3131. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ وَزَعَمَ عُرْوَةُ أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، وَمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْىَ وَإِمَّا الْمَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِهِمْ ". وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم انْتَظَرَ آخِرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً، حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ. قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمُسْلِمِينَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ قَدْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي قَدْ رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، مَنْ أَحَبَّ أَنْ يُطَيِّبَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ ". فَقَالَ النَّاسُ قَدْ طَيَّبْنَا ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ لَهُمْ. فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِي ذَلِكَ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ " فَرَجَعَ النَّاسُ، فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ قَدْ طَيَّبُوا فَأَذِنُوا. فَهَذَا الَّذِي بَلَغَنَا عَنْ سَبْىِ هَوَازِنَ.
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3131. மர்வான் பின் அல் ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

ஹவாஸின் குலத்தின் தூதுக் குழு வினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களாக வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் தம் செல்வங்களை யும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சேயாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்(துக் காத்)திருந்தேன்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியபோது பத்துக் கும் மேற்பட்ட நாட்கள் ஹவாஸின் குலத் தாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் எங்கள் கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரிய முறையில் புகழ்ந்துவிட்டு, ‘‘அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறாரோ அவர் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லாஹ் (இனிவரும் நாட்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகிறாரோ அவர் அவ்வாறே வைத்திருக்கட்டும்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், ‘‘நாங்கள் மனப் பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கின்றோம், அல்லாஹ் வின் தூதரே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் இதற்கு (உண்மையிலேயே) யார் சம்மதிக்கிறார்; யார் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களிடம் அவர்களின் தலைவர்கள் பேசினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:)

இதுதான் ஹவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.53


அத்தியாயம் : 57
3133. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ عَاصِمٍ الْكُلَيْبِيُّ ـ وَأَنَا لِحَدِيثِ الْقَاسِمِ، أَحْفَظُ ـ عَنْ زَهْدَمٍ، قَالَ كُنَّا عِنْدَ أَبِي مُوسَى، فَأُتِيَ ذَكَرَ دَجَاجَةً وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ أَحْمَرُ كَأَنَّهُ مِنَ الْمَوَالِي، فَدَعَاهُ لِلطَّعَامِ فَقَالَ إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا، فَقَذِرْتُهُ، فَحَلَفْتُ لاَ آكُلُ. فَقَالَ هَلُمَّ فَلأُحَدِّثْكُمْ عَنْ ذَاكَ، إِنِّي أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ فَقَالَ "" وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ "". وَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنَهْبِ إِبِلٍ، فَسَأَلَ عَنَّا فَقَالَ "" أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ "". فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا مَا صَنَعْنَا لاَ يُبَارَكُ لَنَا، فَرَجَعْنَا إِلَيْهِ فَقُلْنَا إِنَّا سَأَلْنَاكَ أَنْ تَحْمِلَنَا، فَحَلَفْتَ أَنْ لاَ تَحْمِلَنَا أَفَنَسِيتَ قَالَ "" لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَتَحَلَّلْتُهَا "".
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3133. ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறி உணவு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப் பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (கிழக்கு ரோமானியரிடையேயிருந்து பிடித்துக் கொண்டுவரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போன்று காணப் பட்டார். அபூமூசா (ரலி) அவர்கள் அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், ‘‘இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை நான் பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டேன்” என்று சொன்னார்.

இதைக் கேட்ட அபூமூசா (ரலி) அவர்கள், ‘‘இங்கே வா! இதைப் பற்றி உனக்கு (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) அறிவிக்கி றேன்” என்று சொல்லிவிட்டுக் கூற லானார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான ஊர்தி ஒட்டகங்கள் என்னிடம் இல்லை” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, ‘‘அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, எங்களுக்கு (ஒட்டக மந்தைகளில்) வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து மந்தைகளைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்று) சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் எங்களுக்குள், ‘‘நாம் என்ன காரியம் செய்துவிட்டோம். (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின் மீண்டும் இவற்றை நாம் வாங்கிச் சென்றால்) இவற்றில் நமக்கு வளம் வழங்கப்படாதே” என்று பேசிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம்.

‘‘நாங்கள் தங்களிடம், யிநாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுங்கள்’ என்று கேட்டோம். யிநாங்கள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாது’ என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், ‘‘நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்த தாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற் காகப் பரிகாரம் செய்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.

இது இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 56
3134. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ سَرِيَّةً فِيهَا عَبْدُ اللَّهِ قِبَلَ نَجْدٍ، فَغَنِمُوا إِبِلاً كَثِيرًا، فَكَانَتْ سِهَامُهُمُ اثْنَىْ عَشَرَ بَعِيرًا أَوْ أَحَدَ عَشَرَ بَعِيرًا، وَنُفِّلُوا بَعِيرًا بَعِيرًا.
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3134. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக் குழுவை யிநஜ்த்’ பகுதியை நோக்கி அனுப்பிவைத்தார்கள். அதில் நானும் (ஒருவனாக) இருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர்ச்செல்வமாகப் பெற்றோம். எங்கள் பங்குகள் (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு ஒட்டகங்கள் அல்லது பதினொன்று ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகத் தரப்பட்டது.


அத்தியாயம் : 57
3135. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُنَفِّلُ بَعْضَ مَنْ يَبْعَثُ مِنَ السَّرَايَا لأَنْفُسِهِمْ خَاصَّةً سِوَى قِسْمِ عَامَّةِ الْجَيْشِ.
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3135. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அறப்போருக்காகப்) படைக் குழுக்களில் தாம் அனுப்பிவைக்கும் சிலருக்கு மட்டும் குறிப்பாகக் கொடுத்துவந்தார்கள். அவர்கள் பொதுவாகப் படையினருடன் சேர்ந்து பெறுகின்ற பங்குக்குமேல் (சற்று) அதிகப் படியாகக் கொடுத்துவந்தார்கள்.54


அத்தியாயம் : 57
3136. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ بَلَغَنَا مَخْرَجُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ بِالْيَمَنِ فَخَرَجْنَا مُهَاجِرِينَ إِلَيْهِ، أَنَا وَأَخَوَانِ لِي، أَنَا أَصْغَرُهُمْ، أَحَدُهُمَا أَبُو بُرْدَةَ وَالآخَرُ أَبُو رُهْمٍ، إِمَّا قَالَ فِي بِضْعٍ، وَإِمَّا قَالَ فِي ثَلاَثَةٍ وَخَمْسِينَ أَوِ اثْنَيْنِ وَخَمْسِينَ رَجُلاً مِنْ قَوْمِي فَرَكِبْنَا سَفِينَةً، فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالْحَبَشَةِ، وَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ وَأَصْحَابَهُ عِنْدَهُ فَقَالَ جَعْفَرٌ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَنَا هَا هُنَا، وَأَمَرَنَا بِالإِقَامَةِ فَأَقِيمُوا مَعَنَا. فَأَقَمْنَا مَعَهُ، حَتَّى قَدِمْنَا جَمِيعًا، فَوَافَقْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ افْتَتَحَ خَيْبَرَ، فَأَسْهَمَ لَنَا. أَوْ قَالَ فَأَعْطَانَا مِنْهَا. وَمَا قَسَمَ لأَحَدٍ غَابَ عَنْ فَتْحِ خَيْبَرَ مِنْهَا شَيْئًا، إِلاَّ لِمَنْ شَهِدَ مَعَهُ، إِلاَّ أَصْحَابَ سَفِينَتِنَا مَعَ جَعْفَرٍ وَأَصْحَابِهِ، قَسَمَ لَهُمْ مَعَهُمْ.
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3136. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா அவர்களும் மற்றொருவர் அபூருஹ்ம் அவர்களும் ஆவர். நான்தான் அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன்.

லிஞீஎன் குலத்தாரில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்’ என்றோ, ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்’ என்றோ என் தந்தை அபூமூசா (ரலி) அவர்கள் சொன்னார்கள் என நான் நினைக்கிறேன்” என அறிவிப்பாளர் அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி

நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் மன்னர் நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அவரிடம் (அபிசீனியாவில்) ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் தற்செயலாகச் சந்தித்தோம். ஜஅஃபர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இங்கு அனுப்பி (இங்கேயே) தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள். ஆகவே, நீங்களும் எங்களுடன் (இங் கேயே) தங்குங்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, நாங்கள் அவருடன் தங்கி னோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) சென்றோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். உடனே அவர்கள் (கைபர் போரில் கிடைத்த பொருட்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள்.

லிஅல்லது எங்களுக்கும் அதிலிருந்து கொடுத்தார்கள்லி

கைபர் வெற்றியில் கலந்துகொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை. தம்முடன் (அதில்) கலந்துகொண்டவர் களுக்கு மட்டும்தான் பங்கிட்டுத் தந்தார் கள். ஆனால், எங்கள் கப்பலில் வந்தவர் களுக்கு மட்டும் ஜஅஃபர் (ரலி) அவர்களு டனும் அவர்களுடைய சகாக்களுக்களு டனும் (சேர்த்துப்) பங்கிட்டுத் தந்தார்கள்.


அத்தியாயம் : 57
3137. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ قَدْ جَاءَنِي مَالُ الْبَحْرَيْنِ لَقَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا "". فَلَمْ يَجِئْ حَتَّى قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ مُنَادِيًا فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم دَيْنٌ أَوْ عِدَةٌ فَلْيَأْتِنَا. فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِي كَذَا وَكَذَا. فَحَثَا لِي ثَلاَثًا ـ وَجَعَلَ سُفْيَانُ يَحْثُو بِكَفَّيْهِ جَمِيعًا، ثُمَّ قَالَ لَنَا هَكَذَا قَالَ لَنَا ابْنُ الْمُنْكَدِرِ ـ وَقَالَ مَرَّةً فَأَتَيْتُ أَبَا بَكْرٍ فَسَأَلْتُ فَلَمْ يُعْطِنِي، ثُمَّ أَتَيْتُهُ فَلَمْ يُعْطِنِي، ثُمَّ أَتَيْتُهُ الثَّالِثَةَ فَقُلْتُ سَأَلْتُكَ فَلَمْ تُعْطِنِي، ثُمَّ سَأَلْتُكَ فَلَمْ تُعْطِنِي، ثُمَّ سَأَلْتُكَ فَلَمْ تُعْطِنِي، فَإِمَّا أَنْ تُعْطِيَنِي، وَإِمَّا أَنْ تَبْخَلَ عَنِّي. قَالَ قُلْتَ تَبْخَلُ عَلَىَّ مَا مَنَعْتُكَ مِنْ مَرَّةٍ إِلاَّ وَأَنَا أُرِيدُ أَنْ أُعْطِيَكَ. قَالَ سُفْيَانُ وَحَدَّثَنَا عَمْرٌو عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ جَابِرٍ فَحَثَا لِي حَثْيَةً وَقَالَ عُدَّهَا. فَوَجَدْتُهَا خَمْسَمِائَةٍ قَالَ فَخُذْ مِثْلَهَا مَرَّتَيْنِ. وَقَالَ يَعْنِي ابْنَ الْمُنْكَدِرِ وَأَىُّ دَاءٍ أَدْوَأُ مِنَ الْبُخْلِ
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3137. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பஹ்ரைனுடைய நிதி எம்மிடம் வந்தால் உனக்கு இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனுடைய நிதி வரவில்லை. (அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில்) பஹ்ரைனுடைய நிதி வந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவரை அனுப்பினார்கள்.

அவர், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இருந்து வரவேண்டிய) கடனோ, (நிறைவேற்றப்பட வேண்டிய) வாக்குறுதியோ (நிறைவேறாமல்) இருக்குமாயின் அவர் நம்மிடம் வரட்டும்” என்று கூறினார். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இன்னின்னவாறு சொன்னார்கள்” என்று கூறினேன். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று முறை இரு கைகளையும் குவித்து அள்ளித் தந்தார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தம் இரு கைகளையும் ஒன்றுசேர்த்து அள்ளிப் போடுவது போல் சைகை செய்யத் தொடங்கினார்கள். பிறகு எங்களிடம், ‘‘இப்படித்தான் எங்களிடம் முஹம்மத் பின் முன்கதிர் (ரஹ்) அவர்கள் சொன் னார்கள்” என்று கூறினார்கள்.55

ஒருமுறை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (இப்னுல் முன்கதிர் (ரஹ்) அவர்கள் வழியாகக்) கூறியதாவது:

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, ‘‘உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தர வேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம் காட்டுவதாகப் பொருள்” என்று கூறினேன்.

அதற்கு அவர்கள், ‘‘நான் உங்களிடம் கஞ்சத்தனம் காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில்தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்” என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘‘எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, யிஇதை எண்ணிக்கொள்’ என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்தபோது) அது ஐநூறு இருக்கக் கண்டேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், யிஇது போன்றதை இரு முறை எடுத் துக்கொள்’ என்று சொன்னார்கள்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் முஹம்மத் பின் முன்கதிர் (ரஹ்) அவர்கள், ‘‘கருமித்தனத்தை விட மோசமான நோய் உண்டா?” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 57
3138. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا قُرَّةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْسِمُ غَنِيمَةً بِالْجِعْرَانَةِ إِذْ قَالَ لَهُ رَجُلٌ اعْدِلْ. فَقَالَ لَهُ "" شَقِيتَ إِنْ لَمْ أَعْدِلْ "".
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3138. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஜிஅரானா’வில் வைத்து போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம், ‘‘நீதி யுடன் நடந்துகொள்ளுங்கள்” என்று கூறி னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இறைத்தூதராகிய) நானே நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் (என்னைப் பின்பற்ற வேண்டிய) நீ வழிதவறிப் போய்விடுவாய்” என்று பதிலளித்தார்கள்.56

அத்தியாயம் : 57
3139. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي أُسَارَى بَدْرٍ "" لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا، ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى، لَتَرَكْتُهُمْ لَهُ "".
பாடம் : 16 ஐந்து பாகங்களாகப் பிரிப்பதற்கு முன்பே (மொத்த போர்ச் செல்வத் திலிருந்து) கைதிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் தாராளமாக வழங்க முன்வந்தது
3139. நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரில் பிடிபட்ட கைதிகளைப் பற்றிப் பேசும்போது கூறினார்கள்:

முத்இம் பின் அதீ அவர்கள் உயிரோ டிருந்து,57 இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத்தொகை வாங்காமலே) விட்டு விடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால் நான் அவருக்காக இவர் களை (பிணைத்தொகை வாங்காமலேயே) விட்டுவிட்டிருப்பேன்.

இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3140. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ مَشَيْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ، إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ، أَعْطَيْتَ بَنِي الْمُطَّلِبِ وَتَرَكْتَنَا، وَنَحْنُ وَهُمْ مِنْكَ بِمَنْزِلَةٍ وَاحِدَةٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا بَنُو الْمُطَّلِبِ وَبَنُو هَاشِمٍ شَىْءٌ وَاحِدٌ "". قَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ وَزَادَ قَالَ جُبَيْرٌ وَلَمْ يَقْسِمِ النَّبِيُّ صلى الله عليه وسلم لِبَنِي عَبْدِ شَمْسٍ وَلاَ لِبَنِي نَوْفَلٍ. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَبْدُ شَمْسٍ وَهَاشِمٌ وَالْمُطَّلِبُ إِخْوَةٌ لأُمٍّ، وَأُمُّهُمْ عَاتِكَةُ بِنْتُ مُرَّةَ، وَكَانَ نَوْفَلٌ أَخَاهُمْ لأَبِيهِمْ.
பாடம் : 17 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) தலைவரின் அதிகாரத்திற்குட்பட் டது; அவர் தம் உறவினர்களில் சிலருக்கு மட்டும் வழங்கலாம் என்பதற்கான ஆதாரம் நபி (ஸல்) அவர்கள், பனுல் முத்தலிப், பனூ ஹாஷிம் ஆகிய குலத்தாருக்கு கைபர் சொத்தில் ஐந்தில் ஒரு பாகத்தைப் பங்கிட்டார்கள். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம் உறவினர்கள் அனைவருக்குமே (குமுஸிலிருந்து) கொடுக்கவில்லை; மிகவும் ஏழ்மையாக இருப்பவர்களை விட்டுவிட்டு தம் (நெருங்கிய) உறவினர்களுக்கு மட்டுமே கொடுக்கவுமில்லை. கொடுக்கப்பட்டவர் தூரத்து உறவினராக இருந்தாலும், அவர் தமது தேவையை முறையிட்டபோது அவருக்கே நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். தம்முடன் ஒத்துழைத்தவர்களுக்கு அவர்களுடைய குலத்தாராலும் அவர்களுடைய ஒப்பந்தக் குலங்களாலும் துன்பம் ஏற்பட்ட காரணத்தால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத் தார்கள்.
3140. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ் வின் தூதரே! பனுல் முத்தலிப் கிளை யாருக்கு (குமுஸிலிருந்து)) கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டீர் கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவுமுறை உடையவர் கள்தானே?” என்று கேட்டோம்.58

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பனுல் முத்தலிபும் பனூ ஹாஷிமும் ஒருவர்தான்” என்று கூறினார்கள்.59

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி (ஸல்) அவர்கள் (குமுஸில்) பங்கு தரவில்லை” என்று ஜுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது.

‘‘பனூ அப்தி ஷம்ஸ், பனூ ஹாஷிம், பனுல் முத்தலிப் ஆகியோர் தாய் வழிச் சகோதரர்கள் ஆவர். அவர்களுடைய தாயார் ஆத்திகா பின்த் முர்ரா என்பவர் ஆவார். நவ்ஃபல் என்பவர் இந்தக் குலங்களின் தந்தை வழிச் சகோதரர் ஆவார்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 57
3141. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ بَيْنَا أَنَا وَاقِفٌ، فِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ فَنَظَرْتُ عَنْ يَمِينِي، وَشِمَالِي، فَإِذَا أَنَا بِغُلاَمَيْنِ، مِنَ الأَنْصَارِ حَدِيثَةٍ أَسْنَانُهُمَا، تَمَنَّيْتُ أَنْ أَكُونَ بَيْنَ أَضْلَعَ مِنْهُمَا، فَغَمَزَنِي أَحَدُهُمَا فَقَالَ يَا عَمِّ، هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ قُلْتُ نَعَمْ، مَا حَاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي قَالَ أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ رَأَيْتُهُ لاَ يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الأَعْجَلُ مِنَّا. فَتَعَجَّبْتُ لِذَلِكَ، فَغَمَزَنِي الآخَرُ فَقَالَ لِي مِثْلَهَا، فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ يَجُولُ فِي النَّاسِ، قُلْتُ أَلاَ إِنَّ هَذَا صَاحِبُكُمَا الَّذِي سَأَلْتُمَانِي. فَابْتَدَرَاهُ بِسَيْفَيْهِمَا فَضَرَبَاهُ حَتَّى قَتَلاَهُ، ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللَّهُ صلى الله عليه وسلم فَأَخْبَرَاهُ فَقَالَ "" أَيُّكُمَا قَتَلَهُ "". قَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا أَنَا قَتَلْتُهُ. فَقَالَ "" هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا "". قَالاَ لاَ. فَنَظَرَ فِي السَّيْفَيْنِ فَقَالَ "" كِلاَكُمَا قَتَلَهُ "". سَلَبُهُ لِمُعَاذِ بْنِ عَمْرِو بْنِ الْجَمُوحِ. وَكَانَا مُعَاذَ ابْنَ عَفْرَاءَ وَمُعَاذَ بْنَ عَمْرِو بْنِ الْجَمُوحِ. قَالَ مُحَمَّدٌ سَمِعَ يُوسُفُ صَالِحًا وَإِبْرَاهِيمَ أَبَاهُ (عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ)
பாடம் : 18 (போரில் கொல்லப்பட்ட) எதிரியின் உடலில் கிடக்கும் பொருட்கள் குமுஸில் சேராது என்ற கருத்து எதிரியைக் கொன்றவருக்கே அவனது உடலில் உள்ள பொருள் உரியதாகும். அது குமுஸில் சேராது. அது தொடர்பாகத் தலைவரின் முடிவு.
3141. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரின்போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களி லும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ‘அவர்களைவிடப் பெரிய வயதுடையவர் களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா’ என்று நான் ஆசைப்பட்டேன்.

அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண்சாடை செய்து, ‘‘என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன்.

அதற்கு அந்த இளவல், ‘‘அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது (ஒன்று நான், அல்லது அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக்கொண்டே இருப்பேன்)” என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்துபோனேன். அப்போது மற்றோர் இளவலும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, ‘‘இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!” என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக்கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார் கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் யார் அவனைக் கொன்றவர்?” என்று கேட்டார் கள். அவர்களில் ஒவ்வொருவரும், ‘‘நான் தான் (அவனைக் கொன்றேன்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். இருவரும், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, ‘‘நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) ‘‘அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹுக்கு உரியவை” என்று கூறினார்கள்.

அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர்.


அத்தியாயம் : 57
3142. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَفْلَحَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ حُنَيْنٍ، فَلَمَّا الْتَقَيْنَا كَانَتْ لِلْمُسْلِمِينَ جَوْلَةٌ، فَرَأَيْتُ رَجُلاً مِنَ الْمُشْرِكِينَ عَلاَ رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ، فَاسْتَدَرْتُ حَتَّى أَتَيْتُهُ مِنْ وَرَائِهِ حَتَّى ضَرَبْتُهُ بِالسَّيْفِ عَلَى حَبْلِ عَاتِقِهِ، فَأَقْبَلَ عَلَىَّ فَضَمَّنِي ضَمَّةً وَجَدْتُ مِنْهَا رِيحَ الْمَوْتِ، ثُمَّ أَدْرَكَهُ الْمَوْتُ فَأَرْسَلَنِي، فَلَحِقْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقُلْتُ مَا بَالُ النَّاسِ قَالَ أَمْرُ اللَّهِ، ثُمَّ إِنَّ النَّاسَ رَجَعُوا، وَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ "". فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ ثُمَّ قَالَ "" مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ "" فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ، ثُمَّ قَالَ الثَّالِثَةَ مِثْلَهُ فَقَالَ رَجُلٌ صَدَقَ يَا رَسُولَ اللَّهِ، وَسَلَبُهُ عِنْدِي فَأَرْضِهِ عَنِّي. فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ـ رضى الله عنه لاَهَا اللَّهِ إِذًا يَعْمِدُ إِلَى أَسَدٍ مِنْ أُسْدِ اللَّهِ يُقَاتِلُ عَنِ اللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم يُعْطِيكَ سَلَبَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَ "". فَأَعْطَاهُ فَبِعْتُ الدِّرْعَ، فَابْتَعْتُ بِهِ مَخْرِفًا فِي بَنِي سَلِمَةَ، فَإِنَّهُ لأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ فِي الإِسْلاَمِ.
பாடம் : 18 (போரில் கொல்லப்பட்ட) எதிரியின் உடலில் கிடக்கும் பொருட்கள் குமுஸில் சேராது என்ற கருத்து எதிரியைக் கொன்றவருக்கே அவனது உடலில் உள்ள பொருள் உரியதாகும். அது குமுஸில் சேராது. அது தொடர்பாகத் தலைவரின் முடிவு.
3142. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட் டோம்.60 (எதிரிகளைப் போர்க் களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த் தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அவரைக் கொல்ல முயன்றான். நான் அவனைச் சுற்றிக் கொண்டு அவன் பின்பக்கமாகச் சென்று வாளால் அவனது (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்துக்கொண்டான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்க லானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டு விட்டான்.

உடனே நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(இது) அல்லாஹ் விதித்த விதி” என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு, ‘‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, ‘‘எனக்கு எவர் சாட்சி சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்துகொண்டேன்.

மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து நின்று, ‘‘எனக்கு எவர் சாட்சி சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு மூன்றாவது தடவையாக அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அபூகத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத் துரைத்தேன்.

ஒரு மனிதர், ‘‘இவர் சொன்னது உண்மையே. அல்லாஹ்வின் தூதரே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னி டம் உள்ளன. எனக்காக (அவருக்கு ஏதேனும் வழங்கி) அவரைத் திருப்திப் படுத்திவிடுங்கள்” என்று சொன்னார்.

அப்போது அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(அபூபக்ர்) உண்மை சொன்னார்” என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ சலிமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவியபின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.

அத்தியாயம் : 57
3143. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ قَالَ لِي "" يَا حَكِيمُ، إِنَّ هَذَا الْمَالَ خَضِرٌ حُلْوٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى "". قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا. فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ الْعَطَاءَ، فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ فَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الْفَىْءِ، فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ. فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ.
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3143. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (நிதியுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட் டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஹகீமே! இந்தச் செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) கொடையுள்ளத் தோடு பெறுகிறாரோ அவருக்கு இதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும்.

யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கைதான் (வாங்கும்) தாழ்ந்த கையைவிட மேலானதாகும்” என்று கூறினார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது சத்தியமாக! தங்களுக்குப்பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும்வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பு (நிதியை) வழங்க அழைப்புக் கொடுத்துவந்தார்கள். ஆனால், ஹகீம் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் ஏற்க மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் ஹகீம் (ரலி) அவர்களுக்கு (நிதி வழங்க) அழைப்புக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்தும் (உதவி நிதியை) ஏற்க அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

ஆகவே, உமர் (ரலி) அவர்கள், ‘‘முஸ்லிம்களே! (வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கும்) இந்தச் செல்வத்திலிருந்து ஹகீம் அவர்களின் பங்காக அல்லாஹ் கொடுத்த அவரது உரிமையை அவர்முன் நான் சமர்ப்பித்து விட்டேன். அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்” என்று கூறினார்கள். இவ்விதம் ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்பிறகு மக்களில் எவரிடமிருந்தும் எதையும், தாம் இறக்கும்வரை பெற்றுக் கொள்ளவில்லை.61

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 57
3144. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَىَّ اعْتِكَافُ يَوْمٍ فِي الْجَاهِلِيَّةِ، فَأَمَرَهُ أَنْ يَفِيَ بِهِ. قَالَ وَأَصَابَ عُمَرُ جَارِيَتَيْنِ مِنْ سَبْىِ حُنَيْنٍ، فَوَضَعَهُمَا فِي بَعْضِ بُيُوتِ مَكَّةَ ـ قَالَ ـ فَمَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى سَبْىِ حُنَيْنٍ، فَجَعَلُوا يَسْعَوْنَ فِي السِّكَكِ فَقَالَ عُمَرُ يَا عَبْدَ اللَّهِ، انْظُرْ مَا هَذَا فَقَالَ مَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّبْىِ. قَالَ اذْهَبْ فَأَرْسِلِ الْجَارِيَتَيْنِ. قَالَ نَافِعٌ وَلَمْ يَعْتَمِرْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ وَلَوِ اعْتَمَرَ لَمْ يَخْفَ عَلَى عَبْدِ اللَّهِ. وَزَادَ جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ مِنَ الْخُمُسِ. وَرَوَاهُ مَعْمَرٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ فِي النَّذْرِ وَلَمْ يَقُلْ يَوْمَ.
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3144. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு), ஒருநாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மேலும், உமர் (ரலி) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்கவைத்திருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்குக் கருணை காட்டி அவர் களைச் சுதந்திரமாக விட்டுவிட்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்க் கைதிகள் மீது கருணை புரிந்து அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்” என்று சொன்னார்கள். (உடனே) உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நீ சென்று அந்த இரு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்ல விட்டுவிடு” என்று கூறினார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிஅரானாவிலிருந்து உம்ரா செய்யவில்லை. அப்படி அவர்கள் உம்ரா செய்திருந்தால் அது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலிருந்திருக்காது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘குமுஸ் (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து இந்த இரு அடிமைப் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்” என்று வந்துள்ளது.

மஅமர் பின் ஸாயித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் செய்த நேர்ச்சை குறித்து, ‘‘இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்” என்று மட்டுமே வந்துள்ளது. ‘‘ஒருநாள் இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்” என்று (யிஒருநாள்’ எனும் குறிப்பு) இடம் பெறவில்லை.62


அத்தியாயம் : 57
3145. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا الْحَسَنُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ تَغْلِبَ ـ رضى الله عنه ـ قَالَ أَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَوْمًا وَمَنَعَ آخَرِينَ، فَكَأَنَّهُمْ عَتَبُوا عَلَيْهِ فَقَالَ "" إِنِّي أُعْطِي قَوْمًا أَخَافُ ظَلَعَهُمْ وَجَزَعَهُمْ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الْخَيْرِ وَالْغِنَى، مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ "". فَقَالَ عَمْرُو بْنُ تَغْلِبَ مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُمْرَ النَّعَمِ. وَزَادَ أَبُو عَاصِمٍ عَنْ جَرِيرٍ قَالَ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِمَالٍ أَوْ بِسَبْىٍ فَقَسَمَهُ. بِهَذَا.
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3145. அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார் கள். அவர்கள் (அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்) நபி (ஸல்) அவர் களைக் குறை சொல்வதைப் போன்ற சூழ்நிலை நிலவியது.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர், நம்பிக்கை பலவீனப்பட்டுப் போய்விடுவார் என்றும் பொறுமையிழந்து நிலைகுலைந்து போய்விடுவார் என்றும் நான் அஞ்சு கிறேனோ அவருக்குக் கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களின் உள்ளத் தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மை யையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டுவிடுகிறேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தான் அம்ர் பின் தஃக்லிப் அவர்களும்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நன்மையும் போதுமென்ற குணமும் உடையவர்களில் ஒருவனாகக் குறிப்பிட்டு)ப் புகழ்ந்து பேசிய இந்தச் சொல்லுக்குப் பகரமாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைத்திருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன்.63

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஆஸிம் ளஹ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில செல்வம், அல்லது கைதிகள் கொண்டுவரப்பட்டனர். அவர்களை நபியவர்கள் பங்கிட்டார்கள்” என்று காணப்படுகிறது.


அத்தியாயம் : 57
3146. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي أُعْطِي قُرَيْشًا أَتَأَلَّفُهُمْ، لأَنَّهُمْ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ "".
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3146. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் குறைஷியருடன் நேசத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஏனெனில், அவர்கள் அறியாமைக் காலக் கொள்கையை விட்டு விட்டு (இப்போதுதான்) புதிதாக இஸ்லாத் தில் இணைந்துள்ளனர்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 57
3147. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ نَاسًا، مِنَ الأَنْصَارِ قَالُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مِنْ أَمْوَالِ هَوَازِنَ مَا أَفَاءَ، فَطَفِقَ يُعْطِي رِجَالاً مِنْ قُرَيْشٍ الْمِائَةَ مِنَ الإِبِلِ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِي قُرَيْشًا وَيَدَعُنَا، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ قَالَ أَنَسٌ فَحُدِّثَ رَسُولُ اللَّهِ بِمَقَالَتِهِمْ، فَأَرْسَلَ إِلَى الأَنْصَارِ، فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، وَلَمْ يَدْعُ مَعَهُمْ أَحَدًا غَيْرَهُمْ، فَلَمَّا اجْتَمَعُوا جَاءَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا كَانَ حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ "". قَالَ لَهُ فُقَهَاؤُهُمْ أَمَّا ذَوُو آرَائِنَا يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يَقُولُوا شَيْئًا، وَأَمَّا أُنَاسٌ مِنَّا حَدِيثَةٌ أَسْنَانُهُمْ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِي قُرَيْشًا وَيَتْرُكُ الأَنْصَارَ، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنِّي أُعْطِي رِجَالاً حَدِيثٌ عَهْدُهُمْ بِكُفْرٍ، أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالأَمْوَالِ وَتَرْجِعُونَ إِلَى رِحَالِكُمْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَوَاللَّهِ مَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمَّا يَنْقَلِبُونَ بِهِ "". قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَدْ رَضِينَا. فَقَالَ لَهُمْ "" إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أُثْرَةً شَدِيدَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوُا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم عَلَى الْحَوْضِ "". قَالَ أَنَسٌ فَلَمْ نَصْبِرْ.
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3147. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ், தன் தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷியரில் சிலருக்கு நூறு ஒட்டகங் களைக் கொடுக்கலானார்கள்.64 உடனே அன்சாரிகளில் சிலர், ‘‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை மன்னிப்பானாக! நம் வாட்களில் எதிரிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க குறைஷியருக்குக் கொடுக்கிறார்கள்; நம்மை விட்டுவிடுகிறார் களே!” என்று பேசிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப் பட்டது.

உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச்சொல்லி, பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் அவர்களை ஒன்றுதிரட்டினார்கள். அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்றுதிரண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ‘‘உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன?” என்று கேட்டார்கள்.

அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள், ‘‘எங்களில் கருத்துடையோர் எதுவும் சொல்லவில்லை, அல்லாஹ்வின் தூதரே! ஆயினும், எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை மன்னிப்பானாக! நம் வாட்களில் எதிரிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷியருக்குக் கொடுக்கி றார்கள். ஆனால், நம்மை விட்டுவிடுகிறார் களே!› என்று பேசிக்கொண்டார்கள்” என்று பதில் கூறினர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைமறுப்பைக் கைவிட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு நான் கொடுக்கிறேன். மக்களெல்லாரும் செல்வங்களை எடுத்துக் கொண்டுசெல்ல, உங்கள் வசிப்பிடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்)கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்ப வற்றைவிட நீங்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

உடனே அன்சாரிகள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஆம்; (நீங்களே எங்களுக்குப் போதுமென்று) நாங்கள் திருப்தியடைந் தோம்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குப்பின், (ஆட்சிப் பொறுப்பிலும் போரில் கிடைக்கும் செல்வங்களைப் பங்கிடுவதிலும்) உங்களைவிட மற்றவர் களுக்கு மிக அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்நிலையில் அல்லாஹ்வையும் யிஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத்தின் அருகே அவனுடைய தூதரை (என்னை)யும் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

இதை அறிவித்துவிட்டு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆனால், நாங்கள் பொறுமையைக் கைக்கொள்ளவில்லை” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 57
3148. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جُبَيْرٍ، قَالَ أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، أَنَّهُ بَيْنَا هُوَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ النَّاسُ مُقْبِلاً مِنْ حُنَيْنٍ عَلِقَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الأَعْرَابُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ، فَخَطِفَتْ رِدَاءَهُ، فَوَقَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَعْطُونِي رِدَائِي، فَلَوْ كَانَ عَدَدُ هَذِهِ الْعِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ، ثُمَّ لاَ تَجِدُونِي بَخِيلاً وَلاَ كَذُوبًا وَلاَ جَبَانًا "".
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3148. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிடித்துக்கொண்டு (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார் கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து கொண்டு நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக்கொண்டு சென்று அவர்களின் மேல்துண்டைப் பறித்துக் கொண்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு என் மேல் துண்டைக் கொடுத்துவிடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவுக்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்கமாட்டீர்கள்” என்று சொன்னார்கள்.65


அத்தியாயம் : 57
3149. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه قَالَ كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَذَبَهُ جَذْبَةً شَدِيدَةً، حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ أَثَّرَتْ بِهِ حَاشِيَةُ الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَذْبَتِهِ، ثُمَّ قَالَ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ. فَالْتَفَتَ إِلَيْهِ، فَضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ.
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3149. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் கரை தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந் தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவுக்கென்றால் அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்) அவர்களது தோளின் ஒரு மூலையில் அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன்.

பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத் திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தர விட்டார்கள்.


அத்தியாயம் : 57
3150. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ آثَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُنَاسًا فِي الْقِسْمَةِ، فَأَعْطَى الأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنَ الإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى أُنَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ، فَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ. قَالَ رَجُلٌ وَاللَّهِ إِنَّ هَذِهِ الْقِسْمَةَ مَا عُدِلَ فِيهَا، وَمَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَقُلْتُ وَاللَّهِ لأُخْبِرَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم. فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ فَقَالَ "" فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ يَعْدِلِ اللَّهُ وَرَسُولُهُ رَحِمَ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம் : 19 புதிய முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு யிகுமுஸ்' போன்றவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிவந்த உதவி இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3150. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும்போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள்.

அப்போது ஒரு மனிதர், ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தப் பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்படவில்லை; இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்” என்று கூறினார். நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்” என்று கூறினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ், (இறைத்தூதர்) மூசா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக் கொண்டார்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 57