2227. حَدَّثَنِي بِشْرُ بْنُ مَرْحُومٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ اللَّهُ ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ، رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ، وَلَمْ يُعْطِ أَجْرَهُ "".
பாடம் : 106 சுதந்திரமானவரைப் பிடித்து விற்பது குற்றமாகும்.
2227. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன், என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன்; இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தை உண்டவன்; மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன்.87

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2228. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ فِي السَّبْىِ صَفِيَّةُ، فَصَارَتْ إِلَى دَحْيَةَ الْكَلْبِيِّ، ثُمَّ صَارَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 107 யூதர்களை (மதீனாவிலிருந்து) வெளியேற்றியபோது அவர்களின் நிலங்களை விற்றுவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது இது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் ஒன்று வந்துள்ளது.88 பாடம் : 108 அடிமைக்குப் பதிலாக அடிமை யையும் பிராணிக்குப் பதிலாக பிராணியையும் தவணைமுறையில் விற்பது89 இப்னு உமர் (ரலி) அவர்கள், நான்கு (சாதாரண) ஒட்டகங்களுக்குப் பதிலாக ஓர் ஊர்தி ஒட்டகத்தை வாங்கினார்கள். விற்பவர் தமது பொறுப்பில், அந்த ஊர்தி ஒட்டகத்தை (மக்காலிமதீனா இடையே உள்ள) ‘அர்ரபதா’ எனும் இடத்தில் கொண்டுவந்து (தம்மிடம்) ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித் தார்கள். ‘‘சில நேரங்களில் ஓர் ஓட்டகம் இரண்டு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக இருக்கலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இரண்டு ஒட்டகங்களுக்குப் பகரமாக ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். அப்போது, ஓர் ஒட்டகத்தை மட்டும் கொடுத்துவிட்டு, ‘‘மற்றொன்றை அல்லாஹ் நாடினால் தாமதமின்றி நாளை உம்மிடம் தருகிறேன்” என்று கூறினார்கள். ‘‘இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகம், இரண்டு ஆட்டிற்கு ஓர் ஆடு என்று தவணையில் வாங்கினாலும் உயிரினத்தில் வட்டி என்பதில்லை” என்று சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ‘‘இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகத் தைக் கடனாக வாங்குவதும் ஒரு திர்ஹத்துக்கு ஒரு திர்ஹத்தைக் கடனாக வாங்குவதும் தவறில்லை” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2228. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு (வேறு அடிமைப் பெண்ணைக் கொடுத்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் எடுத்துக்கொள்ளவே) ஸஃபிய்யா நபி (ஸல்) அவர்களுக்கு வந்துசேர்ந்தார்கள்.

அத்தியாயம் : 34
2229. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي ابْنُ مُحَيْرِيزٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّهُ، بَيْنَمَا هُوَ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُصِيبُ سَبْيًا، فَنُحِبُّ الأَثْمَانَ، فَكَيْفَ تَرَى فِي الْعَزْلِ فَقَالَ "" أَوَإِنَّكُمْ تَفْعَلُونَ ذَلِكَ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا ذَلِكُمْ، فَإِنَّهَا لَيْسَتْ نَسَمَةٌ كَتَبَ اللَّهُ أَنْ تَخْرُجَ إِلاَّ هِيَ خَارِجَةٌ "".
பாடம் : 109 அடிமைகளை விற்பது
2229. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். (அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து) ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர்; அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால், (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) நாங்கள் புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். ‘‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிப்பதால் உங்கள்மீது (குற்றம்) இல்லை. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் எழுதிவிட்ட எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.90

அத்தியாயம் : 34
2230. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ بَاعَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُدَبَّرَ.
பாடம் : 110 பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட அடிமையை (முதப்பர்) விற்பது91
2230. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட (முதப்பரான) அடிமையை (அவருடைய உரிமையாளரின் கடனை அடைப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் விற்பனை செய்(துகொடுத்)தார்கள்.


அத்தியாயம் : 34
2231. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَاعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 110 பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட அடிமையை (முதப்பர்) விற்பது91
2231. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பின்தேதியிட்டு விடுதலை அளிக்கப்பட்ட அடிமையான) முதப்பரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விற்றார்கள்.


அத்தியாயம் : 34
2232. حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ حَدَّثَ ابْنُ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ وَأَبَا هُرَيْرَةَ رضى الله عنهما أَخْبَرَاهُ أَنَّهُمَا، سَمِعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُسْأَلُ عَنِ الأَمَةِ تَزْنِي وَلَمْ تُحْصَنْ قَالَ " اجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ بِيعُوهَا بَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ ".
பாடம் : 110 பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட அடிமையை (முதப்பர்) விற்பது91
2232. 2233 ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

விபசாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபசாரம் செய்தால் மீண்டும் அவளுக்குச் சாட்டை யடி கொடுங்கள்! மூன்றாவது தடவை, அல்லது நான்காவது தடவையும் அவள் விபசாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்றுவிடுங்கள்” என்று பதிலளித்தார்கள்.92


அத்தியாயம் : 34
2234. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا زَنَتْ أَمَةُ أَحَدِكُمْ، فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَجْلِدْهَا الْحَدَّ، وَلاَ يُثَرِّبْ عَلَيْهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا الْحَدَّ وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ "".
பாடம் : 110 பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட அடிமையை (முதப்பர்) விற்பது91
2234. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

‘‘உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபசாரம் செய்து, அது வெளிப் பட்டுவிட்டால், அவளுக்கு (ஐம்பது) சாட்டையடியைத் தண்டனையாக அவர் வழங்கட்டும்! (அதற்குமேல்) அவளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். மீண்டும் அவள் விபசாரம் செய்தால் தண்டனையாக அவளுக்கு அவர் சாட்டையடி வழங்கட்டும்! (அதற்குமேல்) அவளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். பிறகு மூன்றாம் முறை அவள் விபசாரம் செய்து, அது வெளிப்பட்டுவிட்டால், முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை அவர் விற்றுவிடட்டும்!”

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2235. حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْحِصْنَ ذُكِرَ لَهُ جَمَالُ صَفِيَّةَ بِنْتِ حُيَىِّ بْنِ أَخْطَبَ، وَقَدْ قُتِلَ زَوْجُهَا، وَكَانَتْ عَرُوسًا، فَاصْطَفَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ فَخَرَجَ بِهَا، حَتَّى بَلَغْنَا سَدَّ الرَّوْحَاءِ حَلَّتْ، فَبَنَى بِهَا، ثُمَّ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ صَغِيرٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" آذِنْ مَنْ حَوْلَكَ "". فَكَانَتْ تِلْكَ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى صَفِيَّةَ، ثُمَّ خَرَجْنَا إِلَى الْمَدِينَةِ، قَالَ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُحَوِّي لَهَا وَرَاءَهُ بِعَبَاءَةٍ، ثُمَّ يَجْلِسُ عِنْدَ بَعِيرِهِ فَيَضَعُ رُكْبَتَهُ، فَتَضَعُ صَفِيَّةُ رِجْلَهَا عَلَى رُكْبَتِهِ، حَتَّى تَرْكَبَ.
பாடம் : 111 ஓர் அடிமைப் பெண்ணின் கருப்பை யைச் சோதிப்பதற்குமுன் அவளு டன் பயணம் செய்யலாமா?93 ‘‘அவளைக் கட்டியணைப்பதும் முத்த மிடுவதும் தவறில்லை” என ஹசன் அல் பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘பிறரால் உடலுறவு கொள்ளப்பட்ட அடிமைப் பெண் அன்பளிப்பாகக் கிடைத் தாலோ, அல்லது விற்கப்பட்டாலோ, அல்லது விடுதலை செய்யப்பட்டாலோ (புதிய உரிமையாளர் அல்லது மணமுடிப் பவர்) அவளது கருப்பை(யில் கரு இல்லையென்ப)தனை ஒரு மாதவிடாய் மூலம் பரிசோதித்துக்கொள்ளட்டும்! கன்னிப் பெண் இவ்வாறு சோதிக்கப்பட மாட்டாள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் (பிறரால்) கர்ப்பமான தமது அடிமைப் பெண்ணை, உடலுறவைத் தவிர மற்ற முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையவர்கள் எனில்), தங்கள் மனைவி யரிடமோ தங்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களிடமோ தவிர (வேறு வழிகளில் செல்வதிலிருந்து) தமது கற்பைக் காத்துக்கொள்வர். (23:56)
2235. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தார்கள். (கமூஸ்) கோட்டையை அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியாக்கிக்கொடுத்தான். அப்போது (சிறைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அவரோ புது மணப் பெண்ணாக இருந்தார். அவருடைய கணவரோ கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில்) தமது பங்காகப் பெற்று (மணந்து)கொண்டார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யிசத்துர் ரவ்ஹா’ எனுமிடத்தை நாங்கள் அடைந்தபோது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார்.

நபி (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) யிஹைஸ்’ எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக!” என்றார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக அது அமைந்தது.

பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின்மேல் தமக்குப் பின்னால் ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரை அமைத்ததைப் பார்த்தேன். பிறகு ஒட்டகத்தின் அருகில் அமர்ந்து, தமது முழங்காலை (கீழே) வைத்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முழங்கால்மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள்.

அத்தியாயம் : 34
2236. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ عَامَ الْفَتْحِ، وَهُوَ بِمَكَّةَ "" إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ "". فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ. فَقَالَ "" لاَ، هُوَ حَرَامٌ "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ "". قَالَ أَبُو عَاصِمٍ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَىَّ عَطَاءٌ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 112 செத்தவற்றையும் உருவச் சிலை களையும் விற்பது
2236. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில், ‘‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல் களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப் படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற் றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்” எனக் கேட்கப் பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கூடாது; அது தடை செய்யப் பட்டதுதான்” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘‘யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2237. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ.
பாடம் : 113 நாய் விற்ற காசு
2237. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாய் விற்ற காசையும் விபசாரியின் வருமானத்தையும் சோதிடரின் தட்சணை யையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 34
2238. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ أَبِي اشْتَرَى حَجَّامًا، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ،. قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الأَمَةِ، وَلَعَنَ الْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ، وَآكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَلَعَنَ الْمُصَوِّرَ.
பாடம் : 113 நாய் விற்ற காசு
2238. அவன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்) குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவரது தொழிற் கருவிகளை உடைக்கும் படி உத்தரவிட்டார்கள்; அவ்வாறே அவை உடைக்கப்பட்டன.

அதுபற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரத்தத்தின் கிரயம் (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலி), நாய் விற்ற கிரயம், அடிமைப் பெண்ணின் (தவறான) சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள்; பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி வாங்குபவனையும், வட்டி கொடுப்பவனையும், (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் அவர்கள் சபித்தார்கள்!’ என்று பதிலளித்தார்கள்.94

அத்தியாயம் : 34

2239. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ الْعَامَ وَالْعَامَيْنِ ـ أَوْ قَالَ عَامَيْنِ أَوْ ثَلاَثَةً. شَكَّ إِسْمَاعِيلُ ـ فَقَالَ "" مَنْ سَلَّفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ "". حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا "" فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ "".
பாடம் : 1 குறிப்பிட்ட முகத்தலளவையில் முன்பண வணிகம்2
2239. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் யிஓராண்டு அல்லது ஈராண்டுகளில்’ அல்லது யிஈராண்டு அல்லது மூன்றாண்டுகளில்’ பெற்றுக் கொள்வதாகக் கூறி, பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுத்துவந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒருவர், (இவ்வாறு) பின்னால் பெற்றுக்கொள்வதாகக் கூறி பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட எடைக்காக வும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்!” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 35
2240. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، وَهُمْ يُسْلِفُونَ بِالتَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ "" مَنْ أَسْلَفَ فِي شَىْءٍ فَفِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ "". حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، وَقَالَ، "" فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ "".
பாடம் : 2 குறிப்பிட்ட நிறுத்தலளவையில் முன்பண வணிகம்3
2240. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி, பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட அளவுக்காகவும் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்!” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிகுறிப்பிட்ட அளவுக்காகக் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்!› என்று இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 35
2241. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ "" فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ "".
பாடம் : 2 குறிப்பிட்ட நிறுத்தலளவையில் முன்பண வணிகம்3
2241. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தபோது, (முன்பண வணிகம் பற்றிக் குறிப்பிடுகையில்), ‘‘குறிப்பிட்ட அளவுக் காகவும் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட தவணைக்குக் கொடுக்கட்டும்!” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 35
2242. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي الْمُجَالِدِ،. وَحَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْمُجَالِدِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدٌ،، أَوْ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْمُجَالِدِ قَالَ اخْتَلَفَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادِ بْنِ الْهَادِ وَأَبُو بُرْدَةَ فِي السَّلَفِ، فَبَعَثُونِي إِلَى ابْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ فَسَأَلْتُهُ فَقَالَ إِنَّا كُنَّا نُسْلِفُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ، فِي الْحِنْطَةِ، وَالشَّعِيرِ وَالزَّبِيبِ، وَالتَّمْرِ. وَسَأَلْتُ ابْنَ أَبْزَى فَقَالَ مِثْلَ ذَلِكَ.
பாடம் : 2 குறிப்பிட்ட நிறுத்தலளவையில் முன்பண வணிகம்3
2242. 2243 இப்னு அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) அவர்களும் அபூபுர்தா (ரலி) அவர்களும் முன்பண வணிகம் (அஸ்ஸலம்) தொடர் பாகக் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் காலத்திலும் கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சம்பழம் ஆகியவற்றுக்காக முன்பணம் கொடுத்து வந்தோம்” என்றார்கள்.

பிறகு நான் அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 35
2244. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي الْمُجَالِدِ، قَالَ بَعَثَنِي عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ وَأَبُو بُرْدَةَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ فَقَالاَ سَلْهُ هَلْ كَانَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُسْلِفُونَ فِي الْحِنْطَةِ قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا نُسْلِفُ نَبِيطَ أَهْلِ الشَّأْمِ فِي الْحِنْطَةِ، وَالشَّعِيرِ، وَالزَّيْتِ، فِي كَيْلٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ. قُلْتُ إِلَى مَنْ كَانَ أَصْلُهُ عِنْدَهُ قَالَ مَا كُنَّا نَسْأَلُهُمْ عَنْ ذَلِكَ. ثُمَّ بَعَثَانِي إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى فَسَأَلْتُهُ فَقَالَ كَانَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم يُسْلِفُونَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ نَسْأَلْهُمْ أَلَهُمْ حَرْثٌ أَمْ لاَ
பாடம் : 3 மூலப்பொருள் (விளைச்சல்) இல்லாத ஒருவரிடம் (விளை பொருளுக்காக) முன்பணம் அளித்தல்4
2244. 2245 முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) அவர்களும், அபூபுர்தா (ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் அனுப்பி, ‘‘நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித் தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா?” என்று கேட்கச் சொன்னார்கள்.

(அவ்வாறே நான் கேட்டபோது) அப்துல்லாஹ் பின் அபீஅஃவ்பா (ரலி) அவர்கள், ‘‘கோதுமை, தொலி நீக்கப்பட்ட கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட தவணைக்கு ஷாம் (சிரியா)வாசிகளான ‘அன்பாத்’ எனும் கலப்பின அரபியரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்துவந்தோம்” என்றார்கள். ‘‘மூலப்பொருள் (விளை நிலம்) யாரிடம் இருக்கிறதோ! அவரிடமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதைப் பற்றி விசாரிக்கமாட்டோம்” என்றார்கள்.

பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் அனுப்பினர். நான் அவர்களிடம் (சென்று) கேட்டபோது, ‘‘நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித்தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) அவர்களுக்கு விளை நிலம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்பதில்லை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இஸ்ஹாக் பின் ஷாஹீன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை ஆகிய இரண்டு மட்டும் இடம்பெற்றுள்ளன. அப்துல்லாஹ் பின் அல்வலீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிஆலிவ்’ எண்ணெய்யும் காணப்படுகிறது.

கு(த்)தைபா பின் சயீத் (ரஹ்) அவர் களின் அறிவிப்பில் கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை ஆகியவை இடம்பெற்றுள்ளன.


அத்தியாயம் : 35
2246. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرٌو، قَالَ سَمِعْتُ أَبَا الْبَخْتَرِيِّ الطَّائِيَّ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ السَّلَمِ، فِي النَّخْلِ. قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ النَّخْلِ، حَتَّى يُؤْكَلَ مِنْهُ وَحَتَّى يُوزَنَ. فَقَالَ الرَّجُلُ وَأَىُّ شَىْءٍ يُوزَنُ قَالَ رَجُلٌ إِلَى جَانِبِهِ حَتَّى يُحْرَزَ. وَقَالَ مُعَاذٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ أَبُو الْبَخْتَرِيِّ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 3 மூலப்பொருள் (விளைச்சல்) இல்லாத ஒருவரிடம் (விளை பொருளுக்காக) முன்பணம் அளித்தல்4
2246. அபுல்பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யிபேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணப்படும் பக்குவத்தை அடையும் முன்பும் எடைபோடப்படுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், ‘‘(மரத்திலுள்ளதை) எவ்வாறு எடைபோடுவது?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்கு அருகிலிருந்த மற்றொரு மனிதர், ‘‘எடைபோடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று) மதிப்பிடப்படுவதாகும்” என்றார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 35