2187. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ.
பாடம் : 82 ‘அல்முஸாபனா' எனும் வணிகம் மரத்திலுள்ள (உலராத) பேரீச்சம்பழங் களுக்குப் பதிலாக உலர்ந்த பேரீச்சம் பழங்களை விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைக்குப் பதிலாக உலர்ந்த திராட் சையை விற்பதும் யிமுஸாபனா’ ஆகும். அத்துடன் இரவல் மரங்களின் (பழங்கள்) வியாபாரமும். நபி (ஸல்) அவர்கள் அல்முஸாபனா, அல்முஹாகலா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.67
2187. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யிமுஹாகலா, முஸாபனா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 34
2188. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنهم ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَرْخَصَ لِصَاحِبِ الْعَرِيَّةِ أَنْ يَبِيعَهَا بِخَرْصِهَا.
பாடம் : 82 ‘அல்முஸாபனா' எனும் வணிகம் மரத்திலுள்ள (உலராத) பேரீச்சம்பழங் களுக்குப் பதிலாக உலர்ந்த பேரீச்சம் பழங்களை விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைக்குப் பதிலாக உலர்ந்த திராட் சையை விற்பதும் யிமுஸாபனா’ ஆகும். அத்துடன் இரவல் மரங்களின் (பழங்கள்) வியாபாரமும். நபி (ஸல்) அவர்கள் அல்முஸாபனா, அல்முஹாகலா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.67
2188. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை, இரவல் மரத்தை (அரிய்யா) பெற்றவருக்கு மட்டும் அனுமதித்தார்கள்.

அத்தியாயம் : 34
2189. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، وَأَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ، وَلاَ يُبَاعُ شَىْءٌ مِنْهُ إِلاَّ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ إِلاَّ الْعَرَايَا.
பாடம் : 83 பேரீச்ச மரத்தின் உச்சியிலுள்ள கனிகளைத் தங்கம் அல்லது வெள்ளிக்கு விற்பது68
2189. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மரத்திலுள்ள) உலராத கனிகள் நல்ல நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ‘‘அவற்றில் எதையும் பொற்காசு, வெள்ளிக் காசு ஆகியவற்றுக்காகத் தவிர விற்கக் கூடாது; இரவல் மரங்களை (அராயா) தவிர” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 34
2190. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ مَالِكًا، وَسَأَلَهُ، عُبَيْدُ اللَّهِ بْنُ الرَّبِيعِ أَحَدَّثَكَ دَاوُدُ عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا فِي خَمْسَةِ أَوْسُقٍ أَوْ دُونَ خَمْسَةِ أَوْسُقٍ قَالَ نَعَمْ.
பாடம் : 83 பேரீச்ச மரத்தின் உச்சியிலுள்ள கனிகளைத் தங்கம் அல்லது வெள்ளிக்கு விற்பது68
2190. அப்துல்லாஹ் பின் அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(இப்னு அபீஅஹ்மத் அவர் களின் முன்னால் அடிமையான) அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) அவர்கள், பின்வரும் நபிமொழியை அறிவித்தார்களா?” என்று உபைதுல்லாஹ் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்கள் கேட்டார் கள். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் யிஆம்’ என்று பதிலளித்தார்கள். (அந்த ஹதீஸாவது:) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், ‘அராயா’ வணிகத்தில் (மரத்திலுள்ள உலராத பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம்பழங்களுக்குப் பதிலாக) யிஐந்து யிவஸ்க்’கள்’, அல்லது யிஐந்து யிவஸ்க்’களுக்குக் குறைவாக’ (விற்பனை செய்துகொள்ள) அனுமதி அளித்தார்கள்.69


அத்தியாயம் : 34
2191. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ سَمِعْتُ بُشَيْرًا، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ، وَرَخَّصَ فِي الْعَرِيَّةِ أَنْ تُبَاعَ بِخَرْصِهَا يَأْكُلُهَا أَهْلُهَا رُطَبًا. وَقَالَ سُفْيَانُ مَرَّةً أُخْرَى إِلاَّ أَنَّهُ رَخَّصَ فِي الْعَرِيَّةِ يَبِيعُهَا أَهْلُهَا بِخَرْصِهَا، يَأْكُلُونَهَا رُطَبًا. قَالَ هُوَ سَوَاءٌ. قَالَ سُفْيَانُ فَقُلْتُ لِيَحْيَى وَأَنَا غُلاَمٌ إِنَّ أَهْلَ مَكَّةَ يَقُولُونَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا. فَقَالَ وَمَا يُدْرِي أَهْلَ مَكَّةَ قُلْتُ إِنَّهُمْ يَرْوُونَهُ عَنْ جَابِرٍ. فَسَكَتَ. قَالَ سُفْيَانُ إِنَّمَا أَرَدْتُ أَنَّ جَابِرًا مِنْ أَهْلِ الْمَدِينَةِ. قِيلَ لِسُفْيَانَ وَلَيْسَ فِيهِ نَهْىٌ عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ قَالَ لاَ.
பாடம் : 83 பேரீச்ச மரத்தின் உச்சியிலுள்ள கனிகளைத் தங்கம் அல்லது வெள்ளிக்கு விற்பது68
2191. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, (மரத்திலுள்ள) உலராத கனிகளை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; இரவல் மரங்களில் (‘அராயா’வில் மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். (ஏழைகளுக்கு இரவலாக வழங்கப்பட்ட மரங்களில் உள்ள) அக் கனிகள் குத்துமதிப்பாகக் கணக்கிடப்பட்டு (தோட்டக்காரர்களுக்கு) விற்கப்படும். (அவற்றை வாங்கும்) தோட்டக்காரர்கள் செங்காய்களாக உண்பார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை கூறினார்கள்:

ஆனால், இரவல் மரங்களில் (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார் கள். (ஏழைகளின் இரவல் மரங்களில் உள்ள) அக்கனிகளைத் தோட்டக்காரர்கள் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு (உலர்ந்த பழங்களுக்குப் பதிலாக) விற்றுவிட்டு, அந்தச் செங்காய்களை உண்பார்கள்.

‘‘இந்த அறிவிப்பும் முந்தைய அறிவிப்பும் (பொருளில்) ஒன்றுதான்” என்று அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

தொடர்ந்து சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சிறுவனாக இருந்தபோது, யஹ்யா பின் சயீத் அல்அன்சாரீ (ரஹ்) அவர்களிடம், ‘‘இரவல் (அராயா) மரங்களுக்கு (குத்துமதிப்பு மற்றும் செங்காய்களாக உண்பது தொடர்பான எந்த நிபந்தனையுமின்றி) நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியதாக மக்காவாசிகள் கூறுகிறார்களே!” என்று கேட்டேன். அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், ‘‘மக்காவாசிகளுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார்கள்.

நான், ‘‘மக்காவாசிகள் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள்” என்று கூறினேன். இதைக் கேட்டு யஹ்யா மௌனமானார். நான் ஜாபிர் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டதற்குக் காரணம், அவர் மதீனாவாசி ஆவார் என்பதேயாகும்.70

‘‘பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை மரத்திலுள்ள கனிகளை விற்பதற்கான தடை இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லையா?” என்று சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘‘(அது உண்மைதான்; என்றாலும் இந்த அறிவிப்பில்) இடம்பெறவில்லை” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 34
2192. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنهم ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي الْعَرَايَا أَنْ تُبَاعَ بِخَرْصِهَا كَيْلاً. قَالَ مُوسَى بْنُ عُقْبَةَ وَالْعَرَايَا نَخَلاَتٌ مَعْلُومَاتٌ تَأْتِيهَا فَتَشْتَرِيهَا.
பாடம் : 84 யிஇரவல் மரங்கள்' (அராயா) என்பதன் விளக்கம்71 மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அராயா’ என்றால், ஒரு மனிதர் மற்றொருவருக்குப் பேரீச்சமரத்தின் ஒருபோக விளைச்சலை (அன்பளிப்பாகக்) கொடுப்பதாகும். பின்னர் அன்பளிப்பு பெற்றவர் பழங்களைப் பறிக்க வரும்போது தோட்டக் காரர் இடையூறாகக் கருதுகிறார். எனவே, (கொய்யப்பட்ட) உலர்ந்த பேரீச்சம்பழத் தைக் கொடுத்துவிட்டு, மரத்திலுள்ள கனிகளை வாங்கிக்கொள்வது அனுமதிக் கப்பட்டது. இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அராயா’ (இரவல் மரங்களுக்கு அளிக் கப்பட்டுள்ள அனுமதி) என்பது, உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம்பழத்தை முகத் தலளவையில் உடனுக்குடன் கொடுப்பதற்கு மட்டும்தான்; குத்துமதிப்பாகக் கொடுப்ப தற்கு அல்ல. ‘(அளக்கப்படும்) ஐந்து வஸ்க்’ என்ற சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர் களின் அறிவிப்பு இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்து கிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: ‘அராயா’ என்பது, ஒருவர் மற்றவருக்கு தமது செல்வத்தில் ஓரிரு பேரீச்ச மரங் களை இரவலாக வழங்குவதாகும். சுஃப்யான் பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘அராயா’ என்பது ஏழைகளுக்கு அன்பளிப்பாக (இரவலாக) வழங்கப்படும் பேரீச்ச மரங்களாகும். ஏழைகளால் (கனியும்வரை) காத்திருக்க இயலாதபோது, அவர்கள் உலர்ந்த (கொய்த) கனிகளுக்காகத் தாம் விரும்பியவாறு (தம் மரங்களிலுள்ள பழங்களை) விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.
2192. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவல் மரங்களில் (அராயா) உள்ள பழங்களைக் குத்துமதிப்பாகக் கணித்து (உலர்ந்த கனிகளுக்குப் பதில்) முகத்தலள வையில் விற்பதற்கு அனுமதி அளித்தார் கள்.

இதன் அறிவிப்பாளர்களில ஒருவரான மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

அராயா என்பது குறிப்பிட்ட சில பேரீச்ச மரங்களாகும். அங்கு வந்து (உலர்ந்த பழங்களைக் கொடுத்துவிட்டு அதன்) கனிகளை யாரும் வாங்கிக் கொள்ளலாம்.

அத்தியாயம் : 34
2193. وَقَالَ اللَّيْثُ عَنْ أَبِي الزِّنَادِ، كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يُحَدِّثُ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ الأَنْصَارِيِّ، مِنْ بَنِي حَارِثَةَ أَنَّهُ حَدَّثَهُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَتَبَايَعُونَ الثِّمَارَ، فَإِذَا جَدَّ النَّاسُ وَحَضَرَ تَقَاضِيهِمْ قَالَ الْمُبْتَاعُ إِنَّهُ أَصَابَ الثَّمَرَ الدُّمَانُ أَصَابَهُ مُرَاضٌ أَصَابَهُ قُشَامٌ ـ عَاهَاتٌ يَحْتَجُّونَ بِهَا ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا كَثُرَتْ عِنْدَهُ الْخُصُومَةُ فِي ذَلِكَ "" فَإِمَّا لاَ فَلاَ يَتَبَايَعُوا حَتَّى يَبْدُوَ صَلاَحُ الثَّمَرِ "". كَالْمَشُورَةِ يُشِيرُ بِهَا لِكَثْرَةِ خُصُومَتِهِمْ. وَأَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ لَمْ يَكُنْ يَبِيعُ ثِمَارَ أَرْضِهِ حَتَّى تَطْلُعَ الثُّرَيَّا فَيَتَبَيَّنَ الأَصْفَرُ مِنَ الأَحْمَرِ. قَالَ أَبُو عَبْد اللَّهِ رَوَاهُ عَلِيُّ بْنُ بَحْرٍ حَدَّثَنَا حَكَّامٌ حَدَّثَنَا عَنْبَسَةُ عَنْ زَكَرِيَّاءَ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ عُرْوَةَ عَنْ سَهْلٍ عَنْ زَيْدٍ
பாடம் : 85 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் (மரத்திலுள்ள) கனிகளை விற்றல்
2193. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் மக்கள் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மக்கள் பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம்வந்ததும் வாங்கியவர், இது அழுகி விட்டது; இதற்கு நோய் ஏற்பட்டிருக்கிறது; இது பிஞ்சில் பழுத்திருக்கிறது; இப்படி பல குறைகளைக் கூறிச் சச்சரவு செய்வர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் அதிமாக வந்தபோது, ‘‘(இந்த வணிக முறையை) நீங்கள் கைவிடமாட்டீர்கள் என்றால், மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (அறவே) விற்காதீர்கள்” என்று ஆலோசனைபோல் கூறினார்கள். அவர்களின் சர்ச்சை அதிகமாகிவிட்டது என்பதை இதன் மூலம் நபியவர்கள் உணர்த்தினார்கள்.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், கிருத்திகா விண்மீன் (ஸுரய்யா) (தோன்றக்கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வராத வரை தமது தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்கமாட்டார்கள்.

அப்பருவத்தில் செங்காய் எது. பழுத் தது எது என்று அடையாளம் தெரியும் என அவர்களின் புதல்வர் காரிஜா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இதை அலீ பின் பஹ்ர் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் மற்றொரு தொடரில் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2194. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، نَهَى الْبَائِعَ وَالْمُبْتَاعَ.
பாடம் : 85 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் (மரத்திலுள்ள) கனிகளை விற்றல்
2194. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள். விற்ப வர், வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.


அத்தியாயம் : 34
2195. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ تُبَاعَ ثَمَرَةُ النَّخْلِ حَتَّى تَزْهُوَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يَعْنِي حَتَّى تَحْمَرَّ.
பாடம் : 85 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் (மரத்திலுள்ள) கனிகளை விற்றல்
2195. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாதவரை லிஅதாவது (உண்பதற்கு ஏற்றவாறு) சிவக்காத வரைலி அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.


அத்தியாயம் : 34
2196. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَلِيمِ بْنِ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَا، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُبَاعَ الثَّمَرَةُ حَتَّى تُشَقِّحَ. فَقِيلَ مَا تُشَقِّحُ قَالَ تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا.
பாடம் : 85 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் (மரத்திலுள்ள) கனிகளை விற்றல்
2196. சயீத் பின் மீனாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘மரத்திலுள்ள கனிகள் (நன்கு) கனியாதவரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது யிகனிதல்’ (இஷ்காஹ்) என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘சிவப்பாகவோ மஞ்சளாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும்” என விடையளித்தார்கள்.

அத்தியாயம் : 34
2197. حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَعَنِ النَّخْلِ حَتَّى يَزْهُوَ. قِيلَ وَمَا يَزْهُو قَالَ يَحْمَارُّ أَوْ يَصْفَارُّ.
பாடம் : 86 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் பேரீச்ச மரத்தை விற்பது
2197. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘பக்குவம் அடைவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், யிசிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது’ என்று விடையளித்தார்கள்.

அத்தியாயம் : 34
2198. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تُزْهِيَ. فَقِيلَ لَهُ وَمَا تُزْهِي قَالَ حَتَّى تَحْمَرَّ. فَقَالَ "" أَرَأَيْتَ إِذَا مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ، بِمَ يَأْخُذُ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ "".
பாடம் : 87 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் பழங்களை விற்று, பின்னர் அவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், விற்றவரே அதற்குப் பொறுப்பாளி ஆவார்.
2198. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘பக்குவமடைவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘அது சிவக்கும்வரை’ என்று விடையளித்தார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை தடுத்துவிட்டால், எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக்கொள்ள முடியும்?” எனக் கேட்டார்கள்.


அத்தியாயம் : 34
2199.
பாடம் : 87 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் பழங்களை விற்று, பின்னர் அவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், விற்றவரே அதற்குப் பொறுப்பாளி ஆவார்.
2199. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு மனிதர் மரத்திலுள்ள கனிகளைப் பலன் உறுதிப்படும் நிலையை அடைவ தற்குமுன் வாங்கி, அவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மரத்தின் உரிமை யாளரே அதற்குப் பொறுப்பாளி ஆவார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை மரத்திலுள்ள கனிகளை விற்காதீர்கள்; (மரத்திலுள்ள) உலராத கனிகளை உலர்ந்த கனிகளுக்கு விற்காதீர்கள்” என்று கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் :
2200. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَفِ، فَقَالَ لاَ بَأْسَ بِهِ. ثُمَّ حَدَّثَنَا عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، فَرَهَنَهُ دِرْعَهُ.
பாடம் : 88 கடனுக்கு உணவுப் பொருள் வாங்குவது
2200. சுலைமான் பின் மஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம், கடனுக்காக அடைமானம் வைப்பது குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது அவர்கள், ‘‘அது தவறாகாது” என்று சொன்னார்கள்.

மேலும் ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தமது கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் எங்களுக்கு அறிவித் தார்கள் என்றார்கள்.

அத்தியாயம் : 34
2201. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَعْمَلَ رَجُلاً عَلَى خَيْبَرَ، فَجَاءَهُ بِتَمْرٍ جَنِيبٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا ". قَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ، وَالصَّاعَيْنِ بِالثَّلاَثَةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَفْعَلْ، بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا ".
பாடம் : 89 மட்டமான பேரீச்சம்பழத்தை அதைவிடச் சிறந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது
2201. 2202 அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை யிகைபர்’ பகுதிக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (சென்றுவிட்டு கைபரிலிருந்து) உயர்ரகப் பேரீச்சம் பழங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இப்படித்தான் (உயர் ரகமானவையாக) இருக்குமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சம்பழத்தில் இரண்டு ‘ஸாஉ’களுக்குப் பதிலாக இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ‘ஸாஉ’வையும், மட்டமான பேரீச்சம்பழத்தில் மூன்று ‘ஸாஉ’களுக்குப் பதிலாக இந்தப் பேரீச்சம்பழத்தில் இரண்டு ‘ஸாஉ’களையும் நாங்கள் வாங்குவோம்” எனக் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவ்வாறு செய்யாதீர்! மட்ட மான பேரீச்சம்பழத்தை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளுக்குப் பதிலாகத் தரமான பேரீச்சம்பழத்தை வாங்குவீராக!” எனக் கூறினார்கள்.72

அத்தியாயம் : 34
2203. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ لِي إِبْرَاهِيمُ أَخْبَرَنَا هِشَامٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يُخْبِرُ عَنْ نَافِعٍ، مَوْلَى ابْنِ عُمَرَ أَنَّ أَيُّمَا، نَخْلٍ بِيعَتْ قَدْ أُبِّرَتْ لَمْ يُذْكَرِ الثَّمَرُ، فَالثَّمَرُ لِلَّذِي أَبَّرَهَا، وَكَذَلِكَ الْعَبْدُ وَالْحَرْثُ. سَمَّى لَهُ نَافِعٌ هَؤُلاَءِ الثَّلاَثَ.
பாடம் : 90 மகரந்தச்சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை, அல்லது பயிர் செய்யப்பட்ட நிலத்தை விற்பது அல்லது வாடகைக்கு விடுவது73
2203. இப்னு உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மரகந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த பேரீச்ச மரமாவது அதன் கனிகள் (யாருக்குச் சேரும் என்பது) பற்றிப் பேசப் படாமல் விற்கப்படுமானால், அவை மகரந்தச் சேர்க்கை (செய்து விற்பனை) செய்தவருக்கே உரியவையாகும். (செல்வம் வைத்துள்ள) அடிமையும் பயிர் செய்யப் பட்ட நிலமும் அவ்வாறுதான்.

இந்த மூன்றையும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தம்மிடம் குறிப்பிட்டுச் சொன்ன தாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 34
2204. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ بَاعَ نَخْلاً قَدْ أُبِّرَتْ فَثَمَرُهَا لِلْبَائِعِ، إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ "".
பாடம் : 90 மகரந்தச்சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை, அல்லது பயிர் செய்யப்பட்ட நிலத்தை விற்பது அல்லது வாடகைக்கு விடுவது73
2204. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால், அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கிய வர் (தமக்குச் சேர வேண்டுமென்று) முன் நிபந்தனையிட்டிருந்தால் தவிர!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2205. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمُزَابَنَةِ أَنْ يَبِيعَ ثَمَرَ حَائِطِهِ إِنْ كَانَ نَخْلاً بِتَمْرٍ كَيْلاً، وَإِنْ كَانَ كَرْمًا أَنْ يَبِيعَهُ بِزَبِيبٍ كَيْلاً أَوْ كَانَ زَرْعًا أَنْ يَبِيعَهُ بِكَيْلِ طَعَامٍ، وَنَهَى عَنْ ذَلِكَ كُلِّهِ.
பாடம் : 91 அளக்கப்பட்ட உணவுப் பொருளுக் குப் பதிலாகப் பயி(ரில் உள்ளகதி)ரை விற்பது
2205. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’வைத் தடை செய்தார்கள். (அதாவது:) ஒருவரது தோட்டத்திலுள்ள பேரீச்ச மரத்திலிருக்கும் (உலராத) கனி களை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது, கொடியிலுள்ள உலராத திராட்சைப் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பது, பயிரிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பது ஆகிய அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 34
2206. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلاً ثُمَّ بَاعَ أَصْلَهَا، فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ، إِلاَّ أَنْ يَشْتَرِطَهُ الْمُبْتَاعُ "".
பாடம் : 92 பேரீச்ச மரத்தை வேரோடு விற்பது
2206. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்த அவருக்கே மரத்தின் (தற்போதைய) கனிகள் சேரும்; விலைக்கு வாங்கியவர் (அதன் கனிகள் தமக்கே சேர வேண்டும் என்று) முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34