3151. حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ أَسْمَاءَ ابْنَةِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ كُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى رَأْسِي، وَهْىَ مِنِّي عَلَى ثُلُثَىْ فَرْسَخٍ. وَقَالَ أَبُو ضَمْرَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَقْطَعَ الزُّبَيْرَ أَرْضًا مِنْ أَمْوَالِ بَنِي النَّضِيرِ.
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3151. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்த நிலத்திலிருந்து (பேரீச்சங்) கொட்டைகளை நான் என் தலையில் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டிருந்தேன். அந்த நிலம் என் வீட்டிலிருந்து இரண்டு மைல் (3.5 கி.மீ.) இருந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் சொத்துகளிலிருந்து ஒரு நிலத்தை ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 57
3152. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَجْلَى الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ أَرْضِ الْحِجَازِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا ظَهَرَ عَلَى أَهْلِ خَيْبَرَ أَرَادَ أَنْ يُخْرِجَ الْيَهُودَ مِنْهَا، وَكَانَتِ الأَرْضُ لَمَّا ظَهَرَ عَلَيْهَا لِلْيَهُودِ وَلِلرَّسُولِ وَلِلْمُسْلِمِينَ، فَسَأَلَ الْيَهُودُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَتْرُكَهُمْ عَلَى أَنْ يَكْفُوا الْعَمَلَ، وَلَهُمْ نِصْفُ الثَّمَرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نُقِرُّكُمْ عَلَى ذَلِكَ مَا شِئْنَا "". فَأُقِرُّوا حَتَّى أَجْلاَهُمْ عُمَرُ فِي إِمَارَتِهِ إِلَى تَيْمَاءَ وَأَرِيحَا.
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3152. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ஹிஜாஸ் பூமியிலிருந்து நாடு கடத்தி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்வாசிகளை வெற்றி கொண்டபோது அவர்களை கைபரிலிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். அவர்கள் அதை வென்றபோது அந்த நிலப்பரப்பு யூதர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாக இருந்தது.

யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அவர்கள் அதில் உழைத்துப் பயிரிடுவார்கள்; அவர்களுக்கு விளைச்சலில் பாதி தரப்பட வேண்டும்’ என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களை (அங்கேயே தங்கி வசித்துக்கொள்ள) விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நாங்கள் விரும்பும்வரை அதே நிபந்தனையின்படி நாங்கள் உங்களை விட்டுவைப்போம்” என்று கூறி னார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் அவர்களை தைமா, ஜெரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு66 நாடு கடத்தும்வரை அவ்வாறே அவர்கள் அங்கே வசித்துவர அனுமதிக்கப் பட்டார்கள்.67

அத்தியாயம் : 57
3153. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاسْتَحْيَيْتُ مِنْهُ.
பாடம் : 20 பகை நாட்டில் கிடைக்கும் உணவு
3153. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மனிதர், கொழுப்பு அடங்கிய தோல்பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க விரைந்து சென்றேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர் களைக் கண்டு நான் வெட்கமடைந் தேன்.


அத்தியாயம் : 57
3154. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نُصِيبُ فِي مَغَازِينَا الْعَسَلَ وَالْعِنَبَ فَنَأْكُلُهُ وَلاَ نَرْفَعُهُ.
பாடம் : 20 பகை நாட்டில் கிடைக்கும் உணவு
3154. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்கள் அறப்போர்களில் எங்களுக்குத் தேனும் திராட்சைப் பழமும் கிடைத்துவந்தன. அதை நாங்கள் உண்போம். ஆனால், அதை நாங்கள் (சேகரித்து வைப்பதற்காகக்) கொண்டுசெல்வதில்லை.


அத்தியாயம் : 57
3155. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ أَصَابَتْنَا مَجَاعَةٌ لَيَالِيَ خَيْبَرَ، فَلَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ وَقَعْنَا فِي الْحُمُرِ الأَهْلِيَّةِ، فَانْتَحَرْنَاهَا فَلَمَّا غَلَتِ الْقُدُورُ، نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اكْفَئُوا الْقُدُورَ، فَلاَ تَطْعَمُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا. قَالَ عَبْدُ اللَّهِ فَقُلْنَا إِنَّمَا نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم لأَنَّهَا لَمْ تُخَمَّسْ. قَالَ وَقَالَ آخَرُونَ حَرَّمَهَا الْبَتَّةَ. وَسَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ فَقَالَ حَرَّمَهَا الْبَتَّةَ.
பாடம் : 20 பகை நாட்டில் கிடைக்கும் உணவு
3155. இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்த நாட்களில் நாங்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்தோம். கைபர் போர் தொடங்கிய நாளன்று நாங்கள் நாட்டுக் கழுதைகளை (போர்ச் செல்வமாக)ப் பெற்று அவற்றை அறுத் தோம். (அவற்றைச் சமைக்கின்ற) பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய அறிவிப்பாளர், ‘‘பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்” என்று (உரக்கக் கூவி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்:

இந்த அறிவிப்பைச் செவியுற்ற நாங்கள், ‘‘அதிலிருந்து ஐந்தில் ஒரு பங்கு (குமுஸ்) செலுத்தப்படாததே இந்தத் தடை அறிவிப்புக்குக் காரணம்” என்று சொன்னோம்.

மற்றவர்கள், ‘‘(அப்படியல்ல;) அதை என்றைக்குமாக நபி (ஸல்) அவர்கள் தடை செய்துவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும் நிரந்தரமாகத் தடை செய்தார்கள் என்றே கூறினார்கள்.

அத்தியாயம் : 58

3156. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ عَمْرًا، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ جَابِرِ بْنِ زَيْدٍ وَعَمْرِو بْنِ أَوْسٍ، فَحَدَّثَهُمَا بَجَالَةُ، سَنَةَ سَبْعِينَ ـ عَامَ حَجَّ مُصْعَبُ بْنُ الزُّبَيْرِ بِأَهْلِ الْبَصْرَةِ ـ عِنْدَ دَرَجِ زَمْزَمَ قَالَ كُنْتُ كَاتِبًا لِجَزْءِ بْنِ مُعَاوِيَةَ عَمِّ الأَحْنَفِ، فَأَتَانَا كِتَابُ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَبْلَ مَوْتِهِ بِسَنَةٍ فَرِّقُوا بَيْنَ كُلِّ ذِي مَحْرَمٍ مِنَ الْمَجُوسِ. وَلَمْ يَكُنْ عُمَرُ أَخَذَ الْجِزْيَةَ مِنَ الْمَجُوسِ.
பாடம் : 1 இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாருடன் காப்புவரி ஒப்பந்தம் செய்துகொள்வதும், பகை நாட்டாருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: வேதம் வழங்கப்பெற்றோரில் யார் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை விலக்கிக்கொள்ளாம லும், உண்மை மார்க்கத்தைப் பின்பற்றாம லும் இருக்கிறார்களோ அவர்கள் சிறுமை யடைந்தவர்களாக(த் தமது) கரத்தால் காப்புவரி செலுத்தும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். (9:29) மேலும், யூதர்கள், கிறித்தவர்கள், அக்னி ஆராதனையாளர்கள் மற்றும் முஸ்லிமல்லாதோரிடம் காப்புவரி வாங்கியது பற்றி வந்துள்ள தகவல்கள். அப்துல்லாஹ் பின் நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்தவர் க(ளான வேதக்காரர்க)ள்மீது நான்கு பொற்காசுகளும், யமன் நாட்டவர்மீது ஒரு பொற்காசும் (காப்புவரியாக) விதிக்கக் காரணமென்ன?” என்று முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது (அவரவரது) வசதியைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டது” என்று பதிலளித்தார்கள்.
3156. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர் களுடனும் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களுடனும் அமர்ந்திருந்தேன். அப்போது (அவர்கள் கூறினார்கள்:) முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் பஸ்ராவாசிகளுடன் ஹஜ் செய்த ஆண்டான ஹிஜ்ரீ எழுபதாம் ஆண்டில் அவ்விருவரிடமும் ஸம்ஸம் கிணற்றின் படிக்கட்டின் அருகே பஜாலா பின் அப்தா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்களுடைய தந்தையின் சகோதரரான ஜஸ்உ பின் முஆவியா (ரலி) அவர்களுக்கு எழுத்தராக இருந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு யிதிருமணம் புரிந்துகொள்ளக் கூடாத இரத்த உறவு தங்களிடையே இருந்தும் ஒருவரையொருவர் மணமுடித்துக்கொண்ட அக்னி ஆராதனையாளர்களை (மஜூசிகள்) (மணபந்தத்திலிருந்து) பிரித்து வையுங்கள்’ என்று உத்தரவிட்டு அவர்களின் கடிதம் ஒன்று எங்களுக்கு வந்தது. உமர் (ரலி) அவர்கள் மஜூஸிகளிடமிருந்து காப்புவரி வசூலிக்கவில்லை.2


அத்தியாயம் : 58
3157. حَتَّى شَهِدَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَهَا مِنْ مَجُوسِ هَجَرٍ.
பாடம் : 1 இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாருடன் காப்புவரி ஒப்பந்தம் செய்துகொள்வதும், பகை நாட்டாருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: வேதம் வழங்கப்பெற்றோரில் யார் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை விலக்கிக்கொள்ளாம லும், உண்மை மார்க்கத்தைப் பின்பற்றாம லும் இருக்கிறார்களோ அவர்கள் சிறுமை யடைந்தவர்களாக(த் தமது) கரத்தால் காப்புவரி செலுத்தும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். (9:29) மேலும், யூதர்கள், கிறித்தவர்கள், அக்னி ஆராதனையாளர்கள் மற்றும் முஸ்லிமல்லாதோரிடம் காப்புவரி வாங்கியது பற்றி வந்துள்ள தகவல்கள். அப்துல்லாஹ் பின் நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்தவர் க(ளான வேதக்காரர்க)ள்மீது நான்கு பொற்காசுகளும், யமன் நாட்டவர்மீது ஒரு பொற்காசும் (காப்புவரியாக) விதிக்கக் காரணமென்ன?” என்று முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது (அவரவரது) வசதியைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டது” என்று பதிலளித்தார்கள்.
3157. இறுதியில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜர்’ (பஹ்ரைன்) பகுதியில் வசித்துவந்த மஜூஸிகளி டமிருந்து காப்புவரி வசூலித்துள்ளார்கள்” என்று சாட்சியம் சொன்னார்கள்.3


அத்தியாயம் : 58
3158. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ الأَنْصَارِيَّ وَهْوَ حَلِيفٌ لِبَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ وَكَانَ شَهِدَ بَدْرًا أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ إِلَى الْبَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ صَالَحَ أَهْلَ الْبَحْرَيْنِ وَأَمَّرَ عَلَيْهِمُ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ، فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ، فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ فَوَافَتْ صَلاَةَ الصُّبْحِ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَلَمَّا صَلَّى بِهِمِ الْفَجْرَ انْصَرَفَ، فَتَعَرَّضُوا لَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَآهُمْ وَقَالَ "" أَظُنُّكُمْ قَدْ سَمِعْتُمْ أَنَّ أَبَا عُبَيْدَةَ قَدْ جَاءَ بِشَىْءٍ "". قَالُوا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ، فَوَاللَّهِ لاَ الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ، وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ "".
பாடம் : 1 இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாருடன் காப்புவரி ஒப்பந்தம் செய்துகொள்வதும், பகை நாட்டாருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: வேதம் வழங்கப்பெற்றோரில் யார் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை விலக்கிக்கொள்ளாம லும், உண்மை மார்க்கத்தைப் பின்பற்றாம லும் இருக்கிறார்களோ அவர்கள் சிறுமை யடைந்தவர்களாக(த் தமது) கரத்தால் காப்புவரி செலுத்தும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். (9:29) மேலும், யூதர்கள், கிறித்தவர்கள், அக்னி ஆராதனையாளர்கள் மற்றும் முஸ்லிமல்லாதோரிடம் காப்புவரி வாங்கியது பற்றி வந்துள்ள தகவல்கள். அப்துல்லாஹ் பின் நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்தவர் க(ளான வேதக்காரர்க)ள்மீது நான்கு பொற்காசுகளும், யமன் நாட்டவர்மீது ஒரு பொற்காசும் (காப்புவரியாக) விதிக்கக் காரணமென்ன?” என்று முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது (அவரவரது) வசதியைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டது” என்று பதிலளித்தார்கள்.
3158. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிபனூ ஆமிர் பின் லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ர் போரில் கலந்து கொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து யிஜிஸ்யா’ வரியை வசூலித்து வரும்படி அனுப்பி னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந் தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.4

அபூஉபைதா (ரலி) அவர்கள் பஹ்ரை னிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ர் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர் களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, ‘‘அபூஉபைதா ஏதோ கொண்டுவந்திருக்கிறார் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

‘‘ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர் களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக் கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அது அழித்து விடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 58
3159. حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ، وَزِيَادُ بْنُ جُبَيْرٍ، عَنْ جُبَيْرِ بْنِ حَيَّةَ، قَالَ بَعَثَ عُمَرُ النَّاسَ فِي أَفْنَاءِ الأَمْصَارِ يُقَاتِلُونَ الْمُشْرِكِينَ، فَأَسْلَمَ الْهُرْمُزَانُ فَقَالَ إِنِّي مُسْتَشِيرُكَ فِي مَغَازِيَّ هَذِهِ. قَالَ نَعَمْ، مَثَلُهَا وَمَثَلُ مَنْ فِيهَا مِنَ النَّاسِ مِنْ عَدُوِّ الْمُسْلِمِينَ مَثَلُ طَائِرٍ لَهُ رَأْسٌ وَلَهُ جَنَاحَانِ وَلَهُ رِجْلاَنِ، فَإِنْ كُسِرَ أَحَدُ الْجَنَاحَيْنِ نَهَضَتِ الرِّجْلاَنِ بِجَنَاحٍ وَالرَّأْسُ، فَإِنْ كُسِرَ الْجَنَاحُ الآخَرُ نَهَضَتِ الرِّجْلاَنِ وَالرَّأْسُ، وَإِنْ شُدِخَ الرَّأْسُ ذَهَبَتِ الرِّجْلاَنِ وَالْجَنَاحَانِ وَالرَّأْسُ، فَالرَّأْسُ كِسْرَى، وَالْجَنَاحُ قَيْصَرُ، وَالْجَنَاحُ الآخَرُ فَارِسُ، فَمُرِ الْمُسْلِمِينَ فَلْيَنْفِرُوا إِلَى كِسْرَى. وَقَالَ بَكْرٌ وَزِيَادٌ جَمِيعًا عَنْ جُبَيْرِ بْنِ حَيَّةَ قَالَ فَنَدَبَنَا عُمَرُ وَاسْتَعْمَلَ عَلَيْنَا النُّعْمَانَ بْنَ مُقَرِّنٍ، حَتَّى إِذَا كُنَّا بِأَرْضِ الْعَدُوِّ، وَخَرَجَ عَلَيْنَا عَامِلُ كِسْرَى فِي أَرْبَعِينَ أَلْفًا، فَقَامَ تُرْجُمَانٌ فَقَالَ لِيُكَلِّمْنِي رَجُلٌ مِنْكُمْ. فَقَالَ الْمُغِيرَةُ سَلْ عَمَّا شِئْتَ. قَالَ مَا أَنْتُمْ قَالَ نَحْنُ أُنَاسٌ مِنَ الْعَرَبِ كُنَّا فِي شَقَاءٍ شَدِيدٍ وَبَلاَءٍ شَدِيدٍ، نَمَصُّ الْجِلْدَ وَالنَّوَى مِنَ الْجُوعِ، وَنَلْبَسُ الْوَبَرَ وَالشَّعَرَ، وَنَعْبُدُ الشَّجَرَ وَالْحَجَرَ، فَبَيْنَا نَحْنُ كَذَلِكَ، إِذْ بَعَثَ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرَضِينَ تَعَالَى ذِكْرُهُ وَجَلَّتْ عَظَمَتُهُ إِلَيْنَا نَبِيًّا مِنْ أَنْفُسِنَا، نَعْرِفُ أَبَاهُ وَأُمَّهُ، فَأَمَرَنَا نَبِيُّنَا رَسُولُ رَبِّنَا صلى الله عليه وسلم أَنْ نَقَاتِلَكُمْ حَتَّى تَعْبُدُوا اللَّهَ وَحْدَهُ أَوْ تُؤَدُّوا الْجِزْيَةَ، وَأَخْبَرَنَا نَبِيُّنَا صلى الله عليه وسلم عَنْ رِسَالَةِ رَبِّنَا أَنَّهُ مَنْ قُتِلَ مِنَّا صَارَ إِلَى الْجَنَّةِ فِي نَعِيمٍ لَمْ يَرَ مِثْلَهَا قَطُّ، وَمَنْ بَقِيَ مِنَّا مَلَكَ رِقَابَكُمْ.
பாடம் : 1 இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாருடன் காப்புவரி ஒப்பந்தம் செய்துகொள்வதும், பகை நாட்டாருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: வேதம் வழங்கப்பெற்றோரில் யார் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை விலக்கிக்கொள்ளாம லும், உண்மை மார்க்கத்தைப் பின்பற்றாம லும் இருக்கிறார்களோ அவர்கள் சிறுமை யடைந்தவர்களாக(த் தமது) கரத்தால் காப்புவரி செலுத்தும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். (9:29) மேலும், யூதர்கள், கிறித்தவர்கள், அக்னி ஆராதனையாளர்கள் மற்றும் முஸ்லிமல்லாதோரிடம் காப்புவரி வாங்கியது பற்றி வந்துள்ள தகவல்கள். அப்துல்லாஹ் பின் நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்தவர் க(ளான வேதக்காரர்க)ள்மீது நான்கு பொற்காசுகளும், யமன் நாட்டவர்மீது ஒரு பொற்காசும் (காப்புவரியாக) விதிக்கக் காரணமென்ன?” என்று முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது (அவரவரது) வசதியைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டது” என்று பதிலளித்தார்கள்.
3159. ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) இணைவைப்போருடன் போர் புரிய மக்களைப் பெரிய நகரங்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது (பாரசீகத் தளபதியான) யிஹுர்முஸான்’ என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.5 உமர் (ரலி) அவர்கள் ஹுர்முஸானிடம், ‘‘நான் எனது இந்தப் போர்களில் உம்மிடம்தான் ஆலோசனை கேட்கப்போகிறேன்”6 என்று சொன்னார்கள்.

அதற்கு அவர், ‘‘சரி, நீங்கள் போரிட விரும்பும் நாடுகளின் நிலையும் அதிலுள்ள எதிரிகளின் நிலையும் ஒரு பறவையின் நிலையை ஒத்திருக்கிறது. அப்பறவைக்கு ஒரு தலையும் இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் உள்ளன. (அதன்) இரு சிறகுகளில் ஒன்று ஒடிக்கப் பட்டுவிடுமாயின், கால்கள் இரண்டும் தலையும் (மீதியுள்ள) ஒரு சிறகின் உதவியால் எழுந்துவிடும். மற்றொரு சிறகும் ஒடிக்கப்பட்டுவிடுமாயின், இரு கால்களும் தலையும் (மீண்டும்) எழும். தலையே நொறுக்கப்பட்டுவிட்டால் இரு கால்களும், இருசிறகுகளும், தலையும் போய்விடும்.

(சாசானியப் பேரரசனான) கிஸ்ரா (குஸ்ரூ)தான் தலை. சீசர் ஒரு சிறகும் பாரசீகர்கள் மற்றொரு சிறகும் ஆவர். ஆகவே, கிஸ்ராவை நோக்கிப் புறப்படும் படி முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுங்கள்” என்று (ஆலோசனை) கூறினார்.

அறிவிப்பாளர்கள் பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) ஆகிய இருவரும் சேர்ந்து, ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாவது:

உடனே உமர் (ரலி) அவர்கள் எங்களை (போருக்குப் புறப்படும்படி) அழைப்பு விடுத்தார்கள்; நுஅமான் பின் முகர்ரின் (ரலி) அவர்களை எங்களுக்குத் தலைவராக்கி (அனுப்பி)னார்கள். இறுதியில், நாங்கள் எதிரியின் பூமியில் (ஈரானிலுள்ள நஹாவந்தில்) இருந்தபோது எங்களைத் தாக்கிட கிஸ்ராவின் தளபதி நாற்பதாயிரம் பேர் கொண்ட படையுடன் வந்தான். (அவர்களின்) மொழி பெயர்ப்பாளர் எழுந்து, ‘‘உங்களில் ஒருவர் பேசட்டும்” என்று சொல்ல, முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள், ‘‘நீ விரும்பியதைப் பற்றிக் கேள்” என்று சொன்னார் கள். அந்த மொழிபெயர்ப்பாளர், ‘‘நீங்கள் யார்? (எதற்காக வந்திருக்கிறீர்கள்?)” என்று கேட்டார்.

அதற்கு முஃகீரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: நாங்கள் அரபு மக்கள். நாங்கள் கடுமையான சோதனை யிலும் பின்தங்கிய நிலையிலும் இருந் தோம்; பசியின் காரணத்தால் (காய்கள், பழங்களின்) தோலையும் கொட்டையையும் சப்பித் தின்றுகொண்டிருந்தோம்; முடியை யும் கம்பளியையும் அணிந்துகொண்டி ருந்தோம்; மரத்தையும் கல்லையும் வழிபட்டுவந்தோம். இந்நிலையில்தான், வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி லி அவன் புகழ் உயர்ந்தது; அவன் மகத் துவம் மேலானது லி (அல்லாஹ்) எங்களிலிருந்தே ஒரு நபியை எங்களிடம் அனுப்பி னான். அவருடைய தாய், தந்தையை நாங்கள் (நன்கு) அறிவோம். எங்கள் நபியும், எங்கள் இறைவனின் தூதருமான அவர் உங்களுடன் நாங்கள் போரிட வேண்டுமென எங்களுக்குக் கட்டளை யிட்டார்.

‘‘ஒன்று, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வழிபட வேண்டும்; அல்லது நீங்கள் யிஜிஸ்யா’ வரி செலுத்த வேண்டும். (இதற்காக நாங்கள் போராடி) இந்தப் போராட்டத்தில் எங்களில் யாரேனும் கொல்லப்பட்டுவிட்டால், அவர் (இதற்கு முன்) ஒருபோதும் கண்டிராத இன்பமயமான சொர்க்கத்திற்குச் செல்வார்; (கொல்லப்படாமல் வெற்றிவாகை சூடி) எங்களில் ஒருவர் உயிர் வாழ்ந்தால் உங்கள் பிடரிகளை அவர் உடைமையாக்கிக்கொள்வார் என்று எங்கள் இறைவன் தெரிவித்த தூதுச் செய்தியை எங்கள் நபி எங்களுக்கு அறிவித்தார்கள்.


அத்தியாயம் : 58
3160. فَقَالَ النُّعْمَانُ رُبَّمَا أَشْهَدَكَ اللَّهُ مِثْلَهَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُنَدِّمْكَ وَلَمْ يُخْزِكَ، وَلَكِنِّي شَهِدْتُ الْقِتَالَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا لَمْ يُقَاتِلْ فِي أَوَّلِ النَّهَارِ انْتَظَرَ حَتَّى تَهُبَّ الأَرْوَاحُ وَتَحْضُرَ الصَّلَوَاتُ.
பாடம் : 1 இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாருடன் காப்புவரி ஒப்பந்தம் செய்துகொள்வதும், பகை நாட்டாருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: வேதம் வழங்கப்பெற்றோரில் யார் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை விலக்கிக்கொள்ளாம லும், உண்மை மார்க்கத்தைப் பின்பற்றாம லும் இருக்கிறார்களோ அவர்கள் சிறுமை யடைந்தவர்களாக(த் தமது) கரத்தால் காப்புவரி செலுத்தும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். (9:29) மேலும், யூதர்கள், கிறித்தவர்கள், அக்னி ஆராதனையாளர்கள் மற்றும் முஸ்லிமல்லாதோரிடம் காப்புவரி வாங்கியது பற்றி வந்துள்ள தகவல்கள். அப்துல்லாஹ் பின் நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்தவர் க(ளான வேதக்காரர்க)ள்மீது நான்கு பொற்காசுகளும், யமன் நாட்டவர்மீது ஒரு பொற்காசும் (காப்புவரியாக) விதிக்கக் காரணமென்ன?” என்று முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது (அவரவரது) வசதியைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டது” என்று பதிலளித்தார்கள்.
3160. (இந்தப் போரின்போது, எதிரிகள்மீது தாக்குதல் தொடுப்பதைத் தாமதிப்ப தாக முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் நுஅமான் பின் முகர்ரின் (ரலி) அவர்கள்மீது குற்றம்சாட்டிய வேளையில்) நுஅமான் (ரலி) அவர்கள், இதைப் போன்ற (கடும் துன்பம் நிறைந்த) ஒருபோரில் நபி (ஸல்) அவர்களுடன் உங்களைஅல்லாஹ் கலந்துகொள்ளச் செய்திருந்தால், (நபி (ஸல்) அவர்களும் தாக்குதலைத் தொடங்கிடத் தாமதப்படுத்தி அதனால் காத்திருக்க வேண்டிய சிரமம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், அதனால் கிடைக்கவிருக்கும் மறுமை பலன்களின் எதிர்பார்ப்பால்)உங்களுக்கு அது வருத்தம் தந்திருக்காது; அதை இழிவாக எண்ணச் செய்திருக்காது.

ஆயினும், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பல போர்களில் கலந்துகொண்டிருக்கிறேன். பகல் காற்று வீசத் தொடங்கி (சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து பிற்பகல்) தொழுகை நேரங்கள் வரும்வரை காத்திருப்பது அவர்களின் வழக்கமாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 58
3161. حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّاسٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ غَزَوْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَبُوكَ، وَأَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم بَغْلَةً بَيْضَاءَ، وَكَسَاهُ بُرْدًا، وَكَتَبَ لَهُ بِبَحْرِهِمْ.
பாடம் : 2 தலைவர் ஓர் ஊரின் அரசருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டால், அது அந்த ஊர் வாசிகள் அனைவருக்கும் பொருந்துமா?
3161. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டோம். ‘அய்லா’வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தார்.7 அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், அவர்கள் தமது ஊரிலேயே (பாதுகாப்போடு) வாழலாம் என மன்னருக்கு (பதில் கடிதம்) எழுதினார்கள்.8

அத்தியாயம் : 58
3162. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ سَمِعْتُ جُوَيْرِيَةَ بْنَ قُدَامَةَ التَّمِيمِيَّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قُلْنَا أَوْصِنَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ. قَالَ أُوصِيكُمْ بِذِمَّةِ اللَّهِ، فَإِنَّهُ ذِمَّةُ نَبِيِّكُمْ، وَرِزْقُ عِيَالِكُمْ.
பாடம் : 3 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பில் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களைப் பாதுகாக்குமாறு வந்துள்ள அறிவுரை (குர்ஆனில் 9:8ஆவது வசனத்தில் உறவையோ உடன்படிக்கையையோ பொருட்படுத்தமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இங்கு) உடன் படிக்கை என்பதைக் குறிக்க யிதிம்மா’ எனும் சொல்லும், யிஉறவு’ என்பதைக் குறிக்க யிஇல்லு’ எனும் சொல்லும் ஆளப் பட்டுள்ளன. (இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதோர் ‘அஹ்லுத் திம்மா’ (உடன்படிக்கைக்காரர்கள்) எனப்படுவர்.)
3162. ஜுவைரிய்யா பின் குதாமா அத் தமீமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நாங்கள் உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்களிடம், ‘‘எங்களுக்கு அறிவுரை கூறுங்கள், இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே!” என்று கேட் டோம்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘(இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதவர்களைக் காக்கும்) அல்லாஹ்வின் பொறுப்பை நிறைவேற்றும்படி உங்களுக்கு நான் அறிவுரை கூறுகின்றேன். ஏனெனில், அது உங்கள் நபியின் பொறுப்பும் உங்கள் குடும்பத்தாரின் வாழ்வாதாரமும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 58
3163. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الأَنْصَارَ لِيَكْتُبَ لَهُمْ بِالْبَحْرَيْنِ فَقَالُوا لاَ وَاللَّهِ حَتَّى تَكْتُبَ لإِخْوَانِنَا مِنْ قُرَيْشٍ بِمِثْلِهَا. فَقَالَ ذَاكَ لَهُمْ مَا شَاءَ اللَّهُ عَلَى ذَلِكَ يَقُولُونَ لَهُ قَالَ "" فَإِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أُثْرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ"".
பாடம் : 4 பஹ்ரைன் நிலங்களை (தோழர்கள் சிலருக்கு) நபி (ஸல்) அவர்கள் வருவாய் மானியமாக ஒதுக்கியதும், பஹ்ரைனின் நிதியிலிருந்தும் ஜிஸ்யாவிலிருந்தும் வழங்குவதாக நபியவர்கள் வாக்களித்ததும், யிஃபய்உ' மற்றும் யிஜிஸ்யா' நிதி யாருக்குப் பங்கிடப்படும் என்பதும்9
3163. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை, அவர்களுக்கு பஹ்ரைனின் நிலங்களை வருவாய் மானியமாக எழுதித் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! எங்கள் குறைஷி சகோதரர்களுக்கும் இதே போன்று எழுதித்தரும்வரை நாங்கள் (இவற்றை) ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று கூறி விட்டார்கள்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அது குறைஷியருக்குக் கிடைக்கும்; அல்லாஹ் அதை விரும்பும்பட்சத்தில்” என்று கூறினார்கள். குறைஷியருக்கும் எழுதித்தரும்படி அன்சாரிகள் (தொடர்ந்து) வற்புறுத்திக் கூறினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘(அன்சாரிகளே!) எனக்குப்பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே) உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னு ரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, (மறுமையில், எனக்குச் சொந்த மான) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் (காலம்)வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்” என்று சொன்னார் கள்.10


அத்தியாயம் : 58
3164. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنِي رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِي " لَوْ قَدْ جَاءَنَا مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ". فَلَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَجَاءَ مَالُ الْبَحْرَيْنِ قَالَ أَبُو بَكْرٍ مَنْ كَانَتْ لَهُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عِدَةٌ فَلْيَأْتِنِي. فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ كَانَ قَالَ لِي " لَوْ قَدْ جَاءَنَا مَالُ الْبَحْرَيْنِ لأَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ". فَقَالَ لِي احْثُهْ. فَحَثَوْتُ حَثْيَةً فَقَالَ لِي عُدَّهَا. فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ، فَأَعْطَانِي أَلْفًا وَخَمْسَمِائَةٍ
பாடம் : 4 பஹ்ரைன் நிலங்களை (தோழர்கள் சிலருக்கு) நபி (ஸல்) அவர்கள் வருவாய் மானியமாக ஒதுக்கியதும், பஹ்ரைனின் நிதியிலிருந்தும் ஜிஸ்யாவிலிருந்தும் வழங்குவதாக நபியவர்கள் வாக்களித்ததும், யிஃபய்உ' மற்றும் யிஜிஸ்யா' நிதி யாருக்குப் பங்கிடப்படும் என்பதும்9
3164. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை), ‘‘நம்மிடம் பஹ்ரைனின் நிதி வந்தால் உமக்கு நான் இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்” என்று (மூன்று முறை) என்னிடம் சொல்லியிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் பஹ்ரைனின் நிதி வர, அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் இறந்து விட்டிருந்)தால் அவர் என்னிடம் வரட்டும்” என்று கூறினார்கள்.

உடனே நான் அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிநம்மிடம் பஹ்ரைனின் செல்வம் வந்தால் உமக்கு இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்” என்று கூறினேன்.

அப்போது அவர்கள் என்னிடம், ‘‘அதை அள்ளிப் போட்டுக்கொள்வீராக” என்று சொன்னார்கள். நான் அதை நிறைவாக அள்ளிப் போட்டுக்கொண்டேன். அவர்கள் என்னிடம், ‘‘அதை எண்ணிக் கொள்வீராக” என்று சொன்னார்கள். நான் அதை எண்ணிப்பார்த்தேன். அது ஐநூறு இருந்தது. ஆகவே, அவர்கள் எனக்கு (மொத்தம்) ஆயிரத்து ஐநூறு கொடுத் தார்கள்.11


அத்தியாயம் : 58
3165. . وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَقَالَ " انْثُرُوهُ فِي الْمَسْجِدِ " فَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي إِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلاً. قَالَ " خُذْ ". فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَلَمْ يَسْتَطِعْ. فَقَالَ أْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ إِلَىَّ. قَالَ " لاَ ". قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ. قَالَ " لاَ ". فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَرْفَعْهُ. فَقَالَ أْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَىَّ. قَالَ " لاَ ". قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ. قَالَ " لاَ ". فَنَثَرَ ثُمَّ احْتَمَلَهُ عَلَى كَاهِلِهِ ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ.
பாடம் : 4 பஹ்ரைன் நிலங்களை (தோழர்கள் சிலருக்கு) நபி (ஸல்) அவர்கள் வருவாய் மானியமாக ஒதுக்கியதும், பஹ்ரைனின் நிதியிலிருந்தும் ஜிஸ்யாவிலிருந்தும் வழங்குவதாக நபியவர்கள் வாக்களித்ததும், யிஃபய்உ' மற்றும் யிஜிஸ்யா' நிதி யாருக்குப் பங்கிடப்படும் என்பதும்9
3165. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து நிதி ஒன்று கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைப் பள்ளிவாசலில் பரப்பிவையுங்கள்” என்று உத்தர விட்டார்கள். அது நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட செல்வங்களிலேயே அதிகமானதாக இருந்தது. அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ர் போரில் கைது செய்யப்பட்டபின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத் தொகை கொடுத்திருக்கிறேன்” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள், தமது துணியில் அதை அள்ளிப்போட்டார்கள். பிறகு அதைத் தூக்கப்போனார்கள். அவர்களால் (அதைச் சுமக்க) முடியவில்லை. ஆகவே, ‘‘(உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவருக்கு இதை என் (தோள்) மீது தூக்கிவைக்கும்படி உத்தரவிடுங்கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உத்தரவிட மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நீங்களாவது என் தோள்மீது இதைத் தூக்கிவையுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘‘வைக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தூக்க முயன்றார்கள். (அப்போதும்) அதை அவர்களால் தூக்க முடியவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இதைத் தூக்கி என்மீது வைக்குமாறு இவர்களில் ஒருவருக்கு உத்தரவிடுங்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மாட்டேன்” என்று சொல்லி விட்டார்கள். நீங்களாவது இதை என்மீது தூக்கி வையுங்கள் என்றார்கள். அதற்கும் நபியவர்கள் யிமாட்டேன்’ என்று சொல்லி விட்டார்கள். பிறகு அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தமது தோளில் சுமந்துகொண்டு நடக்கலானார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்படைந்துவிட்டு அவர்கள் எங்களைவிட்டு மறையும்வரை அவர்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தார்கள்.

அங்கே, அந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம்கூட மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இடத்தைவிட்டு எழுந்தார்கள்.12

அத்தியாயம் : 58
3166. حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا مُجَاهِدٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا "".
பாடம் : 5 (இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஒப்பந்தப் பிரஜையைக் குற்றமின்றி கொல்வதிலுள்ள பாவம்
3166. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொல்பவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான். அதன் வாடையோ நாற்பதாண்டு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 58
3167. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" انْطَلِقُوا إِلَى يَهُودَ "". فَخَرَجْنَا حَتَّى جِئْنَا بَيْتَ الْمِدْرَاسِ فَقَالَ "" أَسْلِمُوا تَسْلَمُوا، وَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ، وَإِنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ، فَمَنْ يَجِدْ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ، وَإِلاَّ فَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ "".
பாடம் : 6 யூதர்களை அரபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுதல்13 ‘‘அல்லாஹ் உங்களை இங்கே வசிக்கச் செய்யும்வரை நானும் உங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் (கைபரில் வசித்த யூதர்களிடம்) கூறினார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.14
3167. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (தமது அறை’லிருந்து) வெளியே வந்து, ‘‘யூதர்களை நோக்கி நடங்கள்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் புறப்பட்டுச் சென்று யிபைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம்.15

அப்போது நபியவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; பாதுகாப்புப் பெறுவீர்கள். மேலும், பூமி அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை இந்தப் பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் ஒருவருக்கு, (கையில் எடுத்துச் செல்ல முடியாத) அவரது செல்வத்திற்குப் பகரமாக ஏதேனும் கிடைத்தால் அதை அவர் விற்றுவிடட்டும். இல்லையெனில், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.16


அத்தியாயம் : 58
3168. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ يَوْمُ الْخَمِيسِ، وَمَا يَوْمُ الْخَمِيسِ ثُمَّ بَكَى حَتَّى بَلَّ دَمْعُهُ الْحَصَى. قُلْتُ يَا أَبَا عَبَّاسٍ، مَا يَوْمُ الْخَمِيسِ قَالَ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعُهُ فَقَالَ "" ائْتُونِي بِكَتِفٍ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا "". فَتَنَازَعُوا وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ فَقَالُوا مَا لَهُ أَهَجَرَ اسْتَفْهِمُوهُ. فَقَالَ "" ذَرُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ ـ فَأَمَرَهُمْ بِثَلاَثٍ قَالَ ـ أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، وَأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ "". وَالثَّالِثَةُ خَيْرٌ، إِمَّا أَنْ سَكَتَ عَنْهَا، وَإِمَّا أَنْ قَالَهَا فَنَسِيتُهَا. قَالَ سُفْيَانُ هَذَا مِنْ قَوْلِ سُلَيْمَانَ.
பாடம் : 6 யூதர்களை அரபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுதல்13 ‘‘அல்லாஹ் உங்களை இங்கே வசிக்கச் செய்யும்வரை நானும் உங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் (கைபரில் வசித்த யூதர்களிடம்) கூறினார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.14
3168. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(அந்த) வியாழக்கிழமை! எப்படிப்பட்ட வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று சொல்லிவிட்டு சிறு சரளைக் கற்களை அவர்களின் கண்ணீர் நனைத்துவிடும் அளவுக்கு அழுதார்கள். நான், ‘‘இப்னு அப் பாஸ் (ரலி) அவர்களே! வியாழக்கிழமை (அப்படி) என்ன (நடந்தது)?” என்று கேட்டேன்.

அவர்கள், ‘‘(அன்றுதான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை கடுமையானது. அப்போது அவர்கள், ‘‘என்னிடம் தோள்பட்டை எலும்பு ஒன்றைக் கொண்டுவாருங்கள். உங்க ளுக்கு ஒரு மடலை (இறுதியுபதேசத்தை) நான் எழுதுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். மக்கள் (கருத்து பேதம் கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டார்கள்.17

ஆனால், ஓர் இறைத்தூதர் அருகில் சச்சரவிட்டுக்கொள்ளல் தகாத செயலாகும். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்களா? அவர் களிடமே (விளக்கம்) கேளுங்கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை விட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள இந்த (இறை நினைவில் லயித்திருக்கும்) நிலையே சிறந்தது” என்று கூறிவிட்டு மூன்று விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்:

(அந்த மூன்று விஷயங்களாவன:) இணைவைப்பாளர்களை அரபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றிவிடுங்கள். நான் (வெளிநாட்டிலிருந்து வரும்) தூதுக் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கி வந்ததைப் போன்றே நீங்களும் பரிசுகளை வழங்கிவாருங்கள்.18

(அறிவிப்பாளர்தொடர்ந்து கூறுகிறார்:) மூன்றாவது கட்டளை ஒன்று, நபி (ஸல்) அவர்கள் சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டிருக்க வேண்டும்; அல்லது அதை அவர்கள் கூறி (இந்நிகழ்ச்சியை எனக்கு அறிவித்தவரும் கூறி) நான் அதை மறந்துவிட்டிருக்க வேண்டும். (எப்படியாயினும், மூன்றாவதும்) ஒரு நல்ல விஷயம் தான்.

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘இப்படிச் சொன்ன அறிவிப்பாளர், சுலைமான் பின் அபில்முஸ்லிம் அல் அஹ்வல் (ரஹ்) அவர்கள்தான்” என்று கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 58
3169. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم شَاةٌ فِيهَا سُمٌّ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اجْمَعُوا إِلَىَّ مَنْ كَانَ هَا هُنَا مِنْ يَهُودَ "". فَجُمِعُوا لَهُ فَقَالَ "" إِنِّي سَائِلُكُمْ عَنْ شَىْءٍ فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ "". فَقَالُوا نَعَمْ. قَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَبُوكُمْ "". قَالُوا فُلاَنٌ. فَقَالَ "" كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلاَنٌ "". قَالُوا صَدَقْتَ. قَالَ "" فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَىْءٍ إِنْ سَأَلْتُ عَنْهُ "" فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ، وَإِنْ كَذَبْنَا عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا. فَقَالَ لَهُمْ "" مَنْ أَهْلُ النَّارِ "". قَالُوا نَكُونُ فِيهَا يَسِيرًا ثُمَّ تَخْلُفُونَا فِيهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا ـ ثُمَّ قَالَ ـ هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَىْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ "". فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ. قَالَ "" هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سُمًّا "". قَالُوا نَعَمْ. قَالَ "" مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ "". قَالُوا أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيحُ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ.
பாடம் : 7 இணைவைப்பாளர்கள் முஸ்லிம் களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால் அவர்கள் மன்னிக்கப் படுவார்களா?
3169. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப் பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது.19 (விஷயம் தெரிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இங்கேயுள்ள யூதர்களை எனக்காக ஒன்றுகூட்டுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்றுகூட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த யூதர்கள், ‘‘சரி (உண்மை சொல்கிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இன்னார்” என்று பதிலளித்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தான்” என்று கூறினார்கள். அவர்கள், ‘‘நீங்கள் சொன்னது உண்மைதான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். அவர்கள், ‘‘சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்துகொண்டதைப் போன்றே அதையும் அறிந்துகொள்வீர்கள்” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நரகவாசிகள் யார்?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்குப் பதிலாக அதில் நீங்கள் நுழைவீர்கள்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்குப் பதிலாக ஒருபோதும் நுழையமாட்டோம்” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘சரி, அபுல்காசிமே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘ஆம் (கலந்திருக்கிறோம்)” என்று பதில் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது” என்று பதிலளித்தார்கள்.20

அத்தியாயம் : 58
3170. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ الْقُنُوتِ. قَالَ قَبْلَ الرُّكُوعِ. فَقُلْتُ إِنَّ فُلاَنًا يَزْعُمُ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ، فَقَالَ كَذَبَ. ثُمَّ حَدَّثَنَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَنَتَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ ـ قَالَ ـ بَعَثَ أَرْبَعِينَ أَوْ سَبْعِينَ ـ يَشُكُّ فِيهِ ـ مِنَ الْقُرَّاءِ إِلَى أُنَاسٍ مِنَ الْمُشْرِكِينَ، فَعَرَضَ لَهُمْ هَؤُلاَءِ فَقَتَلُوهُمْ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَهْدٌ، فَمَا رَأَيْتُهُ وَجَدَ عَلَى أَحَدٍ مَا وَجَدَ عَلَيْهِمْ.
பாடம் : 8 ஒப்பந்தத்தை முறித்தவர்களுக்கு எதிராகத் தலைவர் பிரார்த்திப்பது
3170. ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், (தொழுகையில் ஓதப்படும்) யிகுனூத்’ எனும் சிறப்பு துஆ பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வேண்டும்)” என்று கூறினார்கள். ‘‘ருகூஉக்குப் பின்னால் (குனூத் ஓத வேண்டும்)” என்று நீங்கள் கூறியதாக இன்னார் நினைத்துக்கொண்டிருக்கிறார்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அவர் பொய் சொன்னார்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள், நபி (ஸல்) அவர்களைக் குறித்து, ‘‘அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் சில கிளை’ன ருக்கு எதிராக ஒரு மாதம் ருகூஉக்குப் பின் யிகுனூத்’ ஓதினார்கள்” என்று அறிவித்தார்கள்.

அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் நாற்பது அல்லது எழுபது பேரை இணைவைப்பாளர்கள் சிலரிடம் அனுப்பிவைத்தார்கள் லிஎன்று (அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாற்பது பேரா, எழுபது பேரா என்னும்) சந்தேகத்துடன் கூறினார்கள்லி அவர்களுக்கு இவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்க, அவர்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள்.

அப்போது பனூ சுலைம் குலத்தாருக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஆகவே, அவர்கள்மீது கோபமடைந்ததைப் போன்று வேறெவர்மீதும் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்து நான் பார்த்த தில்லை.21

அத்தியாயம் : 58