3796. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتِ الأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ تَقُولُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا عَلَى الْجِهَادِ مَا حَيِينَا أَبَدَا فَأَجَابَهُمُ اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَأَكْرِمِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
பாடம் : 9
நபி (ஸல்) அவர்கள், “அன்சாரி களின் நிலையையும் முஹாஜிர் களின் நிலையையும் செம்மைப் படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தது
3796. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப்போர் நாளில் அன்சாரிகள், “நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) “நாங்கள் உயிரோடிருக்கும் காலம்வரை அறப்போர் புரிவோம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத் திருக்கின்றோம்” என்று (கவிதையில்) கூறிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை எதுவுமில்லை; ஆகவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!” என்று (கவிதையிலேயே பதில்) சொன்னார்கள்.25
அத்தியாயம் : 63

3797. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ جَاءَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَحْفِرُ الْخَنْدَقَ وَنَنْقُلُ التُّرَابَ عَلَى أَكْتَادِنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ "".
பாடம் : 9
நபி (ஸல்) அவர்கள், “அன்சாரி களின் நிலையையும் முஹாஜிர் களின் நிலையையும் செம்மைப் படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தது
3797. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அகழ் தோண்டிக்கொண்டும் எங்கள் தோள்களின்மீது மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டும் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்.
அப்போது அவர்கள், “இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை எதுவுமில்லை. ஆகவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரி களுக்கும் மன்னிப்பருள்வாயாக!” என்று (கவிதையில்) கூறினார்கள்.26

3798. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ مَا مَعَنَا إِلاَّ الْمَاءُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ يَضُمُّ، أَوْ يُضِيفُ هَذَا "". فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ أَنَا. فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ مَا عِنْدَنَا إِلاَّ قُوتُ صِبْيَانِي. فَقَالَ هَيِّئِي طَعَامَكِ، وَأَصْبِحِي سِرَاجَكِ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً. فَهَيَّأَتْ طَعَامَهَا وَأَصْبَحَتْ سِرَاجَهَا، وَنَوَّمَتْ صِبْيَانَهَا، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ، فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلاَنِ، فَبَاتَا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبَحَ، غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ ـ أَوْ عَجِبَ ـ مِنْ فَعَالِكُمَا "" فَأَنْزَلَ اللَّهُ {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ}
பாடம் : 10
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
தமக்கே தேவை இருந்தும்கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். (59:9)
3798. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் துணைவியரிடம் சொல்லியனுப்பினார் கள். அப்போது துணைவியர், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “ “இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக்கொள்பவர் யார்?' அல்லது “இவருக்கு விருந்தளிப்பவர் யார்” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கிறேன்)” என்று சொல்லி அவரை அழைத்துக்கொண்டு தம் மனைவியிடம் சென்றார்.
(மனைவியிடம்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து” என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை” என்று சொன்னார்.
அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்துவைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப்போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்துவிடு” என்று சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்துவைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கை சரி செய்வதுபோல் நின்று (பாவனை செய்துகொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பதுபோல் (விருந்தாளி யான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள்.
பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) “சிரித்துக் கொண்டான்' அல்லது “வியப்படைந்தான்' என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும்கூட, தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், யார் தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுவிட்டார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்” எனும் (59:9ஆம்) வசனத்தை அருளினான்.

3799. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يَحْيَى أَبُو عَلِيٍّ، حَدَّثَنَا شَاذَانُ، أَخُو عَبْدَانَ حَدَّثَنَا أَبِي، أَخْبَرَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ مَرَّ أَبُو بَكْرٍ وَالْعَبَّاسُ ـ رضى الله عنهما ـ بِمَجْلِسٍ مِنْ مَجَالِسِ الأَنْصَارِ وَهُمْ يَبْكُونَ، فَقَالَ مَا يُبْكِيكُمْ قَالُوا ذَكَرْنَا مَجْلِسَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَّا. فَدَخَلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِذَلِكَ ـ قَالَ ـ فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ عَصَبَ عَلَى رَأْسِهِ حَاشِيَةَ بُرْدٍ ـ قَالَ ـ فَصَعِدَ الْمِنْبَرَ وَلَمْ يَصْعَدْهُ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" أُوصِيكُمْ بِالأَنْصَارِ، فَإِنَّهُمْ كَرِشِي وَعَيْبَتِي، وَقَدْ قَضَوُا الَّذِي عَلَيْهِمْ، وَبَقِيَ الَّذِي لَهُمْ، فَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ، وَتَجَاوَزُوا عَنْ مُسِيئِهِمْ "".
பாடம் : 11
நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளில் நன்மை புரிவோரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்பவர்களை மன்னித்து விடுங்கள்” என்று சொன்னது
3799. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தமது சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுதுகொண்டிருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் (ரலி) அவர்கள்), “நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்.)” என்று பதிலளித்தார்கள்.27
அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிகழ்த்துவதற்காக) சொற்பொழிவு மேடையில் ஏறினார்கள் - அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மேடையில் ஏறவில்லை- அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, “அன்சாரிகள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர்.28 தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமைதான் எஞ்சியுள்ளது.29 ஆகவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக்கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

3800. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا ابْنُ الْغَسِيلِ، سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ مِلْحَفَةٌ، مُتَعَطِّفًا بِهَا عَلَى مَنْكِبَيْهِ، وَعَلَيْهِ عِصَابَةٌ دَسْمَاءُ حَتَّى جَلَسَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، أَيُّهَا النَّاسُ، فَإِنَّ النَّاسَ يَكْثُرُونَ وَتَقِلُّ الأَنْصَارُ، حَتَّى يَكُونُوا كَالْمِلْحِ فِي الطَّعَامِ، فَمَنْ وَلِيَ مِنْكُمْ أَمْرًا يَضُرُّ فِيهِ أَحَدًا أَوْ يَنْفَعُهُ، فَلْيَقْبَلْ مِنْ مُحْسِنِهِمْ، وَيَتَجَاوَزْ عَنْ مُسِيئِهِمْ "".
பாடம் : 11
நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளில் நன்மை புரிவோரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்பவர்களை மன்னித்து விடுங்கள்” என்று சொன்னது
3800. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது) தம் தோள்களின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு (வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் (தலை)மீது கறுப்புக் கட்டு ஒன்று (போடப்பட்டு) இருந்தது. சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பிறகு சொன்னார்கள்:
மக்களே! (இஸ்லாத்தில் இணையும்) மக்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். (ஆனால் இறைமார்க்கத்திற்கு) உதவி புரிவோர் (அன்சார்கள்) உணவில் உப்பைப் போன்று ஆகிவிடும் அளவுக்குக் குறைந்து போய்விடுவார்கள். ஆகவே, ஒருவருக்கு நன்மையளிக்கக்கூடிய, அல்லது தீங்கு செய்யக்கூடிய (அளவுக்குள்ள) ஓர் அதிகாரப் பொறுப்பை உங்களில் ஒருவர் ஏற்றால், அன்சாரிகளில் நன்மை புரிந்தவரின் நன்மையை ஏற்றுக்கொண்டு அவர்களில் தவறிழைத்தவரை மன்னித்து விடட்டும்.30

3801. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الأَنْصَارُ كَرِشِي وَعَيْبَتِي، وَالنَّاسُ سَيَكْثُرُونَ وَيَقِلُّونَ، فَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ، وَتَجَاوَزُوا عَنْ مُسِيئِهِمْ "".
பாடம் : 11
நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளில் நன்மை புரிவோரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்பவர்களை மன்னித்து விடுங்கள்” என்று சொன்னது
3801. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்துபோய்விடுவார்கள். ஆகவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந் தன்மையுடன்) மன்னித்துவிடுங்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3802. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم حُلَّةُ حَرِيرٍ، فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَعْجَبُونَ مِنْ لِينِهَا فَقَالَ "" أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ خَيْرٌ مِنْهَا "". أَوْ أَلْيَنُ. رَوَاهُ قَتَادَةُ وَالزُّهْرِيُّ سَمِعَا أَنَسًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 12
சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் சிறப்புகள்31
3802. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப் படையலானார்கள். நபி (ஸல்) அவர்கள், “இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? (சொர்க்கத்தில்) சஅத் பின் முஆத் அவர்களின் கைக் குட்டைகள் “இதைவிடச் சிறந்தது' அல்லது “இதைவிட மென்மையானது' ஆகும்” என்று சொன்னார்கள்.32
இதே ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.33

3803. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا فَضْلُ بْنُ مُسَاوِرٍ، خَتَنُ أَبِي عَوَانَةَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" اهْتَزَّ الْعَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ "". وَعَنِ الأَعْمَشِ حَدَّثَنَا أَبُو صَالِحٍ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ. فَقَالَ رَجُلٌ لِجَابِرٍ فَإِنَّ الْبَرَاءَ يَقُولُ اهْتَزَّ السَّرِيرُ. فَقَالَ إِنَّهُ كَانَ بَيْنَ هَذَيْنِ الْحَيَّيْنِ ضَغَائِنُ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" اهْتَزَّ عَرْشُ الرَّحْمَنِ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ "".
பாடம் : 12
சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் சிறப்புகள்31
3803. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஅத் பின் முஆத் அவர்களின் இறப் பிற்காக அர்ஷ் (இறை அரியணை) அசைந்தது.34
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வந்துள்ளதாவது:
ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “பராஉ (ரலி) அவர்கள், “சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸா) பெட்டிதான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்” என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், “சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காக அளவற்ற அருளாள(னான இறைவ)னின் அரியணை அசைந்தது' என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.35

3804. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ أُنَاسًا نَزَلُوا عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ، فَأَرْسَلَ إِلَيْهِ فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا بَلَغَ قَرِيبًا مِنَ الْمَسْجِدِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قُومُوا إِلَى خَيْرِكُمْ أَوْ سَيِّدِكُمْ "". فَقَالَ "" يَا سَعْدُ، إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ "". قَالَ فَإِنِّي أَحْكُمُ فِيهِمْ أَنْ تُقْتَلَ مُقَاتِلَتُهُمْ وَتُسْبَى ذَرَارِيُّهُمْ. قَالَ "" حَكَمْتَ بِحُكْمِ اللَّهِ، أَوْ بِحُكْمِ الْمَلِكِ "".
பாடம் : 12
சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் சிறப்புகள்31
3804. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் முஆத் (ரலி) அவர்களு டைய தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (பனூ குறைழா யூத) மக்கள் (கைபரிலுள்ள கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களுக்கு ஆளனுப் பிட அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீயிலிருந்து) கழுதையின் மீது (பயணம் செய்தபடி) வந்தார்கள். (நபியவர்கள் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அவர்கள் வந்து சேர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள், “உங்களில் சிறந்தவரை'அல்லது “உங்கள் தலைவரை' நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத் திலிருந்து இறக்கிவிடு)ங்கள்” என்று சொன்னார்கள்.
பிறகு, “சஅதே! இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள் (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறீர்கள்?)” என்று கேட்டார் கள். சஅத் (ரலி) அவர்கள், “இவர்களில் போரிடும் வலிமையுடையவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும், இவர்களுடைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் நான் இவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிக்கிறேன்” என்று சொன்னார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்; அல்லது அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” என்று சொன்னார்கள்.36

3805. حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، أَخْبَرَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلَيْنِ، خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَإِذَا نُورٌ بَيْنَ أَيْدِيهِمَا حَتَّى تَفَرَّقَا، فَتَفَرَّقَ النُّورُ مَعَهُمَا. وَقَالَ مَعْمَرٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَرَجُلاً مِنَ الأَنْصَارِ. قَالَ حَمَّادٌ أَخْبَرَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ كَانَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 13
உசைத் பின் ஹுளைர் (ரலி) மற்றும் அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோரின் சிறப்பு37
3805. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(நபித்தோழர்களில்) இரு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடை பெற்றுக்கொண்டு) இருண்ட ஓர் இரவில் (தம் இல்லங்களுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவ்விருவருக்கும் முன்னால் ஒளி ஒன்று பிரகாசித்தபடி அவர்கள் ஒருவரையொருவர் பிரியும்வரை சென்று கொண்டேயிருந்தது.
(அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து சென்றவுடன்) அந்த ஒளியும் அவர் களுடன் பிரிந்து சென்றுவிட்டது.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே ஸாபித் (ரஹ்) அவர்கள் வழியாக மஅமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், “இரு மனிதர்கள்' என்பதற்குப் பதிலாக, “உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களும் அன்சாரிகளில் ஒரு மனிதரும்' என்று இடம்பெற்றுள்ளது.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே ஸாபித் (ரஹ்) அவர்கள் வழியாக ஹம்மாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பில், “உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களும் அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தனர். (இருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டுத் தம் இல்லங் களுக்குச் சென்றபோது)” என்று இடம்பெற்றுள்ளது.38

3806. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" اسْتَقْرِئُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنَ ابْنِ مَسْعُودٍ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَأُبَىٍّ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ "".
பாடம் : 14
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3806. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு மஸ்ஊத், அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம், உபை பின் கஅப் மற்றும் முஆத் பின் —பல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40

3807. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبُو أُسَيْدٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَيْرُ دُورِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ، ثُمَّ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، ثُمَّ بَنُو سَاعِدَةَ وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ "". فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ ـ وَكَانَ ذَا قِدَمٍ فِي الإِسْلاَمِ ـ أَرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ فَضَّلَ عَلَيْنَا. فَقِيلَ لَهُ قَدْ فَضَّلَكُمْ عَلَى نَاسٍ كَثِيرٍ.
பாடம் : 15
சஅத் பின் உபாதா (ரலி) அவர்களின் சிறப்பு41
(சஅத் (ரலி) அவர்களைப் பற்றி) “அவர்கள் அதற்குமுன் நல்ல மனிதராக இருந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.42
3807. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“அன்சாரிகளின் கிளைக் குடும்பங் களில் சிறந்தது பனுந் நஜ்ஜார் குடும்பம் ஆகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பம் ஆகும். பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பம் ஆகும். பிறகு பனூ சாஇதா குடும்பம் ஆகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஉசைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் -இஸ்லாத்தில் செல்வாக்கு உடையவர்களாக அன்னார் இருந்தார்கள்- “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்மைவிட (மற்றக் குடும்பங்களைச்) சிறப் புக்குரியவர்களாக ஆக்கிவிட்டதை நான் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.
அப்போது அவர்களிடம், “உங்களை நபி (ஸல்) அவர்கள் நிறைய மக்களைவிடச் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்” என்று சொல்லப்பட்டது.43

3808. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ ذُكِرَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَقَالَ ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" خُذُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ فَبَدَأَ بِهِ ـ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَأُبَىِّ بْنِ كَعْبٍ "".
பாடம் : 16
உபை பின் கஅப் (ரலி) அவர்களின் சிறப்புகள்44
3808. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறித்துக் கூறப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: அவர் நான் நேசித்துக்கொண்டேயிருக்கும் ஒரு மனிதர். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமை சாலிம், முஆத் பின் ஜபல், உபை பின் கஅப் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை (ஓதும் முறையை) எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்ல நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களையே முதலில் குறிப்பிட் டார்கள்.45

3809. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ سَمِعْتُ شُعْبَةَ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ "" إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} "". قَالَ وَسَمَّانِي قَالَ "" نَعَمْ "" فَبَكَى.
பாடம் : 16
உபை பின் கஅப் (ரலி) அவர்களின் சிறப்புகள்44
3809. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ் உங்களுக்கு, “வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள இறைமறுப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும்வரை தங்களுடைய இறைமறுப்பிலிருந்து விலகிக்கொள்வோராய் இருக்கவில்லை...” எனும் (திருக்குர்ஆனின் 98ஆம்) அத்தியாயத்தை ஓதிக்காட்டும்படி எனக்குக் கட்டளை யிட்டான்” என்று சொன்னார்கள்.
அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (ஆனந்தம் மேலிட) அழுதார்கள்.

3810. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَرْبَعَةٌ، كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ أُبَىٌّ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو زَيْدٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ. قُلْتُ لأَنَسِ مَنْ أَبُو زَيْدٍ قَالَ أَحَدُ عُمُومَتِي.
பாடம் : 17
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர் களின் சிறப்புகள்46
3810. க(த்)தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை பின் கஅப். 2. முஆத் பின் ஜபல். 3. அபூஸைத். 4. ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர்தான் அவர்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அபூஸைத் என்பவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள்.

3811. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبُو طَلْحَةَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُجَوِّبٌ بِهِ عَلَيْهِ بِحَجَفَةٍ لَهُ، وَكَانَ أَبُو طَلْحَةَ رَجُلاً رَامِيًا شَدِيدَ الْقِدِّ، يَكْسِرُ يَوْمَئِذٍ قَوْسَيْنِ أَوْ ثَلاَثًا، وَكَانَ الرَّجُلُ يَمُرُّ مَعَهُ الْجَعْبَةُ مِنَ النَّبْلِ فَيَقُولُ انْشُرْهَا لأَبِي طَلْحَةَ. فَأَشْرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْظُرُ إِلَى الْقَوْمِ، فَيَقُولُ أَبُو طَلْحَةَ يَا نَبِيَّ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي، لاَ تُشْرِفْ يُصِيبُكَ سَهْمٌ مِنْ سِهَامِ الْقَوْمِ، نَحْرِي دُونَ نَحْرِكَ. وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ، أَرَى خَدَمَ سُوقِهِمَا، تُنْقِزَانِ الْقِرَبَ عَلَى مُتُونِهِمَا، تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ، ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلآنِهَا، ثُمَّ تَجِيآنِ فَتُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ، وَلَقَدْ وَقَعَ السَّيْفُ مِنْ يَدَىْ أَبِي طَلْحَةَ إِمَّا مَرَّتَيْنِ، وَإِمَّا ثَلاَثًا.
பாடம் : 18
அபூதல்ஹா (ரலி) அவர்களின் சிறப்புகள்47
3811. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார் கள்.
மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கை யில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்துவிடுவார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக்கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், “அதை அபூதல்ஹாவிடம் போடு” என்று சொல்வார்கள்.
அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப்பார்க்க, அபூதல்ஹா அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கிவிடலாம். (தாங்கள் எட்டிப்பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்” என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டு) இருந்ததை நான் கண்டேன்.
அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச்சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச்சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக்கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசு களை நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.48

3812. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ سَمِعْتُ مَالِكًا، يُحَدِّثُ عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لأَحَدٍ يَمْشِي عَلَى الأَرْضِ إِنَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ. إِلاَّ لِعَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ قَالَ وَفِيهِ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَشَهِدَ شَاهِدٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ} الآيَةَ. قَالَ لاَ أَدْرِي قَالَ مَالِكٌ الآيَةَ أَوْ فِي الْحَدِيثِ.
பாடம் : 19
அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்49
3812. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், “இவர் சொர்க்கவாசி” என்று சொல்லி நான் கேட்டதில்லை; அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைத் தவிர. அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைக் குறித்தே, “மேலும், இஸ்ரவேலர்களிலிருந்து சாட்சியம் சொல்பவர் ஒருவர் இதுபோன்ற வேதத்திற்குச் சாட்சியம் கூறியுள்ளார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்” எனும் (46:10) இறைவசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் யூசுஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை அறிவித்த இமாம்) மாலிக் (ரஹ்) அவர்கள் இந்த இறைவசனம் அருளப்பெற்ற காரணத்தை (தாமாகவே) சொன்னார்களா; அல்லது இந்த ஹதீஸிலேயே (இந்த இறைவசனம்) இடம் பெற்றிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது.

3813. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَزْهَرُ السَّمَّانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، قَالَ كُنْتُ جَالِسًا فِي مَسْجِدِ الْمَدِينَةِ، فَدَخَلَ رَجُلٌ عَلَى وَجْهِهِ أَثَرُ الْخُشُوعِ، فَقَالُوا هَذَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ. فَصَلَّى رَكْعَتَيْنِ تَجَوَّزَ فِيهِمَا ثُمَّ خَرَجَ، وَتَبِعْتُهُ فَقُلْتُ إِنَّكَ حِينَ دَخَلْتَ الْمَسْجِدَ قَالُوا هَذَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ. قَالَ وَاللَّهِ مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقُولَ مَا لاَ يَعْلَمُ وَسَأُحَدِّثُكَ لِمَ ذَاكَ رَأَيْتُ رُؤْيَا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَصَصْتُهَا عَلَيْهِ، وَرَأَيْتُ كَأَنِّي فِي رَوْضَةٍ ـ ذَكَرَ مِنْ سَعَتِهَا وَخُضْرَتِهَا ـ وَسْطَهَا عَمُودٌ مِنْ حَدِيدٍ، أَسْفَلُهُ فِي الأَرْضِ وَأَعْلاَهُ فِي السَّمَاءِ، فِي أَعْلاَهُ عُرْوَةٌ فَقِيلَ لَهُ ارْقَهْ. قُلْتُ لاَ أَسْتَطِيعُ. فَأَتَانِي مِنْصَفٌ فَرَفَعَ ثِيَابِي مِنْ خَلْفِي، فَرَقِيتُ حَتَّى كُنْتُ فِي أَعْلاَهَا، فَأَخَذْتُ بِالْعُرْوَةِ، فَقِيلَ لَهُ اسْتَمْسِكْ. فَاسْتَيْقَظْتُ وَإِنَّهَا لَفِي يَدِي، فَقَصَصْتُهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" تِلْكَ الرَّوْضَةُ الإِسْلاَمُ، وَذَلِكَ الْعَمُودُ عَمُودُ الإِسْلاَمِ، وَتِلْكَ الْعُرْوَةُ عُرْوَةُ الْوُثْقَى، فَأَنْتَ عَلَى الإِسْلاَمِ حَتَّى تَمُوتَ "". وَذَاكَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ عُبَادٍ، عَنِ ابْنِ سَلاَمٍ، قَالَ وَصِيفٌ مَكَانَ مِنْصَفٌ.
பாடம் : 19
அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்49
3813. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் தமது முகத்தில் சிரம்பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், “இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்” என்று சொன்னார்கள். அவர் இரு ரக்அத்கள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார்.
பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “நீங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், “இவர் சொர்க்கவாசி' என்று கூறினர்” என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன்:
அதாவது நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பதைப் போன்று கண்டேன்- அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் -அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், “இதில் ஏறு” என்று சொல்லப்பட்டது.
நான், “என்னால் இயலாதே” என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து தூக்கிவிட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்ட போது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், “நன்கு பற்றிப் பிடித்துக்கொள்” என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித் தெழுந்தேன்.
நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, “அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறைநம்பிக்கை என்னும்) பிடியாகும். ஆகவே, நீங்கள் இறக்கும்வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள்தான்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதில் “பணியாள்' என்பதற்குப் பதிலாக “சிறிய பணியாள்' எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

3814. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، أَتَيْتُ الْمَدِينَةَ فَلَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ ـ رضى الله عنه ـ فَقَالَ أَلاَ تَجِيءُ فَأُطْعِمَكَ سَوِيقًا وَتَمْرًا، وَتَدْخُلَ فِي بَيْتٍ ثُمَّ قَالَ إِنَّكَ بِأَرْضٍ الرِّبَا بِهَا فَاشٍ، إِذَا كَانَ لَكَ عَلَى رَجُلٍ حَقٌّ فَأَهْدَى إِلَيْكَ حِمْلَ تِبْنٍ، أَوْ حِمْلَ شَعِيرٍ أَوْ حِمْلَ قَتٍّ، فَلاَ تَأْخُذْهُ، فَإِنَّهُ رِبًا. وَلَمْ يَذْكُرِ النَّضْرُ وَأَبُو دَاوُدَ وَوَهْبٌ عَنْ شُعْبَةَ الْبَيْتَ.
பாடம் : 19
அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்49
3814. அபூபுர்தா ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), “நீங்கள் (என்னுடன்) வரமாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேரீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் (நபி (ஸல்) அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே” என்று கேட்டார்கள்.
பிறகு, “நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து, அவர் ஒரு வைக்கோல் போரையோ, தொலிநீக்கப்படாத கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத் தாலும் அதுவும் வட்டியாகும்” (அதைத் தவிர்ப்பதே நல்லது) என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில தொடர்களில் “(என்) வீட்டிற்கு' எனும் சொல் இடம்பெறவில்லை.

3815. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ح حَدَّثَنِي صَدَقَةُ أَخْبَرَنَا عَبْدَةُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ عَنْ عَلِيٍّ ـ رضى الله عنهم ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ، وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ "".
பாடம் : 20
கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்ட தும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்50
3815. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகின் பெண்களிலேயே (அன்று) சிறந்தவர் மர்யம் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார்.
இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.51
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.