4878.
பாடம்: 55. ‘அர்ரஹ்மான்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (55:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி ஹுஸ்பான்’ எனும் சொல்லுக்கு ‘சூரியனும் சந்திரனும் திரிகையைப் போல் (சுழன்றுகொண்டிருக்கின்றன)” என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘‘குறிப்பிட்ட கணக்கின்படி அவை இரண்டும் இயங்குகின்றன” என்ற பொருளும் உண்டு.) முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (55:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அக்கீமுல் வஸ்ன’ (மேலும், நீதியோடு நிறுவையை மேற்கொள்ளுங்கள்) எனும் தொடரை ‘தராசின் முள்ளை (சரியாகக் கவனித்து நிறுங்கள்’ என்பதை)க் கருத்தில் கொண்டே இறைவன் குறிப்பிடுகின்றான். (55:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘பருவத்திற்குமுன் பறிக்கப்படும் பயிரின் தழை’ என்பது பொருள். அரபியரின் மொழிவழக்கில் ‘ரைஹான்’ எனும் சொல்லுக்கு ‘உணவு’ என்பது பொருள். ‘உணவு தானியங்களின் இலை’க்கும் ‘ரைஹான்’ என்பர். மனிதன் உணவாகக்கொள்கின்ற தானியங்களுக்கு ‘ஹப்பு’ என்பர். மற்ற (அறிஞர்) சிலர், உணவாக உட்கொள்ளப்படுகின்ற தானியங்களுக்கு ‘அஸ்ஃப்’ என்றும், பச்சையாக உண்ண முடியாதவற்றுக்கு ‘ரைஹான்’ என்றும் கூறினர். மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘கோதுமைப் பயிர்’ என்பது பொருள். ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள், ‘‘ ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘வைக்கோல்’ எனப் பொருள்” என்று கூறினார்கள். அபூமாலிக் அல்ஃகிஃபாரீ (ரஹ்) அவர்கள், ‘‘முதன் முதலாக முளைத்து வரும் நாற்றே ‘அல்அஸ்ஃப்’ ஆகும்; இதனை விவசாயிகள் ‘ஹபூர்’ என்றழைப்பர்” என்று கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள், ‘அல்அஸ்ஃப்’ என்பதற்கு ‘கோதுமைப் பயிர்’ என்பது பொருள்; ‘ரைஹான்’ என்பதற்கு, ‘உணவு’ என்பது பொருள்” என்று கூறுகிறார்கள். (55:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மாரிஜ்’ எனும் சொல், நெருப்புப் பற்ற வைக்கும்போது மேலேயெழுந்து பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் எரியும் தீச்சுவாலையைக் குறிக்கும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (55:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரப்புல் மஷ்ரிகைனி’ (இரு கீழ்த்திசைகளின் அதிபதி) என்பது, சூரியன் குளிர் காலத்தில் உதயமாகும் கிழக்கையும், கோடை காலத்தில் உதயமாகும் கிழக்கையும் குறிக்கும். இதைப் போன்றே ‘ரப்புல் மஃக்ரிபைனி’ (இரு மேல் திசைகளின் அதிபதி) என்பது, சூரியன் குளிர் காலத்தில் மறைகின்ற மேற்கையும், கோடை காலத்தில் மறைகின்ற மேற்கையும் குறிக்கும். (55:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யப்ஃகியானி’ எனும் சொல்லுக்கு, ‘அவை ஒன்றோடொன்று கலக்காது’ என்று பொருள். (55:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முன்ஷஆத்’ எனும் சொல், ‘ பாய் உயர்த்திக் கட்டப்பட்ட கப்பல்களைக் குறிக்கும். எந்தக் கப்பலின் பாய் உயர்த்திக் கட்டப்படுவதில்லையோ அந்தக் கப்பல் ‘அல்முன்ஷஅத்’ அன்று. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (55:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல் ஃபக்கார்’ எனும் சொல்லுக்கு ‘சுட்ட மண்பாண்டம் தயாரிக்கப்படுவதைப் போன்று (இறைவன் முதல் மனிதரைப் படைத்தான்)’ என்று பொருள். (55:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்ஷுவால்’ எனும் சொல்லுக்கு ‘தீச்சுவாலை’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (55:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நுஹாஸ்’ எனும் சொல்லுக்கு ‘பித்தளை’ என்பது பொருள்; இதை உருக்கி நரகவாசிகளின் தலைகள்மீது ஊற்றி வேதனை செய்யப்படும். (55:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காஃப மகாம ரப்பிஹி’ (தம்இறைவன்முன் (விசாரணைக்காக) நிற்கவேண்டும் என்பதை அஞ்சியவருக்கு) என்பதன் கருத்தாவது: பாவம் செய்ய முற்படும்போது இறைவனை நினைத்து (அஞ்சி) அதைக் கைவிடுவதாகும். (55:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்ஹாம்மத்தானி’ (அடர்த்தியான பச்சை நிறமுடைய இரு சொர்க்கங்கள்) எனும் சொல், அடர்த்தி கூடிய காரணத்தால் கரும்பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் இரு சோலைகளைக் குறிக்கும். (55:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸல்ஸால்’ (தட்டினால் ஓசையெழுப்பக்கூடிய களிமண்) எனும் சொல், மணலோடு கலக்கப்பட்ட களிமண், சுட்ட மண்பாண்டங்களைப் போல் தட்டினால் ஓசையெழுப்புவதைக் குறிக்கும். ‘ஸல்ஸால்’ என்பதற்கு, ‘நாற்றமடிக்கும் களிமண்’ என்பது பொருள் என்றும் கூறப்படுகிறது. (‘ஸல்ல’ எனும் சொல்லுக்கும், ‘ஸல்ஸல’ எனும் சொல்லுக்கும் ஒரே பொருள் கொள்ளப்படுகிறது. இதைப் போன்றே ‘ஸர்ர’ எனும் சொல்லுக்கும், ‘ஸர்ஸர’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே.) ‘ஸர்ரல் பாப்’ எனும் வாக்கியத்திற்கு ‘பூட்டப்படும் போது கதவு ஓசையிட்டது’ என்று பொருள். ஸர்ஸரல் பாப் என்பதற்கும் இதுவே பொருள். ‘கப்கப’ எனும் சொல்லுக்கும் ‘கப்ப’ எனும் சொல்லுக்கும் ‘தலைகீழாகக் கவிழ்ந்தது’ என்ற ஒரே பொருள் இருப்பது போலவே (‘ஸல்ல’வும், ‘ஸல்ஸல’வும்) அமைந்துள்ளன. (55:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபாக்ஹித்துன் வ நஃக்லுன் வ ரும்மான்’ (ஏராளமான கனிகளும் பேரீச்சம்பழங்களும் மாதுளைகளும்) எனும் சொற்றொடரில் (அறிஞர்) சிலர், ‘‘பேரீச்சமும் மாதுளையும், ‘ஃபாக்கிஹத்’ (கனி) வர்க்கத்தில் கட்டுப்பட்டதல்ல” என்று கூறுகின்றனர். ஆனால், அவை இரண்டும் கனி வர்க்கத்தில் கட்டுப்பட்டதாகவே அரபியர் கருதுகின்றனர். (அப்படியானால், ‘கனிகள்’ (ஃபாக்கிஹத்) என்பதில் பேரீச்சமும் மாதுளையும் அடங்கிவிடுமே! இரண்டையும் தனியாகக் குறிப்பிடக்காரணம் என்ன? பதில்:) இது, 2:238ஆவது வசனத்தைப் போன்றதாகும். அதில் பொதுவாக எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழுதிடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டபிறகு, நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையைத் தனியாகக் குறிப்பிட்டு (அதன் சிறப்பைக் கருதி) வலியுறுத்தியுள்ளான். இதைப் போன்றே, 22:18ஆவது வசனத்தையும் குறிப்பிடலாம். இதில் ‘‘வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவர்கள் அல்லாஹ்விற்குச் சிரவணக்கம் (சஜ்தா) செய்கின்றனர்”எனப் பொதுவாகக் கூறிவிட்டு, இதில் அடங்குபவர்களான மனிதர்களை (அவர்களின் சிறப்பைக் கருதி) தனியாகக் குறிப்பிட்டுள்ளான்: மனிதர்களில் பலரும் அவனுக்குச் சிரவணக்கம் புரிகின்றனர். (இதைப் போன்றுதான், பேரீச்சம் பழத்தையும் மாதுளையையும் அவற்றின்சிறப்பைக் கருதித் தனியாகக் குறிப்பிட்டுள்ளான்.) முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (55:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃப்னான்’ எனும் சொல்லுக்கு ‘பல கிளைகள்’ என்று பொருள். (55:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ ஜனல் ஜன்னத்தைனி தான்’ (இரு சோலைகளிலும் பறிப்பதற்கேற்பப் பழங்கள் அருகிலிருக்கும்) என்பதன் கருத்தாவது: பறிக்கப்படும் பழங்கள் (பறிப்போருக்கு வசதியாக) மிக அருகிலேயே இருக்கும். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (55:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆலாஃ’ எனும் சொல்லுக்கு ‘இறைவனின் அருட்கொடைகள்’ என்பது பொருள். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ரப்பிக்குமா துகஃத்திபான்’ (நீங்கள் எதனைப் பொய்யெனக் கூறுவீர்கள்?) எனும் சொற்றொடர், ஜின்கள் மற்றும் மனிதர்களை முன்னிலைப்படுத்திக் கூறப் பட்டுள்ளது. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (55:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷஃன்’ (ஒவ்வொரு நாளிலும் அவன் தன் பொறுப்பில் இருக்கிறான்) என்பதன் கருத்தாவது: பாவங்களை மன்னிக்கின்றான்; துன்பங்களை அகற்றுகின்றான்; சிலருக்கு உயர்வைத் தருகின்றான்; சிலருக்குத் தாழ்வைத் தருகின்றான். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (55:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பர்ஸக்’ எனும் சொல்லுக்கு ‘தடுப்பு’ என்பது பொருள். (55:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அநாம்’ எனும் சொல்லுக்கு ‘படைப்பினம்’ என்பது பொருள். (55:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நள்ளாகத்தான்’ எனும் சொல்லுக்கு ‘பீறிட்டுப் பொங்கிக்கொண்டிருக்கும்’ என்று பொருள். (55:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதுல் ஜலால்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புடையோன்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (55:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மாரிஜ்’ எனும் சொல்லுக்கு, ‘(புகை கலக்காத) தூய நெருப்பு’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான ‘மரஜ’ எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. அவையாவன:) ‘மரஜல் அமீரு ரஇய்யத்தஹு’ என்பதற்கு, ‘அரசன், மக்களில் சிலர் சிலருக்கு அநீதியிழைக்க விட்டுவிட்டான்’ என்று பொருள். ‘மரஜ அம்ருந் நாஸ்’ என்பதற்கு ‘மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டனர்’ என்று பொருள். ‘மரீஜ்’ எனும் சொல்லுக்கு ‘குழப்பமான’ என்று பொருள். ‘மரஜல் பஹ்ரானி’ என்பதற்கு ‘இரு கடல்கள் சங்கமித்துவிட்டன’ என்று பொருள். ‘மரஜ்த்த தாப்பத்தக்க’ எனும் வாக்கியத்திற்கு, ‘ நீ உனது கால்நடையை (மேய்வதற்காக) விட்டுவிட்டாய்’ என்று பொருள். (55:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஃப்ருஃகு லக்கும்’ (அதிவிரைவில் நாம் உங்களுக்காக நேரம் எடுத்துக்கொள்வோம்) என்பதற்கு ‘உங்களைக் கேள்வி கணக்குக் கேட்போம்’ என்று பொருள். மற்றபடி, அல்லாஹ் ஒன்றைக் கவனிப்பதால், மற்றொன்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது என்பது பொருளாகாது. இது அரபியரின் வழக்கிலுள்ள ஒரு சொல்லாக்கம் ஆகும். எல்லா வேலையையும் விட்டுவிட்டு உனக்காக நேரம் எடுத்துக்கொள்கிறேன் என்பதைக் குறிக்க இதனை ஆள்வார்கள். நீ கவனமற்று இருப்பதால் உன்னை நான் (கடுமையாகப்) பிடிக்கப்போகிறேன் என்று கூறுவதுபோல் (ஓர் எச்சரிக்கையாகவே இதைக் கூறுவர்.) பாடம்: 1 ‘‘அவ்விரு சோலைகள் நீங்கலாக வேறிரு சோலைகளும் (அங்கு) இருக்கும்” எனும் (55:62ஆவது) இறைவசனம்
4878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை; (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும்.2

‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.3

இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் :
4879. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ فِي الْجَنَّةِ خَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ، عَرْضُهَا سِتُّونَ مِيلاً، فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ، مَا يَرَوْنَ الآخَرِينَ يَطُوفُ عَلَيْهِمُ الْمُؤْمِنُونَ ". " وَجَنَّتَانِ مِنْ فِضَّةٍ، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا،
பாடம்: 2 கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகைகளி)ல் தங்கவைக்கப் பெற்ற ‘ஹூர்’ எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்திலுள்ள) ‘ஹூர்’ எனும் சொல்லுக்கு ‘‘கன்னங்கரு விழியாள்” என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்ஸூராத்’ எனும் சொல்லுக்கு ‘தடுத்துவைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்க ளுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டு தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.
4879. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.4


அத்தியாயம் : 65
4880. وَجَنَّتَانِ مِنْ كَذَا آنِيَتُهُمَا، وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلاَّ رِدَاءُ الْكِبْرِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ ".
பாடம்: 2 கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகைகளி)ல் தங்கவைக்கப் பெற்ற ‘ஹூர்’ எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்திலுள்ள) ‘ஹூர்’ எனும் சொல்லுக்கு ‘‘கன்னங்கரு விழியாள்” என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்ஸூராத்’ எனும் சொல்லுக்கு ‘தடுத்துவைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்க ளுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டு தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.
4880. மேலும், இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவை. ‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.

இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூமூசா அல்அஷ்அரீ -ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5

அத்தியாயம் : 65
4881. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ فِي الْجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا، وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَظِلٍّ مَمْدُودٍ}".
பாடம்: 56. ‘அல்வாகிஆ’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (56:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ருஜ்ஜத்’ எனும் சொல்லுக்கு ‘அதிரவைக்கப்படும்’ என்று பொருள். (56:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘புஸ்ஸத்’ (பொடிப்பொடியாக்கப்படும்) எனும் சொல்லுக்கு, ‘மலைகள் பொடிப்பொடியாக ஆக்கப்பட்டு, தண்ணீரில் மாவு குழைக்கப்படுவதைப் போன்று குழைக்கப்பட்டுவிடும்’ என்று பொருள். (56:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்ளூத்’ எனும் சொல்லுக்கு ‘குலைகளின் திரட்சியால் குனிந்து தொங்கும்’ என்றும், ‘முள் இல்லாத’ என்றும் (இரு) பொருள் கொள்ளப்படுகிறது. (56:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வதல்ஹிம் மன்ளூத்’ எனும் சொல்லுக்கு, ‘அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்’ என்பது பொருள். (56:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உருப்’ எனும் சொல்லுக்கு ‘தம் துணைவர்மீது காதல் கொண்டவர்கள்’ என்பது பொருள். (56:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸுல்லத்’ எனும் சொல்லுக்கு, ‘உம்மத்’ (சமுதாயம்) என்று பொருள். (56:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஹ்மூம்’ எனும் சொல்லுக்கு ‘கரும் புகை’ என்று பொருள். (56:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஸிர்ரூன’ எனும் சொல்லுக்கு ‘நீடிப்பர்’ என்று பொருள். (56:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹீம்’ எனும் சொல்லுக்கு, ‘அடங்காத் தாகம் கொண்ட ஒட்டகம்’ என்று பொருள். (56:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல முஃக்ரமூன்’ என்பதன் கருத்தாவது: நாம் நிர்ப்பந்தத்திற்குள்ளாகிவிட்டோம். (‘நாம் கடன்காரர்களாகிவிட்டோம்’). (56:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரவ்ஹ்’ எனும் சொல்லுக்கு, ‘சுகம்’, ‘சொர்க்கம்’ ஆகிய பொருள்கள் உள்ளன. ‘ரைஹான்’ எனும் சொல்லுக்கு, (‘உயர்ரக) உணவு’ என்று பொருள். (56:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ நுன்ஷிஅக்கும் ஃபீ மா லா தஅலமூன்’ (நீங்கள் அறிந்திராத உருவில் உங்களை நாம் உண்டாக்க இயலும்) என்பதன் கருத்தாவது: நாம் நாடிய எந்த உருவத்திலும் உங்களைப் படைத்துவிடுவோம். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (56:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃபக்கஹூன்’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் வியப்படை(ந்து புலம்பு)வீர்கள்’ என்று பொருள். (56:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உருப்’ (காதல் கொண்டவர்கள்) எனும் சொல்லின் ஒருமை, ‘அரூப்’ என்பதாகும். ‘ஸுபுர்’ (என்பதன் ஒருமையாக) ‘ஸபூர்’ அமைந்திருப்பதுபோல. இத்தகைய பெண்ணை மக்காவாசிகள் ‘அரிபா’ என்றும், மதீனாவாசிகள் ‘ஃகனிஜா’ என்றும், இராக்வாசிகள் ‘‘கிலா’ என்றும் பெயரிட்டழைப்பர். (56:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காஃபிளா’ (தாழ்த்தக்கூடியது) எனும் சொல்லுக்கு, ‘மக்களில் ஒரு பிரிவினரை நரகத்திற்குத் தாழ்த்திவிடக்கூடியது’ என்று பொருள். ‘‘ராஃபிஆ’ (உயர்த்தக்கூடியதுமாகும்) எனும் சொல்லுக்கு ‘இன்னொரு பிரிவினரைச் சொர்க்கத்திற்கு உயர்த்திவிடக்கூடியதுமாகும்’ என்று பொருள். (56:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்ளூனத்’ எனும் சொல்லுக்கு, ‘நெய்யப்பட்ட’ என்று பொருள். இச்சொல்லிலிருந்தே ‘வளீன்’ (ஒட்டகத்தின் உடலில் பூட்டப்படும் சேனம்) எனும் சொல் உருவானது. (சேனங்களும் நெய்யப்பட்ட இழைகள்போல் காணப்படுவதால், அதனை ‘வளீன் - நெய்யப்பட்டது’ என்று அழைக்கின்றனர்.) (56:18-ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாப்’ (கோப்பைகள்) என்பது, ‘காதோ கைப்பிடியோ இல்லாத கோப்பைகள் ஆகும். ‘அபாரீக்’ (கிண்ணங்கள்) என்பது, ‘காதும் கைப்பிடியும் உள்ள கிண்ணங்களாகும். (56:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்கூப்’ எனும் சொல்லுக்கு (‘எப்போதும்) ஓடிக்கொண்டிருக்கும்’ என்று பொருள். (56:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ ஃபுருஷிம் மர்ஃபூஆ’ (உயர்ந்த விரிப்புகள்) என்பதற்கு ‘ஒன்றன் மேலொன்றாக அடுக்கிவைக்கப்பட்டுள்ள உயரமான விரிப்புகள்’ என்று பொருள். (56:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்ரிஃபீன்’ எனும் சொல்லுக்கு ‘சுகபோகிகள்’ என்று பொருள். (56:86ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மதீனீன்’ எனும் சொல்லுக்கு ‘கணக்குக் கேட்கப்படுபவர்கள்’ என்று பொருள். (56:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா தும்னூன்’ எனும் சொல்லுக்கு ‘மனைவிமார்களின் கருவறைகளுக்குள் நீங்கள் செலுத்துகின்ற விந்துத் துளி’ என்று பொருள். (56:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முக்வீன்’ எனும் சொல்லுக்கு ‘பயணிகள்’ என்று பொருள். (இது ‘கிய்யு’ எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.) ‘கிய்யு’ எனும் சொல்லுக்கு, ‘மக்கள் வசிக்கும் குடியிருப்புகளற்ற காலி மனைகள்’ என்று பொருள். (56:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி மவாக்கிஇந் நுஜூம்’ எனும் சொல்லுக்கு, ‘(அவ்வப்போது அருளப்பெற்ற) பொருள் தெளிவான குர்ஆன் வசனங்கள்மீது சத்தியமாக’ என்று பொருள் எனவும், ‘நட்சத்திரங்கள் மறையும் இடங்கள்மீது சத்தியமாக’ என்று பொருள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. ‘‘(பன்மையான) ‘மவாகிஉந் நுஜூம்’ என்பதற்கும், (ஒருமையான) ‘மவ்கிஉந் நுஜூம்’ என்பதற்கும் பொருள் ஒன்றே. (56:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்ஹினூன்’ எனும் சொல்லுக்கு ‘பொய்யாக்குகின்றீர்’ என்று பொருள். (68:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லவ் துத்ஹினு ஃப யுத்ஹினூன்’ என்பதற்கு ‘நீங்கள் பொய் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டு அவர்களும் பொய் சொல்கிறார்கள்’ என்பது பொருள். (56:91ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப சலாமுல் லக்க மின் அஸ்ஹாபில் யமீன்’ என்பதற்கு ‘உறுதியாக நீங்கள் வலப்பக்கத்தாருள் ஒருவர் என்றே முடிவு செய்யப்பட்டுளீர்கள்’ (முசல்லமன் அன்னக்க மின் அஸ்ஹாபில் யமீன்) என்று பொருள். (‘உறுதியாக’ எனும் பொருளைக் குறிக்கும்) ‘இன்ன’ எனும் இடைச்சொல் வாக்கியத்திலிருந்து அகற்றப்பட்டாலும் பொருளில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக ஒன்றைக் கூறலாம்: ‘‘இன்னும் சற்று நேரத்தில் நான் பயணம் செய்யவிருக்கிறேன்” என்று ஒருவன் சொல்கிறான். உடனே, நீ ‘அன்த்த முஸத்தகுன் முசாஃபிருன் அன் கலீல்’ (நீ சற்று நேரத்தில் பயணம் செய்வது உறுதி) என்று (‘இன்ன’ எனும் இடைச்சொல் இல்லாமல் அதன் பொருளை மட்டும் கவனத்தில் கொண்டு) கூறுவாய். சில நேரங்களில் (‘உமக்கு சாந்தி உண்டாகட்டும்’ என்று) பிரார்த்தனையாகவும் (துஆ) பயன்படுத்தப்படும். மக்களுக்கு ‘தண்ணீர் கிடைக்கட்டும்’ என்பதற்கு ‘ஃப சக்யன்’ (இறைவன் உன் தாகத்தைத் தணிப்பானாக) என்று பிரார்த்தனை செய்யப்படுவதுபோல. (56:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தூரூன்’ எனும் சொல்லுக்கு ‘நீங்கள் நெருப்புப் பற்றவைக்கிறீர்கள்’ என்பது பொருள். (இதன் இறந்தகால தன்மை வினைச் சொல்லான) ‘அவ்ரய்த்து’ என்பதற்கு ‘நான் நெருப்புப் பற்றவைத்தேன்’ என்று பொருள். (56:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லஃக்வ்’ எனும் சொல்லுக்கு ‘வீண் பேச்சு’ என்பது பொருள். ‘தஃஸீம்’ எனும் சொல்லுக்கு ‘பொய்’ என்று பொருள். பாடம்: 1 ‘‘(படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்” எனும் (56:30ஆவது) இறைவசனம்
4881. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்றுகொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. (அந்த அளவுக்கு அது பெரிய மரமாகும்.)

நீங்கள் விரும்பினால் ‘‘(படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்” எனும் (56:30ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 65
4882. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ سُورَةُ التَّوْبَةِ قَالَ التَّوْبَةُ هِيَ الْفَاضِحَةُ، مَا زَالَتْ تَنْزِلُ وَمِنْهُمْ وَمِنْهُمْ، حَتَّى ظَنُّوا أَنَّهَا لَمْ تُبْقِ أَحَدًا مِنْهُمْ إِلاَّ ذُكِرَ فِيهَا. قَالَ قُلْتُ سُورَةُ الأَنْفَالِ. قَالَ نَزَلَتْ فِي بَدْرٍ. قَالَ قُلْتُ سُورَةُ الْحَشْرِ. قَالَ نَزَلَتْ فِي بَنِي النَّضِيرِ.
பாடம்: 57. ‘அல்ஹதீத்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (57:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜஅலக்கும் முஸ்தக்லஃபீன’ (அவன் உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கியிருக்கின்றான்) என்பதற்கு ‘அதில் குடியிருப்புகளை அமைத்து வாழ்வோராக ஆக்கியிருக்கின்றான்’ என்பது பொருள். (57:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மினழ்ழுலுமாத்தி இலந் நூர்’ (இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்) என்பதற்கு, ‘வழிகேட்டிலிருந்து நல்வழியின் பக்கம்’ என்று பொருள். (57:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ மனாஃபிஉ லிந்நாஸ்’ (மக்களுக்குப் பயன்கள்) எனும் சொல், கேடயத்தையும் ஆயுதத்தையும் குறிக்கின்றது. (57:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லாக்கும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களுக்குப் பொருத்தமானதாகும்’ என்று பொருள். (57:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிஅல்லா யஅலம அஹ்லுல் கிதாபி’ எனும் வாக்கியத்திற்கு ‘வேதக்காரர்கள் அறிந்துகொள்வதற்காக’ என்று பொருள். (57:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அழ்ழாஹிரு வல்பாத்தின்’ (வெளிப்படையானவனும் மறைவானவனும்) எனும் சொற்றொடருக்கு, ‘‘அவனது இருப்பைப் பற்றிய அறிவு எல்லாப் பொருட்களிலும் வெளிப்படையாக உண்டு; அவனது மெய்மை பற்றிய அறிவு அனைவருக்கும் மறைவானது” என்று பொருள். (57:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்ழிரூனா’ எனும் சொல்லுக்கு ‘எங்களை எதிர்பாருங்கள்’ என்பது பொருள். பாடம்: 58. ‘அல்முஜாதலா’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (58:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹாத்தூன’ எனும் சொல்லுக்கு ‘மோதுகின்றவர்கள்’ என்பது பொருள். ‘குபித்தூ’ எனும் சொல்லுக்கு ‘இழிவுக்கு ஆளாக்கப்படுவார்கள்’ என்பது பொருள். (58:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸ்த்தஹ்வத’ எனும் சொல்லுக்கு ‘ஆதிக்கம் செலுத்தி வென்றுவிட்டான்’ என்று பொருள். பாடம்: 59. ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயம்1 (59:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜலாஉ’ (நாடு கடத்தல்) எனும் சொல்லுக்கு ‘ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வெளியேற்றுதல்’ என்று பொருள். பாடம் : 1
4882. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘‘அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். ‘‘அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர்” என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் அருளப்பெற்றுக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்” என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், ‘அல்அன்ஃபால்’ எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பத்ர் போர் குறித்து அது அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள். நான் ‘அல்ஹஷ்ர்’ எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘அது பனுந் நளீர் குலத்தார் குறித்து அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள்.2


அத்தியாயம் : 65
4883. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ سُورَةُ الْحَشْرِ قَالَ قُلْ سُورَةُ النَّضِيرِ.
பாடம்: 57. ‘அல்ஹதீத்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (57:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜஅலக்கும் முஸ்தக்லஃபீன’ (அவன் உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கியிருக்கின்றான்) என்பதற்கு ‘அதில் குடியிருப்புகளை அமைத்து வாழ்வோராக ஆக்கியிருக்கின்றான்’ என்பது பொருள். (57:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மினழ்ழுலுமாத்தி இலந் நூர்’ (இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்) என்பதற்கு, ‘வழிகேட்டிலிருந்து நல்வழியின் பக்கம்’ என்று பொருள். (57:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ மனாஃபிஉ லிந்நாஸ்’ (மக்களுக்குப் பயன்கள்) எனும் சொல், கேடயத்தையும் ஆயுதத்தையும் குறிக்கின்றது. (57:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லாக்கும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களுக்குப் பொருத்தமானதாகும்’ என்று பொருள். (57:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிஅல்லா யஅலம அஹ்லுல் கிதாபி’ எனும் வாக்கியத்திற்கு ‘வேதக்காரர்கள் அறிந்துகொள்வதற்காக’ என்று பொருள். (57:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அழ்ழாஹிரு வல்பாத்தின்’ (வெளிப்படையானவனும் மறைவானவனும்) எனும் சொற்றொடருக்கு, ‘‘அவனது இருப்பைப் பற்றிய அறிவு எல்லாப் பொருட்களிலும் வெளிப்படையாக உண்டு; அவனது மெய்மை பற்றிய அறிவு அனைவருக்கும் மறைவானது” என்று பொருள். (57:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்ழிரூனா’ எனும் சொல்லுக்கு ‘எங்களை எதிர்பாருங்கள்’ என்பது பொருள். பாடம்: 58. ‘அல்முஜாதலா’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (58:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹாத்தூன’ எனும் சொல்லுக்கு ‘மோதுகின்றவர்கள்’ என்பது பொருள். ‘குபித்தூ’ எனும் சொல்லுக்கு ‘இழிவுக்கு ஆளாக்கப்படுவார்கள்’ என்பது பொருள். (58:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸ்த்தஹ்வத’ எனும் சொல்லுக்கு ‘ஆதிக்கம் செலுத்தி வென்றுவிட்டான்’ என்று பொருள். பாடம்: 59. ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயம்1 (59:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜலாஉ’ (நாடு கடத்தல்) எனும் சொல்லுக்கு ‘ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வெளியேற்றுதல்’ என்று பொருள். பாடம் : 1
4883. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (59ஆவது அத்தியாயத்தின் பெயரை) ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். அவர்கள், ‘அந்நளீர்’ அத்தியாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.3

அத்தியாயம் : 65
4884. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ، وَهْىَ الْبُوَيْرَةُ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ وَلِيُخْزِيَ الْفَاسِقِينَ}
பாடம்: 2 ‘‘நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியது...” எனும் (59:5ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லீனத்’ எனும் சொல் ‘அஜ்வா’ (எனும் அடர்த்தியான பேரீச்ச மரம்) மற்றும் ‘பர்ணீ’ (எனும் சிவப்பு, மஞ்சள் நிற பேரீச்ச மரம்) அல்லாத (மலிவான) பேரீச்ச மரத்தைக் குறிக்கும்.
4884. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘புவைரா’ எனுமிடத்திலிருந்த ‘பனுந் நளீர்’ குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டினார்கள்.

அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடிமரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதி யுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” எனும் (59:5ஆவது) வசனத்தை அருளினான்.4

அத்தியாயம் : 65
4885. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَان ُ ـ غَيْرَ مَرَّةٍ ـ عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مِمَّا لَمْ يُوجِفِ الْمُسْلِمُونَ عَلَيْهِ بِخَيْلٍ وَلاَ رِكَابٍ، فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاصَّةً، يُنْفِقُ عَلَى أَهْلِهِ مِنْهَا نَفَقَةَ سَنَتِهِ، ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ فِي السِّلاَحِ وَالْكُرَاعِ، عُدَّةً فِي سَبِيلِ اللَّهِ.
பாடம்: 3 அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர் களிடமிருந்து (விடுவித்து,) தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ (என்று தொடங்கும் 59:6ஆவது இறைவசனம்)
4885. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனுந் நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை யாகும். அவற்றைப் பெறுவதற்காக முஸ்óம்கள் (தங்களின்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ செலுத்திப் போர் செய்திருக்கவில்லை. ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்துவந்தார்கள்.

பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டுவந்தார்கள்.5

அத்தியாயம் : 65
4886. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُوتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ. فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ، فَجَاءَتْ فَقَالَتْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ. فَقَالَ وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ هُوَ فِي كِتَابِ اللَّهِ فَقَالَتْ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُ فِيهِ مَا تَقُولُ. قَالَ لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ، أَمَا قَرَأْتِ {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا}. قَالَتْ بَلَى. قَالَ فَإِنَّهُ قَدْ نَهَى عَنْهُ. قَالَتْ فَإِنِّي أَرَى أَهْلَكَ يَفْعَلُونَهُ. قَالَ فَاذْهَبِي فَانْظُرِي. فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا، فَقَالَ لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعْتُها.
பாடம்: 4 இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் (எனும் 59:7ஆவது வசனத்தொடர்)
4886. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?” என்று கூறினார்கள்.6

இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும் ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘‘(குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே!” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ‘‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதைவிட்டு உங்களைத் தடுத்தாரோ அதைவிட்டு நீங்கள் விலகி இருங்கள்” எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓதியதில்லையா?” என்று கேட்டார்கள்.

அந்தப் பெண், ‘‘ஆம் (ஓதியுள்ளேன்)” என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்” என்று சொன்னார்கள். அந்தப் பெண்மணி, ‘‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!” என்று கூறினார்கள். ஆகவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தமது எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்” என்று கூறினார்கள்.

4887அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக்கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து உம்மு யஅகூப் எனும் பெண்மணி அறிவித்த இந்த ஹதீஸை நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4888. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ قَالَ عُمَرُ رضى الله عنه أُوصِي الْخَلِيفَةَ بِالْمُهَاجِرِينَ الأَوَّلِينَ أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ، وَأُوصِي الْخَلِيفَةَ بِالأَنْصَارِ الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ مِنْ قَبْلِ أَنْ يُهَاجِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ وَيَعْفُوَ عَنْ مُسِيئِهِمْ.
பாடம்: 5 மேலும், (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் பூமியில் (மதீனாவில்) வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக் கும் (உரியதாகும் என்று தொடங்கும் 59:9ஆவது இறைவசனம்)
4888. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(‘அபூலுஃலுஆ ஃபைரோஸ்’ என்பவனால் கத்தியால் குத்தப்பட்ட பிறகு) உமர் (ரலி) அவர்கள், ‘‘(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து (அவர்களின் கண்ணியத்தைக் காத்துக்)கொள்ள வேண்டும் என்று (எனக்குப் பின்னர் வரவிருக்கும்) ‘கலீஃபா’வுக்கு நான் இறுதி அறிவுரை கூறுகிறேன். மேலும், நபி (ஸல்) அவர்கள் (மற்றும் நபித்தோழர்கள்) ‘ஹிஜ்ரத்’ செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு இறைநம்பிக்கையை (உறுதியாகப்) பற்றிக்கொண்ட அன்சாரிகளில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரது நன்மையை) ஏற்று, அவர்களில் தவறிழைப்பவரை மன்னிக்க வேண்டும் என்று நான் அந்த கலீஃபாவுக்கு அறிவுரை கூறுகிறேன்” என்றார்கள்.7

அத்தியாயம் : 65
4889. حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ غَزْوَانَ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ الأَشْجَعِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصَابَنِي الْجَهْدُ فَأَرْسَلَ إِلَى نِسَائِهِ فَلَمْ يَجِدْ عِنْدَهُنَّ شَيْئًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ رَجُلٌ يُضَيِّفُ هَذِهِ اللَّيْلَةَ يَرْحَمُهُ اللَّهُ ". فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ. فَذَهَبَ إِلَى أَهْلِهِ فَقَالَ لاِمْرَأَتِهِ ضَيْفُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تَدَّخِرِيهِ شَيْئًا. قَالَتْ وَاللَّهِ مَا عِنْدِي إِلاَّ قُوتُ الصِّبْيَةِ. قَالَ فَإِذَا أَرَادَ الصِّبْيَةُ الْعَشَاءَ فَنَوِّمِيهِمْ، وَتَعَالَىْ فَأَطْفِئِي السِّرَاجَ وَنَطْوِي بُطُونَنَا اللَّيْلَةَ. فَفَعَلَتْ ثُمَّ غَدَا الرَّجُلُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " لَقَدْ عَجِبَ اللَّهُ عَزَّ وَجَلَّ ـ أَوْ ضَحِكَ ـ مِنْ فُلاَنٍ وَفُلاَنَةَ ". فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ}
பாடம்: 6 ‘‘மேலும், தமக்கே தேவையிருந்தும்கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்” எனும் (59:9ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸாஸா’ (தேவை) எனும் சொல்லுக்கு ‘வறுமை’ என்று பொருள். ‘முஃப்லிஹூன்’ (வெற்றியாளர்கள்) எனும் சொல்லுக்கு, ‘நிரந்தர வெற்றி யாளர்கள்’ என்று பொருள். (இதன் வேர்ச்சொல்லான) ‘ஃபலாஹ்’ என்பதற்கு, ‘நிரந்தர வாழ்க்கை’ என்று பொருள். (தொழுகை அறிவிப்பில் இடம்பெற்றுள்ள) ‘ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்பதற்கு ‘நிரந்தரத்தை நோக்கி விரைந்து வாருங்கள்’ என்று பொருள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள், ‘‘(இதே வசனத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள) ‘ஹாஜத்’ (தேவை) எனும் சொல்லுக்கு ‘பொறாமை’ என்று பொருள்” எனக் கூறினார்கள்.
4889. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘‘இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்” என்று சொன்னார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘‘நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லி (அவரை அழைத்துக்கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, ‘‘(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்துவைத்துக்கொள்ளாதே!” என்று சொன்னார்.

அதற்கு அவர் மனைவி, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை” என்று பதிலளித்தார். அவர், ‘‘(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்துவைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவதுபோல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக்கொள்வோம்” என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார்.

பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ‘வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) ‘சிரித்துக்கொண்டான்’ ‘‘ என்று சொன்னார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘தமக்கே தேவை இருந்தும்கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்...” எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான்.8

அத்தியாயம் : 65
4890. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ بْنَ أَبِي رَافِعٍ، كَاتِبَ عَلِيٍّ يَقُولُ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَالزُّبَيْرَ وَالْمِقْدَادَ فَقَالَ " انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ فَإِنَّ بِهَا ظَعِينَةً مَعَهَا كِتَابٌ فَخُذُوهُ مِنْهَا ". فَذَهَبْنَا تَعَادَى بِنَا خَيْلُنَا حَتَّى أَتَيْنَا الرَّوْضَةَ فَإِذَا نَحْنُ بِالظَّعِينَةِ فَقُلْنَا أَخْرِجِي الْكِتَابَ فَقَالَتْ مَا مَعِي مِنْ كِتَابٍ. فَقُلْنَا لَتُخْرِجِنَّ الْكِتَابَ أَوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ. فَأَخْرَجَتْهُ مِنْ عِقَاصِهَا فَأَتَيْنَا بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَإِذَا فِيهِ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى أُنَاسٍ مِنَ الْمُشْرِكِينَ مِمَّنْ بِمَكَّةَ يُخْبِرُهُمْ بِبَعْضِ أَمْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا هَذَا يَا حَاطِبُ ". قَالَ لاَ تَعْجَلْ عَلَىَّ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ امْرَأً مِنْ قُرَيْشٍ وَلَمْ أَكُنْ مِنْ أَنْفُسِهِمْ وَكَانَ مَنْ مَعَكَ مِنَ الْمُهَاجِرِينَ لَهُمْ قَرَابَاتٌ يَحْمُونَ بِهَا أَهْلِيهِمْ وَأَمْوَالَهُمْ بِمَكَّةَ فَأَحْبَبْتُ إِذْ فَاتَنِي مِنَ النَّسَبِ فِيهِمْ أَنْ أَصْطَنِعَ إِلَيْهِمْ يَدًا يَحْمُونَ قَرَابَتِي وَمَا فَعَلْتُ ذَلِكَ كُفْرًا وَلاَ ارْتِدَادًا عَنْ دِينِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّهُ قَدْ صَدَقَكُمْ ". فَقَالَ عُمَرُ دَعْنِي يَا رَسُولَ اللَّهِ فَأَضْرِبَ عُنُقَهُ. فَقَالَ " إِنَّهُ شَهِدَ بَدْرًا وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ ـ عَزَّ وَجَلَّ ـ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ ". قَالَ عَمْرٌو وَنَزَلَتْ فِيهِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ} قَالَ لاَ أَدْرِي الآيَةَ فِي الْحَدِيثِ أَوْ قَوْلُ عَمْرٍو. حَدَّثَنَا عَلِيٌّ قِيلَ لِسُفْيَانَ فِي هَذَا فَنَزَلَتْ {لاَ تَتَّخِذُوا عَدُوِّي} قَالَ سُفْيَانُ هَذَا فِي حَدِيثِ النَّاسِ حَفِظْتُهُ مِنْ عَمْرٍو وَمَا تَرَكْتُ مِنْهُ حَرْفًا وَمَا أُرَى أَحَدًا حَفِظَهُ غَيْرِي.
பாடம்: 60. ‘அல்மும்தஹினா’ அத்தியாயம்1 (60:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தஜ்அல்னா ஃபித்னா’ (எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே) என்பதற்கு, ‘இறைமறுப்பாளர்களின் கரங்களால் எங்களை வேதனை செய்துவிடாதே! அப்போது அவர்கள், ‘‘உண்மையில் இந்த முஸ்லிம்கள் சத்தியத்தின் மீதிருந்திருந்தால் அவர்களுக்கு இத்துன்பம் நேர்ந்திராது” என்று கூறி (தங்களின் தவறான வழியில் தொடர்ந்து இருந்து)விடுவார்கள். (இதனால்நாங்கள் அவர்களுக்கு ஒரு சோதனையாகிவிடுவோம். அப்படி ஆக்கிவிடாதே) என்பது பொருள். (60:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி இஸமில் கவாஃபிரி’ (இறைநம்பிக்கை கொள்ளாத பெண்களின் திருமண உறவு) எனும் சொற்றொடர் ‘மக்காவில் இறைமறுப்பாளர்களாகவே நீடித்திருக்கும் தங்கள் மனைவியரை மணவிலக்குச் செய்துவிட வேண்டுமென நபித்தோழர்களுக்குக் கட்டளையிடப்பட்டதைக் குறிக்கின்றது. பாடம்: 1 (இறைநம்பிக்கை கொண்டவர் களே!) எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள் (எனும் 60:1ஆவது வசனத் தொடர்)
4890. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும், மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களையும் ‘‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம்வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு ‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ’ நமது இரகசியத் திட்டங்களை எழுதித் தெரிவித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்!” என்று கூறியனுப்பினார்கள்.

உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த ‘ரவ்ளத்து காக்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், ‘‘கடிதத்தை வெளியே எடு!” என்று சொன்னோம். அதற்கு அவள், ‘‘என்னிடம் கடிதம் ஏதுமில்லை” என்று பதிலளித்தாள்.

நாங்கள், ‘‘ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உனது) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும்” என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம்.

அதில் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள் (தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு), ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்துவந்த) ஒருவனாகவே இருந்தேன்.

தங்களுடன் இருக்கும் முஹாஜிர் களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை” என்று (காரணம்) கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் உங்களிடம் உண்மையே சொன்னார்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் பத்ர் போரில் கலந்துகொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பத்ர் போரில் பங்கேற்றவர்களிடம், ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள்.

‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ’ (ரலி) அவர்கள் விஷயத்தில்தான், ‘‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர் களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள்” என்று தொடங்கும் (60:1ஆவது) வசனம் அருளப்பெற்றது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இந்த இறைவசனம் (அலீ (ரலி) அவர்களின்) அறிவிப்பிலேயே உள்ளதா? அல்லது அம்ர் பின் தீனார் அவர்களின் (அறிவிப்பின்போது வந்த) சொல்லா என்பது எனக்குத் தெரியாது.2

... அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் தொடர்பாகத்தான் இவ்வசனம் (60:1) அருளப்பெற்றதா?” என்று கேட்கப்பட்டது. சுஃப்யான் (ரஹ்) அவர்கள், ‘‘இப்படித்தான் மக்களின் அறிவிப்பு களில் காணப்படுகிறது. இந்த அறிவிப்பை நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிட மிருந்து செவியுற்றேன். அதில் ஒரு வார்த்தையைக்கூட நான் விட்டுவிடவில்லை. நான் அல்லாத வேறு யாரும் அம்ர் (ரஹ்) அவர்களிடமிருந்து இதை நன்கு நினைவில் நிறுத்திக்கொண்டதாக நான் கருதவில்லை” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4891. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُ مَنْ هَاجَرَ إِلَيْهِ مِنَ الْمُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ، بِقَوْلِ اللَّهِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ}. قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ الْمُؤْمِنَاتِ قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ بَايَعْتُكِ ". كَلاَمًا وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ، مَا يُبَايِعُهُنَّ إِلاَّ بِقَوْلِهِ " قَدْ بَايَعْتُكِ عَلَى ذَلِكَ ". تَابَعَهُ يُونُسُ وَمَعْمَرٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ إِسْحَاقُ بْنُ رَاشِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ.
பாடம்: 2 இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புலம்பெயர்ந்து உங்களிடம் வந்தால் (என்று தொடங்கும் 60:10ஆவது இறைவசனம்)
4891. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிóருந்து) புலம்பெயர்ந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களைப் பரிசோதனை செய்துவந்தார்கள்.

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம், ‘‘உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், ‘‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.3

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4892. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَ عَلَيْنَا {أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا} وَنَهَانَا عَنِ النِّيَاحَةِ، فَقَبَضَتِ امْرَأَةٌ يَدَهَا فَقَالَتْ أَسْعَدَتْنِي فُلاَنَةُ أُرِيدُ أَنْ أَجْزِيَهَا. فَمَا قَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم شَيْئًا فَانْطَلَقَتْ وَرَجَعَتْ فَبَايَعَهَا.
பாடம்: 3 நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்)
4892. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மகளிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிராமணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர்கள் அல்லாஹ்வுடன் எதையும் இணைவைக்கமாட்டார்கள்” எனும் (60:12ஆவது) இறைவசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.

அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கிச் சமிக்ஞை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தமது கையைப் பின்னால் இழுத்துக்கொண்டார். மேலும், அவர், ‘‘இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரிவைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். அவளுக்கு எந்தப் பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரிவைத்து)விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவளிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.


அத்தியாயம் : 65
4893. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ الزُّبَيْرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ تَعَالَى {وَلاَ يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ} قَالَ إِنَّمَا هُوَ شَرْطٌ شَرَطَهُ اللَّهُ لِلنِّسَاءِ.
பாடம்: 3 நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்)
4893. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘எந்த ஒரு நற்செயலிலும், (நபியே!) உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” எனும் (60:12ஆவது) இறைவசனத்தி(ன், விளக்கவுரையி)ல், ‘‘இதுவும் பெண்கள்மீது அல்லாஹ் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4


அத்தியாயம் : 65
4894. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ حَدَّثَنَاهُ قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ، سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " أَتُبَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلاَ تَزْنُوا وَلاَ تَسْرِقُوا ". وَقَرَأَ آيَةَ النِّسَاءِ ـ وَأَكْثَرُ لَفْظِ سُفْيَانَ قَرَأَ الآيَةَ ـ " فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْهَا شَيْئًا مِنْ ذَلِكَ فَسَتَرَهُ اللَّهُ فَهْوَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ} ". تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ فِي الآيَةِ.
பாடம்: 3 நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்)
4894. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?” என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களின் கூடுதலான அறிவிப்பில் ‘‘அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள்” என்றே காணப்படுகிறது. (‘பெண்கள் பற்றிய வசனம்’ என்று காணப்படவில்லை.) தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவர் (இந்த உறுதிமொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும்.

மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்று சொன்னார்கள்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4895. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، أَنَّ الْحَسَنَ بْنَ مُسْلِمٍ، أَخْبَرَهُ عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ شَهِدْتُ الصَّلاَةَ يَوْمَ الْفِطْرِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَكُلُّهُمْ يُصَلِّيهَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُ بَعْدُ، فَنَزَلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ، ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى أَتَى النِّسَاءَ مَعَ بِلاَلٍ فَقَالَ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلاَ يَسْرِقْنَ وَلاَ يَزْنِينَ وَلاَ يَقْتُلْنَ أَوْلاَدَهُنَّ وَلاَ يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ} حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ كُلِّهَا ثُمَّ قَالَ حِينَ فَرَغَ " أَنْتُنَّ عَلَى ذَلِكَ ". وَقَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ يُجِبْهُ غَيْرُهَا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، لاَ يَدْرِي الْحَسَنُ مَنْ هِيَ. قَالَ " فَتَصَدَّقْنَ " وَبَسَطَ بِلاَلٌ ثَوْبَهُ فَجَعَلْنَ يُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ.
பாடம்: 3 நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்)
4895. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்குமுன் தொழுபவர்களாக இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்தபின்) நபி (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பதுபோல் உள்ளது. பிறகு ஆண்(களின் வரிசை)களைப் பிளந்துகொண்டு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள்.

அப்போது, ‘‘நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதையும் இணைவைக்கமாட்டார்கள் என்றும், திருடமாட்டார்கள் என்றும், விபசாரம் செய்யமாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள் என்றும், தங்கள் கை கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்டமாட்டார்கள் என்றும், எந்த ஒரு நற்செயலிலும் உமக்கு மாறு செய்யமாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிடமிருந்து விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், மிகுந்த கருணையாளனும் ஆவான்” எனும் (60:12ஆவது) இறைவசனம் முழுவதையும் ஓதிமுடித்துவிட்டு, ‘‘இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?” என்று கேட்டார்கள்.

ஒரேயொரு பெண்மணி மட்டும், ‘‘ஆம் (நீடிப்போம்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. -அந்தப் பெண் யாரென்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹசன் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தர்மம் செய்யுங்கள்!” என்று சொன்னார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்தார்கள். அப்போது மோதிரங்களையும் மெட்டிகளையும் அப்பெண்கள் பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலானார்கள்.6

அத்தியாயம் : 65
4896. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ لِي أَسْمَاءً، أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ ".
பாடம்: 61. ‘அஸ்ஸஃப்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (61:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மன் அன்சாரீ இலல்லாஹ்’ (இறைவழியில் எனக்கு உதவி புரிபவர் யார்?) என்பதன் கருத்தாவது: இறைவழியில் என்னைப் பின்பற்றி நடப்பவர் யார்? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (61:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மர்ஸூஸ்’ எனும் சொல்லுக்கு ‘ஒன்றோ டொன்று (வலுவுடன்) இணைக்கப்பட்டது” என்பது பொருள். மற்றவர்கள் கூறுகி றார்கள்: ‘மர்ஸூஸ்’ என்பதற்கு ‘ஈயத்தால் வார்க்கப்பட்டது’ என்பது பொருள். பாடம்: 1 ‘‘எனக்குப் பிறகு ‘அஹ்மத்’ எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈசா கூறினார்)” எனும் (61:6ஆவது) வசனத்தொடர்
4896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பல பெயர்கள் உண்டு; நான் ‘முஹம்மத்’ (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் ‘அஹ்மத்’ (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் ‘மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் ‘ஹாஷிர்’ (ஒருங்கிணைப்பவர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.

இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 65
4897. حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْجُمُعَةِ {وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ} قَالَ قُلْتُ مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يُرَاجِعْهُ حَتَّى سَأَلَ ثَلاَثًا، وَفِينَا سَلْمَانُ الْفَارِسِيُّ، وَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ عَلَى سَلْمَانَ ثُمَّ قَالَ " لَوْ كَانَ الإِيمَانُ عِنْدَ الثُّرَيَّا لَنَالَهُ رِجَالٌ ـ أَوْ رَجُلٌ ـ مِنْ هَؤُلاَءِ ".
பாடம்: 62. ‘அல்ஜுமுஆ’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம்: 1 ‘‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக் காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (62:3ஆவது) வசனத்தொடர் (62:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபஸ்அவ் இலா திக்ரில்லாஹ்’ -அல்லாஹ்வை நினைவுகூர விரையுங்கள் என்பதை) உமர் (ரலி) அவர்கள், ‘ஃபம்ளூ இலா திக்ரில்லாஹ்’ (அல்லாஹ்வை நினைவுகூரச் செல்லுங்கள்) என்று ஓதி னார்கள்.
4897. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62ஆவது) அத்தியாயத்தில், ‘‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (3ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அப்போது, ‘‘அந்த (ஏனைய) மக்கள் யார்?, அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி) அவர்கள் மீது தமது கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் கூட்டத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதை அடைந்தே தீருவார்” என்று கூறினார்கள்.2


அத்தியாயம் : 65