2207. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمُحَاقَلَةِ، وَالْمُخَاضَرَةِ، وَالْمُلاَمَسَةِ، وَالْمُنَابَذَةِ، وَالْمُزَابَنَةِ.
பாடம் : 93 யிமுகாளரா' (பக்குவமடையாத காய்கனிகளை விற்கும்) வணிகம்
2207. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘முஹாகலா, முகாளரா, முலாமசா, முனாபதா, முஸாபனா ஆகிய வணிக முறைகளுக்குத் தடை விதித்தார்கள்.74

அத்தியாயம் : 34
2208. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ التَّمْرِ حَتَّى تَزْهُوَ. فَقُلْنَا لأَنَسٍ مَا زَهْوُهَا قَالَ تَحْمَرُّ وَتَصْفَرُّ، أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ
பாடம் : 93 யிமுகாளரா' (பக்குவமடையாத காய்கனிகளை விற்கும்) வணிகம்
2208. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரத்தி லுள்ள கனிகள் பக்குவமடைவதற்குமுன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘பக்குவமடைதல் என்றால் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்” என்று பதிலளித் தார்கள்.

மேலும், ‘‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட தாக) கருதுவீர்” என்றும் கேட்டார்கள்.

அத்தியாயம் : 34
2209. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يَأْكُلُ جُمَّارًا، فَقَالَ "" مِنَ الشَّجَرِ شَجَرَةٌ كَالرَّجُلِ الْمُؤْمِنِ "". فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ. فَإِذَا أَنَا أَحْدَثُهُمْ قَالَ "" هِيَ النَّخْلَةُ "".
பாடம் : 94 பேரீச்சம் பாளையின் குருத்தை விற்பதும் உண்பதும்
2209. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சங் குருத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களின் அருகில் நான் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மரங்களில் ஒரு மரமிருக்கிறது; அது இறை நம்பிக்கை உள்ள மனிதருக்கு உவமையாகும்” என்றார்கள். நான் ‘‘அது பேரீச்ச மரம்தான்” என்று சொல்ல நினைத் தேன். அப்போது அங்கிருந்தவர்களி லேயே நான் வயதில் இளையவனாக இருந்தேன். (ஆதலால் நான் எதுவும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 34
2210. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ حَجَمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَبُو طَيْبَةَ، فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصَاعٍ مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ.
பாடம் : 95 வணிகம், வாடகை, முகத்தலளவை, நிறுத்தலளவை ஆகியவற்றில் மக்களின் வட்டார வழக்கப்படியும் அவர்களின் எண்ணம் மற்றும் பிரபலமான நடைமுறைகளின்படியும் நகரங்களில் செயல் படுத்துதல்75 ‘‘உங்கள் வழக்கப்படி உங்கள் மத்தியில் (பிரச்சனைகளைத்) தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று (பருத்தி)நூல் வணிகர்களிடம் (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பத்துக்கு வாங்கிய பொருளை பதினொன்றுக்கு விற்பதில் தவறில்லை; செலவிட்டதற்காக இலாபத்தை அடைந்து கொள்ளலாம்.76 நபி (ஸல்) அவர்கள் அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார் ஹின்த் (ரலி) அவர்களிடம், ‘‘உனக்கும் உன் குழந்தைகளுக்கும் போதுமானதை நியாய மான முறையில் (அதாவது வழக்கப்படி) உன் கணவரிடமிருந்து எடுத்துக்கொள்” என்று கூறினார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (அநாதைகளைப் பராமரிப்போரில்) ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமாக (வழக்கப்படி) உண்ணட்டும்! (4:6) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மிர்தாஸிடமிருந்து, ஒரு கழுதையை வாடகைக்கு வாங்கினார்கள்; ‘‘கழுதைக்குரிய வாடகை எவ்வளவு?” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கேட்டபோது, அப்துல்லாஹ் பின் மிர்தாஸ் ‘ஒரு திர்ஹத்தில் மூன்றில் ஒரு பாகம்’ என்றார். ஹசன் (ரஹ்) அவர்கள் (ஒப்புக்கொண்டு) வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். பிறகு மற்றொரு முறை ஹசன் (ரஹ்) அவர்கள் வந்து, கழுதை வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது வாடகை பேசாமல் (முன்பு பேசிய பழக்கத்தில்) அதில் ஏறிச் சென்றார்கள். பின்னர் (சற்று கூடுதலாக) அரை திர்ஹத்தை அவருக்கு வாடகையாகக் கொடுத்து அனுப்பினார்கள்.
2210. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாயிருந்த) அபூதைபா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குருதி உறிஞ்சி எடுத்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்பழம் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும், அவருடைய உரிமையாளர்களிடம் அவர் செலுத்த வேண்டியுள்ள (அன்றாட) வரியைக் குறைக்குமாறும் கட்டளை யிட்டார்கள்.77

அத்தியாயம் : 34
2211. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ هِنْدٌ أُمُّ مُعَاوِيَةَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَهَلْ عَلَىَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ سِرًّا قَالَ "" خُذِي أَنْتِ وَبَنُوكِ مَا يَكْفِيكِ بِالْمَعْرُوفِ "".
பாடம் : 95 வணிகம், வாடகை, முகத்தலளவை, நிறுத்தலளவை ஆகியவற்றில் மக்களின் வட்டார வழக்கப்படியும் அவர்களின் எண்ணம் மற்றும் பிரபலமான நடைமுறைகளின்படியும் நகரங்களில் செயல் படுத்துதல்75 ‘‘உங்கள் வழக்கப்படி உங்கள் மத்தியில் (பிரச்சனைகளைத்) தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று (பருத்தி)நூல் வணிகர்களிடம் (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பத்துக்கு வாங்கிய பொருளை பதினொன்றுக்கு விற்பதில் தவறில்லை; செலவிட்டதற்காக இலாபத்தை அடைந்து கொள்ளலாம்.76 நபி (ஸல்) அவர்கள் அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார் ஹின்த் (ரலி) அவர்களிடம், ‘‘உனக்கும் உன் குழந்தைகளுக்கும் போதுமானதை நியாய மான முறையில் (அதாவது வழக்கப்படி) உன் கணவரிடமிருந்து எடுத்துக்கொள்” என்று கூறினார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (அநாதைகளைப் பராமரிப்போரில்) ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமாக (வழக்கப்படி) உண்ணட்டும்! (4:6) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மிர்தாஸிடமிருந்து, ஒரு கழுதையை வாடகைக்கு வாங்கினார்கள்; ‘‘கழுதைக்குரிய வாடகை எவ்வளவு?” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கேட்டபோது, அப்துல்லாஹ் பின் மிர்தாஸ் ‘ஒரு திர்ஹத்தில் மூன்றில் ஒரு பாகம்’ என்றார். ஹசன் (ரஹ்) அவர்கள் (ஒப்புக்கொண்டு) வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். பிறகு மற்றொரு முறை ஹசன் (ரஹ்) அவர்கள் வந்து, கழுதை வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது வாடகை பேசாமல் (முன்பு பேசிய பழக்கத்தில்) அதில் ஏறிச் சென்றார்கள். பின்னர் (சற்று கூடுதலாக) அரை திர்ஹத்தை அவருக்கு வாடகையாகக் கொடுத்து அனுப்பினார்கள்.
2211. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்களின் அன்னை ஹின்த் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சரான மனிதராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என்மீது அது குற்றமாகுமா?” எனக் கேட்டார்கள். அதற்கு, ‘‘உனக்குப் போது மானதை நியாயமான முறையில் (வழக்கத் திலுள்ள அளவு) நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக்கொள்ளுங்கள்!” என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித் தார்கள்.

அத்தியாயம் : 34
2212. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، أَخْبَرَنَا هِشَامٌ، وَحَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ فَرْقَدٍ، قَالَ سَمِعْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ {وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ} أُنْزِلَتْ فِي وَالِي الْيَتِيمِ الَّذِي يُقِيمُ عَلَيْهِ، وَيُصْلِحُ فِي مَالِهِ، إِنْ كَانَ فَقِيرًا أَكَلَ مِنْهُ بِالْمَعْرُوفِ.
பாடம் : 95 வணிகம், வாடகை, முகத்தலளவை, நிறுத்தலளவை ஆகியவற்றில் மக்களின் வட்டார வழக்கப்படியும் அவர்களின் எண்ணம் மற்றும் பிரபலமான நடைமுறைகளின்படியும் நகரங்களில் செயல் படுத்துதல்75 ‘‘உங்கள் வழக்கப்படி உங்கள் மத்தியில் (பிரச்சனைகளைத்) தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று (பருத்தி)நூல் வணிகர்களிடம் (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பத்துக்கு வாங்கிய பொருளை பதினொன்றுக்கு விற்பதில் தவறில்லை; செலவிட்டதற்காக இலாபத்தை அடைந்து கொள்ளலாம்.76 நபி (ஸல்) அவர்கள் அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார் ஹின்த் (ரலி) அவர்களிடம், ‘‘உனக்கும் உன் குழந்தைகளுக்கும் போதுமானதை நியாய மான முறையில் (அதாவது வழக்கப்படி) உன் கணவரிடமிருந்து எடுத்துக்கொள்” என்று கூறினார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (அநாதைகளைப் பராமரிப்போரில்) ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமாக (வழக்கப்படி) உண்ணட்டும்! (4:6) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மிர்தாஸிடமிருந்து, ஒரு கழுதையை வாடகைக்கு வாங்கினார்கள்; ‘‘கழுதைக்குரிய வாடகை எவ்வளவு?” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கேட்டபோது, அப்துல்லாஹ் பின் மிர்தாஸ் ‘ஒரு திர்ஹத்தில் மூன்றில் ஒரு பாகம்’ என்றார். ஹசன் (ரஹ்) அவர்கள் (ஒப்புக்கொண்டு) வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். பிறகு மற்றொரு முறை ஹசன் (ரஹ்) அவர்கள் வந்து, கழுதை வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது வாடகை பேசாமல் (முன்பு பேசிய பழக்கத்தில்) அதில் ஏறிச் சென்றார்கள். பின்னர் (சற்று கூடுதலாக) அரை திர்ஹத்தை அவருக்கு வாடகையாகக் கொடுத்து அனுப்பினார்கள்.
2212. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(அநாதைகளைப் பராமரிப்போரில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைத் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்” (4:6) என்ற இறைவசனம், அநாதைகளை நிர்வகித்து, அவர்களின் செல்வத்தைப் பராமரிக்கும் காப்பாளர்கள் தொடர்பாக அருளப்பட்டது. காப்பாளர் ஏழையாக இருந்தால் (வழக்கப் படி) நியாயமான முறையில் (தம் உழைப் பிற்குக் கூலியாக) அநாதைகளின் பொருளை உண்ணலாம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2213. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الشُّفْعَةَ فِي كُلِّ مَالٍ لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ.
பாடம் : 96 இருவருக்குக் கூட்டான சொத்தை இருவரில் ஒருவர் மற்றவருக்கு விற்றல்78
2213. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் விலைக்கோள் உரிமையை(ப் பங்காளிக்கு) ஏற்படுத்தினார்கள். (ஆனால்,) எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப் பட்டிருந்தால், (பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற) விலைக்கோள் உரிமை கிடையாது.

அத்தியாயம் : 34
2214. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالشُّفْعَةِ فِي كُلِّ مَالٍ لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، بِهَذَا وَقَالَ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ. تَابَعَهُ هِشَامٌ عَنْ مَعْمَرٍ. قَالَ عَبْدُ الرَّزَّاقِ فِي كُلِّ مَالٍ. رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 97 பிரிக்கப்படாத கூட்டு நிலம், வீடுகள், பொருட்கள் ஆகியவற்றை விற்றல்
2214. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், பிரிக்கப்படாத ஒவ்வொரு செல்வத்திலும் விலைக்கோள் உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப்பட்டிருந்தால், விலைக்கோள் உரிமை கிடையாது.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிபிரிக்கப்படாத ஒவ்வொன்றி லும்’ என்றும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிஒவ்வொரு பொருளிலும்’ என்றும் இடம்பெற் றுள்ளது.

அத்தியாயம் : 34
2215. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَرَجَ ثَلاَثَةٌ يَمْشُونَ فَأَصَابَهُمُ الْمَطَرُ، فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ. قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ. فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ، إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى، ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ، فَأَجِيءُ بِالْحِلاَبِ فَآتِي بِهِ أَبَوَىَّ فَيَشْرَبَانِ، ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي، فَاحْتَبَسْتُ لَيْلَةً. فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ ـ قَالَ ـ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَالصِّبِيْةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَىَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا، حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ. قَالَ فَفُرِجَ عَنْهُمْ. وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ، فَقَالَتْ لاَ تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ. فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ. فَقُمْتُ وَتَرَكْتُهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً، قَالَ فَفَرَجَ عَنْهُمُ الثُّلُثَيْنِ. وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ فَأَعْطَيْتُهُ، وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ، فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ، فَزَرَعْتُهُ حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي. فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا، فَإِنَّهَا لَكَ. فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي. قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ. اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا. فَكُشِفَ عَنْهُمْ "".
பாடம் : 98 ஒருவர் மற்றவருக்காக அவரது அனுமதியின்றி ஒரு பொருளை வாங்க, மற்றவர் அதை ஏற்றுக் கொண்டால்...?
2215. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள ஒரு குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகைவாசலை அடைத்துக்கொண்டது. அப்போது அவர்கள் தமக்குள், ‘‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றனர்.

அவர்களில் ஒருவர், ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டுவருவேன். அவர்கள் அருந்து வார்கள். பிறகுதான் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.

(இந்நிலையில்) ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்ப வில்லை. குழந்தைகள் (பால் கேட்டு) என் காலடியில் அழுது கூச்சலிட்டுக்கொண்டி ருந்தனர். வைகறைவரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது அன்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக! நாங்கள் அதன் வழியாக ஆகாயத்தைப் பார்த்துக் கொள்வோம்” என்று பிரார்த்தித்தார். அவ்வாறே பாறை (சற்று) நகர்ந்தது.

மற்றொருவர், ‘‘இறைவா! என் தந்தை யின் சகோதரருடைய புதல்வியரில் ஒருத்தியை, ஓர் ஆண் ஒரு பெண்ணை விரும்புவதைவிட ஆழமாக விரும்பினேன். தனக்கு நான் நூறு பொற்காசுகள் கொடுக்காத வரை அவளை நான் அடைய முடியாது என்று அவள் சொல்லிவிட்டாள்.

நான் உழைத்து நூறு பொற்காசுகளைத் திரட்டினேன். அவளுடைய இரு கால்களுக்கிடையே (தவறு செய்ய) நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வ) உரிமை(யான திருமணம்) இல்லாமல் உடைத்துவிடாதே!› என்று அவள் கூறினாள். உடனே அவளை விட்டுவிட்டு நான் எழுந்துவிட்டேன். இதை உனது அன்பை நாடியே நான் செய்திருப்பதாக நீ கருதியிருந்தால், எங்களைவிட்டு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக!” என்று பிரார்த்தித்தார். உடனே அவர்களைவிட்டு அல்லாஹ் (பாறையை) மூன்றில் இரு மடங்கு நகர்த்தினான்.

மற்றொருவர், ‘‘இறைவா! நான் ஒரு யிஃபரக்’ (மூன்று ‘ஸாஉ’கள்) தினையைக் கூலியாகப் பேசி, ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு அந்த ஒரு யிஃபரக்’ தினையை நான் கவனமாகப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அவற்றின் மேய்ப்பரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு (ஒரு நாள்) அவர் வந்து, ‘‘அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!” என்றார். ‘‘(அதோ!) அந்த மாடுகள் மற்றும் அவற் றின் மேய்ப்பரிடம் செல் (எடுத்துக்கொள்.) அவை எல்லாம் உமக்குரியவைதான்” என்று நான் கூறினேன்.

அதற்கு அவர், ‘‘என்னைக் கேலி செய்கிறீரா?” என்று கேட்டார். ‘‘நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான்” எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது அன்பை நாடியே செய்திருப்பதாக நீ கருதினால், எங்களைவிட்டு (இந்தப் பாறையை முற்றாக) அகற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார். முழுமையாக அது அகற்றப்பட்டது.79

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2216. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بَيْعًا أَمْ عَطِيَّةً أَوْ قَالَ أَمْ هِبَةً "". قَالَ لاَ بَلْ بَيْعٌ. فَاشْتَرَى مِنْهُ شَاةً.
பாடம் : 99 இணைவைப்போரிடமும் பகை கூட்டத்தாரிடமும் விற்பதும் வாங்குவதும்
2216. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது உயரமான, பரட்டைத் தலையுடைய, இணைவைப்பவரான ஒரு மனிதர் தம் ஆடுகளை ஓட்டிவந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவை விற்பனைக்கா? அல்லது (யாருக்கேனும்) அன்பளிப்பாகக் கொடுப்பதற்கா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை; விற்பனைக்குத்தான்” எனக் கூறினார். அப்போது அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை விலைக்கு வாங்கினார்கள்.

அத்தியாயம் : 34
2217.
பாடம்: 100 பகைவர் கூட்டத்தைச் சேர்ந்த வரிடம் அடிமையை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வ தும் அந்த அடிமையை விடுதலை செய்வதும் நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம், ‘‘உம்முடைய உரிமையாளரிடம், (பணம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்வதாக) விடுதலை பத்திரம் எழுதிக்கொடுப்பீராக!” எனக் கூறினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் முன்னர் சுதந்திரமானவராக இருந்தார்கள். அவர்களை அநியாயமாகப் பிடித்து விற்றுவிட்டனர். அம்மார் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டு அடிமையானவர்களே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘அல்லாஹ் உங்களில் சிலரை, வேறுசிலரைவிடச் செல்வத்தில் மேம்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேம்படுத்தப்பட்ட வர்கள், தங்களின் செல்வத்தை, தமது அதிகாரத்தில் இருப்பவர்க(ளான அடிமை க)ளிடம் கொடுத்து, அவர்களையும் அ(ச்செல்வத்)தில் தங்களுக்குச்) சமமான வர்களாக ஆக்கிவிடுவதில்லை. (அவ்வாறி ருக்க) அல்லாஹ்வின் அருட்கொடை யையா இவர்கள் மறுக்கின்றனர்? (16:71)
2217. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) யிசாரா’வுடன் புலம்பெயர்ந்து (இராக்கிலிருந்து) வெளியேறினார்கள். மன்னன் ஒருவன், அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சிபுரிந்த ஓர் ஊருக்குள் (எகிப்துக்குள்) யிசாரா’ உடன் இப்ராஹீம் (அலை) அவர்கள் நுழைந்தார்கள். ‘‘பெண்களிலேயே மிக அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்” என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, ‘‘இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?” என மன்னன் கேட்டான். இப்ராஹீம் (அலை) அவர்கள், யிஎன் சகோதரி’ என்று சொன்னார்கள்.

பிறகு சாராவிடம் திரும்பிய இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீ என் கூற்றைப் பொய்யாக்கிவிடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறைநம்பிக்கையாளர் யாரும் இல்லை” என்று சொன்னார்கள்.

பிறகு யிசாரா’வை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழுதுவிட்டு, ‘‘இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது கற்பைக் கணவனைத் தவிர மற்றவர் களிடமிருந்து காப்பாற்றியிருந்தால், இந்த இறைமறுப்பாளரை என்மீது சாட்டிவிடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் வலிப்பு வந்து, கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலை யைக் கண்ட சாரா, ‘‘இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று சொல்லப்படுமே!” என்றவுடன், மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங் கினான்.

உடனே சாரா (அலை) அவர்கள் எழுந்து அங்கத் தூய்மை செய்து தொழுது விட்டு, ‘‘இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது கற்பைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவன் வலிப்பு வந்து கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, ‘‘இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று சொல்லப்படுமே!” என்று பிரார்த்தித் தார்கள்.

இவ்வாறு மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக் கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள்” என்று (அவையோரிடம்) சொன்னான்.

சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்த இறை மறுப்பாளனை வீழ்த்தி, (நமக்குப்) பணிபுரிய ஓர் அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.80

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் :
2218. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتِ اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ فِي غُلاَمٍ، فَقَالَ سَعْدٌ هَذَا يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ، عَهِدَ إِلَىَّ أَنَّهُ ابْنُهُ، انْظُرْ إِلَى شَبَهِهِ. وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ هَذَا أَخِي يَا رَسُولَ اللَّهِ وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ. فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى شَبَهِهِ، فَرَأَى شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ، فَقَالَ "" هُوَ لَكَ يَا عَبْدُ، الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ "". فَلَمْ تَرَهُ سَوْدَةُ قَطُّ.
பாடம்: 100 பகைவர் கூட்டத்தைச் சேர்ந்த வரிடம் அடிமையை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வ தும் அந்த அடிமையை விடுதலை செய்வதும் நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம், ‘‘உம்முடைய உரிமையாளரிடம், (பணம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்வதாக) விடுதலை பத்திரம் எழுதிக்கொடுப்பீராக!” எனக் கூறினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் முன்னர் சுதந்திரமானவராக இருந்தார்கள். அவர்களை அநியாயமாகப் பிடித்து விற்றுவிட்டனர். அம்மார் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டு அடிமையானவர்களே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘அல்லாஹ் உங்களில் சிலரை, வேறுசிலரைவிடச் செல்வத்தில் மேம்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேம்படுத்தப்பட்ட வர்கள், தங்களின் செல்வத்தை, தமது அதிகாரத்தில் இருப்பவர்க(ளான அடிமை க)ளிடம் கொடுத்து, அவர்களையும் அ(ச்செல்வத்)தில் தங்களுக்குச்) சமமான வர்களாக ஆக்கிவிடுவதில்லை. (அவ்வாறி ருக்க) அல்லாஹ்வின் அருட்கொடை யையா இவர்கள் மறுக்கின்றனர்? (16:71)
2218. ஆயிஷா (ரலி அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி, அப்த் பின் ஸம்ஆ (ரலி) ஆகிய இருவரும் ஓர் அடிமை விஷயத்தில் வழக்கு கொண்டு வந்தனர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸ் உடைய மகனாவார். என் சகோதரர் (அவரது மரணத்தின்போது) இவன் தம் மகன் என்று என்னிடம் வலி யுறுத்திக் கூறினார். இந்த அடிமை அவரது சாயலில் இருப்பதை நீங்கள் கவனியுங்கள்” என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரனே; என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்” எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வடிமையிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்டபிறகும், அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம், ‘‘அப்தே! அவன் உமக்குரியவனே. ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது! விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது” எனக் கூறினார்கள்.

பிறகு (தம் துணைவி) சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘சவ்தாவே! இந்த அடிமையிடம் நீ பர்தாவைப் பேணிக்கொள்” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்கள் ஒருபோதும் அந்த அடிமையைக் கண்டதில்லை.81

அத்தியாயம் : 34
2219. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ رضى الله عنه ـ لِصُهَيْبٍ اتَّقِ اللَّهَ وَلاَ تَدَّعِ إِلَى غَيْرِ أَبِيكَ. فَقَالَ صُهَيْبٌ مَا يَسُرُّنِي أَنَّ لِي كَذَا وَكَذَا، وَأَنِّي قُلْتُ ذَلِكَ، وَلَكِنِّي سُرِقْتُ وَأَنَا صَبِيٌّ.
பாடம்: 100 பகைவர் கூட்டத்தைச் சேர்ந்த வரிடம் அடிமையை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வ தும் அந்த அடிமையை விடுதலை செய்வதும் நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம், ‘‘உம்முடைய உரிமையாளரிடம், (பணம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்வதாக) விடுதலை பத்திரம் எழுதிக்கொடுப்பீராக!” எனக் கூறினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் முன்னர் சுதந்திரமானவராக இருந்தார்கள். அவர்களை அநியாயமாகப் பிடித்து விற்றுவிட்டனர். அம்மார் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டு அடிமையானவர்களே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘அல்லாஹ் உங்களில் சிலரை, வேறுசிலரைவிடச் செல்வத்தில் மேம்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேம்படுத்தப்பட்ட வர்கள், தங்களின் செல்வத்தை, தமது அதிகாரத்தில் இருப்பவர்க(ளான அடிமை க)ளிடம் கொடுத்து, அவர்களையும் அ(ச்செல்வத்)தில் தங்களுக்குச்) சமமான வர்களாக ஆக்கிவிடுவதில்லை. (அவ்வாறி ருக்க) அல்லாஹ்வின் அருட்கொடை யையா இவர்கள் மறுக்கின்றனர்? (16:71)
2219. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஸுஹைப் (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! உம் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை எனச் சொல்லாதீர்” எனக் கூறினார்கள். அதற்கு ஸுஹைப் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை என்று நான் சொல்வதற் காக எவ்வளவு பொருட்களைக் கொடுத் தாலும் அதை நான் ஒப்பமாட்டேன்; என்றாலும், நான் சிறுவனாக இருந்தபோது திருடப்பட்டுவிட்டேன்” என்றார்கள்.82

அத்தியாயம் : 34
2220. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، أَخْبَرَهُ أَنَّهُ، قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ ـ أَوْ أَتَحَنَّتُ بِهَا ـ فِي الْجَاهِلِيَّةِ مِنْ صِلَةٍ وَعَتَاقَةٍ وَصَدَقَةٍ، هَلْ لِي فِيهَا أَجْرٌ قَالَ حَكِيمٌ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ لَكَ مِنْ خَيْرٍ "".
பாடம்: 100 பகைவர் கூட்டத்தைச் சேர்ந்த வரிடம் அடிமையை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வ தும் அந்த அடிமையை விடுதலை செய்வதும் நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம், ‘‘உம்முடைய உரிமையாளரிடம், (பணம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்வதாக) விடுதலை பத்திரம் எழுதிக்கொடுப்பீராக!” எனக் கூறினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் முன்னர் சுதந்திரமானவராக இருந்தார்கள். அவர்களை அநியாயமாகப் பிடித்து விற்றுவிட்டனர். அம்மார் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டு அடிமையானவர்களே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘அல்லாஹ் உங்களில் சிலரை, வேறுசிலரைவிடச் செல்வத்தில் மேம்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேம்படுத்தப்பட்ட வர்கள், தங்களின் செல்வத்தை, தமது அதிகாரத்தில் இருப்பவர்க(ளான அடிமை க)ளிடம் கொடுத்து, அவர்களையும் அ(ச்செல்வத்)தில் தங்களுக்குச்) சமமான வர்களாக ஆக்கிவிடுவதில்லை. (அவ்வாறி ருக்க) அல்லாஹ்வின் அருட்கொடை யையா இவர்கள் மறுக்கின்றனர்? (16:71)
2220. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நல்லறங்களைச் செய்துவந்தேன்; இவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் உண்டா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பலன்)களுடன்தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்” என்றார்கள்.83

அத்தியாயம் : 34
2221. حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِشَاةٍ مَيِّتَةٍ فَقَالَ "" هَلاَّ اسْتَمْتَعْتُمْ بِإِهَابِهَا "". قَالُوا إِنَّهَا مَيِّتَةٌ. قَالَ "" إِنَّمَا حَرُمَ أَكْلُهَا "".
பாடம் : 101 செத்த பிராணியின் பதனிடப்படாத தோல்கள்
2221. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்ற போது, ‘‘இதன் தோலை நீங்கள் பயன்படுத் தக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘இது செத்த ஆடாயிற்றே!” என்ற னர். அதற்கு ‘‘அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.84

அத்தியாயம் : 34
2222. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ "".
பாடம் : 102 பன்றிகளைக் கொல்வது நபி (ஸல்) அவர்கள் பன்றி வியாபாரத் தைத் தடை செய்தார்கள்.
2222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் (ஈசாலிஅலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கி றார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியைக் கொல்வார். காப்பு (ஜிஸ்யா) வரியை வாங்க மறுப்பார். (இஸ்லாம் ஒன்றையே ஏற்பார். அந்நாளில்) வாங்கு வதற்கு ஆளில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2223. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ أَخْبَرَنِي طَاوُسٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَلَغَ عُمَرَ أَنَّ فُلاَنًا بَاعَ خَمْرًا فَقَالَ قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَجَمَلُوهَا فَبَاعُوهَا "".
பாடம் : 103 செத்த பிராணியின் கொழுப்பை உருக்கி அதன் திரவத்தை விற்க லாகாது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2223. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மதுவை விற்றதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது, ‘‘அவரை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக (சபிப்பானாக)! யூதர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை உருக்கி விற்றனர். எனவே, அவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.

அத்தியாயம் : 34
2224. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ يَهُودًا حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَبَاعُوهَا، وَأَكَلُوا أَثْمَانَهَا "". قَالَ أَبُو عَبْد اللَّهِ قَاتَلَهُمْ اللَّهُ لَعَنَهُمْ قُتِلَ لُعِنَ الْخَرَّاصُونَ الْكَذَّابُونَ
பாடம் : 103 செத்த பிராணியின் கொழுப்பை உருக்கி அதன் திரவத்தை விற்க லாகாது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களை அல்லாஹ் தனது கருணை ‘லிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப் பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்டனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக! அல்லது சபிப்பானாக என்பதைக் குறிக்க மூலத்தில்) யிகா(த்)தல’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (இதற்கு யிகொல்வானாக!› என்பதே சொற்பொருளாகும்.) இங்கு அதற்கு யிசபிப்பானாக!› என்பதே பொரு ளாகும். குர்ஆனில், ‘‘பொய்யர்கள் சபிக்கப் படுவார்கள்” (51:10) என்பதைக் குறிக்க யிகு(த்)தில’ எனும் சொல்லே மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 34
2225. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبَّاسٍ إِنِّي إِنْسَانٌ، إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي، وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ لاَ أُحَدِّثُكَ إِلاَّ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ سَمِعْتُهُ يَقُولُ "" مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ، حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا "". فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ. فَقَالَ وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلاَّ أَنْ تَصْنَعَ، فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ، كُلِّ شَىْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعَ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ مِنَ النَّضْرِ بْنِ أَنَسٍ هَذَا الْوَاحِدَ.
பாடம் : 104 உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும் அதில் வெறுக்கத் தக்கதும்85
2225. சயீத் பின் அபில்ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒரு மனிதர் வந்து, ‘‘இப்னு அப்பாஸ் அவர்களே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் இந்த உருவங்களை (வரைந்து) தயாரிக்கிறேன்” எனக் கூறினார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘‘யார் ஓர் உருவத்தை வரைகிறாரோ அவர் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்வரை, அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவரால் ஒருகாலும் அதில் உயிரை ஊத முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்” என் றார்கள்.

கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உமக் குக் கேடுதான்! நீர் வரைந்துதான் தீர வேண்டும் என்றால், மரம் போன்ற உயிரற் றவைகளை வரைவீராக!” என்றார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இந்த ஒரு ஹதீஸை, நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்கள் செவியுற்றுள்ளார்கள்.

அத்தியாயம் : 34
2226. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ لَمَّا نَزَلَتْ آيَاتُ سُورَةِ الْبَقَرَةِ عَنْ آخِرِهَا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" حُرِّمَتِ التِّجَارَةُ فِي الْخَمْرِ "".
பாடம் : 105 மதுபான வியாபாரம் தடை செய்யப் பட்டதாகும் மதுபான வியாபாரத்தை (மது விற்பதையும் வாங்குவதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2226. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம்வரையிலான வசனங்கள் (2:275லி281) இறங்கியபோது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, ‘‘மதுபான வணிகம் தடை செய்யப்பட்டுவிட்டது” என்றார்கள்.86

அத்தியாயம் : 34