2574. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، يَبْتَغُونَ بِهَا ـ أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ ـ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2574. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தங்கும் நாளையே, அவர்களுக்கு தம் அன்பளிப்புகளை வழங்க மக்கள் தேர்ந்தெடுத்துவந்தார்கள். இதன்மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பைப் பெறுவதையே அவர்கள் விரும்பினார்கள்.


அத்தியாயம் : 50
2575. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ إِيَاسٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَهْدَتْ أُمُّ حُفَيْدٍ خَالَةُ ابْنِ عَبَّاسٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَقِطًا وَسَمْنًا وَأَضُبًّا، فَأَكَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الأَقِطِ وَالسَّمْنِ، وَتَرَكَ الضَّبَّ تَقَذُّرًا. قَالَ ابْنُ عَبَّاسٍ فَأُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2575. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டி யையும் வெண்ணெயையும் உடும்புகளை யும் அன்பளிப்பாக வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலி ருந்தும் வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால், பிடிக்காத தால் உடும்புகளை அவர்கள் உண்ணாமல் விட்டுவிட்டார்கள்.

(எனினும்) அது (உடும்பு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது தடை செய்யப்பட்டதாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டி ருக்காது.


அத்தியாயம் : 50
2576. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ""إِذَا أُتِيَ بِطَعَامٍ سَأَلَ عَنْهُ أَهَدِيَّةٌ أَمْ صَدَقَةٌ فَإِنْ قِيلَ صَدَقَةٌ. قَالَ لأَصْحَابِهِ كُلُوا. وَلَمْ يَأْكُلْ، وَإِنْ قِيلَ هَدِيَّةٌ. ضَرَبَ بِيَدِهِ صلى الله عليه وسلم فَأَكَلَ مَعَهُمْ "".
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2576. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் ஓர் உணவுப் பொருள் கொண்டுவரப் படும்போது, ‘‘இது அன்பளிப்பா? தர்மமா?” என்று அவர்கள் கேட்பார்கள். ‘‘தர்மம்தான்” என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், ‘‘நீங்கள் உண்ணுங்கள்” என்று கூறிவிடுவார்கள்; தாம் உண்ணமாட்டார்கள்.7 ‘அன்பளிப்பு’ என்று கூறப்பட்டால், தமது கையைத் தட்டிக்கொண்டு (உற்சாகமாகத்) தோழர் களுடன் சேர்ந்து உண்பார்கள்.


அத்தியாயம் : 50
2577. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقِيلَ تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ قَالَ "" هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2577. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இறைச்சி கொண்டுவரப்பட்டது. ‘‘இது பரீரா (ரலி) அவர்களுக்குத் தர்மமாக வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள்.8


அத்தியாயம் : 50
2578. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، قَالَ سَمِعْتُهُ مِنْهُ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ، وَأَنَّهُمُ اشْتَرَطُوا وَلاَءَهَا، فَذُكِرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَأُهْدِيَ لَهَا لَحْمٌ، فَقِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ "". وَخُيِّرَتْ. قَالَ عَبْدُ الرَّحْمَنِ زَوْجُهَا حُرٌّ أَوْ عَبْدٌ قَالَ شُعْبَةُ سَأَلْتُ عَبْدَ الرَّحْمَنِ عَنْ زَوْجِهَا. قَالَ لاَ أَدْرِي أَحُرٌّ أَمْ عَبْدٌ
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2578. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பரீராவை (விலைக்கு) வாங்கிட விரும்பினேன். அவ(ருடைய உரிமையாள)ர்கள் அவரது வாரிசுரிமை தமக்கே சேர வேண்டும் என்று நிபந்தனையிட் டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துச் சொல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்த வருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி நன்கொடையாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இது பரீரா அவர்களுக்குத் தர்மமாக வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள். மேலும், பரீரா (ரலி) அவர்கள் (தம் கணவரைப் பிரிந்துவிடுவது, அல்லது தொடர்ந்து அவருடன் வாழ்வது ஆகிய இரண்டில்) தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கப் பட்டார்கள்.

அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள், ‘‘(அப்போது) பரீரா (ரலி) அவர்களின் கணவர் சுதந்திர மானவராகவோ அடிமையாகவோ இருந்தார்” என்று குறிப்பிட்டார்கள்.

‘‘நான் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், பரீரா (ரலி) அவர்களின் கணவரைப் பற்றிக் கேட்டேன். ‘அவர் சுதந்திரமானவரா, அல்லது அடிமையா என்பது எனக்குத் தெரியாது’ என்று அவர் கூறினார்” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 50
2579. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَ "" عِنْدَكُمْ شَىْءٌ "". قَالَتْ لاَ، إِلاَّ شَىْءٌ بَعَثَتْ بِهِ أُمُّ عَطِيَّةَ مِنَ الشَّاةِ الَّتِي بُعِثَ إِلَيْهَا مِنَ الصَّدَقَةِ. قَالَ "" إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا "".
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2579. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து, ‘‘உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் உம்மு அ(த்)திய்யாவுக்குத் தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் (நமக்கு) அனுப்பிவைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அது தனது இடத்தை அடைந்துவிட்டது” என்று கூறினார்கள்.9

அத்தியாயம் : 50
2580. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمُ يَوْمِي. وَقَالَتْ أُمُّ سَلَمَةَ إِنَّ صَوَاحِبِي اجْتَمَعْنَ. فَذَكَرَتْ لَهُ، فَأَعْرَضَ عَنْهَا.
பாடம் : 8 நண்பருக்கு ஒருவர் அன்பளிப்பு வழங்க, நண்பரோ தம் துணைவியரில் மற்றவரை விட்டுவிட்டு குறிப்பிட்ட ஒருவரிடம் இருக்கும்போது அன்பளிப்பைப் பெற விரும்புவது
2580. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என் (வீட்டில் தங்குகின்ற) நாளையே அவர்களுக்குத் தங்கள் அன்பளிப்புகளை வழங்குவதற்காக மக்கள் தேர்ந்தெடுத்துவந்தார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: என் தோழியர் (நபி (ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் எனது வீட்டில்) ஒன்றுகூடி(ப் பேசி)னர். (அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க) நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கோரிக் கையைச்) சொன்னேன்; அவர்கள் அதை (கண்டுகொள்ளாமல்) புறக்கணித்து விட்டார்கள்.10


அத்தியாயம் : 50
2581. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ نِسَاءَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ حِزْبَيْنِ فَحِزْبٌ فِيهِ عَائِشَةُ وَحَفْصَةُ وَصَفِيَّةُ وَسَوْدَةُ، وَالْحِزْبُ الآخَرُ أُمُّ سَلَمَةَ وَسَائِرُ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ الْمُسْلِمُونَ قَدْ عَلِمُوا حُبَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَائِشَةَ، فَإِذَا كَانَتْ عِنْدَ أَحَدِهِمْ هَدِيَّةٌ يُرِيدُ أَنْ يُهْدِيَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخَّرَهَا، حَتَّى إِذَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِ عَائِشَةَ بَعَثَ صَاحِبُ الْهَدِيَّةِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِ عَائِشَةَ، فَكَلَّمَ حِزْبُ أُمِّ سَلَمَةَ، فَقُلْنَ لَهَا كَلِّمِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُكَلِّمُ النَّاسَ، فَيَقُولُ مَنْ أَرَادَ أَنْ يُهْدِيَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَدِيَّةً فَلْيُهْدِهِ إِلَيْهِ حَيْثُ كَانَ مِنْ بُيُوتِ نِسَائِهِ، فَكَلَّمَتْهُ أُمُّ سَلَمَةَ بِمَا قُلْنَ، فَلَمْ يَقُلْ لَهَا شَيْئًا، فَسَأَلْنَهَا. فَقَالَتْ مَا قَالَ لِي شَيْئًا. فَقُلْنَ لَهَا فَكَلِّمِيهِ. قَالَتْ فَكَلَّمَتْهُ حِينَ دَارَ إِلَيْهَا أَيْضًا، فَلَمْ يَقُلْ لَهَا شَيْئًا، فَسَأَلْنَهَا. فَقَالَتْ مَا قَالَ لِي شَيْئًا. فَقُلْنَ لَهَا كَلِّمِيهِ حَتَّى يُكَلِّمَكِ. فَدَارَ إِلَيْهَا فَكَلَّمَتْهُ. فَقَالَ لَهَا "" لاَ تُؤْذِينِي فِي عَائِشَةَ، فَإِنَّ الْوَحْىَ لَمْ يَأْتِنِي، وَأَنَا فِي ثَوْبِ امْرَأَةٍ إِلاَّ عَائِشَةَ "". قَالَتْ فَقَالَتْ أَتُوبُ إِلَى اللَّهِ مِنْ أَذَاكَ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ إِنَّهُنَّ دَعَوْنَ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَرْسَلْنَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَقُولُ إِنَّ نِسَاءَكَ يَنْشُدْنَكَ اللَّهَ الْعَدْلَ فِي بِنْتِ أَبِي بَكْرٍ. فَكَلَّمَتْهُ. فَقَالَ "" يَا بُنَيَّةُ، أَلاَ تُحِبِّينَ مَا أُحِبُّ "". قَالَتْ بَلَى. فَرَجَعَتْ إِلَيْهِنَّ، فَأَخْبَرَتْهُنَّ. فَقُلْنَ ارْجِعِي إِلَيْهِ. فَأَبَتْ أَنْ تَرْجِعَ، فَأَرْسَلْنَ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ، فَأَتَتْهُ فَأَغْلَظَتْ، وَقَالَتْ إِنَّ نِسَاءَكَ يَنْشُدْنَكَ اللَّهَ الْعَدْلَ فِي بِنْتِ ابْنِ أَبِي قُحَافَةَ. فَرَفَعَتْ صَوْتَهَا، حَتَّى تَنَاوَلَتْ عَائِشَةَ. وَهْىَ قَاعِدَةٌ، فَسَبَّتْهَا حَتَّى إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَيَنْظُرُ إِلَى عَائِشَةَ هَلْ تَكَلَّمُ قَالَ فَتَكَلَّمَتْ عَائِشَةُ تَرُدُّ عَلَى زَيْنَبَ، حَتَّى أَسْكَتَتْهَا. قَالَتْ فَنَظَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى عَائِشَةَ، وَقَالَ "" إِنَّهَا بِنْتُ أَبِي بَكْرٍ "". قَالَ الْبُخَارِيُّ الْكَلاَمُ الأَخِيرُ قِصَّةُ فَاطِمَةَ يُذْكَرُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ رَجُلٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ. وَقَالَ أَبُو مَرْوَانَ عَنْ هِشَامٍ عَنْ عُرْوَةَ كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ. وَعَنْ هِشَامٍ عَنْ رَجُلٍ مِنْ قُرَيْشٍ، وَرَجُلٍ مِنَ الْمَوَالِي، عَنِ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ قَالَتْ عَائِشَةُ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَتْ فَاطِمَةُ.
பாடம் : 8 நண்பருக்கு ஒருவர் அன்பளிப்பு வழங்க, நண்பரோ தம் துணைவியரில் மற்றவரை விட்டுவிட்டு குறிப்பிட்ட ஒருவரிடம் இருக்கும்போது அன்பளிப்பைப் பெற விரும்புவது
2581. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் துணைவியரான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, சவ்தா (ரலி) ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலமா (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்ற துணைவியரும் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்துவந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அவர்களில் ஒருவரிடம் அன்பளிப்புப் பொருள் இருந்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதைத் தள்ளிப்போட்டுவிடுவார். என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது, என் வீட்டிற்கு அன்பளிப்பைக் கொடுத்தனுப்புவார்.

ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலமா (ரலி) குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசி, உம்மு சலமாவிடம் பின் வருமாறு கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு யார் எந்த அன்பளிப்பை வழங்க விரும்பினாலும், அவர்கள் தம் துணைவியர் இல்லங்களில் எங்கு இருந்தாலும் அங்கே அன்பளிப்பை வழங்க வேண்டும் என மக்களிடம் பேசி அறிவிக்க வேண்டும் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேசுங் கள்.

அவ்வாறே, உம்மு சலமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார் கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் எந்தப் பதிலும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர் உம்மு சலமா அவர்களிடம், (யிநமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா?› என்று) கேட்டனர். உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘எனக்கு நபி (ஸல்) அவர்கள் எந்தப் பதிலும் கூறவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு அவருடைய குழுவினர், ‘‘மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசுங்கள்” என்றனர்.

உம்மு சலமா (ரலி) அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று) உம்மு சலமாவிடம் கேட்டனர். ‘‘நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பதில் எதுவும் கூறவில்லை” என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவருடைய குழுவினர், ‘‘நபியவர்கள் உமக்குப் பதில் தரும்வரை நீங்கள் அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக்கொண்டேயிருங்கள்” என்று கூறினார்கள்.

மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை அளிக்காதே! ஏனெனில், ஆயிஷாவைத் தவிர வேறு யாருடைய (போர்வைத்) துணிக்குள் நான் இருக்கும்போதும் எனக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருவதில்லை” என்று கூறினார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு அந்தத் துணைவியர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியார் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். ஃபாத்திமா (தம் தந்தையிடம்), ‘‘நீங்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி (ஆயிஷா) இடம் நடந்துகொள்வதைப் போன்றே (தங்களிட மும்) நீதியோடு நடந்துகொள்ள வேண்டும் என்று உங்கள் துணைவியர் அல்லாஹ்வின் பெயரால் வேண்டுகின்றனர்” என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்)” என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்று நபியவர்களின் துணைவியரிடம் தகவல் தெரிவித்தார்கள். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்)” என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

ஆகவே, நபியவர்களின் துணைவியர், (தம் சார்பாக) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, ‘‘உங்கள் துணைவியர், அபூகுஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்துகொள்வதைப் போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்துகொள்ளும்படி அல்லாஹ் வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றனர்” என்று கூறினார்.

(ஆயிஷா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:)

அப்போது அவரது குரல் உயர்ந்தது. நான் (அங்குதான்) அமர்ந்திருந்தேன். என்னையும் (ஒரு பிடி) பிடித்தார்; என்னை ஏசினார். நான் ஏதும் (பதிலுக்குப்) பேசு கிறேனா என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நான் ஸைனபுக்குப் பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்துவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘‘இவள் அபூபக்ருடைய மகள்” என்று கூறினார்கள்.

புகாரீ (ஆகிய நான்) கூறுகிறேன்: ஃபாத்திமா (ரலி) அவர்கள் தொடர்பான தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

மற்றோர் அறிவிப்பில், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அனுமதி கேட்டு உள்ளே வந்தார்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அத்தியாயம் : 50
2582. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ دَخَلْتُ عَلَيْهِ فَنَاوَلَنِي طِيبًا، قَالَ كَانَ أَنَسٌ ـ رضى الله عنه ـ لاَ يَرُدُّ الطِّيبَ. قَالَ وَزَعَمَ أَنَسٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ.
பாடம் : 9 மறுக்கக் கூடாத அன்பளிப்பு
2582. அஸ்ரா பின் ஸாபித் அல் அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்றேன்; அவர்கள் எனக்கு வாசனைப் பொருளைக் கொடுத்து, ‘‘அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக வழங்கப்படும்) வாசனைப் பொருளை மறுப்பதில்லை” என்றும் கூறினார்.

மேலும், ஸுமாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் வாசனைப் பொருளை மறுப்பதில்லை” என்று அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 50
2583. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ذَكَرَ عُرْوَةُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، رضى الله عنهما وَمَرْوَانَ أَخْبَرَاهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ قَامَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا "". فَقَالَ النَّاسُ طَيَّبْنَا لَكَ.
பாடம் : 10 தற்போது கைவசம் இல்லாதஒன்றை அன்பளிப்(பதாக வாக்க ளிப்)பது செல்லும் என்ற கருத்து
2583. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகி யோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக் கேற்றவாறு போற்றிப் புகழ்ந்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

இறைவாழ்த்துக்குப்பின்! (மக்களே!)உங்கள் சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப் பித் தந்துவிடலாமெனக் கருதுகிறேன்.

ஆகவே, உங்களில் யார் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்! யார், (இனி) அல்லாஹ் நமக்கு அளிக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கும்வரை தமது பங்கைத் தாமே வைத்துக்கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நாங்கள் உங்களுக்காக (போர்க் ûதிகளைத் திருப்பித் தந்துவிட) மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறோம்” என்று கூறினார்கள்.11

அத்தியாயம் : 50
2585. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا. لَمْ يَذْكُرْ وَكِيعٌ وَمُحَاضِرٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ.
பாடம் : 11 அன்பளிப்புக்கு ஈடு செய்வது
2585. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வார்கள்; அதற்கு ஈடாக (ஏதேனும்) வழங்கிவிடு வார்கள்.12

இதே ஹதீஸ் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து (முர்ச லாக) இரு தொடர்களில் அறிவிக்கப் பட்டுள்ளது.

அத்தியாயம் : 50
2586. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ أَبَاهُ، أَتَى بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا. فَقَالَ "" أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ "". قَالَ لاَ. قَالَ "" فَارْجِعْهُ "".
பாடம் : 12 பிள்ளைக்கு அன்பளிப்புச் செய் வது ஒருவர் தம் பிள்ளைகளில் சிலருக்கு மட்டும் அன்பளிப்பு செய்வது கூடாது; அவர்களிடையே நீதி செலுத்தி மற்ற பிள்ளைகளுக்கும் அதே போன்று கொடுக்கப்பட வேண்டும். அதுவரை (யாரும்) அதற்குச் சாட்சியாக இருக்கவும் கூடாது. நபி (ஸல்) அவர்கள், ‘‘அன்பளிப்புச் செய்யும் விஷயத்தில் உங்கள் பிள்ளை களிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். தந்தை, தாம் செய்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாமா? மேலும் தந்தை, தம் பிள்ளையின் செல்வத்திலிருந்து வரம்பு மீறாமல் நியாயமான அளவு  உண்பது.13 நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கி இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்து விட்டார்கள். மேலும், ‘‘இதை நீ விரும்பிய வாறு செய்துகொள்” என்று கூறி னார்கள்.14
2586. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை என் தந்தை (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘‘நான் என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா?” என்று கேட்டார்கள். என் தந்தை, ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 50
2587. حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَامِرٍ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ أَعْطَانِي أَبِي عَطِيَّةً، فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً، فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا "". قَالَ لاَ. قَالَ "" فَاتَّقُوا اللَّهَ، وَاعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ "". قَالَ فَرَجَعَ فَرَدَّ عَطِيَّتَهُ.
பாடம் : 13 அன்பளிப்புச் செய்யும்போது சாட்சி வைத்துக்கொள்ளல்
2587. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டு, ‘‘என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், ‘‘நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் திருப்தி அடையமாட்டேன்” என்று கூறினார்கள்.

என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹா வின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத் தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்துச் செய்துவிட்டார்கள்.

அத்தியாயம் : 50
2588. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ لَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاشْتَدَّ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ، تَخُطُّ رِجْلاَهُ الأَرْضَ، وَكَانَ بَيْنَ الْعَبَّاسِ، وَبَيْنَ رَجُلٍ آخَرَ. فَقَالَ عُبَيْدُ اللَّهِ فَذَكَرْتُ لاِبْنِ عَبَّاسٍ مَا قَالَتْ عَائِشَةُ، فَقَالَ لِي وَهَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ قُلْتُ لاَ. قَالَ هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ.
பாடம் : 14 கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அன்பளிப்பு வழங்குவது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் அன்பளிப்பு வழங்குவது செல்லும்” என்று கூறினார்கள். ‘‘கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ அன்பளிப்பு வழங்கினால், தமது அன்பளிப்பை அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடாது” என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கி, சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பி, தம் மற்ற துணைவியரிடம் நபியவர்கள் அனுமதி கேட்டார்கள். (மற்ற துணைவியர் தம் நாட்களை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்புச் செய் தார்கள்.) மேலும், ‘‘தான் கொடுத்த அன்பளிப் பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன், தான் கக்கிய வாந்தியைத் தானே தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தம் மனைவியிடம், ‘‘உனது மணக்கொடையில் (மஹ்ரில்) சிறிதளவை அல்லது உன் மணக்கொடை முழுவதையும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடு” என்று கேட்டார். (அவளும் கொடுத்துவிட்டாள்.) சிறிது காலம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அவளை அவர் விவாகரத்துச் செய்துவிட்டார். எனவே, அவள் மஹ்ரைத் திருப்பிக் கேட்டாள். அவர் அவளை ஏமாற்றி (மோசடியாக மஹ்ரைப் பெற்று) இருந்தால், அவர் அவளிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அப்பெண் அவருக்கு அதை மனப்பூர்வமாகக் கொடுத்திருந்து, அதை அவளிடமிருந்து மோசடி எதுவும் செய்யாமல் அவளுடைய முழுச் சம்மதத்துடன் பெற்றிருந்தால் அவர் அதைத் திருப்பித் தராமல் தாமே வைத்துக்கொள்ளலாம். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை மனமுவந்து வழங்குங்கள். அதில் எதையேனும் அவர்கள் மனமு வந்து உங்களுக்கு விட்டுக்கொடுத்தால் அதை மனநிறைவுடனும் மகிழ்வுடனும் நீங்கள் உண்ணலாம். (4:4)
2588. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, என் வீட்டில் (தங்கி) சிகிச்சை பெறுவதற்குத் தம்முடைய (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள்; அவர்களும் அனுமதி அளித்துவிட்டனர். பின்னர் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் தரையில் இழுபட, இரு மனிதர்களுக்கிடையே தொங்கிய வண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே (தொங்கிய படி) வந்தார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், ‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட அந்த (மற்றொரு) மனிதர் யாரென்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘தெரியாது” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘‘அவர்தான் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 50
2589. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ "".
பாடம் : 14 கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அன்பளிப்பு வழங்குவது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் அன்பளிப்பு வழங்குவது செல்லும்” என்று கூறினார்கள். ‘‘கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ அன்பளிப்பு வழங்கினால், தமது அன்பளிப்பை அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடாது” என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கி, சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பி, தம் மற்ற துணைவியரிடம் நபியவர்கள் அனுமதி கேட்டார்கள். (மற்ற துணைவியர் தம் நாட்களை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்புச் செய் தார்கள்.) மேலும், ‘‘தான் கொடுத்த அன்பளிப் பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன், தான் கக்கிய வாந்தியைத் தானே தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தம் மனைவியிடம், ‘‘உனது மணக்கொடையில் (மஹ்ரில்) சிறிதளவை அல்லது உன் மணக்கொடை முழுவதையும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடு” என்று கேட்டார். (அவளும் கொடுத்துவிட்டாள்.) சிறிது காலம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அவளை அவர் விவாகரத்துச் செய்துவிட்டார். எனவே, அவள் மஹ்ரைத் திருப்பிக் கேட்டாள். அவர் அவளை ஏமாற்றி (மோசடியாக மஹ்ரைப் பெற்று) இருந்தால், அவர் அவளிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அப்பெண் அவருக்கு அதை மனப்பூர்வமாகக் கொடுத்திருந்து, அதை அவளிடமிருந்து மோசடி எதுவும் செய்யாமல் அவளுடைய முழுச் சம்மதத்துடன் பெற்றிருந்தால் அவர் அதைத் திருப்பித் தராமல் தாமே வைத்துக்கொள்ளலாம். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை மனமுவந்து வழங்குங்கள். அதில் எதையேனும் அவர்கள் மனமு வந்து உங்களுக்கு விட்டுக்கொடுத்தால் அதை மனநிறைவுடனும் மகிழ்வுடனும் நீங்கள் உண்ணலாம். (4:4)
2589. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், வாந்தியெடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.15

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 50
2590. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَسْمَاءَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لِي مَالٌ إِلاَّ مَا أَدْخَلَ عَلَىَّ الزُّبَيْرُ فَأَتَصَدَّقُ. قَالَ "" تَصَدَّقِي، وَلاَ تُوعِي فَيُوعَى عَلَيْكِ "".
பாடம் : 15 கணவன் இருக்கும்போது ஒரு பெண் கணவன் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்குவதும் தன் அடிமையை அவள் விடுதலை செய்வதும் செல்லும்; அவள் பேதையாக இல்லாமலிருந்தால். அவள் பேதை யாக இருந்தால் செல்லாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ் உங்களு(டைய வாழ்க்கை)க்கு ஆதாரமாக அமைத்துள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர் களிடம் கொடுக்காதீர்கள். (4.:5)
2590. அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்ய லாமா?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘தர்மம் செய். (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உனக்கு (இறைவனின் கொடை வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்கள்.16


அத்தியாயம் : 50
2591. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَنْفِقِي وَلاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ "".
பாடம் : 15 கணவன் இருக்கும்போது ஒரு பெண் கணவன் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்குவதும் தன் அடிமையை அவள் விடுதலை செய்வதும் செல்லும்; அவள் பேதையாக இல்லாமலிருந்தால். அவள் பேதை யாக இருந்தால் செல்லாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ் உங்களு(டைய வாழ்க்கை)க்கு ஆதாரமாக அமைத்துள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர் களிடம் கொடுக்காதீர்கள். (4.:5)
2591. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(தாராளமாக நல்வழியில்) செலவழிப்பாயாக; எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க் கொண்டிராதே. அல்லாஹ்வும் உனக்கு எண்ணி எண்ணியே தருவான். (பையில்) முடிந்துவைத்துக்கொள்ளாதே! அல்லாஹ் வும் உன் விஷயத்தில் (தன் அருளை) முடிந்து வைத்துக்கொள்வான்” என்று (என்னிடம்) கூறினார்கள்.


அத்தியாயம் : 50
2592. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، عَنِ اللَّيْثِ، عَنْ يَزِيدَ، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ مَيْمُونَةَ بِنْتَ الْحَارِثِ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّهَا، أَعْتَقَتْ وَلِيدَةً وَلَمْ تَسْتَأْذِنِ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَلَمَّا كَانَ يَوْمُهَا الَّذِي يَدُورُ عَلَيْهَا فِيهِ قَالَتْ أَشَعَرْتَ يَا رَسُولَ اللَّهِ أَنِّي أَعْتَقْتُ وَلِيدَتِي قَالَ "" أَوَفَعَلْتِ "". قَالَتْ نَعَمْ. قَالَ "" أَمَا إِنَّكِ لَوْ أَعْطَيْتِيهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ "". وَقَالَ بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرٍو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ إِنَّ مَيْمُونَةَ أَعْتَقَتْ.
பாடம் : 15 கணவன் இருக்கும்போது ஒரு பெண் கணவன் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்குவதும் தன் அடிமையை அவள் விடுதலை செய்வதும் செல்லும்; அவள் பேதையாக இல்லாமலிருந்தால். அவள் பேதை யாக இருந்தால் செல்லாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ் உங்களு(டைய வாழ்க்கை)க்கு ஆதாரமாக அமைத்துள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர் களிடம் கொடுக்காதீர்கள். (4.:5)
2592. அன்னை மைமூனா பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்க வில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர் களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ (விடுதலை) செய்து விட்டாயா?” என்று கேட்க, நான் ‘‘ஆம், (விடுதலை செய்துவிட்டேன்)” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்திருந் தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத் திருக்குமே” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 50
2593. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا، لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 15 கணவன் இருக்கும்போது ஒரு பெண் கணவன் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்குவதும் தன் அடிமையை அவள் விடுதலை செய்வதும் செல்லும்; அவள் பேதையாக இல்லாமலிருந்தால். அவள் பேதை யாக இருந்தால் செல்லாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ் உங்களு(டைய வாழ்க்கை)க்கு ஆதாரமாக அமைத்துள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர் களிடம் கொடுக்காதீர்கள். (4.:5)
2593. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால், தம் துணைவியரிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். யாரது பெயர் (குலுக்கலில்) வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு புறப்படுவார்கள்.

தம் துணைவியரில் ஒவ்வொருவருக்கும் அவரது பகலையும் இரவையும் பங்கிட்டு வந்தார்கள். ஆனால், சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தமது பகலையும் இரவையும் நபி (ஸல்) அவர்களின் (பிரியத்திற்குரிய) மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பைப் பெறுவதே அவரது நோக்கம்.

அத்தியாயம் : 50