3569. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ قَالَتْ مَا كَانَ يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ تَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ قَالَ "" تَنَامُ عَيْنِي وَلاَ يَنَامُ قَلْبِي "".
பாடம் : 24
யிஞீநபி (ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை”.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர் (ரலி) அவர்களும் அவர்களிட மிருந்து சயீத் பின் மீனா (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.80
3569. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளானி லும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்களுக்குமேல் தொழுத தில்லை. (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் நீர் கேட்க வேண்டிய தில்லை. பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் நீர் கேட்க வேண்டிய தில்லை. பிறகு மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள்.81
அத்தியாயம் : 61

3570. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُنَا عَنْ لَيْلَةِ، أُسْرِيَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ مَسْجِدِ الْكَعْبَةِ جَاءَ ثَلاَثَةُ نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ، وَهُوَ نَائِمٌ فِي مَسْجِدِ الْحَرَامِ، فَقَالَ أَوَّلُهُمْ أَيُّهُمْ هُوَ فَقَالَ أَوْسَطُهُمْ هُوَ خَيْرُهُمْ وَقَالَ آخِرُهُمْ خُذُوا خَيْرَهُمْ. فَكَانَتْ تِلْكَ، فَلَمْ يَرَهُمْ حَتَّى جَاءُوا لَيْلَةً أُخْرَى، فِيمَا يَرَى قَلْبُهُ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم نَائِمَةٌ عَيْنَاهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ وَكَذَلِكَ الأَنْبِيَاءُ تَنَامُ أَعْيُنُهُمْ وَلاَ تَنَامُ قُلُوبُهُمْ، فَتَوَلاَّهُ جِبْرِيلُ ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ.
பாடம் : 24
யிஞீநபி (ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை”.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர் (ரலி) அவர்களும் அவர்களிட மிருந்து சயீத் பின் மீனா (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.80
3570. அப்துல்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபா வின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு (மீண்டும்) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக்கொண்டிருந்தபோது (வானவர் களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார் கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், “இவர்களில் சிறந்தவர்” என்று பதிலளித்தார்.82
அவர்களில் இறுதியானவர், “இவர் களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும்தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில் (உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோதுதான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும்தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித்தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்கா.
ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர் களைத் தம்முடன் அழைத்துக்கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.83

3571. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، سَمِعْتُ أَبَا رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، أَنَّهُمْ كَانُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي مَسِيرٍ، فَأَدْلَجُوا لَيْلَتَهُمْ حَتَّى إِذَا كَانَ وَجْهُ الصُّبْحِ عَرَّسُوا فَغَلَبَتْهُمْ أَعْيُنُهُمْ حَتَّى ارْتَفَعَتِ الشَّمْسُ، فَكَانَ أَوَّلَ مَنِ اسْتَيْقَظَ مِنْ مَنَامِهِ أَبُو بَكْرٍ، وَكَانَ لاَ يُوقَظُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ مَنَامِهِ حَتَّى يَسْتَيْقِظَ، فَاسْتَيْقَظَ عُمَرُ فَقَعَدَ أَبُو بَكْرٍ عِنْدَ رَأْسِهِ فَجَعَلَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ، حَتَّى اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَنَزَلَ وَصَلَّى بِنَا الْغَدَاةَ، فَاعْتَزَلَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لَمْ يُصَلِّ مَعَنَا فَلَمَّا انْصَرَفَ قَالَ "" يَا فُلاَنُ مَا يَمْنَعُكَ أَنْ تُصَلِّيَ مَعَنَا "". قَالَ أَصَابَتْنِي جَنَابَةٌ. فَأَمَرَهُ أَنْ يَتَيَمَّمَ بِالصَّعِيدِ، ثُمَّ صَلَّى وَجَعَلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَكُوبٍ بَيْنَ يَدَيْهِ، وَقَدْ عَطِشْنَا عَطَشًا شَدِيدًا فَبَيْنَمَا نَحْنُ نَسِيرُ إِذَا نَحْنُ بِامْرَأَةٍ سَادِلَةٍ رِجْلَيْهَا بَيْنَ مَزَادَتَيْنِ، فَقُلْنَا لَهَا أَيْنَ الْمَاءُ فَقَالَتْ إِنَّهُ لاَ مَاءَ. فَقُلْنَا كَمْ بَيْنَ أَهْلِكِ وَبَيْنَ الْمَاءِ قَالَتْ يَوْمٌ وَلَيْلَةٌ. فَقُلْنَا انْطَلِقِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَتْ وَمَا رَسُولُ اللَّهِ فَلَمْ نُمَلِّكْهَا مِنْ أَمْرِهَا حَتَّى اسْتَقْبَلْنَا بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم، فَحَدَّثَتْهُ بِمِثْلِ الَّذِي حَدَّثَتْنَا غَيْرَ أَنَّهَا حَدَّثَتْهُ أَنَّهَا مُؤْتِمَةٌ، فَأَمَرَ بِمَزَادَتَيْهَا فَمَسَحَ فِي الْعَزْلاَوَيْنِ، فَشَرِبْنَا عِطَاشًا أَرْبَعِينَ رَجُلاً حَتَّى رَوِينَا، فَمَلأْنَا كُلَّ قِرْبَةٍ مَعَنَا وَإِدَاوَةٍ، غَيْرَ أَنَّهُ لَمْ نَسْقِ بَعِيرًا وَهْىَ تَكَادُ تَنِضُّ مِنَ الْمِلْءِ ثُمَّ قَالَ "" هَاتُوا مَا عِنْدَكُمْ "". فَجُمِعَ لَهَا مِنَ الْكِسَرِ وَالتَّمْرِ، حَتَّى أَتَتْ أَهْلَهَا قَالَتْ لَقِيتُ أَسْحَرَ النَّاسِ، أَوْ هُوَ نَبِيٌّ كَمَا زَعَمُوا، فَهَدَى اللَّهُ ذَاكَ الصِّرْمَ بِتِلْكَ الْمَرْأَةِ فَأَسْلَمَتْ وَأَسْلَمُوا.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3571. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிலிருந்து திரும்பி வந்துகொண்டு)இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டி ருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்தபொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும்வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்துவிட்டோம்.
உறக்கத்திலிருந்து கண்விழித்தவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களே முதலாமவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்திலிருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து உமர் (ரலி) அவர்களும் கண்விழித்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டு குரலை உயர்த்தி “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறலானார்கள்.85
உடனே நபி (ஸல்) அவர்கள் கண் விழித்து (சிறிது தொலைவு சென்றதன்)பின் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி எங்களுக்கு அதிகாலைத் தொழுகையைத் தொழுவித்தார்கள். அப்போது ஒரு மனிதர் எங்களுடன் தொழாமல் கூட்டத்தாரை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியவுடன், “இன்னாரே! எங்களுடன் நீ ஏன் தொழவில்லை?” என்று கேட்டார் கள். அவர், “எனக்குப் “பெருந்துடக்கு' ஏற்பட்டுவிட்டது” என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் மண்ணில் “தயம்மும்' செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு அவர் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் தமக்கு முன்னால் அமர்த்தினார்கள். எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது.
நாங்கள் பயணம் சென்றுகொண்டிருக்கும்போது (ஒட்டகத்தின் மீது) தோலால் ஆன தண்ணீர் பைகள் இரண்டிற்கிடையே தன் இரு கால்களையும் தொங்கவிட்டிருந்த பெண்ணொருத்தியை நாங்கள் கண்டோம்.
அவளிடம் நாங்கள், “தண்ணீர் எங்கே (உள்ளது)?” என்று கேட்டோம். அதற்கு அவள், “தண்ணீர் (இங்கு) இல்லை” என்று சொன்னாள். நாங்கள், “உன் வீட்டாரு(ள்ள இந்தப் பகுதி)க்கும் தண்ணீ(ருள்ள இடத்து)க்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?” என்று கேட்டோம். அவள், “ஒரு பகலும் ஓர் இரவும் (பயணம் செய்யும் தூரம்)” என்று சொன்னாள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட” என்று சொன்னோம். அவள், “அல்லாஹ்வின் தூதர் என்றால் யார்?” என்று கேட்டாள். அவளை (தண்ணீர் தரச்) சம்மதிக்க வைக்க எங்களால் முடிய வில்லை. இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம்.
அவள் நபி (ஸல்) அவர்களிடமும் எங்களிடம் பேசியதைப் போன்றே பேசினாள். தான் அநாதைக் குழந்தைகளின் தாய் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதைத் தவிர. உடனே, நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தண்ணீர் பைகள் இரண்டையும் கொண்டுவரச் சொல்லிக் கட்டளையிட்டு அவற்றின் வாய்கள் இரண்டிலும் (தம் கரத்தால்) தடவினார்கள். தாகமுடனிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகம் தீரும்வரை (அவற்றிலிருந்து) தண்ணீர் பருகினோம். எங்களுடன் இருந்த ஒவ்வொரு தோல் பையையும் ஒவ்வொரு தோல் பாத்திரத்தையும் நாங்கள் நிரப்பிக்கொண்டோம். (எங்கள்) ஒட்டகம் ஒன்றுக்கு மட்டும் (அதனால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால்) தண்ணீர் புகட்டவில்லை. அந்தத் தோல் பை (தண்ணீர்) நிரம்பி வழிந்த காரணத்தால் (அதன்) வாய் பிளந்துபோக இருந்தது.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “உங்களிடம் இருக்கும் (உணவுப்) பொருள்களைக் கொண்டுவாருங்கள்” என்று (தம் தோழர்களுக்கு) உத்தரவிட்டார்கள். (தோழர்களும் கொண்டு வந்து தர), நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்று திரட்டி (அவளுக்கு வழங்கி) னார்கள். இறுதியில், அவள் தன் வீட்டாரிடம் சென்று, “நான் மக்களிலேயே மிக வசீகரமான ஒருவரை, அல்லது அவர்கள் (முஸ்லிம்கள்) நம்புவதைப் போல் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தேன்” என்று சொன்னாள்.
அல்லாஹ் (அவளது) அந்தக் குலத்தாருக்கு அப்பெண்ணின் வாயிலாக நல்வழி காட்டினான். ஆகவே, அவளும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.86

3572. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِإِنَاءٍ وَهْوَ بِالزَّوْرَاءِ، فَوَضَعَ يَدَهُ فِي الإِنَاءِ، فَجَعَلَ الْمَاءُ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ، فَتَوَضَّأَ الْقَوْمُ. قَالَ قَتَادَةُ قُلْتُ لأَنَسٍ كَمْ كُنْتُمْ قَالَ ثَلاَثَمِائَةٍ، أَوْ زُهَاءَ ثَلاَثِمِائَةٍ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3572. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள், (மதீனாவிலுள்ள) “ஸவ்ரா' என்னுமிடத்தில் இருந்தபோது அவர்களிடம் (தண்ணீர் இருந்த) ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் தமது கரத்தைப் பாத்திரத்தினுள் போட, அவர்களுடைய கை விரல்களுக்கிடையே யிருந்து தண்ணீர் (ஊற்று போல்) பொங்கி வரலாயிற்று. மக்கள் அனைவரும் (அந்தத் தண்ணீரில்) அங்கத் தூய்மை செய்தார் கள்.
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முன்னூறு பேர்” என்றோ, “முன்னூறு பேர் அளவுக்கு” என்றோ சொன்னார்கள்.

3573. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتْ صَلاَةُ الْعَصْرِ، فَالْتُمِسَ الْوَضُوءُ فَلَمْ يَجِدُوهُ فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فِي ذَلِكَ الإِنَاءِ، فَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ، فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ، فَتَوَضَّأَ النَّاسُ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3573. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அப்போது அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிட்டிருந்தது. அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரைத் தேடியும் அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அங்கத் தூய்மை செய்யும் தண்ணீர் (சிறிது) கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தப் பாத்திரத்தில் தமது கரத்தை வைத்தார்கள்; பிறகு அதிலிருந்து அங்கத் தூய்மை செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுடைய விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்கிவருவதை நான் கண்டேன். மக்கள் (அதிலிருந்து) அங்கத் தூய்மை செய்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் கடைசி நபர்வரை (அதிலேயே) அங்கத் தூய்மை செய்து முடித்தார்கள்.87

3574. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُبَارَكٍ، حَدَّثَنَا حَزْمٌ، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَعْضِ مَخَارِجِهِ وَمَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَانْطَلَقُوا يَسِيرُونَ، فَحَضَرَتِ الصَّلاَةُ فَلَمْ يَجِدُوا مَاءً يَتَوَضَّئُونَ، فَانْطَلَقَ رَجُلٌ مِنَ الْقَوْمِ، فَجَاءَ بِقَدَحٍ مِنْ مَاءٍ يَسِيرٍ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ، ثُمَّ مَدَّ أَصَابِعَهُ الأَرْبَعَ عَلَى الْقَدَحِ ثُمَّ قَالَ "" قُومُوا فَتَوَضَّئُوا "". فَتَوَضَّأَ، الْقَوْمُ حَتَّى بَلَغُوا فِيمَا يُرِيدُونَ مِنَ الْوَضُوءِ، وَكَانُوا سَبْعِينَ أَوْ نَحْوَهُ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3574. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தமது பயணம் ஒன்றுக்காகப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தார்கள். அவர்கள் பயணம் சென்றுகொண்டிருந்தபோது தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கிடைக்கவில்லை. பயணக் கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் சென்று சிறிதளவு தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அதை எடுத்து அங்கத் தூய்மை செய்தார்கள்.
பிறகு தம் கை விரல்களில் நான்கைப் பாத்திரத்தின் மீது நீட்டி, “எழுந்து அங்கத் தூய்மை செய்யுங்கள்” என்று உத்தரவிட் டார்கள். மக்கள் அனைவரும் அங்கத் தூய்மை செய்தனர். அவர்கள் விரும்பிய அளவுக்கு அங்கத் தூய்மை செய்வதற் குள்ள தண்ணீரைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் எழுபது அல்லது (கிட்டத்தட்ட) அந்த அளவு எண்ணிக்கையினராக இருந்தனர்.

3575. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ يَزِيدَ، أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ حَضَرَتِ الصَّلاَةُ فَقَامَ مَنْ كَانَ قَرِيبَ الدَّارِ مِنَ الْمَسْجِدِ يَتَوَضَّأُ، وَبَقِيَ قَوْمٌ، فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِخْضَبٍ مِنْ حِجَارَةٍ فِيهِ مَاءٌ، فَوَضَعَ كَفَّهُ فَصَغُرَ الْمِخْضَبُ أَنْ يَبْسُطَ فِيهِ كَفَّهُ، فَضَمَّ أَصَابِعَهُ فَوَضَعَهَا فِي الْمِخْضَبِ، فَتَوَضَّأَ الْقَوْمُ كُلُّهُمْ جَمِيعًا. قُلْتُ كَمْ كَانُوا قَالَ ثَمَانُونَ رَجُلاً.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3575. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(ஒருமுறை) தொழுகை நேரம் வந்தது. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் வீடு அமைந்திருந்தவர்களெல்லாரும் அங்கத் தூய்மை செய்ய எழுந்தனர். (பள்ளிவாசல் அருகில் வீடில்லாத) ஒரு கூட்டத்தார் (அங்கத் தூய்மை செய்ய வழியறியாமல்) எஞ்சியிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள கல்லால் ஆன ஏனம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் (அதில்) தமது கையை வைத்(துப் பார்த்)தார்கள். அதில் அவர்கள் தமது கரத்தை விரித்து வைக்கும் அளவுக்கு அந்தக் கல் ஏனம் பெரிதாக இருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் தம் விரல்களை இணைத்து கல் ஏனத்தில் வைத்தார்கள். மக்கள் அனை வரும் (அதிலிருந்து) அங்கத் தூய்மை செய்தனர்.
அறிவிப்பாளர் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான், “அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “எண்பது பேர்' என்று பதிலளித்தார்கள்.88

3576. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ عَطِشَ النَّاسُ يَوْمَ الْحُدَيْبِيَةِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ فَتَوَضَّأَ فَجَهَشَ النَّاسُ نَحْوَهُ، فَقَالَ "" مَا لَكُمْ "". قَالُوا لَيْسَ عِنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ وَلاَ نَشْرَبُ إِلاَّ مَا بَيْنَ يَدَيْكَ، فَوَضَعَ يَدَهُ فِي الرَّكْوَةِ فَجَعَلَ الْمَاءُ يَثُورُ بَيْنَ أَصَابِعِهِ كَأَمْثَالِ الْعُيُونِ، فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا. قُلْتُ كَمْ كُنْتُمْ قَالَ لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا، كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3576. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். மக்கள், “தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் அங்கத் தூய்மை செய்வதற்கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை” என்று பதிலளித்தனர்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கையைத் தோல் குவளையினுள் இட்டார்கள். உடனே, அவர்களுடைய விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத்தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தி னோம்; மேலும், அங்கத் தூய்மை செய்தோம்.
அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும்கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர்தான் இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.

3577. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَرْبَعَ عَشْرَةَ مِائَةً، وَالْحُدَيْبِيَةُ بِئْرٌ فَنَزَحْنَاهَا حَتَّى لَمْ نَتْرُكْ فِيهَا قَطْرَةً، فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَفِيرِ الْبِئْرِ، فَدَعَا بِمَاءٍ فَمَضْمَضَ وَمَجَّ فِي الْبِئْرِ، فَمَكَثْنَا غَيْرَ بَعِيدٍ ثُمَّ اسْتَقَيْنَا حَتَّى رَوِينَا وَرَوَتْ ـ أَوْ صَدَرَتْ ـ رَكَائِبُنَا.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3577. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நிகழ்ச்சியின்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந் தோம்.89 ஹுதைபியா என்பது (மக்காவிó ருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணறாகும். நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) இறைத்தோம். எந்த அளவுக் கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டார்கள். பிறகு சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்புளித்தார்கள். பிறகு (தம் வாயிலிருந்த நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம்.
பிறகு நாங்கள் தாகம் தீரும்வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும் - அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும் - நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர்) இறைத்தோம்.

3578. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ أَبُو طَلْحَةَ لأُمِّ سُلَيْمٍ لَقَدْ سَمِعْتُ صَوْتَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ضَعِيفًا، أَعْرِفُ فِيهِ الْجُوعَ فَهَلْ عِنْدَكِ مِنْ شَىْءٍ قَالَتْ نَعَمْ. فَأَخْرَجَتْ أَقْرَاصًا مِنْ شَعِيرٍ، ثُمَّ أَخْرَجَتْ خِمَارًا لَهَا فَلَفَّتِ الْخُبْزَ بِبَعْضِهِ، ثُمَّ دَسَّتْهُ تَحْتَ يَدِي وَلاَثَتْنِي بِبَعْضِهِ، ثُمَّ أَرْسَلَتْنِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَذَهَبْتُ بِهِ، فَوَجَدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ وَمَعَهُ النَّاسُ، فَقُمْتُ عَلَيْهِمْ فَقَالَ لِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "" آرْسَلَكَ أَبُو طَلْحَةَ "". فَقُلْتُ نَعَمْ. قَالَ بِطَعَامٍ. فَقُلْتُ نَعَمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِمَنْ مَعَهُ "" قُومُوا "". فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ حَتَّى جِئْتُ أَبَا طَلْحَةَ فَأَخْبَرْتُهُ. فَقَالَ أَبُو طَلْحَةَ يَا أُمَّ سُلَيْمٍ، قَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالنَّاسِ، وَلَيْسَ عِنْدَنَا مَا نُطْعِمُهُمْ. فَقَالَتِ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَانْطَلَقَ أَبُو طَلْحَةَ حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو طَلْحَةَ مَعَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَلُمِّي يَا أُمَّ سُلَيْمٍ مَا عِنْدَكِ "". فَأَتَتْ بِذَلِكَ الْخُبْزِ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَفُتَّ، وَعَصَرَتْ أُمُّ سُلَيْمٍ عُكَّةً فَأَدَمَتْهُ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيهِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، ثُمَّ قَالَ "" ائْذَنْ لِعَشَرَةٍ "". فَأَذِنَ لَهُمْ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ "" ائْذَنْ لِعَشَرَةٍ "". فَأَذِنَ لَهُمْ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ "" ائْذَنْ لِعَشَرَةٍ "". فَأَذِنَ لَهُمْ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا ثُمَّ قَالَ "" ائْذَنْ لِعَشَرَةٍ "". فَأَكَلَ الْقَوْمُ كُلُّهُمْ وَشَبِعُوا، وَالْقَوْمُ سَبْعُونَ ـ أَوْ ثَمَانُونَ ـ رَجُلاً.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3578. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களி டம், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக் கிருக்கும்) பசியைப் புரிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “ஆம், இருக்கி றது” என்று கூறிவிட்டு தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள்.
பிறகு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியால் என் கையைக் கட்டிவிட்டார்கள்.90 பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டுசென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்குமுன் நின்றேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். “உணவுடனா அனுப்பியுள்ளார்?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், “எழுந்திருங்கள்' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்துகொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன்.
உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), “உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே” என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே அறிந்தவர் கள்” என்று கூறினார்கள்.
உடனே அபூதல்ஹா (தாமே நபி (ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா தம்முடனிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, “உம்மு சுலைமே! உங்களிடமிருப்பதைக் கொண்டுவாருங் கள்!” என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள்.
பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ்வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) சொன்னார்கள். பிறகு, “பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினர்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினர். பிறகு, “பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
பிறகு அவர்கள் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, “பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினர். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் ஆவர்.

3579. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا نَعُدُّ الآيَاتِ بَرَكَةً وَأَنْتُمْ تَعُدُّونَهَا تَخْوِيفًا، كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَلَّ الْمَاءُ فَقَالَ "" اطْلُبُوا فَضْلَةً مِنْ مَاءٍ "". فَجَاءُوا بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَلِيلٌ، فَأَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، ثُمَّ قَالَ "" حَىَّ عَلَى الطَّهُورِ الْمُبَارَكِ، وَالْبَرَكَةُ مِنَ اللَّهِ "" فَلَقَدْ رَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَقَدْ كُنَّا نَسْمَعُ تَسْبِيحَ الطَّعَامِ وَهْوَ يُؤْكَلُ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3579. அல்கமா (ரஹ்) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளை அருள்வளம் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். நீங்களோ அவற்றை அச்சுறுத்தல் என்று எண்ணு கிறீர்கள்.91 நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “மீதமான தண்ணீர் ஏதும் இருக்கிறதா என்று தேடுங்கள்” என உத்தரவிட்டார்கள்.
மக்கள் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தைக் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தைப் பாத்திரத்தில் நுழைத்து, “அருள் வளமிக்க, தூய்மை செய்யும் தண்ணீரின் பக்கம் வாருங்கள். அருள்வளம் என்பது அல்லாஹ்விடமிருந்து கிடைப்பதாகும்” என்று சொன்னார்கள்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களுக் கிடையேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்குவதைக் கண்டேன். (நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில்) உணவு உண்ணப்பட்டுக்கொண்டிருக்கும்போது அது இறைவனைத் துதிப்பதை -தஸ்பீஹ் செய்வதை- நாங்கள் கேட்டிருக்கிறோம்.

3580. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ حَدَّثَنِي عَامِرٌ، قَالَ حَدَّثَنِي جَابِرٌ ـ رضى الله عنه ـ أَنَّ أَبَاهُ، تُوُفِّيَ وَعَلَيْهِ دَيْنٌ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنَّ أَبِي تَرَكَ عَلَيْهِ دَيْنًا وَلَيْسَ عِنْدِي إِلاَّ مَا يُخْرِجُ نَخْلُهُ، وَلاَ يَبْلُغُ مَا يُخْرِجُ سِنِينَ مَا عَلَيْهِ، فَانْطَلِقْ مَعِي لِكَىْ لاَ يُفْحِشَ عَلَىَّ الْغُرَمَاءُ. فَمَشَى حَوْلَ بَيْدَرٍ مِنْ بَيَادِرِ التَّمْرِ فَدَعَا ثَمَّ آخَرَ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ فَقَالَ "" انْزِعُوهُ "". فَأَوْفَاهُمُ الَّذِي لَهُمْ، وَبَقِيَ مِثْلُ مَا أَعْطَاهُمْ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3580. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
என் தந்தை, தம்மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “என் தந்தை, தம்மீதிருந்த கடனை (அடைக் காமல்) அப்படியே விட்டுச் சென்றுவிட்டார். என்னிடம் அவருடைய பேரீச்ச மரங் களின் விளைச்சலைத் தவிர வேறெதுவும் இல்லை. அந்தப் பேரீச்ச மரங்களின் பல ஆண்டுகளின் விளைச்சல்கூட அவர் மீதுள்ள கடனை அடைக்கும் அளவுக்கு எட்டாது. ஆகவே, கடன்காரர்கள் என்னைக் கடும் சொற்களைப் பயன்படுத்திஏசாமலிருப்பதற்காக நீங்கள் என்னுடன் வாருங்கள்” என்று சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள் (என்னுடன் வந்து) பேரீச்சம் பழங்களைச் சேமித்துக் காய வைக்கும் களங்களில் ஒன்றைச் சுற்றி நடந்து (அருள்வளம் வேண்டி) பிரார்த் தனை செய்தார்கள். பிறகு மற்றொரு களத்தையும் சுற்றி நடந்தார்கள். (பிறகு அருள்வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்) பிறகு அதன் அருகில் அமர்ந்துகொண்டு, “அதை வெளியே எடுங்கள்” என்று சொன்னார்கள்.
கடன்காரர்களுக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடுத்தார்கள். அவர்களுக்குக் கொடுத்த அதே அளவுக்கு அது மீதமாகிவிட்டது.92
3581 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்கள்93 ஏழைகளாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை, “எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை (தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். எவரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கின்றதோ அவர் தம்முடன் ஐந்தாமவரையும் ஆறாமவரை யும் அழைத்துச் செல்லட்டும்” என்று கூறினார்கள். அல்லது இதைப் போன்று கூறினார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேரை அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப் பேருடன் நடந்தார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேரை அழைத்து வர, அப்போது வீட்டில் நானும் (அப்துர் ரஹ்மான்), என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டிற்கும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்துவந்த பணிப்பெண்ணும்தான் இருந்தோம்.
“என் மனைவியும்...' என்று அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது (சந்தேகமாக இருக்கிறது)- என அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷா தொழுகை தொழும்வரை அவர்களிடம் தங்கினார்கள். பிறகு (தொழுகையிலிருந்து) திரும்பிவந்து நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும்வரை (அங்கேயே) தங்கியிருந் தார்கள். (இவ்வாறு) இரவிலிருந்து அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்தபிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டிற்கு) வந்தார்கள்.
அவர்களுடைய மனைவி அவர்களி டம் உங்கள் விருந்தாளிகளை- அல்லது உங்கள் விருந்தாளியை- உபசரிக்க வராமல் தாமதமானதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “விருந்தினருக்கு நீ இரவு உணவை அளித்தாயா?” என்று கேட்டார் கள். அதற்கு அவர்கள், “நீங்கள் வரும் வரை உண்ண முடியாதென்று அவர்கள் மறுத்துவிட்டார்கள்; (நம் வீட்டார்) அவர்களுக்குமுன் உணவை வைத்து உண்ணும்படி கூறியும் அவர்கள் (உண்ண மறுத்து) அவர்களைச் சும்மாயிருக்கச் செய்துவிட்டனர்” என்று பதிலளித்தார்கள்.
(என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்றஞ்சி) நான் சென்று ஒளிந்துகொண்டேன். அவர்கள், “தடியா!!” (என்று கோபத்துடன்) அழைத்து, “உன் மூக்கறுந்துபோக!' என்று திட்டினார்கள். (தோழர்களை நோக்கி,) “நீங்கள் உண்ணுங் கள்” என்று கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி, “என்னை எதிர்பார்த்துத்தானே இவ்வளவு தாமதம் செய்தீர்கள்!) நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவளத்தை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகிப் பெருகிக்கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் வ”ôர உண்டனர். அப்போது அந்த உணவு முன்பிருந்ததை விட அதிகமாகிவிட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அதைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதைவிட அதிகமாகத் தென்பட்டது. உடனே அவர்கள் தம் துணைவியாரிடம் “பனூ ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! (என்ன இது?)” என்று கேட்க அவர்கள், “என் கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு மூன்று மடங்கு அதிகமாகி விட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் உண்டார்கள்.
மேலும், “(நான் ஒருபோதும் உண்ண மாட்டேன் என்று என்னைச் சத்தியம் செய்யவைத்தது) ஷைத்தான்தான்” என்று சொன்னார்கள். பிறகு அதிலிருந்து (மேலும்) ஒரு கவளம் உண்டார்கள். பிறகு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள். பிறகு, அது அவர்களிடம் இருக்கலாயிற்று. எங்களுக்கும் ஒரு சமுதாயத்தாருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிட்டது.
(இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர்கொள்வதற்காக,) நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள். ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். எனினும், நபி (ஸல்) அவர்கள் படையினருடன் (அந்த உணவிலிருந்து) அவர்களுடைய பங்கு (உணவு)தனையும் கொடுத்தனுப்பி னார்கள். அவர்கள் அனைவரும் (அதிலிருந்து) உண்டார்கள்.94
ஸஹீஹ‚ல் புகாரீயின் மற்றொரு பிரதியில், (“எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து” என்பதற்குப் பதிலாக,) “எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி” என்று இடம்பெற்றுள்ளது.

3582. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، وَعَنْ يُونُسَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَصَابَ أَهْلَ الْمَدِينَةِ قَحْطٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَبَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ جُمُعَةٍ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الْكُرَاعُ، هَلَكَتِ الشَّاءُ، فَادْعُ اللَّهَ يَسْقِينَا، فَمَدَّ يَدَيْهِ وَدَعَا. قَالَ أَنَسٌ وَإِنَّ السَّمَاءَ لَمِثْلُ الزُّجَاجَةِ فَهَاجَتْ رِيحٌ أَنْشَأَتْ سَحَابًا ثُمَّ اجْتَمَعَ، ثُمَّ أَرْسَلَتِ السَّمَاءُ عَزَالِيَهَا، فَخَرَجْنَا نَخُوضُ الْمَاءَ حَتَّى أَتَيْنَا مَنَازِلَنَا، فَلَمْ نَزَلْ نُمْطَرُ إِلَى الْجُمُعَةِ الأُخْرَى، فَقَامَ إِلَيْهِ ذَلِكَ الرَّجُلُ ـ أَوْ غَيْرُهُ ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ، فَادْعُ اللَّهَ يَحْبِسْهُ. فَتَبَسَّمَ ثُمَّ قَالَ "" حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا "". فَنَظَرْتُ إِلَى السَّحَابِ تَصَدَّعَ حَوْلَ الْمَدِينَةِ كَأَنَّهُ إِكْلِيلٌ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3582. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மதீனாவாசிகளைப் பஞ்சம் பீடித்தது. (அந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜுமுஆ நாளில் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்த போது ஒரு (நாட்டுப்புற) மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்துவிட்டன; ஆடுகளும் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் நமக்கு மழை பொழிவிக்கட்டும்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், தமது கையை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள்.
அப்போது, வானம் (மேகங்கள் இல்லா மல்) கண்ணாடியைப் போன்றிருந்தது. (நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தவுடன்) காற்று ஒன்று வேகமாக வீசி மேகக் கூட்டத்தைத் தோற்றுவித்தது. பிறகு, அந்த மேகக் கூட்டம் ஒன்றுதிரண்டது. பிறகு, வானம் மழையைப் பொழிந்தது. நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிலிருந்து) வெளியே வந்து எங்கள் இல்லங் களை அடைந்தோம். அடுத்த ஜுமுஆ (நாள்)வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது.
ஆகவே, (மழை பெய்விக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கச் சொன்ன) அந்த மனிதர்- அல்லது வேறொரு மனிதர்- நபி (ஸல்) அவர்கள் முன்னால் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! (அடை மழையின் காரணத்தால்) வீடுகள் இடிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழையை நிறுத்தி விடட்டும்” என்று சொன்னார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்தவாறு, “(இறைவா!) எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவிப்பாயாக! எங்கள்மீது (எங்களுக்குக் கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!” என்று பிரார்த்தித்தார்கள். பின்னர் நான் மேகத்தை நோக்கினேன். அது (பல துண்டு களாகப்) பிரிந்து மதீனாவைச் சுற்றிலும் ஒரு கிரீடத்தைப் போல் வளையமிட்டி ருந்தது.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.95

3583. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو غَسَّانَ، حَدَّثَنَا أَبُو حَفْصٍ ـ وَاسْمُهُ عُمَرُ بْنُ الْعَلاَءِ أَخُو أَبِي عَمْرِو بْنِ الْعَلاَءِ ـ قَالَ سَمِعْتُ نَافِعًا، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ إِلَى جِذْعٍ فَلَمَّا اتَّخَذَ الْمِنْبَرَ تَحَوَّلَ إِلَيْهِ، فَحَنَّ الْجِذْعُ فَأَتَاهُ فَمَسَحَ يَدَهُ عَلَيْهِ. وَقَالَ عَبْدُ الْحَمِيدِ أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ الْعَلاَءِ، عَنْ نَافِعٍ، بِهَذَا. وَرَوَاهُ أَبُو عَاصِمٍ عَنِ ابْنِ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3583. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்துக் கொண்ட பின்னால் அதற்கு மாறிவிட்டார் கள். ஆகவே, (நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப் பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே நபி (ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன்மீது தமது கையை வைத்து (பரிவுடன்) வருடிக்கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3584. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُومُ يَوْمَ الْجُمُعَةِ إِلَى شَجَرَةٍ أَوْ نَخْلَةٍ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ ـ أَوْ رَجُلٌ ـ يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَجْعَلُ لَكَ مِنْبَرًا قَالَ "" إِنْ شِئْتُمْ "". فَجَعَلُوا لَهُ مِنْبَرًا، فَلَمَّا كَانَ يَوْمُ الْجُمُعَةِ دُفِعَ إِلَى الْمِنْبَرِ، فَصَاحَتِ النَّخْلَةُ صِيَاحَ الصَّبِيِّ، ثُمَّ نَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَضَمَّهُ إِلَيْهِ تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ، الَّذِي يُسَكَّنُ، قَالَ "" كَانَتْ تَبْكِي عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ عِنْدَهَا "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3584. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்- அல்லது பேரீச்சமரத்தின்- (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்தபடி (உரையாற்றிய வண்ணம்) நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரி பெண்மணி- அல்லது ஓர் அன்சாரி தோழர்- “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து தரலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)” என்று பதிலளித் தார்கள். அவ்வாறே அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சொற்பொழிவு மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள்.
ஜுமுஆ நாள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) சொற்பொழிவு மேடைக்குச் சென்றார்கள். உடனே, அந்தப் பேரீச்ச மரக்கட்டை குழந்தையைப் போல் அழலாயிற்று. பிறகு நபி (ஸல்) அவர்கள் இறங்கிச் சென்று அதைத் தம்மோடு சேர்த்து அணைத்துக்கொண் டார்கள். அது அமைதிப்படுத்தப்படும் குழந்தையைப்போல் தேம்பிய(படி அமைதியாகிவிட்ட)து. நபி (ஸல்) அவர்கள், “தன்மீது (இருந்தபடி உரை நிகழ்த்தும் போது) அது கேட்டுக்கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து (“இப்போது நம்மீது அப்படி உபதேச உரைகள் நிகழ்த் தப்படுவதில்லையே' என்று ஏங்கித்தான்) இது அழுதுகொண்டிருந்தது” என்று சொன்னார்கள்.96

3585. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ كَانَ الْمَسْجِدُ مَسْقُوفًا عَلَى جُذُوعٍ مِنْ نَخْلٍ فَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَطَبَ يَقُومُ إِلَى جِذْعٍ مِنْهَا، فَلَمَّا صُنِعَ لَهُ الْمِنْبَرُ، وَكَانَ عَلَيْهِ فَسَمِعْنَا لِذَلِكَ الْجِذْعِ صَوْتًا كَصَوْتِ الْعِشَارِ، حَتَّى جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا فَسَكَنَتْ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3585. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின்) பள்ளி வாசலுக்குப் பேரீச்ச மரத்தின் அடித்தண்டு களை (தூண் கழிகளாகப்) பயன்படுத்திக் கூரை அமைக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியபோது அவற்றில் ஒன்றின் மீது சாய்ந்துகொண்டு நிற்பது வழக்கம். அவர்களுக்காக ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) தயாரிக்கப்பட்டபோது அதன் மீது அவர்கள் (உரை நிகழ்த்திட) நின்றுகொண்டார்கள். அப்போது அது, (பத்து மாத) சினை ஒட்டகத்தைப் போன்று முனகுவதை நாங்கள் செவியுற்றோம். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் (இறங்கி) வந்து தமது கரத்தை அதன்மீது (அமைதிப்படுத்துவதற்காக) வைத்தார்கள். உடனே அது அமைதியடைந்தது.97

3586. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ،. حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبَا وَائِلٍ، يُحَدِّثُ عَنْ حُذَيْفَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْفِتْنَةِ فَقَالَ حُذَيْفَةُ أَنَا أَحْفَظُ كَمَا قَالَ. قَالَ هَاتِ إِنَّكَ لَجَرِيءٌ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّدَقَةُ وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ "". قَالَ لَيْسَتْ هَذِهِ، وَلَكِنِ الَّتِي تَمُوجُ كَمَوْجِ الْبَحْرِ. قَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لاَ بَأْسَ عَلَيْكَ مِنْهَا، إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا. قَالَ يُفْتَحُ الْبَابُ أَوْ يُكْسَرُ قَالَ لاَ بَلْ يُكْسَرُ. قَالَ ذَاكَ أَحْرَى أَنْ لاَ يُغْلَقَ. قُلْنَا عَلِمَ الْبَابَ قَالَ نَعَمْ، كَمَا أَنَّ دُونَ غَدٍ اللَّيْلَةَ، إِنِّي حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالأَغَالِيطِ. فَهِبْنَا أَنْ نَسْأَلَهُ، وَأَمَرْنَا مَسْرُوقًا، فَسَأَلَهُ فَقَالَ مَنِ الْبَابُ قَالَ عُمَرُ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3586. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “உங்களில் எவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி தலை தூக்க விருக்கும் ஃபித்னா) குழப்பத்தைப் பற்றிச் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “அதைக் கூறுங்கள், நீங்கள்தான் (நபி (ஸல்) அவர்களிடம்) துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக்கூடியவர் களாய்) இருந்தீர்கள்” என்று சொன் னார்கள்.
நான், “ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்கள்மீது அளவுகடந்து நேசம் வைப்பதன் மூலமும்), தனது செல்வம் விஷயத்தில் (அது இறைவழிபாட்டிலிருந்து கவனத்தைத் திருப்புவதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறை வைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு, தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” எனப் பதில் கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள், “நான் (“சோதனை' என்னும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போல அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பம் என்னும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்” என்று சொன்னார்கள். நான், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் காலத்தில் அவற்றில் எதுவும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அவற்றுக்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது” எனக் கூறினேன்.
உடனே உமர் (ரலி) அவர்கள், “அந்தக் கதவு திறக்கப்படுமா! அல்லது உடைக்கப் படுமா?” என்று கேட்டார்கள். நான், “அது உடைக்கப்படும்” என்று பதில் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது (உடைக்கப்பட்டுவிட்டால்) பின்னர் (மறுமை நாள்வரை) மூடப்படாமலிருக் கவே அதிகம் வாய்ப்பு உண்டு” என்று சொன்னார்கள்.
(அறிவிப்பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:)
நாங்கள் (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம்,) “உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?” என்று கேட்டோம். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “ஆம், பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதுபோல் உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்” என்று பதிலளித்தார்கள்.
அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் என்பாரை அவரிடம் கேட்கச் சொன்னோம். அவர் கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள் தான்” என்று பதில் சொன்னார்கள்.98
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது,

3587. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَحَتَّى تُقَاتِلُوا التُّرْكَ، صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الْوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3587. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முடியாலான காலணிகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாரோடு நீங்கள் போர் புரியாதவரையிலும், சிறிய கண்களும் சிவந்த முகங்களும் சப்பை மூக்குகளும், தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற (அகலமான) முகங்களும் கொண்ட துருக்கியருடன் நீங்கள் போர் புரியாதவரையிலும் உலக முடிவுநாள் வராது.99

3588. ""«وَتَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ أَشَدَّهُمْ كَرَاهِيَةً لِهَذَا الأَمْرِ، حَتَّى يَقَعَ فِيهِ، وَالنَّاسُ مَعَادِنُ، خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ.""
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3588. இந்த ஆட்சியதிகாரத்தில் தாம் சிக்கிக்கொள்ளும்வரை அதை அதிகமாக வெறுப்பவர்களை மக்களில் சிறந்தவர்களாக நீங்கள் காண்பீர்கள். (குணங்கள் மற்றும் ஆற்றல்களைப் பொறுத்த வரை) மக்கள் மூலகங்கள் (போன்றவர்கள்) ஆவர். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களா யிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்.100