3171. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ ابْنَةِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ ابْنَةَ أَبِي طَالِبٍ، تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ "" مَنْ هَذِهِ "". فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ. فَقَالَ "" مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ "". فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ قَامَ، فَصَلَّى ثَمَانَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي عَلِيٌّ أَنَّهُ قَاتِلٌ رَجُلاً قَدْ أَجَرْتُهُ فُلاَنُ بْنُ هُبَيْرَةَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ "". قَالَتْ أُمُّ هَانِئٍ وَذَلِكَ ضُحًى.
பாடம் : 9
பெண்கள் அளிக்கும் அபயமும் அவர்களிடம் புகலிடம் பெறுவ தும்
3171. உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)22 அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது, அவர்களுக்கு நான் சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘யார் அது?” என்று கேட்டார் கள். நான், ‘‘அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ” என்று பதிலளித்தேன். உடனே அவர்கள், ‘‘உம்மு ஹானீயே! வருக! வருக! (உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன்)” என்று சொன்னார்கள்.
அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (மேனியில்) சுற்றியவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயின் மகன் (என் சகோதரர்) அலீ, நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரைலி ஹுபைராவின் மகனான இன்னாரைலி தாம் கொல்லப்போவதாகக் கூறுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்துவிட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்)” என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது.23
அத்தியாயம் : 58

3172. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ خَطَبَنَا عَلِيٌّ فَقَالَ مَا عِنْدَنَا كِتَابٌ نَقْرَؤُهُ إِلاَّ كِتَابُ اللَّهِ، وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ فَقَالَ فِيهَا الْجِرَاحَاتُ وَأَسْنَانُ الإِبِلِ، وَالْمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى كَذَا، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا أَوْ آوَى فِيهَا مُحْدِثًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ، وَمَنْ تَوَلَّى غَيْرَ مَوَالِيهِ فَعَلَيْهِ مِثْلُ ذَلِكَ، وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ مِثْلُ ذَلِكَ.
பாடம் : 10
முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றே. அவர் களில் சாமானியரும் அடைக்கலம் அளிக்கலாம்.
3172. யஸீத் பின் ஷரீக் அத் தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘‘அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர, நாங்கள் வாசிக்கின்ற புத்தகம் வேறெதுவும் எங்களிடம் இல்லை. இந்த ஏட்டில் காயங் களுக்கான பழிவாங்கல்கள் (ஸகாத்தாகவும் உயிரீட்டுத் தொகையாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது விவரங்கள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
‘‘மேலும், (அதில் கூறப்பட்டுள்ள தாவது:) மதீனா நகரம் ‘அய்ர்’ மலைக்கும் (உஹுத் மலை அமைந்துள்ள) இன்ன இடத்திற்கும் இடையிலுள்ள பகுதிவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தில் இல்லாத) புதிய ஒன்றை உருவாக்குகிறாரோ அல்லது (அவ்விதம்) புதிதாக ஒன்றை உருவாக்குபவருக்குப் புகலிடம் கொடுக்கின்றாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவரிடமிருந்து கடமையான வழிபாடோ கூடுதல் வழிபாடோ எதுவும் ஏற்கப்படாது.
‘‘விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த) எஜமானர்கள் அல்லாத வேறொருவரை எஜமானர்களாக்கிக்கொண்டால், அவன் மீதும் அவ்வாறே (சாபம்) ஏற்படும். முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதேயாகும்.) ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கின்றானோ அவன்மீதும் அவ்வாறே (சாபம்) ஏற்படும்.24

3173. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ ـ هُوَ ابْنُ الْمُفَضَّلِ ـ حَدَّثَنَا يَحْيَى، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ انْطَلَقَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ إِلَى خَيْبَرَ، وَهْىَ يَوْمَئِذٍ صُلْحٌ، فَتَفَرَّقَا، فَأَتَى مُحَيِّصَةُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ وَهْوَ يَتَشَحَّطُ فِي دَمٍ قَتِيلاً، فَدَفَنَهُ ثُمَّ قَدِمَ الْمَدِينَةَ، فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَمُحَيِّصَةُ وَحُوَيِّصَةُ ابْنَا مَسْعُودٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ يَتَكَلَّمُ فَقَالَ "" كَبِّرْ كَبِّرْ "". وَهْوَ أَحْدَثُ الْقَوْمِ، فَسَكَتَ فَتَكَلَّمَا فَقَالَ "" أَتَحْلِفُونَ وَتَسْتَحِقُّونَ قَاتِلَكُمْ أَوْ صَاحِبَكُمْ "". قَالُوا وَكَيْفَ نَحْلِفُ وَلَمْ نَشْهَدْ وَلَمْ نَرَ قَالَ "" فَتُبْرِيكُمْ يَهُودُ بِخَمْسِينَ "". فَقَالُوا كَيْفَ نَأْخُذُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ فَعَقَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ.
பாடம் : 11
இணைவைப்பாளர்கள் ‘அஸ்லம்னா' (நாங்கள் இஸ்லாத்தில் இணைந்துவிட்டோம்) என்று சொல்லத் தெரியாமல் ‘ஸபஃனா' (நாங்கள் மதம் மாறிவிட்டோம்) என்று சொன்னால்...25
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் (பனூ ஜதீமா குலத்தாரைக்) கொல்லத் தொடங்கினார்கள். (இந்த விஷயம் தெரிய வந்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘‘(இறைவா!) காலித் செய்த தவறுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று உன்னிடம் நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.26
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ‘‘இஸ்லாமிய அறப்போர் வீரர் (பாரசீக மொழியில்) யிமத்தரஸ்’ (பயப்படாதே) என்று (எதிரியைப் பார்த்துச்) சொன்னாலும் அவர் அவனுக்கு அபயம் அளித்துவிட்டார். ஏனெனில், அல்லாஹ் எல்லா மொழிகளை யும் அறிவான்” என்று சொன்னார்கள்.27
மேலும் உமர் (ரலி) அவர்கள் (ஹுர்முஸானிடம்), ‘‘நீங்கள் பேசுங்கள்; பரவாயில்லை” என்று கூறினார்கள்.28
பாடம் : 12
பணம் உள்ளிட்டவையைக் கொடுத்து இணைவைப்பாளர் களுடன் போர் மறுப்பு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வதும் ஒப்பந்தத்தை நிறைவேற்றாதவரு டைய பாவமும்
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அவர்கள் சமாதானத்திற்கு வந்தால், நீரும் அதற்கு முன்வருவீராக! (8:61)
(இங்கு சமாதானத்திற்கு முன்வரல் என்பதைக் குறிக்க) யிஜனஹூ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிசமா தானத்தை அவர்கள் கோரினால்’ என்பது பொருளாகும்.
3173. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களான) அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அவர்களிடம் முஹய்யிஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள்.
பிறகு மதீனா வந்தார்கள். அப்போது (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (அவருடைய சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் தொடங்கினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பெரியவர்களைப் பேச விடு. பெரியவர் களைப் பேச விடு” என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களை இன்னார்தான் கொலை செய்தார் என்று) சத்தியம் செய்து நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்துப் பழிவாங்கிக்கொள்ளும்) உரிமை பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட் டார்கள்.
அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்? நாங்கள் அங்கே (கொலை நடந்த இடத்தில்) இருக்கவில்லை; கொலை செய்தவனை (கொலை செய்யும்போது) பார்க்கவும் இல்லையே!” என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், யூதர்கள் (தாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்பதற்கு) ஐம்பது பேர் சத்தியம்செய்து உங்களிடம் தமது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கட்டும்!” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘இறைமறுப்பாளரான சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) எடுத்துக்கொள்வது?” என்று கேட்டார்கள்.
எனவே, நபி (ஸல்) அவர்கள், தாமே (அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான) உயிரீட்டுத் தொகையை (அவரது சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

3174. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي رَكْبٍ مِنْ قُرَيْشٍ كَانُوا تِجَارًا بِالشَّأْمِ فِي الْمُدَّةِ الَّتِي مَادَّ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَا سُفْيَانَ فِي كُفَّارِ قُرَيْشٍ.
பாடம் : 13
ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதன் சிறப்பு
3174. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் பின் ஹர்ப் அவர்கள், (தாம் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு) ஷாம் (சிரியா) நாட்டிற்கு குறைஷியரின் வணிகக் குழு ஒன்றில் சென்றிருந்தபோது (கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக்ளீயஸ் தமக்கு ஆளனுப்பி தமது அவைக்கு வரச் சொன்னதாகவும், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷி இறை மறுப்பாளர்கள் தொடர்பாகத் தம்முடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் நடந்ததாகவும் அறிவித் தார்கள்.29

3175. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُحِرَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ يَصْنَعْهُ.
பாடம் : 14
இஸ்லாமிய நாட்டில் வாழும் (முஸ்லிமல்லாத) சிறுபான்மை பிரஜை ஒருவர் சூனியம் செய்துவிட்டால் மன்னிக்கப்படுவாரா?
யூனுஸ் பின் யஸீத் அல்அய்லீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், ‘‘இஸ்லாமிய நாட்டின் பிரஜைகளான பிற மதத்தார் சூனியம் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்வாறு (சூனியம்) செய்யப்பட்டது; ஆனால், சூனியம் செய்தவன் வேதக்காரர்களில் ஒருவனாக (யூதனாக) இருந்தும் அவனை அதற்காக நபி (ஸல்) அவர்கள் கொல்லவில்லை என்று நமக்குச் செய்தி கிடைத்துள்ளது” என்று பதிலளித்தார்கள்.
3175. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு தடவை) சூனியம் செய்யப்பட்டது. அதன் வாயி லாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்ததாக அவர்கள் எண்ணிக்கொள்ளும் படி அவர்களுக்குப் பிரமையூட்டப்பட் டது.30

3176. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ بْنِ زَبْرٍ، قَالَ سَمِعْتُ بُسْرَ بْنَ عُبَيْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ، وَهْوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَقَالَ "" اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَىِ السَّاعَةِ، مَوْتِي، ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ، ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا، ثُمَّ فِتْنَةٌ لاَ يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلاَّ دَخَلَتْهُ، ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الأَصْفَرِ فَيَغْدِرُونَ، فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا "".
பாடம் : 15
மோசடி குறித்த எச்சரிக்கை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) அவர்கள் உம்மை ஏமாற்ற முனைந்தால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். (8:62)
3176. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக்கொள்” என்றார்கள்:
1. எனது மரணம். 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல். 3. ஆடுகளுக்கு ஏற்படும் (ஒரு வகை) நோயைப் போன்ற கொள்ளை நோய் உங்களைப் பீடித்தல். (அதனால் ஏராளமானவர்கள் இறந்துபோய் விடுவார்கள்.) 4. பிறகு செல்வம் பெருகி வழியும். எந்த அளவுக்கென்றால் ஒரு வருக்கு நூறு பொற்காசுகள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார். 5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது.
6. பிறகு உங்களுக்கும் (கிழக்கு ரோமானியரான) மஞ்சள் நிறத்தாருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்துவிடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.31

3177. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فِيمَنْ يُؤَذِّنُ يَوْمَ النَّحْرِ بِمِنًى لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ. وَيَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ، وَإِنَّمَا قِيلَ الأَكْبَرُ مِنْ أَجْلِ قَوْلِ النَّاسِ الْحَجُّ الأَصْغَرُ. فَنَبَذَ أَبُو بَكْرٍ إِلَى النَّاسِ فِي ذَلِكَ الْعَامِ، فَلَمْ يَحُجَّ عَامَ حَجَّةِ الْوَدَاعِ الَّذِي حَجَّ فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم مُشْرِكٌ.
பாடம் : 16
ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வது எப்படி?
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) ஒரு கூட்டத்தார் நம்பிக்கைத் துரோகம் செய்வார்கள் என்று நீர் அஞ்சினால், (அவர்களுடன் செய்த உடன்படிக்கையை) நீரும் சரிக்குச் சமமாக அவர்களிடமே எடுத்தெறிந்துவிடுவீராக! (8:58)
3177. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் யியவ்முந் நஹ்ர்’ (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாள்) அன்று மதீனாவில் பொது அறிவிப்பு கள் செய்பவர்களுடன் (அவர்களில் ஒருவனாக) அனுப்பினார்கள்.32
(அவர்கள் செய்யச்சொன்ன பொது அறிவிப்பு இதுதான்:) இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லத்தை (கஅபாவை) நிர்வாணமாக எவரும் தவாஃப் செய்யக் கூடாது.
மேலும், யிஹஜ்ஜுல் அக்பர்’ (பெரிய ஹஜ்) உடைய நாள் என்பது இந்த யியவ்முந் நஹ்ர்’ (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாள்)தான். இது, யிபெரிய ஹஜ்’ என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம் மக்கள் (உம்ராவை) யிசிறிய ஹஜ்’ என்று அழைத்ததேயாகும்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த ஆண்டில் (இணைவைக்கும்) மக்களிடம் (இஸ்லாமிய அரசு செய்துகொண்ட) ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக அறிவித்துவிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் யிவிடைபெறும் ஹஜ்’ செய்த ஆண்டில் இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யவில்லை.33

3178. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَرْبَعُ خِلاَلٍ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا مَنْ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا خَاصَمَ فَجَرَ، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا "".
பாடம் : 17
ஒப்பந்தம் செய்துகொண்ட பின்பு துரோகம் செய்தவரின் பாவம்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அவர்களிடம் நீர் (எந்த) ஒப்பந்தம் செய்தபோதிலும், பின்னர் அவர்கள் ஒவ்வொரு தடவையும் தமது ஒப்பந்தத்தை முறித்துவிடுகின்றனர். அவர்கள் (அல்லாஹ்வைப் பற்றி) அஞ்ச மாட்டார்கள். (8:56)
3178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் யாரிடம் குடி கொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் (நம்பிக்கை) மோசடி செய்வ தும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை. யாரிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டுவிடும்வரை அவருள் நயவஞ்சகத் தின் ஒரு குணம் குடியிருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34

3179. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا كَتَبْنَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ الْقُرْآنَ، وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْمَدِينَةُ حَرَامٌ مَا بَيْنَ عَائِرٍ إِلَى كَذَا، فَمَنْ أَحْدَثَ حَدَثًا، أَوْ آوَى مُحْدِثًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ عَدْلٌ وَلاَ صَرْفٌ، وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ. فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ، وَمَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ "".
பாடம் : 17
ஒப்பந்தம் செய்துகொண்ட பின்பு துரோகம் செய்தவரின் பாவம்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அவர்களிடம் நீர் (எந்த) ஒப்பந்தம் செய்தபோதிலும், பின்னர் அவர்கள் ஒவ்வொரு தடவையும் தமது ஒப்பந்தத்தை முறித்துவிடுகின்றனர். அவர்கள் (அல்லாஹ்வைப் பற்றி) அஞ்ச மாட்டார்கள். (8:56)
3179. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர வேறெதையும் எழுதிவைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (இந்த ஏட்டில்), ‘‘மதீனா நகரம் யிஆயிர்’ மலையிலிருந்து இன்ன இடம்வரை புனிதமானதாகும். யார் இங்கு (மார்க்கத்தில்) புதிய (கருத்து அல்லது செயல்பாடு) ஒன்றைத் தோற்றுவிக்கிறாரோ, அல்லது அவருக்கு அடைக்கலம் அளிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவரிட மிருந்து கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது. முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற் குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதே யாகும்.) அவர்களில் சாமானியர்கூட அடைக்கலம் தரலாம்.
ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக் கலத்தை யார் முறிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வுடைய சாபமும் வானவர்களு டைய சாபமும் மற்றும் மக்கள் அனைவரு டைய சாபமும் ஏற்படும். அவரிடமிருந்து கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான தன்) காப்பாளர்களின் அனுமதியின்றிப் பிறரைத் தன் எஜமானர்களாக ஆக்கிக்கொண்டால், அவன்மீதும் அல்லாஹ்வுடைய சாபமும் வானவர்களுடைய சாபமும் மற்றும் மக்கள் அனை வருடைய சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது.35

3180. قَالَ أَبُو مُوسَى حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَيْفَ أَنْتُمْ إِذَا لَمْ تَجْتَبُوا دِينَارًا وَلاَ دِرْهَمًا فَقِيلَ لَهُ وَكَيْفَ تَرَى ذَلِكَ كَائِنًا يَا أَبَا هُرَيْرَةَ قَالَ إِيْ وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ عَنْ قَوْلِ الصَّادِقِ الْمَصْدُوقِ. قَالُوا عَمَّ ذَاكَ قَالَ تُنْتَهَكُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ صلى الله عليه وسلم، فَيَشُدُّ اللَّهُ عَزَّ وَجَلَّ قُلُوبَ أَهْلِ الذِّمَّةِ، فَيَمْنَعُونَ مَا فِي أَيْدِيهِمْ.
பாடம் : 17
ஒப்பந்தம் செய்துகொண்ட பின்பு துரோகம் செய்தவரின் பாவம்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அவர்களிடம் நீர் (எந்த) ஒப்பந்தம் செய்தபோதிலும், பின்னர் அவர்கள் ஒவ்வொரு தடவையும் தமது ஒப்பந்தத்தை முறித்துவிடுகின்றனர். அவர்கள் (அல்லாஹ்வைப் பற்றி) அஞ்ச மாட்டார்கள். (8:56)
3180. சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாரிடமிருந்து) ஒரேயொரு தங்க நாணயத்தையோ பொற்காசையோகூடப் பெற முடியாத காலம் வரும்போது உங்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்கள். அப்போது ‘‘அபூஹுரைராவே! அவ்வாறு (ஒரு காலம்) ஏற்படும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுûரா (ரலி) அவர்கள், ‘‘ஆம். அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இதை நான் உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டுத்தான் சொல்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது மக்கள், ‘‘எதனால் அத்தகைய காலம் ஏற்படும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் (அடைக் கலப்) பொறுப்பும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (அடைக்கலப்) பொறுப் பும் அவமதிக்கப்படும். (அதாவது முஸ்லிம்கள் ஒப்பந்தப்படி நடக்காமல் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.) அப்போது அல்லாஹ் பிற மதத்தாரின் உள்ளங்களுக்குத் துணிவைத் தந்து விடுவான். அவர்கள் தங்கள் கரங்களில் இருப்பவற்றைத் தடுத்துக்கொள்வார்கள். (ஜிஸ்யா வரி கட்ட மறுத்துப் போர் புரியவும் துணிந்துவிடுவார்கள்.)

3181. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، قَالَ سَمِعْتُ الأَعْمَشَ، قَالَ سَأَلْتُ أَبَا وَائِلٍ شَهِدْتَ صِفِّينَ قَالَ نَعَمْ، فَسَمِعْتُ سَهْلَ بْنَ حُنَيْفٍ، يَقُولُ اتَّهِمُوا رَأْيَكُمْ، رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ وَلَوْ أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ، أَمْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَرَدَدْتُهُ، وَمَا وَضَعْنَا أَسْيَافَنَا عَلَى عَوَاتِقِنَا لأَمْرٍ يُفْظِعُنَا إِلاَّ أَسْهَلْنَ بِنَا إِلَى أَمْرٍ، نَعْرِفُهُ غَيْرِ أَمْرِنَا هَذَا.
பாடம் : 18
3181. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், ‘‘ஸிஃப்பீன் போரில் நீங்கள் கலந்துகொண்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம். (நான் அப்போரில் கலந்துகொண்டேன்.) மேலும், நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
(நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம்சாட்டாதீர்கள்.) உங்கள் கருத்தையே குற்றம்சாட்டுங்கள். அபூஜந்தல் அபயம் தேடிவந்த (ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன். (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன்.)
(அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது. எங்களுக்குச் சிரமம்தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை நாங்கள் அடைய (முடக்கப் பட்ட) அந்த வாட்களே வழிவகுத்தன. ஆனால், இது வேறு விஷயம். (முஸ்லிம் களுக்கிடையே மூண்டுவிட்ட இந்தப் போரில் ஈடுபடுவது அழிவைத்தான் தரும்)” என்று சொன்னார்கள்.36

3182. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ حَدَّثَنِي أَبُو وَائِلٍ، قَالَ كُنَّا بِصِفِّينَ فَقَامَ سَهْلُ بْنُ حُنَيْفٍ فَقَالَ أَيُّهَا النَّاسُ اتَّهِمُوا أَنْفُسَكُمْ فَإِنَّا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ، وَلَوْ نَرَى قِتَالاً لَقَاتَلْنَا، فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَلَسْنَا عَلَى الْحَقِّ وَهُمْ عَلَى الْبَاطِلِ فَقَالَ "" بَلَى "". فَقَالَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ "" بَلَى "". قَالَ فَعَلَى مَا نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا أَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَقَالَ "" ابْنَ الْخَطَّابِ، إِنِّي رَسُولُ اللَّهِ، وَلَنْ يُضَيِّعَنِي اللَّهُ أَبَدًا "". فَانْطَلَقَ عُمَرُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ لَهُ مِثْلَ مَا قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ رَسُولُ اللَّهِ، وَلَنْ يُضَيِّعَهُ اللَّهُ أَبَدًا. فَنَزَلَتْ سُورَةُ الْفَتْحِ، فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى عُمَرَ إِلَى آخِرِهَا. فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، أَوَفَتْحٌ هُوَ قَالَ "" نَعَمْ "".
பாடம் : 18
3182. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஸிஃப்பீன் (போரில்) இருந் தோம். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் எழுந்து நின்று சொன்னார் கள்: மக்களே! (யாரையும் போரில் கலந்து கொள்ளாததற்காகக் குற்றம்சாட்டாதீர்கள்.) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கையின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போர் புரிவது உசிதமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.)
அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கின்றோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘போரில் கொலை யுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத் திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்தி லும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பிவிடுவதா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்கமாட்டான்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
அப்போது (யிஉமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துவிட்டோம்’ என்று தொடங்கும்) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமருக்கு இறுதிவரை ஓதிக்காட்டினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வெற்றியா அது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (வெற்றிதான்)” என்று பதிலளித் தார்கள்.37

3183. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ ابْنَةِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ قَدِمَتْ عَلَىَّ أُمِّي وَهْىَ مُشْرِكَةٌ فِي عَهْدِ قُرَيْشٍ، إِذْ عَاهَدُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمُدَّتِهِمْ، مَعَ أَبِيهَا، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي قَدِمَتْ عَلَىَّ، وَهْىَ رَاغِبَةٌ، أَفَأَصِلُهَا قَالَ "" نَعَمْ، صِلِيهَا "".
பாடம் : 18
3183. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குறைஷியர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்தி ருந்த (ஹுதைபியா உடன்படிக்கையின்) காலகட்டத்தில் என் தாயார் இணைவைப்ப வராக தன் தந்தையுடன் (என் பாட்ட னாருடன்) என்னிடம் வந்திருந்தார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரியவளாக, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் என்னிடம் ஆசையோடு வந்திருக்கிறார். நான் அவரது உறவைப் பேணி நடந்து கொள்ளலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரது உறவைப் பேணி நடந்துகொள்” என்று கூறினார்கள்.38

3184. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي الْبَرَاءُ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا أَرَادَ أَنْ يَعْتَمِرَ أَرْسَلَ إِلَى أَهْلِ مَكَّةَ يَسْتَأْذِنُهُمْ لِيَدْخُلَ مَكَّةَ، فَاشْتَرَطُوا عَلَيْهِ أَنْ لاَ يُقِيمَ بِهَا إِلاَّ ثَلاَثَ لَيَالٍ، وَلاَ يَدْخُلَهَا إِلاَّ بِجُلُبَّانِ السِّلاَحِ، وَلاَ يَدْعُوَ مِنْهُمْ أَحَدًا، قَالَ فَأَخَذَ يَكْتُبُ الشَّرْطَ بَيْنَهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، فَكَتَبَ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَقَالُوا لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نَمْنَعْكَ وَلَبَايَعْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ. فَقَالَ "" أَنَا وَاللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ وَأَنَا وَاللَّهِ رَسُولُ اللَّهِ "". قَالَ وَكَانَ لاَ يَكْتُبُ قَالَ فَقَالَ لِعَلِيٍّ "" امْحُ رَسُولَ اللَّهِ "". فَقَالَ عَلِيٌّ وَاللَّهِ لاَ أَمْحَاهُ أَبَدًا. قَالَ "" فَأَرِنِيهِ "". قَالَ فَأَرَاهُ إِيَّاهُ، فَمَحَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ، فَلَمَّا دَخَلَ وَمَضَى الأَيَّامُ أَتَوْا عَلِيًّا فَقَالُوا مُرْ صَاحِبَكَ فَلْيَرْتَحِلْ. فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" نَعَمْ "" ثُمَّ ارْتَحَلَ.
பாடம் : 19
மூன்று நாட்களுக்காகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்திற்காகவோ (இணைவைப்பாளர்களுடன்) சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வது
3184. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹுதைபியா ஆண்டில்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்கா வினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்டபடிதான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தமது மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர்.
அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) விதிகளை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், ‘‘இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தமாகும்” என்று எழுதினார்கள். மக்காவாசிகள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்கா வினுள் நுழைய விடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக்கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, யிஇது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்’ என எழுதுங்கள்” என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான். மேலும், அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதரும் ஆவேன்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம், ‘அல்லாஹ் வின் தூதர் எனும் சொல்லை அழித்துவிடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று மறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்” என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள்.
பின்பு (அடுத்த ஆண்டு), நபி (ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும்படி கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். உடனே, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (புறப்பட வேண்டியதுதான்)” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.39

3185. حَدَّثَنَا عَبْدَانُ بْنُ عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدٌ وَحَوْلَهُ نَاسٌ مِنْ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ إِذْ جَاءَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ بِسَلَى جَزُورٍ، فَقَذَفَهُ عَلَى ظَهْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَرْفَعْ رَأْسَهُ حَتَّى جَاءَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فَأَخَذَتْ مِنْ ظَهْرِهِ، وَدَعَتْ عَلَى مَنْ صَنَعَ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ عَلَيْكَ الْمَلأَ مِنْ قُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنَ رَبِيعَةَ، وَعُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ ـ أَوْ أُبَىَّ بْنَ خَلَفٍ "". فَلَقَدْ رَأَيْتُهُمْ قُتِلُوا يَوْمَ بَدْرٍ، فَأُلْقُوا فِي بِئْرٍ، غَيْرَ أُمَيَّةَ أَوْ أُبَىٍّ، فَإِنَّهُ كَانَ رَجُلاً ضَخْمًا، فَلَمَّا جَرُّوهُ تَقَطَّعَتْ أَوْصَالُهُ قَبْلَ أَنْ يُلْقَى فِي الْبِئْرِ.
பாடம் : 20
காலம் குறிக்காமல் (போர் நிறுத்த) ஒப்பந்தம் செய்துகொள்வது
நபி (ஸல்) அவர்கள் (கைபர் யூதர்களி டம்) கூறினார்கள்:
அல்லாஹ் உங்களை எதுவரை இங்கு தங்க அனுமதிக்கிறானோ அதுவரை நானும் அனுமதிப்பேன்.40
பாடம் : 21
இணைவைப்பாளர்களின் சடலங் களைக் கிணற்றில் வீசுவதும், (அவர்களுடைய குடும்பத்தார் அவர்களை எடுத்துச்செல்ல விரும்பினால்) அவர்களுக்காகக் கட்டணம் எது வும் வசூலிக்கப்படமாட்டாது என்பதும்
3185. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை (கஅபா அருகே) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்துகொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷி இணைவைப்பாளர்கள் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஐத், நபி (ஸல்) அவர்களை நோக்கி ஒட்டகத்தின் (கர்ப்பத்திலுள்ள) குட்டியை மூடியிருக்கும் சவ்வைக் கொண்டுவந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகின் மீது எறிந்துவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் வரும்வரை (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தவுடன் (அந்தக் கழிவை) நபி (ஸல்) அவர்களின் முதுகி லிருந்து அகற்றிவிட்டார்கள். மேலும், அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த் தனை செய்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! குறைஷியரில் முக்கியப் பிரமுகர்களை நீ கவனித்துக்கொள்வாயாக!. இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத், உமய்யா பின் கலஃப் லிஅல்லது உபை பின் கலஃப்லி ஆகியோரை நீ கவனித்துக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
நான் இவர்களையெல்லாம் பத்ர் போரில் கொல்லப்பட்டுக் கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமய்யா வைத் தவிர லிஅல்லது உபையைத் தவிர. ஏனெனில், அவர் பருமனான மனிதனாக இருந்தார்லி அவரை அவர்கள் (முஸ்லிம் வீரர்கள்) இழுத்துச் சென்றபோது அவர் கிணற்றில் போடப்படுவதற்கு முன்பே அவருடைய மூட்டுகள் துண்டாகி (தனித் தனியாகக் கழன்று)விட்டன.41

3186. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ.وَعَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ ـ قَالَ أَحَدُهُمَا يُنْصَبُ وَقَالَ الآخَرُ ـ يُرَى يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ "".
பாடம் : 22
நல்லோர், கெட்டோர் யாருக்கும் மோசடி செய்வதன் பாவம்
3186. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் அறிவிக் கின்றனர்.
அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நடப்படு கின்ற கொடி ஒன்று உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். மற்றொருவர், ‘‘அது மறுமை நாளில் காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படு வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்.

3188. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يُنْصَبُ لِغَدْرَتِهِ "".
பாடம் : 22
நல்லோர், கெட்டோர் யாருக்கும் மோசடி செய்வதன் பாவம்
3188. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொரு வனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்ச மிட்டு)க்(காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.

3189. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ "" لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا "". وَقَالَ يَوْمَ فَتْحِ مَكَّةَ "" إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، فَهْوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لأَحَدٍ قَبْلِي، وَلَمْ يَحِلَّ لِي إِلاَّ سَاعَةً مِنْ نَهَارٍ، فَهْوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلاَّ مَنْ عَرَّفَهَا، وَلاَ يُخْتَلَى خَلاَهُ "". فَقَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ الإِذْخِرَ، فَإِنَّهُ لِقَيْنِهِمْ وَلِبُيُوتِهِمْ. قَالَ "" إِلاَّ الإِذْخِرَ "".
பாடம் : 22
நல்லோர், கெட்டோர் யாருக்கும் மோசடி செய்வதன் பாவம்
3189. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, ‘‘இனி (மக்கா விலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.
மேலும், மக்கா வெற்றியின்போது, ‘‘(மக்களே!) வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமான தாகவே இருக்கும். எனக்கு முன்னர் வாழ்ந்த யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (மக்கா வெற்றியின்போது) பகலின் சிறிது நேரத்தில் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தைப் புனிதப் படுத்தியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும்.
அதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது. அங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. அங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா? ஏனெனில், அது மக்களின் வீடுகளுக்கும் அவர்களின் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறதே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) இத்கிரைத் தவிர” என்று பதிலளித்தார்கள்.42

படைப்பின் ஆரம்பம்
3190. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَاءَ نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَا بَنِي تَمِيمٍ، أَبْشِرُوا "". قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا. فَتَغَيَّرَ وَجْهُهُ، فَجَاءَهُ أَهْلُ الْيَمَنِ، فَقَالَ "" يَا أَهْلَ الْيَمَنِ، اقْبَلُوا الْبُشْرَى إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ "". قَالُوا قَبِلْنَا. فَأَخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحَدِّثُ بَدْءَ الْخَلْقِ وَالْعَرْشِ، فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا عِمْرَانُ، رَاحِلَتُكَ تَفَلَّتَتْ، لَيْتَنِي لَمْ أَقُمْ.
பாடம் : 1
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அவனே ஆரம்பத்தில் படைக்கின்றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக் கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27)
ரபீஉ பின் குஸைம் (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்:
எல்லாம் அவனுக்கு எளிதே. யிஎளிது’ என்பதை (அரபியில்) யிஹய்யின்’ என்றும் யிஹய்ன்’ என்றும் குறிப்பிடலாம். இது (வாய்ப்பாட்டில்) லய்ன், லய்யின் (மிருது வானது) என்பதையும், மய்த், மய்யித் (இறந்தவர்) என்பதையும், ளய்க், ளய்யிக் (நெருக்கடியானது) என்பதையும் போன்றது தான்.
அல்லாஹ் கூறுகின்றான்: முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா? (50:15)
உங்களைப் பூமியிலிருந்து படைத்த போது லிஅதாவது உங்கள் படைப்பைத் தொடங்கியபோதுலி அவன் உங்களை நன்கறிவான். (53:32)
நிச்சயமாக நாமே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையே உள்ள வற்றையும் படைத்தோம். நமக்கு எந்தச் சிரமும் (லுஃகூப்) ஏற்படவில்லை. (50:38)
அவன்தான் உங்களைப் பல கட்டங்களாக (அத்வார்) படைத்தான் (71:14). ‘அத்வார்’ என்பது யிதவ்ர்’ என்பதன் பன்மையாகும். இதற்கு (நிலை, படி, கட்டம் ஆகிய பொருள்கள் உண்டு.) நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ற பொருளும் உண்டு.
3190. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘பனூ தமீம் கூட்டத்தாரே! நற்செய்தி பெறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள் (அது மட்டும் போதாது). அவ்வாறே எங்களுக்கு (தர்மமும்) கொடுங்கள்” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது.2
அப்போது யமன் நாட்டினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.3 நபி (ஸல்) அவர்கள், ‘‘யமன்வாசிகளே! (நான் வழங்கும்) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் படைப் பின் ஆரம்பத்தைக் குறித்தும் இறை அரியணை (அர்ஷ்) குறித்தும் பேசலானார் கள். அப்போது ஒரு மனிதர் வந்து (என்னிடம்), ‘‘இம்ரானே! உமது ஊர்தி ஒட்டகம் ஓடிவிட்டது” என்று கூறினார். (நான் ஒட்டகத்தைத் தேடச் சென்று விட்டேன்.) நான் எழுந்து செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.4
அத்தியாயம் : 59