3549. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ أَبُو عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَجْهًا وَأَحْسَنَهُ خَلْقًا، لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ وَلاَ بِالْقَصِيرِ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3549. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர் களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அள வுக்கு உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை.
அத்தியாயம் : 61

3550. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا هَلْ خَضَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ لاَ، إِنَّمَا كَانَ شَىْءٌ فِي صُدْغَيْهِ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3550. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் மருதாணி பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள், “இல்லை; அவர்களின் நெற்றிப்பொட்டு முடியில் சிறிதளவு நரை இருந்தது; அவ்வளவுதான்” என்று பதிலளித்தார்கள்.67

3551. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرْبُوعًا، بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ، لَهُ شَعَرٌ يَبْلُغُ شَحْمَةَ أُذُنِهِ، رَأَيْتُهُ فِي حُلَّةٍ حَمْرَاءَ، لَمْ أَرَ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ. قَالَ يُوسُفُ بْنُ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِيهِ إِلَى مَنْكِبَيْهِ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3551. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயர முடையவர்களாகவும் அகன்ற மார்புடைய வர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். (அந்த ஆடையில்) நபி (ஸல்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒரு தொடரில் அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(நபி (ஸல்) அவர்களின் தலைமுடி) அவர்களின் இரு தோள்கள்வரை இருந்தது.

3552. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سُئِلَ الْبَرَاءُ أَكَانَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ السَّيْفِ قَالَ لاَ بَلْ مِثْلَ الْقَمَرِ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3552. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்களுடைய முகம் வாளைப் போன்று (நீளமாக) இருந்ததா?” என்று பராஉ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இல்லை; ஆயினும், அவர்களின் முகம் சந்திரனைப் போன்று (வட்டமாக) இருந்தது” என்று பதிலளித்தார்கள்.

3553. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مَنْصُورٍ أَبُو عَلِيٍّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ الأَعْوَرُ، بِالْمَصِّيصَةِ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ إِلَى الْبَطْحَاءِ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ. {قَالَ شُعْبَةُ} وَزَادَ فِيهِ عَوْنٌ عَنْ أَبِيهِ أَبِي جُحَيْفَةَ قَالَ كَانَ يَمُرُّ مِنْ وَرَائِهَا الْمَرْأَةُ، وَقَامَ النَّاسُ فَجَعَلُوا يَأْخُذُونَ يَدَيْهِ، فَيَمْسَحُونَ بِهَا وُجُوهَهُمْ، قَالَ فَأَخَذْتُ بِيَدِهِ، فَوَضَعْتُهَا عَلَى وَجْهِي، فَإِذَا هِيَ أَبْرَدُ مِنَ الثَّلْجِ، وَأَطْيَبُ رَائِحَةً مِنَ الْمِسْكِ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3553. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது ஒருநாள்) நண்பகல் நேரத்தில் கடும் வெயிலில் “பத்ஹா'வை68 நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் “உளூ' செய்துவிட்டு லுஹ்ர் இரண்டு ரக்அத்கள் தொழுது அஸ்ர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் சிறு ஈட்டி ஒன்று (நடப்பட்டு) இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஒன்றில் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ள தாவது:
(என் தந்தை) அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அந்த ஈட்டிக்கு அப்பால் பெண்கள்69 நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். மக்கள் அப்போது எழுந்து நபி (ஸல்) அவர்களின் இரு கரங்களையும் பிடித்து அவற்றால் தங்கள் முகங்களை வருடிக்கொள்ள லாயினர். நான் நபி (ஸல்) அவர்களின் கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக்கொண்டேன். அது பனிக்கட்டியைவிட குளிர்ச்சியானதாகவும் கஸ்தூரியை விட நறுமணம் மிக்கதாகவும் இருந்தது.70

3554. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ، وَأَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ، حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، فَيُدَارِسُهُ الْقُرْآنَ فَلَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3554. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாகக் கொடை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் அவர்கள் இன்னும் அதிக மாக வாரி வழங்குபவர்களாக மாறிவிடு வார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக்கொண்டி ருந்தார்கள்.
அப்போது (அதுவரை அருளப்பட்ட) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.71

3555. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا مَسْرُورًا تَبْرُقُ أَسَارِيرُ وَجْهِهِ، فَقَالَ "" أَلَمْ تَسْمَعِي مَا قَالَ الْمُدْلِجِيُّ لِزَيْدٍ وَأُسَامَةَ ـ وَرَأَى أَقْدَامَهُمَا ـ إِنَّ بَعْضَ هَذِهِ الأَقْدَامِ مِنْ بَعْضٍ "".
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3555. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் (பரவசத்தால்) அவர்களுடைய முகத்தின் (நெற்றி) ரேகைகள் மின்ன வருகை தந்தார்கள். அப்போது அவர்கள், “(இருவரின் சாயலை வைத்து உறவுமுறையைக் கணிக்கும்) முத்லிஜீ என்பவர், ஸைதைப் பற்றியும் அவருடைய மகன் உசாமா பற்றியும் என்ன சொன்னார் என்று நீ கேள்விப்பட வில்லையா? (போர்வையின் கீழிருந்து வெளிப்பட்ட) அவ்விருவரின் கால்களையும் அவர் பார்த்துவிட்டு. “இந்தக் கால்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை' என்று சொன்னார்” என்று கூறினார்கள்.72

3556. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ حِينَ تَخَلَّفَ عَنْ تَبُوكَ، قَالَ فَلَمَّا سَلَّمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُورِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سُرَّ اسْتَنَارَ وَجْهُهُ، حَتَّى كَأَنَّهُ قِطْعَةُ قَمَرٍ، وَكُنَّا نَعْرِفُ ذَلِكَ مِنْهُ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3556. அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்ட சமயத்தை (நினைவு கூர்ந்து) பேசியபடி, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன் னேன். அவர்களின் (பொன்னிற) முகம் மகிழ்ச்சியால் மின்னிக்கொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களுடைய முகம் சந்திரனின் ஒரு துண்டைப்போல் பிரகாசமாகிவிடும். நாங்கள் அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதைத் தெரிந்துகொள்வோம்” என்று கூறினார்கள்.73

3557. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بُعِثْتُ مِنْ خَيْرِ قُرُونِ بَنِي آدَمَ قَرْنًا فَقَرْنًا، حَتَّى كُنْتُ مِنَ الْقَرْنِ الَّذِي كُنْتُ فِيهِ "".
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதமின் மக்களில் (மனிதர்களில்) தலைமுறை தலைமுறையாக நான் சிறந்த தலைமுறை வழியே (மரபணுக்களில் பாதுகாக்கப்பட்டு வந்து இப்போது) நான் தோன்றியிருக்கும் (இந்தச்) சிறந்த தலை முறையில் தோன்றி இறைத்தூதராக்கப்பட்டுள்ளேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3558. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسْدِلُ شَعَرَهُ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ فَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ رُءُوسَهُمْ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَىْءٍ، ثُمَّ فَرَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَأْسَهُ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3558. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (முன்தலை முடியை தமது நெற்றி யின் மீது) தொங்கவிட்டுவந்தார்கள்.74 இணைவைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழவிடாமல் இரு பக்கமும் தொங்கவிட்டு)வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடிகளை (நெற்றியின் மீது) தொங்கவிட்டுவந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்)கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போக விரும்பிவந்தார்கள்.75 பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலை(முடி)யை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க்கொண்டார்கள்.

3559. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ "" إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا "".
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3559. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள்.

3560. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا، مَا لَمْ يَكُنْ إِثْمًا، فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ، وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ، إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ فَيَنْتَقِمَ لِلَّهِ بِهَا.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3560. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில்- எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கிய தில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் தவிர. (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.)

3561. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا مَسِسْتُ حَرِيرًا وَلاَ دِيبَاجًا أَلْيَنَ مِنْ كَفِّ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَلاَ شَمِمْتُ رِيحًا قَطُّ أَوْ عَرْفًا قَطُّ أَطْيَبَ مِنْ رِيحِ أَوْ عَرْفِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3561. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி (ஸல்) அவர்களின் (உடல்) மணத்தைவிட - அல்லது வியர்வையைவிட - சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை.

3562. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَشَدَّ حَيَاءً مِنَ الْعَذْرَاءِ فِي خِدْرِهَا. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، وَابْنُ، مَهْدِيٍّ قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، مِثْلَهُ وَإِذَا كَرِهَ شَيْئًا عُرِفَ فِي وَجْهِهِ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3562. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு தொடர்களில் ஷ‚அபா (ரஹ்) அவர்கள் இதைப் போன்றே அறிவித்துவிட்டு, “நபியவர்களுக்கு ஏதேனும் ஒன்று பிடிக்கவில்லையானால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்” என்று (கூடுதலாக) அறிவித்துள்ளார்கள்,

3563. حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ مَا عَابَ النَّبِيُّ صلى الله عليه وسلم طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِلاَّ تَرَكَهُ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3563. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் அதை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.

3564. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ الأَسْدِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا سَجَدَ فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى نَرَى إِبْطَيْهِ. قَالَ وَقَالَ ابْنُ بُكَيْرٍ حَدَّثَنَا بَكْرٌ بَيَاضَ إِبْطَيْهِ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3564. அப்துல்லாஹ் பின் மாலிக் இப்னு புஹைனா அல்அஸ்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சிரவணக்கம் செய்யும்போது தம் இரு கைகளுக்குமிடையே (அதிக) இடைவெளி விடுவார்கள். எந்த அளவுக்கென்றால் நாங்கள் அவர்களுடைய இரண்டு அக்குள்களையும் பார்ப்போம்.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் யஹ்யா பின் புகைர் (ரஹ்) அவர்கள், (அவர்களுடைய இரண்டு அக்குள்களைப் பார்ப்போம் என்பதற்குப் பதிலாக) “அவர்களின் இரு அக்குள் வெண்மையைப் பார்ப்போம்” என்று அறிவித்துள்ளார்கள்.76

3565. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ دُعَائِهِ، إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ، فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ.
وَقَالَ أَبُو مُوسَى دَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَ يَدَيْهِ وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3565. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனை எதிலும் தம் கைகளை (மிக உயரமாகத்) தூக்குவதில்லை; மழை வேண்டிப் பிரார்த்திக்கையில் தவிர. ஏனெனில், அதில் அவர்கள் தம் இரு கைகளையும் தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்கு உயர்த்து வது வழக்கம்.77
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது தம் இரு கைகளையும் உயர்த்தினார்கள்.78

3566. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ سَمِعْتُ عَوْنَ بْنَ أَبِي جُحَيْفَةَ، ذَكَرَ عَنْ أَبِيهِ، قَالَ دُفِعْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ بِالأَبْطَحِ فِي قُبَّةٍ كَانَ بِالْهَاجِرَةِ، خَرَجَ بِلاَلٌ فَنَادَى بِالصَّلاَةِ، ثُمَّ دَخَلَ فَأَخْرَجَ فَضْلَ وَضُوءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَوَقَعَ النَّاسُ عَلَيْهِ يَأْخُذُونَ مِنْهُ، ثُمَّ دَخَلَ فَأَخْرَجَ الْعَنَزَةَ، وَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ سَاقَيْهِ فَرَكَزَ الْعَنَزَةَ، ثُمَّ صَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْحِمَارُ وَالْمَرْأَةُ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3566. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜில்) நண்பகல் நேரத்தில் (கடும் வெயிலின்போது) நபி (ஸல்) அவர்கள் “அப்தஹ்' எனுமிடத்தில் கூடாரத்தில் இருக்க, நான் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். பிலால் (ரலி) அவர்கள் வெளியே புறப்பட்டுவந்து தொழுகைக்காக அழைப்பு விடுத்தார்கள்; பிறகு உள்ளே சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரின் மிச்சத்தை வெளியே கொண்டுவந்தார்கள்.
அந்த நீரில் சிறிதளவு பெறுவதற்காக மக்கள் பிலால் (ரலி) அவர்களிடம் முண்டியடித்துக்கொண்டிருந்தனர். பிறகு பிலால் (ரலி) அவர்கள் உள்ளே சென்று ஈட்டியை வெளியே எடுத்துவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள் -(இப்போதும்) நான் நபி (ஸல்) அவர்களுடைய கால்களின் பிரகாசத்தைப் பார்ப்பதைப் போன்றுள்ளது- பின்னர் ஈட்டியை நட்டு, லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும் அஸ்ர் தொழுகையை இரண்டு ரக்அத் களாகவும் தொழுதார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கழுதையும் பெண்ணும் நடந்து சென்றுகொண்டிருந் தார்கள்.79

3567. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ صَبَّاحٍ الْبَزَّارُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لأَحْصَاهُ. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ أَلاَ يُعْجِبُكَ أَبُو فُلاَنٍ جَاءَ فَجَلَسَ إِلَى جَانِبِ حُجْرَتِي يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، يُسْمِعُنِي ذَلِكَ وَكُنْتُ أُسَبِّحُ فَقَامَ قَبْلَ أَنْ أَقْضِيَ سُبْحَتِي، وَلَوْ أَدْرَكْتُهُ لَرَدَدْتُ عَلَيْهِ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَسْرُدُ الْحَدِيثَ كَسَرْدِكُمْ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3567. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக் கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணியிருந் தால், ஒன்று விடாமல் எண்ணியிருக் கலாம். (அந்த அளவுக்கு நிறுத்தி நிதான மாக, தெளிவாகப் பேசிவந்தார்கள்.)

3568. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ صَبَّاحٍ الْبَزَّارُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لأَحْصَاهُ. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ أَلاَ يُعْجِبُكَ أَبُو فُلاَنٍ جَاءَ فَجَلَسَ إِلَى جَانِبِ حُجْرَتِي يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، يُسْمِعُنِي ذَلِكَ وَكُنْتُ أُسَبِّحُ فَقَامَ قَبْلَ أَنْ أَقْضِيَ سُبْحَتِي، وَلَوْ أَدْرَكْتُهُ لَرَدَدْتُ عَلَيْهِ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَسْرُدُ الْحَدِيثَ كَسَرْدِكُمْ.
பாடம் : 23
நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3568. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“இன்னாரின் தந்தை (அபூஹுரைரா வைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.) உமக்கு வியப் பூட்டவில்லையா? அவர் வந்தார்; என் அறையின் பக்கமாக அமர்ந்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (தாம் கேட்டதை) என் காதில் விழுமாறு அறிவித்துக்கொண்டிருந்தார். நான் கூடுதல் தொழுகை தொழுதுகொண்டிருந்தேன். நான் என் கூடுதல் தொழுகையை முடிப்பதற்குள் அவர் எழுந்து (சென்று)விட்டார்.
நான் அவரைச் சந்தித்திருந்தால் அவரை (ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளி யின்றி நபிமொழிகளை அறிவித்துக்கொண்டே சென்றதை)க் கண்டித்திருப்பேன். நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன்பின் ஒன்றாக, வேக வேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.