1954. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، سَمِعْتُ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَا هُنَا، وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَا هُنَا، وَغَرَبَتِ الشَّمْسُ، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "".
பாடம் : 43 நோன்பாளி எப்போது நோன்பு துறப்பது செல்லும்? சூரியனின் வட்டம் மறைந்தபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நோன்பு துறந்தார்கள்.
1954. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் மறைந்து, இந்த (கிழக்கு) திசையிலிருந்து இரவு (இருள்) முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் (வெளிச்சம்) பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்!

இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1955. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، وَهُوَ صَائِمٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ لِبَعْضِ الْقَوْمِ "" يَا فُلاَنُ قُمْ، فَاجْدَحْ لَنَا "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمْسَيْتَ. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ فَلَوْ أَمْسَيْتَ. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". قَالَ إِنَّ عَلَيْكَ نَهَارًا. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". فَنَزَلَ فَجَدَحَ لَهُمْ، فَشَرِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "".
பாடம் : 43 நோன்பாளி எப்போது நோன்பு துறப்பது செல்லும்? சூரியனின் வட்டம் மறைந்தபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நோன்பு துறந்தார்கள்.
1955. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் மக்களில் ஒருவரிடம், ‘‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட் டுமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள்.

அப்போதும் அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே!” என்று சொன்னார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அப்போது அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘‘இரவு (இருள்) இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்” என்றார் கள்.32

அத்தியாயம் : 30
1956. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ قَالَ سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ صَائِمٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمْسَيْتَ. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عَلَيْكَ نَهَارًا. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". فَنَزَلَ، فَجَدَحَ، ثُمَّ قَالَ "" إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "". وَأَشَارَ بِإِصْبَعِهِ قِبَلَ الْمَشْرِقِ.
பாடம் : 44 ஒருவர் தம்மால் இயன்ற தண்ணீர் போன்ற பொருட்களால் நோன்பு துறப்பது
1956. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் (ஒருவரிடம்), ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார்.

பின்னர், ‘‘நீங்கள் இங்கிருந்து (கிழக்கி லிருந்து) இரவு (இருள்) முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்!” என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக்காட்டிக் கூறினார்கள்.33

அத்தியாயம் : 30
1957. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ "".
பாடம் : 45 விரைவாக நோன்பு துறத்தல்34
1957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப் பார்கள்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1958. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ سُلَيْمَانَ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَصَامَ حَتَّى أَمْسَى، قَالَ لِرَجُلٍ "" انْزِلْ، فَاجْدَحْ لِي "". قَالَ لَوِ انْتَظَرْتَ حَتَّى تُمْسِيَ. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لِي، إِذَا رَأَيْتَ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "".
பாடம் : 45 விரைவாக நோன்பு துறத்தல்34
1958. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும்வரை காத்திருக்கலாமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு (இருள்) இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1959. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ أَفْطَرْنَا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ غَيْمٍ، ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ. قِيلَ لِهِشَامٍ فَأُمِرُوا بِالْقَضَاءِ قَالَ بُدٌّ مِنْ قَضَاءٍ. وَقَالَ مَعْمَرٌ سَمِعْتُ هِشَامًا لاَ أَدْرِي أَقْضَوْا أَمْ لاَ.
பாடம் : 46 (சூரியன் மறைந்துவிட்டது என்று எண்ணி) நோன்பு துறந்தபின் சூரியன் தென்பட்டால்...?35
1959. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பு துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர்கள் (அந்நோன்பைத்) திரும்ப நிறைவேற்றுமாறு கட்டளையிடப்பட் டார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘திரும்ப நிறைவேற்றுவது அவசியமில்லாமல் போகுமா?” என்று கேட்டார்கள். (அதாவது ‘களா' செய்ய வேண்டும்.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘அவர்கள் ‘களா’ செய்தார்களா; இல்லையா என்பது எனக்குத் தெரியாது” என்று ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறியதாக மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1960. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ "" مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلْيَصُمْ "". قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ، حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ.
பாடம் : 47 சிறுவர்கள் நோன்பு நோற்றல்36 ரமளானில் போதையுடன் இருந்த ஒருவரிடம், ‘‘உனக்குக் கேடு உண்டாகட் டும்! நம் சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதுடன், (மது அருந்திய தற்குத் தண்டனையாக எண்பது சாட்டை) அடிகளை அவருக்கு வழங்கினார்கள்.
1960. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் (மதீனா புறநகரங்களில் உள்ள) அன்சாரி களின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘‘(இன்று) யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பிருந்து) நிறைவு செய்யட் டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன் பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்.

நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் (தயார்) செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அத்தியாயம் : 30
1961. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُوَاصِلُوا "". قَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ، إِنِّي أُطْعَمُ وَأُسْقَى، أَوْ إِنِّي أَبِيتُ أُطْعَمُ وَأُسْقَى "".
பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், இரவில் நோன்பு இல்லை என்ற கருத்தும்37 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இரவுவரை நோன்பை முழுமைப் படுத்துங்கள். (2:187) நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்கள்மீது இரக்கம் கொண்டும் அவர்க(ளின் உயிர்க)ளைக் காப்பதற்காகவும் மக்கள் தொடர்நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள். (கடமை இல்லாததைக் கடமையாக்கிக் கொண்டு வழிபாடுகளிலேயே) மூழ்கிப் போவது வெறுக்கத் தக்கதாகும்.
1961. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்” என்று (மக்களி டம்) கூறினார்கள். அப்போது ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக எனக்கு உணவும் பானமும் (இறைவனிடமிருந்து) வழங்கப்படுகின்றன” என்றோ, ‘‘உணவும் பானமும் எனக்கு வழங்கப்படும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றோ கூறினார்கள்.38


அத்தியாயம் : 30
1962. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ. قَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أُطْعَمُ وَأُسْقَى "".
பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், இரவில் நோன்பு இல்லை என்ற கருத்தும்37 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இரவுவரை நோன்பை முழுமைப் படுத்துங்கள். (2:187) நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்கள்மீது இரக்கம் கொண்டும் அவர்க(ளின் உயிர்க)ளைக் காப்பதற்காகவும் மக்கள் தொடர்நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள். (கடமை இல்லாததைக் கடமையாக்கிக் கொண்டு வழிபாடுகளிலேயே) மூழ்கிப் போவது வெறுக்கத் தக்கதாகும்.
1962. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக எனக்கு உணவும் பானமும் வழங்கப்படுகின்றன” என்றார்கள்.


அத்தியாயம் : 30
1963. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تُوَاصِلُوا، فَأَيُّكُمْ إِذَا أَرَادَ أَنْ يُوَاصِلَ فَلْيُوَاصِلْ حَتَّى السَّحَرِ "". قَالُوا فَإِنَّكَ تُوَاصِلُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي أَبِيتُ لِي مُطْعِمٌ يُطْعِمُنِي وَسَاقٍ يَسْقِينِ "".
பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், இரவில் நோன்பு இல்லை என்ற கருத்தும்37 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இரவுவரை நோன்பை முழுமைப் படுத்துங்கள். (2:187) நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்கள்மீது இரக்கம் கொண்டும் அவர்க(ளின் உயிர்க)ளைக் காப்பதற்காகவும் மக்கள் தொடர்நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள். (கடமை இல்லாததைக் கடமையாக்கிக் கொண்டு வழிபாடுகளிலேயே) மூழ்கிப் போவது வெறுக்கத் தக்கதாகும்.
1963. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர்நோன்பு நோற்க நாடினால் சஹர்வரை அவ்வாறு (செய்து விட்டு, சஹர்) செய்துகொள்ளட்டும்!” என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு உணவளிக்கவும் (தண்ணீர்) புகட்டவும் ஒருவன் இருக்கின்றான். இந்நிலையில்தான் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றார்கள்.


அத்தியாயம் : 30
1964. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدٌ، قَالاَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ، رَحْمَةً لَهُمْ فَقَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَمْ يَذْكُرْ عُثْمَانُ رَحْمَةً لَهُمْ.
பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், இரவில் நோன்பு இல்லை என்ற கருத்தும்37 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இரவுவரை நோன்பை முழுமைப் படுத்துங்கள். (2:187) நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்கள்மீது இரக்கம் கொண்டும் அவர்க(ளின் உயிர்க)ளைக் காப்பதற்காகவும் மக்கள் தொடர்நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள். (கடமை இல்லாததைக் கடமையாக்கிக் கொண்டு வழிபாடுகளிலேயே) மூழ்கிப் போவது வெறுக்கத் தக்கதாகும்.
1964. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள்மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உணவளிக்கிறான்; (நீர்) புகட்டுகிறான்” என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘மக்கள்மீது இரக்கப்பட்டு' என்ற வாசகம் இடம் பெறவில்லை.

அத்தியாயம் : 30
1965. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ فِي الصَّوْمِ فَقَالَ لَهُ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ إِنَّكَ تُوَاصِلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" وَأَيُّكُمْ مِثْلِي إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ "". فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ وَاصَلَ بِهِمْ يَوْمًا ثُمَّ يَوْمًا، ثُمَّ رَأَوُا الْهِلاَلَ، فَقَالَ "" لَوْ تَأَخَّرَ لَزِدْتُكُمْ "". كَالتَّنْكِيلِ لَهُمْ، حِينَ أَبَوْا أَنْ يَنْتَهُوا.
பாடம் : 49 அதிகமாகத் தொடர்நோன்பு நோற்பவருக்குக் கண்டனம் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு (தொடர்நோன்பு நோற்பதைக்) கண்டித் திருப்பதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1965. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றார்கள்.

தொடர்நோன்பிலிருந்து மக்கள் விலகிக்கொள்ள மறுத்தபோது ஒரு நாள் அவர்களைத் தொடர்நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இம்மாதம் (தலைப்பிறை) இன்னும் தள்ளிப்போயிருந்தால், (தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்” என்று மக்கள் தொடர்நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போன்று கூறினார்கள்.


அத்தியாயம் : 30
1966. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِيَّاكُمْ وَالْوِصَالَ "". مَرَّتَيْنِ قِيلَ إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ، فَاكْلَفُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ "".
பாடம் : 49 அதிகமாகத் தொடர்நோன்பு நோற்பவருக்குக் கண்டனம் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு (தொடர்நோன்பு நோற்பதைக்) கண்டித் திருப்பதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1966. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘தொடர்நோன்பு நோற்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று இரண்டு முறை கூறினார்கள். ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே, நற்செயல்களில் உங்களால் இயன்ற சுமையை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று விடை யளித்தார்கள்.

அத்தியாயம் : 30
1967. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تُوَاصِلُوا، فَأَيُّكُمْ أَرَادَ أَنْ يُوَاصِلَ فَلْيُوَاصِلْ حَتَّى السَّحَرِ "". قَالُوا فَإِنَّكَ تُوَاصِلُ، يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي أَبِيتُ لِي مُطْعِمٌ يُطْعِمُنِي وَسَاقٍ يَسْقِينِ "".
பாடம் : 50 சஹர்வரை தொடர்நோன்பு நோற்றல்
1967. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள். அப்படி உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்பதாக இருந்தால், சஹர்வரை நோற்று(விட்டுப் பின்னர் சஹர் செய்து)கொள்ளட்டும்!” என்று கூறினார்கள். மக்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே!?” என்று கேட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு உணவளிப்பவனும் (நீர்) புகட்டுபவனும் உள்ள நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1968. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ سَلْمَانَ، وَأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً. فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا. فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ، فَصَنَعَ لَهُ طَعَامًا. فَقَالَ كُلْ. قَالَ فَإِنِّي صَائِمٌ. قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ. قَالَ فَأَكَلَ. فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ. قَالَ نَمْ. فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ. فَقَالَ نَمْ. فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمِ الآنَ. فَصَلَّيَا، فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ. فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَ سَلْمَانُ "".
பாடம் : 51 கூடுதலான நோன்பைக் கைவிடுமாறு ஒருவர் தம் சகோதரரை வற்புறுத்த, அவர் அதற்கு இணங்கினால் ‘களா' செய்ய வேண்டிய தில்லை என்ற கருத்து
1968. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், சல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) அவர்களையும் அபுத் தர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று அவரிடம் சல்மான் கேட்டார்.

அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், ‘‘உங்கள் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை” என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் அங்கு வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், ‘உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, ‘‘நான் நோன்பு நோற்றிருக் கிறேன்” என்றார். சல்மான், ‘‘நீர் உண்ணாமல் நான் உண்ணமாட்டேன்” என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவு வந்ததும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், ‘உறங்குவீராக!’ என்று கூறியதும் அபுத்தர்தா உறங்கினார்கள்.

பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபுத்தர்தா எழுந்திருக்கப்போனார். அப்போதும் சல்மான், ‘உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், ‘‘இப்போது எழுவீராக!” என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ‘‘நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!” என்று கூறினார்கள்.

பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘சல்மான் உண்மையையே கூறினார்” என்றார்கள்.39

அத்தியாயம் : 30
1969. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ. فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلاَّ رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ.
பாடம் : 52 ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்றல்
1969. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை.


அத்தியாயம் : 30
1970. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُ قَالَتْ، لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، وَكَانَ يَقُولُ "" خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَا دُووِمَ عَلَيْهِ، وَإِنْ قَلَّتْ "" وَكَانَ إِذَا صَلَّى صَلاَةً دَاوَمَ عَلَيْهَا.
பாடம் : 52 ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்றல்
1970. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘‘நற்செயல் களில் உங்களில் இயன்றதையே செய்யுங்கள். நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான்” என்றும் அவர்கள் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழப்படும் தொழுகையே நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

அத்தியாயம் : 30
1971. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَا صَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَهْرًا كَامِلاً قَطُّ غَيْرَ رَمَضَانَ، وَيَصُومُ حَتَّى يَقُولَ الْقَائِلُ لاَ وَاللَّهِ لاَ يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى يَقُولَ الْقَائِلُ لاَ وَاللَّهِ لاَ يَصُومُ.
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதும் நோன்பை விட்டதும்
1971. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமை யாக நோன்பு நோற்கமாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பை விடவே மாட்டார்கள்!” என்று ஒருவர் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். ‘‘அல்லாஹ்வின் மீதாணை யாக! இனிமேல் நோன்பு நோற்கவே மாட்டார்கள்” என்று ஒருவர் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள்.


அத்தியாயம் : 30
1972. حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُفْطِرُ مِنَ الشَّهْرِ، حَتَّى نَظُنَّ أَنْ لاَ يَصُومَ مِنْهُ، وَيَصُومُ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يُفْطِرَ مِنْهُ شَيْئًا، وَكَانَ لاَ تَشَاءُ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلاَّ رَأَيْتَهُ، وَلاَ نَائِمًا إِلاَّ رَأَيْتَهُ. وَقَالَ سُلَيْمَانُ عَنْ حُمَيْدٍ أَنَّهُ سَأَلَ أَنَسًا فِي الصَّوْمِ.
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதும் நோன்பை விட்டதும்
1972. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் நோன்பை விட்டு விடுவார்கள்; அறவே இந்த மாதம் நோன்பை அவர்கள் அறவே விடமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள்.

அவர்களை இரவில் தொழும் நிலையில் நீர் காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்; அவர்களை (இரவில்) உறங்கக்கூடியவர்களாக நீர் காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்.

நோன்பு தொடர்பாக இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.


அத்தியாயம் : 30
1973. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، أَخْبَرَنَا حُمَيْدٌ، قَالَ سَأَلْتُ أَنَسًا رضى الله عنه عَنْ صِيَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا كُنْتُ أُحِبُّ أَنْ أَرَاهُ مِنَ الشَّهْرِ صَائِمًا إِلاَّ رَأَيْتُهُ وَلاَ مُفْطِرًا إِلاَّ رَأَيْتُهُ، وَلاَ مِنَ اللَّيْلِ قَائِمًا إِلاَّ رَأَيْتُهُ، وَلاَ نَائِمًا إِلاَّ رَأَيْتُهُ، وَلاَ مَسِسْتُ خَزَّةً وَلاَ حَرِيرَةً أَلْيَنَ مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلاَ شَمِمْتُ مِسْكَةً وَلاَ عَبِيرَةً أَطْيَبَ رَائِحَةً مِنْ رَائِحَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதும் நோன்பை விட்டதும்
1973. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழக்கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்.40

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைவிட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தொட்டதில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நறு மணத்தைவிட நல்ல கஸ்தூரியையோ அம்பரையோ நான் முகர்ந்ததுமில்லை.

அத்தியாயம் : 30