4189. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ سَمِعْتُ أَبَا حَصِينٍ، قَالَ قَالَ أَبُو وَائِلٍ لَمَّا قَدِمَ سَهْلُ بْنُ حُنَيْفٍ مِنْ صِفِّينَ أَتَيْنَاهُ نَسْتَخْبِرُهُ فَقَالَ اتَّهِمُوا الرَّأْىَ، فَلَقَدْ رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ وَلَوْ أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَمْرَهُ لَرَدَدْتُ، وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، وَمَا وَضَعْنَا أَسْيَافَنَا عَلَى عَوَاتِقِنَا لأَمْرٍ يُفْظِعُنَا إِلاَّ أَسْهَلْنَ بِنَا إِلَى أَمْرٍ نَعْرِفُهُ قَبْلَ هَذَا الأَمْرِ، مَا نَسُدُّ مِنْهَا خُصْمًا إِلاَّ انْفَجَرَ عَلَيْنَا خُصْمٌ مَا نَدْرِي كَيْفَ نَأْتِي لَهُ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4189. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஸிஃப்பீன் சண்டையிலிருந்து சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது நாங்கள் அவர்களிடம் (அவர் சண்டையில் ஈடுபாடு காட்டாதது பற்றி) செய்தி அறியச் சென்றோம். அப்போது அவர்கள், “(நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள். உங்கள்) எண்ணத்தையே குற்றம் சாட்டுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில், நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன் - அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் - (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன். அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக்கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைய (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன.
ஆனால், இதுவெல்லாம் ஸிஃப்பீன் போருக்கு முன்னால்தான். (ஆனால், முஸ்லிம்களுக்கிடையிலேயே போர் மூண்டுவிட்ட இந்தச் சூழ்நிலையில்) நாங்கள் குழப்பத்தின் ஒரு மூலையை அடைக்கப்போனால் இன்னொரு மூலை பீறிட்டு வெடிக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.249
அத்தியாயம் : 64

4190. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم زَمَنَ الْحُدَيْبِيَةِ، وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ {أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ}. قُلْتُ نَعَمْ. قَالَ "" فَاحْلِقْ، وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوِ انْسُكْ نَسِيكَةً "". قَالَ أَيُّوبُ لاَ أَدْرِي بِأَىِّ هَذَا بَدَأَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4190. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா சமயத்தில் (உம்ராவுக்காக நான் “இஹ்ராம்' கட்டியிருந்தபோது) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அப்போது என் தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.
அதற்கு, “உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது (உன்னால் முடிந்த) ஏதாவது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துக் குர்பானி செய். (இதுவே இஹ்ராம் கட்டிய நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)” என்று கூறினார்கள்.250
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த மூன்றில்) எதை முதலில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.

4191. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ هِشَامٍ أَبُو عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحُدَيْبِيَةِ وَنَحْنُ مُحْرِمُونَ، وَقَدْ حَصَرَنَا الْمُشْرِكُونَ ـ قَالَ ـ وَكَانَتْ لِي وَفْرَةٌ فَجَعَلَتِ الْهَوَامُّ تَسَّاقَطُ عَلَى وَجْهِي، فَمَرَّ بِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ "". قُلْتُ نَعَمْ. قَالَ وَأُنْزِلَتْ هَذِهِ الآيَةُ {فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ}
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4191. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் “இஹ்ராம்' கட்டியவர்களாக ஹுதைபியாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணைவைப்பாளர்கள் தடுத்துவிட்டிருந்தனர். எனக்கு (காது சோணைவரை) நிறைய தலைமுடி இருந்தது. (அதிலிருந்த) பேன்கள் என் முகத்தின் மீது (உதிர்ந்து) விழத் தொடங்கின. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.
(அப்போதுதான், “இஹ்ராம்' கட்டியவர் “இஹ்ராம்' கட்டியிருக்கும்போது செய்யக் கூடாத காரியங்களைச் செய்துவிட்டால் அதற்கான பரிகாரம் என்ன என்பது தொடர்பாக), “உங்களில் யாரேனும் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, காயம் அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் கட்டிய நிலையிலேயே அவர் தமது தலையை மழித்துக்கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும்” எனும் இந்த (2:196ஆம்) வசனம் அருளப்பெற்றது.251

4192. حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُمْ أَنَّ نَاسًا مِنْ عُكْلٍ وَعُرَيْنَةَ قَدِمُوا الْمَدِينَةَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَتَكَلَّمُوا بِالإِسْلاَمِ فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ إِنَّا كُنَّا أَهْلَ ضَرْعٍ، وَلَمْ نَكُنْ أَهْلَ رِيفٍ. وَاسْتَوْخَمُوا الْمَدِينَةَ، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَوْدٍ وَرَاعٍ، وَأَمَرَهُمْ أَنْ يَخْرُجُوا فِيهِ، فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا نَاحِيَةَ الْحَرَّةِ كَفَرُوا بَعْدَ إِسْلاَمِهِمْ، وَقَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَاسْتَاقُوا الذَّوْدَ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ الطَّلَبَ فِي آثَارِهِمْ فَأَمَرَ بِهِمْ فَسَمَرُوا أَعْيُنَهُمْ، وَقَطَعُوا أَيْدِيَهُمْ، وَتُرِكُوا فِي نَاحِيَةِ الْحَرَّةِ حَتَّى مَاتُوا عَلَى حَالِهِمْ. قَالَ قَتَادَةُ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ كَانَ يَحُثُّ عَلَى الصَّدَقَةِ، وَيَنْهَى عَنِ الْمُثْلَةِ. وَقَالَ شُعْبَةُ وَأَبَانُ وَحَمَّادٌ عَنْ قَتَادَةَ مِنْ عُرَيْنَةَ. وَقَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَأَيُّوبُ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَنَسٍ قَدِمَ نَفَرٌ مِنْ عُكْلٍ.
பாடம் : 37
“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தாரின் நிகழ்ச்சி252
4192. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால் தரும் கால்நடை களைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்)” என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெப்பம்) ஒத்துக்கொள்ளவில்லை.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களை யும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும்படி உத்தரவிட்டார்கள். மேலும் “ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் பருகிக்கொள்ளுங்கள் (இன்ஷா அல்லாஹ் நிவாரணம் கிடைக்கும்)” என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர்.)
அவர்கள் (கருங்கற்கள் நிறைந்த) “அல்ஹர்ரா' பகுதியில் இருந்தபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். மேலும், நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் (யசார்-ரலி) அவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை (தங்களுடன்) ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டுவரப்பட்டபோது) அவர்களுக்கு தண்டனை கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(மக்கள்) அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களுடைய கை(கால்)கள் வெட்டப்பட்டு, (மதீனாவின் புறநகரான) “அல்ஹர்ரா' பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டுபோயினர்.253
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்களைத்) தர்மம் செய்யுமாறு தூண்டிக்கொண்டும் சித்திரவதை செய்ய வேண்டாமென தடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (நபி (ஸல்) அவர்களிடம் வந்தவர்கள்) உரைனா குலத்தார் (மட்டுமே) என்று காணப்படுகிறது.
மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத்தாரில் சிலர் வந்தனர்” என்று இடம் பெற்றுள்ளது.

4193. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَالْحَجَّاجُ الصَّوَّافُ، قَالَ حَدَّثَنِي أَبُو رَجَاءٍ، مَوْلَى أَبِي قِلاَبَةَ وَكَانَ مَعَهُ بِالشَّأْمِ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، اسْتَشَارَ النَّاسَ يَوْمًا قَالَ مَا تَقُولُونَ فِي هَذِهِ الْقَسَامَةِ فَقَالُوا حَقٌّ، قَضَى بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَضَتْ بِهَا الْخُلَفَاءُ، قَبْلَكَ. قَالَ وَأَبُو قِلاَبَةَ خَلْفَ سَرِيرِهِ فَقَالَ عَنْبَسَةُ بْنُ سَعِيدٍ فَأَيْنَ حَدِيثُ أَنَسٍ فِي الْعُرَنِيِّينَ قَالَ أَبُو قِلاَبَةَ إِيَّاىَ حَدَّثَهُ أَنَسُ بْنُ مَالِكٍ. قَالَ عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَنَسٍ مِنْ عُرَيْنَةَ. وَقَالَ أَبُو قِلاَبَةَ عَنْ أَنَسٍ مِنْ عُكْلٍ. ذَكَرَ الْقِصَّةَ.
பாடம் : 37
“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தாரின் நிகழ்ச்சி252
4193. (அபூகிலாபா (ரஹ்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் உரிமையாளர் அபூகிலாபா அவர்களுடன் ஷாம் நாட்டில் இருந்தேன். (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒருநாள் மக்களிடம், “இந்த “கசாமா' (சத்திய முறை) தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஆலோசனை கேட்டார்கள்.254
“அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உங்களுக்குமுன் (வாழ்ந்த) கலீஃபாக்களும் தீர்ப்பளித்த உண்மை (விதி)தான்” என்று மக்கள் பதிலளித்தனர். அபூகிலாபா (ரஹ்) அவர்கள், அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் அரியணைக்குப் பின்னால் இருந்தார்கள். அப்போது அன்பசா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “உரைனா குலத்தார் பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் எங்கே (போயிற்று)?” என்று கேட்டார்கள்.255
அப்போது அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “(உரைனா குலத்தார் பற்றி) எனக்கும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உரைனா குலத்தாரில் சிலர்' என்று காணப்படுகிறது.
மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத் தாரில் சிலர்' (என்று கூறிவிட்டு) முழு நிகழ்ச்சியையும் கூறியுள்ளார்கள்.

4194. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ سَلَمَةَ بْنَ الأَكْوَعِ، يَقُولُ خَرَجْتُ قَبْلَ أَنْ يُؤَذَّنَ، بِالأُولَى، وَكَانَتْ لِقَاحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَرْعَى بِذِي قَرَدٍ ـ قَالَ ـ فَلَقِيَنِي غُلاَمٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَالَ أُخِذَتْ لِقَاحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ مَنْ أَخَذَهَا قَالَ غَطَفَانُ. قَالَ فَصَرَخْتُ ثَلاَثَ صَرَخَاتٍ ـ يَا صَبَاحَاهْ ـ قَالَ فَأَسْمَعْتُ مَا بَيْنَ لاَبَتَىِ الْمَدِينَةِ، ثُمَّ انْدَفَعْتُ عَلَى وَجْهِي حَتَّى أَدْرَكْتُهُمْ وَقَدْ أَخَذُوا يَسْتَقُونَ مِنَ الْمَاءِ، فَجَعَلْتُ أَرْمِيهِمْ بِنَبْلِي، وَكُنْتُ رَامِيًا، وَأَقُولُ أَنَا ابْنُ الأَكْوَعْ، الْيَوْمُ يَوْمُ الرُّضَّعْ. وَأَرْتَجِزُ حَتَّى اسْتَنْقَذْتُ اللِّقَاحَ مِنْهُمْ، وَاسْتَلَبْتُ مِنْهُمْ ثَلاَثِينَ بُرْدَةً، قَالَ وَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَالنَّاسُ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ قَدْ حَمَيْتُ الْقَوْمَ الْمَاءَ وَهُمْ عِطَاشٌ، فَابْعَثْ إِلَيْهِمُ السَّاعَةَ. فَقَالَ "" يَا ابْنَ الأَكْوَعِ، مَلَكْتَ فَأَسْجِحْ "". قَالَ ثُمَّ رَجَعْنَا وَيُرْدِفُنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى نَاقَتِهِ حَتَّى دَخَلْنَا الْمَدِينَةَ.
பாடம் : 38
“தாத்துல் கரத்' போர்
அது, கைபருக்கு மூன்று (நாட்களு)க்கு முன்னால், நபி (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்களை எதிரிகள் கடத்திச் சென்றபோது நடந்த போராகும்.256
4194. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். “தூ கரத்' எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஒர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப் பட்டுவிட்டன” என்று கூறினார். நான், “அவற்றை யார் பிடித்துச் சென்றார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கத்ஃபான் குலத்தார்” என்று பதில் சொன்னார்.
உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, “யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரு மலை களுக்கிடையிóருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக்கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர்.
“அக்வஇன் மகன் நான்!இன்று அற்பர்கள் (அழியும்) நாள்”
என்று (பாடியபடி) கூறிக்கொண்டே அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் ஈரசைச்சீர் பாடலை பாடிக்கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்றபோது) அவர்கள் விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக்கொண்டேன்.
(அப்போது) நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், “அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தார் தாகமுடன் இருந்தபோதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்துவிட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச்சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள்” என்று கூறினேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அக்வஉ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மை யாக நடந்துகொள்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும்வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.257

4195. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، أَنَّ سُوَيْدَ بْنَ النُّعْمَانِ، أَخْبَرَهُ أَنَّهُ، خَرَجَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ ـ وَهْىَ مِنْ أَدْنَى خَيْبَرَ ـ صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَعَا بِالأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلاَّ بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ، فَأَكَلَ وَأَكَلْنَا، ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ، فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
பாடம் : 39
கைபர் போர்258
4195. சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நடந்த ஆண்டு, நபி (ஸல்) அவர்களுடன் நானும் புறப்பட்டேன். கைபருக்கு அருகிலுள்ள “ஸஹ்பா' என்ற இடத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர், பயண உணவுகளைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அப்போது, மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டுவரப்படவில்லை. அதைக் குழைக்கும்படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி (ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.259

4196. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ فَسِرْنَا لَيْلاً، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لِعَامِرٍ يَا عَامِرُ أَلاَ تُسْمِعُنَا مِنْ هُنَيْهَاتِكَ. وَكَانَ عَامِرٌ رَجُلاً شَاعِرًا فَنَزَلَ يَحْدُو بِالْقَوْمِ يَقُولُ:
اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا
فَاغْفِرْ فِدَاءً لَكَ مَا أَبْقَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا
وَأَلْقِيَنْ سَكِينَةً عَلَيْنَا إِنَّا إِذَا صِيحَ بِنَا أَبَيْنَا
وَبِالصِّيَاحِ عَوَّلُوا عَلَيْنَا
فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ هَذَا السَّائِقُ "". قَالُوا عَامِرُ بْنُ الأَكْوَعِ. قَالَ "" يَرْحَمُهُ اللَّهُ "". قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ وَجَبَتْ يَا نَبِيَّ اللَّهِ، لَوْلاَ أَمْتَعْتَنَا بِهِ. فَأَتَيْنَا خَيْبَرَ، فَحَاصَرْنَاهُمْ حَتَّى أَصَابَتْنَا مَخْمَصَةٌ شَدِيدَةٌ، ثُمَّ إِنَّ اللَّهَ تَعَالَى فَتَحَهَا عَلَيْهِمْ، فَلَمَّا أَمْسَى النَّاسُ مَسَاءَ الْيَوْمِ الَّذِي فُتِحَتْ عَلَيْهِمْ أَوْقَدُوا نِيرَانًا كَثِيرَةً، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا هَذِهِ النِّيرَانُ عَلَى أَىِّ شَىْءٍ تُوقِدُونَ "". قَالُوا عَلَى لَحْمٍ. قَالَ "" عَلَى أَىِّ لَحْمٍ "". قَالُوا لَحْمِ حُمُرِ الإِنْسِيَّةِ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَهْرِيقُوهَا وَاكْسِرُوهَا "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، أَوْ نُهَرِيقُهَا وَنَغْسِلُهَا قَالَ "" أَوْ ذَاكَ "". فَلَمَّا تَصَافَّ الْقَوْمُ كَانَ سَيْفُ عَامِرٍ قَصِيرًا فَتَنَاوَلَ بِهِ سَاقَ يَهُودِيٍّ لِيَضْرِبَهُ، وَيَرْجِعُ ذُبَابُ سَيْفِهِ، فَأَصَابَ عَيْنَ رُكْبَةِ عَامِرٍ، فَمَاتَ مِنْهُ قَالَ فَلَمَّا قَفَلُوا، قَالَ سَلَمَةُ رَآنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِي، قَالَ "" مَا لَكَ "". قُلْتُ لَهُ فِدَاكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كَذَبَ مَنْ قَالَهُ، إِنَّ لَهُ لأَجْرَيْنِ ـ وَجَمَعَ بَيْنَ إِصْبَعَيْهِ ـ إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ قَلَّ عَرَبِيٌّ مَشَى بِهَا مِثْلَهُ "". حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَاتِمٌ قَالَ "" نَشَأَ بِهَا "".
பாடம் : 39
கைபர் போர்258
4196. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா?” என்று கூறினார். ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் ஈரசைச்சீர் பாடலைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள்.
“இறைவா!நீ இல்லையென்றால்
நாங்கள்நல்வழி பெற்றிருக்கமாட்டோம்தர்மமும் செய்திருக்கமாட்டோம்தொழுதிருக்கவுமாட்டோம்.
நாங்கள் புரிந்துவிட்டபாவங்களுக்காகஎங்களை மன்னிப்பாயாக!உனக்கே நாங்கள் அர்ப்பணம்!
(போர்முனையில் எதிரியைநாங்கள் சந்திக்கும்போதுஎங்கள் பாதங்களைஉறுதிப்படுத்துவாயாக!
எங்கள்மீது அமைதியைப்பொழிவாயாக! (அறவழிக்கு)நாங்கள் அழைக்கப்பட்டால்வந்துவிடுவோம்.
எங்களிடம்மக்கள் (அபயக்) குரல்எழுப்பினால்(உதவிக்கு வருவோம்)”260
என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.
(வழக்கம் போலப் பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங் கின.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டக வோட்டி?” என்று கேட்டார்கள். “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தார்கள். அப்போது, “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த மக்களில் ஒருவர், “இறைத்தூதரே! (அவருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா?” என்று கேட்டார். பிறகு நாங்கள் கைபருக்கு வந்து, கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசியேற்பட்டது.
பிறகு உயர்ந்தோனான அல்லாஹ், கைபர்வாசிகளுக்கு எதிராக (எங்களுக்கு) வெற்றியளித்தான். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.”இறைச்சி சமைப்பதற்காக” என்று மக்கள் கூறினர். “எந்த இறைச்சி?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நாட்டுக் கழுதைகளின் இறைச்சி' என்று மக்கள் கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களைக் கழுவிக்கொள்ளலாமா?” என்று கேட்டார். “அப்படியே ஆகட்டும்” என்று கூறினார்கள். (அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனின் காலை வெட்டப்போனபோது அன்னாரது வாளின் மேற்பகுதி, அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
(கைபர் வெற்றிக்குப்பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது- சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்- எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன; (அவர் தமது வாளால் தம்மைத்தாமே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்) என்று மக்கள் எண்ணுகிறார்கள்” என்று தெரிவித்தேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதைக் கூறியவர் தவறிழைத்துவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு” என்று கூறியவாறு, தம் இரு விரல்களையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து) “அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபுகள் மிகவும் குறைவானவர்களே” என்று கூறினார்கள்.261
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “(இவரைப் போன்றவர்) பூமியில் பிறப்பது அரிது” என்று இடம்பெற்றுள்ளது.

4197. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَتَى خَيْبَرَ لَيْلاً، وَكَانَ إِذَا أَتَى قَوْمًا بِلَيْلٍ لَمْ يُغِرْ بِهِمْ حَتَّى يُصْبِحَ، فَلَمَّا أَصْبَحَ خَرَجَتِ الْيَهُودُ بِمَسَاحِيهِمْ وَمَكَاتِلِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "".
பாடம் : 39
கைபர் போர்258
4197. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் கைபருக்கு வந்தார்கள் - அவர்கள் ஒரு சமுதாயத்தார்மீது இரவு நேரத்தில் (படையெடுத்துச்) செல்வார் களாயின் காலை நேரம் வரும்வரையில் அவர்களை நெருங்கமாட்டார்கள்- அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு (வயல்வெளிகளை நோக்கி) வெளியேறி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யூதர்கள் பார்த்த போது, “முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும், (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)” என்று கூறினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “கைபர் பாழாகிவிட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறி னார்கள்.262

4198. أَخْبَرَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَبَّحْنَا خَيْبَرَ بُكْرَةً، فَخَرَجَ أَهْلُهَا بِالْمَسَاحِي، فَلَمَّا بَصُرُوا بِالنَّبِيِّ صلى الله عليه وسلم قَالُوا مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "". فَأَصَبْنَا مِنْ لُحُومِ الْحُمُرِ فَنَادَى مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ، فَإِنَّهَا رِجْسٌ.
பாடம் : 39
கைபர் போர்258
4198. அனஸ் பின் மாóக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அதிகாலை நேரத்தில் நாங்கள் (போரிடுவதற்காக) கைபருக்குச் சென்றோம். அந்த ஊர்வாசிகள் மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது, “முஹம்மதும் -அல்லாஹ் வின் மீதாணையாக! முஹம்மதும்- (அவரது ஐந்தணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்). கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்கு வோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறினார்கள்.
அப்போது எங்களுக்குக் கழுதை இறைச்சி கிடைத்தது. எனவே, நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், “(நாட்டுக்)கழுதை இறைச்சியை உண்ண வேண்டாமென அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களைத் தடுக்கின்றனர். ஏனெனில், அது அசுத்த மாகும்” என்று அறிவித்தார்.

4199. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهُ جَاءٍ فَقَالَ أُكِلَتِ الْحُمُرُ. فَسَكَتَ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَقَالَ أُكِلَتِ الْحُمُرُ. فَسَكَتَ، ثُمَّ الثَّالِثَةَ فَقَالَ أُفْنِيَتِ الْحُمُرُ. فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى فِي النَّاسِ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ. فَأُكْفِئَتِ الْقُدُورُ، وَإِنَّهَا لَتَفُورُ بِاللَّحْمِ.
பாடம் : 39
கைபர் போர்258
4199. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் போரின்போது) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) கழுதைகள் சாப்பிடப்பட்டுவிட்டன” என்று கூறினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பிறகு இரண்டாம் முறையும் அவர் வந்து, “கழுதைகள் சாப்பிடப்பட்டுவிட்டன” என்று கூறினார். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வந்து, “கழுதைகள் தீர்ந்துபோய்விட்டன” என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு உத்தரவிட அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றனர்” என்று மக்களிடையே அறிவிப்புச் செய்தார். உடனே, இறைச்சி கொதித்துக்கொண்டிருந்த அந்தப் பாத்திரங் கள் கவிழ்க்கப்பட்டன.

4200. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الصُّبْحَ قَرِيبًا مِنْ خَيْبَرَ بِغَلَسٍ ثُمَّ قَالَ "" اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ، فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "". فَخَرَجُوا يَسْعَوْنَ فِي السِّكَكِ، فَقَتَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُقَاتِلَةَ، وَسَبَى الذُّرِّيَّةَ، وَكَانَ فِي السَّبْىِ صَفِيَّةُ، فَصَارَتْ إِلَى دِحْيَةَ الْكَلْبِيِّ، ثُمَّ صَارَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا. فَقَالَ عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ لِثَابِتٍ يَا أَبَا مُحَمَّدٍ آنْتَ قُلْتَ لأَنَسٍ مَا أَصْدَقَهَا فَحَرَّكَ ثَابِتٌ رَأْسَهُ تَصْدِيقًا لَهُ.
பாடம் : 39
கைபர் போர்258
4200. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி (ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹ் தொழுதுவிட்டுப் பிறகு, “அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக் கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்” என்று கூறினார்கள்.
கைபர்வாசிகள் (முஸ்லிம் படை களைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தா(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைக் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப் பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள்.
பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சொந்தமானார்கள். அவரது விடுதலையையே மணக்கொடையாக ஆக்கி (அவரை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்து)க்கொண்டார்கள்.
அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை ஸாபித் (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது அவர்களிடம், “அபூ முஹம்மதே! நபி (ஸல்) அவர்கள் என்ன மணக்கொடை கொடுத்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள்தான் கேட்டீர்களா?” என்று நான் வினவினேன். அதற்கு ஸாபித் (ரஹ்) அவர்கள் தமது கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக (“ஆம்' என்று கூறுவதுபோல) தமது தலையை அசைத்தார்கள்.

4201. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ سَبَى النَّبِيُّ صلى الله عليه وسلم صَفِيَّةَ، فَأَعْتَقَهَا وَتَزَوَّجَهَا. فَقَالَ ثَابِتٌ لأَنَسٍ مَا أَصْدَقَهَا قَالَ أَصْدَقَهَا نَفْسَهَا فَأَعْتَقَهَا.
பாடம் : 39
கைபர் போர்258
4201. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(கைபர் போரில்) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் அவர்களை விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்தச் செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் என்ன மணக்கொடை கொடுத்தார்கள்?” என்று நான் கேட்டேன். “(ஸஃபிய்யா-ரலி) அவர்களது விடுதலையையே அவர்களின் மணக்கொடையாக ஆக்கினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

4202. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا، فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَسْكَرِهِ، وَمَالَ الآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ لاَ يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلاَ فَاذَّةً إِلاَّ اتَّبَعَهَا، يَضْرِبُهَا بِسَيْفِهِ، فَقِيلَ مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلاَنٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ "". فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَنَا صَاحِبُهُ. قَالَ فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ، وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ ـ قَالَ ـ فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ سَيْفَهُ بِالأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ، فَقَتَلَ نَفْسَهُ، فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ قَالَ "" وَمَا ذَاكَ "". قَالَ الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ، فَقُلْتُ أَنَا لَكُمْ بِهِ. فَخَرَجْتُ فِي طَلَبِهِ، ثُمَّ جُرِحَ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ، فَقَتَلَ نَفْسَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ "" إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهْوَ مِنَ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம் : 39
கைபர் போர்258
4202. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்மீது போர் தொடுத்தபோது' அல்லது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பியபோது', மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்; (அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன்,) லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனையும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊர்திப் பிராணிக்குப் பின்னால் இருந்துகொண்டு, “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (யுக்தியும் சக்தியும் அல்லாஹ்வின் மூலமே அன்றி வேறெதன் மூலமும் இல்லை) என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் கைஸே!” என்று அழைத்தார்கள். “காத்திருக்கிறேன் (கூறுங்கள்), அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் பதிலளித்தேன்.
அதற்கு அவர்கள், “உமக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங் களில் ஒரு கருவூலமாகும்” என்று கூறினார்கள். நான், “சரி (கட்டாயம் கூறுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன்.(அந்த வார்த்தை,) “லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று சொன்னார்கள்.263

4203. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْنَا خَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِرَجُلٍ مِمَّنْ مَعَهُ يَدَّعِي الإِسْلاَمَ "" هَذَا مِنْ أَهْلِ النَّارِ "". فَلَمَّا حَضَرَ الْقِتَالُ قَاتَلَ الرَّجُلُ أَشَدَّ الْقِتَالِ، حَتَّى كَثُرَتْ بِهِ الْجِرَاحَةُ، فَكَادَ بَعْضُ النَّاسِ يَرْتَابُ، فَوَجَدَ الرَّجُلُ أَلَمَ الْجِرَاحَةِ، فَأَهْوَى بِيَدِهِ إِلَى كِنَانَتِهِ، فَاسْتَخْرَجَ مِنْهَا أَسْهُمًا، فَنَحَرَ بِهَا نَفْسَهُ، فَاشْتَدَّ رِجَالٌ مِنَ الْمُسْلِمِينَ، فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، صَدَّقَ اللَّهُ حَدِيثَكَ، انْتَحَرَ فُلاَنٌ فَقَتَلَ نَفْسَهُ. فَقَالَ "" قُمْ يَا فُلاَنُ فَأَذِّنْ أَنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ مُؤْمِنٌ، إِنَّ اللَّهَ يُؤَيِّدُ الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ "". تَابَعَهُ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 39
கைபர் போர்258
4203. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக்கொண்டு) தம் படையினரிடமும், எதிர் அணியினர் தம் படையினரிடமும் திரும்பியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (“குஸ்மான்' என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் இருந்தார். அவர், (யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார்.
அப்போது, “இன்றைய தினம் இன்ன மனிதர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தி செய்ததைப் போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை” என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் பின் அபில்ஜவ்ன் என்ற) ஒருவர், “நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப்போகிறேன்” என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார்.
அவர் நிற்கும்போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி தமது வாளை (அதன் கீழ் பகுதியைப்) பூமியில் வைத்து, அதன் கூரான மேல்பகுதியைத் தமது மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தமது உடலை அழுத்தித் தற்கொலை செய்துகொண்டார்.
(பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், “அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு' என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.)
பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தமது வாளின் (கீழ்) முனையைப் பூமியில் (நட்டு)வைத்து அதன் மேல்முனையைத் தம் மார்புகளுக்கிடையில் வைத்துத் தம்மை அந்த வாளின் மீது அழுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால்,(உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள்.264

4204. وَقَالَ شَبِيبٌ عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي ابْنُ الْمُسَيَّبِ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ شَهِدْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حُنَيْنًا. وَقَالَ ابْنُ الْمُبَارَكِ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. تَابَعَهُ صَالِحٌ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ الزُّبَيْدِيُّ أَخْبَرَنِي الزُّهْرِيُّ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ كَعْبٍ أَخْبَرَهُ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ كَعْبٍ قَالَ أَخْبَرَنِي مَنْ شَهِدَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم خَيْبَرَ. قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَسَعِيدٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 39
கைபர் போர்258
4204. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. மக்களில் சிலர், (நபி (ஸல்) அவர்களின் அந்தச் சொல்லை) சந்தேகப்படலாயினர்.
அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தமது அம்புக் கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துத் தற்கொலை செய்துகொண்டார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சொன்னது உண்மைதான் என அல்லாஹ் உறுதிப்படுத்திவிட்டான். இன்ன மனிதர் தம்மைத்தாமே அறுத்துக் தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), “இறை நம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது. அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதரின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான்' என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.265
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4205. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا غَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ ـ أَوْ قَالَ لَمَّا تَوَجَّهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ـ أَشْرَفَ النَّاسُ عَلَى وَادٍ، فَرَفَعُوا أَصْوَاتَهُمْ بِالتَّكْبِيرِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، إِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، إِنَّكُمْ تَدْعُونَ سَمِيعًا قَرِيبًا وَهْوَ مَعَكُمْ "". وَأَنَا خَلْفَ دَابَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعَنِي وَأَنَا أَقُولُ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ، فَقَالَ لِي "" يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ. قَالَ "" أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ "". قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ فِدَاكَ أَبِي وَأُمِّي. قَالَ "" لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ "".
பாடம் : 39
கைபர் போர்258
4205. அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன்ஹுனைன் போரில் கலந்துகொண்டோம்...
இதை உபைதுல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“கைபர் போரில் நபி (ஸல்) அவர்களு டன் கலந்துகொண்ட ஒருவர் எனக்குக் கூறினார்...”
இந்த ஹதீஸ் மொத்தம் ஏழு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4206. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ رَأَيْتُ أَثَرَ ضَرْبَةٍ فِي سَاقِ سَلَمَةَ، فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ، مَا هَذِهِ الضَّرْبَةُ قَالَ هَذِهِ ضَرْبَةٌ أَصَابَتْنِي يَوْمَ خَيْبَرَ، فَقَالَ النَّاسُ أُصِيبَ سَلَمَةُ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَنَفَثَ فِيهِ ثَلاَثَ نَفَثَاتٍ، فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَةِ.
பாடம் : 39
கைபர் போர்258
4206. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா (பின் அல்அக்வஉ - ரலி) அவர்களின் காலில் ஒரு வெட்டுக் காயத்தின் அடையாளத்தை நான் கண்டேன். அவரிடம், “அபூமுஸ்லிமே! இது என்ன காயம்?” என்று கேட்டேன். “இது கைபர் போர் தினத்தில் ஏற்பட்ட காயம். அப்போது மக்கள், “சலமா தாக்கப்பட்டு விட்டார்' என்று கூறினர்.
உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் அந்தக் காயத்தின் மீது மூன்று முறை இலேசாக உமிழ்ந்தார்கள். (அதன்பின்) இந்த நேரம்வரை (அதில்) எனக்கு நோவு ஏற்பட்டதில்லை” என்று சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

4207. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ الْتَقَى النَّبِيُّ صلى الله عليه وسلم وَالْمُشْرِكُونَ فِي بَعْضِ مَغَازِيهِ فَاقْتَتَلُوا، فَمَالَ كُلُّ قَوْمٍ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي الْمُسْلِمِينَ رَجُلٌ لاَ يَدَعُ مِنَ الْمُشْرِكِينَ شَاذَّةً وَلاَ فَاذَّةً إِلاَّ اتَّبَعَهَا فَضَرَبَهَا بِسَيْفِهِ، فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا أَجْزَأَ أَحَدُهُمْ مَا أَجْزَأَ فُلاَنٌ. فَقَالَ "" إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ "". فَقَالُوا أَيُّنَا مِنْ أَهْلِ الْجَنَّةِ إِنْ كَانَ هَذَا مِنْ أَهْلِ النَّارِ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لأَتَّبِعَنَّهُ، فَإِذَا أَسْرَعَ وَأَبْطَأَ كُنْتُ مَعَهُ. حَتَّى جُرِحَ فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نِصَابَ سَيْفِهِ بِالأَرْضِ، وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ، فَقَتَلَ نَفْسَهُ، فَجَاءَ الرَّجُلُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ فَقَالَ "" وَمَا ذَاكَ "". فَأَخْبَرَهُ. فَقَالَ "" إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَإِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம் : 39
கைபர் போர்258
4207. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு போரில் (கைபரில்) நபி (ஸல்) அவர்களும், யூத இணைவைப்பாளர்களும் சந்தித்துப் போரிட்டுக்கொண்டனர். (போர் நடைபெற்றபோது ஒருநாள் போரை நிறுத்திவிட்டு) முஸ்லிம்கள், யூதர்கள் ஆகியோரில் ஒவ்வொரு கூட்டத்தாரும்தத்தம் படையினர் (தங்கியிருந்த இடத்தை) நோக்கித் திரும்பினர். முஸ்லிம்களிடையே ஒருவர் இருந்தார். அவர் (போரின்போது யூதர்களான) இணைவைப்பாளர்களின் அணியிலிருந்து பிரிந்துசென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகித்) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் பின்தொடர்ந்து சென்று, தனது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார்.
அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! (இன்றைய தினம்) இன்ன மனிதர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தி செய்தது போல வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (மக்களால்) பேசப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். “(வீரதீரத்துடன் கடுமையாகப் போரிட்ட) இவரே நரகவாசிகளில் ஒருவராயிருந்தால் எங்களில் யார்தான் சொர்க்கவாசி!” என்று மக்கள் கூறினர். அந்த மக்களில் ஒருவர், “நான் அவரைப் பின்தொடர்ந்து செல்லப்போகிறேன். அவர் விரைந்தாலும் மெதுவாகச் சென்றாலும்அவருடன் இருப்பேன்” என்று கூறினார்.
(பிறகு அவரைத் தேடிக் கண்டு பிடித்துத் தொடர்ந்து சென்றார். வீர தீரமாகப் போரிட்ட.) அந்த மனிதர் (போரில்) காயப்படுத்தப்பட்டார். (வலி தாங்க முடியாமல்) அவசரமாக இறந்துபோக விரும்பி, தமது வாளின் (கீழ்) முனையைப் பூமியில் (நட்டு) வைத்து, அதன் மேல்முனையைத் தம் மார்புகளுக்கிடையில் வைத்து, அதன் மீது தம்மை அழுத்தித் தற்கொலை செய்து கொண்டார்.
(அவரைப் பின்தொடர்ந்து சென்று இந்தக் காட்சிகளைக் கண்டு வந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என நான் உறுதி கூறுகிறேன்” என்று கூறினார். “என்ன அது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கண்டு வந்ததை) நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், உண்மையில் அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இன்னொரு மனிதர்) மக்களின் வெளிப் பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள்.266

4208. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ، عَنْ أَبِي عِمْرَانَ، قَالَ نَظَرَ أَنَسٌ إِلَى النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ، فَرَأَى طَيَالِسَةً فَقَالَ كَأَنَّهُمُ السَّاعَةَ يَهُودُ خَيْبَرَ.
பாடம் : 39
கைபர் போர்258
4208. அபூஇம்ரான் (அப்துல் மலிக் பின் ஹபீப் அல்ஜவ்னீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள் (ஒருமுறை) வெள்ளிக்கிழமை அன்று (பஸ்ராவில் இருந்த ஒரு பள்ளிவாசலில்) மக்களை நோட்டமிட்டார்கள். அப்போது (அவர்களின் தலையில்) “தைலசான்' எனும் ஒரு வகை சால்வையைக் கண்டார்கள்.267
உடனே, “இப்போது இவர்கள் கைபர் யூதர்களைப் போல உள்ளனர்” என்று கூறினார்கள்.