1994. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذٌ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ رَجُلٌ نَذَرَ أَنْ يَصُومَ يَوْمًا، قَالَ أَظُنُّهُ قَالَ الاِثْنَيْنِ، فَوَافَقَ يَوْمَ عِيدٍ. فَقَالَ ابْنُ عُمَرَ أَمَرَ اللَّهُ بِوَفَاءِ النَّذْرِ، وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ هَذَا الْيَوْمِ.
பாடம் : 67 ஹஜ்ஜு பெருநாள் (ஈதுல் அள்ஹா) அன்று நோன்பு நோற்றல்
1994. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருந்தார்லி அந்த மனிதர் ‘‘(அவர்) திங்கட்கிழமை யன்று (நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருந்தார்)” என்று கூறியதாக நான் நினைக்கிறேன்லி அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது” என்று சொன்னார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்; நபி (ஸல்) அவர்கள் இந்த(ப் பெருநாள்) தினத் தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.53


அத்தியாயம் : 30
1995. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، قَالَ سَمِعْتُ قَزَعَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً قَالَ سَمِعْتُ أَرْبَعًا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَعْجَبْنَنِي قَالَ "" لاَ تُسَافِرِ الْمَرْأَةُ مَسِيرَةَ يَوْمَيْنِ إِلاَّ وَمَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلاَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الأَقْصَى، وَمَسْجِدِي هَذَا "".
பாடம் : 67 ஹஜ்ஜு பெருநாள் (ஈதுல் அள்ஹா) அன்று நோன்பு நோற்றல்
1995. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் (மஹ்ரம்) ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது; நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது; சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது.

(அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெங்கும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.

அத்தியாயம் : 30
1996. وَقَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي كَانَتْ، عَائِشَةُ ـ رضى الله عنها ـ تَصُومُ أَيَّامَ مِنًى، وَكَانَ أَبُوهَا يَصُومُهَا.
பாடம் : 68 (துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய) ‘அய்யாமுத் தஷ்ரீக்' நாட்களில் நோன்பு நோற்றல்54
1996. யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் மினாவில் தங்கக்கூடிய (தஷ்ரீக் உடைய) நாட்களில் நோன்பு நோற்பார்கள்” என்று தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஹிஷாமின் தந்தை உர்வா (ரஹ்) அவர்களும் அந்த நாட்களில் நோன்பு நோற்பார்கள்.55


அத்தியாயம் : 30
1997. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عِيسَى، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ،. وَعَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهم ـ قَالاَ لَمْ يُرَخَّصْ فِي أَيَّامِ التَّشْرِيقِ أَنْ يُصَمْنَ، إِلاَّ لِمَنْ لَمْ يَجِدِ الْهَدْىَ.
பாடம் : 68 (துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய) ‘அய்யாமுத் தஷ்ரீக்' நாட்களில் நோன்பு நோற்றல்54
1997. 1998 ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் ‘தஷ்ரீக்' உடைய நாட் களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்பட வில்லை.


அத்தியாயம் : 30
1999. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ الصِّيَامُ لِمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، إِلَى يَوْمِ عَرَفَةَ، فَإِنْ لَمْ يَجِدْ هَدْيًا وَلَمْ يَصُمْ صَامَ أَيَّامَ مِنًى. وَعَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ مِثْلَهُ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ.
பாடம் : 68 (துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய) ‘அய்யாமுத் தஷ்ரீக்' நாட்களில் நோன்பு நோற்றல்54
1999. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘தமத்துஉ' முறையில் இஹ்ராம் கட்டியவரே அரஃபா நாள்வரை நோன்பு நோற்கலாம். குர்பானிப் பிராணியும் கிடைக்கவில்லை; நோன்பும் நோற்க வில்லை என்றால் மினாவில் தங்கும் நாட்களில் நோன்பு நோற்கலாம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்களும் இவ்வாறு கூறியதாக உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 30
2000. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ "" إِنْ شَاءَ صَامَ "".
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2000. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
2001. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ.
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2001. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டிருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பிய வர் (ஆஷூரா தினத்தில்) நோன்பு நோற்றார்; விரும்பாதவர் விட்டுவிட்டார்.


அத்தியாயம் : 30
2002. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تَرَكَ يَوْمَ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ تَرَكَهُ.
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2002. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று (மக்களையும்) நோன்பு நோற்குமாறு பணித்தார்கள்; ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டார்கள். விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்றார்; விரும்பாதவர் அதை விட்டு விட்டார்.


அத்தியாயம் : 30
2003. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ـ رضى الله عنهما ـ يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" هَذَا يَوْمُ عَاشُورَاءَ، وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ، وَأَنَا صَائِمٌ، فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ "".
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2003. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற வருடம் ஆஷூரா நாளில் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது நின்றுகொண்டு, ‘‘மதீனா வாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இது ஆஷூரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டுவிடட்டும்' என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று சொன்னார்கள்.57


அத்தியாயம் : 30
2004. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ "" مَا هَذَا "". قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ، هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ، فَصَامَهُ مُوسَى. قَالَ "" فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ "". فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ.
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2004. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘‘இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர் கள், ‘‘இது நல்ல நாள். இஸ்ரவேலர்களை, அவர்களின் எதிரியிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் நோன்பு நோற் றார்கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களைவிட மூசாவுக்கு மிகவும் உரியவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக் குக்) கட்டளையும் இட்டார்கள்.


அத்தியாயம் : 30
2005. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي عُمَيْسٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَعُدُّهُ الْيَهُودُ عِيدًا، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَصُومُوهُ أَنْتُمْ "".
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2005. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆஷூரா நாளை யூதர்கள் பெரு நாளாகக் கருதிவந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்” என்று (முஸ்லிம்களிடம்) கூறினார்கள்.


அத்தியாயம் : 30
2006. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ، إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ. يَعْنِي شَهْرَ رَمَضَانَ.
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2006. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஷூரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் லிரமளான் எனும்லி இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பாகத் தேர்ந் தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.


அத்தியாயம் : 30
2007. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً مِنْ أَسْلَمَ أَنْ أَذِّنْ فِي النَّاسِ "" أَنَّ مَنْ كَانَ أَكَلَ فَلْيَصُمْ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ لَمْ يَكُنْ أَكَلَ فَلْيَصُمْ، فَإِنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ "".
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2007. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ‘‘இன்று ஆஷூரா நாளாகும்; ஆகவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பு இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்.

அத்தியாயம் : 30

2008. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِرَمَضَانَ "" مَنْ قَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 1 ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2008. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறினார்கள்:

யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடு கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 31
2009.
பாடம் : 1 ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2009. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழி படுகிறாரோ அவர் முன்பு செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதே நிலையில்தான் (மக்கள் தனியாக தராவீஹை நிறைவேற்றிவந்த நிலையில் தான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது.


அத்தியாயம் :
2010. وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ لَيْلَةً فِي رَمَضَانَ، إِلَى الْمَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلاَتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلاَءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ. ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَىِّ بْنِ كَعْبٍ، ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ قَارِئِهِمْ، قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ، وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنَ الَّتِي يَقُومُونَ. يُرِيدُ آخِرَ اللَّيْلِ، وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ.
பாடம் : 1 ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2010. அப்துர் ரஹ்மான் பின் அப்து அல்காரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பல குழுக்களாகப் பிரிந்திருந்தனர். சிலர் தனியாகத் தொழுதுகொண்டிருந்தனர். சிலரைப் பின்பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுதுகொண்டி ருந்தனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே எனக் கருதுகிறேன்” என்று கூறிவிட்டு, அதில் உறுதியான முடிவெடுத் தார்கள். பிறகு மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்கள் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வழிபடுவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வழிபடுவது சிறந்ததாகும்” என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுதுகொண்டிருந்தனர்.

இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3


அத்தியாயம் : 31
2011. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى وَذَلِكَ فِي رَمَضَانَ.
பாடம் : 1 ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2011. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் (இரவில்) தொழுதார்கள்.


அத்தியாயம் : 31
2012. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ لَيْلَةً مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي الْمَسْجِدِ، وَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ، فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ الْمَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى، فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ الْمَسْجِدُ عَنْ أَهْلِهِ، حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الْفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَىَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْتَرَضَ عَلَيْكُمْ فَتَعْجِزُوا عَنْهَا "". فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالأَمْرُ عَلَى ذَلِكَ
பாடம் : 1 ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2012. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளானில் ஒருநாள்) நள்ளிரவில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்கள் சிலரும் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றிப்) பேசிக்கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளைவிட அதிகமான மக்கள் திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ, அவர்களுடன மக்களும் தொழுதனர். காலையில் (இது குறித்து) மக்கள் பேசிக்கொண்டனர். மூன்றாம் இரவு பள்ளிவாசலில் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர்.

நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். சுப்ஹு தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, ‘‘நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்கள்மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

இதே நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.


அத்தியாயம் : 31
2013. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ يَزِيدُ فِي رَمَضَانَ، وَلاَ فِي غَيْرِهَا عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ قَالَ "" يَا عَائِشَةُ إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي "".
பாடம் : 1 ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2013. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் ‘‘ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொன்று ரக்அத்களைவிட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழவில்லை; (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்: அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் (வித்ர்) தொழுவார்கள்” என்று கூறினார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வித்ர் தொழுவதற்குமுன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷா! என் கண்கள்தான் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்காது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 31