3046. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فُكُّوا الْعَانِيَ ـ يَعْنِي الأَسِيرَ ـ وَأَطْعِمُوا الْجَائِعَ وَعُودُوا الْمَرِيضَ "".
பாடம் : 171 (எதிரிகளிடமிருந்து) போர்க் கைதியை விடுவித்தல் இது பற்றி அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.158
3046. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவருக்கு உணவளி யுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 56
3047. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُطَرِّفٌ، أَنَّ عَامِرًا، حَدَّثَهُمْ عَنْ أَبِي جُحَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ لِعَلِيٍّ ـ رضى الله عنه هَلْ عِنْدَكُمْ شَىْءٌ مِنَ الْوَحْىِ إِلاَّ مَا فِي كِتَابِ اللَّهِ قَالَ وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ مَا أَعْلَمُهُ إِلاَّ فَهْمًا يُعْطِيهِ اللَّهُ رَجُلاً فِي الْقُرْآنِ، وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. قُلْتُ وَمَا فِي الصَّحِيفَةِ قَالَ الْعَقْلُ وَفَكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ.
பாடம் : 171 (எதிரிகளிடமிருந்து) போர்க் கைதியை விடுவித்தல் இது பற்றி அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.158
3047. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘உங்க ளிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்ப தைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதா?” என்று கேட் டேன். அவர்கள், ‘‘இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனில் அளிக் கின்ற விளக்கத்தையும் இந்த ஏட்டில் இருப்பதையும் தவிர” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் எந்த முஸ்லிமையும் இறைமறுப்பாளனுக்குப் பதிலாகக் கொல்லக் கூடாது ஆகியவை” என்று பதிலளித்தார்கள்.159



அத்தியாயம் : 56
3048. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رِجَالاً، مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ فَلْنَتْرُكْ لاِبْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ. فَقَالَ "" لاَ تَدَعُونَ مِنْهَا دِرْهَمًا "".
பாடம் : 172 இணைவைப்பாளர்களிடம் பிணைத் தொகை பெறுவது
3048. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் தொகையை நாங்கள் (வாங்காமல்) விட்டு விட அனுமதியுங்கள்” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘பிணைத் தொகை ‘லிருந்து ஒரேயொரு திர்ஹத்தைக்கூட (வாங்காமல்) விட்டுவிடாதீர்கள்” என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.160


அத்தியாயம் : 56
3049. وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ، فَجَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي، وَفَادَيْتُ عَقِيلاً. فَقَالَ "" خُذْ "". فَأَعْطَاهُ فِي ثَوْبِهِ.
பாடம் : 172 இணைவைப்பாளர்களிடம் பிணைத் தொகை பெறுவது
3049. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (பொது) நிதி கொண்டுவரப்பட்டது. அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ர் போரில் கைதியாகப் பிடிபட்டபோது) எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தி யிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காக வும் பிணைத் தொகை செலுத்தியிருக்கி றேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எடுத்துக்கொள்வீராக!” என்று கூறி, (நிதியை) அவரது ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.161


அத்தியாயம் : 56
3050. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ ـ وَكَانَ جَاءَ فِي أُسَارَى بَدْرٍ ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ.
பாடம் : 172 இணைவைப்பாளர்களிடம் பிணைத் தொகை பெறுவது
3050. முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் பத்ர் போர்க் கைதிகளின் (பிணைத்தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்” என்று (என் தந்தை) கூறினார்கள்.162

அத்தியாயம் : 56
3051. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم عَيْنٌ مِنَ الْمُشْرِكِينَ وَهْوَ فِي سَفَرٍ، فَجَلَسَ عِنْدَ أَصْحَابِهِ يَتَحَدَّثُ ثُمَّ انْفَتَلَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اطْلُبُوهُ وَاقْتُلُوهُ "". فَقَتَلَهُ فَنَفَّلَهُ سَلَبَهُ.
பாடம் : 173 எதிரி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமிய நாட்டில் எவருடைய அடைக்கலமும் பெறாமல் நுழைந்து விட்டால்...
3051. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அவர்களிடம் இணைவைப்பாளர்களில் உளவாளி ஒருவன் வந்தான்; நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பிறகு திரும்பிச் சென்றுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), ‘‘அவனைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.163

நான் அவனை (தேடிப்பிடித்துக்) கொன்றுவிட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனுடைய உடைமை களை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) கூடுதலாக நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 56
3052. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صلى الله عليه وسلم أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَلاَ يُكَلَّفُوا إِلاَّ طَاقَتَهُمْ.
பாடம் : 174 இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தா(ரான சிறுபான்மையின)ரின் பாதுகாப்பிற்காகப் போரிட வேண்டும்; அவர்களை அடிமை களாக நடத்தக் கூடாது.
3052. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(எனக்குப்பின் வருகின்ற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன்: அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்குமேல் அவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது.164

அத்தியாயம் : 56
3053. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ يَوْمُ الْخَمِيسِ، وَمَا يَوْمُ الْخَمِيسِ ثُمَّ بَكَى حَتَّى خَضَبَ دَمْعُهُ الْحَصْبَاءَ فَقَالَ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعُهُ يَوْمَ الْخَمِيسِ فَقَالَ "" ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا "". فَتَنَازَعُوا وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ فَقَالُوا هَجَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ "" دَعُونِي فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ "". وَأَوْصَى عِنْدَ مَوْتِهِ بِثَلاَثٍ "" أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، وَأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ "". وَنَسِيتُ الثَّالِثَةَ. وَقَالَ يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ سَأَلْتُ الْمُغِيرَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ جَزِيرَةِ الْعَرَبِ. فَقَالَ مَكَّةُ وَالْمَدِينَةُ وَالْيَمَامَةُ وَالْيَمَنُ. وَقَالَ يَعْقُوبُ وَالْعَرْجُ أَوَّلُ تِهَامَةَ.
பாடம் : 175 தூதுக்குழுவினருக்குப் பரிசுகள் வழங்குதல்165 பாடம் : 176 இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தா(ரான சிறுபான்மையின)ருக் காகப் பரிந்துரை செய்யலாமா? என்ப தும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதும்
3053. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று கேட்டுவிட்டு, சரளைக்கல் பூமியை நனைத்துவிடும் அளவுக்குக் கண்ணீர் விட்டு அழுதார்கள். பிறகு கூறினார்கள்:

அந்த வியாழக்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘‘ஓர் ஏட்டை என்னி டம் கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டார்கள். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்கள்” என்று கூறினார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னை அழைக்கின்ற (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறை நினைவில் இருக்கும்) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள்.166

மேலும், அவர்கள் தமது மரணத் தருவாயில் மூன்று விஷயங்களை வலியுறுத்தினார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர் களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக்குழுவினருக்கு நான் வழங்கிவந்ததைப் போன்று நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்.

லிமூன்றாவது கட்டளையை நான் மறந்துவிட்டேன்லி

யஅகூப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் முஃகீரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் அரபு தீபகற்பம் பற்றிக் கேட்டேன். அவர்கள், யிமக்கா, மதீனா, யமாமா, யமன் ஆகியவை’ என்று பதிலளித்தார்கள்.

மேலும் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மக்காலிமதீனா இடையே உள்ள) ‘அல்அர்ஜ்’ எனும் இடம்தான் திஹாமாவின் முதற் கட்டமாகும்.

அத்தியாயம் : 56
3054. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ وَجَدَ عُمَرُ حُلَّةَ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ الْحُلَّةَ فَتَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَلِلْوُفُودِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ، أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ "". فَلَبِثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ حَتَّى أَتَى بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ "" إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لا خَلاَقَ لَهُ "". ثُمَّ أَرْسَلْتَ إِلَىَّ بِهَذِهِ فَقَالَ "" تَبِيعُهَا، أَوْ تُصِيبُ بِهَا بَعْضَ حَاجَتِكَ "".
பாடம் : 177 தூதுக்குழுவினரை வரவேற் பதற்காக (ஆடையணிகளால்) அலங்கரித்துக்கொள்வது
3054. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப் படுவதைக் கண்டார்கள் அதை (வாங்கி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அங்கியை விலைக்கு வாங்கி, பெருநாளின்போதும் தூதுக்குழுக்கள் வருகை தரும்போதும் இதனால் (உங்களை) அலங்கரித்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும்” லிஅல்லது ‘‘(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்கள்தான் இதை அணிவார்கள்”லி என்று சொன்னார்கள். அல்லாஹ் நாடிய (சிறிது) காலம் கழிந் தது.

நபி (ஸல்) அவர்கள் அலங்காரப் பட்டு அங்கி ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாத வருடைய ஆடையாகும்; லிஅல்லது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்’லி என்று கூறினீர் கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களே!” என்று கேட் டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் விற்றுவிடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதையேனும் இதைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்வீர்கள் (என்பதற்காகவே இதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தேன்)” என்று கூறினார்கள்.167

அத்தியாயம் : 56
3055. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ انْطَلَقَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قِبَلَ ابْنِ صَيَّادٍ حَتَّى وَجَدُوهُ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ عِنْدَ أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ يَوْمَئِذٍ ابْنُ صَيَّادٍ يَحْتَلِمُ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ظَهْرَهُ بِيَدِهِ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "". فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ. فَقَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ. قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ "" قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَاذَا تَرَى "". قَالَ ابْنُ صَيَّادٍ يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" خُلِطَ عَلَيْكَ الأَمْرُ "". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا "". قَالَ ابْنُ صَيَّادٍ هُوَ الدُّخُّ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اخْسَأْ فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ "". قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنْ يَكُنْهُ فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْهُ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ "".
பாடம் : 178 சிறுவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பது எப்படி?
3055. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களோடு (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள்.168 யிபனூ மஃகாலா’ குலத் தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக்கொண்டி ருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டி ருந்தான். நபி (ஸல்) அவர்கள் தமது கரத் தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணர வில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்துவிட்டு,”நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) யிஉம்மீ’களின் தூதர் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் இறைத்தூதர் என்று நீங்கள் சாட்சியம் அளிக்கின்றீர்களா?” என்று கேட்டான்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள்மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், ‘‘(உன் நிலை பற்றி) நீ என்ன கருதுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், ‘‘எனக்கு மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்ற”’ என்றான்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, ‘‘நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னைச் சோதிப்பதற்காக) மறைத்துவைத்துள்ளேன் (அது என்ன என்று சொல்)” எனக் கேட்டார்கள். இப்னு ஸய்யாத், அது யிதுக்’ என்று கூறினான். (அதாவது யிதுகான்’ என்பதை யிதுக்’ என அரைகுறையாகச் சொன்னான்.)169 உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவனது கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்; அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக் குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவ னில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை” என்று சொன்னார்கள்.170


அத்தியாயம் : 56
3056. قَالَ ابْنُ عُمَرَ انْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ يَأْتِيَانِ النَّخْلَ الَّذِي فِيهِ ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ النَّخْلَ طَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ وَهْوَ يَخْتِلُ ابْنَ صَيَّادٍ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ أَىْ صَافِ ـ وَهْوَ اسْمُهُ ـ فَثَارَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ".
பாடம் : 178 சிறுவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பது எப்படி?
3056. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடந்தார்கள்.

அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ஸாஃபியே! லிஇது இப்னு ஸய்யாதின் பெயராகும்லி என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்” என்று சொன்னார்கள்.171


அத்தியாயம் : 56
3057. وَقَالَ سَالِمٌ قَالَ ابْنُ عُمَرَ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ " إِنِّي أُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ قَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنْ سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ".
பாடம் : 178 சிறுவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பது எப்படி?
3057. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

...பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களி டையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவுகூர்ந்து சொன்னார்கள்:

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரை அவனைக் குறித்து எச்சரித்துள்ளார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு தகவலை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.172

அத்தியாயம் : 56
3058. حَدَّثَنَا مَحْمُودٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ تَنْزِلُ غَدًا فِي حَجَّتِهِ. قَالَ "" وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مَنْزِلاً "". ثُمَّ قَالَ ""نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ الْمُحَصَّبِ، حَيْثُ قَاسَمَتْ قُرَيْشٌ عَلَى الْكُفْرِ "". وَذَلِكَ أَنَّ بَنِي كِنَانَةَ حَالَفَتْ قُرَيْشًا عَلَى بَنِي هَاشِمٍ أَنْ لاَ يُبَايِعُوهُمْ وَلاَ يُئْوُوهُمْ. قَالَ الزُّهْرِيُّ وَالْخَيْفُ الْوَادِي.
பாடம் : 179 நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம், ‘‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர்கள்” என்று கூறியது இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.173 பாடம் : 180 பகை நாட்டில் ஒரு கூட்டத்தார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அங்குள்ள அவர்களின் செல்வங் களும் நிலங்களும் அவர்களுக்கே உரியவை ஆகும்.
3058. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் இருந்தபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் நாளை (மக்காவில்) எங்கு தங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச்சென்றுள்ளாரா?”174 என்று கேட் டார்கள்.

பிறகு, ‘‘நாளை நாம் யிபனூ கினானா’ பள்ளத்தாக்கான ‘அல்முஹஸ்ஸப்’ எனும் இடத்தில் தங்குவோம். அங்குதான், குறைஷியர் இறைமறுப்பில் நிலைத்திருப் போம் எனச் சங்கல்பம் ஏற்றனர்” என்று கூறினார்கள். பனூ கினானா குலத்தார் குறைஷியரிடம் பனூ ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, ‘‘அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளமாட்டோம்; அவர்களுக்குப் புகலிடம் அளிக்கவும்மாட்டோம்” என்று ஒப்பந்தம் செய்திருந் ததையே நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.175

இங்கு யிபள்ளத்தாக்கு’ என்பதைக் குறிக்க யிகைஃப்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது லி என அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 56
3059. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ اسْتَعْمَلَ مَوْلًى لَهُ يُدْعَى هُنَيًّا عَلَى الْحِمَى فَقَالَ يَا هُنَىُّ، اضْمُمْ جَنَاحَكَ عَنِ الْمُسْلِمِينَ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّ دَعْوَةَ الْمَظْلُومِ مُسْتَجَابَةٌ، وَأَدْخِلْ رَبَّ الصُّرَيْمَةِ وَرَبَّ الْغُنَيْمَةِ، وَإِيَّاىَ وَنَعَمَ ابْنِ عَوْفٍ، وَنَعَمَ ابْنِ عَفَّانَ، فَإِنَّهُمَا إِنْ تَهْلِكْ مَاشِيَتُهُمَا يَرْجِعَا إِلَى نَخْلٍ وَزَرْعٍ، وَإِنَّ رَبَّ الصُّرَيْمَةِ وَرَبَّ الْغُنَيْمَةِ إِنْ تَهْلِكْ مَاشِيَتُهُمَا يَأْتِنِي بِبَنِيهِ فَيَقُولُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ. أَفَتَارِكُهُمْ أَنَا لاَ أَبَا لَكَ فَالْمَاءُ وَالْكَلأُ أَيْسَرُ عَلَىَّ مِنَ الذَّهَبِ وَالْوَرِقِ، وَايْمُ اللَّهِ، إِنَّهُمْ لَيَرَوْنَ أَنِّي قَدْ ظَلَمْتُهُمْ، إِنَّهَا لَبِلاَدُهُمْ فَقَاتَلُوا عَلَيْهَا فِي الْجَاهِلِيَّةِ، وَأَسْلَمُوا عَلَيْهَا فِي الإِسْلاَمِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ الْمَالُ الَّذِي أَحْمِلُ عَلَيْهِ فِي سَبِيلِ اللَّهِ مَا حَمَيْتُ عَلَيْهِمْ مِنْ بِلاَدِهِمْ شِبْرًا.
பாடம் : 179 நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம், ‘‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர்கள்” என்று கூறியது இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.173 பாடம் : 180 பகை நாட்டில் ஒரு கூட்டத்தார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அங்குள்ள அவர்களின் செல்வங் களும் நிலங்களும் அவர்களுக்கே உரியவை ஆகும்.
3059. உமர் (ரலி) அவர்களின் (முன் னாள்) அடிமை அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், (ஸகாத் கால்நடைகளின்) பிரத்யேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு யிஹுû” எனப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது (அவரிடம் பின்வருமாறு) கூறினார்கள்:

ஹுனையே! உன் கையை முஸ்லிம் களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனையை அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி.

(செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே.) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக்கொள்வார்கள்.

ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்துபோய் விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்துக்கொண்டு வந்து, ‘‘இறைநம்பிக்கையாளரின் தலைவரே! (இறைநம்பிக்கையாளரின் தலைவரே!) என்று அரற்றுவார்கள்.

அவர்களை (இதே நிலையில்) நான் விட்டுவிட முடியுமா? உனக்குத் தந்தை இல்லாமல் போக! (அவர்களை நான் விட்டுவிட்டால், பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும்தான் அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிவரும்.) ஆனால், (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை)விட (அரசின் பிரத்யேக மேய்ச்சல் நிலத்திலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவதே எனக்கு எளிதானதாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவர்களின் பகுதியில் மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கிய தால்) இவர்களுக்கு நான் அநீதியிழைத்து விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது இவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்தில் போரிட்டிருக் கிறார்கள்; இஸ்லாத்தில் இணையும்போது இதனுடன்தான் இணைந்துள்ளார்கள்.

என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்ப வேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக்கூட (கையகப்படுத்தி) பிரத்யேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்கமாட்டேன்.

அத்தியாயம் : 56
3060. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اكْتُبُوا لِي مَنْ تَلَفَّظَ بِالإِسْلاَمِ مِنَ النَّاسِ "". فَكَتَبْنَا لَهُ أَلْفًا وَخَمْسَمِائَةِ رَجُلٍ، فَقُلْنَا نَخَافُ وَنَحْنُ أَلْفٌ وَخَمْسُمِائَةٍ فَلَقَدْ رَأَيْتُنَا ابْتُلِينَا حَتَّى إِنَّ الرَّجُلَ لَيُصَلِّي وَحْدَهُ وَهْوَ خَائِفٌ. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، فَوَجَدْنَاهُمْ خَمْسَمِائَةٍ. قَالَ أَبُو مُعَاوِيَةَ مَا بَيْنَ سِتِّمِائَةٍ إِلَى سَبْعِمِائَةٍ.
பாடம் : 181 மக்க(ளின் பெயர்க)ளைத் தலைவர் எழுதிப் பதிவு செய்வது
3060. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘மக்களில் இஸ்லாத்தை மொழிந்தவர்களின் பெயர்களை எனக்காக (கணக் கெடுத்து)ப் பதிவு செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.176

நாங்கள் அவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு பேரின் பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், ‘‘நாம் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா?” என்று கேட்டோம். (ஆனால், பிற்காலத்தில்) நாங்கள் அச்சப் பட்டுக்கொண்டு தனியாகத் தொழுமளவுக்கு சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘(நாங்கள் கணக்கெடுத்தபோது) ஐநூறு பேரைக் கண்டோம்” என்று காணப்படு கிறது.

ஆபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அறுநூறு முதல் எழுநூறு வரை’ என்று இடம்பெற்றுள்ளது.177


அத்தியாயம் : 56
3061. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي حَاجَّةٌ. قَالَ "" ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ "".
பாடம் : 181 மக்க(ளின் பெயர்க)ளைத் தலைவர் எழுதிப் பதிவு செய்வது
3061. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நான்) இன்னின்ன அறப்போர்களில் (கலந்துகொள்ள பெயர் கொடுத்துள்ளேன். அவற் றில்) என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், என் மனைவி ஹஜ் செய்யவிருக்கிறார்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் திரும்பிச் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள்.178

அத்தியாயம் : 56
3062. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِرَجُلٍ مِمَّنْ يَدَّعِي الإِسْلاَمَ "" هَذَا مِنْ أَهْلِ النَّارِ "". فَلَمَّا حَضَرَ الْقِتَالُ قَاتَلَ الرَّجُلُ قِتَالاً شَدِيدًا، فَأَصَابَتْهُ جِرَاحَةٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ، الَّذِي قُلْتَ إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَإِنَّهُ قَدْ قَاتَلَ الْيَوْمَ قِتَالاً شَدِيدًا وَقَدْ مَاتَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِلَى النَّارِ "". قَالَ فَكَادَ بَعْضُ النَّاسِ أَنْ يَرْتَابَ، فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ قِيلَ إِنَّهُ لَمْ يَمُتْ، وَلَكِنَّ بِهِ جِرَاحًا شَدِيدًا. فَلَمَّا كَانَ مِنَ اللَّيْلِ لَمْ يَصْبِرْ عَلَى الْجِرَاحِ، فَقَتَلَ نَفْسَهُ، فَأُخْبِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِذَلِكَ فَقَالَ "" اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ "". ثُمَّ أَمَرَ بِلاَلاً فَنَادَى بِالنَّاسِ "" إِنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ نَفْسٌ مُسْلِمَةٌ، وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ "".
பாடம் : 182 பாவியான மனிதரால்கூட இந்த மார்க்கத்திற்கு அல்லாஹ் வலுவூட்டு கிறான்.
3062. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நாங்கள் (ஹுனைன் அல்லது கைபர் போரில்) கலந்துகொண்டோம். தம்மை முஸ்லிம் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதரைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் நரகவாசி களில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அம்மனிதர் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, யிஇவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர் களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று கூறினார்கள்.

மக்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பைச்) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருக்க, ‘‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன் என்பதற்கு நானே சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு, பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘‘முஸ்லிமான ஆன்மாதான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். அல்லாஹ் இந்த மார்க்கத் திற்குப் பாவியான மனிதராலும் வலுவூட்டு கின்றான்” என்று பொதுஅறிவிப்புச் செய்தார்கள்.179

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
3063. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا خَالِدُ بْنُ الْوَلِيدِ عَنْ غَيْرِ إِمْرَةٍ فَفُتِحَ عَلَيْهِ، وَمَا يَسُرُّنِي ـ أَوْ قَالَ مَا يَسُرُّهُمْ ـ أَنَّهُمْ عِنْدَنَا "". وَقَالَ وَإِنَّ عَيْنَيْهِ لَتَذْرِفَانِ.
பாடம் : 183 எதிரியைப் பற்றிய அச்சம் இருக் கும்போது தலைவர் நியமிக் காமலேயே ஒருவர் போரின் தளபதி யாவது
3063. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூத்தா போரின்போது போர்க்கள நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்தபடியே விவரித்து,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.180 உரையில், ‘‘இப்போது (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பின் அல் ஹாரிஸா பிடித்துக்கொண்டார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை ஜஅஃபர் பின் அபீதாலிப் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் பின் ரவாஹா எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டு விட்டார்.

பிறகு காலித் பின் அல்வலீத் (நமது) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்துக் கொண்டுவிட்டார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்துவிட்டான்” என்று கூறிவிட்டு, ‘‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக் காது” என்றோ, ‘‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி யளிக்காது” என்றோ சொன்னார்கள்.181

இதைச் சொல்லும்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தன.182

அத்தியாயம் : 56
3064. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَاهُ رِعْلٌ وَذَكْوَانُ وَعُصَيَّةُ وَبَنُو لِحْيَانَ، فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا، وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ، فَأَمَدَّهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ قَالَ أَنَسٌ كُنَّا نُسَمِّيهِمُ الْقُرَّاءَ، يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ، فَانْطَلَقُوا بِهِمْ حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ، فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لِحْيَانَ. قَالَ قَتَادَةُ وَحَدَّثَنَا أَنَسٌ أَنَّهُمْ قَرَءُوا بِهِمْ قُرْآنًا أَلاَ بَلِّغُوا عَنَّا قَوْمَنَا بِأَنَّا قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا. ثُمَّ رُفِعَ ذَلِكَ بَعْدُ.
பாடம் : 184 படையனுப்பி உதவுதல்
3064. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறினர்.183

மேலும், தம் சமுதாயத்தாருக்கெதிராக ஒரு படையனுப்பி உதவுமாறு நபி (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்ட னர். நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளில் எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள்.

அவர்களை நாங்கள் யிகாரீகள்’ (குர்ஆனை ம”ம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்துவந்தோம். அவர்கள் பகலில் விறகு சேகரிப்பார்கள்; இரவில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், யிபிஃரு மஊனா’184 எனுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்று விட்டனர்.

(செய்தி அறிந்த) நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதிவந்தோம்.

‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம்; அவன் எங்களைக் குறித்துத் திருப்தி அடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தி அடைந் தோம் என்று எங்கள் சமுதாயத்தாருக்கு எங்களைப் பற்றித் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம்.

பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டு விட்டது.185

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
3065. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، قَالَ ذَكَرَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ أَبِي طَلْحَةَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالْعَرْصَةِ ثَلاَثَ لَيَالٍ. تَابَعَهُ مُعَاذٌ وَعَبْدُ الأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ أَبِي طَلْحَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 185 பகைவர்களை வென்று அவர்களின் திறந்தவெளியிலேயே மூன்று நாட் கள் தங்குவது
3065. அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தாரை வெற்றிகொண்டால் (அவர்களின்) திறந்த வெளிப்பகுதியில் மூன்று நாட்கள் தங்குவார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56