4149. حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ قَالَ انْطَلَقْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ فَأَحْرَمَ أَصْحَابُهُ، وَلَمْ أُحْرِمْ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4149. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா ஆண்டில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் “இஹ்ராம்' கட்டியிருந்தார்கள். நான் (மட்டும்) இஹ்ராம் கட்டவில்லை.225
அத்தியாயம் : 64

4150. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ تَعُدُّونَ أَنْتُمُ الْفَتْحَ فَتْحَ مَكَّةَ، وَقَدْ كَانَ فَتْحُ مَكَّةَ فَتْحًا، وَنَحْنُ نَعُدُّ الْفَتْحَ بَيْعَةَ الرُّضْوَانِ يَوْمَ الْحُدَيْبِيَةِ. كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَرْبَعَ عَشْرَةَ مِائَةً، وَالْحُدَيْبِيَةُ بِئْرٌ فَنَزَحْنَاهَا، فَلَمْ نَتْرُكْ فِيهَا قَطْرَةً، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَتَاهَا، فَجَلَسَ عَلَى شَفِيرِهَا، ثُمَّ دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ ثُمَّ مَضْمَضَ وَدَعَا، ثُمَّ صَبَّهُ فِيهَا فَتَرَكْنَاهَا غَيْرَ بَعِيدٍ ثُمَّ إِنَّهَا أَصْدَرَتْنَا مَا شِئْنَا نَحْنُ وَرِكَابَنَا.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4150. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(“நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியளித்துள்ளோம்” எனும் 48:1ஆம் வசனத்திலுள்ள) “வெற்றி' என்பது மக்கா வெற்றி(யைத்தான் குறிக்கிறது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். மக்கா வெற்றியும் வெற்றியாகத்தானிருந்தது. (ஆனால்) நாங்கள் ஹுதைபியா சமாதான ஒப்பந்த நாளில் (நடைபெற்ற) “ரிள்வான்' உறுதிப் பிரமாணத்தையே பெரும் வெற்றியாகக் கருதுகிறோம்.
(அன்று) நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபியா என்பது ஒரு கிணறாகும். அந்தக் கிணற்றிலிருந்து ஒரு துளி நீரைக்கூட விட்டுவிடாமல் நாங்கள் (தண்ணீரை) இறைத்துவிட்டோம். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அங்கு அவர்கள் வந்து அந்தக் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்துகொண்டார்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரும்படி கூறினார்கள். (அந்தத் தண்ணீரால்) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பின்னர் வாய் கொப்புளித்துவிட்டுப் பிரார்த்தித்தார்கள். பிறகு (உளூ செய்து வாய் கொப்புளித்த) அந்தத் தண்ணீரைக் கிணற்றுக்குள் ஊற்றினார்கள்.
பின்பு சிறிது நேரம் அந்தக் கிணற்றை நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் அந்தக் கிணறு நாங்களும் எங்கள் ஊர்திப் பிராணிகளும் (குடிக்க) விரும்பிய (அளவு) தண்ணீரைத் திருப்பித் தந்தது.226

4151. حَدَّثَنِي فَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ أَبُو عَلِيٍّ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ أَنْبَأَنَا الْبَرَاءُ بْنُ عَازِبٍ ـ رضى الله عنهما أَنَّهُمْ كَانُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ أَوْ أَكْثَرَ، فَنَزَلُوا عَلَى بِئْرٍ فَنَزَحُوهَا، فَأَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَى الْبِئْرَ، وَقَعَدَ عَلَى شَفِيرِهَا ثُمَّ قَالَ "" ائْتُونِي بِدَلْوٍ مِنْ مَائِهَا "". فَأُتِيَ بِهِ فَبَصَقَ فَدَعَا ثُمَّ قَالَ "" دَعُوهَا سَاعَةً "". فَأَرْوَوْا أَنْفُسَهُمْ وَرِكَابَهُمْ حَتَّى ارْتَحَلُوا.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4151. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா தினத்தன்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஆயி ரத்து நானூறு பேர்' அல்லது “அதைவிட(க் கொஞ்சம்) அதிகம் பேர்' இருந்தனர். அவர்கள் ஒரு கிணற்றருகில் தங்கினர். அப்போது அந்தக் கிணற்றிலிருந்து (எல்லா நீரையும்) இறைத்துவிட்டனர். (தண்ணீர் தீர்ந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (அது பற்றிக் கூறினர்.) அப்போது, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்கு வந்து அதன் ஓரத்தில் அமர்ந்தார்கள்.
பின்பு “அந்தக் கிணற்று நீரிலிருந்து ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டுவரப்பட்டபோது அதில் உமிழ்ந்தார்கள். பிறகு பிரார்த்தனை புரிந்தார்கள்.
பிறகு (அதைக் கிணற்றுக்குள் கொட்டிவிட்டு), “அதைச் சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். பின்பு (நபித்தோழர்கள்) தாங்களும் தங்கள் ஊர்திப் பிராணிகளும் தாகம் தணித்துக் கொண்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

4152. حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ عَطِشَ النَّاسُ يَوْمَ الْحُدَيْبِيَةِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ، فَتَوَضَّأَ مِنْهَا، ثُمَّ أَقْبَلَ النَّاسُ نَحْوَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا لَكُمْ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ لَيْسَ عِنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ بِهِ، وَلاَ نَشْرَبُ إِلاَّ مَا فِي رَكْوَتِكَ. قَالَ فَوَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ فِي الرَّكْوَةِ، فَجَعَلَ الْمَاءُ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ كَأَمْثَالِ الْعُيُونِ، قَالَ فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا. فَقُلْتُ لِجَابِرٍ كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ قَالَ لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا، كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4152. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ஹுதைபியா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோலால் ஆன ( நீர்க்) குவளை ஒன்று இருந்தது. அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதன் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன (நேர்ந்தது)?” என்று கேட்டார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! தங்கள் குவளையிலிருக்கும் தண்ணீரைத் தவிர நாங்கள் உளூ செய்வதற்கோ குடிப்பதற்கோ எங்களிடம் வேறு தண்ணீரில்லை” என்று கூறினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்தக் குவளைக்குள் வைத்தார்கள். அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து ஊற்றுக் கண் போல தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது. அப்போது நாங்கள் அந்தத் தண்ணீரை அருந்தவும் செய்தோம். மேலும், அங்கத் தூய்மையும் செய்தோம்.
(அறிவிப்பாளர் சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) “நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “அன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். “நாங்கள் ஒரு லட்சம் பேராக இருந்திருந்தாலும் அந்தத் தண்ணீர் எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர்தான் இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.227

4153. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، قُلْتُ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ بَلَغَنِي أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، كَانَ يَقُولُ كَانُوا أَرْبَعَ عَشْرَةَ مِائَةً. فَقَالَ لِي سَعِيدٌ حَدَّثَنِي جَابِرٌ كَانُوا خَمْسَ عَشْرَةَ مِائَةً الَّذِينَ بَايَعُوا النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ.
تَابَعَهُ أَبُو دَاوُدَ حَدَّثَنَا قُرَّةُ عَنْ قَتَادَةَ
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4153. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம், “அவர்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தார்கள் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள் என்று எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், “ஹுதைபியா தினத்தன்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர் என்று ஜாபிர் (ரலி) அவர்களே எனக்கு அறிவித்தார்கள்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4154. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ "" أَنْتُمْ خَيْرُ أَهْلِ الأَرْضِ "". وَكُنَّا أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ، وَلَوْ كُنْتُ أُبْصِرُ الْيَوْمَ لأَرَيْتُكُمْ مَكَانَ الشَّجَرَةِ. تَابَعَهُ الأَعْمَشُ سَمِعَ سَالِمًا سَمِعَ جَابِرًا أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4154. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா தினத்தன்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்த வர்கள்” என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந் தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண் பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்” என்றே கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பிலும் “(அவர்கள்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தனர்” என்றே வந்துள்ளது.

4155. وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ كَانَ أَصْحَابُ الشَّجَرَةِ أَلْفًا وَثَلاَثَمِائَةٍ، وَكَانَتْ أَسْلَمُ ثُمْنَ الْمُهَاجِرِينَ. تَابَعَهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4155. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்தின் கீழ் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர்.228 (இதில்) “அஸ்லம்' குலத்தார் முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்தனர்.229
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4155. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்தின் கீழ் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர்.228 (இதில்) “அஸ்லம்' குலத்தார் முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்தனர்.229
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4156. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، أَنَّهُ سَمِعَ مِرْدَاسًا الأَسْلَمِيَّ، يَقُولُ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ يُقْبَضُ الصَّالِحُونَ الأَوَّلُ فَالأَوَّلُ، وَتَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ التَّمْرِ وَالشَّعِيرِ، لاَ يَعْبَأُ اللَّهُ بِهِمْ شَيْئًا.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4156. அந்த மரத்தின் கீழ் உறுதிப் பிரமாணம் (பைஅத்துர் ரிள்வான்) செய்தவர்களில் ஒருவரான மிர்தாஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும், அவர்களுக்கடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்தபின் இப்புவியில்) மட்டமான பேரீச்சம் பழத்தை யும் தொலி நீக்கப்படாத கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்த மக்களே எஞ்சி யிருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.230

4157. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ مَرْوَانَ، وَالْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالاَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا كَانَ بِذِي الْحُلَيْفَةِ قَلَّدَ الْهَدْىَ وَأَشْعَرَ وَأَحْرَمَ مِنْهَا. لاَ أُحْصِي كَمْ سَمِعْتُهُ مِنْ سُفْيَانَ حَتَّى سَمِعْتُهُ يَقُولُ لاَ أَحْفَظُ مِنَ الزُّهْرِيِّ الإِشْعَارَ وَالتَّقْلِيدَ، فَلاَ أَدْرِي ـ يَعْنِي ـ مَوْضِعَ الإِشْعَارِ وَالتَّقْلِيدِ، أَوِ الْحَدِيثَ كُلَّهُ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4157. மர்வான் பின் அல்ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் கூறியதாவது:
ஹுதைபியா ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் (சுமார்) ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம் தோழர்களுடன் (மதீனா விலிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள். துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அடையாளமும் இட்டுவிட்டு, பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள்.231
அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் சுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து எத்தனை முறை செவியுற்றேன் எனக் கணக்கிட்டுக் கூற முடியாது. மேலும் அன்னார், “குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டது, அடையாளம் இட்டது ஆகியவை நடந்த இடம் குறித்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நான் அறியவில்லை” என்றும் கூறினார்கள்.

4159. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ خَلَفٍ، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِي بِشْرٍ، وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَآهُ وَقَمْلُهُ يَسْقُطُ عَلَى وَجْهِهِ فَقَالَ "" أَيُؤْذِيكَ هَوَامُّكَ "". قَالَ نَعَمْ. فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَحْلِقَ وَهْوَ بِالْحُدَيْبِيَةِ، لَمْ يُبَيِّنْ لَهُمْ أَنَّهُمْ يَحِلُّونَ بِهَا، وَهُمْ عَلَى طَمَعٍ أَنْ يَدْخُلُوا مَكَّةَ، فَأَنْزَلَ اللَّهُ الْفِدْيَةَ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُطْعِمَ فَرَقًا بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ، أَوْ يُهْدِيَ شَاةً، أَوْ يَصُومَ ثَلاَثَةَ أَيَّامٍ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4159. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் ஹுதைபியா ஆண்டில் “உம்ரா'வுக்காக “இஹ்ராம்' கட்டியிருந்தபோது) என் முகத்தில் பேன்கள் விழுந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது, “உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். அப்போது ஹுதைபியாவிலிருந்த நபி (ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் ஹுதைபியாவிலேயே இஹ்ராமிóருந்து விடுபட வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அப்போது அல்லாஹ் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட (2:196ஆவது) வசனத்தை அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு “ஃபரக்' தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஓர் ஆட்டை குர்பானி செய்ய வேண்டும்; அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்” என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.232

4160. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ إِلَى السُّوقِ، فَلَحِقَتْ عُمَرَ امْرَأَةٌ شَابَّةٌ فَقَالَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَلَكَ زَوْجِي وَتَرَكَ صِبْيَةً صِغَارًا، وَاللَّهِ مَا يُنْضِجُونَ كُرَاعًا، وَلاَ لَهُمْ زَرْعٌ وَلاَ ضَرْعٌ، وَخَشِيتُ أَنْ تَأْكُلَهُمُ الضَّبُعُ، وَأَنَا بِنْتُ خُفَافِ بْنِ إِيمَاءَ الْغِفَارِيِّ، وَقَدْ شَهِدَ أَبِي الْحُدَيْبِيَةَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَوَقَفَ مَعَهَا عُمَرُ، وَلَمْ يَمْضِ، ثُمَّ قَالَ مَرْحَبًا بِنَسَبٍ قَرِيبٍ. ثُمَّ انْصَرَفَ إِلَى بَعِيرٍ ظَهِيرٍ كَانَ مَرْبُوطًا فِي الدَّارِ، فَحَمَلَ عَلَيْهِ غِرَارَتَيْنِ مَلأَهُمَا طَعَامًا، وَحَمَلَ بَيْنَهُمَا نَفَقَةً وَثِيَابًا، ثُمَّ نَاوَلَهَا بِخِطَامِهِ ثُمَّ قَالَ اقْتَادِيهِ فَلَنْ يَفْنَى حَتَّى يَأْتِيَكُمُ اللَّهُ بِخَيْرٍ. فَقَالَ رَجُلٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَكْثَرْتَ لَهَا. قَالَ عُمَرُ ثَكِلَتْكَ أُمُّكَ، وَاللَّهِ إِنِّي لأَرَى أَبَا هَذِهِ وَأَخَاهَا قَدْ حَاصَرَا حِصْنًا زَمَانًا، فَافْتَتَحَاهُ، ثُمَّ أَصْبَحْنَا نَسْتَفِيءُ سُهْمَانَهُمَا فِيهِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4160. (உமர் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள்அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கடைத்தெருவிற்குச் சென்றேன். அப்போது ஓர் இளம் பெண் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! சின்னஞ்சிறு சிறுவர்களை விட்டுவிட்டு என் கணவர் இறந்துபோய்விட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆட்டுக் கால் குளம்பைச் சமைப்பதற்குக்கூட அவர்களால் முடியாது. மேலும், எந்தவித விளைநிலமோ, (பால் கறப்பதற்குக்) கால்நடையோ அவர்களிடம் இல்லை. (பசியும்) பஞ்சமும் அவர்களை அழித்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நான் குஃபாஃப் பின் ஈமா அல்ஃகிஃபாரீ என்பவரின் மகளாவேன். என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவில் கலந்துகொண்டார்கள்” என்று கூறினார்.
அங்கிருந்து நகராமல் அப்பெண்ணுடனே நின்றிருந்த உமர் (ரலி) அவர்கள், “நெருங்கிய உறவே வருக!” என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு தம் வீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த திடகாத் திரமான ஒட்டகம் ஒன்றை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். பின்பு உணவு தானியங்களை இரு மூட்டைகளில் நிரப்பி, அந்த இரண்டையும் அந்த ஒட்டகத்தின் மீது ஏற்றிவைத்தார்கள். அந்த இரு மூட்டைகளுக்கிடையே (செலவுக்குத் தேவையான) காசுகளையும் ஆடைகளையும் ஏற்றினார்கள். பிறகு அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு, “(தற்போது) இதை ஓட்டிச் செல். இது தீர்ந்துபோவதற்குள் அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான்” என்று (அப்பெண்மணியிடம்) கூறினார்கள்.
அப்போது ஒருவர், “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! இந்தப் பெண்ணுக்கு அதிகமாகவே வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார். (அதற்கு) உமர் (ரலி) அவர்கள், “உன்னை உன் தாய் இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும், சிறிது காலம் ஒரு கோட்டையை முற்றுகையிட்டு அதை அவர்களிருவரும் வெற்றி கொண்டதை நான் பார்த்தேன். பிறகு அதில் (கிடைத்த போர்ச் செல்வத்தில்) நமக்குரிய பங்குகளைக் கோரலானோம்” என்று கூறினார்கள்.

4162. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ أَبُو عَمْرٍو الْفَزَارِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَقَدْ رَأَيْتُ الشَّجَرَةَ، ثُمَّ أَتَيْتُهَا بَعْدُ فَلَمْ أَعْرِفْهَا. قَالَ مَحْمُودٌ ثُمَّ أُنْسِيتُهَا بَعْدُ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4162. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை நான் பார்த்திருந்தேன். பின்பு (ஒருமுறை) அங்கு நான் வந்தேன். அப்போது என்னால் அதை அறிய முடியவில்லை.
மஹ்மூத் பின் ஃகைலான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “பிறகு அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது” என முசய்யப் (பின் ஹஸ்ன்-ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

4163. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ انْطَلَقْتُ حَاجًّا فَمَرَرْتُ بِقَوْمٍ يُصَلُّونَ قُلْتُ مَا هَذَا الْمَسْجِدُ قَالُوا هَذِهِ الشَّجَرَةُ، حَيْثُ بَايَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْعَةَ الرُّضْوَانِ. فَأَتَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ فَأَخْبَرْتُهُ فَقَالَ سَعِيدٌ حَدَّثَنِي أَبِي أَنَّهُ كَانَ فِيمَنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَحْتَ الشَّجَرَةِ، قَالَ فَلَمَّا خَرَجْنَا مِنَ الْعَامِ الْمُقْبِلِ نَسِينَاهَا، فَلَمْ نَقْدِرْ عَلَيْهَا. فَقَالَ سَعِيدٌ إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لَمْ يَعْلَمُوهَا وَعَلِمْتُمُوهَا أَنْتُمْ، فَأَنْتُمْ أَعْلَمُ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4163. தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஹஜ்ஜுக்குச் சென்றுகொண்டி ருந்தபோது, தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். “இது என்ன தொழுமிடம்?” என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், “இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பைஅத்துர் ரிள்வான்' எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடம்” என்று கூறினர். பின்பு நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன்.
அப்போது அவர்கள், “அந்த மரத் தின் கீழ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்களில் ஒருவரான என் தந்தை (முசய்யப் - ரலி) அவர்கள், “(உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்றபோது அந்த மரத்தை நாங்கள் மறந்துவிட்டோம். எங்களால் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை” என்று கூறினார்கள் எனத் தெரிவித்துவிட்டு, பிறகு சயீத் (ரஹ்) அவர்கள், “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே அதை அறியவில்லை. நீங்கள் அறிந்துவிட்டீர்களா? அப்படியானால், நீங்களே அதிகம் தெரிந்தவர்கள்” என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.

4164. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا طَارِقٌ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ مِمَّنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ، فَرَجَعْنَا إِلَيْهَا الْعَامَ الْمُقْبِلَ فَعَمِيَتْ عَلَيْنَا.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4164. அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்தவர் களில் ஒருவரான முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மறு ஆண்டு அந்த இடத்திற்குத் திரும்பவும் சென்றோம். அப்போது அந்த இடம் (அடையாளம் காண முடியாதவாறு) எங்களுக்குக் குழம்பிவிட்டது.

4165. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَارِقٍ، قَالَ ذُكِرَتْ عِنْدَ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ الشَّجَرَةُ فَضَحِكَ فَقَالَ أَخْبَرَنِي أَبِي وَكَانَ، شَهِدَهَا.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4165. தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் அந்த மரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது சயீத் அவர்கள் சிரித்துவிட்டு, அ(ந்தப் பிரமாணத்)தில் கலந்துகொண்டவரான என் தந்தை (அடுத்த ஆண்டே அந்த மரத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று) தெரிவித்ததாகக் கூறினார்.

4166. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَةٍ قَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَيْهِمْ "". فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ فَقَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى "".
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4166. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்:
எவரேனும் ஒரு கூட்டத்தார் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டுவந்தால் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இவர்கள் மீது கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூஅவ்ஃபா-ரலி) தமது ஸகாத்தைக் கொண்டுசென்றார். அப்போது, “இறைவா!அபூஅவ்ஃபாவின் குடும்பத்தாருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.233

4167. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ الْحَرَّةِ وَالنَّاسُ يُبَايِعُونَ لِعَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ فَقَالَ ابْنُ زَيْدٍ عَلَى مَا يُبَايِعُ ابْنُ حَنْظَلَةَ النَّاسَ قِيلَ لَهُ عَلَى الْمَوْتِ. قَالَ لاَ أُبَايِعُ عَلَى ذَلِكَ أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَكَانَ شَهِدَ مَعَهُ الْحُدَيْبِيَةَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4167. அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“அல்ஹர்ரா' போரின்போது அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்களிடம் மக்கள் உறுதிமொழி கொடுத்துக்கொண்டிருந்தபோது (அப்துல்லாஹ்) இப்னு ஸைத் (ரலி) அவர்கள் மக்களிடம், “எதற்காக இப்னு ஹன்ழலா உறுதிமொழி வாங்குகிறார்?” என்று கேட்டார்கள். “மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருக்கும்படி (உறுதிமொழி வாங்குகிறார்)” என்று அவர்களிடம் கூறப்பட்டது.
(அப்போது) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபியாவில் அளித்த உறுதி மொழிக்குப்) பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.234
இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவில் கலந்துகொண்ட வராவார்.

4168. حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ حَدَّثَنِي ـ أَبِي وَكَانَ، مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُمُعَةَ ثُمَّ نَنْصَرِفُ، وَلَيْسَ لِلْحِيطَانِ ظِلٌّ نَسْتَظِلُّ فِيهِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4168. இயாஸ் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (சலமா பின் அல் அக்வஉ -ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) “ஜுமுஆ' தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த்திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவில்கூட, சுவர்களுக்கு நிழல் படிந்திருக்காது” என்று கூறினார்கள்.