஹ்வின் தூதரிடம்) மக்கள் உறுதிமொழி கொடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டுப் பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். (அவர்களிடம் விவரத்தைக் கூறவே) உடனே உமர் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்று உறுதிமொழி அளித்தார்கள்.

4188. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ اعْتَمَرَ فَطَافَ فَطُفْنَا مَعَهُ، وَصَلَّى وَصَلَّيْنَا مَعَهُ، وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَكُنَّا نَسْتُرُهُ مِنْ أَهْلِ مَكَّةَ، لاَ يُصِيبُهُ أَحَدٌ بِشَىْءٍ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4188. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது நாங்களும் அவர்களுடனிருந்தோம். (மக்காவில் நுழைந்ததும் புனித கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சுற்றி (தவாஃப்) வந்தோம். அவர்கள் தொழுதார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். அவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். (நாங்களும் ஓடினோம்.)
அப்போது (இணைவைக்கும்) மக்காவாசிகளில் எவரும் அவர்களை எந்த விதத்திலும் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக) இருந்தோம்.248