3836. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَلاَ مَنْ كَانَ حَالِفًا فَلاَ يَحْلِفْ إِلاَّ بِاللَّهِ "". فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا، فَقَالَ "" لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ "".
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3836. இப்னு உமர் (ரலி) அவர்கள் அவர்கள் கூறியதாவது:

“எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர்மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷியர் தம் முன்னோர்கள்மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், “உங்கள் முன்னோர்கள்மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று சொன்னார்கள்.74


அத்தியாயம் : 63
3837. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ أَنَّ الْقَاسِمَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَىِ الْجَنَازَةِ وَلاَ يَقُومُ لَهَا، وَيُخْبِرُ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَقُومُونَ لَهَا، يَقُولُونَ إِذَا رَأَوْهَا كُنْتِ فِي أَهْلِكِ مَا أَنْتِ. مَرَّتَيْنِ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3837. அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) காசிம் (ரஹ்) அவர்கள் ஜனாஸாவுக்கு (பிரேதத்திற்கு) முன்னால் நடந்து செல்வார்கள். அதற்காக எழுந்து நிற்கமாட்டார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இப்படியும் அறிவிப்பார்கள்:

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பதும் அதைக் கண்டால், “(உன் வாழ்நாளில்) நீ எப்படி இருந்தாயோ அப்படியே இப்போதும் இருப்பாய்” என்று இருமுறை கூறுவதும் அறியாமைக் கால மக்களின் வழக்கமாகும்.75


அத்தியாயம் : 63
3838. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ مِنْ جَمْعٍ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ عَلَى ثَبِيرٍ، فَخَالَفَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3838. உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(ஹஜ்ஜின்போது) “ஸபீர்' மலைமீது சூரியன் ஒளிராதவரை, இணைவைப்பாளர் கள் முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மாறு செய்து சூரியன் உதிக்கும் முன்பாகப் புறப்பட்டார்கள்.76


அத்தியாயம் : 63
3839. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ يَحْيَى بْنُ الْمُهَلَّبِ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عِكْرِمَةَ، {وَكَأْسًا دِهَاقًا} قَالَ مَلأَى مُتَتَابِعَةً.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3839. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திருக்குர்ஆனில் (78:34ல்) இடம் பெற்றுள்ள “கஃஸன் திஹாக்கன்' (நிரம் பிய கிண்ணமும்) என்பதற்கு “(தீரத் தீரத்) தொடர்ந்து நிரம்பிக்கொண்டிருக்கக்கூடிய கிண்ணமும் (சொர்க்கத்தில் உண்டு)' என்பது பொருளாகும்.


அத்தியாயம் : 63
3840. قَالَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ سَمِعْتُ أَبِي يَقُولُ، فِي الْجَاهِلِيَّةِ اسْقِنَا كَأْسًا دِهَاقًا.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3840. மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “என் தந்தை (அப்பாஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் அவர்களது) அறியாமைக் காலத்தில் “எங்களுக்குத் தொடர்ந்து நிரம்பும் கிண்ணத்(திலிருப்ப)தை அருந்தச்செய்' என்று (தம் பணியாளரிடம்) கூற நான் கேட்டேன்” எனச் சொன்னார்கள்.


அத்தியாயம் : 63
3841. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ "".
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3841. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கவிஞர்) லபீத் அவர்கள்77 சொன்ன, “இதோ (பாருங்கள்)! அல்லாஹ்வைத் தவிர மற்றப் பொருள்கள் அனைத்துமே அழியக்கூடியவையே” எனும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ்ஸல்த்78 (தம் கவிதை யின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவுக்கு வந்துவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 63
3842. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ لأَبِي بَكْرٍ غُلاَمٌ يُخْرِجُ لَهُ الْخَرَاجَ، وَكَانَ أَبُو بَكْرٍ يَأْكُلُ مِنْ خَرَاجِهِ، فَجَاءَ يَوْمًا بِشَىْءٍ فَأَكَلَ مِنْهُ أَبُو بَكْرٍ فَقَالَ لَهُ الْغُلاَمُ تَدْرِي مَا هَذَا فَقَالَ أَبُو بَكْرٍ وَمَا هُوَ قَالَ كُنْتُ تَكَهَّنْتُ لإِنْسَانٍ فِي الْجَاهِلِيَّةِ وَمَا أُحْسِنُ الْكِهَانَةَ، إِلاَّ أَنِّي خَدَعْتُهُ، فَلَقِيَنِي فَأَعْطَانِي بِذَلِكَ، فَهَذَا الَّذِي أَكَلْتَ مِنْهُ. فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ فَقَاءَ كُلَّ شَىْءٍ فِي بَطْنِهِ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3842. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அடிமை ஒருவன் இருந்தான். அவன் (அடிமை என்ற முறையில் தன் எசமானாகிய) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு(த் தனது சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திவந்தான். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டுவந்தார்கள். ஒருநாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது உண்டார்கள். அப்போது அவர்களி டம் அந்த அடிமை, “இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அபூபக்ர் (ரலி) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார்கள்.

அவன், “நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும், (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்துதான்” என்று சொன்னான்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாந்தி யெடுத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 63
3843. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَتَبَايَعُونَ لُحُومَ الْجَزُورِ إِلَى حَبَلِ الْحَبَلَةِ، قَالَ وَحَبَلُ الْحَبَلَةِ أَنْ تُنْتَجَ النَّاقَةُ مَا فِي بَطْنِهَا، ثُمَّ تَحْمِلَ الَّتِي نُتِجَتْ، فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3843. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் கால மக்கள் ஹபலுல் ஹபலாவுக்காக - கருவிலுள்ள ஒட்டகக் குட்டி பிறந்து அந்தக் குட்டி சுமந்து பெறவிருக்கும் குட்டிக்காக- ஒட்டகத்தின் இறைச்சிகளை விற்றுவந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரம் செய்யக் கூடாது என்று அவர்களுக்குத் தடை விதித்தார்கள்.79


அத்தியாயம் : 63
3844. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيٌّ، قَالَ غَيْلاَنُ بْنُ جَرِيرٍ كُنَّا نَأْتِي أَنَسَ بْنَ مَالِكٍ فَيُحَدِّثُنَا عَنِ الأَنْصَارِ،، وَكَانَ، يَقُولُ لِي فَعَلَ قَوْمُكَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا، وَفَعَلَ قَوْمُكَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3844. ஃகைலான் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் செல்வோம். அவர்கள் அன்சாரிகளைக் குறித்து எங்களிடம் பேசுவார்கள்.

அவர்கள், “(அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரி) சமுதாயத்தார் இன்ன இன்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்துவந்தார்கள். (அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரி) சமுதாயத்தார் இன்ன இன்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்துவந்தார்கள்” என்று என்னிடம் சொல்வார்கள்.80

அத்தியாயம் : 63
3845. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا قَطَنٌ أَبُو الْهَيْثَمِ، حَدَّثَنَا أَبُو يَزِيدَ الْمَدَنِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ أَوَّلَ قَسَامَةٍ كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ لَفِينَا بَنِي هَاشِمٍ، كَانَ رَجُلٌ مِنْ بَنِي هَاشِمٍ اسْتَأْجَرَهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ مِنْ فَخِذٍ أُخْرَى، فَانْطَلَقَ مَعَهُ فِي إِبِلِهِ، فَمَرَّ رَجُلٌ بِهِ مِنْ بَنِي هَاشِمٍ قَدِ انْقَطَعَتْ عُرْوَةُ جُوَالِقِهِ فَقَالَ أَغِثْنِي بِعِقَالٍ أَشُدُّ بِهِ عُرْوَةَ جُوَالِقِي، لاَ تَنْفِرُ الإِبِلُ. فَأَعْطَاهُ عِقَالاً، فَشَدَّ بِهِ عُرْوَةَ جُوَالِقِهِ، فَلَمَّا نَزَلُوا عُقِلَتِ الإِبِلُ إِلاَّ بَعِيرًا وَاحِدًا، فَقَالَ الَّذِي اسْتَأْجَرَهُ مَا شَأْنُ هَذَا الْبَعِيرِ لَمْ يُعْقَلْ مِنْ بَيْنِ الإِبِلِ قَالَ لَيْسَ لَهُ عِقَالٌ. قَالَ فَأَيْنَ عِقَالُهُ قَالَ فَحَذَفَهُ بِعَصًا كَانَ فِيهَا أَجَلُهُ، فَمَرَّ بِهِ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ، فَقَالَ أَتَشْهَدُ الْمَوْسِمَ قَالَ مَا أَشْهَدُ، وَرُبَّمَا شَهِدْتُهُ. قَالَ هَلْ أَنْتَ مُبْلِغٌ عَنِّي رِسَالَةً مَرَّةً مِنَ الدَّهْرِ قَالَ نَعَمْ. قَالَ فَكُنْتَ إِذَا أَنْتَ شَهِدْتَ الْمَوْسِمَ فَنَادِ يَا آلَ قُرَيْشٍ. فَإِذَا أَجَابُوكَ، فَنَادِ يَا آلَ بَنِي هَاشِمٍ. فَإِنْ أَجَابُوكَ فَسَلْ عَنْ أَبِي طَالِبٍ، فَأَخْبِرْهُ أَنَّ فُلاَنًا قَتَلَنِي فِي عِقَالٍ، وَمَاتَ الْمُسْتَأْجَرُ، فَلَمَّا قَدِمَ الَّذِي اسْتَأْجَرَهُ أَتَاهُ أَبُو طَالِبٍ فَقَالَ مَا فَعَلَ صَاحِبُنَا قَالَ مَرِضَ، فَأَحْسَنْتُ الْقِيَامَ عَلَيْهِ، فَوَلِيتُ دَفْنَهُ. قَالَ قَدْ كَانَ أَهْلَ ذَاكَ مِنْكَ. فَمَكُثَ حِينًا، ثُمَّ إِنَّ الرَّجُلَ الَّذِي أَوْصَى إِلَيْهِ أَنْ يُبْلِغَ عَنْهُ وَافَى الْمَوْسِمَ فَقَالَ يَا آلَ قُرَيْشٍ. قَالُوا هَذِهِ قُرَيْشٌ. قَالَ يَا آلَ بَنِي هَاشِمٍ. قَالُوا هَذِهِ بَنُو هَاشِمٍ. قَالَ أَيْنَ أَبُو طَالِبٍ قَالُوا هَذَا أَبُو طَالِبٍ. قَالَ أَمَرَنِي فُلاَنٌ أَنْ أُبْلِغَكَ رِسَالَةً أَنَّ فُلاَنًا قَتَلَهُ فِي عِقَالٍ. فَأَتَاهُ أَبُو طَالِبٍ فَقَالَ لَهُ اخْتَرْ مِنَّا إِحْدَى ثَلاَثٍ، إِنْ شِئْتَ أَنْ تُؤَدِّيَ مِائَةً مِنَ الإِبِلِ، فَإِنَّكَ قَتَلْتَ صَاحِبَنَا، وَإِنْ شِئْتَ حَلَفَ خَمْسُونَ مِنْ قَوْمِكَ أَنَّكَ لَمْ تَقْتُلْهُ، فَإِنْ أَبَيْتَ قَتَلْنَاكَ بِهِ فَأَتَى قَوْمَهُ، فَقَالُوا نَحْلِفُ. فَأَتَتْهُ امْرَأَةٌ مِنْ بَنِي هَاشِمٍ كَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْهُمْ قَدْ وَلَدَتْ لَهُ. فَقَالَتْ يَا أَبَا طَالِبٍ أُحِبُّ أَنْ تُجِيزَ ابْنِي هَذَا بِرَجُلٍ مِنَ الْخَمْسِينَ وَلاَ تَصْبُرْ يَمِينَهُ حَيْثُ تُصْبَرُ الأَيْمَانُ. فَفَعَلَ فَأَتَاهُ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ يَا أَبَا طَالِبٍ، أَرَدْتَ خَمْسِينَ رَجُلاً أَنْ يَحْلِفُوا مَكَانَ مِائَةٍ مِنَ الإِبِلِ، يُصِيبُ كُلَّ رَجُلٍ بَعِيرَانِ، هَذَانِ بَعِيرَانِ فَاقْبَلْهُمَا عَنِّي وَلاَ تَصْبُرْ يَمِينِي حَيْثُ تُصْبِرُ الأَيْمَانُ. فَقَبِلَهُمَا، وَجَاءَ ثَمَانِيةٌ وَأَرْبَعُونَ فَحَلَفُوا. قَالَ ابْنُ عَبَّاسٍ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا حَالَ الْحَوْلُ وَمِنَ الثَّمَانِيَةِ وَأَرْبَعِينَ عَيْنٌ تَطْرِفُ.
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3845. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் நடைபெற்ற முதல் “கசாமா' (எனும் சத்தியம் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்ட சம்பவம்) எங்கள் பனூ ஹாஷிம் குலத்தாரிடையேதான் நிகழ்ந்தது. (அதன் விவரம் வருமாறு:) பனூ ஹாஷிம் குலத்தில் (அம்ர் பின் அல்கமா என்று) ஒருவர் இருந்தார். அவரைக் குறைஷியரில் மற்றொரு கிளையைச் சேர்ந்த (கிதாஷ் பின் அப்தில்லாஹ் என்ற) ஒருவர் கூலிக்கு அமர்த்திக்கொண்டார். அந்தக் கூலிக்காரர் தம் முதலாளியுடன் அவ ருடைய ஒட்டகத்தில் (வாணிபக் குழுவின ருடன் ஷாம் நோக்கிச்) சென்றார்.

அப்போது பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த இன்னொருவர் அந்தக் கூலிக் காரரின் அருகே சென்றுகொண்டிருந்தார். அந்த பனூ ஹாஷிம் குலத்தாருடைய (ஒட்டகத்தின் இரு பக்கங்களிலும் தொங்கவிடப்படும்) பையின் பிடி அறுந்துவிட்டிருந்தது. அவர் அந்தக் கூலிக்காரரைப் பார்த்து, “எனது ஒட்டகம் தப்பியோடாமல் இருக்க, (அறுந்துபோன) எனது பையின் பிடியை (இணைத்து)க் கட்டுவதற்கு ஒரு கயிறு தந்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார். அந்தக் கூலியாள் அவருக்கு ஒரு கயிறு கொடுத்தார். உடனே அவர், அதன் மூலம் தனது பையின் பிடியை (இணைத்து)க் கட்டிக்கொண்டார்.

அவர்கள் அனைவரும் (ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில்) தங்கியபோது எல்லா ஒட்டகங்களும் (அவற்றுக்குரிய கயிறுகளால்) கட்டிப்போடப்பட்டன. ஒரேயோர் ஒட்டகம் மட்டும் (அதன் கயிற்றை பனூ ஹாஷிம் குலத்தாருக்கு அந்தக் கூலிக்காரர் கொடுத்துவிட்டிருந்ததால்) கட்டிப்போடப்படாமல் இருந்தது. அப்போது (கூலிக்காரரை நோக்கி) அந்தக் குறைஷி (முதலாளி), “இந்த ஒட்டகத்திற்கென்ன? பிற ஒட்டகங்களுக்கிடையே இது மட்டும் ஏன் கட்டிப்போடப்படவில்லை?” என்று கேட்டார். அதற்கு அந்தக் கூலிக்காரர், “அதற்குக் கயிறு இல்லை” என்று கூறினார். முதலாளி, “(ஏன்?) அதன் கயிறு எங்கே (போனது)?” என்று கேட்டார்.

பிறகு அந்தக் கூலிக்காரரின் மீது (கோபம் கொண்டு) ஒரு தடியை (எடுத்து) எறிந்தார். அந்த அடியே அந்தக் கூலிக்காரரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. அப்போது (அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடந்த) அந்தக் கூலிக்காரரை யமன் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் கடந்து சென்றார். அவரை நோக்கி (அந்தக் கூலிக்காரர்), “ஹஜ் பருவத்தில் நீங்கள் (ஹஜ்ஜில்) கலந்துகொள்வீர்களா?” என்று கேட்டார். அந்த வழிப்போக்கர், “நான் கலந்துகொள்ளமாட்டேன். ஒருகால் நான் கலந்துகொள்ளவும் செய்யலாம்” என்று கூறினார். அந்தக் கூலிக்காரர், “என் சார்பாக ஒரு செய்தியை எப்போதாவது (நான் சொல்லும் குலத்தாரிடம்) தெரிவித்து விடுவாயா?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “ஆம் (செய்கிறேன்)” என்று கூறினார். உடனே அந்தக் கூலிக்காரர், “நீ ஹஜ் பருவத்தில் கலந்து கொண்டால் “குறைஷிக் குலத்தாரே!' என்று கூப்பிடு! அவர்கள் பதிலளித்தால் உடனே (குறைஷிக் கிளையான) “பனூ ஹாஷிம் குலத்தாரே!' என்று கூப்பிடு! அவர்கள் உனக்குப் பதிலளித்தால் (பனூ ஹாஷிம் குடும்பத் தலைவரான) “அபூதாலிப்' பற்றி விசாரி! (அவரைச் சந்தித்து) அவரிடம், “இன்னான் ஒரு கயிற்றுக்காக என்னைக் கொன்றுவிட்டான்' என்று தெரிவித்துவிடு” என்று கூறினார். பிறகு அந்தக் கூலிக்காரர் இறந்தும்விட்டார்.

அவரைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற அந்த குறைஷி முதலாளி (மக்காவிற்குத்) திரும்பி வந்தபோது அவரிடம் அபூதாலிப் வந்து, “(கூலிக்காரரான) எங்கள் ஆள் என்ன ஆனார்?” என்று கேட்டார். “அவர் நோய்வாய்ப்பட்டார். அவரை நல்ல முறையில் நான் கவனித்துவந்தேன். (ஆனாலும் அவர் இறந்துவிட்டார்.) அவரை அடக்கம் செய்யும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார். “உம்மிடமிருந்து (இந்த உதவிகளைப் பெறுவதற்கு) அவர் தகுதியானவரே” என்று அபூதாலிப் கூறினார்.

பின்னர் சிறிது காலம் கழிந்தது. தன்னைப் பற்றிய செய்தியைத் தெரிவித்து விடும்படி அந்தக் கூலிக்காரர் இறுதி உபதேசம் செய்து அனுப்பிய (யமன் நாட்டைச் சேர்ந்த) அந்த மனிதர் ஹஜ் பருவத்தில் (ஹஜ்ஜுக்கு) வந்தார். அவர், “குறைஷிக் குலத்தாரே!' என்று அழைத்தார். “(சிலரைக் காட்டி) இவர்கள்தான் குறைஷியர்” என்று மக்கள் கூறினார்கள்.

“பனூ ஹாஷிம் குலத்தாரே!' என்று அவர் அழைத்தார். “இவர்கள்தான் பனூ ஹாஷிம் குலத்தார்” என்று மக்கள் தெரிவித்தனர். அவர், “அபூதாலிப் எங்கே?” என்று கேட்டார். “இவர்தான் அபூதாலிப்” என்று மக்கள் சொன்னார்கள். “ஒரு கயிற்றுக்காக இன்ன மனிதன் என்னைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியை உங்களிடம் தெரிவித்துவிடும்படி இன்ன மனிதர் எனக்கு உத்தரவிட்டார்” என்று அவர் (அபூதாலிடம்) கூறினார்.

அந்த முதலாளியிடம் அபூதாலிப் சென்று, “எங்களிடமிருந்து மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்” என்று கூறி(விட்டு அறியாமைக்கால வழக்கப்படி பின்வருமாறு சொன்)னார்: 1. நீ விரும்பி னால், எங்கள் ஆளை நீ கொலை செய்த தற்காக (நமது மரபுப்படி) நூறு ஒட்டகத்தை (நஷ்ட ஈடாகச்) செலுத்தலாம். 2. நீ விரும்பி னால் உன் சமுதாயத்திலிருந்து ஐம்பது பேர் “நீ அவரைக் கொலை செய்யவில்லை' என்று சத்தியம் செய்யலாம். 3. (இந்த இரண்டையும் செய்ய) நீ மறுத்தால் உன்னை நாங்கள் அவருக்குப் பதிலாகக் கொன்றுவிடுவோம்” (என்று கூறினார்.)

அந்த குறைஷி (முதலாளி) தம் சமுதாயத்தாரிடம் சென்றார். அப்போது அவர்கள், “நாங்கள் சத்தியம் செய்கிறோம்” என்று கூறினர். அபூதாலிபிடம் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்82 வந்தாள். பனூ ஹாஷிம் குலத்(தில் கொலையாளியின் குடும்பத்)தைச் சேர்ந்த ஒருவருடைய மனைவியாக அவள் இருந்தாள். அவருக்காக ஒரு குழந்தையையும் அவள் பெற்றெடுத்திருந்தாள்.

அவள் கூறினாள்: “அபூதாலிப் அவர்களே! (சத்தியம் செய்ய வேண்டிய) ஐம்பது பேர்களில் இந்த என் மகனும் ஒருவனாக இருக்க அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், சத்தியம் மேற்கொள்ளப்படும் (கஅபாவிலுள்ள ருக்ன்- மகாமு இப்ராஹீம் இடையிலான) இடத்தில் இவனைச் சத்தியம் செய்யும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்.” (அவளது கோரிக்கைப்படி) அபூதாலிப் செயல் பட்டார்.

அப்போது பனூ ஹாஷிம் குலத்தாரில் (கொலையாளியின் குடும்பத்தைச் சேர்ந்த) இன்னொரு மனிதரும் வந்து, “அபூதாலிப் அவர்களே! (கொலைக் குற்றத்திற்குப் பரிகாரமாகத் தரப்படும்) நூறு ஒட்டகங் களுக்குப் பதிலாக ஐம்பது ஆண்கள் சத்தியம் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள். ஒவ்வோர் ஆணுக்கும் இரண்டு ஒட்டகங்கள் (விகிதம்) வரும். இதோ, இந்த இரண்டு ஒட்டகங்களை எனக்காக ஏற்றுக்கொள்ளுங்கள். சத்தியம் செய்யுமாறு (அவர்களை) நீங்கள் கட்டாயப் படுத்தும்போது என்னையும் கட்டாயப் படுத்தாதீர்கள்” என்று கூறினார்.

அந்த இருவரது கோரிக்கையையும் அபூதாலிப் ஏற்றுக்கொண்டார். ஆக, நாற்பத்தெட்டுப் பேர் வந்து, (“எங்கள் குலத்தைச் சேர்ந்த கிதாஷ், கொலை செய்யப்பட்டவரின் உயிரீட்டுத் தொகை யைச் செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபட்டுவிட்டார்” என்று) சத்தியம் செய்தனர்.

அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! (அவர்கள் சத்தியம் செய்து) ஓராண்டுகூடக் கழியவில்லை; அதற்குள் (பொய்ச் சத்தியம் செய்த) அந்த நாற்பத்தெட்டுப் பேரும் மாண்டனர்.


அத்தியாயம் : 63
3846. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ بُعَاثٍ يَوْمًا قَدَّمَهُ اللَّهُ لِرَسُولِهِ صلى الله عليه وسلم، فَقَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدِ افْتَرَقَ مَلَؤُهُمْ، وَقُتِّلَتْ سَرَوَاتُهُمْ وَجُرِّحُوا، قَدَّمَهُ اللَّهُ لِرَسُولِهِ صلى الله عليه وسلم فِي دُخُولِهِمْ فِي الإِسْلاَمِ.
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3846. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழ்த்திக் காட்டிய நாளாகும்.

மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும், அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) வருகை புரிந்தார்கள்.

ஆகவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற் காக) அல்லாஹ்தான், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன்கூட்டியே நிகழச்செய்தான்.83


அத்தியாயம் : 63
3847. وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، أَنَّ كُرَيْبًا، مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَيْسَ السَّعْىُ بِبَطْنِ الْوَادِي بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سُنَّةً، إِنَّمَا كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَسْعَوْنَهَا وَيَقُولُونَ لاَ نُجِيزُ الْبَطْحَاءَ إِلاَّ شَدًّا
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3847. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஸஃபா' மற்றும் “மர்வா' (குன்றுகளுக்கு) இடையே பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் (வேகமாகத்) தொங்கோட்டம் ஓடுவது நபிவழியன்று. அறியாமைக் காலத்தவர்தான் அவ்வாறு (வேகமாகத்) தொங்கோட்டம் ஓடிவந்தனர்; மேலும், அவர்கள், “நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கை வேகமாகவே கடப்போம்” என்று கூறியும் வந்தார்கள்.84


அத்தியாயம் : 63
3848. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا مُطَرِّفٌ، سَمِعْتُ أَبَا السَّفَرِ، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ، اسْمَعُوا مِنِّي مَا أَقُولُ لَكُمْ، وَأَسْمِعُونِي مَا تَقُولُونَ، وَلاَ تَذْهَبُوا فَتَقُولُوا قَالَ ابْنُ عَبَّاسٍ، قَالَ ابْنُ عَبَّاسٍ مَنْ طَافَ بِالْبَيْتِ فَلْيَطُفْ مِنْ وَرَاءِ الْحِجْرِ، وَلاَ تَقُولُوا الْحَطِيمُ، فَإِنَّ الرَّجُلَ فِي الْجَاهِلِيَّةِ كَانَ يَحْلِفُ فَيُلْقِي سَوْطَهُ أَوْ نَعْلَهُ أَوْ قَوْسَهُ.
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3848. அபுஸ்ஸஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “மக்களே! நான் உங்களுக்குச் சொல்வதை என்னிடமிருந்து (காது கொடுத்துக் கவன மாகக்) கேளுங்கள். நீங்கள் சொல்வதை நான் (கவனமாகக்) கேட்க விடுங்கள். (என்னிடமிருந்து அரைகுறையாகக் கேட்டுக்கொண்டு)போய், “இப்னு அப்பாஸ் சொன்னார்; இப்னு அப்பாஸ் சொன்னார்” என்று (தப்பும் தவறுமாகச்) சொல்லாதீர்கள். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருபவர் “ஹிஜ்ர்' எனும் (வளைந்த) பகுதிக்கு அப்பாலிருந்து சுற்றட்டும்! “அல்ஹத்தீம்' என்று (அதற்குப்) பெயர் சொல்லாதீர்கள்.

ஏனெனில், அறியாமைக் காலத்தில் ஒரு மனிதர் சத்தியம் செய்துவிட்டு (சத்தியம் செய்ததற்கு அடையாளமாக) தமது சாட்டையையோ, தமது செருப் பையோ, தமது வில்லையோ அங்கே போட்டுவிடுவார் (அதனால்தான் அதற்கு “ஹத்தீம்' (வீழ்த்தக் கூடியது) என்ற பெயர் வந்தது)” என்று சொல்வதை நான் கேட்டேன்.


அத்தியாயம் : 63
3849. حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ رَأَيْتُ فِي الْجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ قَدْ زَنَتْ، فَرَجَمُوهَا فَرَجَمْتُهَا مَعَهُمْ.
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3849. அம்ர் பின் மைமூன் (ரஹ்)85 அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண்குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்துகொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்துகொண்டு அதன் மீது கல்லெறிந்தேன்.


அத்தியாயம் : 63
3850. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خِلاَلٌ مِنْ خِلاَلِ الْجَاهِلِيَّةِ الطَّعْنُ فِي الأَنْسَابِ وَالنِّيَاحَةُ، وَنَسِيَ الثَّالِثَةَ، قَالَ سُفْيَانُ وَيَقُولُونَ إِنَّهَا الاِسْتِسْقَاءُ بِالأَنْوَاءِ.
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3850. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிறர் வமிசத்தைக் குறைகூறுவதும் ஒப்பாரிவைத்து அழுவதும் அறியாமைக் காலத்துப் பண்புகளாகும்.

-அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் மூன்றாவது பண்பொன்றை மறந்துவிட்டார்கள்-

“நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பெய்தது என்று சொல்வதே (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அந்த மூன்றாவது பண்பாகும்” என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.86

அத்தியாயம் : 63
3851. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ ابْنُ أَرْبَعِينَ، فَمَكَثَ ثَلاَثَ عَشْرَةَ سَنَةً، ثُمَّ أُمِرَ بِالْهِجْرَةِ، فَهَاجَرَ إِلَى الْمَدِينَةِ، فَمَكَثَ بِهَا عَشْرَ سِنِينَ، ثُمَّ تُوُفِّيَ صلى الله عليه وسلم.
பாடம் : 28 நபி (ஸல்) அவர்கள் (இறைத் தூதராக) நியமிக்கப்படுதல் (இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வமிசாவளி பற்றிய விவரமாவது:) அத்னானின் மகன் மஅத்தும், மஅத் துடைய மகன் நிஸாரும், நிஸாருடைய மகன் முளரும் முளருடைய மகன் இல்யாஸும், இல்யாஸுடைய மகன் முத்ரிகாவும், முத்ரிகாவின் மகன் குஸைமாவும், குஸைமாவின் மகன் கினானாவும், கினானாவின் மகன் நள்ரும், நள்ரின் மகன் மாலிக்கும், மாலிக்கின் மகன் ஃபிஹ்ரும், ஃபிஹ்ரின் மகன் ஃகாóபும், ஃகாலிபின் மகன் லுஅய்யும், லுஅய்யின் மகன் கஅபும், கஅபின் மகன் முர்ராவும், முர்ராவின் மகன் கிலாபும், கிலாபின் மகன் குஸய்யும், குஸய்யின் மகன் அப்து மனாஃபும், அப்து மனாஃபின் மகன் ஹாஷிமும், ஹாஷிமின் மகன் அப்துல் முத்தலிபும், அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வும், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஆவார்கள்.87
3851. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு (வஹீ எனும்) வேத அறிவிப்பு அருளப்பெற்றது. அதன் பிறகு அவர்கள் மக்கா நகரில் பதிமூன்றாண்டு கள் தங்கியிருந்தார்கள். பிறகு, (இறை மார்க்கத்திற்காகப் புலம்பெயர்ந்து) ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டது. ஆகவே, அவர்கள் மதீனா வுக்கு (புலம்பெயர்ந்து) ஹிஜ்ரத் சென்றார் கள்; அங்கே பத்தாண்டுகள் தங்கினார்கள்; பிறகு இறந்தார்கள்.

அத்தியாயம் : 63
3852. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا بَيَانٌ، وَإِسْمَاعِيلُ، قَالاَ سَمِعْنَا قَيْسًا، يَقُولُ سَمِعْتُ خَبَّابًا، يَقُولُ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ مُتَوَسِّدٌ بُرْدَةً، وَهْوَ فِي ظِلِّ الْكَعْبَةِ، وَقَدْ لَقِينَا مِنَ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ أَلاَ تَدْعُو اللَّهَ فَقَعَدَ وَهْوَ مُحْمَرٌّ وَجْهُهُ فَقَالَ "" لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ الْحَدِيدِ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَيُوضَعُ الْمِنْشَارُ عَلَى مَفْرِقِ رَأْسِهِ، فَيُشَقُّ بِاثْنَيْنِ، مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَلَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ مَا يَخَافُ إِلاَّ اللَّهَ "". زَادَ بَيَانٌ وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3852. கப்பாப் (பின் அல்அரத் -ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் ஒரு சால்வையைத் தலையணை யாக வைத்து சாய்ந்துகொண்டிருக்க, நான் அவர்களிடம் சென்றேன். அப்போது நாங்கள் இணைவைப்பவர்களால் கடும் துன்பங்களைச் சந்தித்திருந்தோம். ஆகவே, நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கமாட்டீர்களா?” என்று கேட்டேன். உடனே அவர்கள் முகம் சிவந்துபோய், (எழுந்து) உட்கார்ந்துகொண்டு சொன்னார்கள்:

உங்களுக்குமுன் (இந்த ஓரிறை மார்க்கத்தைத் தழுவி) இருந்தவர் (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் கோதப்பட்டு (கொடுமைப்படுத்தப்பட்டு) வந்தார். அது அவரது எலும்புகளையும் கடந்து சென்று அதன் கீழுள்ள சதையையும் நரம்பையும் அடைந்துவிடும்.

(ஆனால்,) அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து (திசை) திருப்பிவிடவில்லை. மேலும், அவருடைய தலையின் வகிட்டில் ரம்பம் வைக்கப்பட்டு இரு கூறுகளாக அவர் பிளக்கப்படுவார். ஆனால், அதுவும் அவரை அவருடைய மார்க்கத்திருந்து திருப்பிவிடவில்லை.

நிச்சயம் அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். எந்த அளவுக்கென்றால், (தன் வாகனத்தில்) சவாரி செய்து வரும் ஒருவன், (யமன் நாட்டிலுள்ள) “ஸன்ஆ'விலிருந்து “ஹள்ரமவ்த்'வரை பயணம் செய்து செல்வான். (வழியில்) அவனுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைத் தவிர வேறெந்த அச்சமும் இருக்காது.

மற்றோர் அறிவிப்பில், “தன் ஆடுகள் விஷயத்தில் ஓநாய் பற்றிய அச்சத்தையும் தவிர” என்னும் வாக்கியத்தை பயான் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள் ளார்கள்.88


அத்தியாயம் : 63
3853. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّجْمَ، فَسَجَدَ فَمَا بَقِيَ أَحَدٌ إِلاَّ سَجَدَ، إِلاَّ رَجُلٌ رَأَيْتُهُ أَخَذَ كَفًّا مِنْ حَصًا فَرَفَعَهُ فَسَجَدَ عَلَيْهِ وَقَالَ هَذَا يَكْفِينِي. فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا بِاللَّهِ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3853. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்' எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) பிறகு (இறுதியில் ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். அப்போது (அங்கிருந்த) யாவரும் சிரவணக்கம் செய்யாமல் இருக்கவில்லை; ஒரேயொரு மனிதரைத் தவிர. அவர் (தரையில் சிரம்பணியாமல்) ஒரு கைப்பிடியளவு சிறு கூழாங்கற்களை எடுத்து (முகத்தருகே) உயர்த்தி (அப்படியே) அதன்மீது சஜ்தா செய்து, “இது எனக்குப் போதும்” என்று சொல்லிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். பின்னால், அவர் அல்லாஹ்வை மறுத்தவராகக் கொல்லப்பட்டதையும் நான் பார்த்தேன்.89


அத்தியாயம் : 63
3854. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدٌ وَحَوْلَهُ نَاسٌ مِنْ قُرَيْشٍ جَاءَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ بِسَلَى جَزُورٍ، فَقَذَفَهُ عَلَى ظَهْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَلَمْ يَرْفَعْ رَأْسَهُ فَجَاءَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فَأَخَذَتْهُ مِنْ ظَهْرِهِ، وَدَعَتْ عَلَى مَنْ صَنَعَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ عَلَيْكَ الْمَلأَ مِنْ قُرَيْشٍ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنَ رَبِيعَةَ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ ـ أَوْ أُبَىَّ بْنَ خَلَفٍ "". شُعْبَةُ الشَّاكُّ ـ فَرَأَيْتُهُمْ قُتِلُوا يَوْمَ بَدْرٍ، فَأُلْقُوا فِي بِئْرٍ غَيْرَ أُمَيَّةَ أَوْ أُبَىٍّ تَقَطَّعَتْ أَوْصَالُهُ، فَلَمْ يُلْقَ فِي الْبِئْرِ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3854. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை (கஅபா அருகில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிரவணக்கம் (சஜ்தா) செய்துகொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷியரில் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஐத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வைக் கொண்டுவந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தவில்லை. உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களின் முதுகிலிருந்து எடுத்துவிட்டு, அதைச் செய்தவனுக் கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! குறைஷித் தலைவர்களான அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, “உமய்யா பின் கலஃப்' அல்லது “உபை பின் கலஃப்' ஆகியோரை நீ கவனித்துக்கொள்” என்று பிரார்த்தித்தார்கள். (அதன்படியே) இவர்கள் அனைவரும் பத்ர் போரில் கொல்லப்பட்டு ஒரு (பாழுங்)கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; “உமய்யா பின் கலஃப்' அல்லது “உபை'யைத் தவிர. அவனுடைய மூட்டுகள் துண்டாகி (தனித்தனியாகி)விட்டிருந்த காரணத்தால் அவன் மட்டும் கிணற்றில் போடப்படவில்லை.

உமய்யா பின் கலஃப் அல்லது உபை பின் கலஃப் (இந்த இருவரில் நபி (ஸல்) அவர்கள் யாரைச் சொன்னார்கள்) என்று சந்தேகப்படுபவர் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்களா வார்.90


அத்தியாயம் : 63
3855. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، أَوْ قَالَ حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ أَمَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى قَالَ سَلِ ابْنَ عَبَّاسٍ عَنْ هَاتَيْنِ الآيَتَيْنِ، مَا أَمْرُهُمَا {وَلاَ تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ } {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَمَّا أُنْزِلَتِ الَّتِي فِي الْفُرْقَانِ قَالَ مُشْرِكُو أَهْلِ مَكَّةَ فَقَدْ قَتَلْنَا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ، وَدَعَوْنَا مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ، وَقَدْ أَتَيْنَا الْفَوَاحِشَ. فَأَنْزَلَ اللَّهُ {إِلاَّ مَنْ تَابَ وَآمَنَ} الآيَةَ فَهَذِهِ لأُولَئِكَ وَأَمَّا الَّتِي فِي النِّسَاءِ الرَّجُلُ إِذَا عَرَفَ الإِسْلاَمَ وَشَرَائِعَهُ، ثُمَّ قَتَلَ فَجَزَاؤُهُ جَهَنَّمُ. فَذَكَرْتُهُ لِمُجَاهِدٍ فَقَالَ إِلاَّ مَنْ نَدِمَ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3855. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள், “(தக்க காரணமின்றிக் கொல்வதைத் தடை செய்து) “அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய எந்த ( மனித) உயிரையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள்' எனும் இந்த (6:151, 17:33) இரு (குர்ஆன்) வசனங்களுக்கும், “ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். மறுமை நாளில் அவனுக்கு இரு மடங்கு தண்டனை அளிக்கப்படும். என்றென்றும் இழப்புக்குரியவனாய் அவன் அதில் வீழ்ந்து கிடப்பான்' எனும் (4:93) வசனத்திற்கும் இடையே இணக்கமான கருத்துக் காண்பது எப்படி என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நீ கேள்” என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.91

நான் (சென்று) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “திருக்குர்ஆனில், “கருணையாளனின் உண்மையான அடியார்கள் எத்தகை யவர்கள் எனில், ...(தக்க காரணமின்றி கொல்லக் கூடாதென்று தடை செய்து) அல்லாஹ் கண்ணியத்திற்குரிய தாக்கியுள்ள மனித உயிரை நியாயத்துடனே தவிர கொல்லமாட்டார்கள்...' எனும் அத்தியாயம் அல்ஃபுர்கானின் 68ஆம் வசனம் அருளப்பட்டபோது மக்காவாசி களில் இணைவைப்போராயிருந்தவர்கள், “அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாய் ஆக்கிய மனித உயிரை நாங்கள் கொன்றிருக்கிறோம்; அல்லாஹ்வுடன் மற்ற தெய்வத்தையும் அழைத்திருக்கிறோம்; மேலும், தீய செயல்களையும் செய்திருக்கிறோம் (நாங்கள் நரகத்தில்தான் வீழ்ந்து கிடக்க வேண்டுமா? எங்களுக்கு இஸ்லாம் எப்படிப் பயன் தரும்?)” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ், “பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிகின்றவர் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிவிடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனும் ஆவான்” எனும் (25:70ஆம்) வசனத்தை அருளினான். இது குற்றம் புரிந்த இறைமறுப்பாளர்களுக்கான சட்டமாகும்.

அத்தியாயம் அந்நிசாவில் (93ஆம் வசனத்தில்) கூறப்பட்டிருப்பது, இஸ்லாத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் அறிந்த (முஸ்லிமான) ஒரு மனிதன் விஷயத்தில் ஆகும். அவன் அறிந்த பிறகும் எவரையாவது வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக விழுந்து கிடப்பான்” என்று பதிலளித்தார்கள்.92

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் இந்தக் கருத்தை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், “தன் குற்றத்திற்காக வருந்தி (பாவமன்னிப்புக் கோரி)யவனைத் தவிர (மற்றவர்கள்தான் நிரந்தரமாக நரகம் புக வேண்டியிருக்கும்)” என்று பதிலளித் தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 63