1275. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، إِبْرَاهِيمَ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ ـ رضى الله عنه ـ أُتِيَ بِطَعَامٍ وَكَانَ صَائِمًا فَقَالَ قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَهُوَ خَيْرٌ مِنِّي، كُفِّنَ فِي بُرْدَةٍ، إِنْ غُطِّيَ رَأْسُهُ بَدَتْ رِجْلاَهُ، وَإِنْ غُطِّيَ رِجْلاَهُ بَدَا رَأْسُهُ ـ وَأُرَاهُ قَالَ ـ وَقُتِلَ حَمْزَةُ وَهُوَ خَيْرٌ مِنِّي، ثُمَّ بُسِطَ لَنَا مِنَ الدُّنْيَا مَا بُسِطَ ـ أَوْ قَالَ أُعْطِينَا مِنَ الدُّنْيَا مَا أُعْطِينَا ـ وَقَدْ خَشِينَا أَنْ تَكُونَ حَسَنَاتُنَا عُجِّلَتْ لَنَا، ثُمَّ جَعَلَ يَبْكِي حَتَّى تَرَكَ الطَّعَامَ.
பாடம் : 26
‘கஃபன்’ இடுவதற்கு ஒரேயோர் ஆடை தவிர வேறு கிடைக்கா விட்டால்...?
1275. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நோன்பாளியாக இருந்த (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டுவரப் பட்டது. அப்போது அவர்கள், “என்னை விடச் சிறந்தவரான முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அவரது உடலுக்கு ஒரு சால்வையால் ‘கஃபன்’ இடப்பட்டது. அப்போது அவரின் தலை மறைக்கப்பட்டால் அவரின் கால்கள் வெளியில் தெரிந்தன; கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது.
மேலும், ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். அவரும் என்னைவிடச் சிறந்தவர்தான் (அவரும் அது போலவே பற்றாக்குறையான சிறிய சால்வையாலேயே கஃபன் இடப்பட்டார்கள்.)
பிறகு ‘(அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டு நீங்கி, இதோ, நீங்கள் காண்கி றீர்களே) இந்த அளவு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப் பட்டன’ அல்லது ‘இந்த உலக(ச் செல்வ)த் திலிருந்து (இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவு நமக்குத் தரப்பட்டது.’ நாம் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதோ என நாம் அஞ்சுகிறோம்” என்று கூறினார்கள்.
பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை உண்ணாமல் (அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள்.
அத்தியாயம் : 23

1276. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، حَدَّثَنَا خَبَّابٌ ـ رضى الله عنه ـ قَالَ هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَلْتَمِسُ وَجْهَ اللَّهِ، فَوَقَعَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَاتَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهُوَ يَهْدِبُهَا. قُتِلَ يَوْمَ أُحُدٍ، فَلَمْ نَجِدْ مَا نُكَفِّنُهُ إِلاَّ بُرْدَةً إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلاَهُ، وَإِذَا غَطَّيْنَا رِجْلَيْهِ خَرَجَ رَأْسُهُ، فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نُغَطِّيَ رَأْسَهُ، وَأَنْ نَجْعَلَ عَلَى رِجْلَيْهِ مِنَ الإِذْخِرِ.
பாடம் : 27
தலை அல்லது பாதங்களை மட்டுமே மறைக்கின்ற கஃப னைத் தவிர வேறு ஏதும் கிடைக்காதபோது, தலை யையே மறைக்க வேண்டும்.
1276. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடி நபி (ஸல்) அவர்களுடன் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பானது. எங்களில் சிலர் தமது பிரதிபலன் எதையும் (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் இறந்துவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். எங்களில் வேறு சிலருக்கு (ஹிஜ்ரத்தின்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க்கொண்டிருக்கிறார்கள்.
முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டார் கள். அன்னாருக்கு ‘கஃபன்’ அணிவிக்க ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதைக் கொண்டு அவரது தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது.
அப்போது அவரது தலையைத் துணியால் மறைத்துவிட்டு, அவருடைய கால்களை ‘இத்கிர்’ என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

1277. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّ امْرَأَةً، جَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ فِيهَا حَاشِيَتُهَا ـ أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ قَالُوا الشَّمْلَةُ. قَالَ نَعَمْ. قَالَتْ نَسَجْتُهَا بِيَدِي، فَجِئْتُ لأَكْسُوَكَهَا. فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ، فَحَسَّنَهَا فُلاَنٌ فَقَالَ اكْسُنِيهَا، مَا أَحْسَنَهَا. قَالَ الْقَوْمُ مَا أَحْسَنْتَ، لَبِسَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ وَعَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ. قَالَ إِنِّي وَاللَّهِ مَا سَأَلْتُهُ لأَلْبَسَهَا إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ كَفَنِي. قَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ.
பாடம் : 28
நபி (ஸல்) அவர்களின் காலத் தில், முன்கூட்டியே பிரேத ஆடையை (கஃபன்) தயாராக வைத்துக்கொண்டவரை நபி (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்க வில்லை.
1277. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், “ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் ஓரத்தில் குஞ்சம் கட்டப்பட்ட சால்வை (புர்தா) ஒன்றைக் கொண்டு வந்தார்“ என்று கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். (அங்கி ருந்தோர்) “ஆம்! புர்தா என்பது சால்வைதானே!” என்றனர்.
சஹ்ல் (ரலி) அவர்கள், ஆம் எனக் கூறிவிட்டுத் தொடர்ந்தார்கள்: அப்பெண்மணி, “நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டுவந்தேன்” என்றார். அது தேவை யாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள்.
பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்துகொண்டு எங்களிடம் வந்தபோது ஒருவர், “இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணியக் கொடுத்துவிடுங்கள்” என்று கேட்டார். உடனே அங்கிருந் தோர், “நீர் செய்வது முறையன்று; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப் பட்டதால்தான் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள், கேட்பவர் களுக்குக் கொடுக்காமலிருக்கமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டுவிட்டீரே” எனக் கூறினார்கள்.
அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரண மாக) அணிந்துகொள்வதற்காகக் கேட்க வில்லை; அது எனக்குப் பிரேத ஆடை (கஃபன்) ஆகிவிட வேண்டும் என்றே கேட்டேன்” என்றார். பின்பு அது அவருக்கு கஃபனாகவே ஆகிவிட்டது என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறி னார்கள்.

1278. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أُمِّ الْهُذَيْلِ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نُهِينَا عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ، وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا.
பாடம் : 29
பிரேதத்தைப் பெண்கள் பின்தொடர்ந்து செல்லல்
1278. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிரேதத்தைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாது என (பெண்களாகிய) நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) தடுக் கப்பட்டிருந்தோம்; ஆனால், வன்மை யாக நாங்கள் தடுக்கப்படவில்லை.14

1279. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ تُوُفِّيَ ابْنٌ لأُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ دَعَتْ بِصُفْرَةٍ، فَتَمَسَّحَتْ بِهِ وَقَالَتْ نُهِينَا أَنْ نُحِدَّ أَكْثَرَ مِنْ ثَلاَثٍ إِلاَّ بِزَوْجٍ.
பாடம் : 30
கணவர் அல்லாதவருக்காகப் பெண் துக்கம் அனுசரித்தல்
1279. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் தம் மகன் இறந்த மூன்றாம் நாள் மஞ்சள் நிற வாசனைப் பொருளைக் கொண்டுவரச் சொல்லி, அதைப் பூசிக்கொண்டார்கள். மேலும், “கணவரைத் தவிர வேறு யாருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது என்று நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்” என்றும் அவர்கள் கூறினார்கள்.

1280. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ نَافِعٍ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، قَالَتْ لَمَّا جَاءَ نَعْىُ أَبِي سُفْيَانَ مِنَ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ ـ رضى الله عنها ـ بِصُفْرَةٍ فِي الْيَوْمِ الثَّالِثِ، فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّي كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً، لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا "".
பாடம் : 30
கணவர் அல்லாதவருக்காகப் பெண் துக்கம் அனுசரித்தல்
1280. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் இறப்புச் செய்தி ஷாம் (சிரியா) நாட்டி லிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரு டைய மகள்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிற வாசனைத் திரவியத்தை வரவழைத்து, தம் கன்னங்களிலும் முழங் கைகளிலும் தடவிக்கொண்டார்கள்.
மேலும், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள ஒரு பெண் தன் கணவனின் இறப்புக்காகத் தவிர, வேறு யாருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் அனுசரிக்க வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிராவிட்டால், இ(ந்த வாசனைத் திரவியமான)து எனக்குத் தேவையற்றது தான்” எனக் கூறினார்கள்.

1281. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ قَالَتْ، دَخَلْتُ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ تُحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ".
பாடம் : 30
கணவர் அல்லாதவருக்காகப் பெண் துக்கம் அனுசரித்தல்
1281. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளை யும் நம்பியுள்ள பெண், தன் கண வனைத் தவிர வேறு யாருடைய இறப் பிற்காகவும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் அனுசரிக்க வேண்டும்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், அவர்களிடம் தாம் சென்றபோது தெரிவித்ததாக ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1282. ثُمَّ دَخَلْتُ عَلَى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حِينَ تُوُفِّيَ أَخُوهَا، فَدَعَتْ بِطِيبٍ فَمَسَّتْ ثُمَّ قَالَتْ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ، غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ يَقُولُ " لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ تُحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ".
பாடம் : 30
கணவர் அல்லாதவருக்காகப் பெண் துக்கம் அனுசரித்தல்
1282. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிறகு நான், தம் சகோதரரை இழந் திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர் நறு மணம் கொண்டுவரச் சொல்லி பூசிக் கொண்டார்.
பிறகு “இது எனக்குத் தேவை யில்லைதான்; ஆயினும், ‘அல்லாஹ் வையும் மறுமை நாளையும் நம்பக் கூடிய பெண் தன் கணவனைத் தவிர வேறு யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனு சரிக்கக் கூடாது; கணவன் இறந்துவிட் டால் நான்கு மாதங்களும் பத்து நாட் களும் துக்கம் அனுசரிக்க வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றவாறு கூற நான் கேட்டிருக்கிறேன்” என்றார்.

1283. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ فَقَالَ "" اتَّقِي اللَّهَ وَاصْبِرِي "". قَالَتْ إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي، وَلَمْ تَعْرِفْهُ. فَقِيلَ لَهَا إِنَّهُ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَأَتَتْ باب النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ فَقَالَتْ لَمْ أَعْرِفْكَ. فَقَالَ "" إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى "".
பாடம் : 31
அடக்கத் தலங்களைச் சந்திப் பது (ஸியாரத்துல் குபூர்)
1283. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடக்கத் தலம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு” என்றார்கள். அதற்கு அப்பெண், “என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துயரம் உமக்கு ஏற்படவில்லை” என்று -நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல்- கூறினார்.
அ(வரிடம் உரையாடிய)வர் நபி (ஸல்) அவர்கள் எனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தார். -அங்கே நபியவர் களுக்குக் காவலாளிகள் யாரும் இருக்கவில்லை- நான் உங்களை (யாரென) அறியவில்லை” என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்.
அப்போது “பொறுமை என்பது, துன்பம் தாக்கிய ஆரம்பத்தில் (கை கொள்வது)தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.15

1284. حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ فَائْتِنَا. فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ وَيَقُولُ "" إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ "". فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ ـ قَالَ حَسِبْتُهُ أَنَّهُ قَالَ ـ كَأَنَّهَا شَنٌّ. فَفَاضَتْ عَيْنَاهُ. فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا فَقَالَ "" هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ "".
பாடம் : 32
“குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி
இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16
ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18)
மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1284. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மகள் (ஸைனப்-ரலி) தம் மகன் இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப்பியதோடு, “எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்ப்பீராக!” என்றும் கூறி அனுப்பினார்கள்.
அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல், உபை பின் கஅப், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந் தனர்.
(வீட்டுக்குச் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டி ருந்த குழந்தை எடுத்துத் தரப்பட்டது. இற்றுப்போன பழைய தோல்துருத்தி போல் (குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது.) நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன.
அப்போது “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?” என சஅத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார் களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள்.

1285. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْنَا بِنْتًا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ عَلَى الْقَبْرِ ـ قَالَ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ قَالَ ـ فَقَالَ "" هَلْ مِنْكُمْ رَجُلٌ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ "". فَقَالَ أَبُو طَلْحَةَ أَنَا. قَالَ "" فَانْزِلْ "". قَالَ فَنَزَلَ فِي قَبْرِهَا.
பாடம் : 32
“குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி
இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16
ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18)
மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1285. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது அவருக்கு) அருகே நாங்கள் இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குழியின் அருகே அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்ததை நான் கண்டேன்.
“இன்றிரவு தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளாதவர் யாரேனும் உங்களில் உண்டா?”என வினவினார்கள். “நான் உள்ளேன்” என அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியவுடன், அவரை குழியினுள் இறங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவரும் (நபியவர்களின் மகளுடைய) குழிக்குள் இறங்கினார்.17

1286. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ تُوُفِّيَتِ ابْنَةٌ لِعُثْمَانَ ـ رضى الله عنه ـ بِمَكَّةَ وَجِئْنَا لِنَشْهَدَهَا، وَحَضَرَهَا ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ وَإِنِّي لَجَالِسٌ بَيْنَهُمَا ـ أَوْ قَالَ جَلَسْتُ إِلَى أَحَدِهِمَا. ثُمَّ جَاءَ الآخَرُ، فَجَلَسَ إِلَى جَنْبِي فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمَرَ ـ رضى الله عنهما ـ لِعَمْرِو بْنِ عُثْمَانَ أَلاَ تَنْهَى عَنِ الْبُكَاءِ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ". فَقَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَدْ كَانَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَقُولُ بَعْضَ ذَلِكَ، ثُمَّ حَدَّثَ قَالَ صَدَرْتُ مَعَ عُمَرَ ـ رضى الله عنه ـ مِنْ مَكَّةَ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ، إِذَا هُوَ بِرَكْبٍ تَحْتَ ظِلِّ سَمُرَةٍ فَقَالَ اذْهَبْ، فَانْظُرْ مَنْ هَؤُلاَءِ الرَّكْبُ قَالَ فَنَظَرْتُ فَإِذَا صُهَيْبٌ، فَأَخْبَرْتُهُ فَقَالَ ادْعُهُ لِي. فَرَجَعْتُ إِلَى صُهَيْبٍ فَقُلْتُ ارْتَحِلْ فَالْحَقْ أَمِيرَ الْمُؤْمِنِينَ. فَلَمَّا أُصِيبَ عُمَرُ دَخَلَ صُهَيْبٌ يَبْكِي يَقُولُ وَاأَخَاهُ، وَاصَاحِبَاهُ. فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَا صُهَيْبُ أَتَبْكِي عَلَىَّ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ". قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما فَلَمَّا مَاتَ عُمَرُ ـ رضى الله عنه ـ ذَكَرْتُ ذَلِكَ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ رَحِمَ اللَّهُ عُمَرَ، وَاللَّهِ مَا حَدَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ لَيُعَذِّبُ الْمُؤْمِنَ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ. وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ لَيَزِيدُ الْكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ". وَقَالَتْ حَسْبُكُمُ الْقُرْآنُ {وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى}. قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عِنْدَ ذَلِكَ وَاللَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى. قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ وَاللَّهِ مَا قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ شَيْئًا.
பாடம் : 32
“குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி
இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16
ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18)
மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1286. 1287 & 1288 அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்காவில் உஸ்மான் (ரலி) அவர் களுடைய மகள் (உம்மு அபான்) இறந்த போது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் ‘அவர்களிருவருக் கும் நடுவில்’ அல்லது ‘அவர்களில் ஒருவருக்கு அருகில்’ அமர்ந்திருந்தேன். பிறகு மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார்.
அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ர் (ரஹ்) அவர்களிடம், “(சப்த மிட்டு) அழுபவர்களை நீர் தடுக்க வேண்டாமா? ஏனெனில், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘குடும்பத் தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ எனக் கூறியுள்ளார்கள்” என்றார்கள்.
உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் ‘பைதா’ எனும் இடத்தை அடைந்தோம். அங்கு கருவேல மரத்தின் நிழலில் ஒரு பயணக் கூட்டம் நிற்பதைக் கண்டோம்.
அப்போது “நீர் சென்று அப்பயணக் கூட்டம் யாரெனப் பார்த்து வாரீர்’ என உமர் (ரலி) அவர்கள் என்னை அனுப்பினார்கள். நான் அங்கு (சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். “அவரை என்னிடம் அழைத்து வாரீர்” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸுஹைப் அவர்களிடம் சென்று, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (அமீருல் முஃமினீன்) அவர்களைச் சந்திக்கப் புறப்படுங்கள்” எனக் கூறினேன்.
பின்னர் (சிறிது காலம் கழித்து) உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது, ‘சகோதரரே! நண்பரே!’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத் தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார் களல்லவா?” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது, (அவர்கள்) இறப்பதற்குமுன் கூறிய செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உமருக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை (முஃமின்) அல்லாஹ் வேதனை செய்வான்’ எனக் கூறவில்லை. மாறாக, ‘குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் நிச்சயமாக வேதனையை அதிகமாக்குகிறான்’ என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, ‘பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறைவசனம் உங்களுக்குப் போதுமே” என்றும் கூறினார்கள்.
இதைக் கூறி முடித்த பொழுது “சிரிக்கச் செய்பவனும் அழ வைப்பவ னும் அவனே” (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
“அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இச் சொல்லைத் செவியுற்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை” என்று இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்.

1289. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا، سَمِعَتْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى يَهُودِيَّةٍ يَبْكِي عَلَيْهَا أَهْلُهَا فَقَالَ "" إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا "".
பாடம் : 32
“குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி
இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16
ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18)
மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1289. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள், அவளோ சவக்குழியில் வேதனை செய்யப்படுகி றாள்” என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத் தார் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைநம்பிக்கை யாளர்கள் தொடர்பாக இவ்வாறு கூறவில்லை).

1290. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ ـ وَهْوَ الشَّيْبَانِيُّ ـ عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا أُصِيبَ عُمَرُ ـ رضى الله عنه ـ جَعَلَ صُهَيْبٌ يَقُولُ وَاأَخَاهُ. فَقَالَ عُمَرُ أَمَا عَلِمْتَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ "".
பாடம் : 32
“குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி
இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16
ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18)
மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1290. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ‘சகோதரரே’ எனக் கூறியவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (சப்தமிட்டு) அழத் தொடங்கினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உயிரோடிருப்பவர்கள் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.18

1291. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنِ الْمُغِيرَةِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ كَذِبًا عَلَىَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "". سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ نِيحَ عَلَيْهِ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ "".
பாடம் 33
இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது வெறுக்கத் தக்கதாகும்.
“அபூசுலைமான் (காலித் பின் அல் வலீத்-ரலி) அவர்களின் இறப்புக்காக அழுது கொண்டிருக்கும் இப்பெண்களை இந்நிலையிலேயே (தடுக்காமல்) விட்டு விடுங்கள்; அவர்கள் தம் தலையில் மண்ணை வாரி இறைக்காமலும் (நக்உ) கூச்சலிடாமலும் (லக்லகா) இருக்கும்வரை” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
1291. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர்மீது கூறும் பொய்யைப் போன்ற தன்று. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப் பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட் டும்: மேலும், யாருக்காக ஒப்பாரிவைக்கப் படுகிறதோ அவர் அதனால் (மறுமை நாளில்) வேதனை செய்யப்படுவார்.
இதை முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1292. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ "". تَابَعَهُ عَبْدُ الأَعْلَى حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنَا قَتَادَةُ. وَقَالَ آدَمُ عَنْ شُعْبَةَ "" الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ عَلَيْهِ "".
பாடம் 33
இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது வெறுக்கத் தக்கதாகும்.
“அபூசுலைமான் (காலித் பின் அல் வலீத்-ரலி) அவர்களின் இறப்புக்காக அழுது கொண்டிருக்கும் இப்பெண்களை இந்நிலையிலேயே (தடுக்காமல்) விட்டு விடுங்கள்; அவர்கள் தம் தலையில் மண்ணை வாரி இறைக்காமலும் (நக்உ) கூச்சலிடாமலும் (லக்லகா) இருக்கும்வரை” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
1292. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒப்பாரிவைக்கப்படுவதால், இறந்தவர் அடக்கத் தலத்தில் வேதனை செய்யப் படுகிறார்.
இதை உமர் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஆதம் பின் இயாஸ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஷுஅபா (ரஹ்) அவர் களின் அறிவிப்பில், “உயிருள்ளவர்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படு கின்றார்” எனக் காணப்படுகிறது.

1293. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ جِيءَ بِأَبِي يَوْمَ أُحُدٍ، قَدْ مُثِّلَ بِهِ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ سُجِّيَ ثَوْبًا فَذَهَبْتُ أُرِيدُ أَنْ أَكْشِفَ عَنْهُ فَنَهَانِي قَوْمِي، ثُمَّ ذَهَبْتُ أَكْشِفُ عَنْهُ فَنَهَانِي قَوْمِي، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُفِعَ فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ فَقَالَ "" مَنْ هَذِهِ "". فَقَالُوا ابْنَةُ عَمْرٍو أَوْ أُخْتُ عَمْرٍو. قَالَ "" فَلِمَ تَبْكِي أَوْ لاَ تَبْكِي فَمَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ "".
பாடம் : 34
1293. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போர் தினத்தன்று உறுப் புகள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல்மீது ஒரு துணி போர்த்தப் பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தை யை)ப் பார்க்க விரும்பினேன். எனினும், என் சமூகத்தார் என்னைத் தடுத்து விட்டனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் சமூகத்தார் என்னைத் தடுத்துவிட்டனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரேதத்தைத் தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (பிரேதம்) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “யார் அந்தப் பெண்?” என்று கேட்டார்கள். ‘அம்ர் (பின் ஹராம்) அவர்களின் மகள்’ என்றோ அல்லது ‘அம்ருடைய சகோதரி’ என்றோ (கூடியிருந்தோர்) கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், ‘நீ ஏன் அழு கிறாய்?’ அல்லது ‘நீ அழ வேண்டாம்’ என்று கூறிவிட்டு, “பிரேதம் தூக்கப் படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அதற்கு நிழல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

1294. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زُبَيْدٌ الْيَامِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ "".
பாடம் : 35
(துக்கத்தில்) சட்டைப் பைகளை கிழித்துக்கொள்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
1294. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
(துன்பத்தில்) கன்னங்களில் அறைந்து கொள்பவரும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவரும் அறியாமைக்கால வழக்கப்படி புலம்புகின்றவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.19
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.