4069. حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ مِنَ الْفَجْرِ يَقُولُ "" اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا "". بَعْدَ مَا يَقُولُ "" سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ "". فَأَنْزَلَ اللَّهُ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ} إِلَى قَوْلِهِ { فَإِنَّهُمْ ظَالِمُونَ}
பாடம் : 22 (அல்லாஹ் கூறுகின்றான்:) “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர்களாவர்” (என்ற 3:128ஆவது இறைவசனம்) அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரன்று நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது, “தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி உருப்படும்?” என்று (மனமுடைந்தவர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போதுதான், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று தொடங்கும் வசனம் (3:128) அருளப்பெற்றது.133
4069. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ர் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்; ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறியதற்குப் பின்னால், நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இன்னான்,இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர்களாவர்.” எனும் (3:128) வசனத்தை அருளினான்.


அத்தியாயம் : 64
4070. وَعَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو عَلَى صَفْوَانَ بْنِ أُمَيَّةَ وَسُهَيْلِ بْنِ عَمْرٍو وَالْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَزَلَتْ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ} إِلَى قَوْلِهِ {فَإِنَّهُمْ ظَالِمُونَ}.
பாடம் : 22 (அல்லாஹ் கூறுகின்றான்:) “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர்களாவர்” (என்ற 3:128ஆவது இறைவசனம்) அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரன்று நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது, “தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி உருப்படும்?” என்று (மனமுடைந்தவர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போதுதான், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று தொடங்கும் வசனம் (3:128) அருளப்பெற்றது.133
4070. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

அப்போது, “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர் களாவர்.” என்ற (3:128) எனும் வசனம் அருளப்பெற்றது.134

அத்தியாயம் : 64
4071. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، وَقَالَ ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَسَمَ مُرُوطًا بَيْنَ نِسَاءٍ مِنْ نِسَاءِ أَهْلِ الْمَدِينَةِ، فَبَقِيَ مِنْهَا مِرْطٌ جَيِّدٌ، فَقَالَ لَهُ بَعْضُ مَنْ عِنْدَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَعْطِ هَذَا بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي عِنْدَكَ. يُرِيدُونَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عَلِيٍّ. فَقَالَ عُمَرُ أُمُّ سَلِيطٍ أَحَقُّ بِهِ. وَأُمُّ سَلِيطٍ مِنْ نِسَاءِ الأَنْصَارِ مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، قَالَ عُمَرُ فَإِنَّهَا كَانَتْ تُزْفِرُ لَنَا الْقِرَبَ يَوْمَ أُحُدٍ.
பாடம் : 23 உம்மு சலீத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு135
4071. ஸஅலபா பின் அபீமாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை)ப் பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினர்.

-அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களைக் கருத்தில்கொண்டே (இப்படிக்) கூறினர்-

அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமைவிட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்” என்று கூறினார்கள். (மேலும்) “அவர் எங்களுக்காக உஹுத் போர் நடந்த நாளில் தோலால் ஆன தண்ணீர் பைகளைச் சுமந்துகொண்டு வந்துகொண்டிருந்தார்” என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.136

அத்தியாயம் : 64
4072. حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، قَالَ خَرَجْتُ مَعَ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ، فَلَمَّا قَدِمْنَا حِمْصَ قَالَ لِي عُبَيْدُ اللَّهِ هَلْ لَكَ فِي وَحْشِيٍّ نَسْأَلُهُ عَنْ قَتْلِ حَمْزَةَ قُلْتُ نَعَمْ. وَكَانَ وَحْشِيٌّ يَسْكُنُ حِمْصَ فَسَأَلْنَا عَنْهُ فَقِيلَ لَنَا هُوَ ذَاكَ فِي ظِلِّ قَصْرِهِ، كَأَنَّهُ حَمِيتٌ. قَالَ فَجِئْنَا حَتَّى وَقَفْنَا عَلَيْهِ بِيَسِيرٍ، فَسَلَّمْنَا، فَرَدَّ السَّلاَمَ، قَالَ وَعُبَيْدُ اللَّهِ مُعْتَجِرٌ بِعِمَامَتِهِ، مَا يَرَى وَحْشِيٌّ إِلاَّ عَيْنَيْهِ وَرِجْلَيْهِ، فَقَالَ عُبَيْدُ اللَّهِ يَا وَحْشِيُّ أَتَعْرِفُنِي قَالَ فَنَظَرَ إِلَيْهِ ثُمَّ قَالَ لاَ وَاللَّهِ إِلاَّ أَنِّي أَعْلَمُ أَنَّ عَدِيَّ بْنَ الْخِيَارِ تَزَوَّجَ امْرَأَةً يُقَالُ لَهَا أُمُّ قِتَالٍ بِنْتُ أَبِي الْعِيصِ، فَوَلَدَتْ لَهُ غُلاَمًا بِمَكَّةَ، فَكُنْتُ أَسْتَرْضِعُ لَهُ، فَحَمَلْتُ ذَلِكَ الْغُلاَمَ مَعَ أُمِّهِ، فَنَاوَلْتُهَا إِيَّاهُ، فَلَكَأَنِّي نَظَرْتُ إِلَى قَدَمَيْكَ. قَالَ فَكَشَفَ عُبَيْدُ اللَّهِ عَنْ وَجْهِهِ ثُمَّ قَالَ أَلاَ تُخْبِرُنَا بِقَتْلِ حَمْزَةَ قَالَ نَعَمْ، إِنَّ حَمْزَةَ قَتَلَ طُعَيْمَةَ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ بِبَدْرٍ، فَقَالَ لِي مَوْلاَىَ جُبَيْرُ بْنُ مُطْعِمٍ إِنْ قَتَلْتَ حَمْزَةَ بِعَمِّي فَأَنْتَ حُرٌّ، قَالَ فَلَمَّا أَنْ خَرَجَ النَّاسُ عَامَ عَيْنَيْنِ ـ وَعَيْنَيْنِ جَبَلٌ بِحِيَالِ أُحُدٍ، بَيْنَهُ وَبَيْنَهُ وَادٍ ـ خَرَجْتُ مَعَ النَّاسِ إِلَى الْقِتَالِ، فَلَمَّا اصْطَفُّوا لِلْقِتَالِ خَرَجَ سِبَاعٌ فَقَالَ هَلْ مِنْ مُبَارِزٍ قَالَ فَخَرَجَ إِلَيْهِ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ يَا سِبَاعُ يَا ابْنَ أُمِّ أَنْمَارٍ مُقَطِّعَةِ الْبُظُورِ، أَتُحَادُّ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم قَالَ ثُمَّ شَدَّ عَلَيْهِ فَكَانَ كَأَمْسِ الذَّاهِبِ ـ قَالَ ـ وَكَمَنْتُ لِحَمْزَةَ تَحْتَ صَخْرَةٍ فَلَمَّا دَنَا مِنِّي رَمَيْتُهُ بِحَرْبَتِي، فَأَضَعُهَا فِي ثُنَّتِهِ حَتَّى خَرَجَتْ مِنْ بَيْنِ وَرِكَيْهِ ـ قَالَ ـ فَكَانَ ذَاكَ الْعَهْدَ بِهِ، فَلَمَّا رَجَعَ النَّاسُ رَجَعْتُ مَعَهُمْ فَأَقَمْتُ بِمَكَّةَ، حَتَّى فَشَا فِيهَا الإِسْلاَمُ، ثُمَّ خَرَجْتُ إِلَى الطَّائِفِ، فَأَرْسَلُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَسُولاً، فَقِيلَ لِي إِنَّهُ لاَ يَهِيجُ الرُّسُلَ ـ قَالَ ـ فَخَرَجْتُ مَعَهُمْ حَتَّى قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَآنِي قَالَ "" آنْتَ وَحْشِيٌّ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" أَنْتَ قَتَلْتَ حَمْزَةَ "". قُلْتُ قَدْ كَانَ مِنَ الأَمْرِ مَا بَلَغَكَ. قَالَ "" فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُغَيِّبَ وَجْهَكَ عَنِّي "". قَالَ فَخَرَجْتُ، فَلَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَجَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ قُلْتُ لأَخْرُجَنَّ إِلَى مُسَيْلِمَةَ لَعَلِّي أَقْتُلُهُ فَأُكَافِئَ بِهِ حَمْزَةَ ـ قَالَ ـ فَخَرَجْتُ مَعَ النَّاسِ، فَكَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ ـ قَالَ ـ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي ثَلْمَةِ جِدَارٍ، كَأَنَّهُ جَمَلٌ أَوْرَقُ ثَائِرُ الرَّأْسِ ـ قَالَ ـ فَرَمَيْتُهُ بِحَرْبَتِي، فَأَضَعُهَا بَيْنَ ثَدْيَيْهِ حَتَّى خَرَجَتْ مِنْ بَيْنِ كَتِفَيْهِ ـ قَالَ ـ وَوَثَبَ إِلَيْهِ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَضَرَبَهُ بِالسَّيْفِ عَلَى هَامَتِهِ. قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ فَأَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ فَقَالَتْ جَارِيَةٌ عَلَى ظَهْرِ بَيْتٍ وَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، قَتَلَهُ الْعَبْدُ الأَسْوَدُ.
பாடம் : 24 ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி137
4072. ஜஅஃபர் பின் அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு138 வந்து சேர்ந்தபோது என்னிடம், உபைதுல்லாஹ் பின் அதீ அவர்கள், “(உஹுத் போரின்போது ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ (ரலி) அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!” என்று கூறினார்கள்.

நான், சரி என்றேன். வஹ்ஷீ (ரலி) அவர்கள் ஹிம்ஸில் வசித்துக்கொண்டி ருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். “அவர் தமது அந்தக் கோட்டைக்குள் இருக்கிறார்; அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல் பை போன்று (பருமனாக) இருப்பார்” என்று எங்களிடம் கூறப்பட்டது.

பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு அவருக்கு நாங்கள் சலாம் சொன்னபோது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் சொன்னார்.

உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தலைப்பாகைத் துணியால், தம் இரு கண்களையும் கால்களையும் தவிர வேறெதையும் வஹ்ஷீ (ரலி) அவர்கள் பார்க்க முடியாத அளவுக்குச் சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், “வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டார்கள்.

அப்போது வஹ்ஷீ (ரலி) அவர்கள், உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அதீ பின் அல்கியார் ஒரு பெண்ணைத் மணமுடித்தார்.139 அந்தப் பெண், “உம்மு கித்தால் பின்த் அபில்ஈஸ்' என்று அழைக்கப்பட்டார். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்குப் பாலூட்டும் செவிலித் தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டு பிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்துகொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது நான் பார்த்தேன்.) உம்முடைய இரு பாதங்களைப் பார்த்தால் அது போலவே இருக்கிறது” என்று கூறினார்.

அப்போது உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, “ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். வஹ்ஷீ (ரலி), “சரி (சொல்கிறேன்)” என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:)

ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ர் போரில் (என் எசமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா பின் அதீ பின் அல்கியார் என்பாரைக் கொலை செய்திருந்தார். எனவே, என் எசமான் ஜுபைர் பின் முத்இம் என்னிடம், “என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்” என்று கூறினார்.

ஆகவே, அய்னைன் (உஹுத்) ஆண்டில் -அய்னைன் என்பது உஹுத் மலைக்கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரு மலைகளுக்குமிடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு - (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ பின் அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியை விட்டு) முன்னால் வந்து, “(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?” என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுடனும் (பகைத்துக்கொண்டு) மோத வந்திருக்கி றாயா?” என்று கேட்டார்கள்.

பிறகு ஹம்ஸா (ரலி) அவர்கள் அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள்.அவன் கழிந்து போய்விட்ட நேற்றையதினம் போல் (மடிந்தவனாக) ஆகிவிட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்துகொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை(க் கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன்.

அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷியர் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன்.

மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்டபின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்றுவிட்டேன். தாயிஃப்வாசிகள் (இஸ்லாத்தை அறிந்துகொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.140

அப்போது, என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார் கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)” என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவின ருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன்.

என்னை அவர்கள் கண்டபோது, “நீர் வஹ்ஷீதானே?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன். “நீர் தானே ஹம்ஸாவைக் கொன்றீர்?” என்று கேட்டார்கள். நான், “உங்களுக்குக் கிடைத்த தகவலின்படி விஷயம் நடந்தது உண்மைதான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “(உம்மைக் காணும்போது என் தந்தையின் சகோதரர் ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டு உன் முகத்தை மறைத்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பெரும் பொய்யன் முசைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களுடன் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), “நிச்சயம் நான் முசைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடு செய்யலாம்” என்று கூறிக்கொண்டேன். (அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிய போர்ப்படையிóருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான் அவனுடைய விஷயத்தில் நடக்க வேண்டியது நடந்து முடிந்தது.141

அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன்மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன்.

நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின்தோள்களுக்கிடையிóருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடிவந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலைமீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முசைóமா.)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(முசைலிமா கொல்லப்பட்டபோது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்துகொண்டு, “அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்” என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.

அத்தியாயம் : 64
4073. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ فَعَلُوا بِنَبِيِّهِ ـ يُشِيرُ إِلَى رَبَاعِيَتِهِ ـ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى رَجُلٍ يَقْتُلُهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 25 உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142
4073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உஹுத் போரில் உடைக்கப்பட்ட) தமது (முன்வாய்ப் பற்களில், கீழ் வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி143 “நபியை (இப்படிச்) செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது” என்று கூறினார்கள். (மேலும்,) “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் எவனைக் கொன்றுவிடுவார்களோ அவன்மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது” என்று கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4074. حَدَّثَنِي مَخْلَدُ بْنُ مَالِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ قَتَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَبِيلِ اللَّهِ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ دَمَّوْا وَجْهَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 25 உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142
4074. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் பாதையில் நபி (ஸல்) அவர்கள் எவனைக் கொன்று விட்டார் களோ அவன்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. (மேலும்,) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவர்கள்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது.144


அத்தியாயம் : 64
4075. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، وَهْوَ يُسْأَلُ عَنْ جُرْحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَمَا وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مَنْ كَانَ يَغْسِلُ جُرْحَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ كَانَ يَسْكُبُ الْمَاءَ وَبِمَا دُووِيَ ـ قَالَ كَانَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَغْسِلُهُ وَعَلِيٌّ يَسْكُبُ الْمَاءَ بِالْمِجَنِّ، فَلَمَّا رَأَتْ فَاطِمَةُ أَنَّ الْمَاءَ لاَ يَزِيدُ الدَّمَ إِلاَّ كَثْرَةً أَخَذَتْ قِطْعَةً مِنْ حَصِيرٍ، فَأَحْرَقَتْهَا وَأَلْصَقَتْهَا فَاسْتَمْسَكَ الدَّمُ، وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَئِذٍ، وَجُرِحَ وَجْهُهُ، وَكُسِرَتِ الْبَيْضَةُ عَلَى رَأْسِهِ.
பாடம் : 25 உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142
4075. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுத் போரின்போது) ஏற்பட்ட காயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவிவிட்டவரையும், (கழுவு வதற்காகத்) தண்ணீரை ஊற்றிவிட்டுக் கொண்டிருந்தவரையும், சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு விளக்கிச்) சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்தக் காயத்தைக் கழுவி விட்டுக்கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் (தண்ணீர் நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்டபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாயின் ஒரு பகுதியை எடுத்துவந்து (சாம்பலாகும்வரை) அதைக் கரித்து, அதைக் காயத்தின் மீது அழுத்திவைத்தார்கள். இரத்தம் (வருவது) நின்றுவிட்டது.

அன்றைய (உஹுத் போர்) தினத்தில் நபி (ஸல்) அவர்களின் கீழ்ப்பல் உடைக்கப் பட்டது. மேலும், அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. மேலும், (அவர்களது) தலைக் கவசம் அவர்களுடைய தலையின் மீதே வைத்து நொறுக்கப்பட்டது.


அத்தியாயம் : 64
4076. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ قَتَلَهُ نَبِيٌّ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ دَمَّى وَجْهَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 25 உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142
4076. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு நபி எவனைக் கொன்றுவிட்டார்களோ அவன்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவன்மீதும் அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது.

இதை இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.145

அத்தியாயம் : 64
4077. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها {الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ} قَالَتْ لِعُرْوَةَ يَا ابْنَ أُخْتِي كَانَ أَبُوكَ مِنْهُمُ الزُّبَيْرُ وَأَبُو بَكْرٍ، لَمَّا أَصَابَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَصَابَ يَوْمَ أُحُدٍ، وَانْصَرَفَ عَنْهُ الْمُشْرِكُونَ خَافَ أَنْ يَرْجِعُوا قَالَ "" مَنْ يَذْهَبُ فِي إِثْرِهِمْ "". فَانْتَدَبَ مِنْهُمْ سَبْعُونَ رَجُلاً، قَالَ كَانَ فِيهِمْ أَبُو بَكْرٍ وَالزُّبَيْرُ.
பாடம் : 26 (அல்லாஹ் கூறுகின்றான்:) “தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்.” (3:172)
4077. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள். அவர்களில் யார் (அல்லாஹ்வை) அஞ்சி நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு மகத்தான பிரதிபலன் உண்டு.” என்னும் (3:172ஆவது) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் ஓதிவிட்டு என்னிடம், “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! உன் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும் (என் தந்தையும் உன் பாட்டனாருமான) அபூபக்ர் (ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் அடங்குவர்.

உஹுத் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோது இணைவைப்பாளர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்துவிடுவார்களோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) “அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்?” என்று கேட்டார்கள். (உஹுதில் கலந்துகொண்ட) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர்” என்று கூறினார்கள்.

அவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களும் இருந்தனர்.146

அத்தியாயம் : 64
4078. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ مَا نَعْلَمُ حَيًّا مِنْ أَحْيَاءِ الْعَرَبِ أَكْثَرَ شَهِيدًا أَعَزَّ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الأَنْصَارِ. قَالَ قَتَادَةُ وَحَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّهُ قُتِلَ مِنْهُمْ يَوْمَ أُحُدٍ سَبْعُونَ، وَيَوْمَ بِئْرِ مَعُونَةَ سَبْعُونَ، وَيَوْمَ الْيَمَامَةِ سَبْعُونَ، قَالَ وَكَانَ بِئْرُ مَعُونَةَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَيَوْمُ الْيَمَامَةِ عَلَى عَهْدِ أَبِي بَكْرٍ يَوْمَ مُسَيْلِمَةَ الْكَذَّابِ.
பாடம் : 27 உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147 ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4078. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

அன்சாரிகளைவிட, அதிக உயிர்த் தியாகிகள் கொண்ட, மறுமை நாளில் ஒளி மிகுந்த வேறெந்தக் குலத்தாரையும் அரபுக் குலங்களுக்கிடையே நாம் அறியவில்லை.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரில் அன்சாரிகளில் எழுபது பேர் கொல்லப்பட்டனர். “பிஃரு மஊனா' போரின்போது எழுபது பேரும், யமாமா போரின்போது எழுபது பேரும் கொல்லப்பட்டனர்.

அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் “பிஃரு மஊனா' போர் நடந்தது.149 மகாபொய்யன் முசைóமாவின் மீதான யமாமா போர் அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் நடந்தது.150


அத்தியாயம் : 64
4079. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ " أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدٍ، قَدَّمَهُ فِي اللَّحْدِ، وَقَالَ " أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ يَوْمَ الْقِيَامَةِ ". وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ، وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ، وَلَمْ يُغَسَّلُوا.
பாடம் : 27 உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147 ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4079. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரில் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து (கஃபனிட்டு) “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரது உடலை உட்குழியில் முதலில் வைப்பார்கள்.

மேலும், “மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாவேன்” என்று கூறிவிட்டு, அவர்களுடைய இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸா தொழுகை) தொழவுமில்லை; அவர்கள் நீராட்டப்படவுமில்லை.151


அத்தியாயம் : 64
4080. وَقَالَ أَبُو الْوَلِيدِ عَنْ شُعْبَةَ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا، قَالَ لَمَّا قُتِلَ أَبِي جَعَلْتُ أَبْكِي وَأَكْشِفُ الثَّوْبَ عَنْ وَجْهِهِ،، فَجَعَلَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَنْهَوْنِي وَالنَّبِيُّ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ، وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَبْكِيهِ أَوْ مَا تَبْكِيهِ، مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ ".
பாடம் : 27 உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147 ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4080. ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அப்துல்லாஹ் உஹுத் போரில்) கொல்லப்பட்டபோது நான் அழ ஆரம்பித்தேன். மேலும், அவரது முகத்திலிருந்த துணியை விலக்க முனைந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் என்னைத் தடுக்கத் தொடங்கினர். நபி (ஸல்) அவர்கள் (என்னைத்) தடுக்கவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ அழ வேண்டாம்' அல்லது “அவருக்காக நீ ஏன் அழுகின்றாய்?' ஜனாஸா (அந்த இடத்திலிருந்து) தூக்கப்படும்வரை, வானவர்கள் தம் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள்.152


அத்தியாயம் : 64
4081. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ أُرَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" رَأَيْتُ فِي رُؤْيَاىَ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ، فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فَعَادَ أَحْسَنَ مَا كَانَ، فَإِذَا هُوَ مَا جَاءَ بِهِ اللَّهُ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ، وَرَأَيْتُ فِيهَا بَقَرًا وَاللَّهُ خَيْرٌ، فَإِذَا هُمُ الْمُؤْمِنُونَ يَوْمَ أُحُدٍ "".
பாடம் : 27 உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147 ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4081. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்துவிட்டது. உஹுத் போரின் போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு மீண்டுமொரு முறை அதை நான் அசைத்தேன். அது முன்பிருந்ததைவிட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுத் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும், (சிதறி ஓடிய) இறைநம்பிக்கையாளர்கள் (மீண்டும்) ஒன்றுதிரண்டதையும் குறித்தது.

அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை (அவை அறுக்கப்படுவது போல்) கண்டேன். (உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் வழங்கிய தகுதி (அவர்கள் இவ்வுலகில் இருந்த நிலையைவிட அவர்களுக்குச்) சிறந்தது ஆகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் நாளில் கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவை யாகும்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.153


அத்தியாயம் : 64
4082. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ خَبَّابٍ ـ رضى الله عنه ـ قَالَ هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَبْتَغِي وَجْهَ اللَّهِ، فَوَجَبَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَضَى أَوْ ذَهَبَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا، كَانَ مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ، فَلَمْ يَتْرُكْ إِلاَّ نَمِرَةً كُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلاَهُ، وَإِذَا غُطِّيَ بِهَا رِجْلاَهُ خَرَجَ رَأْسُهُ، فَقَالَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" غَطُّوا بِهَا رَأْسَهُ، وَاجْعَلُوا عَلَى رِجْلَيْهِ الإِذْخِرَ "". أَوْ قَالَ "" أَلْقُوا عَلَى رِجْلَيْهِ مِنَ الإِذْخِرِ "". وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهْوَ يَهْدِبُهَا.
பாடம் : 27 உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147 ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4082. கப்பாப் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்குரிய பிரதிபலன் அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்று விட்டனர். அவர்களில் ஒருவர்தான், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். அவரது தலையை நாங்கள் அதன் மூலம் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது.

அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “அவரது தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவர்மீது “இத்கிர்' புல்லையிடுங்கள்- அல்லது அவரது கால்மீது “இத்கிர்' புல்லைப் போடுங்கள்” என்று கூறினார்கள்.

(உஹுத் போரில் கலந்துகொண்ட) எங்களில் வேறுசிலரும் உள்ளனர். அவர்களின் (பிரதிபலன் இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் (இவ்வுலகிலும்) பறித்து (அனுபவித்துக்கொண்டார்கள்.154

அத்தியாயம் : 64
4083. حَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ "".
பாடம் : 28 உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம் எனும் நபிமொழி இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுமைத் (ரலி) அவர்களும், அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.155
4083. அனஸ் (பின் மாலிக்-ரலி) அவர்கள் கூறியதாவது:

“இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கி றோம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.156


அத்தியாயம் : 64
4084. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي حَرَّمْتُ مَا بَيْنَ لاَبَتَيْهَا "".
பாடம் : 28 உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம் எனும் நபிமொழி இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுமைத் (ரலி) அவர்களும், அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.155
4084. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரிலிருந்து நாங்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது) உஹுத் (மலை) நபி (ஸல்) அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அவர்கள், “இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்தார்கள். நான் இரு (கருங்கற்கள் நிறைந்த) மலைகளுக்கிடையிலுள்ள பகுதியை (மதீனாவை)ப் புனிதமானதாக அறிவிக்கிறேன்” என்று கூறினார்கள்.157


அத்தியாயம் : 64
4085. حَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ "" إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ ـ أَوْ مَفَاتِيحَ الأَرْضِ ـ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنِّي أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا "".
பாடம் : 28 உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம் எனும் நபிமொழி இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுமைத் (ரலி) அவர்களும், அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.155
4085. உக்பா பிர் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பருக்கு) வந்து, “நிச்சயமாக, நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், நான் இப்போது (“அல்கவ்ஸர்' எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு “பூமியினுடைய கருவூலங்களின் திறவுகோல்கள்' அல்லது “பூமியின் திறவு கோல்கள்' கொடுக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை; ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டுக்கொண்டு) மோதிக்கொள் வீர்களோ என்றுதான் பயப்படுகின்றேன்” என்று கூறினார்கள்.158

அத்தியாயம் : 64
4086. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سُفْيَانَ الثَّقَفِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ ـ وَهْوَ جَدُّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانَ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ ذُكِرُوا لَحِيٍّ مِنْ هُذَيْلٍ، يُقَالُ لَهُمْ بَنُو لَحْيَانَ، فَتَبِعُوهُمْ بِقَرِيبٍ مِنْ مِائَةِ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى أَتَوْا مَنْزِلاً نَزَلُوهُ فَوَجَدُوا فِيهِ نَوَى تَمْرٍ تَزَوَّدُوهُ مِنَ الْمَدِينَةِ فَقَالُوا هَذَا تَمْرُ يَثْرِبَ. فَتَبِعُوا آثَارَهُمْ حَتَّى لَحِقُوهُمْ، فَلَمَّا انْتَهَى عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى فَدْفَدٍ، وَجَاءَ الْقَوْمُ فَأَحَاطُوا بِهِمْ، فَقَالُوا لَكُمُ الْعَهْدُ وَالْمِيثَاقُ إِنْ نَزَلْتُمْ إِلَيْنَا أَنْ لاَ نَقْتُلَ مِنْكُمْ رَجُلاً. فَقَالَ عَاصِمٌ أَمَّا أَنَا فَلاَ أَنْزِلُ فِي ذِمَّةِ كَافِرٍ، اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ. فَقَاتَلُوهُمْ حَتَّى قَتَلُوا عَاصِمًا فِي سَبْعَةِ نَفَرٍ بِالنَّبْلِ، وَبَقِيَ خُبَيْبٌ، وَزَيْدٌ وَرَجُلٌ آخَرُ، فَأَعْطَوْهُمُ الْعَهْدَ وَالْمِيثَاقَ، فَلَمَّا أَعْطَوْهُمُ الْعَهْدَ وَالْمِيثَاقَ نَزَلُوا إِلَيْهِمْ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ حَلُّوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَرَبَطُوهُمْ بِهَا. فَقَالَ الرَّجُلُ الثَّالِثُ الَّذِي مَعَهُمَا هَذَا أَوَّلُ الْغَدْرِ. فَأَبَى أَنْ يَصْحَبَهُمْ فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ عَلَى أَنْ يَصْحَبَهُمْ، فَلَمْ يَفْعَلْ، فَقَتَلُوهُ، وَانْطَلَقُوا بِخُبَيْبٍ وَزَيْدٍ حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ، فَاشْتَرَى خُبَيْبًا بَنُو الْحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلٍ، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الْحَارِثَ يَوْمَ بَدْرٍ، فَمَكَثَ عِنْدَهُمْ أَسِيرًا حَتَّى إِذَا أَجْمَعُوا قَتْلَهُ اسْتَعَارَ مُوسَى مِنْ بَعْضِ بَنَاتِ الْحَارِثِ أَسْتَحِدَّ بِهَا فَأَعَارَتْهُ، قَالَتْ فَغَفَلْتُ عَنْ صَبِيٍّ لِي فَدَرَجَ إِلَيْهِ حَتَّى أَتَاهُ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ، فَلَمَّا رَأَيْتُهُ فَزِعْتُ فَزْعَةً عَرَفَ ذَاكَ مِنِّي، وَفِي يَدِهِ الْمُوسَى فَقَالَ أَتَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ مَا كُنْتُ لأَفْعَلَ ذَاكِ إِنْ شَاءَ اللَّهُ. وَكَانَتْ تَقُولُ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، لَقَدْ رَأَيْتُهُ يَأْكُلُ مِنْ قِطْفِ عِنَبٍ، وَمَا بِمَكَّةَ يَوْمَئِذٍ ثَمَرَةٌ، وَإِنَّهُ لَمُوثَقٌ فِي الْحَدِيدِ، وَمَا كَانَ إِلاَّ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ، فَخَرَجُوا بِهِ مِنَ الْحَرَمِ، لِيَقْتُلُوهُ فَقَالَ دَعُونِي أُصَلِّي رَكْعَتَيْنِ. ثُمَّ انْصَرَفَ إِلَيْهِمْ فَقَالَ لَوْلاَ أَنْ تَرَوْا أَنَّ مَا بِي جَزَعٌ مِنَ الْمَوْتِ، لَزِدْتُ. فَكَانَ أَوَّلَ مَنْ سَنَّ الرَّكْعَتَيْنِ عِنْدَ الْقَتْلِ هُوَ، ثُمَّ قَالَ اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا ثُمَّ قَالَ مَا أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا عَلَى أَىِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ ثُمَّ قَامَ إِلَيْهِ عُقْبَةُ بْنُ الْحَارِثِ فَقَتَلَهُ، وَبَعَثَ قُرَيْشٌ إِلَى عَاصِمٍ لِيُؤْتَوْا بِشَىْءٍ مِنْ جَسَدِهِ يَعْرِفُونَهُ، وَكَانَ عَاصِمٌ قَتَلَ عَظِيمًا مِنْ عُظَمَائِهِمْ يَوْمَ بَدْرٍ، فَبَعَثَ اللَّهُ عَلَيْهِ مِثْلَ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رُسُلِهِمْ، فَلَمْ يَقْدِرُوا مِنْهُ عَلَى شَىْءٍ.
பாடம் : 29 ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159 “ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4086. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்றை (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கி னார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (“ஹத்தா' என்ற) இடத்தில் இருந்தபோது “ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள், அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி, உளவுப் படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். உளவுப் படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிóருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது, “இது “யஸ்ரிப்' (மதீனா நகரின்) பேரீச்சம்பழம்” என்று சொல்லிக்கொண்டனர். எனவே, உளவுப் படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் அவர் களை அடைந்தேவிட்டனர். ஆஸிம் (ரலி) அவர்களும், அவர்களுடைய நண்பர்களும் இதை அறிந்தபோது (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எங்களிடம் இறங்கிவந்துவிட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்யமாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்” என்று கூறினர்.

அப்போது ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நான் ஓர் இறைமறுப்பாளரின் (வாக்குறுதியை நம்பி அவரது) பாதுகாப்பில் இறங்கிச் செல்லமாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப் படையினருடன் சண்டையிட்டு ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர்.

இறுதியில் குபைப் (ரலி), ஸைத் (ரலி), மற்றொருவர் மட்டுமே160 எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும் வாக்குறுதியும் (எதிரிகள்) அளித்தனர். அவர்களது உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின்பேரில் இறங்கிவந்தனர்.

அவர்கள் (மூவரும்) தம் கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தம் அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், “இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்” என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார்,எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை.எனவே, அவரை அவர்கள் கொலை செய்துவிட்டனர்.

பிறகு, குபைப் (ரலி) அவர்களையும், ஸைத் பின் அத்தஸினா (ரலி) அவர்களை யும் கொண்டுசென்று மக்காவில் விலைக்கு விற்றுவிட்டனர். ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப் (ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக்கொண்டனர். (ஏனெனில்,) குபைப் (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஆமிரை பத்ர் போரின்போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடம் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதங்கள் முடிந்து) அவரைக் கொல்ல அவர்கள் ஒன்றுதிரளும் (நாள் வரும்)வரையில் கைதியாக இருந்துவந்தார்.

(கொல்லப்படும் நாள் நெருங்கியபோது தம்முடைய மறைவான உறுப்புகளிóருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) அவர்கள் இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள். (அதற்குப்பின் நடந்ததை அப்பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்:

நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக்கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்தபோது பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்துகொண்டார். அவரது கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், “இவனை நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்” என்று கூறினார்.

குபைபைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒருநாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்துச்) சாப்பிட்டுக்கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) “அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு” என்று அந்தப் பெண் கூறிவந்தார்- (அவரைக் கொல்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டுவந்தபோது, “இரண்டு ரக்அத்கள் நான் தொழுதுகொள்ள என்னை விடுங்கள்” என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் (ரலி) இரண்டு ரக்அத்கள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, “நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்” என்று கூறினார்.

அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் ஆவார். பிறகு, “இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக்(கொண்டு, தனித் தனியாக இவர்களைக் கவனித்துக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.

அதன் பிறகு,

நான்முஸ்óமாகக் கொல்லப்படுகையில்எதைப் பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லை.

எந்த இடத்தில்நான் இறந்தாலும்இறைவனுக்காகக்கொல்லப்படுகிறேன் (என்பதில் மகிழ்ச்சியே)!

நான் கொல்லப்படுவதுஇறையன்புக்காக எனும்போது,அவன் நாடினால்துண்டிக்கப்பட்டஎன் உறுப்புகளின்இணைப்புகள்மீதுகூடவளம் வழங்குவான்

என்று (கவியாகக்) கூறினார்கள். பிறகு, உக்பா பின் அல்ஹாரிஸ் என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான்.

மேலும், (ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷியருக்குக் கிடைத்தபோது) அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்வதற்காக அவரது உடலில் ஓர் உறுப்பை எடுத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ர் போரின்போது அவர்களின் தலைவர்களில் ஒருவரைக் கொலை செய்திருந்தார். (அவரது உடலின் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட அவர்கள் போனபோது) ஆஸிம் (ரலி) அவர்களுக்குமேல் (அன்னாரைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷியரின் தூதர்களிடமிருந்து ஆஸிம் (ரலி) அவர்களை (சூழ்ந்துகொண்டு) அவை பாதுகாத்தன. ஆகவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை.161


அத்தியாயம் : 64
4087. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، يَقُولُ الَّذِي قَتَلَ خُبَيْبًا هُوَ أَبُو سِرْوَعَةَ.
பாடம் : 29 ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159 “ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4087. ஜாபிர் (பின் அப்தில்லாஹ் -ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூசிர்வஆ (உக்பா பின் அல்ஹாரிஸ்) என்பவனே குபைப் (ரலி) அவர்களைக் கொன்றான்.


அத்தியாயம் : 64
4088. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبْعِينَ رَجُلاً لِحَاجَةٍ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ، فَعَرَضَ لَهُمْ حَيَّانِ مِنْ بَنِي سُلَيْمٍ رِعْلٌ وَذَكْوَانُ، عِنْدَ بِئْرٍ يُقَالُ لَهَا بِئْرُ مَعُونَةَ، فَقَالَ الْقَوْمُ وَاللَّهِ مَا إِيَّاكُمْ أَرَدْنَا، إِنَّمَا نَحْنُ مُجْتَازُونَ فِي حَاجَةٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَتَلُوهُمْ فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِمْ شَهْرًا فِي صَلاَةِ الْغَدَاةِ، وَذَلِكَ بَدْءُ الْقُنُوتِ وَمَا كُنَّا نَقْنُتُ. قَالَ عَبْدُ الْعَزِيزِ وَسَأَلَ رَجُلٌ أَنَسًا عَنِ الْقُنُوتِ أَبَعْدَ الرُّكُوعِ، أَوْ عِنْدَ فَرَاغٍ مِنَ الْقِرَاءَةِ قَالَ لاَ بَلْ عِنْدَ فَرَاغٍ مِنَ الْقِرَاءَةِ.
பாடம் : 29 ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159 “ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4088. அனஸ் (பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எழுபது பேரை ஒரு தேவைக்காக அனுப்பிவைத்தார்கள். -அவர்கள் “குர்ராஉ' (குர்ஆனை நன்கறிந்த வர்கள்) என்று அழைக்கப்பட்டனர்- அப்போது பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த ரிஅல் மற்றும் தக்வான் ஆகிய இரு கூட்டத்தார், “பிஃரு மஊனா' என்றழைக்கப்படும் ஒரு கிணற்றுக்கு அருகில் அவர்களை இடைமறித்தனர்.

அப்போது அந்த நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்க ளிடம் போரிடுவதற்காக) உங்களை நாடி நாங்கள் வரவில்லை. நபி (ஸல்) அவர்களின் ஒரு தேவைக்காகவே நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று கூறினர். ஆயினும், அவர்கள் அந்த நபித்தோழர்களைக் கொன்றுவிட்டனர்.

ஆகவே, அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் அதிகாலைத் தொழுகையில் பிரார்த்தித்தார்கள். இதுவே (தொழுகையில்) “குனூத்' (எனும் சிறப்பு துஆ ஓதுவ)தின் துவக்கமாகும். நாங்கள் அதற்குமுன் “குனூத்' ஓதுபவர்களாக இருக்கவில்லை.162

அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்:

ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், குனூத் குறித்து, “அது ருகூவிற்குப் பின்பா? அல்லது கிராஅத் ஓதி முடித்த பின்பா? (எப்போது அதை ஓத வேண்டும்?)” என்று கேட்டார். அதற்கு, “அல்ல; கிராஅத் ஓதி முடித்த பின்புதான்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 64