3589. وَلَيَأْتِيَنَّ عَلَى أَحَدِكُمْ زَمَانٌ لأَنْ يَرَانِي أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَكُونَ لَهُ مِثْلُ أَهْلِهِ وَمَالِهِ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3589. (எனக்குப்பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி, மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதைவிடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும்.101
இந்த மூன்று ஹதீஸ்களையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61

3590. حَدَّثَنِي يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا خُوزًا وَكَرْمَانَ مِنَ الأَعَاجِمِ، حُمْرَ الْوُجُوهِ، فُطْسَ الأُنُوفِ، صِغَارَ الأَعْيُنِ، وُجُوهُهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ، نِعَالُهُمُ الشَّعَرُ "". تَابَعَهُ غَيْرُهُ عَنْ عَبْدِ الرَّزَّاقِ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3590. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது.
நீங்கள் (அரபியரல்லா) அந்நியர்களில் “கூஸ்'வாசிகளுடனும் “கிர்மான்'வாசிகளு டனும் போரிடாத வரை உலக முடிவுநாள் வராது. அவர்கள் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் சிறிய கண்களும் உடையவர்கள். அவர்களுடைய முகங்கள் தோலால் மூடப்பட்ட (அகன்ற) கேடயங் களைப் போன்றிருக்கும். அவர்கள் முடியாலான காலணிகளை அணிந்திருப் பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர் யஹ்யா (ரஹ்) அவர்களைப் போன்றே மற்றவர்களும் இதே நபிமொழியை அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.102

3591. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ إِسْمَاعِيلُ أَخْبَرَنِي قَيْسٌ، قَالَ أَتَيْنَا أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ فَقَالَ صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ سِنِينَ لَمْ أَكُنْ فِي سِنِيَّ أَحْرَصَ عَلَى أَنْ أَعِيَ الْحَدِيثَ مِنِّي فِيهِنَّ سَمِعْتُهُ يَقُولُ وَقَالَ هَكَذَا بِيَدِهِ "" بَيْنَ يَدَىِ السَّاعَةِ تُقَاتِلُونَ قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَهُوَ هَذَا الْبَارِزُ "". وَقَالَ سُفْيَانُ مَرَّةً وَهُمْ أَهْلُ الْبَازَرِ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3591. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மூன்றாண்டுகள் (மிக நெருக்கமான) தோழமை கொண்டிருந்தேன்.103 என் வாழ்நாளிலேயே அந்த மூன்றாண்டுகளில் ஆசைப்பட்டதைவிட அதிகமாக நபிமொழிகளை நினைவில் வைக்க நான் வேறெப்போதும் ஆசைப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டு, தம் கையால் இப்படிச் சைகை செய்து, “நபி (ஸல்) அவர்கள், “உலக இறுதிநாள் வருவதற்கு முன்னால் நீங்கள் முடியாலான காலணி அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாரோடு போரிடுவீர்கள். அவர்கள் வெட்ட வெளியில் தோன்றி உங்களுடன் போராடு வார்கள்' என்று கூற நான் கேட்டேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், “அவர்கள் பாலை வெளியில் வசிப்பவர்கள்” என்று ஒருமுறை கூறினார்கள்.104

3592. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" بَيْنَ يَدَىِ السَّاعَةِ تُقَاتِلُونَ قَوْمًا يَنْتَعِلُونَ الشَّعَرَ، وَتُقَاتِلُونَ قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3592. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறுதித் தீர்ப்பு நாளுக்கு முன்பாக நீங்கள் முடியாலான காலணிகளை அணியும் ஒரு சமுதாயத்தாருடன் போர் புரிவீர்கள். மேலும், தோலால் மூடிய (அகன்ற) கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் போர் புரிவீர்கள்.
இதை அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.105

3593. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" تُقَاتِلُكُمُ الْيَهُودُ فَتُسَلَّطُونَ عَلَيْهِمْ ثُمَّ يَقُولُ الْحَجَرُ يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3593. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் உங்களுடன் போர் புரிவார் கள். அவர்கள்மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப் படும். எந்த அளவுக்கென்றால், கல் (பாறை)கூட, “முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்துகொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும்.106
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3594. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَغْزُونَ، فَيُقَالُ فِيكُمْ مَنْ صَحِبَ الرَّسُولَ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ عَلَيْهِمْ، ثُمَّ يَغْزُونَ فَيُقَالُ لَهُمْ هَلْ فِيكُمْ مَنْ صَحِبَ مَنْ صَحِبَ الرَّسُولَ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3594. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் போருக்குச் செல்கின்ற காலம் ஒன்று வரும். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று வினவப்படும். அவர்கள், “ஆம்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப் படும். பிறகு அவர்கள் அறப்போர் புரிவார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டவர்களுடன் தோழமை கொண்ட வர்கள் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அவர்கள், “ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.107
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3595. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْحَكَمِ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، أَخْبَرَنَا سَعْدٌ الطَّائِيُّ، أَخْبَرَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ بَيْنَا أَنَا عِنْدَ النَّبِيِّ، صلى الله عليه وسلم إِذْ أَتَاهُ رَجُلٌ فَشَكَا إِلَيْهِ الْفَاقَةَ، ثُمَّ أَتَاهُ آخَرُ، فَشَكَا قَطْعَ السَّبِيلِ. فَقَالَ "" يَا عَدِيُّ هَلْ رَأَيْتَ الْحِيرَةَ "". قُلْتُ لَمْ أَرَهَا وَقَدْ أُنْبِئْتُ عَنْهَا. قَالَ "" فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الْحِيرَةِ، حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ، لاَ تَخَافُ أَحَدًا إِلاَّ اللَّهَ "" ـ قُلْتُ فِيمَا بَيْنِي وَبَيْنَ نَفْسِي فَأَيْنَ دُعَّارُ طَيِّئٍ الَّذِينَ قَدْ سَعَّرُوا الْبِلاَدَ "" وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتُفْتَحَنَّ كُنُوزُ كِسْرَى "". قُلْتُ كِسْرَى بْنِ هُرْمُزَ قَالَ "" كِسْرَى بْنِ هُرْمُزَ، وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ، لَتَرَيَنَّ الرَّجُلَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ، يَطْلُبُ مَنْ يَقْبَلُهُ مِنْهُ، فَلاَ يَجِدُ أَحَدًا يَقْبَلُهُ مِنْهُ، وَلَيَلْقَيَنَّ اللَّهَ أَحَدُكُمْ يَوْمَ يَلْقَاهُ، وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ. فَيَقُولَنَّ أَلَمْ أَبْعَثْ إِلَيْكَ رَسُولاً فَيُبَلِّغَكَ فَيَقُولُ بَلَى. فَيَقُولُ أَلَمْ أُعْطِكَ مَالاً وَأُفْضِلْ عَلَيْكَ فَيَقُولُ بَلَى. فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلاَ يَرَى إِلاَّ جَهَنَّمَ، وَيَنْظُرُ عَنْ يَسَارِهِ فَلاَ يَرَى إِلاَّ جَهَنَّمَ "". قَالَ عَدِيٌّ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقَّةِ تَمْرَةٍ، فَمَنْ لَمْ يَجِدْ شِقَّةَ تَمْرَةٍ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ "". قَالَ عَدِيٌّ فَرَأَيْتُ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ، لاَ تَخَافُ إِلاَّ اللَّهَ، وَكُنْتُ فِيمَنِ افْتَتَحَ كُنُوزَ كِسْرَى بْنِ هُرْمُزَ، وَلَئِنْ طَالَتْ بِكُمْ حَيَاةٌ لَتَرَوُنَّ مَا قَالَ النَّبِيُّ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" يُخْرِجُ مِلْءَ كَفِّهِ "". حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا سَعْدَانُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ، حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ، سَمِعْتُ عَدِيًّا، كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3595. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தமது) வறுமை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “அல்ஹீரா' வைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார் கள்.108 “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப் பட்டிருக்கிறது” என்று பதிலளித்தேன். அவர்கள், “நீர் நீண்ட நாள் வாழ்ந்தால், நிச்சயம் பார்ப்பீர். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றுவதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அஞ்சமாட்டாள்” என்று சொன்னார்கள்.
-நான் என் மனத்திற்குள், “அப்படி யென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட “தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்றுவிட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.-109 நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீர் நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பீர்” என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ்தான் (தோற்கடிக்கப்படுவார்)” என்று பதிலளித் தார்கள்.
(மேலும் சொன்னார்கள்:) உமக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தமது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக்கொண்டு அதைப் பெற்றுக்கொள்பவரைத் தேடியலைவார். ஆனால், அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீர் பார்ப்பீர். உங்களில் ஒருவர் அல்லாஹ் வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழி பெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார்.
அப்போது அல்லாஹ், “நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்க வில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம், (எடுத்துரைத்தார்)” என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், “உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம் (உண்மைதான்)” என்பார். பிறகு அவர் தம் வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தம் இடப் பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார்.
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக்கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டுகூட இல்லையோ அவர் இன்சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திóருந்து தம்மைக் காத்துக்கொள்ளட்டும்)” என்று சொல்லக் கேட்டேன்.
மேலும், “ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி “அல்ஹீரா'விலிருந்து கஅபாவைச் சுற்றுவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்.110 (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.111
நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கை நிறைய அள்ளிக்கொண்டு அதைத் தர்மமாக ஏற்றுக்கொள்பவரைத் தேடியலை வதை நீர் பார்ப்பீர்” என்று அபுல்காசிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடைமுறையில்) காண் பீர்கள்.112
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் “நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தேன்” என்று ஹதீஸ் தொடங்கு கிறது.113

3596. حَدَّثَنِي سَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ، فَقَالَ "" إِنِّي فَرَطُكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، إِنِّي وَاللَّهِ لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي قَدْ أُعْطِيتُ خَزَائِنَ مَفَاتِيحِ الأَرْضِ، وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ بَعْدِي أَنْ تُشْرِكُوا، وَلَكِنْ أَخَافُ أَنْ تَنَافَسُوا فِيهَا "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3596. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (இறுதித் தொழுகை) தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காக (இறுதித் தொழுகை) தொழுவித்தார்கள்.114
பிறகு, சொற்பொழிவு மேடைக்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடு களைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே (ஹவ்ளுல் கவ்ஸர் எனும் சொர்க்கத் தடாகத்திற்குச்) செல்கின்றேன். நான் (அப்போது) உங்களுக்குச் சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத் தைக் காண்கிறேன். மேலும், எனக்குப் பூமியின் கருவூலங்களின் திறவு கோல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும், நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டிபோடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.115

3597. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَشْرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أُطُمٍ مِنَ الآطَامِ، فَقَالَ "" هَلْ تَرَوْنَ مَا أَرَى إِنِّي أَرَى الْفِتَنَ تَقَعُ خِلاَلَ بُيُوتِكُمْ مَوَاقِعَ الْقَطْرِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3597. உசாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மதீனாவின்) கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி) கூறினார்கள்: “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் வீடுகள் நெடுகிலும் மழைத்துளிகள் விழுமிடங்களில் குழப்பங்கள் விளையப்போவதை நான் பார்க்கின்றேன்” என்று சொன்னார்கள்.116

3598. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ حَدَّثَتْهَا عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذَا "". وَحَلَّقَ بِإِصْبَعِهِ وَبِالَّتِي تَلِيهَا، فَقَالَتْ زَيْنَبُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ "" نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3598. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, “அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத் தால் அரபியருக்குப் பேரழிவு நேரவிருக் கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிóருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே நல்லவர்கள் (வாழ்ந்துகொண்டு) இருக்க (இறை தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! பாவங்கள் அதிகரித்து விட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள்)” என்று பதில் கூறினார்கள்.117

3599. وَعَنِ الزُّهْرِيِّ، حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" سُبْحَانَ اللَّهِ، مَاذَا أُنْزِلَ مِنَ الْخَزَائِنِ وَمَاذَا أُنْزِلَ مِنَ الْفِتَنِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3599. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தெழுந்து, “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்!) எவ்வளவு பெரும் கருவூலங்களெல்லாம் (வானிலிருந்து பூமிக்கு) இறக்கியருளப்பட்டிருக்கின்றன! எவ்வளவு பெரிய குழப்பங்கள் எல்லாம் (பூமிக்கு) அனுப்பப்பட்டிருக்கின்றன!” என்று சொன் னார்கள்.118

3600. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ بْنِ الْمَاجِشُونِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لِي إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ، وَتَتَّخِذُهَا، فَأَصْلِحْهَا وَأَصْلِحْ رُعَامَهَا، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ تَكُونُ الْغَنَمُ فِيهِ خَيْرَ مَالِ الْمُسْلِمِ، يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ ـ أَوْ سَعَفَ الْجِبَالِ ـ فِي مَوَاقِعِ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3600. அப்துல்லாஹ் பின் அபீ ஸஅஸஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “நான் உங்களை ஆடுகளை விரும்பக்கூடியவராகவும் அதை வைத்துப் பராமரிப்பவராகவும் பார்க்கிறேன். ஆகவே, அவற்றைச் சரிவரப் பராமரித்துச் சீராக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை மேய்ப்பவர்களையும் சரிவரப் பராமரியுங் கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள்மீது ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக ஆடுகள்தான் இருக்கும். குழப்பங்கள் விளையும் நேரங்களில் அவற்றிலிருந்து தமது மார்க்கத்தைப் பாதுகாத்துக்கொள்ள வெருண்டோடியபடி அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு அவர் மழை பொழியும் இடங்களில் ஒன்றான மலையுச்சிக்குச் சென்றுவிடுவார்' என்று சொன்னதை நான் கேட்டேன்” என்று கூறினார்கள்.119

3601. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سَتَكُونُ فِتَنٌ، الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْقَائِمِ، وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ الْمَاشِي، وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي، وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ، وَمَنْ وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ ".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3601. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக் கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்றுவிடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்றுவிடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். எவர் அதை அடைகிறாரோ அது அவரை வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது எவர் புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறாரோ அவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெற்றுக்கொள் ளட்டும்.120
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3602. وَعَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُطِيعِ بْنِ الأَسْوَدِ، عَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ،، مِثْلَ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ هَذَا، إِلاَّ أَنَّ أَبَا بَكْرٍ، يَزِيدُ " مِنَ الصَّلاَةِ صَلاَةٌ مَنْ فَاتَتْهُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ ".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3602. இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறி வித்த (மேற்கண்ட) இந்த நபிமொழியைப் போன்று நவ்ஃபல் பின் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் பின் முதீஉ பின் அஸ்வத் (ரஹ்) அவர்களும் அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
எனினும், இந்த அறிவிப்பில் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள், “தொழுகையில் ஒரு தொழுகை (அஸ்ர்) உண்டு; ஒருவருக்கு அது தவறிவிடுமாயின் அது அவருடைய மனைவி மக்களும் அவரது செல்வமும் பறிக்கப்பட்டுவிட்டதைப் போன்றதாகும்” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.121

3603. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَتَكُونُ أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنَا قَالَ "" تُؤَدُّونَ الْحَقَّ الَّذِي عَلَيْكُمْ، وَتَسْأَلُونَ اللَّهَ الَّذِي لَكُمْ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3603. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை,) “விரைவில் (அன்சாரிகளான) உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். மேலும் நீங்கள் வெறுக்கின்ற சில காரியங்கள் நடக்கும்.” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடு கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள்மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக் குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

3604. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُهْلِكُ النَّاسَ هَذَا الْحَىُّ مِنْ قُرَيْشٍ "". قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ "" لَوْ أَنَّ النَّاسَ اعْتَزَلُوهُمْ "". قَالَ مَحْمُودٌ حَدَّثَنَا أَبُو دَاوُدَ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ سَمِعْتُ أَبَا زُرْعَةَ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3604. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குறைஷி குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், “(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களிட மிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.122
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 61
3604. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குறைஷி குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், “(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களிட மிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.122
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 61
3605. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنْ جَدِّهِ، قَالَ كُنْتُ مَعَ مَرْوَانَ وَأَبِي هُرَيْرَةَ فَسَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ الصَّادِقَ الْمَصْدُوقَ، يَقُولُ "" هَلاَكُ أُمَّتِي عَلَى يَدَىْ غِلْمَةٍ مِنْ قُرَيْشٍ "". فَقَالَ مَرْوَانُ غِلْمَةٌ. قَالَ أَبُو هُرَيْرَةَ إِنْ شِئْتَ أَنْ أُسَمِّيَهُمْ بَنِي فُلاَنٍ وَبَنِي فُلاَنٍ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3605. சயீத் அல்உமவி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் அவர்களுடனும் அபூஹுரைரா (ரலி) அவர்களுடனும் இருந்தேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், உண்மையாளரும் உண்மையே உரைக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள் “குறைஷியரில் சில இளைஞர்க(ளான ஆட்சியாளர்க)ளின் கைகளால்தான் எனது (இன்றைய) சமுதாயத்தின் அழிவு உண்டு” எனக் கூறக் கேட்டேன் என்றார்கள்.
உடனே மர்வான், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “இளைஞர்களா?” என்று கேட்க, அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் நான் அவர்களை, “இன்னாரின் மக்கள், இன்னாரின் மக்கள்' என்று தனித்தனியே பெயர் குறிப்பிட்டுச் சொல்வேன்” என்று பதிலளித்தார்கள்.123

3606. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ "" نَعَمْ "". قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ "" نَعَمْ، وَفِيهِ دَخَنٌ "". قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ "" قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ "". قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ "" نَعَمْ دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ، مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا فَقَالَ "" هُمْ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا "" قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ "" تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ "". قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلاَ إِمَامٌ قَالَ "" فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3606. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால்தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள்.124
நான், “இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.125
நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு சமுதாயத்தார் எனது நல்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள்.126
நான், “அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களுடைய அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.127
நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். “நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும் (இறுகப்) பற்றிக்கொள்” என்று பதில் சொன்னார்கள்.
அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கிவிடு; ஒரு மரத்தின் வேரைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள்.

3607. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنِي قَيْسٌ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ تَعَلَّمَ أَصْحَابِي الْخَيْرَ وَتَعَلَّمْتُ الشَّرَّ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3607. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தோழர்கள் (நன்மை தரும் செயல் களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக்கொண்டார்கள். நான் (தவிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

3608. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ دَعْوَاهُمَا وَاحِدَةٌ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரே வாதத்தை முன்வைக்கின்ற இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை யுகமுடிவு நாள் வராது.128