1255. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَسْلِ ابْنَتِهِ "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا "".
பாடம் : 10 (நீராட்டுதலை) சடலத்தின் வலப் புறத்திலிருந்து ஆரம் பித்தல்
1255. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது மகளை நீராட்டும்போது, “அவரது வலப் புறத் திலிருந்தும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பி யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1256. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا غَسَّلْنَا بِنْتَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَنَا وَنَحْنُ نَغْسِلُهَا "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ "".
பாடம் : 11 சடலத்தை நீராட்டும்போது அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்து ஆரம்பித்தல்
1256. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தபோது, “சடலத்தின் வலப் புறத்திலிருந்தும் அதன் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1257. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ تُوُفِّيَتْ بِنْتُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَنَا "" اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَنَزَعَ مِنْ حِقْوِهِ إِزَارَهُ وَقَالَ "" أَشْعِرْنَهَا إِيَّاهُ "".
பாடம் : 12 ஆணின் கீழாடையால் பெண்ணுக்கு ‘கஃபன்’ இடலாமா?
1257. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் இறந்த தும் அவர்கள், “அவரை மூன்று, அல்லது ஐந்து, அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிக மான தடவைகள் நீராட்டுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” என்று எங்களிடம் கூறினார்கள்.

நீராட்டி முடித்து அவர்களுக்குத் தெரிவித்ததும் தமது இடுப்பிலிருந்து கீழாடையைக் களைந்து, “இதை அவரது உடம்பில் சுற்றுங்கள்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 23
1258. حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَجَ، فَقَالَ " اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ". قَالَتْ فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَقَالَ " أَشْعِرْنَهَا إِيَّاهُ ". وَعَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنهما ـ بِنَحْوِهِ
பாடம் : 13 (சடலத்தை நீராட்டும்போது) கடைசியில் கற்பூரத்தைப் பயன் படுத்துதல்
1258. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துபோனதும் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்து, “அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது தேவை யென நீங்கள் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; கடைசியில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினார்கள்.

நீராட்டியபின் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்ததும், தமது கீழாடையை எங்களிடம் கொடுத்து, “இதை அவரது உடம்பில் சுற்றுங்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 23
1259. وَقَالَتْ إِنَّهُ قَالَ " اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ". قَالَتْ حَفْصَةُ قَالَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ وَجَعَلْنَا رَأْسَهَا ثَلاَثَةَ قُرُونٍ.
பாடம் : 13 (சடலத்தை நீராட்டும்போது) கடைசியில் கற்பூரத்தைப் பயன் படுத்துதல்
1259. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது நீஙகள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிக மான தடவைகள் நீராட்டுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் அந்தச் சடலத்தின் தலை (முடி)யில் மூன்று பின்னல்களை முடிந்தோம் என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாக ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் தெரி வித்தார்கள்.

அத்தியாயம் : 23
1260. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَيُّوبُ وَسَمِعْتُ حَفْصَةَ بِنْتَ سِيرِينَ، قَالَتْ حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ أَنَّهُنَّ جَعَلْنَ رَأْسَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةَ قُرُونٍ نَقَضْنَهُ ثُمَّ غَسَلْنَهُ ثُمَّ جَعَلْنَهُ ثَلاَثَةَ قُرُونٍ.
பாடம் : 14 பெண்ணின் (சடலம் நீராட்டப் படும்போது) பின்னல்களை அவிழ்த்துவிடல் நீராட்டப்படும்போது சடலத்தின் முடியை அவிழ்ப்பது தவறாகாது என இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.
1260. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் சடலத்திற்குத் தலை (முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிருந்தார்கள். பிறகு அவற் றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள்.

அத்தியாயம் : 23
1261. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ أَيُّوبَ، أَخْبَرَهُ قَالَ سَمِعْتُ ابْنَ سِيرِينَ، يَقُولُ جَاءَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ مِنَ اللاَّتِي بَايَعْنَ، قَدِمَتِ الْبِصْرَةَ، تُبَادِرُ ابْنًا لَهَا فَلَمْ تُدْرِكْهُ ـ فَحَدَّثَتْنَا قَالَتْ دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ "" اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". قَالَتْ فَلَمَّا فَرَغْنَا أَلْقَى إِلَيْنَا حَقْوَهُ فَقَالَ "" أَشْعِرْنَهَا إِيَّاهُ "". وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلاَ أَدْرِي أَىُّ بَنَاتِهِ. وَزَعَمَ أَنَّ الإِشْعَارَ الْفُفْنَهَا فِيهِ، وَكَذَلِكَ كَانَ ابْنُ سِيرِينَ يَأْمُرُ بِالْمَرْأَةِ أَنْ تُشْعَرَ وَلاَ تُؤْزَرَ.
பாடம் : 15 (பெண்) சடலத்தின் உடம்பில் துணியைச் சுற்றுவது எப்படி? (சவக்கோடியின்) ஐந்து துணிகளில் ஒன்றால் மேலாடைக்கு உள்ளே தொடைகளையும் இடுப்பையும் கட்ட வேண்டும் என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1261. இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம்) உறுதி மொழிப் பிரமாணம் அளித்திருந்த அன் சாரிப் பெண்மணி உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் தம் மகனைக் காண்பதற் காக பஸ்ராவுக்கு வந்தார். மகனைச் சந்திக்க முடியவில்லை.

அப்போது அவர் எங்களிடம் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக்கொண்டி ருந்தபோது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், “சடலத்தை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவி யுங்கள்” எனக் கூறினார்கள்.

நீராட்டி முடித்ததும் எங்களிடம் தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” என்று கூறி னார்கள்.

இதற்கு அதிகமாக இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் எதையும் அறிவிக்கவில்லை. (அவருடைய சகோதரி ஹஃப்ஸா, இதைவிடக் கூடுதல் தகவல் அறிவித்துள்ளார்.)

“நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் இவர் யார் என்பது எனக்குத் தெரிய வில்லை” என்று அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மேலும், ‘உடலில் சுற்றுதல்’ என்பதே (மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘இஷ்ஆர்’ என்பதன் பொருளாகும் என்று அய்யூப் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.

பெண் சடலத்துக்கு இடுப்பில் துணியைக் கட்டத் தேவையில்லை; ஆயினும், (உடம்பில்) சுற்ற வேண்டும் என்றே இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கட்டளையிட்டு வந்தார்கள்.

அத்தியாயம் : 23
1262. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أُمِّ الْهُذَيْلِ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ ضَفَرْنَا شَعَرَ بِنْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم. تَعْنِي ثَلاَثَةَ قُرُونٍ. وَقَالَ وَكِيعٌ قَالَ سُفْيَانُ نَاصِيَتَهَا وَقَرْنَيْهَا.
பாடம் : 16 பெண் சடலத்தின் முடி மூன்று சடைகளாகப் பின்னப்படும்.
1262. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் மகளின் முடியை மூன்று சடைகளாகப் பின்னினோம்.

“மூன்று சடைகள் என்பது முன் நெற்றிப்பகுதியில் ஒன்றும் தலையின் இரு ஓரங்களில் இரண்டும் ஆகும்” என சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்தியாயம் : 23
1263. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، قَالَ حَدَّثَتْنَا حَفْصَةُ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" اغْسِلْنَهَا بِالسِّدْرِ وِتْرًا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَضَفَرْنَا شَعَرَهَا ثَلاَثَةَ قُرُونٍ وَأَلْقَيْنَاهَا خَلْفَهَا.
பாடம் : 17 பெண் சடலத்தின் முடி பின் புறம் தொங்கவிடப்படும்.
1263. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துவிட்டதும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப்படையாக நீராட்டுங்கள். கடைசி யில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினார்கள்.

நீராட்டி முடித்து தெரிவித்ததும் தமது கீழாடையை (சடலத்தில் சுற்றுவதற்காக) எங்களிடம் தந்தார்கள். மேலும், நாங்கள் சடலத்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதைச் சடலத்தின் முதுகுப் புறமாகப் போட்டு வைத்தோம்.

அத்தியாயம் : 23
1264. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ، لَيْسَ فِيهِنَّ قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
பாடம் : 18 சவக்கோடிக்கு வெண்மையான ஆடையைப் பயன்படுத்துதல்
1264. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யமன் தேசத்தின் பருத்தியாலான வெண் ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் இடப்பட்டார்கள். அம்மூன்றில் மேலங் கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

அத்தியாயம் : 23
1265. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَوْقَصَتْهُ ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا "".
பாடம் : 19 இரு ஆடைகளில் ‘கஃபன்’ இடுதல்
1265. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஹ்ராம் கட்டிய) ஒருவர் ‘அரஃபா’ மைதானத்தில் தங்கியிருந்தார். திடீரென அவர் தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்து(க் கொன்று)விட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் நீராட்டி, இரு ஆடைகளால் சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு வாசனைத் தூள் போட வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில், (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் ‘தல்பியா’ (லப்பைக்...) சொன்னவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1266. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْصَعَتْهُ ـ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا "".
பாடம் : 20 சடலத்திற்கு வாசனைத் தூள் போடுதல்
1266. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தங்கியிருந்தார். திடீரென அவர், தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரது கழுத்தை மிதித்து முறித்துவிட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்.)

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடை களால் சவக்கோடி (கஃபன்) அணி வியுங்கள்; (மற்றவர்களுக்குப் பூசுவதைப் போன்று) அவரது உடலுக்கு வாசனைத் தூள் போடவேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில், (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் மறுமை நாளில் ‘தல்பியா’ (லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...) சொன்னவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1267. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ أَنَّ رَجُلاً، وَقَصَهُ بَعِيرُهُ، وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ مُحْرِمٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُمِسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّدًا "".
பாடம் : 21 ‘இஹ்ராம்’ கட்டியவர் இறந்தால் அவரது உடலுக்குச் சவக்கோடி அணிவிப்பது எப்படி?
1267. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அரஃபாவில்) இருந்தோம். அப்போது இஹ்ராம் கட்டியிருந்த ஒருவரை, அவரது ஒட்டகம் கழுத்தை முறித்துக் கொன்று விட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்).

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளால் ‘கஃபன்’ இடுங்கள்; நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மூடவும் வேண்டாம்; ஏனெனில், அவரை அல்லாஹ் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்...) சொன்னவராக எழுப்புவான்” எனக் கூறினார்கள்.




அத்தியாயம் : 23
1268. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، وَأَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ كَانَ رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ فَوَقَعَ عَنْ رَاحِلَتِهِ ـ قَالَ أَيُّوبُ فَوَقَصَتْهُ، وَقَالَ عَمْرٌو فَأَقْصَعَتْهُ ـ فَمَاتَ فَقَالَ "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ ـ قَالَ أَيُّوبُ يُلَبِّي، وَقَالَ عَمْرٌو ـ مُلَبِّيًا "".
பாடம் : 21 ‘இஹ்ராம்’ கட்டியவர் இறந்தால் அவரது உடலுக்குச் சவக்கோடி அணிவிப்பது எப்படி?
1268. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். -அது அவரது கழுத்தை முறித்துவிட்டது என அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள். அது அவரைக் கால்களால் மிதித்துக் கொன்றுவிட்டது என அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- எனவே, அவர் இறந்து விட்டார்.

நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளில் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங் கள்; அவருக்கு வாசனைத் தூள் போட வேண்டாம்; அவரது தலையை மறைக் கவும் வேண்டாம்; ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்...) கூறியவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1269. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عَبْدَ، اللَّهِ بْنَ أُبَىٍّ لَمَّا تُوُفِّيَ جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَمِيصَهُ فَقَالَ "" آذِنِّي أُصَلِّي عَلَيْهِ "". فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ ـ رضى الله عنه ـ فَقَالَ أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ فَقَالَ "" أَنَا بَيْنَ خِيرَتَيْنِ قَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} "". فَصَلَّى عَلَيْهِ فَنَزَلَتْ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا}
பாடம் : 22 தைக்கப்பட்ட அல்லது தைக் கப்படாத மேலங்கியால் சவக்கோடி (கஃபன்) அணிவித்தலும் மேலங்கியின்றி சவக்கோடி அணிவிக்கப்பட்டவரின் நிலையும்
1269. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துபோனார். அப்போது அவரது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மேலங்கியைத் தாருங்கள்; அவருக்கு அதில் சவக்கோடி (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும், நீங்கள் அவருக்கு இறுதித் தொழுகை நடத்தி, அவருக்காகப் பாவமன்னிப்பும் கோர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அவருக்குக் கொடுத்து விட்டு, “(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் அவருக்குத் தொழுவிக்கிறேன்” என்றார்கள்.

அவ்வாறே அவர் அறிவித்ததும் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வுக்கு இறுதித் தொழுகை நடத்த நாடியபோது, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு நீங்கள் இறுதித் தொழுகை நடத்தக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (பாவமன்னிப்புக் கோரல், கோராமலிருத்தல் ஆகிய) இரு விருப்ப உரிமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறிவிட்டு, “(நபியே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரும்; அல்லது பாவமன்னிப்புக் கேராமல் இரும்; நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்” (9:80) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். பிறகு அவருக்கு (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அப்போது “(நபியே!) அவர்களில் இறந்துவிட்ட யாருக்காகவும் நீர் ஒருபோதும் (இறுதித்) தொழுகை நடத்த வேண்டாம்” (9:84) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.


அத்தியாயம் : 23
1270. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ بَعْدَ مَا دُفِنَ فَأَخْرَجَهُ، فَنَفَثَ فِيهِ مِنْ رِيقِهِ وَأَلْبَسَهُ قَمِيصَهُ.
பாடம் : 22 தைக்கப்பட்ட அல்லது தைக் கப்படாத மேலங்கியால் சவக்கோடி (கஃபன்) அணிவித்தலும் மேலங்கியின்றி சவக்கோடி அணிவிக்கப்பட்டவரின் நிலையும்
1270. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் சடலம் சவக் குழிக்குள் வைக்கப்பட்டபின் அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், அவரது உடலை வெளியிலெடுக்கச் செய்து, அதில் தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது மேலங்கியை அதற்கு அணிவித் தார்கள்.12

அத்தியாயம் : 23
1271. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُفِّنَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَلاَثَةِ أَثْوَابِ سَحُولَ كُرْسُفٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
பாடம் : 23 மேலங்கியின்றி சவக்கோடி (கஃபன்) அணிவித்தல்
1271. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மூன்று வெண் ணிறப் பருத்தி ஆடைகளால் ‘கஃபன்’ இடப்பட்டார்கள்; அவற்றில் மேலங் கியோ தலைப்பாகையோ இருக்க வில்லை.


அத்தியாயம் : 23
1272. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
பாடம் : 23 மேலங்கியின்றி சவக்கோடி (கஃபன்) அணிவித்தல்
1272. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் உடலுக்கு மூன்று துணிகளால் ‘கஃபன்’ இடப் பட்டது; அவற்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

அத்தியாயம் : 23
1273. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
பாடம் : 24 தலைப்பாகையின்றி சவக் கோடி அணிவித்தல்
1273. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் உடலுக்கு (யமன் நாட்டுப்) பருத்தியாலான மூன்று வெண்ணிற ஆடைகளால் ‘கஃபன்’ இடப்பட்டது; அவற்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

அத்தியாயம் : 23
1274. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ أُتِيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ رضى الله عنه ـ يَوْمًا بِطَعَامِهِ فَقَالَ قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ ـ وَكَانَ خَيْرًا مِنِّي ـ فَلَمْ يُوجَدْ لَهُ مَا يُكَفَّنُ فِيهِ إِلاَّ بُرْدَةٌ، وَقُتِلَ حَمْزَةُ أَوْ رَجُلٌ آخَرُ خَيْرٌ مِنِّي فَلَمْ يُوجَدْ لَهُ مَا يُكَفَّنُ فِيهِ إِلاَّ بُرْدَةٌ، لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ قَدْ عُجِّلَتْ لَنَا طَيِّبَاتُنَا فِي حَيَاتِنَا الدُّنْيَا، ثُمَّ جَعَلَ يَبْكِي.
பாடம் : 25 (இறந்தவர் விட்டுச்சென்ற பொருளைப் பங்கிடுவதற்கு முன்) மொத்தச் சொத்திலிருந்து சவக்கோடிக்குச் செலவிடல் அதாஉ, ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார், கத்தாதா (ரஹ்) ஆகியோர் இவ்வாறே கூறியுள்ளனர். அதில் வாசனைத் தூளுக் காகவும் மொத்தச் சொத்திலிருந்து செலவு செய்யலாம் என அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் குறிப்பிடு கிறார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், “முதலில் பிரேத ஆடைக்கும் பிறகு கடனைத் தீர்க்கவும் செலவிட வேண்டும்; பிறகு இறுதி விருப்பத்தை (வஸிய்யத்) நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், சவக்குழி (கப்று) தோண்டுவது, நீராட்டல் ஆகியவற்றின் கூலியும் பிரேத ஆடை செலவில் சேர்ந்ததே என சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1274. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் அவர்களது உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டது. உடனே அவர்கள், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, -அவர் என்னைவிடச் சிறந்தவ ராக இருந்தார்- அவருக்கு ‘கஃபன்’ இடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா (ரலி) அல்லது வேறொருவர் கொல்லப் பட்டபோது, -அன்னாரும் என்னைவிடச் சிறந்தவரே- அவருக்கு ‘கஃபன்’ இடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.

எனவே, நன்மை(களுக்கான பிரதி பலன்)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன்கூட்டியே கொடுக் கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சு கிறேன்” எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.13

அத்தியாயம் : 23