4049. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ يَقُولُ فَقَدْتُ آيَةً مِنَ الأَحْزَابِ حِينَ نَسَخْنَا الْمُصْحَفَ، كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا، فَالْتَمَسْنَاهَا فَوَجَدْنَاهَا مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ } فَأَلْحَقْنَاهَا فِي سُورَتِهَا فِي الْمُصْحَفِ.
பாடம் : 17
உஹுத் போர்106
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121)
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான் :
அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152)
மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4049. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் உத்தரவுப்படி) நாங்கள் திருக்குர்ஆனைப் (பல ஏடுகளில்) பிரதியெடுத்துக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத, நான் கேட்டிருந்த “அல்அஹ்ஸாப்' (எனும் 33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனம் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே,அதை நாங்கள் தேடிப்பார்த்தபோது அது குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:)
இறைநம்பிக்கையாளரில் இத்தகைய வர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாம் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டிவிட்டிருக் கிறார்கள்; அவர்களில் சிலர் தமது இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள்; இன்னும் சிலர் (அதை நிறைவேற்ற தருணம்) எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். (33:23)
உடனே அந்த வசனத்தைத் திருக்குர்ஆனில் அதற்குரிய அத்தியாயத்தில் (எழுதிச்) சேர்த்துவிட்டோம்.116
அத்தியாயம் : 64

4050. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ،، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ، رَجَعَ نَاسٌ مِمَّنْ خَرَجَ مَعَهُ، وَكَانَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِرْقَتَيْنِ، فِرْقَةً تَقُولُ نُقَاتِلُهُمْ. وَفِرْقَةً تَقُولُ لاَ نُقَاتِلُهُمْ. فَنَزَلَتْ {فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا} وَقَالَ "" إِنَّهَا طَيْبَةُ تَنْفِي الذُّنُوبَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْفِضَّةِ "".
பாடம் : 17
உஹுத் போர்106
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121)
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான் :
அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152)
மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4050. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்து விட்டனர்.117 (இவர்கள்மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவினர், “(திரும்பி ஓடியவர்களைக்) கொன்றுவிடுவோம்” என்று கூறினர். மற்றொரு பிரிவினர், “அவர்களை நாம் கொலை செய்யக் கூடாது” என்று கூறினர். (அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் அருளப்பெற்றது:
உங்களுக்கு என்ன நேர்ந்தது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்? அவர்கள் தேடிக்கொண்ட (தீய) வினையால் அவர் களை அல்லாஹ் வீழ்த்திவிட்டான். யாரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவரை நீங்கள் நல்வழிப்படுத்த விரும்புகிறீர்களா? (நபியே!) அல்லாஹ் யாரை வழிதவற விட்டுவிடுகிறானோ அவருக்கு எந்த (நல்) வழியையும் ஒருபோதும் நீர் காணமாட்டீர். (4:88)
மேலும், நபி (ஸல்) அவர்கள், “மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப்போல் அது பாவங்களைப் போக்கிவிடுகிறது” என்று சொன்னார்கள்.118

4051. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا {إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلاَ} بَنِي سَلِمَةَ وَبَنِي حَارِثَةَ، وَمَا أُحِبُّ أَنَّهَا لَمْ تَنْزِلْ، وَاللَّهُ يَقُولُ {وَاللَّهُ وَلِيُّهُمَا}
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4051. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர்” என்னும் இந்த (3:122ஆம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே அருளப்பெற்றது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், “அவ்விரு பிரிவினருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்” என்று (எங்களை அவ்வசனத்தில் மேன்மைப்படுத்திக்) கூறுகின்றான்.120

4052. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَلْ نَكَحْتَ يَا جَابِرُ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" مَاذَا أَبِكْرًا أَمْ ثَيِّبًا "". قُلْتُ لاَ بَلْ ثَيِّبًا. قَالَ "" فَهَلاَّ جَارِيَةً تُلاَعِبُكَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبِي قُتِلَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ كُنَّ لِي تِسْعَ أَخَوَاتٍ، فَكَرِهْتُ أَنْ أَجْمَعَ إِلَيْهِنَّ جَارِيَةً خَرْقَاءَ مِثْلَهُنَّ، وَلَكِنِ امْرَأَةً تَمْشُطُهُنَّ وَتَقُومُ عَلَيْهِنَّ. قَالَ "" أَصَبْتَ "".
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4052. ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திருமணம் முடித்துக் கொண்டாயா, ஜாபிரே?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.”கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான், “(கன்னிப் பெண்ணை) அல்ல; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்துகொண்டேன்)” என்று கூறினேன். “உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்) ஒன்பது புதல்வியரை விட்டுவிட்டு உஹுத் போரின்போது (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக உள்ளனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்துவிடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாக)ப் பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ செய்தது சரிதான்” என்று கூறினார்கள்.

4053. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما أَنَّ أَبَاهُ، اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، وَتَرَكَ سِتَّ بَنَاتٍ، فَلَمَّا حَضَرَ جِذَاذُ النَّخْلِ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي قَدِ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ. فَقَالَ "" اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَةٍ "". فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ كَأَنَّهُمْ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ، ثُمَّ قَالَ "" ادْعُ لَكَ أَصْحَابَكَ "". فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ عَنْ وَالِدِي أَمَانَتَهُ، وَأَنَا أَرْضَى أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلَّمَ اللَّهُ الْبَيَادِرَ كُلَّهَا وَحَتَّى إِنِّي أَنْظُرُ إِلَى الْبَيْدَرِ الَّذِي كَانَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم كَأَنَّهَا لَمْ تَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4053. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம்மீது கடன் இருக்கும் நிலையில் ஆறு புதல்வியரை (அநாதைகளாக) விட்டுவிட்டு என் தந்தை உஹுத் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார். பேரீச்சம்பழங்களைக் கொய்யும் (அறுவடைக்) காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “என் தந்தை உஹுத் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார் என்பது தங்களுக்குத் தெரியும். அவர் நிறையக் கடனையும் விட்டுச்சென்றுள்ளார். கடன்காரர்கள் தங்களைச் சந்திக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ சென்று எல்லாப் பேரீச்சங்கனிகளையும் களத்தில் ஒரு மூலையில் (தனித் தனியாகக்) குவித்து வை!” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களை நான் அழைத்தேன். நபி (ஸல்) அவர்களைக் கடன்காரர்கள் கண்டபோது என்னால் ஆத்திரமூட்டப்பட்டவர்களைப் போல அந்த நேரத்தில் தெரிந்தார்கள். கடன்காரர்கள் (கடுமையாக) நடந்துகொள்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றிவந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு, “உன் (கடன்காரத்) தோழர்களைக் கூப்பிடு” என்று கூறினார்கள்.
(பிறகு) நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கனிகளை) அவர்களுக்கு அளந்து கொடுத்துக்கொண்டேயிருந்தார்கள். என் தந்தையின் (கடன்) பொறுப்பை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான். நானோ, “அல்லாஹ், என் தந்தையின் (கடன்) பொறுப்பை நிறைவேற்றினால் போதும். என் சகோதரிகளிடம் ஒரு பேரீச்சம் பழத்துடன் திரும்பிச் செல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை' என்று திருப்திப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பேரீச்சம் பழக் குவியல்கள் முழுவதையும் (தீர்ந்து போகாமல்) அல்லாஹ் பாதுகாத்தான். எந்த அளவுக்கென்றால் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த அந்தக் குவியலில் ஒரு பேரீச்சங்கனிகூட குறையாமலிருந்ததை நான் பார்த்தேன்.121

4054. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ، وَمَعَهُ رَجُلاَنِ يُقَاتِلاَنِ عَنْهُ، عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ، كَأَشَدِّ الْقِتَالِ، مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4054. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.122

4055. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ السَّعْدِيُّ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ نَثَلَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم كِنَانَتَهُ يَوْمَ أُحُدٍ فَقَالَ "" ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي "".
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4055. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்துஎனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (என்னிடம்), “அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள்.

4056. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ سَمِعْتُ سَعْدًا، يَقُولُ جَمَعَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4056. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்றுசேர்த்து, (“என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று) கூறி (போர் புரிய உற்சாகமூட்டி)னார்கள்.123

4057. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ قَالَ قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَبَوَيْهِ كِلَيْهِمَا. يُرِيدُ حِينَ قَالَ "" فِدَاكَ أَبِي وَأُمِّي "". وَهُوَ يُقَاتِلُ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4057. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையுமே ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள்.
அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தாம் போர் புரிந்துகொண்டிருந்தபோது, “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு சஅத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

4058. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدٍ، عَنِ ابْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَجْمَعُ أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرَ سَعْدٍ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4058. அலீ (பின் அபீதாலிப் -ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை.

4059. حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم جَمَعَ أَبَوَيْهِ لأَحَدٍ إِلاَّ لِسَعْدِ بْنِ مَالِكٍ، فَإِنِّي سَمِعْتُهُ يَقُولُ يَوْمَ أُحُدٍ "" يَا سَعْدُ ارْمِ، فِدَاكَ أَبِي وَأُمِّي "".
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4059. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின்மாலிக் (ரலி) அவர்களைத் தவிர124 வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுத் (போர் நடந்த) நாளில், “சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் (சஅத் அவர்களிடம்) கூறியதைக் கேட்டேன்.

4060. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُعْتَمِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ زَعَمَ أَبُو عُثْمَانَ أَنَّهُ لَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ تِلْكَ الأَيَّامِ الَّتِي يُقَاتِلُ فِيهِنَّ غَيْرُ طَلْحَةَ وَسَعْدٍ. عَنْ حَدِيثِهِمَا.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4060. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டுவந்த அந்த நாட்களில் ஒன்றில், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களையும், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களையும் தவிர்த்து (முஹாஜிர்களில் வேறு யாரும்) அவர்களுடன் எஞ்சியிருக்கவில்லை.
இது குறித்து தல்ஹா (ரலி) அவர்களும், சஅத் (ரலி) அவர்களும் (நேரடியாக) அறிவித்த ஹதீஸையும் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.125

4062. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، قَالَ صَحِبْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَالْمِقْدَادَ وَسَعْدًا رضى الله عنهم فَمَا سَمِعْتُ أَحَدًا مِنْهُمْ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، إِلاَّ أَنِّي سَمِعْتُ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ يَوْمِ أُحُدٍ
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4062. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், தல்ஹா பின் உபைதில்லாஹ், மிக்தாத் பின் அல்அஸ்வத், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவிப்பதை நான் கேட்டதில்லை.
ஆயினும், தல்ஹா (ரலி) அவர்கள் (மட்டும்) உஹுத் போர் நாள் பற்றி அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன்.126

4063. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ شَلاَّءَ، وَقَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4063. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களின் செயலிழந்துபோன கையைப் பார்த்தேன். உஹுத் நாளில் அந்தக் கையால் நபி (ஸல்) அவர்களை அன்னார் காத்த(போது எதிரிகளால் வெட்டப்பட்ட)ôர்கள்.127

4064. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبُو طَلْحَةَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُجَوِّبٌ عَلَيْهِ بِحَجَفَةٍ لَهُ، وَكَانَ أَبُو طَلْحَةَ رَجُلاً رَامِيًا شَدِيدَ النَّزْعِ، كَسَرَ يَوْمَئِذٍ قَوْسَيْنِ أَوْ ثَلاَثًا، وَكَانَ الرَّجُلُ يَمُرُّ مَعَهُ بِجَعْبَةٍ مِنَ النَّبْلِ فَيَقُولُ انْثُرْهَا لأَبِي طَلْحَةَ. قَالَ وَيُشْرِفُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْظُرُ إِلَى الْقَوْمِ، فَيَقُولُ أَبُو طَلْحَةَ بِأَبِي أَنْتَ وَأُمِّي، لاَ تُشْرِفْ يُصِيبُكَ سَهْمٌ مِنْ سِهَامِ الْقَوْمِ، نَحْرِي دُونَ نَحْرِكَ. وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ وَأُمَّ سُلَيْمٍ، وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ الْقِرَبَ عَلَى مُتُونِهِمَا، تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلآنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ، وَلَقَدْ وَقَعَ السَّيْفُ مِنْ يَدَىْ أَبِي طَلْحَةَ إِمَّا مَرَّتَيْنِ وَإِمَّا ثَلاَثًا.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4064. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.
மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்துவிட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், “அதை அபூதல்ஹாவிடம் போடு” என்று சொல்வார்கள்.
அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கிவிடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்” என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்துகொண்டு) இருப்பதை நான் கண்டேன்.
அவர்கள் (தண்ணீர் நிரம்பிய தோல்பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்துகொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்துகிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டுவந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.128

4065. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ، فَصَرَخَ إِبْلِيسُ لَعْنَةُ اللَّهِ عَلَيْهِ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ. فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ فَبَصُرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَىْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي. قَالَ قَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ فَقَالَ حُذَيْفَةُ يَغْفِرُ اللَّهُ لَكُمْ. قَالَ عُرْوَةُ فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ. بَصُرْتُ عَلِمْتُ، مِنَ الْبَصِيرَةِ فِي الأَمْرِ، وَأَبْصَرْتُ مِنْ بَصَرِ الْعَيْنِ وَيُقَالُ بَصُرْتُ وَأَبْصَرْتُ وَاحِدٌ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4065. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது இப்லீஸ்,-அல்லாஹ் அவனைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!- “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால்இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்óம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின்அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற் பட்டுப்) போரிட்டுக்கொண்டனர்.
அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், தம் தந்தை “அல்யமான்' அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, “அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள்.
(ஆனால்) அல்லாஹ்வின் மீதாணை யாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இவ்வாறு மன்னித்ததால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.129
(இங்கு ஹ‚தைஃபா (ரலி) அவர்கள் தம் தந்தையை “கண்டார்கள்' என்பதைக் குறிக்க “பஸ‚ர' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.)
“பஸ‚ர்த்து' என்பது ஒரு காரியத்தில் ஒருவருக்குள்ள “அகப் பார்வையை'க் குறிக்கும். “அப்ஸர்த்து' என்பது கண்ணால் பார்க்கும் “புறப் பார்வையை'க் குறிக்கும். சிலர், பஸ‚ர்த்து, அப்ஸர்த்து இரண்டும் ஒன்றே என்பர்.

4066. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، قَالَ جَاءَ رَجُلٌ حَجَّ الْبَيْتَ فَرَأَى قَوْمًا جُلُوسًا فَقَالَ مَنْ هَؤُلاَءِ الْقُعُودُ قَالُوا هَؤُلاَءِ قُرَيْشٌ. قَالَ مَنِ الشَّيْخُ قَالُوا ابْنُ عُمَرَ. فَأَتَاهُ فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ شَىْءٍ أَتُحَدِّثُنِي، قَالَ أَنْشُدُكَ بِحُرْمَةِ هَذَا الْبَيْتِ أَتَعْلَمُ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَرَّ يَوْمَ أُحُدٍ قَالَ نَعَمْ. قَالَ فَتَعْلَمُهُ تَغَيَّبَ عَنْ بَدْرٍ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ. قَالَ فَتَعْلَمُ أَنَّهُ تَخَلَّفَ عَنْ بَيْعَةِ الرُّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ. قَالَ فَكَبَّرَ. قَالَ ابْنُ عُمَرَ تَعَالَ لأُخْبِرَكَ وَلأُبَيِّنَ لَكَ عَمَّا سَأَلْتَنِي عَنْهُ، أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ، وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَدْرٍ فَإِنَّهُ كَانَ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَتْ مَرِيضَةً، فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ "". وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرُّضْوَانِ فَإِنَّهُ لَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ لَبَعَثَهُ مَكَانَهُ، فَبَعَثَ عُثْمَانَ، وَكَانَ بَيْعَةُ الرُّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ الْيُمْنَى "" هَذِهِ يَدُ عُثْمَانَ "". فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ فَقَالَ "" هَذِهِ لِعُثْمَانَ "". اذْهَبْ بِهَذَا الآنَ مَعَكَ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
“ஈரணிகள் மோதிக்கொண்ட நாளில் உங்களில் யார் பின்வாங்கி (ஓடி)னார்களோ அவர்களை, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணத்தால் ஷைத்தான்தான் அடிபிறழச் செய்தான். அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பவனும் சகிப்புத் தன்மை மிக்கவனும் ஆவான்” எனும் (3:155) இறைவசனம்
4066. உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்ய (எகிப்துவாசியான) ஒரு மனிதர் வந்தார். அப்போது ஒரு கூட்டத்தார் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷிகள்” என்று கூறினர். அவர், “(இவர்களில்) முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர்.
பிறகு அவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்று, “(இப்னு உமர் அவர்களே!) நான் தங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்பேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்வீர்களா? இந்த இறையில்லத்தின் புனிதத்தை முன்வைத்து தங்களிடம் கேட்கிறேன்: உஸ்மான் பின் அஃப்பான் உஹுத் நாளில் (போர்க்களத்திலிருந்து) வெருண்டோடியதைத் தாங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள்.
அவர், “உஸ்மான் (ரலி) அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “அவர் (ஹுதைபியாவில் நடந்த) “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக் குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்தது போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும்படி) “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லையென்று) நீ கேட்டது பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.
உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.
பத்ர் போரில் அவர்கள் கலந்துகொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா (ரலி) அவர்கள்) உஸ்மானுடைய மனைவியாக இருந்தார்கள். அப்போது அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைப் போய்க் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.)
“பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவேதான், உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் இடக் கையின் மீது தட்டினார்கள். பிறகு, “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்.” (இவ்வாறு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீ போகலாம்” என்று சொன்னார்கள்.130

4067. حَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ، وَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ.
பாடம் : 20
(அல்லாஹ் கூறுகின்றான்:)
“(போர்க் களத்தில்) இத்தூதர் உங்களுக்குப் பின்னாóருந்து உங்களை அழைத்துக்கொண்டிருக்கையில், ஒருவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலைமீது) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள். அதனால் உங்களுக்குத் துக்கத்திற்குமேல் துக்கத்தை அல்லாஹ் பரிசளித்தான். உங்களைவிட்டு (வெற்றி) தவறிப்போனதற்காகவும், உங்களுக்கு(த் துன்பம்) நேர்ந்ததற்காகவும் நீங்கள் கவலைப்படலாகாது என்பதற்காகவே (இவ்வாறு அதைவிடப் பெரிய துக்கத்தை அவன் அளித்தான்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.” (என்ற 3:153ஆவது இறைவசனம்)
(இவ்வசனத்தில் “ஏறிச்செல்வது' என்பதைக் குறிக்க மூலத்தில்) “துஸ்இதூன' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “நீங்கள் போய்க்கொண்டிருந்தீர்கள்' என்பது பொருள். அஸ்அத, ஸஇத இரு சொற்களும் “வீட்டின் மேல் ஏறுவதை'க் குறிக்கும்.
4067. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், (அம்பெய்யும்) காலாட் படையினருக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை (தலைவராக)ஆக்கினார்கள். மேலும், அப்படையினர் தோற்றுப்போய் ஓடிவிட்டார்கள். அதுதான், அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை இறைத்தூதர் அழைத்த நேரமாகும்.131

4068. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي طَلْحَةَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ فِيمَنْ تَغَشَّاهُ النُّعَاسُ يَوْمَ أُحُدٍ، حَتَّى سَقَطَ سَيْفِي مِنْ يَدِي مِرَارًا، يَسْقُطُ وَآخُذُهُ، وَيَسْقُطُ فَآخُذُهُ.
பாடம் : 21
(அல்லாஹ் கூறுகின்றான்:)
“பின்னர் இத்துயரத்திற்குப் பிறகு மனஅமைதி அளிக்கும் சிற்றுறக்கத்தை உங்களுக்கு அல்லாஹ் அருளினான். அது உங்களில் ஒரு பிரிவினரைத் தழுவிக் கொண்டது. மற்றொரு பிரிவினருக்கோ தம்மைப் பற்றிய கவலைதான். அவர்கள் உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி அறியாமைக்கால எண்ணம் கொண்டி ருந்தனர். “நமக்கு இந்த விவகாரத்தில் அதிகாரம் ஏதும் உண்டா?” என்று அவர்கள் கேட்கின்றனர். “அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
உம்மிடம் அவர்கள் வெளிப்படுத்தாத (பல)வற்றைத் தம் உள்ளங்களில் மறைத்துவைத்துள்ளனர். “நமக்கு (மட்டும்) இந்த விவகாரத்தில் அதிகாரம் ஏதும் இருந்திருந்தால், இங்கு நாம் கொல்லப்பட்டிருக்கமாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். “நீங்கள் உங்கள் இல்லங்களில் (தங்கி) இருந்தாலும் உயிரிழப்பு யார்மீது விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தமது (மரணப்) படுக்கைக்கு வந்தே தீருவார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. உங்கள் நெஞ்சங்களில் உள்ளதைச் சோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளதைத் தூய்மைப் படுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன் ஆவான்.” (என்ற 3:154வது இறைவசனம்)
4068. அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல் -ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாகஇருந்தேன். எந்த அளவுக்கென்றால் எனது வாள் எனது கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்துவிட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன்.132