4898. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، أَخْبَرَنِي ثَوْرٌ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لَنَالَهُ رِجَالٌ مِنْ هَؤُلاَءِ ".
பாடம்: 62. ‘அல்ஜுமுஆ’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம்: 1 ‘‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக் காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (62:3ஆவது) வசனத்தொடர் (62:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபஸ்அவ் இலா திக்ரில்லாஹ்’ -அல்லாஹ்வை நினைவுகூர விரையுங்கள் என்பதை) உமர் (ரலி) அவர்கள், ‘ஃபம்ளூ இலா திக்ரில்லாஹ்’ (அல்லாஹ்வை நினைவுகூரச் செல்லுங்கள்) என்று ஓதி னார்கள்.
4898. அபுல்ஃகைஸ் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘‘இவர்களில் சில மனிதர்கள் இதை அடைந்தே தீருவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 65
4899. حَدَّثَنِي حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، وَعَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَقْبَلَتْ عِيرٌ يَوْمَ الْجُمُعَةِ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَثَارَ النَّاسُ إِلاَّ اثْنَا عَشَرَ رَجُلاً فَأَنْزَلَ اللَّهُ {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا}
பாடம்: 2 அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ பார்த்துவிட்டால், அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர் (எனும் 62:11ஆவது வசனத்தொடர்)
4899. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ தொழுகை யில்) இருந்தபோது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு பேரே எஞ்சியிருந்தனர்.

அப்போதுதான் ‘‘அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர்” எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.3

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4900. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنْتُ فِي غَزَاةٍ فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ، يَقُولُ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا مِنْ حَوْلِهِ وَلَوْ رَجَعْنَا مِنْ عِنْدِهِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا. الأَذَلَّ فَذَكَرْتُ ذَلِكَ لِعَمِّي أَوْ لِعُمَرَ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَدَعَانِي فَحَدَّثْتُهُ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ وَأَصْحَابِهِ فَحَلَفُوا مَا قَالُوا فَكَذَّبَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَدَّقَهُ فَأَصَابَنِي هَمٌّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ قَطُّ، فَجَلَسْتُ فِي الْبَيْتِ فَقَالَ لِي عَمِّي مَا أَرَدْتَ إِلَى أَنْ كَذَّبَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَقَتَكَ. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} فَبَعَثَ إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَرَأَ فَقَالَ " إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ يَا زَيْدُ ".
பாடம்: 63. ‘அல்முனாஃபிகூன்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம்: 1 ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது, ‘நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ் வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்’ என்று கூறுகின்றனர். நிச்சயமாக, நீர் தன்னுடைய தூதர்தான் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான்” எனும் (63:1ஆவது) இறைவசனம்
4900. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அறப்போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை (பின் சலூல்) என்பவன், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, ‘‘நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறினான்.

அவன் கூறியதை ‘(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்’ அல்லது ‘உமர் (ரலி) அவர்களிடம்’ கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) ‘‘நாங்கள் அவ்வாறு சொல்லவேயில்லை” என்று அவர்கள் சாதித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சென்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் பின் உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை (என் வாழ்நாளில்) ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன்.

அப்போது என் சிறிய தந்தை என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவுக்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறினார்கள்.

அப்போது, ‘‘இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது” என்று தொடங்கும் இந்த (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்தி விட்டான் (நீர் சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4901. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ عَمِّي فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ ابْنَ سَلُولَ يَقُولُ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا. وَقَالَ أَيْضًا لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَذَكَرْتُ ذَلِكَ لِعَمِّي فَذَكَرَ عَمِّي لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ وَأَصْحَابِهِ، فَحَلَفُوا مَا قَالُوا، فَصَدَّقَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَذَّبَنِي، فَأَصَابَنِي هَمٌّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ، فَجَلَسْتُ فِي بَيْتِي، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} إِلَى قَوْلِهِ {هُمُ الَّذِينَ يَقُولُونَ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ} إِلَى قَوْلِهِ {لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ} فَأَرْسَلَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَهَا عَلَىَّ ثُمَّ قَالَ " إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ ".
பாடம்: 2 இவர்கள் தாங்கள் செய்யும் சத்தியங்களை (தங்களைத் தற்காத் துக்கொள்ளும்) கேடயமாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் (எனும் 63:2ஆவது வசனத்தொடர்)
4901. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டு) விலகிச் சென்றுவிடுவார்கள்’ என்று சொல்வதையும், மேலும், ‘‘நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறுவதையும் நான் கேட்டேன்.

அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தை யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை” என்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பிவிட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்துவிட்டார்கள்.

(என் வாழ்நாளில் அதற்குமுன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவுக்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது” என்று தொடங்கி ‘‘ஆயினும், நயவஞ்சகர்கள் அறியமாட்டார்கள்” என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான்.

உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4902. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ. وَقَالَ أَيْضًا لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ. أَخْبَرْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلاَمَنِي الأَنْصَارُ، وَحَلَفَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ مَا قَالَ ذَلِكَ، فَرَجَعْتُ إِلَى الْمَنْزِلِ فَنِمْتُ فَدَعَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ فَقَالَ " إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ ". وَنَزَلَ {هُمُ الَّذِينَ يَقُولُونَ لاَ تُنْفِقُوا} الآيَةَ. وَقَالَ ابْنُ أَبِي زَائِدَةَ عَنِ الأَعْمَشِ عَنْ عَمْرٍو عَنِ ابْنِ أَبِي لَيْلَى عَنْ زَيْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 3 ‘‘இவை (அனைத்துக்கும் காரணம்), இவர்கள் (முதலில்) நம்பிக்கை கொண்டு பின்னர் மறுத்துவிட்டதுதான். இதனால் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்” எனும் (63:3ஆவது) இறைவசனம்
4902. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:.

(நயவஞ்கர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை, ‘‘அல்லாஹ் வின் தூதருடன் இருப்போருக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவழிக்காதீர் கள்” என்றும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், ...” என்றும் கூறியபோது, அதை நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது என்னை அன்சாரிகள் கண்டித்தார்கள். அப்துல்லாஹ் பின் உபை, தான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தான். ஆகவே, நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள் (எனத் தகவல் வந்தது). உடனே நான் அவர்களிடம் வந்தேன்.

அப்போது அவர்கள், ‘‘(ஸைதே!) அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள். மேலும், ‘‘இவர்கள்தான் ‘இறைத் தூதருடன் இருப்பவர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்’ என்று கூறினார்கள்...” எனும் (63:7ஆவது) வசனமும் அருளப்பெற்றது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4903. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ أَصَابَ النَّاسَ فِيهِ شِدَّةٌ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ لأَصْحَابِهِ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا مِنْ حَوْلِهِ. وَقَالَ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَأَرْسَلَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ فَسَأَلَهُ، فَاجْتَهَدَ يَمِينَهُ مَا فَعَلَ، قَالُوا كَذَبَ زَيْدٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَوَقَعَ فِي نَفْسِي مِمَّا قَالُوا شِدَّةٌ، حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقِي فِي {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} فَدَعَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَسْتَغْفِرَ لَهُمْ فَلَوَّوْا رُءُوسَهُمْ. وَقَوْلُهُ {خُشُبٌ مُسَنَّدَةٌ} قَالَ كَانُوا رِجَالاً أَجْمَلَ شَىْءٍ.
பாடம்: 4 (நபியே!) நீர் இவர்களைப் பார்த்தால், இவர்களின் உடல் அமைப்பு உம்மை வியப்பில் ஆழ்த்தும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள் (சுவரில்) சாய்த்துவைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள்தான் (கடும்) பகைவர்கள்; இவர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருப்பீராக! அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசைமாறிச் சென்றுகொண்டிருக் கின்றனர்? (எனும் 63:4ஆவது இறைவசனம்)
4903. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை தம் நண்பர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்” என்றும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்றும் சொன்னான்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான்.

அன்சாரிகள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்” என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.

அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது...” என்று தொடங்கும் (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பிக்கொண்டார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஷுபும் முசன்னதா’ (சாய்த்துவைக்கப் பட்டிருக்கும் மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்டசாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.

அத்தியாயம் : 65
4904. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنْتُ مَعَ عَمِّي فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ ابْنَ سَلُولَ، يَقُولُ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا، وَلَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَذَكَرْتُ ذَلِكَ لِعَمِّي، فَذَكَرَ عَمِّي لِلنَّبِيِّ صلى الله عليه وسلم {فَدَعَانِي فَحَدَّثْتُهُ، فَأَرْسَلَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ وَأَصْحَابِهِ فَحَلَفُوا مَا قَالُوا، وَكَذَّبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم} وَصَدَّقَهُمْ، فَأَصَابَنِي غَمٌّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ قَطُّ، فَجَلَسْتُ فِي بَيْتِي وَقَالَ عَمِّي مَا أَرَدْتَ إِلَى أَنْ كَذَّبَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَقَتَكَ. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ} وَأَرْسَلَ إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَرَأَهَا وَقَالَ " إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ ".
பாடம்: 5 ‘‘வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள்) தங்களது தலையைத் திருப்பிக்கொள்கிறார்கள். மேலும், அவர்கள் பெரும் ஆணவத்தால் அலட்சியப்படுத்துவதை (நபியே!) நீர் காண்பீர்” எனும் (63:5ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லவ்வவ்’ (தலையைத் திருப்பிக்கொண்டார்கள்) எனும் சொல், ‘தங்கள் தலையை அசைத்த வண்ணம் அவர்கள் நபியைப் பரிகாசம் செய்ததைக் குறிக்கின்றது. (இதே சொல்லை இன்னோர் ஓதல் முறையில்) ‘லவய்த்து’ எனும் வினைச்சொல்óóருந்து அழுத்தமில்லாமல் (‘லவவ்’ என்று) ஓதப்படுகிறது.
4904. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்றுவிடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம் வெளியேற்றிவிடுவர்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ்வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். பின்னர், என்னை அழைத்(து விசாரித்)தார்கள். நான் அவர்களிடம் (நடந்ததை) எடுத்துரைத்தேன்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை” என்று சத்தியம் செய்தனர். (அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்பினார்கள்.) என்னை நம்ப மறுத்துவிட்டார்கள். (என் வாழ்நாளில்) அதற்குமுன் இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவுக்கு என்னைக் கவலை ஆட்கொண்டது.

ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), ‘‘நபி (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன்மீது கோபமடையும் அளவுக்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது, நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின்றனர்” எனும் (63:1ஆவது) வசனத்தை அருளினான்.

உடனே எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.3

அத்தியாயம் : 65
4905. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا فِي غَزَاةٍ ـ قَالَ سُفْيَانُ مَرَّةً فِي جَيْشٍ ـ فَكَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ يَا لَلْمُهَاجِرِينَ. فَسَمِعَ ذَاكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا بَالُ دَعْوَى جَاهِلِيَّةٍ " قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ. فَقَالَ " دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ ". فَسَمِعَ بِذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ فَقَالَ فَعَلُوهَا، أَمَا وَاللَّهِ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَامَ عُمَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا الْمُنَافِقِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعْهُ لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ " وَكَانَتِ الأَنْصَارُ أَكْثَرَ مِنَ الْمُهَاجِرِينَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ، ثُمَّ إِنَّ الْمُهَاجِرِينَ كَثُرُوا بَعْدُ. قَالَ سُفْيَانُ فَحَفِظْتُهُ مِنْ عَمْرٍو قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرًا كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 6 ‘‘(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் கோராவிட்டாலும் இவர்களைப் பொறுத்து (இரண்டும்) சமம்தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் ஒருபோதும் நல்வழியில் செலுத்தமாட்டான்” எனும் (63:6ஆவது) இறைவசனம்
4905. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ‘ஒரு போரில்’ அல்லது ‘ஒரு படையில்’ இருந்துகொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்.4 அப்போது (அடி வாங்கிய) அன்சாரீ, ‘‘அன்சாரிகளே! (உதவுங்கள்.)” என்று கூறினார். அந்த முஹாஜிர், ‘‘முஹாஜிர்களே! உதவுங்கள்!” என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்று, ‘‘இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்” என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை” என்று கூறினார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு, ‘‘இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘என்னை விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது” என்று சொன்னார்கள்.

மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களைவிட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளைவிட அதிகமாகிவிட்டனர்.

மற்றோர் அறிவிப்பில், ‘நாங்கள் ஒரு போரில் இருந்தோம்’ என்பதற்குப் பதிலாக ‘‘நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்துகொண்டிருந்தோம்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம் : 65
4906. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ حَزِنْتُ عَلَى مَنْ أُصِيبَ بِالْحَرَّةِ فَكَتَبَ إِلَىَّ زَيْدُ بْنُ أَرْقَمَ وَبَلَغَهُ شِدَّةُ حُزْنِي يَذْكُرُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ وَلأَبْنَاءِ الأَنْصَارِ " ـ وَشَكَّ ابْنُ الْفَضْلِ فِي أَبْنَاءِ أَبْنَاءِ الأَنْصَارِ ـ فَسَأَلَ أَنَسًا بَعْضُ مَنْ كَانَ عِنْدَهُ فَقَالَ هُوَ الَّذِي يَقُولُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَذَا الَّذِي أَوْفَى اللَّهُ لَهُ بِأُذُنِهِ ".
பாடம்: 7 ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப் போருக்குச் செலவழிப்பதை நிறுத்திவிடுங்கள். (அவரிட மிருந்து) அவர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள் என்று சொல் கின்றவர்கள் இவர்கள்தான். உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்” எனும் (63:7ஆவது) இறைவசனம் (இதன் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘யன்ஃபள்ளூ’ எனும் சொல்லுக்கு ‘பிரிந்து விடுவார்கள்’ என்பது பொருள்.
4906. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்ஹர்ரா’ போரில் கொல்லப்பட்டோருக்காக நான் (பெரிதும்) துக்கப்பட்டேன்.5 நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக” என்று பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன்.

அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி (ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா; இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஃபள்ல் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தபோது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் பின் அர்கம் (ரலி) பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘(நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்துவிட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளியபோது) ‘இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்துவிட்டான்’ என்று இவர் தொடர்பாகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” எனப் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 65
4907. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ كُنَّا فِي غَزَاةٍ فَكَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ يَا لَلْمُهَاجِرِينَ. فَسَمَّعَهَا اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم قَالَ " مَا هَذَا ". فَقَالُوا كَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ يَالَلْمُهَاجِرِينَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ ". قَالَ جَابِرٌ وَكَانَتِ الأَنْصَارُ حِينَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَكْثَرَ، ثُمَّ كَثُرَ الْمُهَاجِرُونَ بَعْدُ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ أَوَقَدْ فَعَلُوا، وَاللَّهِ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضى الله عنه دَعْنِي يَا رَسُولَ اللَّهِ أَضْرِبْ عُنُقَ هَذَا الْمُنَافِقِ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعْهُ لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ ".
பாடம்: 8 மேலும் அவர்கள், ‘‘நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், கண்ணியவான்கள் அங்கிருந்து இழிந்தோரை வெளியேற்றி விடுவர்” என்றும் கூறுகிறார்கள். ஆயினும், கண்ணியம் என்பது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர் களுக்குமே உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறியமாட் டார்கள் (எனும் 63:8ஆவது இறைவசனம்)
4907. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் இருந்துகொண்டி ருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, ‘‘அன்சாரிகளே! (உதவுங்கள்)” என்று கூறினார். முஹாஜிர், ‘‘முஹாஜிர்களே! (உதவுங்கள்)” என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்துவிட்டான். நபி (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘‘முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். உடனே, அன்சாரி ‘அன்சாரிகளே, (உதவுங்கள்)’ என்று கூற, முஹாஜிரும், ‘முஹாஜிர்களே, (உதவுங்கள்)’ என்று கூறினார்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களைவிட) அதிகமாக இருந்தார் கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்துவிட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை, ‘‘இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்று கூறினான்.

அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘‘என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். ‘முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார்’ என்று மக்கள் பேசிவிடக் கூடாது” என்று சொன்னார்கள்.6

அத்தியாயம் : 65
4908. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَغَيَّظَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " لِيُرَاجِعْهَا ثُمَّ يُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ فَتَطْهُرَ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا طَاهِرًا قَبْلَ أَنْ يَمَسَّهَا فَتِلْكَ الْعِدَّةُ كَمَا أَمَرَهُ اللَّهُ ".
பாடம்: 64. ‘அத்தஃகாபுன்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) ‘‘(64:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வமய் யுஃமின் பில்லாஹி யஹ்தி கல்பஹு’ (யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறாரோ, அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுதல் வழங்குகிறான்) என்பது, தமக்குத் துன்பம் நேரும்போது, அதைத் தாங்கி, திருப்தியடைந்து, அது அல்லாஹ்வின் தரப்பிலிருந்தே தமக்கு வந்தது என்று எண்ணும் இறைநம்பிக்கையாளரையே குறிக்கின்றது” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக அல்கமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (64:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃகாபுன்’ என்பதற்கு, ‘நரகவாசிகளுடன் சொர்க்கவாசிகள் போட்டியிடல்’ என்பது பொருள். பாடம்: 65. ‘அத்தலாக்’ அத்தியாயம்1 (65:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனிர்த்தப்த்தும்’ (உங்களுக்குச் சந்தேகம் வந்தால்) என்பதற்கு, ‘‘(உங்கள் பெண்ணுக்கு) மாதவிலக்கு நின்றுவிட்டதா, இல்லையா என உங்களுக்குத் தெரியவில்லையென்றால்’ என்று பொருள். இந்த வசனம், மாதவிலக்கு நின்றுவிட்ட பெண்ணுக்கும், எந்தப் பெண்ணுக்கு இதுவரை மாதவிலக்கு வரவில்லையோ அவளுக்கும் ‘இத்தா’ காலம் மூன்று மாதங்களாகும் என்று குறிப்பிடுகின்றது. பாடம்: 1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: (65:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வபால்’ (விளைவு) எனும் சொல்லுக்கு ‘தண்டனை’ என்பது பொருள்.
4908. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள். அப்போது அவர்களுடைய துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட்டார்கள்.

பிறகு, ‘‘அவர் (அப்துல்லாஹ் பின் உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்வரை தம் மனைவியாகவே வைத்துக்கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்துவிட்டால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மையாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும்” என்றும் கூறினார்கள்.2

அத்தியாயம் : 65
4909. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ عِنْدَهُ فَقَالَ أَفْتِنِي فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِينَ لَيْلَةً. فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرُ الأَجَلَيْنِ. قُلْتُ أَنَا {وَأُولاَتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ} قَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِي ـ يَعْنِي أَبَا سَلَمَةَ ـ فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلاَمَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةِ وَهْىَ حُبْلَى، فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً فَخُطِبَتْ فَأَنْكَحَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ خَطَبَهَا.
பாடம்: 2 மேலும், கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ, அவரது காரியத்தை அவன் எளிதாக்குகின்றான் (எனும் 65:4ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாத்துல் அஹ்மால்’ (கர்ப்பிணிகள்) என்பதன் ஒருமை ‘ஃதாத்து ஹம்ல்’ (கர்ப்பிணி) என்பதாகும்.
4909. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், ‘‘தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப்பின் பிரசவித்த ஒரு பெண்(ணின் ‘இத்தா’ பிரசவத்தோடு முடிந்துவிடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இரு தவணைகளில் பிந்தியது” என்று கூறினார்கள்.3

உடனே நான் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,) ‘‘கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும்” (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன்.

அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் ‘குறைப்’ என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா -ரலி) இறந்துவிட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ (ரலி) குழந்தை பெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்துவைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ்ஸனாபில் (பின் பஅக்கக் -ரலி) அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு ‘இத்தா’, பிரசவம் வரையில்தான்.)


அத்தியாயம் : 65
4910. وَقَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ وَأَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ كُنْتُ فِي حَلْقَةٍ فِيهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى وَكَانَ أَصْحَابُهُ يُعَظِّمُونَهُ، فَذَكَرَ آخِرَ الأَجَلَيْنِ فَحَدَّثْتُ بِحَدِيثِ سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ قَالَ فَضَمَّزَ لِي بَعْضُ أَصْحَابِهِ. قَالَ مُحَمَّدٌ فَفَطِنْتُ لَهُ فَقُلْتُ إِنِّي إِذًا لَجَرِيءٌ إِنْ كَذَبْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ وَهْوَ فِي نَاحِيَةِ الْكُوفَةِ. فَاسْتَحْيَا وَقَالَ لَكِنَّ عَمَّهُ لَمْ يَقُلْ ذَاكَ. فَلَقِيتُ أَبَا عَطِيَّةَ مَالِكَ بْنَ عَامِرٍ فَسَأَلْتُهُ فَذَهَبَ يُحَدِّثُنِي حَدِيثَ سُبَيْعَةَ فَقُلْتُ هَلْ سَمِعْتَ عَنْ عَبْدِ اللَّهِ فِيهَا شَيْئًا فَقَالَ كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ فَقَالَ أَتَجْعَلُونَ عَلَيْهَا التَّغْلِيظَ وَلاَ تَجْعَلُونَ عَلَيْهَا الرُّخْصَةَ. لَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ الطُّولَى {وَأُولاَتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ}.
பாடம்: 2 மேலும், கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ, அவரது காரியத்தை அவன் எளிதாக்குகின்றான் (எனும் 65:4ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாத்துல் அஹ்மால்’ (கர்ப்பிணிகள்) என்பதன் ஒருமை ‘ஃதாத்து ஹம்ல்’ (கர்ப்பிணி) என்பதாகும்.
4910. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மார்க்க அறிஞர்) அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் இருந்த அவையில் இருந்துகொண்டிருந்தேன். அவருடைய நண்பர்கள் அவரைக் கண்ணியப்படுத்திவந்தனர். (அப்போது அன்னாரின் நண்பர்களில் ஒருவர், கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியின் ‘இத்தா’ காலம் குறித்துப் பேசினார்.) அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள், ‘‘இரு தவணைகளில் பிந்தியது” என்று கூறினார்கள்.

உடனே நான், ‘‘அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் வாயிலாகக் கிடைத்த ‘சுபைஆ பின்த் அல்ஹாரிஸ்’ (ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைச் சொன்னேன். அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களுடைய நண்பர்களில் சிலர் என்னை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தனர்.

நான் அதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன். ஆகவே, நான் ‘‘அப்துல்லாஹ் பின் உத்பா (தற்போது) ‘கூஃபா’வில்தான் இருக்கிறார். (அவர் சொல்லாத ஒன்றை) அவர்மீது நான் பொய்யாகச் சொல்வதானால் நான் துடுக்கானவன் ஆவேன்” என்று சொன்னேன். உடனே (என்னைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்தவர்) கூச்சப்பட்டார்.

மேலும், அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா அவர்கள், ‘‘ஆனால், அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுடைய தந்தையின் சகோதரர் (இப்னு மஸ்ஊத்) அவர்கள் அப்படிக் கூறவில்லையே!” என்று சொன்னார்.

ஆகவே, நான் அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டேன். அவர்களும் சுபைஆ (ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைக் கூறலானார்கள். நான் (அவர்களிடம்), ‘‘இது குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஏதேனும் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நாங்கள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

(கணவர் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் விஷயத்தில் ‘இத்தா’ காலத்தை நீட்டித்து) அவளுக்குச் சிரமத்தை அளிக்கிறீர்களா? அவளுக்குச் சலுகை காட்டக் கூடாதா? (உண்மை என்னவென்றால்,) பெண்கள் தொடர்பான (‘அத்தலாக்’ எனும்) சிறிய அத்தியாயம், பெண்கள் தொடர்பான (‘அல்பகரா’ எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பின்னரே அருளப்பெற்றது.

(பின்னால் அருளப்பெற்ற அந்த வசனம் இதுதான்:) ‘‘மேலும் கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும்” (65:4)4

அத்தியாயம் : 65
4911. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ فِي الْحَرَامِ يُكَفِّرُ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ}.
பாடம்: 66. ’அத்தஹ்ரீம்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம்: 1 நபியே! உம்முடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உமக்கு அனுமதித் துள்ள ஒன்றை நீர் ஏன் விலக்கிக்கொள்கிறீர்? அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான் (எனும் 66:1ஆவது இறைவசனம்)
4911. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(ஒருவர் அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் சத்தியமிட்டு) விலக்கிக்கொள்ளும்பட்சத்தில், (சத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான) பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு, ‘‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (33:21ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.2


அத்தியாயம் : 65
4912. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَشْرَبُ عَسَلاً عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ وَيَمْكُثُ عِنْدَهَا فَوَاطَيْتُ أَنَا وَحَفْصَةُ عَنْ أَيَّتُنَا دَخَلَ عَلَيْهَا فَلْتَقُلْ لَهُ أَكَلْتَ مَغَافِيرَ إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ. قَالَ " لاَ وَلَكِنِّي كُنْتُ أَشْرَبُ عَسَلاً عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ فَلَنْ أَعُودَ لَهُ وَقَدْ حَلَفْتُ لاَ تُخْبِرِي بِذَلِكِ أَحَدًا ".
பாடம்: 66. ’அத்தஹ்ரீம்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம்: 1 நபியே! உம்முடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உமக்கு அனுமதித் துள்ள ஒன்றை நீர் ஏன் விலக்கிக்கொள்கிறீர்? அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான் (எனும் 66:1ஆவது இறைவசனம்)
4912. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும், ‘‘(தேன் சாப்பிட்டபின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம், ‘‘கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூற வேண்டும்” என்று கூடிப்பேசி முடிவு செய்துகொண்டோம்.

(வழக்கம்போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், ‘‘இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்திவிட்டு வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதை அருந்தமாட்டேன்; நான் சத்தியமும் செய்துவிட்டேன்” என்று கூறிவிட்டு, ‘‘இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!” என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)

அத்தியாயம் : 65
4913. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ أَنَّهُ قَالَ مَكَثْتُ سَنَةً أُرِيدُ أَنْ أَسْأَلَ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَنْ آيَةٍ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَسْأَلَهُ هَيْبَةً لَهُ، حَتَّى خَرَجَ حَاجًّا فَخَرَجْتُ مَعَهُ فَلَمَّا رَجَعْتُ وَكُنَّا بِبَعْضِ الطَّرِيقِ عَدَلَ إِلَى الأَرَاكِ لِحَاجَةٍ لَهُ ـ قَالَ ـ فَوَقَفْتُ لَهُ حَتَّى فَرَغَ سِرْتُ مَعَهُ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ اللَّتَانِ تَظَاهَرَتَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَزْوَاجِهِ فَقَالَ تِلْكَ حَفْصَةُ وَعَائِشَةُ. قَالَ فَقُلْتُ وَاللَّهِ إِنْ كُنْتُ لأُرِيدُ أَنْ أَسْأَلَكَ عَنْ هَذَا مُنْذُ سَنَةٍ، فَمَا أَسْتَطِيعُ هَيْبَةً لَكَ. قَالَ فَلاَ تَفْعَلْ مَا ظَنَنْتَ أَنَّ عِنْدِي مِنْ عِلْمٍ فَاسْأَلْنِي، فَإِنْ كَانَ لِي عِلْمٌ خَبَّرْتُكَ بِهِ ـ قَالَ ـ ثُمَّ قَالَ عُمَرُ وَاللَّهِ إِنْ كُنَّا فِي الْجَاهِلِيَّةِ مَا نَعُدُّ لِلنِّسَاءِ أَمْرًا، حَتَّى أَنْزَلَ اللَّهُ فِيهِنَّ مَا أَنْزَلَ وَقَسَمَ لَهُنَّ مَا قَسَمَ ـ قَالَ ـ فَبَيْنَا أَنَا فِي أَمْرٍ أَتَأَمَّرُهُ إِذْ قَالَتِ امْرَأَتِي لَوْ صَنَعْتَ كَذَا وَكَذَا ـ قَالَ ـ فَقُلْتُ لَهَا مَالَكِ وَلِمَا هَا هُنَا فِيمَا تَكَلُّفُكِ فِي أَمْرٍ أُرِيدُهُ. فَقَالَتْ لِي عَجَبًا لَكَ يَا ابْنَ الْخَطَّابِ مَا تُرِيدُ أَنْ تُرَاجَعَ أَنْتَ، وَإِنَّ ابْنَتَكَ لَتُرَاجِعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يَظَلَّ يَوْمَهُ غَضْبَانَ. فَقَامَ عُمَرُ فَأَخَذَ رِدَاءَهُ مَكَانَهُ حَتَّى دَخَلَ عَلَى حَفْصَةَ فَقَالَ لَهَا يَا بُنَيَّةُ إِنَّكِ لَتُرَاجِعِينَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يَظَلَّ يَوْمَهُ غَضْبَانَ. فَقَالَتْ حَفْصَةُ وَاللَّهِ إِنَّا لَنُرَاجِعُهُ. فَقُلْتُ. تَعْلَمِينَ أَنِّي أُحَذِّرُكِ عُقُوبَةَ اللَّهِ وَغَضَبَ رَسُولِهِ صلى الله عليه وسلم يَا بُنَيَّةُ لاَ يَغُرَّنَّكِ هَذِهِ الَّتِي أَعْجَبَهَا حُسْنُهَا حُبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِيَّاهَا ـ يُرِيدُ عَائِشَةَ ـ قَالَ ثُمَّ خَرَجْتُ حَتَّى دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ لِقَرَابَتِي مِنْهَا فَكَلَّمْتُهَا. فَقَالَتْ أُمُّ سَلَمَةَ عَجَبًا لَكَ يَا ابْنَ الْخَطَّابِ دَخَلْتَ فِي كُلِّ شَىْءٍ، حَتَّى تَبْتَغِي أَنْ تَدْخُلَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَزْوَاجِهِ. فَأَخَذَتْنِي وَاللَّهِ أَخْذًا كَسَرَتْنِي عَنْ بَعْضِ مَا كُنْتُ أَجِدُ، فَخَرَجْتُ مِنْ عِنْدِهَا، وَكَانَ لِي صَاحِبٌ مِنَ الأَنْصَارِ إِذَا غِبْتُ أَتَانِي بِالْخَبَرِ، وَإِذَا غَابَ كُنْتُ أَنَا آتِيهِ بِالْخَبَرِ، وَنَحْنُ نَتَخَوَّفُ مَلِكًا مِنْ مُلُوكِ غَسَّانَ، ذُكِرَ لَنَا أَنَّهُ يُرِيدُ أَنْ يَسِيرَ إِلَيْنَا، فَقَدِ امْتَلأَتْ صُدُورُنَا مِنْهُ، فَإِذَا صَاحِبِي الأَنْصَارِيُّ يَدُقُّ الْبَابَ فَقَالَ افْتَحِ افْتَحْ. فَقُلْتُ جَاءَ الْغَسَّانِيُّ فَقَالَ بَلْ أَشَدُّ مِنْ ذَلِكَ. اعْتَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَزْوَاجَهُ. فَقُلْتُ رَغَمَ أَنْفُ حَفْصَةَ وَعَائِشَةَ. فَأَخَذْتُ ثَوْبِيَ فَأَخْرُجُ حَتَّى جِئْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَشْرُبَةٍ لَهُ يَرْقَى عَلَيْهَا بِعَجَلَةٍ، وَغُلاَمٌ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَسْوَدُ عَلَى رَأْسِ الدَّرَجَةِ فَقُلْتُ لَهُ قُلْ هَذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ. فَأَذِنَ لِي ـ قَالَ عُمَرُ ـ فَقَصَصْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ، فَلَمَّا بَلَغْتُ حَدِيثَ أُمِّ سَلَمَةَ تَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَىْءٌ، وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا مَصْبُوبًا، وَعِنْدَ رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ فَرَأَيْتُ أَثَرَ الْحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ فَقَالَ " مَا يُبْكِيكَ ". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ وَأَنْتَ رَسُولُ اللَّهِ. فَقَالَ " أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمُ الدُّنْيَا وَلَنَا الآخِرَةُ ".
பாடம்: 2 அல்லாஹ் நீங்கள் செய்யும் சத்தியத்தி(ன் கட்டுப்பாட்டி)லிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித்துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறிவாளன் (எனும் 66:2ஆவது இறைவசனம்)
4913. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.

(ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றுக்காக ‘அராக்’ மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன்.

அப்போது நான் அவர்களிடம், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தான் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள்.3

உடனே நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் உங்கள்மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை” என்று சொன்னேன். அப்போது, ‘‘(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:

‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தைஅல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)

(ஒருநாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தபோது என் மனைவி, ‘‘நீங்கள் இப்படிச் செய்யலாமே” என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘‘உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் என்னிடம், ‘‘கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள்” என்று சொன்னார்.

உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, ‘‘என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு” என்றார்.

அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்துவிடாதே!” என்று (அறிவுரை) சொன்னேன்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான) உம்மு சலமாவிடம் (அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.4

இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, ‘‘கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டுவந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவுக்கு வந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு சலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி (கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன்.

மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.

(அந்தக் காலகட்டத்தில் ஷாம் நாட்டு) ‘ஃகஸ்ஸான்’ வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது.

இந்நிலையில், (ஒருநாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். ‘‘திறங்கள், திறங்கள்” என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான், ‘‘ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரைவிட்டு விலகிவிட்டார்கள்” என்றார்.

உடனே நான், ‘‘ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து)கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், ‘‘இந்த உமர் பின் அல்கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!” என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன்.

உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் அழுகிறீர்கள்?” என்றார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (கிழக்கு ரோமானிய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!” என்றேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.5

அத்தியாயம் : 65
4914. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ بْنَ حُنَيْنٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَرَدْتُ أَنْ أَسْأَلَ عُمَرَ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ اللَّتَانِ تَظَاهَرَتَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا أَتْمَمْتُ كَلاَمِي حَتَّى قَالَ عَائِشَةُ وَحَفْصَةُ.
பாடம்: 3 நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். (ஆனால்,) அதை அந்தத் துணைவி (மற்றொரு துணைவிக்கு) தெரிவித்துவிடவே, நபிக்கு அல்லாஹ் அதை வெளிப்படுத்தினான். அப்போது, நபி அதில் சிலவற்றை (அந்தத் துணைவியிடம்) சொல்லிக்காட்டிவிட்டு சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார். இவ்வாறு (இரக சியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் துணைவியிடம் தெரிவித்தபோது, ‘‘தங்களுக்கு இதைத் தெரிவித் தது யார்?” என்று அந்தத் துணைவி கேட்டார். அதற்கு நபி ‘‘அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான்” என்று பதிலளித்தார் (எனும் 66:3ஆவது இறை வசனம்) இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து, ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.6
4914. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்களிடம் (ஒரு வசனம் குறித்து) கேட்க நினைத்துக் கொண்டிருந்தேன். ஆகவே, (வாய்ப்புக் கிடைத்தபோது அவர்களிடம்) ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)கள் விஷயத்தில் கூடிப்பேசிச் செயல்பட்ட இரு துணைவியர் யார்?” என்று கேட்டேன். என் பேச்சை நான் முடிப்பதற்குள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தான்” என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.7

அத்தியாயம் : 65
4915. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ بْنَ حُنَيْنٍ، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَرَدْتُ أَنْ أَسْأَلَ، عُمَرَ عَنِ الْمَرْأَتَيْنِ اللَّتَيْنِ، تَظَاهَرَتَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَكُثْتُ سَنَةً فَلَمْ أَجِدْ لَهُ مَوْضِعًا، حَتَّى خَرَجْتُ مَعَهُ حَاجًّا، فَلَمَّا كُنَّا بِظَهْرَانَ ذَهَبَ عُمَرُ لِحَاجَتِهِ فَقَالَ أَدْرِكْنِي بِالْوَضُوءِ فَأَدْرَكْتُهُ بِالإِدَاوَةِ، فَجَعَلْتُ أَسْكُبُ عَلَيْهِ وَرَأَيْتُ مَوْضِعًا فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ اللَّتَانِ تَظَاهَرَتَا قَالَ ابْنُ عَبَّاسٍ فَمَا أَتْمَمْتُ كَلاَمِي حَتَّى قَالَ عَائِشَةُ وَحَفْصَةُ.
பாடம்: 4 ‘‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், (அது உங்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில்,) உங்களிருவரின் இதயங் களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன” எனும் (66:4ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸஃகத்’ எனும் சொல்லுக்கு ‘பிறழ்தல்’ என்பது பொருள். (இதன் தன்மை வினைச் சொற்களான) ‘ஸஃகவ்த்து’ மற்றும் ‘அஸ்ஃகைத்து’ ஆகியவற்றுக்கு ‘நான் சாய்ந்தேன்’ என்பது பொருள். (6:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி தஸ்ஃகா’ எனும் சொல்லுக்கு ‘அவை சாய்வதற்காக’ என்று பொருள். ‘தழாஹரூன’ எனும் சொல்லுக்கு ‘கூடிப்பேசிச் செயல்படுதல்’ என்பது பொருள். ‘ழஹீர்’ எனும் சொல்லுக்கு ‘உதவியாளர்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: ‘‘(66:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கூ அன்ஃபுசக்கும் வ அஹ்லீக்கும்’ (உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்) என்பதன் கருத்தாவது: இறையச்சத்தைக் கைக்கொள்ளுமாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நீங்கள் அறிவுரை பகர்வதுடன், அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்பியுங்கள்.
4915. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)கள்விஷயத்தில் கூடிப்பேசிச் செயல்பட்ட இரு துணைவியர் யார்? என்பது பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நெடு நாட்களாக) எண்ணிக்கொண்டிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலம் இருந்துவிட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை.

(இந்நிலையில் ஒருமுறை) நான் ஹஜ்ஜுக்காக உமர் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ‘(மர்ருழ்) ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோது, ‘‘அங்கத் தூய்மை செய்தவற்கான தண்ணீரை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார்கள்.

ஆகவே, நான் அவர்களுக்காகத் தண்ணீர்க் குவளையை எடுத்துவந்து அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன்.நான் (நினைத்திருந்ததைக் கேட்பதற்கு இதுதான்) சந்தர்ப்பம் எனக் கருதினேன். உடனே நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப்பேசிச் செயல்பட்ட அந்த இரு துணைவியர் யார்?” என்று கேட்டேன். நான் என் பேச்சை முடிப்பதற்குள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தான் (அவர்கள் இருவரும்)!” என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 65
4916. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ اجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ. فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ.
பாடம்: 5 நபி (தம் துணைவியராகிய) உங்களை மணவிலக்குச் செய்து விடுவாராயின், உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்கிட முடியும். அவர்கள் (வாய்மையான) முஸ்லிம்களாய், இறைநம்பிக்கையுள்ளோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவ மன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயும் கன்னிகளாயும் இருப்பார்கள் (எனும் 66:5ஆவது இறைவசனம்)
4916. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரும் சேர்ந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்” என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.8

அத்தியாயம் : 65
4917. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ} قَالَ رَجُلٌ مِنْ قُرَيْشٍ لَهُ زَنَمَةٌ مِثْلُ زَنَمَةِ الشَّاةِ.
பாடம்: 67. ‘அல்முல்க்’ அத்தியாயம்1 (67:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தஃபாவுத்’ எனும் சொல்லுக்கும், (மற்றொரு வாய்பாட்டில் அமைந்த) ‘தஃபவ்வுத்’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. அதாவது ‘முரண்பாடு’ அல்லது ‘மாற்று’. (67:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தமய்யஸு’ எனும் சொல்லுக்கு ‘அது வெடித்துவிட’ என்று பொருள். (67:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மனாகிபிஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் பல பகுதிகளுக்கு’ என்று பொருள். (67:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தத்தஊன்’ (நீங்கள் வற்புறுத்திக் கூறினீர்களோ) எனும் சொல்லுக்கும் ‘தத்ஊன’ என்பதற்கும் பொருள் ஒன்றே. (67:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யக்பிள்ன’ எனும் சொல்லுக்கு ‘சிறகடி(த்துப் பற)க்கும்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸாஃப்பாத்’ எனும் சொல்லுக்கு ‘தம் இறகுகளை விரித்து’ என்பது பொருள். (67:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ நுஃபூர்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியத்தை மறுப்பதிலும்’ என்பது பொருள். பாடம்: 68. ‘அல்கலம்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (68:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யத்தஃகாஃப்பத்தூன’ எனும் சொல்லுக்கு ‘இரகசியமாகப் பேசிக்கொண்டு போனார்கள்’ என்று பொருள். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (68:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹர்த்’ எனும் சொல்லுக்கு ‘மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டு’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (68:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல ளால்லூன’ எனும் சொல்லுக்கு ‘நமது தோட்டமிருந்த இடத்தை நாம் தவற விட்டுவிட்டோம்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (68:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸ்ஸரீம்’ எனும் சொல்லுக்கு ‘இரவிலிருந்து பிரிந்து வந்த அதிகாலைபோல; பகலிலிருந்து பிரிந்த இரவைப் போல’ என்று பொருள். மேலும், மணல் குவியலிலிருந்து பிரிந்துவந்த ஒவ்வொரு மணல் துகளுக்கும் ‘ஸரீம்’ என்று கூறப்படுவதுண்டு. பாடம்: 1 (அவன்) இரக்கமற்ற கொடுமைக் காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழிபிறவியாகவும் இருக்கின்றான். (இவன் போன்றவனுக்கெல்லாம் நபியே! நீர் அடங்கிவிடாதீர் (எனும் 68:13ஆவது இறைவசனம்)
4917. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(68:13ஆவது வசனத்தின் விளக்கத்தில்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவன் குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாவான். ஆட்டிற்கு (வேறுபடுத்திக் காட்டும்) ஓர் அடையாளம் (காதணி) இருப்பதுபோல், அவனுக்கும் (அவனுடைய கழுத்தில் ஓர்) அடையாளம் உள்ளது” என்று கூறினார்கள்.2


அத்தியாயம் : 65