1974. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ الْحَدِيثَ يَعْنِي "" إِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا "". فَقُلْتُ وَمَا صَوْمُ دَاوُدَ قَالَ "" نِصْفُ الدَّهْرِ "".
பாடம் : 54 நோன்பு நோற்றிருக்கும்போது விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை
1974. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘உம்முடைய விருந்தின ருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது” என்றார்கள்.

‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வருடத்தில் பாதி நாட்கள்” என் றார்கள்.41

அத்தியாயம் : 30
1975. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ اللَّهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ "". فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَلاَ تَفْعَلْ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ بِحَسْبِكَ أَنْ تَصُومَ كُلَّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا، فَإِنَّ ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ "". فَشَدَّدْتُ، فَشُدِّدَ عَلَىَّ، قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَجِدُ قُوَّةً. قَالَ "" فَصُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ وَلاَ تَزِدْ عَلَيْهِ "". قُلْتُ وَمَا كَانَ صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ "" نِصْفَ الدَّهْرِ "". فَكَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ بَعْدَ مَا كَبِرَ يَا لَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 55 நோன்பு நோற்றிருக்கும்போது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமை
1975. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அப்துல்லாஹ், நீர் பகலெல் லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இனி) அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள்) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய விருந்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு.

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமான தாகும். ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு. (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்.” என்று கூறினார்கள்.

நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்” என்றார்கள். ‘‘இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எது?” என்று நான் கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாட்கள்’ என்றார்கள்.

‘‘அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்தபின் ‘நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்” என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.42

அத்தியாயம் : 30
1976. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ أُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَقُولُ وَاللَّهِ لأَصُومَنَّ النَّهَارَ، وَلأَقُومَنَّ اللَّيْلَ، مَا عِشْتُ. فَقُلْتُ لَهُ قَدْ قُلْتُهُ بِأَبِي أَنْتَ وَأُمِّي. قَالَ "" فَإِنَّكَ لاَ تَسْتَطِيعُ ذَلِكَ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، وَصُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا، وَذَلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ "". قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ. قَالَ "" فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمَيْنِ "". قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ. قَالَ "" فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا، فَذَلِكَ صِيَامُ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ وَهْوَ أَفْضَلُ الصِّيَامِ "". فَقُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ أَفْضَلَ مِنْ ذَلِكَ "".
பாடம் : 56 காலமெல்லாம் நோன்பு நோற்றல் (என்பதன் பொருள்)
1976. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறிய செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘‘என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே” என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள், ‘‘இது உம்மால் முடியாது. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்” என்றார்கள்.

நான், ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!, இதுதான் இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்” என்றார்கள். நான் ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1977. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، سَمِعْتُ عَطَاءً، أَنَّ أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ بَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنِّي أَسْرُدُ الصَّوْمَ وَأُصَلِّي اللَّيْلَ، فَإِمَّا أَرْسَلَ إِلَىَّ، وَإِمَّا لَقِيتُهُ، فَقَالَ "" أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ وَلاَ تُفْطِرُ، وَتُصَلِّي وَلاَ تَنَامُ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، فَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَظًّا، وَإِنَّ لِنَفْسِكَ وَأَهْلِكَ عَلَيْكَ حَظًّا "". قَالَ إِنِّي لأَقْوَى لِذَلِكَ. قَالَ "" فَصُمْ صِيَامَ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ "". قَالَ وَكَيْفَ قَالَ "" كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَلاَ يَفِرُّ إِذَا لاَقَى "". قَالَ مَنْ لِي بِهَذِهِ يَا نَبِيَّ اللَّهِ قَالَ عَطَاءٌ لاَ أَدْرِي كَيْفَ ذَكَرَ صِيَامَ الأَبَدِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ صَامَ مَنْ صَامَ الأَبَدَ "". مَرَّتَيْنِ.
பாடம் : 57 நோன்பு நோற்றிருக்கும்போது குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமை இது பற்றிய நபிவழியை அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவித் திருக்கிறார்கள்.43
1977. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தொடர்ந்து நோன்பு நோற்பதாக வும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் செய்தி எட்டியது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் உறங்காமல் தொழுவதாகவும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளதே! எனவே, (சில நாள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்) நோன்பை விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்கு (நீர்) அளிக்கவேண்டிய பங்கு உண்டு; உம(து உடலு)க்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டிய பங்கும் உண்டு” என்று கூறினார்கள்.

நான் ‘‘இதற்கு எனக்குச் சக்தி உள்ளது” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக!” என்றார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட்டேன். ‘‘தாவூத் (அலை) அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; ஒருநாள் விட்டுவிடுவார்கள்; மேலும், (போர் முனையில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்?” என்றேன்.

‘‘காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன்; என்றாலும் ‘காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்’ என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது)” என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 30
1978. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ "". قَالَ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ. فَمَا زَالَ حَتَّى قَالَ "" صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا "" فَقَالَ "" اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ "". قَالَ إِنِّي أُطِيقُ أَكْثَرَ. فَمَا زَالَ حَتَّى قَالَ فِي ثَلاَثٍ.
பாடம் : 58 ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்றல்
1978. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ‘‘இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். முடிவில், ‘‘ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!” என்று கூறினார்கள். மேலும், ‘‘ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்றார்கள். ‘‘இதைவிட அதிகமாக (ஓத) எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். (நான் கேட்கக் கேட்க குறைத்துக்கொண்டே வந்து) முடிவில், ‘‘மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 30
1979. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ الْمَكِّيَّ ـ وَكَانَ شَاعِرًا وَكَانَ لاَ يُتَّهَمُ فِي حَدِيثِهِ ـ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّكَ لَتَصُومُ الدَّهْرَ، وَتَقُومُ اللَّيْلَ "". فَقُلْتُ نَعَمْ. قَالَ "" إِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتْ لَهُ الْعَيْنُ وَنَفِهَتْ لَهُ النَّفْسُ، لاَ صَامَ مَنْ صَامَ الدَّهْرَ، صَوْمُ ثَلاَثَةِ أَيَّامٍ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ "". قُلْتُ فَإِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ. قَالَ "" فَصُمْ صَوْمَ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَلاَ يَفِرُّ إِذَا لاَقَى "".
பாடம் : 59 நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு
1979. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே சொருகிவிடும்; உடல் நலிந்துவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராகமாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்” என்றார்கள்.

அதற்கு ‘‘நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவுமாட்டார்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 30
1980. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَخْبَرَنِي أَبُو الْمَلِيحِ، قَالَ دَخَلْتُ مَعَ أَبِيكَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذُكِرَ لَهُ صَوْمِي فَدَخَلَ عَلَىَّ، فَأَلْقَيْتُ لَهُ وِسَادَةً مِنْ أَدَمٍ، حَشْوُهَا لِيفٌ، فَجَلَسَ عَلَى الأَرْضِ، وَصَارَتِ الْوِسَادَةُ بَيْنِي وَبَيْنَهُ. فَقَالَ "" أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةُ أَيَّامٍ "". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" خَمْسًا "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" سَبْعًا "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" تِسْعًا "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" إِحْدَى عَشْرَةَ "". ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ صَوْمَ فَوْقَ صَوْمِ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ شَطْرَ الدَّهْرِ، صُمْ يَوْمًا، وَأَفْطِرْ يَوْمًا "".
பாடம் : 59 நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு
1980. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அபுல்மலீஹ் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் உம்முடைய தந்தை (ஸைத் பின் அம்ர்லிரஹ்) அவர்களு டன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) அறி வித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப் பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்து வைத்தேன். அவர்கள் (அதில் அமராமல்) தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. அப்போது, ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக என்னால் நோன்பு நோற்க இயலும்)” என்றேன்; அவர்கள் ‘‘(மாதத்தில்) ஐந்து நாட்கள்” என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே...!” என்றேன்; ‘‘ஒன்பது நாட்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; ‘‘பதினொன்று நாட்கள்” என்றார்கள். பிறகு, ‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்குமேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும். எனவே, ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1981. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ حَدَّثَنِي أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَوْصَانِي خَلِيلِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَىِ الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ.
பாடம் : 60 மாதந்தோறும் பதிமூன்று, பதி நான்கு, பதினைந்து ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாட்களில் (அய்யாமுல் பீள்) நோன்பு நோற்றல்
1981. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், ‘ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்குமுன் வித்ர் தொழுகையைத் தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.44

அத்தியாயம் : 30
1982. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي خَالِدٌ ـ هُوَ ابْنُ الْحَارِثِ ـ حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أُمِّ سُلَيْمٍ، فَأَتَتْهُ بِتَمْرٍ وَسَمْنٍ، قَالَ "" أَعِيدُوا سَمْنَكُمْ فِي سِقَائِهِ، وَتَمْرَكُمْ فِي وِعَائِهِ، فَإِنِّي صَائِمٌ "". ثُمَّ قَامَ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَصَلَّى غَيْرَ الْمَكْتُوبَةِ، فَدَعَا لأُمِّ سُلَيْمٍ، وَأَهْلِ بَيْتِهَا، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي خُوَيْصَةً، قَالَ "" مَا هِيَ "". قَالَتْ خَادِمُكَ أَنَسٌ. فَمَا تَرَكَ خَيْرَ آخِرَةٍ وَلاَ دُنْيَا إِلاَّ دَعَا لِي بِهِ قَالَ "" اللَّهُمَّ ارْزُقْهُ مَالاً وَوَلَدًا وَبَارِكْ لَهُ "". فَإِنِّي لَمِنْ أَكْثَرِ الأَنْصَارِ مَالاً. وَحَدَّثَتْنِي ابْنَتِي أُمَيْنَةُ أَنَّهُ دُفِنَ لِصُلْبِي مَقْدَمَ حَجَّاجٍ الْبَصْرَةَ بِضْعٌ وَعِشْرُونَ وَمِائَةٌ. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ، سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 61 ஒரு கூட்டத்தாரிடம் சென்று, அங்கு நோன்பை முறிக்காமல் இருத்தல்
1982. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது உம்மு சுலைம் அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழத்தை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்றார்கள்.45

பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத (கூடுதல்) தொழுகையைத் தொழுதார்கள், உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவருடைய குடும்பத் தாருக்காகவும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உரியதொன்று உள்ளது” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது என்ன?” என்று கேட்டார்கள். ‘‘உங்கள் ஊழியர் அனஸ்தான்” என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இம்மை, மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித் தார்கள். ‘‘இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு வளம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்சாரிகளிலேயே அதிக செல்வம் உள்ளவனாக இருக்கிறேன்.

என் (மூத்த) மகள் உமைனா என்னிடம் தெரிவித்தார்:

எனக்குப் பிறந்த நூற்று இருபதுக்கும் அதிகமான பிள்ளைகள் (இறந்து) அடக்கம் செய்யப்பட்டுவிட்டனர். அது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (இராக்கிலுள்ள) பஸ்ராவுக்கு வந்த காலமாகும்.46

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 30
1983. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ غَيْلاَنَ،. وَحَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ سَأَلَهُ ـ أَوْ سَأَلَ رَجُلاً وَعِمْرَانُ يَسْمَعُ ـ فَقَالَ "" يَا أَبَا فُلاَنٍ أَمَا صُمْتَ سَرَرَ هَذَا الشَّهْرِ "". قَالَ أَظُنُّهُ قَالَ يَعْنِي رَمَضَانَ. قَالَ الرَّجُلُ لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ "". لَمْ يَقُلِ الصَّلْتُ أَظُنُّهُ يَعْنِي رَمَضَانَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ ثَابِثٌ عَنْ مُطَرِّفٍ عَنْ عِمْرَانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" مِنْ سَرَرِ شَعْبَانَ "".
பாடம் : 62 மாதக் கடைசியில் நோன்பு நோற்றல்
1983. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், அல்லது இம்ரான் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மற்றொரு மனிதரிடம், ‘‘இன்னாரே! இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் (ரமளான்) நோன்பை முடித்தவுடன் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நுஅமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தைக் கருத்தில் கொண்டே, ‘இம்மாதம்' என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ பின் மைமூன்) கூறியதாக நான் நினைக்கிறேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஸல்த் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ரமளானைப் பற்றிய இக்குறிப்பு இடம்பெறவில்லை.

ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘ஷஅபான் மாதத்தின் இறுதியில்' என்று காணப்படுகிறது.47

அத்தியாயம் : 30
1984. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ، قَالَ سَأَلْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ قَالَ نَعَمْ. زَادَ غَيْرُ أَبِي عَاصِمٍ أَنْ يَنْفَرِدَ بِصَوْمٍ.
பாடம் : 63 வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றல் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்றால் அதை முறிப்பது அவசியமாகும்.48
1984. முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்பதைத் தடை செய்தார்களா என்று கேட்டேன். ஜாபிர் (ரலி) அவர்கள், ‘ஆம்' என்றார்கள்.

அதாவது வெள்ளிக்கிழமை மட்டும் தனியாக நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள்லிஎன்று அறிவிப்பாளர் அபூஆஸிம் (ரஹ்) அல்லாத மற்றவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளனர்.


அத்தியாயம் : 30
1985. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ، إِلاَّ يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ "".
பாடம் : 63 வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றல் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்றால் அதை முறிப்பது அவசியமாகும்.48
1985. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்குமுன் ஒரு நாளைச் சேர்க்காமல், அல்லது அதற்குப்பின் ஒரு நாளைச் சேர்க்காமல் (அன்று மட்டும்) நோன்பு நோற்க வேண்டாம்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1986. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، ح. وَحَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهْىَ صَائِمَةٌ فَقَالَ "" أَصُمْتِ أَمْسِ "". قَالَتْ لاَ. قَالَ "" تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا "". قَالَتْ لاَ. قَالَ "" فَأَفْطِرِي "". وَقَالَ حَمَّادُ بْنُ الْجَعْدِ سَمِعَ قَتَادَةَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ أَنَّ جُوَيْرِيَةَ حَدَّثَتْهُ فَأَمَرَهَا فَأَفْطَرَتْ.
பாடம் : 63 வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றல் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்றால் அதை முறிப்பது அவசியமாகும்.48
1986. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், வெள்ளிக்கிழமை அன்று என்னிடம் வந்தார்கள். அப்போது நான் நோன்பு நோற்றிருந்தேன். அப்போது அவர்கள், ‘‘நேற்று நோன்பு நோற்றாயா?” என்று கேட்டார்கள். நான் ‘‘இல்லை” என்றேன். ‘‘நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கும் ‘‘இல்லை” என்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியானால் நோன்பை முறித்துவிடு!” என்றார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹம்மாத் பின் அல்ஜஅத் என்பாரின் அறிவிப்பில், ‘‘நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை விட்டு விட்டேன்” என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம் : 30
1987. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قُلْتُ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْتَصُّ مِنَ الأَيَّامِ شَيْئًا قَالَتْ لاَ، كَانَ عَمَلُهُ دِيمَةً، وَأَيُّكُمْ يُطِيقُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُطِيقُ
பாடம் : 64 (நோன்பு நோற்பதற்கென) சில நாட்களைக் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கலாமா?49
1987. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை (வணக்க வழிபாட்டிற்காக)த் தேர்ந்தெடுத்துக் கொள் வார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘இல்லை; அவர்களின் வழிபாடு (அமல்) நிரந்தரமானதாக இருக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யாரால்தான் செய்ய முடியும்?” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 30
1988. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، قَالَ حَدَّثَنِي عُمَيْرٌ، مَوْلَى أُمِّ الْفَضْلِ أَنَّ أُمَّ، الْفَضْلِ حَدَّثَتْهُ ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عُمَيْرٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْعَبَّاسِ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ أَنَّ نَاسًا تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ. وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ. فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهْوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ فَشَرِبَهُ.
பாடம் : 65 அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்றல்50
1988. உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘நபி (ஸல்) அவர்கள் அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா?' என்பது குறித்து என்னருகே சிலர் விவாதித்தனர். சிலர் ‘அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள்' என்று கூறினர். வேறுசிலர் ‘நோன்பு நோற்றிருக்கவில்லை' என்றார்கள். அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் அருந்தினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 30
1989. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ ـ أَوْ قُرِئَ عَلَيْهِ ـ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلاَبٍ وَهْوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ، فَشَرِبَ مِنْهُ، وَالنَّاسُ يَنْظُرُونَ.
பாடம் : 65 அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்றல்50
1989. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பது தொடர்பாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத் தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல் லாரும் பார்த்துக்கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தினார்கள்.

அத்தியாயம் : 30
1990. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَقَالَ هَذَانِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صِيَامِهِمَا يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْيَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ. قَالَ أَبُو عَبْد اللَّهِ قَالَ ابْنُ عُيَيْنَةَ مَنْ قَالَ مَوْلَى ابْنِ أَزْهَرَ فَقَدْ أَصَابَ وَمَنْ قَالَ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَدْ أَصَابَ
பாடம் : 66 நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) அன்று நோன்பு நோற்றல்51
1990. அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பெருநாளில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண் ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும்.

அபூஅப்தில்லாஹ் புகாரீ (ஆகிய நான்) கூறுகிறேன்:

இதன் அறிவிப்பாளரான அபூஉபைத் (ரஹ்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும் (இரு விதமாகச்) சொல்வர். இரண்டும் சரிதான்லிஎன்று இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அபூஉபைத் அவர்களின் வாரிசுரிமை இவ்விருவருக்கும் இருந்ததே இதற்குக் காரணம்.)


அத்தியாயம் : 30
1991. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ يَوْمِ الْفِطْرِ وَالنَّحْرِ، وَعَنِ الصَّمَّاءِ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ. وَعَنْ صَلاَةٍ، بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ.
பாடம் : 66 நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) அன்று நோன்பு நோற்றல்51
1991. 1992 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜு பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதையும், இரு தோள்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக்கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக்கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும், சுப்ஹுக்குப் பிறகும் அஸ்ர் தொழுகைக்குப் பிறகும் தொழு வதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள்.

அத்தியாயம் : 30
1993. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ مِينَا، قَالَ سَمِعْتُهُ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ يُنْهَى عَنْ صِيَامَيْنِ، وَبَيْعَتَيْنِ الْفِطْرِ، وَالنَّحْرِ،، وَالْمُلاَمَسَةِ، وَالْمُنَابَذَةِ،.
பாடம் : 67 ஹஜ்ஜு பெருநாள் (ஈதுல் அள்ஹா) அன்று நோன்பு நோற்றல்
1993. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெருநாள் அன்றும், ஹஜ்ஜு பெருநாள் அன்றும் நோன்பு நோற்பதும் பொருளைத் தொடல் (முலாமசா), பொருளை விட்டெறிதல் (முனாபதா) ஆகிய இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள் ளன.52


அத்தியாயம் : 30