1295. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُنِي عَامَ حَجَّةِ الْوَدَاعِ مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي فَقُلْتُ إِنِّي قَدْ بَلَغَ بِي مِنَ الْوَجَعِ وَأَنَا ذُو مَالٍ، وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَىْ مَالِي قَالَ "" لاَ "". فَقُلْتُ بِالشَّطْرِ فَقَالَ "" لاَ "" ثُمَّ قَالَ "" الثُّلُثُ وَالثُّلْثُ كَبِيرٌ ـ أَوْ كَثِيرٌ ـ إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ أُجِرْتَ بِهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُخَلَّفُ بَعْدَ أَصْحَابِي قَالَ "" إِنَّكَ لَنْ تُخَلَّفَ فَتَعْمَلَ عَمَلاً صَالِحًا إِلاَّ ازْدَدْتَ بِهِ دَرَجَةً وَرِفْعَةً، ثُمَّ لَعَلَّكَ أَنْ تُخَلَّفَ حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ، اللَّهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ، وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ، لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ، يَرْثِي لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ مَاتَ بِمَكَّةَ "".
பாடம் : 36 சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தது
1295. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

அப்போது நான் அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டுவிட்டது. நான் தனவந்தன்; ஒரு மகளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசுக்காரர்கள் இல்லை: எனவே, எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பாகம் நான் தர்மம் செய்துவிடட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்றார்கள்.

பின்னர் நான், “பாதியை(க் கொடுக் கட்டுமா)?” எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்: மூன்றில் ஒரு பாகம் வேண்டுமானால் தர்மம் செய்வீராக! அதுவும் அதிகம் தான்; ஏனெனில், உம்முடைய வாரிசு களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. அல்லாஹ்வின் அன்பை வேண்டி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படாமல் இருப்பதில்லை; நீர் உம்முடைய மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும்கூட (உமக்கு நன்மையுண்டு)” என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்களெல்லாரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக ஆகிவிடுவேனே!” எனக் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால், உமது தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்” எனக் கூறிவிட்டு, “உம்மை வைத்துச் சில கூட்டத்தார் நன்மை அடைவதற்காகவும் வேறுசிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.20

பின்னர் “இறைவா! என் தோழர் களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்கு வாயாக! அவர்களைத் தம் கால் சுவடு களின் வழியே (முந்திய மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!” எனப் பிரார்த்தித்தார்கள்.

நோயாளியாயிருந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக “பாவம் சஅத் பின் கவ்லா (அவர் நினைத்தது நடக்க வில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.21

அத்தியாயம் : 23
1296. وَقَالَ الْحَكَمُ بْنُ مُوسَى حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرٍ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ، حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ، وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا، فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَرِئَ مِنَ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ.
பாடம் : 37 துக்கத்தைத் தெரிவிக்க மொட்டையடித்துக்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.
1296. அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் தமது கடுமையான நோயால் மயக்க மடைந்துவிட்டார்கள். அவர்களின் தலை அன்னாருடைய மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

பின்பு மயக்கம் தெளிந்தபோது, “நபி (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) அதிகமாகச் சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித் துக்கொள்ளும் பெண்ணைவிட்டும் தமது பொறுப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்கள். எவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரிடமிருந்து நானும் பொறுப்பை விலக்கிக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1297. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ "".
பாடம் : 38 (துக்கத்தால்) கன்னங்களில் அறைந்துகொள்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
1297. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(துக்கத்தால்) கன்னங்களில் அறைந்துகொள்பவரும் சட்டைப்பைகளைக் கிழித்துக்கொள்பவரும் அறியாமைக்கால வழக்கப்படி புலம்புகின்றவரும் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1298. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ "".
பாடம் : 39 துயரத்தின்போது ‘எனக்கு நேர்ந்த நாசமே!’ என்பது உள்ளிட்ட அறியாமைக்கால புலம்பல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
1298. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(துன்பத்தின்போது) கன்னங்களில் அறைந்துகொள்பவரும், சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவரும், அறியாமைக் கால வழக்கப்படி புலம்பு கின்றவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1299. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَابْنِ رَوَاحَةَ جَلَسَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ، وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ ـ شَقِّ الْبَابِ ـ فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ، وَذَكَرَ بُكَاءَهُنَّ، فَأَمَرَهُ أَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، لَمْ يُطِعْنَهُ فَقَالَ انْهَهُنَّ. فَأَتَاهُ الثَّالِثَةَ قَالَ وَاللَّهِ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ فَزَعَمَتْ أَنَّهُ قَالَ "" فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ "". فَقُلْتُ أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ، لَمْ تَفْعَلْ مَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ تَتْرُكْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْعَنَاءِ.
பாடம் : 40 துயரத்தின்போது, கவலை தோய்ந்த முகத்துடன் ஒருவர் அமர்ந்திருப்பது
1299. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூத்தா போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப் பட்ட செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத் தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவிடுக்கில் நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர் (ரலி) அவர்களின் வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதாகக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளை யிட்டார்கள்.

அவர் சென்றுவிட்டு மீண்டும் வந்து, அவர்கள் (தமது சொல்லுக்குக்) கட்டுப்படவில்லை என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “நீர் (சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” எனக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று விட்டு மூன்றாம் முறையாக வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களை (அப்பெண் கள்) மிகைத்துவிட்டனர்” என்றார்.

“அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண்கவ்வச் செய்வானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம் மால் செய்ய முடியவில்லை; இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன்.


அத்தியாயம் : 23
1300. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا حِينَ قُتِلَ الْقُرَّاءُ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَزِنَ حُزْنًا قَطُّ أَشَدَّ مِنْهُ.
பாடம் : 40 துயரத்தின்போது, கவலை தோய்ந்த முகத்துடன் ஒருவர் அமர்ந்திருப்பது
1300. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்ஆன் (மனனம் செய்து அதை முறைப்படி ஓதத் தெரிந்திருந்த எழுபது) அறிஞர்கள் (வஞ்சித்துக்) கொல்லப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (தொடர்ந்து தொழுகையில்) ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இந்தத் தருணத்தைவிட வேறு எப்போதும் இவ்வளவு அதிகக் கவலை கொண்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்ததில்லை.

அத்தியாயம் : 23
1301. حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ اشْتَكَى ابْنٌ لأَبِي طَلْحَةَ ـ قَالَ ـ فَمَاتَ وَأَبُو طَلْحَةَ خَارِجٌ، فَلَمَّا رَأَتِ امْرَأَتُهُ أَنَّهُ قَدْ مَاتَ هَيَّأَتْ شَيْئًا وَنَحَّتْهُ فِي جَانِبِ الْبَيْتِ، فَلَمَّا جَاءَ أَبُو طَلْحَةَ قَالَ كَيْفَ الْغُلاَمُ قَالَتْ قَدْ هَدَأَتْ نَفْسُهُ، وَأَرْجُو أَنْ يَكُونَ قَدِ اسْتَرَاحَ. وَظَنَّ أَبُو طَلْحَةَ أَنَّهَا صَادِقَةٌ، قَالَ فَبَاتَ، فَلَمَّا أَصْبَحَ اغْتَسَلَ، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، أَعْلَمَتْهُ أَنَّهُ قَدْ مَاتَ، فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِمَا كَانَ مِنْهُمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَعَلَّ اللَّهَ أَنْ يُبَارِكَ لَكُمَا فِي لَيْلَتِكُمَا "". قَالَ سُفْيَانُ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَرَأَيْتُ لَهُمَا تِسْعَةَ أَوْلاَدٍ كُلُّهُمْ قَدْ قَرَأَ الْقُرْآنَ.
பாடம் 41 துயரத்தின்போது கவலையை வெளிப்படுத்தாமலிருப்பது (இவ்வாறு கவலையை வெளிப்படுத்தாமல், ‘பதற்றம்’ இன்றி இருக்க வேண்டும்.) ‘பதற்றம்’ (அல்ஜஸஉ) என்பது, (கவலையை அதிகப்படுத்தும்) தகாத சொற்களும் (அல்லாஹ்விடம் பொறுப்பு ஒப்படைக்காமல் நிராசை அடையும்) கெட்ட எண்ணங்களும் ஆகும் என முஹம்மத் பின் கஅப் அல்குரழீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபி யஅகூப் (அலை) அவர்கள், “நான் என் சோகத்தையும் கவலையையும் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடு கிறேன்” (12:86) என்றார்கள்.
1301. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியவதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்களின் ஆண் குழந்தை ஒன்று நோயுற்றிருந்தது. ஒரு நாள் அபூதல்ஹா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அக் குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணை வியார் உடனே சிறிது (உணவைத்) தயார் செய்தார். பிறகு குழந்தையின் பிரே தத்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார்.

வெளியே சென்றிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் வீடு திரும்பியவுடன், “மகன் எவ்வாறுள்ளான்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவருடைய மனைவி, “அமைதியாகிவிட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்றுவிட்டிருப்பான் என்பதே எனது எதிர்பார்ப்பு” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதி யுடன் தம் மனைவியோடு) இரவைக் கழித்தார்.

பொழுது விடிந்து நீராடிவிட்டு (தொழுகைக்காக) வெளியே செல்ல அபூதல்ஹா (ரலி) அவர்கள் நாடியபோது, மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது இல்லத்தில் நடந்ததை நபியவர்களிடம் கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள்வளம் செய்யக்கூடும்” என்றார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த் தேன். அவர்கள் அனைவரும் குர்ஆன் அறிஞர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்.

அத்தியாயம் : 23
1302. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى "".
பாடம் : 42 துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் மேற்கொள்வதே பொறுமை ஆகும். “அவர்கள், தமக்குத் துன்பம் ஏதேனும் நேர்ந்தால், ‘நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனி டமே திரும்பிச் செல்பவர்கள்’ என்று கூறுவார்கள். அத்தகையோருக்கே அவர்களுடைய இறைவனின் மன்னிப்பும் கருணையும் உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” (2:156,157) என்று இறைவன் கூறுகின்றான். இது குறித்து உமர் (ரலி) அவர்கள், “(ஒட்டகத்தின்) இரு (புறங்களில் சமமாகத் தொங்கவிடப்பட்ட) சுமைகளும், (அதன்) நடுப் பகுதி(யிலுள்ள கூடுதலான) சுமையும் எவ்வளவு அழகாக அமைந்துள்ளன!” என்று குறிப்பிட்டார்கள். (அதாவது பொறுமைக்குப் பரிசாகத் தரப்படும் மன்னிப்பும் கருணையும் இரு சமமான சுமைகள் என்றால், அவற்றுக்கிடையே கூடுதல் சுமையாக இருப்பது நல்வழி ஆகும்.) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (இறையிடம்) உதவி கோருங்கள். உண்மையில் இது, (இறைக்குப்) பணிந்து நடப்போரைத் தவிர (மற்றவர்களுக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும். (2:45).
1302. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல்கட்டத்தில் கடைப்பிடிப்பதே ஆகும்.22

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1303. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ ـ هُوَ ابْنُ حَيَّانَ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي سَيْفٍ الْقَيْنِ ـ وَكَانَ ظِئْرًا لإِبْرَاهِيمَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ، وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَذْرِفَانِ. فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ رضى الله عنه ـ وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ "" يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ "". ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ صلى الله عليه وسلم "" إِنَّ الْعَيْنَ تَدْمَعُ، وَالْقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلاَّ مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ "". رَوَاهُ مُوسَى عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 43 நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை இப்ராஹீம் இறந்த போது), “உன் (பிரிவின்) காரண மாக நாங்கள் கவலைப்படு கிறோம்” எனக் கூறியது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “கண் அழுகின்றது: உள்ளம் கவலைப்படுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1303. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை இப்ராஹீம் வளர்ந்துவந்த) ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாரு டைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள்.

அதன் பிறகு மீண்டும் ஒரு முறை நாங்கள் அவரது வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்ஃபின் புதல்வரே! இது கருணை (யின் வெளிப்பாடு)” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து அழுதார்கள். பிறகு “கண் அழுகின்றது; உள்ளம் வருந்துகின்றது. நம் இறைவன் விரும்புவதைத் தவிர வேறு எதையும் நாம் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாம் உம(து பிரிவு)க்காகக் கவலைப்படுகிறோம்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 23
1304. حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنهم ـ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ فَقَالَ "" قَدْ قَضَى "". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. فَبَكَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَكَوْا فَقَالَ "" أَلاَ تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ، وَلاَ بِحُزْنِ الْقَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا ـ وَأَشَارَ إِلَى لِسَانِهِ ـ أَوْ يَرْحَمُ وَإِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ "". وَكَانَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَضْرِبُ فِيهِ بِالْعَصَا، وَيَرْمِي بِالْحِجَارَةِ وَيَحْثِي بِالتُّرَابِ.
பாடம் : 44 நோயாளிக்கு அருகில் அழுவது
1304. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகி யோருடன் நலம் விசாரிக்கச் சென்றார் கள். வீட்டில் நுழைந்தபோது (சஅத் பின் உபாதாவின்) குடும்பத்தார் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், “என்ன? இறந்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்கள் அழுவதைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) நீங்கள் (செவிசாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வ தாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை -பின்பு தமது நாவைச் சுட்டிக்காட்டி- எனினும், இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்கு கிறான். நிச்சயமாகக் குடும்பத்தார் (ஒப்பாரிவைத்து) அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால், தடியால் அடிப்பார்கள்; கல் எறிவார்கள்; மண் வாரி தூற்றுவார்கள்.

அத்தியாயம் : 23
1305. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ لَمَّا جَاءَ قَتْلُ زَيْدِ بْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ، جَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْرَفُ فِيهِ الْحُزْنُ، وَأَنَا أَطَّلِعُ مِنْ شَقِّ الْبَابِ، فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ بِأَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ الرَّجُلُ ثُمَّ أَتَى فَقَالَ قَدْ نَهَيْتُهُنَّ، وَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ، فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ، ثُمَّ أَتَى، فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنِي أَوْ غَلَبْنَنَا الشَّكُّ مِنْ مُحَمَّدِ بْنِ حَوْشَبٍ ـ فَزَعَمَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ "". فَقُلْتُ أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ، فَوَاللَّهِ مَا أَنْتَ بِفَاعِلٍ وَمَا تَرَكْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْعَنَاءِ.
பாடம் : 45 ஒப்பாரி வைப்பது, (சப்தமிட்டு) அழுவது ஆகியவற்றைத் தடுப் பதும் அதைக் கண்டிப்பதும்
1305. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

(மூத்தா போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஐஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப் பட்ட செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளியில் நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஜஅஃபர் (ரலி) அவர்களின் வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று திரும்பிவந்து, “நான் தடுத்தேன்: அவர்கள் எனது சொல்லுக்குக் கட்டுப்படவில்லை” என்றார்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “(நீர் சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” என இரண்டாவது முறையாகக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்றுவிட்டு வந்து, “அல்லாஹ் வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணை யாக! ‘என்னை (அப்பெண்கள்) மிஞ்சி விட்டனர்’ அல்லது ‘நம்மை அவர்கள் மிஞ்சிவிட்டனர்’ என்றார். அப்போது “அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்.

பின்னர் அவரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண்ணைக் கவ்வச்செய்வானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம் மால் செய்ய முடியவில்லை: நபியவர் களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன்.


அத்தியாயம் : 23
1306. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَخَذَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ الْبَيْعَةِ أَنْ لاَ نَنُوحَ، فَمَا وَفَتْ مِنَّا امْرَأَةٌ غَيْرَ خَمْسِ نِسْوَةٍ أُمِّ سُلَيْمٍ وَأُمِّ الْعَلاَءِ وَابْنَةِ أَبِي سَبْرَةَ امْرَأَةِ مُعَاذٍ وَامْرَأَتَيْنِ أَوِ ابْنَةِ أَبِي سَبْرَةَ وَامْرَأَةِ مُعَاذٍ وَامْرَأَةٍ أُخْرَى.
பாடம் : 45 ஒப்பாரி வைப்பது, (சப்தமிட்டு) அழுவது ஆகியவற்றைத் தடுப் பதும் அதைக் கண்டிப்பதும்
1306. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒப்பாரிவைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி வாங்கினார்கள். எனினும். இந்த உறுதிமொழியை எங்களில் ஐந்து பெண் களைத் தவிர வேறு யாரும் நிறை வேற்றவில்லை.

அப்பெண்கள் உம்மு சுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), ‘முஆத் (ரலி) அவர்களின் மனைவியான அபூஸப்ராவின் மகள் மேலும் இரண்டு பெண்கள்’ அல்லது ‘அபூஸப்ராவின் மகள், முஆத் (ரலி) உடைய மனைவி, இன்னும் ஒரு பெண்’ ஆகியோர் ஆவர். (அறிவிப்பாளர்களில் ஒருவர் இவ்வாறு ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்.)

அத்தியாயம் : 23
1307. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ "". قَالَ سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي سَالِمٌ عَنْ أَبِيهِ قَالَ أَخْبَرَنَا عَامِرُ بْنُ رَبِيعَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. زَادَ الْحُمَيْدِيُّ "" حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ "".
பாடம் : 46 பிரேதத்திற்காக எழுந்து நிற்பது
1307. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிரேதத்தைக் கண்டால், அது உங்களைக் கடந்து செல்லும்வரை எழுந்து நில்லுங்கள்.

இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைதீ (ரஹ்) அவர்களின் அறிவிப் பில், “உங்களைக் கடக்கும்வரை, அல்லது (கீழே) பிரேதம் வைக்கப்படும் வரை (நில்லுங்கள்)” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 23
1308. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا رَأَى أَحَدُكُمْ جَنَازَةً فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا فَلْيَقُمْ حَتَّى يُخَلِّفَهَا، أَوْ تُخَلِّفَهُ أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَهُ "".
பாடம் : 47 பிரேதத்திற்காக எழுந்தவர் எப்போது அமர வேண்டும்?
1308. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால், அவர் அதைக் கடந்து செல்லும்வரை, அல்லது அது அவரைக் கடந்து செல்லும்வரை, அல்லது அது அவருக்கு முன்னால் (கீழே) வைக்கப்படும்வரை எழுந்து நிற்கட்டும்!

இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 23
1309. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فَأَخَذَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ بِيَدِ مَرْوَانَ فَجَلَسَا قَبْلَ أَنْ تُوضَعَ، فَجَاءَ أَبُو سَعِيدٍ ـ رضى الله عنه ـ فَأَخَذَ بِيَدِ مَرْوَانَ فَقَالَ قُمْ فَوَاللَّهِ لَقَدْ عَلِمَ هَذَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَانَا عَنْ ذَلِكَ. فَقَالَ أَبُو هُرَيْرَةَ صَدَقَ.
பாடம் : 47 பிரேதத்திற்காக எழுந்தவர் எப்போது அமர வேண்டும்?
1309. அபூசயீத் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு நல்லடக்கத்தில் பங்கேற்றோம். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், (மதீனாவின் ஆட்சியராக இருந்த) மர்வான் பின் அல்ஹகம் அவர்களின் கையைப் பற்றினார். பிறகு பிரேதம் (தரையில்) இறக்கி வைக்கப்படுவதற்குமுன் இருவரும் அமர்ந்துவிட்டார்கள்.

அப்போது அங்கு வந்த அபூசயீத் (ரலி) அவர்கள், மர்வானின் கையைப் பிடித்து, “எழுந்திரும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் இ(வ்வாறு அமர்வ)தைத் தடுத்துள்ளார்கள் என்பதை இவர் (அபூஹுரைரா) நன்கு அறிந்துள்ளார்” எனக் கூறினார்கள். உடனே “அபூசயீத் சொன்னது உண்மை தான்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1310. حَدَّثَنَا مُسْلِمٌ ـ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ ـ حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ "".
பாடம் : 48 பிரேதத்தைப் பின்தொடர்ந்து செல்பவர், பிரேதத்தைச் சுமந்து செல்வோரின் தோளிலிருந்து பிரேதம் இறக்கி வைக்கப்படும் வரை உட்காரக் கூடாது. அதற்குமுன் உட்கார்ந்துவிட் டால் எழும்படி கட்டளை யிடப்படும்.
1310. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின் தொடர்ந்து செல்பவர், (அது கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1311. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ مَرَّ بِنَا جَنَازَةٌ فَقَامَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقُمْنَا بِهِ. فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ. قَالَ "" إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا "".
பாடம் : 49 யூதரின் பிரேதத்துக்காக எழுந்து நிற்பது
1311. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்துசென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம்.

பின்பு நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது ஒரு யூதரின் பிரேதம்” என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 23
1312. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ، فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا. فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الأَرْضِ، أَىْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالاَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ. فَقَالَ " أَلَيْسَتْ نَفْسًا ".
பாடம் : 49 யூதரின் பிரேதத்துக்காக எழுந்து நிற்பது
1312. அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), கைஸ் பின் சஅத் (ரலி) ஆகியோர் காதிசிய்யாவில் ஓரிடத்தில் அமர்ந் திருந்தபோது, ஒரு பிரேத (ஊர்வல)ம் அவர்களைக் கடந்துசென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள். அப்போது அவர்களிடம், “இது இந்நாட்டின் சிறுபான்மையினத்தவரின் (முஸ்லிமல்லாத) பிரேதமல்லவா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவ்விருவரும், “நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், “அது யூதரின் பிரேதம்” எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதுவும் மனித உயிரில் லையா?’ எனப் பதிலளித்தார்கள்” என்றார்கள்.23


அத்தியாயம் : 23
1313. وَقَالَ أَبُو حَمْزَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ كُنْتُ مَعَ قَيْسٍ وَسَهْلٍ ـ رضى الله عنهما ـ فَقَالاَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ زَكَرِيَّاءُ عَنِ الشَّعْبِيِّ عَنِ ابْنِ أَبِي لَيْلَى كَانَ أَبُو مَسْعُودٍ وَقَيْسٌ يَقُومَانِ لِلْجِنَازَةِ.
பாடம் : 49 யூதரின் பிரேதத்துக்காக எழுந்து நிற்பது
1313. இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கைஸ் (ரலி) அவர்களுடனும் சஹ்ல் (ரலி) அவர்களுடனும் இருந்தேன். அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அப்போது இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது என்று கூறும் மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது).

அபூமஸ்ஊத் உக்பா (ரலி) அவர்களும் கைஸ் (ரலி) அவர்களும் பிரேதத் திற்காக எழுந்து நின்றார்கள் என்றும் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1314. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا وُضِعَتِ الْجِنَازَةُ وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي. وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَىْءٍ إِلاَّ الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ "".
பாடம் : 50 பிரேதத்தை ஆண்களே சுமந்து செல்ல வேண்டும்; பெண்கள் அல்ல.
1314. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், “என்னை விரைந்து கொண்டுசெல்லுங் கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், “நாசமே! என்னை எங்கே கொண்டுசெல்கிறார் கள்?” என்று கூறும்.

இவ்வாறு அது கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23