3816. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ كَتَبَ إِلَىَّ هِشَامٌ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، هَلَكَتْ قَبْلَ أَنْ يَتَزَوَّجَنِي، لِمَا كُنْتُ أَسْمَعُهُ يَذْكُرُهَا، وَأَمَرَهُ اللَّهُ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ مِنْ قَصَبٍ، وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ فَيُهْدِي فِي خَلاَئِلِهَا مِنْهَا مَا يَسَعُهُنَّ.
பாடம் : 20 கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்ட தும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்50
3816. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் (தன்மான உணர்வால்) ரோஷம் கொண்ட தைப் போன்று நபி (ஸல்) அவர்களின் (இதர) மனைவிமார்களில் வேறெவரின் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் கேட்டுவந்தேன். - என்னை நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்துகொள்வதற்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார் - மேலும், முத்து மாளிகை ஒன்று (சொர்க்கத் தில்) கதீஜாவுக்குக் கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டான்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில்) சிறிதளவை கதீஜா (ரலி) அவர்களின் தோழியரிடையே அவர்களுக்குப் போதுமான அளவுக்கு அன்பளிப்பாகப் பங்கிட்டுவிடுவது வழக்கம். (இதனாலெல்லாம் எனக்குள் ரோஷம் பிறந்தது.)


அத்தியாயம் : 63
3817. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، مِنْ كَثْرَةِ ذِكْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِيَّاهَا. قَالَتْ وَتَزَوَّجَنِي بَعْدَهَا بِثَلاَثِ سِنِينَ، وَأَمَرَهُ رَبُّهُ عَزَّ وَجَلَّ أَوْ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ.
பாடம் : 20 கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்ட தும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்50
3817. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போன்று வேறெந்தப் பெண்ணின் மீதும் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (பாராட்டிப் பேசி)வந்தார்கள். கதீஜா அவர்கள் இறந்து மூன்றாண்டுகள் கழித்து நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள்.

கதீஜா (ரலி) அவர்களுக்கு சொர்க்கத் தில் முத்து மாளிகை ஒன்று கொடுக்கப்படும் என்று அவர்களுக்கு நற்செய்தி கூறும்படி நபியவர்களுக்கு அவர்களின் “இறைவன் கட்டளையிட்டான்' அல்லது “(இவ்வாறு நற்செய்தி சொல்லும்படி இறைவன் கட்டளையிட்டதை) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னார்கள்'.


அத்தியாயம் : 63
3818. حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ حَسَنٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَفْصٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَمَا رَأَيْتُهَا، وَلَكِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُكْثِرُ ذِكْرَهَا، وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ، ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً، ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ، فَرُبَّمَا قُلْتُ لَهُ كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلاَّ خَدِيجَةُ. فَيَقُولُ إِنَّهَا كَانَتْ وَكَانَتْ، وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ.
பாடம் : 20 கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்ட தும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்50
3818. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போன்று நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்த தில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவுகூர்ந்து (பாராட்டிப் பேசி)வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழியரிடையே (பங்கிட்டு) அனுப்பிவிடுவார்கள்.

சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், “உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போன்று நடந்துகொள்கிறீர்களே” என்று கேட்டது உண்டு. அப்போது அவர்கள், “அவர் இவ்வாறு இவ்வாறு (நற்குணமும் புத்திசாலித்தனமும் கொண்டவராக) இருந்தார். மேலும், எனக்கு அவர் வாயிலாகத் தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது” என்று பதில் சொன்னார்கள்.52


அத்தியாயம் : 63
3819. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ بَشَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَدِيجَةَ قَالَ نَعَمْ بِبَيْتٍ مِنْ قَصَبٍ، لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ.
பாடம் : 20 கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்ட தும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்50
3819. இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் சொன்னார்களா?” என்று நான் கேட்டேன். அவர்கள், “ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி சொன்னார்கள்)” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 63
3820. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا وَمِنِّي، وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ، لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ.
பாடம் : 20 கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்ட தும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்50
3820. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் “குழம்பு' அல்லது “உணவு' அல்லது”பானம்' எடுத்துக்கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்குச் சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காண முடியாத, முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 63
3821. وَقَالَ إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَتْ هَالَةُ بِنْتُ خُوَيْلِدٍ أُخْتُ خَدِيجَةَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَعَرَفَ اسْتِئْذَانَ خَدِيجَةَ فَارْتَاعَ لِذَلِكَ، فَقَالَ "" اللَّهُمَّ هَالَةَ "". قَالَتْ فَغِرْتُ فَقُلْتُ مَا تَذْكُرُ مِنْ عَجُوزٍ مِنْ عَجَائِزِ قُرَيْشٍ، حَمْرَاءِ الشِّدْقَيْنِ، هَلَكَتْ فِي الدَّهْرِ، قَدْ، أَبْدَلَكَ اللَّهُ خَيْرًا مِنْهَا
பாடம் : 20 கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்ட தும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்50
3821. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இல்லத்துக்குள்) வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா (ரலி) அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, “இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்” என்று சொன் னார்கள்.

உடனே நான் ரோஷமடைந்து, “எப்போதோ மரணமடைந்துவிட்ட, தாடை கள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக்கொண்டி ருக்கிறீர்கள்)” என்று கேட்டேன்.53

அத்தியாயம் : 63
3822. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ قَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ ضَحِكَ.
பாடம் : 21 ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு54
3822. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து (நான் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; சிரித்த முகத்துடன் தவிர அவர்கள் என்னைக் கண்டதில்லை.

இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 63
3823. وَعَنْ قَيْسٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ فِي الْجَاهِلِيَّةِ بَيْتٌ يُقَالَ لَهُ ذُو الْخَلَصَةِ، وَكَانَ يُقَالُ لَهُ الْكَعْبَةُ الْيَمَانِيَةُ، أَوِ الْكَعْبَةُ الشَّأْمِيَّةُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَلْ أَنْتَ مُرِيحِي مِنْ ذِي الْخَلَصَةِ "". قَالَ فَنَفَرْتُ إِلَيْهِ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ ـ قَالَ ـ فَكَسَرْنَا، وَقَتَلْنَا مَنْ وَجَدْنَا عِنْدَهُ، فَأَتَيْنَاهُ، فَأَخْبَرْنَاهُ، فَدَعَا لَنَا وَلأَحْمَسَ.
பாடம் : 21 ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு54
3823. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் “துல்கலஸா'55 எனும் ஆலயம் ஒன்று இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' அல்லது “ஷாம் நாட்டு கஅபா'56 என்று அழைக்கப்பட்டு வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீ விடுவித்து விடுவாயா?” என்று கேட்டார்கள்.

ஆகவே நான் “அஹ்மஸ்' எனும் (என்) குலத்தாரிலிருந்து நூற்று ஐம்பது குதிரை வீரர்களுடன் அதை நோக்கிப் புறப்பட்டேன். அதை நாங்கள் உடைத்துவிட்டோம். அதனருகே இருந்த (பகை)வர்களை நாங்கள் கொன்றுவிட்டோம்.57

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தோம். அப்போது, நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காகவும் “அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.58

அத்தியாயம் : 63
3824. حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ هَزِيمَةً بَيِّنَةً، فَصَاحَ إِبْلِيسُ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ عَلَى أُخْرَاهُمْ، فَاجْتَلَدَتْ أُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ، فَإِذَا هُوَ بِأَبِيهِ فَنَادَى أَىْ عِبَادَ اللَّهِ، أَبِي أَبِي. فَقَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ، فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ. قَالَ أَبِي فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهَا بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ.
பாடம் : 22 ஹுதைஃபா பின் அல்யமான் அல்அப்சீ (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு59
3824. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

உஹுத் போரின் (ஆரம்பத்தின்) போது இணைவைப்பாளர்கள் அப்பட்ட மாகத் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன்அணியினர் (எதிரிகள் என்றெண்ணி), பின்அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின் அணியின ருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர்.

அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார். ஆகவே, “அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று உரக்கக் கூவினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அவர்களுடைய வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது” என்று என் தந்தை (உர்வா (ரஹ்) அவர்கள்) கூறுகிறார்கள்.60

அத்தியாயம் : 63
3825. وَقَالَ عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، مَا كَانَ عَلَى ظَهْرِ الأَرْضِ مِنْ أَهْلِ خِبَاءٍ أَحَبُّ إِلَىَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ، ثُمَّ مَا أَصْبَحَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ خِبَاءٍ أَحَبَّ إِلَىَّ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ. قَالَ وَأَيْضًا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَىَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا قَالَ "" لاَ أُرَاهُ إِلاَّ بِالْمَعْرُوفِ "".
பாடம் : 23 ஹின்த் பின்த் உத்பா பின் ரபீஆ (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு61
3825. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, “அல்லாஹ் வின் தூதரே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்தபொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட) பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும்விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது” என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “என் உயிரைக் தன் கையில் வைத்திருப்பவன்மீது சத்தியமாக! (இந்த உனது விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று பதிலளித்தார்கள்.

ஹின்த் பின்த் உத்பா, “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் மிகவும் கையிருக்கமான மனிதர். ஆகவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நியாயமான அளவுக்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 63
3826. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَقِيَ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ بِأَسْفَلِ بَلْدَحَ، قَبْلَ أَنْ يَنْزِلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الْوَحْىُ فَقُدِّمَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سُفْرَةٌ، فَأَبَى أَنْ يَأْكُلَ مِنْهَا ثُمَّ قَالَ زَيْدٌ إِنِّي لَسْتُ آكُلُ مِمَّا تَذْبَحُونَ عَلَى أَنْصَابِكُمْ، وَلاَ آكُلُ إِلاَّ مَا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ. وَأَنَّ زَيْدَ بْنَ عَمْرٍو كَانَ يَعِيبُ عَلَى قُرَيْشٍ ذَبَائِحَهُمْ، وَيَقُولُ الشَّاةُ خَلَقَهَا اللَّهُ، وَأَنْزَلَ لَهَا مِنَ السَّمَاءِ الْمَاءَ، وَأَنْبَتَ لَهَا مِنَ الأَرْضِ، ثُمَّ تَذْبَحُونَهَا عَلَى غَيْرِ اسْمِ اللَّهِ إِنْكَارًا لِذَلِكَ وَإِعْظَامًا لَهُ.
பாடம் : 24 ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைப் பற்றிய செய்தி62
3826. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தமக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுவதற்கு முன்பு கீழ் “பல்தஹில்'63 ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (குறைஷியரின்) பயண உணவு ஒன்று நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டது. அந்த உணவை ஸைத் பின் அம்ர் உண்ண மறுத்துவிட்டார்.

பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷியரிடம்), “நீங்கள் உங்கள் (சிலைகளுக்குப் பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ணமாட்டேன். (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் எதன்மீது கூறப் பட்டதோ அதைத் தவிர வேறெதையும் உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள்.

ஸைத் பின் அம்ர் அவர்கள், குறைஷி யரால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்ட வற்றைக் குறைகூறிவந்தார்கள். மேலும், “ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக வானத்திலிருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக பூமியிலிருந்து (புற்பூண்டுகளை) முளைக்கச்செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ் வின் பெயரல்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்களின்) பெயர் சொல்லி அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட் கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரை கண்ணியப் படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர் கள்” என்று கூறிவந்தார்கள்.


அத்தியாயம் : 63
3827. قَالَ مُوسَى حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، وَلاَ أَعْلَمُهُ إِلاَّ تُحُدِّثَ بِهِ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ خَرَجَ إِلَى الشَّأْمِ، يَسْأَلُ عَنِ الدِّينِ وَيَتْبَعُهُ فَلَقِيَ عَالِمًا مِنَ الْيَهُودِ، فَسَأَلَهُ عَنْ دِينِهِمْ، فَقَالَ إِنِّي لَعَلِّي أَنْ أَدِينَ دِينَكُمْ، فَأَخْبِرْنِي. فَقَالَ لاَ تَكُونُ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ غَضَبِ اللَّهِ. قَالَ زَيْدٌ مَا أَفِرُّ إِلاَّ مِنْ غَضَبِ اللَّهِ، وَلاَ أَحْمِلُ مِنْ غَضَبِ اللَّهِ شَيْئًا أَبَدًا، وَأَنَّى أَسْتَطِيعُهُ فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ قَالَ مَا أَعْلَمُهُ إِلاَّ أَنْ يَكُونَ حَنِيفًا. قَالَ زَيْدٌ وَمَا الْحَنِيفُ قَالَ دِينُ إِبْرَاهِيمَ لَمْ يَكُنْ يَهُودِيًّا وَلاَ نَصْرَانِيًّا وَلاَ يَعْبُدُ إِلاَّ اللَّهَ. فَخَرَجَ زَيْدٌ فَلَقِيَ عَالِمًا مِنَ النَّصَارَى، فَذَكَرَ مِثْلَهُ، فَقَالَ لَنْ تَكُونَ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ لَعْنَةِ اللَّهِ. قَالَ مَا أَفِرُّ إِلاَّ مِنْ لَعْنَةِ اللَّهِ، وَلاَ أَحْمِلُ مِنْ لَعْنَةِ اللَّهِ وَلاَ مِنْ غَضَبِهِ شَيْئًا أَبَدًا، وَأَنَّى أَسْتَطِيعُ فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ قَالَ مَا أَعْلَمُهُ إِلاَّ أَنْ يَكُونَ حَنِيفًا. قَالَ وَمَا الْحَنِيفُ قَالَ دِينُ إِبْرَاهِيمَ لَمْ يَكُنْ يَهُودِيًّا وَلاَ نَصْرَانِيًّا وَلاَ يَعْبُدُ إِلاَّ اللَّهَ. فَلَمَّا رَأَى زَيْدٌ قَوْلَهُمْ فِي إِبْرَاهِيمَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ خَرَجَ، فَلَمَّا بَرَزَ رَفَعَ يَدَيْهِ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَشْهَدُ أَنِّي عَلَى دِينِ إِبْرَاهِيمَ.
பாடம் : 24 ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைப் பற்றிய செய்தி62
3827. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல், (நபித்துவக் காலத்திற்கு முன்பு) ஏகத்துவ மார்க்கத்தைப் பற்றி விசாரித்துப் பின்பற்றுவதற்காக ஷாம் (சிரியா) நாட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது யூத அறிஞர் ஒருவரைச் சந்தித்து யூதர்களின் மார்க்கத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தார்.

அந்த அறிஞரிடம், “நான் உங்கள் மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றக்கூடும். ஆகவே, எனக்கு (அதைப் பற்றித்) தெரிவியுங்கள்” என்று சொன்னார். அதற்கு அந்த அறிஞர், “அல்லாஹ்வின் கோபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக்(கொண்டு அதற்காக வேதனையை அனுபவித்துக்)கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது” என்று சொன்னார்.

ஸைத் அவர்கள், “நான் அல்லாஹ்வின் கோபத்திலிருந்துதானே வெருண்டோடி வருகிறேன்! மேலும், அல்லாஹ்வின் கோபத்தில் சிறிதளவைக்கூட ஒருபோதும் நான் தாங்கமாட்டேன். என்னால் எப்படி அதைத் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு அறிவித்துத் தர முடியுமா?” என்று கேட்டார். அந்த அறிஞர், “அது (ஏகத்துவ மார்க்கமான) நேரிய மார்க்கம் (ஹனீஃப்) ஆகத் தவிர வேறொன்றாக இருக்க முடியாது என்பதை நான் நன்கறிவேன்” என்று பதிலளித்தார். ஸைத் அவர்கள், “நேரிய மார்க்கம் என்றால் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு அந்த அறிஞர், “அது இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கம். அவர்கள் யூதராகவும் இருக்கவில்லை. கிறித்தவராகவும் இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வழிபடமாட்டார்கள்” என்று சொன்னார்.

(மீண்டும்) புறப்பட்டுச் சென்று கிறித்தவ அறிஞர் ஒருவரைச் சந்தித்தார். அவரும் யூத அறிஞரைப் போலவே, “அல்லாஹ்வின் (கருணையைவிட்டு அப்புறப்படுத்தப்படும்) சாபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக்கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது” என்று சொன்னார். ஸைத் அவர்கள், “அல்லாஹ்வின் சாபத்திலிருந்துதானே நான் வெருண்டோடி வருகின்றேன். அல்லாஹ்வின் சாபத்திலிருந்தும் அவனது கோபத்திலிருந்தும் சிறிதளவைக்கூட ஒருபோதும் நான் தாங்கமாட்டேன். (அவற்றை) எப்படி என்னால் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு நீங்கள் அறிவித்துத் தருவீர்களா?” என்று கேட்க, அதற்கு அவர், “நேரிய (ஏகத்துவ) மார்க்கமாகத்தான் அது இருக்குமென்பதை நான் நன்கறிவேன்” என்று சொன்னார்.

ஸைத் அவர்கள், “நேரிய மார்க்கம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கம். அவர்கள் யூதராகவோ கிறித்தவராகவோ இருக்கவில்லை. மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வழிபடமாட்டார்கள்” என்று பதிலளித்தார். ஸைத் அவர்கள் அந்த அறிஞர்கள் இப்ராஹீம் (அலை) அவர் களின் மார்க்கத்தைப் பற்றிக் கூறியதைக் கண்டபோது, (அவர்களிடமிருந்து) புறப்பட்டு வெளியே வந்ததும் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! நான் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய (ஏகத்துவ) மார்க்கத்தில் உள்ளேன் என்று உறுதிகூறுகிறேன்” எனச் சொன்னார்.


அத்தியாயம் : 63
3828. وَقَالَ اللَّيْثُ كَتَبَ إِلَىَّ هِشَامٌ عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ رَأَيْتُ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ قَائِمًا مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْكَعْبَةِ يَقُولُ يَا مَعَاشِرَ قُرَيْشٍ، وَاللَّهِ مَا مِنْكُمْ عَلَى دِينِ إِبْرَاهِيمَ غَيْرِي، وَكَانَ يُحْيِي الْمَوْءُودَةَ، يَقُولُ لِلرَّجُلِ إِذَا أَرَادَ أَنْ يَقْتُلَ ابْنَتَهُ لاَ تَقْتُلْهَا، أَنَا أَكْفِيكَهَا مَئُونَتَهَا. فَيَأْخُذُهَا فَإِذَا تَرَعْرَعَتْ قَالَ لأَبِيهَا إِنْ شِئْتَ دَفَعْتُهَا إِلَيْكَ، وَإِنْ شِئْتَ كَفَيْتُكَ مَئُونَتَهَا.
பாடம் : 24 ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைப் பற்றிய செய்தி62
3828. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவக் காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, “குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் படி நடக்கவில்லை” என்று சொல்லிக் கொண்டி ருந்ததை நான் பார்த்தேன்.

மேலும், அவர், உயிரோடு புதைக்கப் படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்துவந்தார். எவரேனும் தம் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், “அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக்கொள்வார்.

அவள் வளர்ந்ததும் அவளுடைய தந்தையிடம் (சென்று), “நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்துவிடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க்கொள்கிறேன்” என்று சொல்வார்.

அத்தியாயம் : 63
3829. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا بُنِيَتِ الْكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الْحِجَارَةَ، فَقَالَ عَبَّاسٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ يَقِيكَ مِنَ الْحِجَارَةِ، فَخَرَّ إِلَى الأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ ثُمَّ أَفَاقَ فَقَالَ "" إِزَارِي إِزَارِي "". فَشَدَّ عَلَيْهِ إِزَارَهُ.
பாடம் : 25 கஅபாவைக் கட்டுதல்64
3829. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியவர்களின் காலத்தில் குறைஷி யரால்) கஅபா (புதுப்பித்துக்) கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (சிறுவரான) நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் கீழங்கியை (அவிழ்த்து) உங்கள் பிடரிக்குமேல் வைத்துக்கொள்ளுங்கள். கல்லி(ன் சுமையால் ஏற்படும் வலியி)லிருந்து அது உங்களைக் காக்கும்” என்று சொன்னார்கள்.

(நபி (ஸல்) அவர்கள் அப்படிச் செய்ய முனைந்தபோது) அவர்கள் பூமியில் (மூர்ச்சையாகி) விழுந்துவிட்டார்கள். அவர்களுடைய இரு கண்களும் வானத்தை நோக்கியபடி நிலைகுத்தி நின்றுவிட்டன.

பிறகு மூர்ச்சை தெளிந்ததும், “என் கீழங்கி, என் கீழங்கி” என்று கேட்கலானார்கள். (கீழங்கி தரப்பட்ட) உடனே அதை இறுக்கமாகக் கட்டிக்கொண்டார்கள்.65


அத்தியாயம் : 63
3830. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالاَ لَمْ يَكُنْ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَوْلَ الْبَيْتِ حَائِطٌ، كَانُوا يُصَلُّونَ حَوْلَ الْبَيْتِ، حَتَّى كَانَ عُمَرُ، فَبَنَى حَوْلَهُ حَائِطًا ـ قَالَ عُبَيْدُ اللَّهِ ـ جَدْرُهُ قَصِيرٌ، فَبَنَاهُ ابْنُ الزُّبَيْرِ.
பாடம் : 25 கஅபாவைக் கட்டுதல்64
3830. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களும் உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் (இறையில்லமான) பைத்துல் ஹராமைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இருந்ததில்லை.66 மக்கள் இறையில்லத்தைச் சுற்றிலும் தொழுதுவந்தார்கள். உமர் (ரலி) அவர் களுடைய ஆட்சிக் காலம் வந்தபோது அதைச் சுற்றிலும் சுறறுச் சுவர் கட்டி னார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், “அந்தச் சுவர் குட்டையாக இருந்தது. பிறகு அதை (அப்துல்லாஹ்) இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (உயர்த்திக்) கட்டினார்கள்” என்று கூறுகி றார்கள்.

அத்தியாயம் : 63
3831. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، قَالَ هِشَامٌ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ عَاشُورَاءُ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لاَ يَصُومُهُ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3831. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் என்பது அறியாமைக் காலத்தில் குறைஷி யர் நோன்பு நோற்கின்ற நாளாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்கும்படி (முஸ்லிம் களுக்கு) உத்தரவுமிட்டார்கள்.

ரமளான் (நோன்பின் கட்டளை) வந்தபோது68 ஆஷூரா தினம், விரும்பி யவர்கள் நோன்பு நோற்கவும் செய்யலாம்; விரும்பாதவர்கள் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது.69


அத்தியாயம் : 63
3832. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنَ الْفُجُورِ فِي الأَرْضِ، وَكَانُوا يُسَمُّونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا بَرَا الدَّبَرْ، وَعَفَا الأَثَرْ، حَلَّتِ الْعُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ. قَالَ فَقَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ رَابِعَةً مُهِلِّينَ بِالْحَجِّ وَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً. قَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَىُّ الْحِلِّ قَالَ "" الْحِلُّ كُلُّهُ "".
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3832. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்; அம்மாதங் களில்) உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று' என (அறியாமைக் கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போரிடுவது தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு “முஹர்ரம்' என்று பெயர் சூட்டிவந்தார்கள்.

“(ஹஜ் பயணத்துக்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்) வடு மறைந்து காலடித்தடங்கள் அழிந்து ஸஃபர் மாதம் கழிந்தால் உம்ரா செய்யலாம்; உம்ரா செய்பவர்” என்று கூறிவந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹிஜ்ஜா மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டளை யிட்டார்கள்.

அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிóருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு, “(இஹ்ராம் கட்டிய வருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்”70 என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 63
3833. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ كَانَ عَمْرٌو يَقُولُ حَدَّثَنَا سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ سَيْلٌ فِي الْجَاهِلِيَّةِ فَكَسَا مَا بَيْنَ الْجَبَلَيْنِ. قَالَ سُفْيَانُ وَيَقُولُ إِنَّ هَذَا لَحَدِيثٌ لَهُ شَأْنٌ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3833. ஹஸ்ன் பின் அபீவஹ்ப் அல் முஹாஜிரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஸ்லாத்திற்கு முந்தைய) அறியா மைக் காலத்தில் (ஒருமுறை) பெருவெள்ளம் ஒன்று (பெருக்கெடுத்து) வந்து (மக்காவின்) இரு மலைகளையும் மூடிக்கொண்டது.

இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் தம் தந்தை முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக் கிறார்கள்.

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“இது பெரியதொரு நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்பாகும்” என்று அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.71


அத்தியாயம் : 63
3834. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بَيَانٍ أَبِي بِشْرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ، فَرَآهَا لاَ تَكَلَّمُ، فَقَالَ مَا لَهَا لاَ تَكَلَّمُ قَالُوا حَجَّتْ مُصْمِتَةً. قَالَ لَهَا تَكَلَّمِي، فَإِنَّ هَذَا لاَ يَحِلُّ، هَذَا مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ. فَتَكَلَّمَتْ، فَقَالَتْ مَنْ أَنْتَ قَالَ امْرُؤٌ مِنَ الْمُهَاجِرِينَ. قَالَتْ أَىُّ الْمُهَاجِرِينَ قَالَ مِنْ قُرَيْشٍ. قَالَتْ مِنْ أَىِّ قُرَيْشٍ أَنْتَ قَالَ إِنَّكِ لَسَئُولٌ أَنَا أَبُو بَكْرٍ. قَالَتْ مَا بَقَاؤُنَا عَلَى هَذَا الأَمْرِ الصَّالِحِ الَّذِي جَاءَ اللَّهُ بِهِ بَعْدَ الْجَاهِلِيَّةِ قَالَ بَقَاؤُكُمْ عَلَيْهِ مَا اسْتَقَامَتْ بِكُمْ أَئِمَّتُكُمْ. قَالَتْ وَمَا الأَئِمَّةُ قَالَ أَمَا كَانَ لِقَوْمِكِ رُءُوسٌ وَأَشْرَافٌ يَأْمُرُونَهُمْ فَيُطِيعُونَهُمْ قَالَتْ بَلَى. قَالَ فَهُمْ أُولَئِكَ عَلَى النَّاسِ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3834. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் “ஸைனப்' என்றழைக்கப்படும் “அஹ்மஸ்' குலத்துப் பெண்ணொருத்தியிடம் (அவளது இல்லத்துக்குச்) சென்றார்கள். அவளை (மௌன விரதம் பூண்டு) பேசாமலிருப்பவளாகக் கண்டார்கள். உடனே, “இவளுக்கென்ன ஆயிற்று? ஏன் பேசாமலிருக்கிறாள்?” என்று கேட்டார்கள். மக்கள், “(இவள் ஹஜ் செய்யும்வரை) எவருடனும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளிடம், “நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மௌனவிரதம் பூணுவ)து அனுமதிக்கப் பட்ட செயலன்று; இது அறியாமைக் காலச் செயலாகும்” என்று சொன்னார்கள்.

ஆகவே, அவள் (மௌன விரதத்தைக் கலைத்துப்) பேசினாள். “நீங்கள் யார்?” என்று கேட்டாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “முஹாஜிர்களில் ஒருவன்” என்று பதிலளித் தார்கள். அப்பெண், “முஹாஜிர்களில் நீங்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவன்” என்று பதிலளித்தார்கள். அப்பெண், “குறைஷி யரில் நீங்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீ அதிகமாகக் கேள்வி கேட்கிறாயே? நான்தான் அபூபக்ர்” என்று பதிலளித்தார்கள்.

அப்பெண், “அறியாமைக் காலத்திற் குப் பிறகு எங்களிடம் வந்த இந்த (இஸ்லாம் எனும்) நல்ல நிலையில் நாங்கள் நீடித்து நிலைத்திருக்க வழி யாது?” என்று கேட்டாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “உங்கள் தலைவர்கள் உங்களைச் சீராக நிர்வகித்து வரும்வரை அதில் நீங்கள் நீடித்து நிலைத்திருப்பீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

அந்தப் பெண், “அந்தத் தலைவர்கள் யார்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “உங்கள் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடவும், அதற்கு அவர்கள் கீழ்ப்படியவும் செய்கின்ற தலைவர்களும் முக்கியஸ்தர்களும் உங்களுக்கு இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், “ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளித்தாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்கள்தான் மக்களின் தலைவர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 63
3835. حَدَّثَنِي فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَسْلَمَتِ امْرَأَةٌ سَوْدَاءُ لِبَعْضِ الْعَرَبِ، وَكَانَ لَهَا حِفْشٌ فِي الْمَسْجِدِ قَالَتْ فَكَانَتْ تَأْتِينَا فَتَحَدَّثُ عِنْدَنَا فَإِذَا فَرَغَتْ مِنْ حَدِيثِهَا قَالَتْ وَيَوْمُ الْوِشَاحِ مِنْ تَعَاجِيبِ رَبِّنَا أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي فَلَمَّا أَكْثَرَتْ قَالَتْ لَهَا عَائِشَةُ وَمَا يَوْمُ الْوِشَاحِ قَالَتْ خَرَجَتْ جُوَيْرِيَةٌ لِبَعْضِ أَهْلِي، وَعَلَيْهَا وِشَاحٌ مِنْ أَدَمٍ فَسَقَطَ مِنْهَا، فَانْحَطَّتْ عَلَيْهِ الْحُدَيَّا وَهْىَ تَحْسِبُهُ لَحْمًا، فَأَخَذَتْ فَاتَّهَمُونِي بِهِ فَعَذَّبُونِي، حَتَّى بَلَغَ مِنْ أَمْرِي أَنَّهُمْ طَلَبُوا فِي قُبُلِي، فَبَيْنَا هُمْ حَوْلِي وَأَنَا فِي كَرْبِي إِذْ أَقْبَلَتِ الْحُدَيَّا حَتَّى وَازَتْ بِرُءُوسِنَا ثُمَّ أَلْقَتْهُ، فَأَخَذُوهُ فَقُلْتُ لَهُمْ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3835. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அரபுக் கோத்திரத்திற்குச் சொந்த மான கறுப்பு (நிற அடிமைப்) பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாள். அவளுக்குப் பள்ளிவாசலில் சிறிய (தங்கும்) அறையொன்று இருந்தது. அவள் எங்களிடம் வந்து பேசிக்கொண்டி ருப்பாள்.

அவள் பேசி முடிக்கும்போது, “அரை யணித் தோள்பட்டிகை72 (காணாமற் போன) நாள் எம் இறைவனின் விந்தை களில் ஒன்றாகும். அந்த நாள் இறைமறுப்பு (மேலோங்கி) இருந்த ஊரிலிருந்து என்னை (வெளியேற்றிக்) காப்பாற்றிவிட்டது” என்று பாடுவாள். இவ்வாறு அவள் அதிகமாகப் பாடுவதைக் கேட்ட நான், “அரையணித் தோள்பட்டிகை நாள் என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள்:

என் (எஜமானியர்) குடும்பத்தாரில் ஒருவருக்குரிய சிறுமி ஒருத்தி (மணப் பெண்ணாக இருந்ததால்) பதனிடப்பட்ட தோலால் ஆன (சிவப்பு) அரையணித் தோள்பட்டிகை ஒன்றை அணிந்து கொண்டு (குளியலறைக்குச்) சென்றாள். அப்போது அந்தப் பட்டிகை (எதிர்பாராத விதமாக) அவளிடமிருந்து (கழன்று) விழுந்துவிட, அதைப் பருந்து ஒன்று இறைச்சி என்று நினைத்துக் கவ்வி எடுத்துச் சென்றுவிட்டது.

(என் எஜமானர்கள் நான்தான் அதைத் திருடினேன் என்று) என்மீது குற்றம் சாட்டி என்னைச் சித்திரவதை செய்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் என் பிறவி உறுப்பையும் சோதனையிட்டார்கள். அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்க, நான் கடும் வேதனையில் (துடித்தபடி) இருந்தபோது, அந்தப் பருந்து எங்கள் தலைகளுக்கு நேராக வந்து அந்தப் பட்டிகையை(க் கீழே) போட்டது. உடனே அதை அவர்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது நான் அவர்களிடம், “நான் குற்றமற்றவளாயிருக்க, நான் திருடிவிட் டதாக நீங்கள் குற்றம் சாட்டினீர்களே அந்தப் பட்டிகைதான் இது” என்று சொன்னேன்.73


அத்தியாயம் : 63