3066. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا، أَخْبَرَهُ قَالَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ.
பாடம் : 186 போர்ச் செல்வத்தைப் போரிலும் பயணத்திலும் பங்கிடுவது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யிதுல்ஹுலைஃபா’வில் இருந்தோம். அப்போது ஆடுகளும் ஒட்டகங்களும் எங்களுக்குக் கிடைத்தன. நபி (ஸல்) அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத் திற்குச் சமமாகக் கருதினார்கள்.
3066. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யிஜிஅரானா’வி லிருந்து (புறப்பட்டு) உம்ரா செய்தார்கள். அங்குதான் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை அவர்கள் பங்கிட்டார்கள்.186

அத்தியாயம் : 56
3067. قَالَ ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ ذَهَبَ فَرَسٌ لَهُ، فَأَخَذَهُ الْعَدُوُّ، فَظَهَرَ عَلَيْهِ الْمُسْلِمُونَ فَرُدَّ عَلَيْهِ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَبَقَ عَبْدٌ لَهُ فَلَحِقَ بِالرُّومِ، فَظَهَرَ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ، فَرَدَّهُ عَلَيْهِ خَالِدُ بْنُ الْوَلِيدِ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 187 (போரில்) ஒரு முஸ்லிமின் செல் வத்தை இணைவைப்பாளர்கள் பறித்துச் சென்றபின், அதே செல் வத்தை அவர் கண்டால்...
3067. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்திவிட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்துக்கொண்டனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது.

(இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி (கிழக்கு) ரோமானி யருடன் சேர்ந்துகொண்டான். ரோமர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்டபோது அந்த அடிமையை காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 56
3068. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ عَبْدًا، لاِبْنِ عُمَرَ أَبَقَ فَلَحِقَ بِالرُّومِ، فَظَهَرَ عَلَيْهِ خَالِدُ بْنُ الْوَلِيدِ، فَرَدَّهُ عَلَى عَبْدِ اللَّهِ، وَأَنَّ فَرَسًا لاِبْنِ عُمَرَ عَارَ فَلَحِقَ بِالرُّومِ، فَظَهَرَ عَلَيْهِ فَرَدُّوهُ عَلَى عَبْدِ اللَّهِ. قَالَ أَبُو عَبْد اللَّهِ عَارَ مُشْتَقٌّ مِنْ الْعَيْرِ وَهُوَ حِمَارُ وَحْشٍ أَيْ هَرَبَ
பாடம் : 187 (போரில்) ஒரு முஸ்லிமின் செல் வத்தை இணைவைப்பாளர்கள் பறித்துச் சென்றபின், அதே செல் வத்தை அவர் கண்டால்...
3068. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய அடிமையொருவன் தப்பியோடி (கிழக்கு) ரோமானியருடன் சேர்ந்துகொண்டான். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் அந்த ரோமர்களை வெற்றி கொண்டபோது, அவனை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

(இவ்வாறே) இப்னு உமர் (ரலி) அவர்களின் குதிரையொன்று ஓடிப்போய் (கிழக்கு) ரோமானியர்களிடம் சிக்கிக்கொண்டது. (கிழக்கு) ரோமை காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் வெற்றி கொண்டார்கள். அப்போது அதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:

(குதிரை ஓடிப்போனது என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஆர’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது (அடிப்படையில்), காட்டுக் கழுதையைக் குறிக்கும் ‘அய்ர்’ எனும் சொல்லில் இருந்து வந்தது. இங்கு இது, வெருண்டோடுவதைக் குறிக்கும்.


அத்தியாயம் : 56
3069. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّهُ كَانَ عَلَى فَرَسٍ يَوْمَ لَقِيَ الْمُسْلِمُونَ، وَأَمِيرُ الْمُسْلِمِينَ يَوْمَئِذٍ خَالِدُ بْنُ الْوَلِيدِ، بَعَثَهُ أَبُو بَكْرٍ، فَأَخَذَهُ الْعَدُوُّ، فَلَمَّا هُزِمَ الْعَدُوُّ رَدَّ خَالِدٌ فَرَسَهُ.
பாடம் : 187 (போரில்) ஒரு முஸ்லிமின் செல் வத்தை இணைவைப்பாளர்கள் பறித்துச் சென்றபின், அதே செல் வத்தை அவர் கண்டால்...
3069. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் (கிழக்கு ரோமானியரைப் போர்க் களத்தில்) சந்தித்தபோது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரை அபூபக்ர் (ரலி) அவர்கள் (தளபதியாக) அனுப்பியிருந் தார்கள். (எனது) அந்தக் குதிரையை எதிரிகள் பிடித்துக்கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்டபோது காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்கள் எனது குதிரையைத் திருப்பித் தந்துவிட்டார்கள்.

அத்தியாயம் : 56
3070. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ذَبَحْنَا بُهَيْمَةً لَنَا، وَطَحَنْتُ صَاعًا مِنْ شَعِيرٍ، فَتَعَالَ أَنْتَ وَنَفَرٌ، فَصَاحَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَا أَهْلَ الْخَنْدَقِ، إِنَّ جَابِرًا قَدْ صَنَعَ سُؤْرًا، فَحَىَّ هَلاً بِكُمْ "".
பாடம் : 188 பாரசீக மொழியிலும் (அரபியல்லாத) அந்நிய மொழிகளிலும் பேசுவது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: எந்த இறைத்தூதர் ஆனாலும், அவர் தம் சமூகத்தாருக்கு (உண்மைகளை)த் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, அவர்களது மொழி பேசுபவராகவே அவரை நாம் அனுப்பினோம். (14:4)187
3070. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அகழ்ப் போரின்போது) நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ‘ஸாஉ’ தொலி நீக்கப்படாத கோதுமையை அரைத்து மாவாக்கியுள் ளேன்; ஆகவே, தாங்களும் வேறு சிலரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அகழ்வாசிகளே! ஜாபிர் விருந்துணவு தயாரித்திருக்கிறார். விரைந்து வாருங்கள்” என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.188


அத்தியாயம் : 56
3071. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ، قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ أَبِي وَعَلَىَّ قَمِيصٌ أَصْفَرُ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" سَنَهْ سَنَهْ "". قَالَ عَبْدُ اللَّهِ وَهْىَ بِالْحَبَشِيَّةِ حَسَنَةٌ. قَالَتْ فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ، فَزَبَرَنِي أَبِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعْهَا "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ "" أَبْلِي وَأَخْلِفِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِفِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِفِي "". قَالَ عَبْدُ اللَّهِ فَبَقِيَتْ حَتَّى ذَكَرَ.
பாடம் : 188 பாரசீக மொழியிலும் (அரபியல்லாத) அந்நிய மொழிகளிலும் பேசுவது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: எந்த இறைத்தூதர் ஆனாலும், அவர் தம் சமூகத்தாருக்கு (உண்மைகளை)த் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, அவர்களது மொழி பேசுபவராகவே அவரை நாம் அனுப்பினோம். (14:4)187
3071. உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (சிறுமியாக இருந்தபோது) என் தந்தையுடன் சென்றேன். அப்போது நான் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இவள்) நன்றாயிருக் கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்” என்று சொன்னார்கள். நான் (நபி (ஸல்) அவர் களின் இரு தோள்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே என் தந்தை என்னை அதட்டினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(குழந்தைதானே!) அவளை (விளையாட) விடுவீராக!” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழைய தாக்கிக்) கிழித்து நைந்துபோகச்செய்துவிடு. பிறகும் அதைக் கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்துபோகச்செய்துவிடு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், ‘‘அந்தச் சட்டை, பழுத்துப்போய் மக்களால் பேசப் படும் அளவுக்கு உம்மு காலித் (ரலி) அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்” என்று கூறுகிறார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறிய யிசனா’ (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்” என்றும் கூறுகிறார்கள்.189


அத்தியாயம் : 56
3072. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ، أَخَذَ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْفَارِسِيَّةِ "" كَخٍ كَخٍ، أَمَا تَعْرِفُ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ "".
பாடம் : 188 பாரசீக மொழியிலும் (அரபியல்லாத) அந்நிய மொழிகளிலும் பேசுவது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: எந்த இறைத்தூதர் ஆனாலும், அவர் தம் சமூகத்தாருக்கு (உண்மைகளை)த் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, அவர்களது மொழி பேசுபவராகவே அவரை நாம் அனுப்பினோம். (14:4)187
3072. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்தபோது) தர்மப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தமது வாயில் வைத்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பாரசீக மொழியில், ‘கிஹ், கிஹ்’ (சீ, சீ என்று சொல்லிவிட்டு) ‘‘நாம் தர்மப் பொருளைச் சாப்பிடமாட்டோம் என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.190

அத்தியாயம் : 56
3073. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي حَيَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو زُرْعَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَامَ فِينَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَذَكَرَ الْغُلُولَ فَعَظَّمَهُ وَعَظَّمَ أَمْرَهُ قَالَ "" لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ شَاةٌ لَهَا ثُغَاءٌ عَلَى رَقَبَتِهِ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ، أَغِثْنِي. فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ. وَعَلَى رَقَبَتِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ، يَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي. فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ. وَعَلَى رَقَبَتِهِ صَامِتٌ، فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي. فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ. أَوْ عَلَى رَقَبَتِهِ رِقَاعٌ تَخْفِقُ، فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي. فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ "". وَقَالَ أَيُّوبُ عَنْ أَبِي حَيَّانَ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ.
பாடம் : 189 (போர்ச் செல்வங்களை) மோசடி செய்வது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார். (3:161)
3073. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று, போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத் தார்கள். அப்போது பின்வருமாறு கூறி னார்கள்:

‘‘மறுமை நாளில் தமது கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்துகொண்டு வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம்.

(ஏனெனில்) அப்போது நான், ‘‘உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்’ என்று கூறிவிடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தமது கழுத்தில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் பொன் அல்லது வெள்ளியைச் சுமந்து கொண்டு வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்க ளில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்தி லேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறி விடுவேன்.

அல்லது அசைகின்ற எந்தப் பொருளையேனும் தமது கழுத்தில் சுமந்து கொண்டு வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்க ளில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறி விடுவேன்.191

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
3074. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ كَانَ عَلَى ثَقَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ يُقَالُ لَهُ كِرْكِرَةُ فَمَاتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هُوَ فِي النَّارِ "". فَذَهَبُوا يَنْظُرُونَ إِلَيْهِ فَوَجَدُوا عَبَاءَةً قَدْ غَلَّهَا. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ ابْنُ سَلاَمٍ كَرْكَرَةُ، يَعْنِي بِفَتْحِ الْكَافِ، وَهْوَ مَضْبُوطٌ كَذَا.
பாடம் : 190 (போர்ச் செல்வத்தில்) சிறிதளவு மோசடி செய்வது ‘‘(மோசடியாக மேலங்கியொன்றை எடுத்து வைத்திருந்த ‘கிர்கிரா’ என்பவரைக் கையும் களவுமாகப் பிடித்தபோது) நபி (ஸல்) அவர்கள் அவருடைய பொருட்களை எரித்துவிட்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறவில்லை. இதுதான், (எரித்துவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ள அறிவிப்பைவிட) சரியானதாகும்.192
3074. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் பயணச் சுமை களுக்குக் காவலராக ‘கிர்கிரா’ எனப்படும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒருநாள்) இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் நரகத்தில் நுழைவார்” என்று கூறினார்கள்.

(இதைக் கேட்டு) நபித்தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்துவைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.193

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:

(என் ஆசிரியர்) முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள், (‘கிர்கிரா’வை) யிகர்கரா’ என்று உச்சரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அது இவ்வாறும் உச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 56
3075. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ، فَأَصَابَ النَّاسَ جُوعٌ وَأَصَبْنَا إِبِلاً وَغَنَمًا، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أُخْرَيَاتِ النَّاسِ، فَعَجِلُوا فَنَصَبُوا الْقُدُورَ، فَأَمَرَ بِالْقُدُورِ فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَمَ فَعَدَلَ عَشَرَةً مِنَ الْغَنَمِ بِبَعِيرٍ، فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، وَفِي الْقَوْمِ خَيْلٌ يَسِيرٌ فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ، فَأَهْوَى إِلَيْهِ رَجُلٌ بِسَهْمٍ، فَحَبَسَهُ اللَّهُ فَقَالَ "" هَذِهِ الْبَهَائِمُ لَهَا أَوَابِدُ كَأَوَابِدِ الْوَحْشِ، فَمَا نَدَّ عَلَيْكُمْ فَاصْنَعُوا بِهِ هَكَذَا "". فَقَالَ جَدِّي إِنَّا نَرْجُو ـ أَوْ نَخَافُ ـ أَنْ نَلْقَى الْعَدُوَّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى، أَفَنَذْبَحُ بِالْقَصَبِ فَقَالَ "" مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ "".
பாடம் : 191 (பங்கிடுவதற்கு முன்னால்) போர்ச் செல்வங்களான ஒட்டகங்கள், ஆடுகள் ஆகியவற்றை அறுப்பது வெறுக்கத் தக்கது.
3075. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யிதுல்ஹுலைஃபா’வில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. எங்களுக்கு (போர்ச் செல்வங்களாக)ச் சில ஒட்டகங்களும் ஆடுகளும் கிடைத்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். ஆகவே, மக்கள் அவசரப்பட்டுப் பாத்திரங்களை அடுப்புகளில் வைத்து (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன.

பிறகு (அவற்றை) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிட்டார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் வெருண்டோடிவிட்டது மக்களிடம் குறைந்த எண்ணிக்கையிலேயே குதிரைகள் இருந்தன. மக்கள் அந்த ஒட்டகத்தைத் தேடிச் சென்றனர். அது அவர்களைக் களைப்படையச் செய்து விட்டது. ஒரு மனிதர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அந்த ஒட்டகத்தை (ஓட முடியாமல்) தடுத்து நிறுத்திவிட்டான்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்று இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை உள்ளன. உங்களிடமிருந்து வெருண்டோடிவிடுபவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘(ஒட்டகங்களை அறுக்க வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால்) எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்; அல்லது எதிர்பார்க்கிறோம். ஆகவே, நாங்கள் (அவற்றை வாட்களால் அறுக்காமல்) மூங்கில்களால் அறுக்கலாமா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! இதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன்: பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் கத்தி களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.194

அத்தியாயம் : 56
3076. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، قَالَ قَالَ لِي جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". وَكَانَ بَيْتًا فِيهِ خَثْعَمُ يُسَمَّى كَعْبَةَ الْيَمَانِيَةَ، فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةٍ مِنْ أَحْمَسَ، وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ، فَأَخْبَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَضَرَبَ فِي صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ أَصَابِعِهِ فِي صَدْرِي فَقَالَ "" اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا "". فَانْطَلَقَ إِلَيْهَا فَكَسَرَهَا وَحَرَّقَهَا، فَأَرْسَلَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُبَشِّرُهُ فَقَالَ رَسُولُ جَرِيرٍ يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا جِئْتُكَ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ، فَبَارَكَ عَلَى خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ. قَالَ مُسَدَّدٌ بَيْتٌ فِي خَثْعَمَ.
பாடம் : 192 வெற்றிகள் குறித்த நற்செய்தி
3076. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர் களா?” என்று கேட்டார்கள். அது யிகஸ்அம்’ குலத்தாரிடையே யியமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டுவந்த ஓர் ஆலயமாக இருந்தது. நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது பேருடன் புறப்பட் டேன். அவர்கள் (சிறந்த) குதிரைப் படை வீரர்களாக இருந்தனர்.

‘‘என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். ஆகவே, அவர்கள் என் நெஞ்சில் அடித்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் விரல்கள் பதிந்த அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள் ‘‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நான் அதை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்துவிட்டேன்.

நபி (ஸல்) அவர்களுக்கு அதை (உடைத்து எரித்துவிட்டது) பற்றிய நற்செய்தி தெரிவிக்கச் சொல்லி ஆளனுப்பினேன். என்னுடைய தூதுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீதாணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படையினருக்கும் வளம் வழங்குமாறு பலமுறை அல்லாஹ்விடம் பிரார்த்தித் தார்கள்.195

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
3077. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ "" لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا "".
பாடம் : 193 நற்செய்தி அறிவிப்பவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பு (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் அசிரத்தையாக இருந்த குற்றத்திற்காக, தாம் மன்னிப்புக் கோரியதை ஏற்று) தமக்கு இறைவன் மன்னிப்பு வழங்கி விட்டான் என்னும் நற்செய்தி தமக்கு அறிவிக்கப்பட்டபோது (நற்செய்தியை அறிவித்தவருக்கு) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு துணிகளை (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.196 பாடம் : 194 (மக்கா) வெற்றிக்குப் பிறகு புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது.
3077. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் நபி (ஸல்) அவர்கள், ‘‘(மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) இனி கிடையாது. ஆயினும், அறப்போரும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போர் புரியப் புறப்படுமாறு அழைக் கப்பட்டால் உடனே புறப்பட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.197


அத்தியாயம் : 56
3078. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ مُجَاشِعِ بْنِ مَسْعُودٍ، قَالَ جَاءَ مُجَاشِعٌ بِأَخِيهِ مُجَالِدِ بْنِ مَسْعُودٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ هَذَا مُجَالِدٌ يُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ. فَقَالَ " لاَ هِجْرَةَ بَعْدَ فَتْحِ مَكَّةَ، وَلَكِنْ أُبَايِعُهُ عَلَى الإِسْلاَمِ ".
பாடம் : 193 நற்செய்தி அறிவிப்பவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பு (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் அசிரத்தையாக இருந்த குற்றத்திற்காக, தாம் மன்னிப்புக் கோரியதை ஏற்று) தமக்கு இறைவன் மன்னிப்பு வழங்கி விட்டான் என்னும் நற்செய்தி தமக்கு அறிவிக்கப்பட்டபோது (நற்செய்தியை அறிவித்தவருக்கு) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு துணிகளை (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.196 பாடம் : 194 (மக்கா) வெற்றிக்குப் பிறகு புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது.
3078. முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சகோதரர் முஜாலித் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘‘இவர் (என் சகோதரர்) முஜாலித்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்வதாக உறுதி மொழியளிக்(க வந்திருக்)கிறார்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் (புலம் பெயர்தல்) கிடையாது. ஆயினும், நான் இவரிடம் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி வாங்கு வேன்”என்று கூறினார்கள்.198


அத்தியாயம் : 56
3080. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو وَابْنُ جُرَيْجٍ سَمِعْتُ عَطَاءً، يَقُولُ ذَهَبْتُ مَعَ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَهْىَ مُجَاوِرَةٌ بِثَبِيرٍ فَقَالَتْ لَنَا انْقَطَعَتِ الْهِجْرَةُ مُنْذُ فَتَحَ اللَّهُ عَلَى نَبِيِّهِ صلى الله عليه وسلم مَكَّةَ.
பாடம் : 193 நற்செய்தி அறிவிப்பவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பு (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் அசிரத்தையாக இருந்த குற்றத்திற்காக, தாம் மன்னிப்புக் கோரியதை ஏற்று) தமக்கு இறைவன் மன்னிப்பு வழங்கி விட்டான் என்னும் நற்செய்தி தமக்கு அறிவிக்கப்பட்டபோது (நற்செய்தியை அறிவித்தவருக்கு) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு துணிகளை (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.196 பாடம் : 194 (மக்கா) வெற்றிக்குப் பிறகு புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது.
3080. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (முஸ்தலிஃபாவில்) ‘ஸபீர்’ மலையருகே தங்கியிருந்தார்கள்.199 அவர்கள் எங்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்காவின் வெற்றியை அளித்த பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்யும் (புலம்பெயரும்) கடமை நீங்கிவிட்டது” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
3081. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ الطَّائِفِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، وَكَانَ، عُثْمَانِيًّا فَقَالَ لاِبْنِ عَطِيَّةَ وَكَانَ عَلَوِيًّا إِنِّي لأَعْلَمُ مَا الَّذِي جَرَّأَ صَاحِبَكَ عَلَى الدِّمَاءِ سَمِعْتُهُ يَقُولُ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَالزُّبَيْرَ، فَقَالَ "" ائْتُوا رَوْضَةَ كَذَا، وَتَجِدُونَ بِهَا امْرَأَةً أَعْطَاهَا حَاطِبٌ كِتَابًا "". فَأَتَيْنَا الرَّوْضَةَ فَقُلْنَا الْكِتَابَ. قَالَتْ لَمْ يُعْطِنِي. فَقُلْنَا لَتُخْرِجِنَّ أَوْ لأُجَرِّدَنَّكِ. فَأَخْرَجَتْ مِنْ حُجْزَتِهَا، فَأَرْسَلَ إِلَى حَاطِبٍ فَقَالَ لاَ تَعْجَلْ، وَاللَّهِ مَا كَفَرْتُ وَلاَ ازْدَدْتُ لِلإِسْلاَمِ إِلاَّ حُبًّا، وَلَمْ يَكُنْ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلاَّ وَلَهُ بِمَكَّةَ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ، وَلَمْ يَكُنْ لِي أَحَدٌ، فَأَحْبَبْتُ أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا. فَصَدَّقَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ عُمَرُ دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ، فَإِنَّهُ قَدْ نَافَقَ. فَقَالَ "" مَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ، فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ "". فَهَذَا الَّذِي جَرَّأَهُ.
பாடம் : 195 அவசியம் ஏற்பட்டால், குற்றமிழைக் கும் (முஸ்லிமல்லாத) சிறுபான்மை இனப் பெண்கள், முஸ்லிம் பெண் கள் ஆகியோரின் தலைமுடியைச் சோதித்துப் பார்ப்பதும் ஆடையை அவிழ்த்துச் சோதிப்பதும்
3081. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆதர வாளர்களில் ஒருவரான அபூஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான இப்னு அத்திய்யா (ரஹ்) அவர்களிடம் இப்படிக் கூறினார்கள்:

உங்கள் தோழர் (அலீ) அவர்களுக்கு இரத்தம் சிந்துவதற்கான துணிவைக் கொடுத்தது எது என்று நான் அறிவேன்.

(ஏனெனில்) அவர் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டிருக்கிறேன்:

என்னையும் ஸுபைர் (ரலி) அவர்களை யும் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி, ‘‘நீங்கள் இன்ன யிரவ்ளா’ எனும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு பெண்ணை நீங்கள் காண்பீர்கள். அவளிடம் ஹாத்திப் (பின் அபீபல்த்தஆ) ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்கள். நாங்கள் யிரவ்ளா’வுக்குச் சென்று, ‘‘கடிதம் (எங்கே)?” என்று (அப்பெண்ணிடம்) கேட்டோம். அந்தப் பெண், ‘‘அவர் என்னிடம் (கடிதம் எதுவும்) கொடுக்கவில்லை” என்று கூறினாள். நாங்கள், ‘‘நீயாக அதை வெளியே எடுக்கிறாயா? அல்லது நான் உன் ஆடையைக் களைந்து சோதிக்கட்டுமா?” என்று கேட்டோம். உடனே, அவள் தன் (நீண்ட கூந்தல் தொட்டுக்கொண்டிருக்கும்) இடுப்பிலிருந்து (கடிதத்தை) வெளியே எடுத்தாள்.

(கடிதம் கிடைத்த) உடனே நபி (ஸல்) அவர்கள், ஹாத்திப் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். ஹாத்திப் அவர்கள் (வந்து), ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) அவசரப்படாதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இறைமறுப்பாளனு மில்லை; இஸ்லாத்தின் மீது எனக்கு நேசத்தைத் தவிர வேறெதுவும் அதிகரிக்க வுமில்லை. தங்கள் தோழர்கள் அனைவருக் குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும் அவர்களின் செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகையோர் இருக்கின்றனர். ஆனால், எனக்கோ எவருமே இல்லை. ஆகவே, அவர்களிடம் எனக்கு (ஆதரவுக்) கரம் இருக்க வேண்டுமென விரும்பினேன்” என்று கூறினார்கள்.

அவர்களின் இந்த வாக்குமூலத்தை நபி (ஸல்) அவர்கள் உண்மையென ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள், ‘‘என்னை விடுங்கள்; அவரது கழுத்தை வெட்டிவிடுகிறேன். ஏனென்றால், அவர் நயவஞ்சகராகி விட்டார்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கென்ன தெரியும்? பத்ர் போரில் கலந்துகொண்டவர்களை நோக்கி, ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்’ என்று அல்லாஹ் கூறிவிட்டிருக்கலாம்” எனச் சொன்னார்கள்.200

நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொல்லைக் கேட்டிருந்ததுதான் அலீ (ரலி) அவர்களுக்கு இந்தத் துணிவைத் தந்திருக்கிறது.

(இவ்வாறு அபூஅப்திர் ரஹ்மான் கூறினார்.)

அத்தியாயம் : 56
3082. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، وَحُمَيْدُ بْنُ الأَسْوَدِ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ ابْنُ الزُّبَيْرِ لاِبْنِ جَعْفَرٍ ـ رضى الله عنهم أَتَذْكُرُ إِذْ تَلَقَّيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَأَنْتَ وَابْنُ عَبَّاسٍ قَالَ نَعَمْ، فَحَمَلَنَا وَتَرَكَكَ.
பாடம் : 196 அறப்போர் வீரர்களை வரவேற்றல்
3082. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், ‘‘நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக் கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், ‘‘ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 56
3083. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ قَالَ السَّائِبُ بْنُ يَزِيدَ ـ رضى الله عنه ذَهَبْنَا نَتَلَقَّى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ الصِّبْيَانِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ.
பாடம் : 196 அறப்போர் வீரர்களை வரவேற்றல்
3083. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (சிறுவர்களாயிருந்தபோது மற்ற) சிறுவர்களுடன் சேர்ந்து (தபூக் போரிலிருந்து திரும்பி வரும்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற் பதற்காக யிவதா’ மலைக் குன்றை நோக்கிச் சென்றோம்.201

அத்தியாயம் : 56
3084. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَفَلَ كَبَّرَ ثَلاَثًا قَالَ "" آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ حَامِدُونَ لِرَبِّنَا سَاجِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ "".
பாடம் : 197 அறப்போரிலிருந்து திரும்புகையில் சொல்ல வேண்டியது
3084. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அறப்போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறுவார்கள்:

ஆயிபூன இன் ஷாஅல்லாஹ், தாயிபூன, ஆபிதூன ஹாமிதூன லி ரப்பினா சாஜிதூன. ஸதக்கல்லாஹு வஅதஹு, வ நஸர அப்தஹு, வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு.

(பொருள்: இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர் களாகவும், வழிபட்டவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டி விட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந்தனியாகக் கூட்டுப்படைகளைத் தோற்கடித்து விட்டான்.202


அத்தியாயம் : 56
3085. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَقْفَلَهُ مِنْ عُسْفَانَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ، وَقَدْ أَرْدَفَ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، فَعَثَرَتْ نَاقَتُهُ فَصُرِعَا جَمِيعًا، فَاقْتَحَمَ أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ "" عَلَيْكَ الْمَرْأَةَ "". فَقَلَبَ ثَوْبًا عَلَى وَجْهِهِ وَأَتَاهَا، فَأَلْقَاهَا عَلَيْهَا وَأَصْلَحَ لَهُمَا مَرْكَبَهُمَا فَرَكِبَا، وَاكْتَنَفْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَلَمَّا أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ قَالَ "" آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ "". فَلَمْ يَزَلْ يَقُولُ ذَلِكَ حَتَّى دَخَلَ الْمَدِينَةَ.
பாடம் : 197 அறப்போரிலிருந்து திரும்புகையில் சொல்ல வேண்டியது
3085. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யிஉஸ்ஃபானி’லிருந்து (போர் முடிந்து) திரும்பியபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது ஒட்டகம் கால் சறுக்கிவிட அவர்களிருவரும் ஒருசேரக் கீழே விழுந்தார்கள்.

உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) கீழே குதித்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(முதலில்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனிப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் ஒரு துணியைத் தமது முகத்தின் மீது போட்டு மூடிக்கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்று அவர்கள்மீது அந்தத் துணியைப் போட்டார்கள்.

பிறகு இருவருக்கும் அவர்களின் வாகனத்தைச் சீராக்கிக்கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறிக்கொண்டார்கள். நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டோம்.

நாங்கள் மதீனாவை நெருங்கியவுடன் நபி (ஸல்) அவர்கள், ‘‘பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வழிபட்டவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும்வரை அவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந் தார்கள்.


அத்தியாயம் : 56