2842. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ "" إِنَّمَا أَخْشَى عَلَيْكُمْ مِنْ بَعْدِي مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ بَرَكَاتِ الأَرْضِ "". ثُمَّ ذَكَرَ زَهْرَةَ الدُّنْيَا، فَبَدَأَ بِإِحْدَاهُمَا وَثَنَّى بِالأُخْرَى، فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَيَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قُلْنَا يُوحَى إِلَيْهِ. وَسَكَتَ النَّاسُ كَأَنَّ عَلَى رُءُوسِهِمِ الطَّيْرَ، ثُمَّ إِنَّهُ مَسَحَ عَنْ وَجْهِهِ الرُّحَضَاءَ، فَقَالَ "" أَيْنَ السَّائِلُ آنِفًا أَوَخَيْرٌ هُوَ ـ ثَلاَثًا ـ إِنَّ الْخَيْرَ لاَ يَأْتِي إِلاَّ بِالْخَيْرِ، وَإِنَّهُ كُلُّ مَا يُنْبِتُ الرَّبِيعُ مَا يَقْتُلُ حَبَطًا أَوْ يُلِمُّ كُلَّمَا أَكَلَتْ، حَتَّى إِذَا امْتَلأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتِ الشَّمْسَ، فَثَلَطَتْ وَبَالَتْ ثُمَّ رَتَعَتْ، وَإِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، وَنِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ لِمَنْ أَخَذَهُ بِحَقِّهِ، فَجَعَلَهُ فِي سَبِيلِ اللَّهِ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ، وَمَنْ لَمْ يَأْخُذْهُ بِحَقِّهِ فَهْوَ كَالآكِلِ الَّذِي لاَ يَشْبَعُ، وَيَكُونُ عَلَيْهِ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 37 இறைவழியில் (அறப்போருக்காகச்) செலவிடுவதன் சிறப்பு
2842. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்று, ‘‘எனக் குப்பின், உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள் வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட விருப்பதைத்தான்” என்று கூறிவிட்டு, உலகின் அழகையும் செழிப்பையும் கூறினார்கள். (அவற்றில்) முதலில் ஒன்றை (அருள் வளங்கள்) பற்றிக் கூறி, பிறகு மற்றொன்றை (உலகின் கவர்ச்சி) பற்றி இரண்டாவதாகக் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை, தீமையைக் கொண்டுவருமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார்கள்.

இதைக் கண்ட நாங்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு அருளப்படுகிறது” என்று கூறிக்கொண்டோம். மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பதைப் போன்று (ஆடாமல் அசையாமல்) மௌனமாக இருந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘‘சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?” என்று மூன்று முறை கூறினார்கள்.

பிறகு, ‘‘(உண்மையிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்)நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டுவராதுதான். ஆனால், வாய்க்கால் (தாவரங்களை) விளைவிக்கும்போதெல்லாம், (அவற்றைத் தின்னும்கால்நடைகளை) வயிறு புடைக்கவைத்து கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. (அப்போதுதான் துளிர்விட்ட பசும்புற் களைத் தின்னும் கால்நடைகளைத் தவிர!) அவை (அதைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற் காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்துக்)கொள்கிறது. (இதனால், நன்கு சீரணமாகி குழைந்த) சாணமிடுகிறது; சிறுநீர் கழிக்கி றது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் மேய்கிறது.

(இவ்வாறே) இந்தச் செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதை களுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். அச்செல்வம் மறுமை நாளில் அவருக்கெதிரான சாட்சி யாக அமையும்” என்று கூறினார்கள்.28

அத்தியாயம் : 56
2843. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ خَالِدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا "".
பாடம் : 38 அறப்போர் வீரருக்குப் பயண வசதி செய்துகொடுப்பவர், அல்லது வீரர் சென்றபின் அவரது குடும்பத்தை நல்ல விதமாகக் கவனித்துக்கொள்பவரின் சிறப்பு
2843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைவழியில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்துகொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவராவார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்றபின் அவரது வீட்டாரின் நலன் காக்கின்றாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவ ராவார்.

இதை ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2844. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَدْخُلُ بَيْتًا بِالْمَدِينَةِ غَيْرَ بَيْتِ أُمِّ سُلَيْمٍ، إِلاَّ عَلَى أَزْوَاجِهِ فَقِيلَ لَهُ، فَقَالَ "" إِنِّي أَرْحَمُهَا، قُتِلَ أَخُوهَا مَعِي "".
பாடம் : 38 அறப்போர் வீரருக்குப் பயண வசதி செய்துகொடுப்பவர், அல்லது வீரர் சென்றபின் அவரது குடும்பத்தை நல்ல விதமாகக் கவனித்துக்கொள்பவரின் சிறப்பு
2844. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் துணைவியரின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற் கும் (அதிகமாகச்) செல்வதில்லை.29 அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்ட போது, ‘‘நான் அவர் (உம்மு சுலைம்)மீது, இரக்கம் காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள்) என்னோடு இருந்தபோது (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொல்லப் பட்டார்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 56
2845. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، قَالَ وَذَكَرَ يَوْمَ الْيَمَامَةِ قَالَ أَتَى أَنَسٌ ثَابِتَ بْنَ قَيْسٍ وَقَدْ حَسَرَ عَنْ فَخِذَيْهِ وَهْوَ يَتَحَنَّطُ فَقَالَ يَا عَمِّ مَا يَحْبِسُكَ أَنْ لاَ تَجِيءَ قَالَ الآنَ يَا ابْنَ أَخِي. وَجَعَلَ يَتَحَنَّطُ، يَعْنِي مِنَ الْحَنُوطِ، ثُمَّ جَاءَ فَجَلَسَ، فَذَكَرَ فِي الْحَدِيثِ انْكِشَافًا مِنَ النَّاسِ، فَقَالَ هَكَذَا عَنْ وُجُوهِنَا حَتَّى نُضَارِبَ الْقَوْمَ، مَا هَكَذَا كُنَّا نَفْعَلُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، بِئْسَ مَا عَوَّدْتُمْ أَقْرَانَكُمْ. رَوَاهُ حَمَّادٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ.
பாடம் : 39 அறப்போரின்போது நறுமணம் பூசிக்கொள்வது
2845. மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் யமாமா போரை நினைவு கூர்ந்து கூறியதாவது:30

(என் தந்தை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக்கொண்டிருந்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (அறப்போருக்கு) ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இதோ! இப்போது வருகின் றேன்; என் சகோதரர் மகனே!” என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கி விட்டார்கள்.

பிறகு வந்து (அறப்போர் வீரர்களுடன்) உட்கார்ந்துவிட்டார்கள். லிஅப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள்லி (மக்கள் தோற்றுப் பின் வாங்குவதைக் கண்ட) ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘எமக்கு விலகி வழிவிடுங்கள். நாம் எதிரிகளுடன் போரிடுவோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் (நீங்கள் பின்வாங்கியோட, அவர்கள் உங்களை விரட்டி வரும் இந்த குணம்) மிக மோச மானது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
2846. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ يَوْمَ الأَحْزَابِ "". قَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ "" مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ "". قَالَ الزُّبَيْرُ أَنَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَحَوَارِيَّ الزُّبَيْرُ "".
பாடம் : 40 ஒற்றர் படையின் சிறப்பு
2846. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ் (அஹ்ஸாப்) போர் நாளில், எதிரிகளின் செய்தியை உளவறிந்து என்னிடம் கொண்டுவருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘நான் (உளவறிந்து வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘எதிரிகளின் செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்?” என்று கேட்க, ஸுபைர் (ரலி) அவர்களே, யிநான்’ என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2847. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ نَدَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّاسَ ـ قَالَ صَدَقَةُ أَظُنُّهُ ـ يَوْمَ الْخَنْدَقِ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ النَّاسَ فَانْتَدَبَ الزُّبَيْرُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ "".
பாடம் : 41 ஒற்றராக ஒருவரை மட்டும் தனியாக அனுப்பலாமா?
2847. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது;

(உளவுப் பணிக்காக) நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள்.லி ‘‘அது அகழ்ப் போரின்போது என்றே நினைக்கி றேன்” என அறிவிப்பாளர் ஸதகா பின் அல்ஃபள்ல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். லி ஸுபைர் (ரலி) அவர்கள் (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத் தார்கள்; அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்களே பதிலளித்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் நிச்சயம் உண்டு. என் (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் பின் அல்அவ்வாம் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2848. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ انْصَرَفْتُ مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ لَنَا أَنَا وَصَاحِبٌ لِي "" أَذِّنَا وَأَقِيمَا، وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا "".
பாடம் : 42 இருவர் பயணம் செய்வது
2848. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது எனக்கும் என் தோழர் ஒருவருக்கும் நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும் இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2849. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْخَيْلُ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "".
பாடம் : 43 குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக் கப்பட்டிருக்கிறது.
2849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை உள்ளது.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2850. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُصَيْنٍ، وَابْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْجَعْدِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "". قَالَ سُلَيْمَانُ عَنْ شُعْبَةَ عَنْ عُرْوَةَ بْنِ أَبِي الْجَعْدِ.
பாடம் : 43 குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக் கப்பட்டிருக்கிறது.
2850. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டி ருக்கிறது.

இதை உர்வா பின் அபில்ஜஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 56
2851. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْبَرَكَةُ فِي نَوَاصِي الْخَيْلِ "".
பாடம் : 43 குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக் கப்பட்டிருக்கிறது.
2851. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரை களின் நெற்றிகளில் வளம் (பரக்கத்) உள்ளது.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2852. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، حَدَّثَنَا عُرْوَةُ الْبَارِقِيُّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ الأَجْرُ وَالْمَغْنَمُ "".
பாடம் : 44 நல்லவர் மற்றும் கெட்டவரின் தலைமையின் கீழ் (மறுமை நாள்வரை) அறப்போர் நடந்து கொண்டிருக்கும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், ‘‘(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரை களின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்கள்.
2852. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டி ருக்கிறது. அந்த நன்மை யாதெனில், (அந்தக் குதிரையில் ஏறி அறப்போர் புரிவதால் மறுமையில் கிடைக்கும்) பிரதிபலனும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும்.

இதை உர்வா பின் அல்ஜஅத் அல் பாரிகீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2853. حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا طَلْحَةُ بْنُ أَبِي سَعِيدٍ، قَالَ سَمِعْتُ سَعِيدًا الْمَقْبُرِيَّ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنِ احْتَبَسَ فَرَسًا فِي سَبِيلِ اللَّهِ إِيمَانًا بِاللَّهِ وَتَصْدِيقًا بِوَعْدِهِ، فَإِنَّ شِبَعَهُ وَرِيَّهُ وَرَوْثَهُ وَبَوْلَهُ فِي مِيزَانِهِ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 45 இறைவழியில் (போரிடுவதற்காக) குதிரையைத் தயாராகவைத்திருப் பவர் உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள்” (8:60) என்று கூறுகின்றான்.
2853. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனது வாக்குறுதியை நம்பியும் யார் இறைவழியில் (போர் புரிவதற்காக) ஒரு குதிரையைக் கட்டிவைக்கிறாரோ அவர் அதற்குப் போடுகின்ற தீனியும், அதற்குப் புகட்டுகின்ற தண்ணீரும், அதன் சாணமும், அதன் சிறுநீரும் மறுமை நாளில் அவரது (செயல்கள் நிறுக்கப்படும் தராசில் நற்செயல்களின்) தட்டில் (வைத்து எடை) போடப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2854. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَتَخَلَّفَ أَبُو قَتَادَةَ مَعَ بَعْضِ أَصْحَابِهِ وَهُمْ مُحْرِمُونَ وَهْوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَوْا حِمَارًا وَحْشِيًّا قَبْلَ أَنْ يَرَاهُ، فَلَمَّا رَأَوْهُ تَرَكُوهُ حَتَّى رَآهُ أَبُو قَتَادَةَ، فَرَكِبَ فَرَسًا لَهُ يُقَالُ لَهُ الْجَرَادَةُ، فَسَأَلَهُمْ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا، فَتَنَاوَلَهُ فَحَمَلَ فَعَقَرَهُ، ثُمَّ أَكَلَ فَأَكَلُوا، فَنَدِمُوا فَلَمَّا أَدْرَكُوهُ قَالَ "" هَلْ مَعَكُمْ مِنْهُ شَىْءٌ "". قَالَ مَعَنَا رِجْلُهُ، فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَكَلَهَا.
பாடம் : 46 குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் பெயர் சூட்டுவது
2854. அபூக(த்)தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் (ஹுதைபியா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என் தோழர்கள் சிலருடன் நான் பின்தங்கிவிட்டேன். அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்; நான் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. என் தோழர்கள் நான் பார்ப்பதற்கு முன்னால் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். அதைப் பார்த்தபொழுது அதை நானாகப் பார்க்கட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

(நான் அதைப் பார்த்தவுடன்) ‘அல்—ராதா’ எனப்படும் எனது குதிரையின் மீது ஏறிக்கொண்டு என் தோழர்களிடம் எனது சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்) அதை (எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். ஆகவே, நான் அதை எடுத்து (அந்தக் காட்டுக் கழுதையைத்) தாக்கி, அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன்; பிறகு (அதை அறுத்து சமைத்து) நான் உண்டேன்; அவர்களும் உண்டார்கள். பிறகு (அதை உண்டதற் காக) வருந்தினார்கள்.

அவர்கள் நபி (ஸல்) அவர்களை அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதிலிருந்து ஏதேனும் உங்களிடம் எஞ்சி இருக்கிறதா?” என்று கேட்டார்கள். ‘‘அதன் கால் எங்களிடம் இருக்கிறது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எடுத்து உண் டார்கள்.31


அத்தியாயம் : 56
2855. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أُبَىُّ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَائِطِنَا فَرَسٌ يُقَالُ لَهُ اللُّحَيْفُ. قَالَ أَبُو عَبْد اللَّهِ وَقَالَ بَعْضُهُمُ اللُّخَيْفُ
பாடம் : 46 குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் பெயர் சூட்டுவது
2855. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்கள் தோட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு (சொந்தமான) யிலுஹைஃப்’ எனப்படும் குதிரையொன்று இருந்தது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: அவர்களில் சிலர் அதன் பெயர் யிலுஃகைஃப்’ என்று கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 56
2856. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ يَحْيَى بْنَ آدَمَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ مُعَاذٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى حِمَارٍ يُقَالُ لَهُ عُفَيْرٌ، فَقَالَ "" يَا مُعَاذُ، هَلْ تَدْرِي حَقَّ اللَّهِ عَلَى عِبَادِهِ وَمَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ "". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى الْعِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقَّ الْعِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَ مَنْ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ أُبَشِّرُ بِهِ النَّاسَ قَالَ "" لاَ تُبَشِّرْهُمْ فَيَتَّكِلُوا "".
பாடம் : 46 குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் பெயர் சூட்டுவது
2856. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் யிஉஃபைர்’ எனப்படும் கழுதை யின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘‘முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள்மீதுள்ள உரிமை என்ன; மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று (என்னி டம்) கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதில் கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென் றால், அவர்கள் அவனை(யே) வழிபட வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணையாக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணைகற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்” என்று பதில் கூறினார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக் கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவர்களுக்கு (இந்த நற் செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடு படாமல்) இருந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 56
2857. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ، فَاسْتَعَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لَنَا يُقَالُ لَهُ مَنْدُوبٌ. فَقَالَ "" مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا "".
பாடம் : 46 குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் பெயர் சூட்டுவது
2857. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவில் (போர் பற்றி) பீதி ஏற் பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் யிமன்தூப்’ எனப்படும் எங்கள் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். (அதில் ஏறிச் சென்று திரும்பிவந்து) ‘‘பீதி(க்கான காரணம்) எதையும் நாம் பார்க்கவில்லை. இந்த குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.32

அத்தியாயம் : 56
2858. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّمَا الشُّؤْمُ فِي ثَلاَثَةٍ فِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ "".
பாடம் : 47 குதிரையின் அபசகுனம் பற்றிக் கூறப்படுபவை
2858. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்றில் மட்டுமே (இருக்க முடியும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.


அத்தியாயம் : 56
2859. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنْ كَانَ فِي شَىْءٍ فَفِي الْمَرْأَةِ وَالْفَرَسِ وَالْمَسْكَنِ "".
பாடம் : 47 குதிரையின் அபசகுனம் பற்றிக் கூறப்படுபவை
2859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும் வீட்டிலும் தான் இருக்கும்.

இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33

அத்தியாயம் : 56
2860. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ لِثَلاَثَةٍ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ مِنَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ أَرْوَاثُهَا وَآثَارُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَهَا كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً وَنِوَاءً لأَهْلِ الإِسْلاَمِ فَهْىَ وِزْرٌ عَلَى ذَلِكَ "". وَسُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ، فَقَالَ "" مَا أُنْزِلَ عَلَىَّ فِيهَا إِلاَّ هَذِهِ الآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ }"".
பாடம் : 48 மூவருக்குரிய குதிரைகள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் குதிரைகளையும், கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் அவற் றின் மீது நீங்கள் பயணம் செய்வதற்காகவும் (உங்கள் வாழ்வின்) அலங்காரமாகவும் அவன் படைத்தான். (16:8)
2860. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை மூவருக்கு (மூன்று வகை விளைவுகளைத் தரும்). ஒருவருக்கு நற்கூலி ஆகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளா தாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான புல்வெளியில், அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற் பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்னைக் கட்டிவைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவுக்குப் பசும்புல் வெளிகளில், அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

அது தன் கயிற்றைத் துண்டித்துக் கொண்டு, ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடு கள் அளவுக்கும் அதன் விட்டைகளின் அளவுக்கும் அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருடைய நன்மைகளாக அமையும்.

குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், அதைப் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் இஸ்லாமியர்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் கட்டி வைத்துப் பராமரிக்கும் மனிதனாவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் (ஸகாத்) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. யியார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அதனை (அதற்கான தண்டனை யைக்) கண்டுகொள்வார்’ (99:7,8) எனும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த (குர்ஆன்) வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34

அத்தியாயம் : 56
2861. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ النَّاجِيُّ، قَالَ أَتَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، فَقُلْتُ لَهُ حَدِّثْنِي بِمَا، سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَافَرْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ ـ قَالَ أَبُو عَقِيلٍ لاَ أَدْرِي غَزْوَةً أَوْ عُمْرَةً ـ فَلَمَّا أَنْ أَقْبَلْنَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَحَبَّ أَنْ يَتَعَجَّلَ إِلَى أَهْلِهِ فَلْيُعَجِّلْ "". قَالَ جَابِرٌ فَأَقْبَلْنَا وَأَنَا عَلَى جَمَلٍ لِي أَرْمَكَ لَيْسَ فِيهِ شِيَةٌ، وَالنَّاسُ خَلْفِي، فَبَيْنَا أَنَا كَذَلِكَ إِذْ قَامَ عَلَىَّ، فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا جَابِرُ اسْتَمْسِكْ "". فَضَرَبَهُ بِسَوْطِهِ ضَرْبَةً، فَوَثَبَ الْبَعِيرُ مَكَانَهُ. فَقَالَ "" أَتَبِيعُ الْجَمَلَ "". قُلْتُ نَعَمْ. فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ وَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْجِدَ فِي طَوَائِفِ أَصْحَابِهِ، فَدَخَلْتُ إِلَيْهِ، وَعَقَلْتُ الْجَمَلَ فِي نَاحِيَةِ الْبَلاَطِ. فَقُلْتُ لَهُ هَذَا جَمَلُكَ. فَخَرَجَ، فَجَعَلَ يُطِيفُ بِالْجَمَلِ وَيَقُولُ "" الْجَمَلُ جَمَلُنَا "". فَبَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَاقٍ مِنْ ذَهَبٍ فَقَالَ "" أَعْطُوهَا جَابِرًا "". ثُمَّ قَالَ "" اسْتَوْفَيْتَ الثَّمَنَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" الثَّمَنُ وَالْجَمَلُ لَكَ "".
பாடம் : 49 அறப்போரில் (கலந்துகொண்ட) அடுத்தவரின் ஊர்திப் பிராணியை அடி(த்து இயங்கவை)ப்பது
2861. அபுல்முத்தவக்கில் அலீ பின் தாவூத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றேன். ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸ் ஒன்றை எனக்கு அறி வியுங்கள்” என அவர்களிடம் சொன் னேன். அப்போது அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள்:

நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன் லிஅறிவிப்பாளர் அபூஅகீல் (ரஹ்) அவர்கள், ‘‘அது போருக்கான பயணமா, உம்ராவுக்கான பயணமா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்லி நாங்கள் திரும்பி வந்போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘தன் வீட்டாரிடம் விரைவாகச் செல்ல விரும்புபவர் விரைவாகச் செல்லட்டும்” என்று கூறினார்கள். நான் எனக்குச் சொந்தமான, குறை ஏதுமற்ற, கருஞ்சிவப்பு நிறமுள்ள ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து செல்ல, நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தோம். (மற்ற) மக்கள் என் பின்னால் வந்துகொண்டிருந்தனர்.

நான் அவ்வாறு சென்றுகொண்டிருக்கையில், திடீரென என் ஒட்டகம் (களைப்படைந்து) நின்றுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘‘ஜாபிரே! சற்றுப்பொறு!” என்று கூறிவிட்டு, தமது சாட்டையால் அதை ஒருமுறை அடித் தார்கள். உடனே ஒட்டகம் தன் இடத்தி லிருந்து வேகமாக ஓடியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒட்டகத்தை நீ விற்கிறாயா?” என்று கேட்க, நான், ‘‘ஆம் (விற்கிறேன்)” என்று பதிலளித்தேன்.

நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். ஒட்டகத்தை (கற்கள் பரப்பப்பட்ட) பள்ளிவாசலின் நடைபாதையில் கட்டிவிட்டு, ‘‘இது தங்களின் ஒட்டகம்” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தை (ஆராயும் வகையில்) சுற்றி வரத் தொடங்கினார்கள். (பிறகு) ‘‘இந்த ஒட்டகம் நமது ஒட்டகம்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஐந்து) யிஊக்கியா’க்கள் தங்கத்தைக் கொடுத்து அனுப்பிவைத்து, ‘‘இதை ஜாபிரிடம் கொடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘(ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக்கொண்டாயா?” என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், ‘‘ஆம் (பெற்றுக்கொண்டேன்)” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘விலையும் ஒட்டகமும் உமக்கே உரியவை (இரண்டையும் நீரே வைத்துக்கொள்வீராக!)” என்று கூறினார்கள்.35

அத்தியாயம் : 56