3026. وَقَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا "".
பாடம் : 156 எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள்.
3026. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எதிரிகளை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்துவிடாமல் பொறுமையாக இருங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
3027. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" هَلَكَ كِسْرَى ثُمَّ لاَ يَكُونُ كِسْرَى بَعْدَهُ، وَقَيْصَرٌ لَيَهْلِكَنَّ ثُمَّ لاَ يَكُونُ قَيْصَرٌ بَعْدَهُ، وَلَتُقْسَمَنَّ كُنُوزُهَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 157 போர் என்பது சூழ்ச்சியாகும்137
3027. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு கிஸ்ரா (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். (தற்போதைய கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் நிச்சயம் அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு சீசர் (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். அவ்விருவரின் கருவூலங்களும் இறை வழியில் (போரிடுவோரிடையே) பங்கிடப் பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
3028. وَسَمَّى الْحَرْبَ خَدْعَةً
பாடம் : 157 போர் என்பது சூழ்ச்சியாகும்137
3028. (தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:)

மேலும், நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 56
3029. حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَصْرَمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْحَرْبَ خُدْعَةً.
பாடம் : 157 போர் என்பது சூழ்ச்சியாகும்137
3029. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 56
3030. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْحَرْبُ خُدْعَةٌ "".
பாடம் : 157 போர் என்பது சூழ்ச்சியாகும்137
3030. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
3032. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ "". فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ قَالَ "" نَعَمْ "". قَالَ فَأْذَنْ لِي فَأَقُولَ. قَالَ "" قَدْ فَعَلْتُ "".
பாடம் : 158 போரில் பொய் சொல்வது .3031 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயி ருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக் கும் தொல்லை கொடுத்துவிட்டான்”என்று கேட்டார்கள்.138 அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் அவனைக் கொல்வதைத் தாங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, ‘‘இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தர்மம் (செய்யும்படி) கேட்டார்” என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் பின் அல்அஷ்ரஃப், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்பதைப் பார்க்காமல் அவரை விட்டுவிட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) சொன் னார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்த வுடன் அவனைக் கொன்றுவிட்டார் கள்.139 பாடம் : 159 எதிர்பாராத வகையில் பகை நாட்டவர்மீது தாக்குதல்
3032. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவது யார்?” என்று கேட்டார்கள். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் அவனைக் கொல்வதைத் தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘‘அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ‘‘அவ்வாறே செய்தேன்” என்று பதிலளித்தார்கள்.140

அத்தியாயம் : 56
3033. قَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ أُبَىُّ بْنُ كَعْبٍ قِبَلَ ابْنِ صَيَّادٍ، فَحُدِّثَ بِهِ فِي نَخْلٍ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ، طَفِقَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَابْنُ صَيَّادٍ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا صَافِ، هَذَا مُحَمَّدٌ، فَوَثَبَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ تَرَكَتْهُ بَيَّنَ "".
பாடம் : 160 யாருடைய தீங்கு குறித்து அஞ்சப்படுமோ அவரிடம் தந்திரமாகவும் எச்சரிக்கையாகவும் நடப்பது செல்லும்.
3033. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இருக்க, (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத் தில் அவனிடம் நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள்.

இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவ னாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத்!” என்று அவள் கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படை யாகப் பேசியிருப்பான்” என்று சொன்னார்கள்.141

அத்தியாயம் : 56
3034. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ الْخَنْدَقِ وَهُوَ يَنْقُلُ التُّرَابَ حَتَّى وَارَى التُّرَابُ شَعَرَ صَدْرِهِ، وَكَانَ رَجُلاً كَثِيرَ الشَّعَرِ وَهْوَ يَرْتَجِزُ بِرَجَزِ عَبْدِ اللَّهِ اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا إِنَّ الأَعْدَاءَ قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا يَرْفَعُ بِهَا صَوْتَهُ.
பாடம் : 161 போரில் ஈரசைச்சீர் (ரஜ்ஸ்) பாடல் பாடுவதும் அகழ் தோண்டுகையில் குரலெடுத்துப் பாடுவதும் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்களும் அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.142 அவ்வாறே, இது தொடர்பாக சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களுடைய முன்னாள் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143
3034. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது பார்த்தேன். அப்போது அவர்கள் (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த மண், அவர்களுடைய மார்பின் முடியை மறைத்துவிட்டிருந்தது லிமேலும், நபி (ஸல்) அவர்கள் அதிகமான முடி யுடையவர்களாக இருந்தார்கள்லி அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் (பின் வரும்) ஈரசைச்சீர் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:

இறைவா!நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம்.

எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக!

எதிரிகள்எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்!

இதை நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக்கொண்டிருந்தார்கள்.144

அத்தியாயம் : 56
3035. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي.
பாடம் : 162 குதிரையின் மீது சரியாக அமர முடியாதவர்
3035. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தமது வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர (வேறு முறையில்) அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.


அத்தியாயம் : 56
3036. وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ. فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ".
பாடம் : 162 குதிரையின் மீது சரியாக அமர முடியாதவர்
3036. ‘‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தமது கரத்தால் அடித்து, ‘‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.145

அத்தியாயம் : 56
3037. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، قَالَ سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ ـ رضى الله عنه ـ بِأَىِّ شَىْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا بَقِيَ مِنَ النَّاسِ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَ عَلِيٌّ يَجِيءُ بِالْمَاءِ فِي تُرْسِهِ، وَكَانَتْ ـ يَعْنِي فَاطِمَةَ ـ تَغْسِلُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، ثُمَّ حُشِيَ بِهِ جُرْحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 163 பாயைக் கரித்து (அதன் சாம்பலால்) காயத்திற்குச் சிகிச்சை அளித்தல் ஒரு பெண் தன் தந்தையின் முகத்திலிருந்து (வழியும்) இரத்தத்தைக் கழுவுவதும், (அதற்காகக்) கேடயத்தில் தண்ணீர் சுமந்து செல்வதும்
3037. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுத் போரில்) ஏற்பட்ட காயத்திற்கு எதனால் சிகிச்சையளிக்கப்பட்டது?” என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘அதைப் பற்றி என்னைவிட அதிகமாக அறிந்தவர்கள் எவரும் (தற்போது) மக்களில் எஞ்சியிருக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத் தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். (இறுதி யில் ஈச்சம்) பாய் ஒன்று எடுத்துவரப்பட்டு, கரிக்கப்பட்டது. அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 56
3038. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى الْيَمَنِ قَالَ "" يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا "".
பாடம் : 164 போரில் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவு செய்வது வெறுக்கத் தக்கது என்பதும், தலைவருக்கு மாறு செய்பவருக்குக் கிடைக்கும் தண் டனையும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் தைரியமிழந்துவிடுவீர்கள்; உங்களது வலிமை போய்விடும். (8:46) இங்கே யிவலிமை’ என்பது போர் வலிமையைக் குறிக்கிறது என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
3038. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தபோது (எங்கள்) இருவரிடமும், ‘‘நீங்கள் (மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள். (மக்களுக்கு) நற்செய்தி கூறுங்கள்; வெறுப்பூட்டிவிடாதீர்கள். ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுங்கள்; (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக்கொள்ளாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.


அத்தியாயம் : 56
3039. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ قَالَ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ ـ وَكَانُوا خَمْسِينَ رَجُلاً ـ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ فَقَالَ "" إِنْ رَأَيْتُمُونَا تَخْطَفُنَا الطَّيْرُ، فَلاَ تَبْرَحُوا مَكَانَكُمْ هَذَا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ، وَإِنْ رَأَيْتُمُونَا هَزَمْنَا الْقَوْمَ وَأَوْطَأْنَاهُمْ فَلاَ تَبْرَحُوا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ "" فَهَزَمُوهُمْ. قَالَ فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ قَدْ بَدَتْ خَلاَخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ رَافِعَاتٍ ثِيَابَهُنَّ، فَقَالَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ بْنِ جُبَيْرٍ الْغَنِيمَةَ ـ أَىْ قَوْمِ ـ الْغَنِيمَةَ، ظَهَرَ أَصْحَابُكُمْ فَمَا تَنْتَظِرُونَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جُبَيْرٍ أَنَسِيتُمْ مَا قَالَ لَكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالُوا وَاللَّهِ لَنَأْتِيَنَّ النَّاسَ فَلَنُصِيبَنَّ مِنَ الْغَنِيمَةِ. فَلَمَّا أَتَوْهُمْ صُرِفَتْ وُجُوهُهُمْ فَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ، فَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرُ اثْنَىْ عَشَرَ رَجُلاً، فَأَصَابُوا مِنَّا سَبْعِينَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ أَصَابَ مِنَ الْمُشْرِكِينَ يَوْمَ بَدْرٍ أَرْبَعِينَ وَمِائَةً سَبْعِينَ أَسِيرًا وَسَبْعِينَ قَتِيلاً، فَقَالَ أَبُو سُفْيَانَ أَفِي الْقَوْمِ مُحَمَّدٌ ثَلاَثَ مَرَّاتٍ، فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُجِيبُوهُ ثُمَّ قَالَ أَفِي الْقَوْمِ ابْنُ أَبِي قُحَافَةَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ أَفِي الْقَوْمِ ابْنُ الْخَطَّابِ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ رَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ أَمَّا هَؤُلاَءِ فَقَدْ قُتِلُوا. فَمَا مَلَكَ عُمَرُ نَفْسَهُ فَقَالَ كَذَبْتَ وَاللَّهِ يَا عَدُوَّ اللَّهِ، إِنَّ الَّذِينَ عَدَدْتَ لأَحْيَاءٌ كُلُّهُمْ، وَقَدْ بَقِيَ لَكَ مَا يَسُوؤُكَ. قَالَ يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ، وَالْحَرْبُ سِجَالٌ، إِنَّكُمْ سَتَجِدُونَ فِي الْقَوْمِ مُثْلَةً لَمْ آمُرْ بِهَا وَلَمْ تَسُؤْنِي، ثُمَّ أَخَذَ يَرْتَجِزُ أُعْلُ هُبَلْ، أُعْلُ هُبَلْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَ تُجِيبُوا لَهُ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ قَالَ "" قُولُوا اللَّهُ أَعْلَى وَأَجَلُّ "". قَالَ إِنَّ لَنَا الْعُزَّى وَلاَ عُزَّى لَكُمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَ تُجِيبُوا لَهُ "". قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ قَالَ "" قُولُوا اللَّهُ مَوْلاَنَا وَلاَ مَوْلَى لَكُمْ "".
பாடம் : 164 போரில் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவு செய்வது வெறுக்கத் தக்கது என்பதும், தலைவருக்கு மாறு செய்பவருக்குக் கிடைக்கும் தண் டனையும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் தைரியமிழந்துவிடுவீர்கள்; உங்களது வலிமை போய்விடும். (8:46) இங்கே யிவலிமை’ என்பது போர் வலிமையைக் குறிக்கிறது என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
3039. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். அவர்களிடம், ‘‘(நாங்கள் போரில் கொல்லப் பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால்கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும்வரை உங்களின் இந்த இடத்தைவிட்டு நகராதீர் கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க்களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துக்கொண்டு செல்வதை நீங்கள் பார்த்தாலும்கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும்வரை உங்களின் இடத்தைவிட்டு நகராதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்கள் எதிரிகளைத் தோற்கடித்து விட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்திய வர்களாக, தம் கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய (மலையில்) ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களின் சகாக்கள், ‘‘போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இன்னும் எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று (உரக்கக்) கூறலாயினர்.

(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட்களை எடுத்துக்கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்றபோது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத் திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்றுவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அவர் களைப் போர்க் களத்திற்குத் திரும்பி வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துக்கொண்டிருந்தபோது இது நடந்தது.

அப்போது, நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை. எதிரிகள் எங்களில் எழுபது பேரைக் கொன்றுவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் பத்ர் போரின்போது இணை வைப்பாளர்களில் (மொத்தம்) நூற்று நாற்பது பேரை பாதிப்புக்குள்ளாக்கிவிட்டி ருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்றுவிட்டிருந்தார்கள்.

ஆகவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூசுஃப்யான் (களத்தில் இறங்கி), ‘‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மத் இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். அவருக்குப் பதிலளிக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும், ‘‘(உங்கள்) கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். பிறகு, ‘‘கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார்.

பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, ‘‘இவர்களெல்லாரும் கொல்லப்பட்டு விட்டனர்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், ‘‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்குத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி)தான் இப்போது எஞ்சியுள்ளது” என்று சொன்னார்கள்.

(உடனே) அபூசுஃப்யான், ‘‘இந்நாள், பத்ர் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போர் (வெற்றியும் தோல்வியும் மாறி மாறிவரும்) கிணற்று வாளியாகும். (உங்கள்) கூட்டத்தாரில் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு வருத்தமளிக்கவும் இல்லை” என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘‘ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது” என்று கவிதை பாடலானார்.146

நபி (ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), ‘‘ இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன் என்று சொல்லுங்கள்” என்றார்கள்.

அபூசுஃப்யான், ‘‘எங்களுக்கு யிஉஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘இவருக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியோர்) உதவியாளன் இல்லையே! என்று சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்கள்.147

அத்தியாயம் : 56
3040. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ، وَأَجْوَدَ النَّاسِ، وَأَشْجَعَ النَّاسِ، قَالَ وَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً سَمِعُوا صَوْتًا، قَالَ فَتَلَقَّاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ، وَهُوَ مُتَقَلِّدٌ سَيْفَهُ فَقَالَ "" لَمْ تُرَاعُوا، لَمْ تُرَاعُوا "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَجَدْتُهُ بَحْرًا "". يَعْنِي الْفَرَسَ.
பாடம் : 165 இரவில் மக்கள் பீதியடைந்தால்...
3040. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே சிறந்த (நற்)குணமுடையவர் களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் உடையவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந் தார்கள்.

(ஒருமுறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவ தாகக் கேள்விப்பட்டுப்) பீதியடைந்தார்கள்; ஏதோ சப்தத்தையும் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வாளைத் தொங்கவிட்டவர்களாக, அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டாத குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் மக்களை எதிர் கொண்டார்கள்.

அப்போது, ‘யிபயப்படாதீர்கள். பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘‘தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அத்தியாயம் : 56
3041. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، أَنَّهُ أَخْبَرَهُ قَالَ خَرَجْتُ مِنَ الْمَدِينَةِ ذَاهِبًا نَحْوَ الْغَابَةِ، حَتَّى إِذَا كُنْتُ بِثَنِيَّةِ الْغَابَةِ لَقِيَنِي غُلاَمٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قُلْتُ وَيْحَكَ، مَا بِكَ قَالَ أُخِذَتْ لِقَاحُ النَّبِيِّ صلى الله عليه وسلم. قُلْتُ مَنْ أَخَذَهَا قَالَ غَطَفَانُ وَفَزَارَةُ. فَصَرَخْتُ ثَلاَثَ صَرَخَاتٍ أَسْمَعْتُ مَا بَيْنَ لاَبَتَيْهَا يَا صَبَاحَاهْ، يَا صَبَاحَاهْ. ثُمَّ انْدَفَعْتُ حَتَّى أَلْقَاهُمْ وَقَدْ أَخَذُوهَا، فَجَعَلْتُ أَرْمِيهِمْ وَأَقُولُ أَنَا ابْنُ الأَكْوَعِ، وَالْيَوْمُ يَوْمُ الرُّضَّعِ، فَاسْتَنْقَذْتُهَا مِنْهُمْ قَبْلَ أَنْ يَشْرَبُوا، فَأَقْبَلْتُ بِهَا أَسُوقُهَا، فَلَقِيَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْقَوْمَ عِطَاشٌ، وَإِنِّي أَعْجَلْتُهُمْ أَنْ يَشْرَبُوا سِقْيَهُمْ، فَابْعَثْ فِي إِثْرِهِمْ، فَقَالَ "" يَا ابْنَ الأَكْوَعِ، مَلَكْتَ فَأَسْجِحْ. إِنَّ الْقَوْمَ يُقْرَوْنَ فِي قَوْمِهِمْ "".
பாடம் : 166 எதிரியைக் கண்டவர், யியா ஸபாஹா!' (உதவி! உதவி! இதோ, அதிகாலை ஆபத்து!) என்று மக்களின் காதில் விழுமாறு உரக்கக் குரலெழுப்பி அழைப்பது
3041. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவிலிருந்து ‘அல்ஃகாபா’வை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன்.148 நான் அல்ஃகாபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய அடிமையொருவர் என்னைச் சந்தித்தார். நான், ‘‘உனக்குக் கேடுதான்! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவர், ‘‘நபி (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்ட”’ என்று கூறினார். நான், ‘‘அவற்றை யார் பிடித்துச் சென்றது?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்” என்று பதிலளித்தார்.

உடனே நான் மதீனாவின் இரு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக் கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு, யிஉதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)› என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர். அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன்.

‘‘அக்வஇன் மகன் நான்இன்று அற்பர்கள் (அழியும்) நாள்”

என்று (பாடியபடி) கூறினேன்.

பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்துவிட்டேன். பிறகு திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள் என் னைச் சந்தித்தார்கள். நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர்கூட அருந்தவிடாமல் அவர்களை நான் (அம் பெய்து) அவசரமாக ஓடவைத்துவிட்டேன். உடனே அவர்களைத் துரத்திச் சென்று பிடித்துவரப் படையனுப்புங்கள்” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஇன் மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்து கொள்! அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்துவிட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.149

அத்தியாயம் : 56
3042. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلَ رَجُلٌ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ فَقَالَ يَا أَبَا عُمَارَةَ، أَوَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ الْبَرَاءُ وَأَنَا أَسْمَعُ أَمَّا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يُوَلِّ يَوْمَئِذٍ، كَانَ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذًا بِعِنَانِ بَغْلَتِهِ، فَلَمَّا غَشِيَهُ الْمُشْرِكُونَ نَزَلَ، فَجَعَلَ يَقُولُ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ قَالَ فَمَا رُئِيَ مِنَ النَّاسِ يَوْمَئِذٍ أَشَدُّ مِنْهُ.
பாடம் : 167 (எதிரியின் மீது அம்பெய்தபடி) ‘‘இதை வாங்கிக்கொள். நான் இன் னாரின் மகன்” என்று கூறுவது சலமா பின் அல்அக்வஉ (ரலி) கூறி னார்கள்: இதை வாங்கிக்கொள்க! நான் அக்வஉ உடைய மகன்.150
3042. அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். நான் கேட்டுக்கொண்டிருக்க, பராஉ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பொறுத்த வரை அவர்கள் அன்று பின்வாங்கிச் செல்லவில்லை. அபூ சுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது, அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, யிநான் இறைத்தூதர்தான். (இதில்) பொய் யில்லை. நான் அப்துல் முத்தலிபின் மகன்’ என்று (பாடியபடி) கூறினார்கள். அன்று நபி (ஸல்) அவர்களைவிடத் துணிச்சல் மிகுந்த எவரும் மக்களிடையே காணப்படவில்லை” என்று கூறினார்கள்.151

அத்தியாயம் : 56
3043. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ ـ هُوَ ابْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ ـ هُوَ ابْنُ مُعَاذٍ ـ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ قَرِيبًا مِنْهُ، فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُومُوا إِلَى سَيِّدِكُمْ "". فَجَاءَ فَجَلَسَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ "" إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ "". قَالَ فَإِنِّي أَحْكُمُ أَنْ تُقْتَلَ الْمُقَاتِلَةُ، وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ. قَالَ "" لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ الْمَلِكِ "".
பாடம் : 168 எதிரிகள் (முஸ்லிம்) ஒருவரது தீர்ப்பை ஏற்கச் சம்மதித்தால்...
3043. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும் படி ஆளனுப்பினார்கள். லிசஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்தான் (அகழ்ப் போரில் காயமடைந்து) இருந்தார்கள்லி அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள்” என்று (அன்சாரிகளிடம்) கூறினார்கள்.

சஅத் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நான் அவர்களில் உள்ள போர் வீரர்களைக் கொன்றுவிட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தை களையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக் கின்றேன்” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்கள் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்” என்றார்கள்.152

அத்தியாயம் : 56
3044. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ، فَقَالَ "" اقْتُلُوهُ "".
பாடம் : 169 சிறைக் கைதியைக் கட்டிப்போட் டுக் கொலை செய்வது
3044. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா நகரம்) வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில், தலையில் இரும்புத் தொப்பி அணிந்துகொண்டு (மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, ‘‘இப்னு கத்தல் என்பவன் (அபயம் தேடியவனாக) கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றான்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட் டார்கள்.153

அத்தியாயம் : 56
3045. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ ـ وَهْوَ حَلِيفٌ لِبَنِي زُهْرَةَ وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ ـ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشَرَةَ رَهْطٍ سَرِيَّةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ جَدَّ عَاصِمِ بْنِ عُمَرَ، فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا بِالْهَدَأَةِ وَهْوَ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ ذُكِرُوا لِحَىٍّ مِنْ هُذَيْلٍ يُقَالُ لَهُمْ بَنُو لِحْيَانَ، فَنَفَرُوا لَهُمْ قَرِيبًا مِنْ مِائَتَىْ رَجُلٍ، كُلُّهُمْ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى وَجَدُوا مَأْكَلَهُمْ تَمْرًا تَزَوَّدُوهُ مِنَ الْمَدِينَةِ فَقَالُوا هَذَا تَمْرُ يَثْرِبَ. فَاقْتَصُّوا آثَارَهُمْ، فَلَمَّا رَآهُمْ عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى فَدْفَدٍ، وَأَحَاطَ بِهِمُ الْقَوْمُ فَقَالُوا لَهُمُ انْزِلُوا وَأَعْطُونَا بِأَيْدِيكُمْ، وَلَكُمُ الْعَهْدُ وَالْمِيثَاقُ، وَلاَ نَقْتُلُ مِنْكُمْ أَحَدًا. قَالَ عَاصِمُ بْنُ ثَابِتٍ أَمِيرُ السَّرِيَّةِ أَمَّا أَنَا فَوَاللَّهِ لاَ أَنْزِلُ الْيَوْمَ فِي ذِمَّةِ كَافِرٍ، اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ. فَرَمَوْهُمْ بِالنَّبْلِ، فَقَتَلُوا عَاصِمًا فِي سَبْعَةٍ، فَنَزَلَ إِلَيْهِمْ ثَلاَثَةُ رَهْطٍ بِالْعَهْدِ وَالْمِيثَاقِ، مِنْهُمْ خُبَيْبٌ الأَنْصَارِيُّ وَابْنُ دَثِنَةَ وَرَجُلٌ آخَرُ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ أَطْلَقُوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَأَوْثَقُوهُمْ فَقَالَ الرَّجُلُ الثَّالِثُ هَذَا أَوَّلُ الْغَدْرِ، وَاللَّهِ لاَ أَصْحَبُكُمْ، إِنَّ فِي هَؤُلاَءِ لأُسْوَةً. يُرِيدُ الْقَتْلَى، فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ عَلَى أَنْ يَصْحَبَهُمْ فَأَبَى فَقَتَلُوهُ، فَانْطَلَقُوا بِخُبَيْبٍ وَابْنِ دَثِنَةَ حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ بَعْدَ وَقْعَةِ بَدْرٍ، فَابْتَاعَ خُبَيْبًا بَنُو الْحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ مَنَافٍ، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الْحَارِثَ بْنَ عَامِرٍ يَوْمَ بَدْرٍ، فَلَبِثَ خُبَيْبٌ عِنْدَهُمْ أَسِيرًا، فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِيَاضٍ أَنَّ بِنْتَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ بِهَا فَأَعَارَتْهُ، فَأَخَذَ ابْنًا لِي وَأَنَا غَافِلَةٌ حِينَ أَتَاهُ قَالَتْ فَوَجَدْتُهُ مُجْلِسَهُ عَلَى فَخِذِهِ وَالْمُوسَى بِيَدِهِ، فَفَزِعْتُ فَزْعَةً عَرَفَهَا خُبَيْبٌ فِي وَجْهِي فَقَالَ تَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ مَا كُنْتُ لأَفْعَلَ ذَلِكَ. وَاللَّهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، وَاللَّهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ مِنْ قِطْفِ عِنَبٍ فِي يَدِهِ، وَإِنَّهُ لَمُوثَقٌ فِي الْحَدِيدِ، وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرٍ وَكَانَتْ تَقُولُ إِنَّهُ لَرِزْقٌ مِنَ اللَّهِ رَزَقَهُ خُبَيْبًا، فَلَمَّا خَرَجُوا مِنَ الْحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الْحِلِّ، قَالَ لَهُمْ خُبَيْبٌ ذَرُونِي أَرْكَعْ رَكْعَتَيْنِ. فَتَرَكُوهُ، فَرَكَعَ رَكْعَتَيْنِ ثُمَّ قَالَ لَوْلاَ أَنْ تَظُنُّوا أَنَّ مَا بِي جَزَعٌ لَطَوَّلْتُهَا اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا. وَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا عَلَى أَىِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ فَقَتَلَهُ ابْنُ الْحَارِثِ، فَكَانَ خُبَيْبٌ هُوَ سَنَّ الرَّكْعَتَيْنِ لِكُلِّ امْرِئٍ مُسْلِمٍ قُتِلَ صَبْرًا، فَاسْتَجَابَ اللَّهُ لِعَاصِمِ بْنِ ثَابِتٍ يَوْمَ أُصِيبَ، فَأَخْبَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصْحَابَهُ خَبَرَهُمْ وَمَا أُصِيبُوا، وَبَعَثَ نَاسٌ مِنْ كُفَّارِ قُرَيْشٍ إِلَى عَاصِمٍ حِينَ حُدِّثُوا أَنَّهُ قُتِلَ لِيُؤْتَوْا بِشَىْءٍ مِنْهُ يُعْرَفُ، وَكَانَ قَدْ قَتَلَ رَجُلاً مِنْ عُظَمَائِهِمْ يَوْمَ بَدْرٍ، فَبُعِثَ عَلَى عَاصِمٍ مِثْلُ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رَسُولِهِمْ، فَلَمْ يَقْدِرُوا عَلَى أَنْ يَقْطَعَ مِنْ لَحْمِهِ شَيْئًا.
பாடம் : 170 ஒருவர் தம்மைக் கைது செய்யும்படி எதிரியிடம் சரணடையலாமா? அவ்வாறு சரணடைய விரும்பாத வரும், எதிரிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு யிரக்அத்கள்’ தொழுதவரும்
3045. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவினரை உளவுப் படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்களைத் தலைவராக்கி னார்கள்.154

அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள யிஹத்ஆ’ எனுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் எனப்படும் ஒரு கிளை’னருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளை ‘னர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்யும் வீரர்கள் சுமார் இருநூறு வீரர்களைத் தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். (வழியில்) உளவுப் படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களை உண்ட இடத்தில் அவற்றைக் கண்டனர்.

அப்போது ‘‘இது யஸ்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம்பழம்” என்று கூறினர். எனவே, அவர்கள் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம் (ரலி) அவர்களும் அவர்களுடைய சகாக்களும் கண்டபோது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றுகொண்டனர்.

அவர்களை பனூ லிஹ்யான் குலத்தார் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், ‘‘நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்துவிடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்” என்று கூறினார்கள்.

உளவுப் படையின் தலைவரான ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஓர் இறைமறுப்பாளனின் (வாக்குறு தியை நம்பி அவனது) பொறுப்பில் இறங்கிச் செல்லமாட்டேன்” என்று கூறி விட்டு, ‘‘இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று பிரார்த்தித்தார்கள்.

அவர்கள்மீது எதிரிகள் அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்று விட்டனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளின் உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கினார்கள். அவர்கள் அன்சாரியான குபைப் (ரலி) அவர்களும், இப்னு தஸினா (ரலி) அவர்களும் மற்றுமொருவரும் ஆவர்.155

இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் இறைமறுப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர், ‘‘இது முதலாவது நம்பிக்கை துரோகம். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு (நல்ல) ஒரு பாடமாக அமைந்துள்ளனர்” என்று (எதிரிகளிடம்) கூறினார். உடனே அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி கட்டாயப்படுத்தினர். அதற்கு அவர் மறுத்துவிடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் (ரலி) அவர்களையும் இப்னு தஸினா (ரலி) அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர்.

இது பத்ர் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் விலைக்கு வாங்கினர். (அந்தக் குலத்தின் தலைவர்) ஹாரிஸ் பின் ஆமிர் என்பவரை குபைப் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொன்று விட்டிருந்தார்கள். ஆகவே, (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதம் கழியும்வரை) கைதியாக இருந்தார்கள்.

உபைதுல்லாஹ் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஹாரிஸ் பின் ஆமிரின் மகள் என்னி டம் கூறினார்:156

குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்றுகூடியபோது, குபைப் (மறைவான உறுப்புகளிலிருந்த) முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக்கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என் குழந்தை ஒருவனை அவர் கையிலெடுத்துக்கொண்டார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக்கத்தி இருக்க, தமது மடியின் மீது அவனை உட்காரவைத்திருப்பதை நான் கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந் தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்துகொண்டார். உடனே, ‘‘நான் இவனைக் கொன்றுவிடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒருநாள் தமது கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார். மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை.

லிமேலும், ஹாரிஸின் மகள், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உண வாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான்” என்று கூறி வந்தார்லி (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.)

(தொடர்ந்து அறிவிப்பாளர் கூறு கிறார்:)

அவர்கள் குபைப் (ரலி) அவர்களைக் கொல்வதற்காக புனித ஹரம் எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள், ‘‘என்னை இரண்டு ரக்அத்கள் தொழ விடுங்கள்” என்று கேட்டார்கள். (தொழுது முடித்த)பிறகு, ‘‘நான் (மரணத்தைக் கண்டு) அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்” என்று கூறிவிட்டு, ‘‘இறைவா! இவர்களை எண்ணி வைத்துக்கொண்டு (ஒருவர் விடாமல்) பழிவாங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

நான்முஸ்லிமாகக் கொல்லப்படுகையில்எதைப் பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லைஎந்த இடத்தில்நான் இறந்தாலும்இறைவனுக்காககொல்லப்படுகிறேன் (என்பதில் மகிழ்ச்சியே!)

நான் கொல்லப்படுவதுஇறையன்புக்காக எனும்போது,அவன் நாடினால்துண்டிக்கப்பட்டஎன் உறுப்புகளின்இணைப்புகள்மீதுகூடவளம் வழங்குவான்.

என்று கவி பாடினார்கள்.

பின்னர், குபைப் (ரலி) அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து கட்டிவைத்துக் கொல்லப் படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும், கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத் கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு (அவர்களின் நிலை குறித்து தன் தூதருக்குத் தெரிவித்து) விட்டான். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்கு நேர்ந்த கதியையும் தெரிவித்தார்கள்.

குறைஷி இறைமறுப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப் பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று) அவரை அடையாளம் தெரிந்துகொள்ள அவரது அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும்படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில், ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ர் போரின்போது குறைஷி தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள்.

(ஆஸிம் அவர்களின் உடலில் ஓர் உறுப்பைத் துண்டிக்க எதிரிகள் முற்பட்ட போது) ஆஸிம் (ரலி) அவர்களுக்கு (பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும்படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷித் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. ஆகவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.157

அத்தியாயம் : 56