2094. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ أَتَى رِجَالٌ إِلَى سَهْلِ بْنِ سَعْدٍ يَسْأَلُونَهُ عَنِ الْمِنْبَرِ، فَقَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى فُلاَنَةَ ـ امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ ـ "" أَنْ مُرِي غُلاَمَكِ النَّجَّارَ، يَعْمَلُ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ "". فَأَمَرَتْهُ يَعْمَلُهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا، فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِهَا، فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ، فَجَلَسَ عَلَيْهِ.
பாடம் : 32 தச்சர்
2094. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, (நபி (ஸல்) அவர்களின்) சொற்பொழிவு மேடை (மிம்பர்) பற்றிக் கேட்டனர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்ன பெண்மணியிடம் லிஅப்பெண் மணியின் பெயரை சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்லி ஆளனுப்பி, ‘‘தச்சு வேலை செய்யும் உன் அடிமையிடம், நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள்.

அப்பெண் அவ்வாறே அடிமைக்கு உத்தரவிட்டார். அவர் (மதீனா அருகிலுள்ள) ‘அல்ஃகாபா’ வனத்திலிருந்த ஒரு வகை சவுக்கு மரத்தால் அதைச் செய்து கொண்டுவந்தார். அப்பெண்மணி அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தனுப்பினார். அதை உரிய இடத்தில் வைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட, அவ்வாறே அது வைக்கப்பட்டது. அதன்மேல் அமர்ந் தார்கள்.22


அத்தியாயம் : 34
2095. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ امْرَأَةً مِنَ الأَنْصَارِ قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا. قَالَ "" إِنْ شِئْتِ "". قَالَ فَعَمِلَتْ لَهُ الْمِنْبَرَ، فَلَمَّا كَانَ يَوْمُ الْجُمُعَةِ قَعَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ الَّذِي صُنِعَ، فَصَاحَتِ النَّخْلَةُ الَّتِي كَانَ يَخْطُبُ عِنْدَهَا حَتَّى كَادَتْ أَنْ تَنْشَقَّ، فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى أَخَذَهَا فَضَمَّهَا إِلَيْهِ، فَجَعَلَتْ تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَّتُ حَتَّى اسْتَقَرَّتْ. قَالَ "" بَكَتْ عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ "".
பாடம் : 32 தச்சர்
2095. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிப் பெண்மணி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்காக (மேடை) ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரட்டுமா?” என்று கேட்டார். யிஉன் விருப்பம்’ என நபி (ஸல்) அவர்கள் கூற, அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை (மிம்பர்) தயார் செய்தார். வெள்ளிக்கிழமை வந்ததும், தயாரிக்கப்பட்ட அந்த மேடையில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் முன்னர் நின்று உரை நிகழ்த்திய பேரீச்ச மரக்கட்டை இரண்டாகப் பிளந்து விடுமளவிற்குச் சப்தமிட்டது. நபி (ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி அதைத் தொட்டுத் தம்முடன் அணைத்துக்கொண்டார்கள். அமைதிப்படுத்தப்படும் குழந்தை சிணுங்குவதைப் போன்று அது சிணுங்கியது; இறுதியில் அமைதியானது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘தான் செவியுற்றுவந்த போதனை’னால்தான் (இனி அது தன்மீது நிகழ்த்தப்படாதே என்றெண்ணித்தான்) அது அழுதது” என்றார்கள்.

அத்தியாயம் : 34
2096. حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ يَهُودِيٍّ طَعَامًا بِنَسِيئَةٍ، وَرَهَنَهُ دِرْعَهُ.
பாடம் : 33 தலைவர் தமக்குத் தேவை யானவற்றைத் தாமே வாங்கிக் கொள்வது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமக்குத் தேவையானதை) தாமே வாங்கியிருக் கிறார்கள். இணைவைப்பாளர் ஒருவர் ஆட்டு மந்தையைக் கொண்டுவந்தபோது, அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை விலைக்கு வாங்கினார்கள் என்று அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள்.
2096. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் கடனாக உணவுப் பொருளை வாங்கினார்கள்; தமது கவசத்தை அவரிடம் அடைமானமாக வைத்தார்கள்.23

அத்தியாயம் : 34
2097. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا، فَأَتَى عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" جَابِرٌ "". فَقُلْتُ نَعَمْ. قَالَ "" مَا شَأْنُكَ "". قُلْتُ أَبْطَأَ عَلَىَّ جَمَلِي وَأَعْيَا، فَتَخَلَّفْتُ. فَنَزَلَ يَحْجُنُهُ بِمِحْجَنِهِ، ثُمَّ قَالَ "" ارْكَبْ "". فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُهُ أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تَزَوَّجْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" بِكْرًا أَمْ ثَيِّبًا "". قُلْتُ بَلْ ثَيِّبًا. قَالَ "" أَفَلاَ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ "". قُلْتُ إِنَّ لِي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ، وَتَمْشُطُهُنَّ، وَتَقُومُ عَلَيْهِنَّ. قَالَ "" أَمَّا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ فَالْكَيْسَ الْكَيْسَ "". ثُمَّ قَالَ "" أَتَبِيعُ جَمَلَكَ "". قُلْتُ نَعَمْ. فَاشْتَرَاهُ مِنِّي بِأُوقِيَّةٍ، ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلِي، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْنَا إِلَى الْمَسْجِدِ، فَوَجَدْتُهُ عَلَى باب الْمَسْجِدِ، قَالَ "" الآنَ قَدِمْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" فَدَعْ جَمَلَكَ، فَادْخُلْ فَصَلِّ رَكْعَتَيْنِ "". فَدَخَلْتُ فَصَلَّيْتُ، فَأَمَرَ بِلاَلاً أَنْ يَزِنَ لَهُ أُوقِيَّةً. فَوَزَنَ لِي بِلاَلٌ، فَأَرْجَحَ فِي الْمِيزَانِ، فَانْطَلَقْتُ حَتَّى وَلَّيْتُ فَقَالَ "" ادْعُ لِي جَابِرًا "". قُلْتُ الآنَ يَرُدُّ عَلَىَّ الْجَمَلَ، وَلَمْ يَكُنْ شَىْءٌ أَبْغَضَ إِلَىَّ مِنْهُ. قَالَ "" خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ "".
பாடம் : 34 கழுதை மற்றும் கால்நடைகளை விலைக்கு வாங்குதல் உரிமையாளர் ஒட்டகத்தின் மீதோ வேறொரு கால்நடையின் மீதோ அமர்ந்திருக்கும் நிலையில் ஒருவர் அதை விலைக்கு வாங்கினால், உரிமையாளர் அதிலிருந்து இறங்குவதற்குமுன் அது வாங்கியவரின் கைக்குச் சென்றுவிட்டதாக ஆகுமா? நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘இதைலிஅதாவது இந்த முரட்டு ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடு வீராக!” என்றார்கள்.
2097. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘ஜாபிரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்றேன். ‘‘என்ன விஷயம் (ஏன் தாமதம்)?” என்று கேட்டார்கள். ‘‘என் ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கிவிட்டேன்” என்றேன்.

நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி முனைப் பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு ‘‘(ஒட்டகத்தில்) ஏறு!” என்றார்கள். நான் ஏறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீர் மணமுடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். ‘‘கன்னி கழிந்த பெண்ணைத்தான்” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கொஞ்சிக் குலவி மகிழ்ந் திருக்கலாமே!” என்று கூறினார்கள்.

நான், ‘‘எனக்குச் சகோதரிகள் உள்ளனர்; அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்போது ஊருக்கு செல்லப்போகிறாய்; ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீராக! புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீராக!” என்று கூறிவிட்டு பின்னர், ‘‘உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘சரி” என்றேன்.

அவர்கள் என்னிடமிருந்து, ஓர் யிஊக்கியா’ விலை பேசி அதை என்னிட மிருந்து வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வரும்வரை என் ஒட்டகத்திலேயே நான் பயணித்தேன்.) பிறகு எனக்கு முன்பே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். ‘‘இப்போதுதான் வருகிறீரா?” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழு தேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடைபோடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடைபோட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றுவிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!” என்று (அங்கிருந்தவரிடம்) கூறினார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என்னிடம் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 34
2098. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَتْ عُكَاظٌ وَمَجَنَّةُ وَذُو الْمَجَازِ أَسْوَاقًا فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا كَانَ الإِسْلاَمُ تَأَثَّمُوا مِنَ التِّجَارَةِ فِيهَا، فَأَنْزَلَ اللَّهُ {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ} فِي مَوَاسِمِ الْحَجِّ، قَرَأَ ابْنُ عَبَّاسٍ كَذَا.
பாடம் : 35 அறியாமைக் காலத்தில் இருந்த கடைவீதிகளில் இஸ்லாம் வந்தபிறகும் மக்கள் வணிகம் செய்தது
2098. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உ(க்)காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் சந்தைகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அந்த இடங்களில் வணிகம் செய்வது பாவம் என்று மக்கள் கருதினர்.

அப்போதுதான் அல்லாஹ், ‘‘உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமன்று” (2:198) எனும் வசனத்தை அருளினான்.

அதாவது ஹஜ் காலங்களில் (குற்ற மன்று). இவ்வாறே (ஹஜ் காலங்களில் லி ஃபீ மவாசிமில் ஹஜ் என்பதையும் சேர்த்தே) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை ஓதினார்கள் என்று அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.24

அத்தியாயம் : 34
2099. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو كَانَ هَا هُنَا رَجُلٌ اسْمُهُ نَوَّاسٌ، وَكَانَتْ عِنْدَهُ إِبِلٌ هِيمٌ، فَذَهَبَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَاشْتَرَى تِلْكَ الإِبِلَ مِنْ شَرِيكٍ لَهُ، فَجَاءَ إِلَيْهِ شَرِيكُهُ فَقَالَ بِعْنَا تِلْكَ الإِبِلَ. فَقَالَ مِمَّنْ بِعْتَهَا قَالَ مِنْ شَيْخٍ، كَذَا وَكَذَا. فَقَالَ وَيْحَكَ ذَاكَ ـ وَاللَّهِ ـ ابْنُ عُمَرَ. فَجَاءَهُ فَقَالَ إِنَّ شَرِيكِي بَاعَكَ إِبِلاً هِيمًا، وَلَمْ يَعْرِفْكَ. قَالَ فَاسْتَقْهَا. قَالَ فَلَمَّا ذَهَبَ يَسْتَاقُهَا فَقَالَ دَعْهَا، رَضِينَا بِقَضَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ عَدْوَى. سَمِعَ سُفْيَانُ عَمْرًا.
பாடம் : 36 அடங்காத் தாகமுள்ள ஒட்டகங்களையும் சிரங்குபிடித்த ஒட்டகங்களையும் விலைக்கு வாங்குதல் (‘அடங்காத் தாகமுள்ளவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஹீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் ஒருமை ‘அல்ஹாயிம்’ என்பதாகும்.) ‘அல்ஹாயிம்’ என்றால், யிஎதிலும் நடுநிலையை மீறக்கூடியது’ என்று பொருளாகும்.
2099. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை நவ்வாஸின் கூட்டாளி ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினார் கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று ‘‘அந்த ஒட்டகத்தை நாம் விற்று விட்டோம்” என்றார். நவ்வாஸ் ‘‘யாரிடம் விற்றீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், ‘யிஇன்ன இன்ன தன்மை உடைய பெரிய வரிடம் விற்றேன்” என்றார். அதற்கு நவ்வாஸ் ‘‘உமக்குக் கேடுதான்! அல்லாஹ் வின் மீதாணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான்” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். ‘‘என் கூட்டாளி, அடங்காத் தாகமுள்ள (நோயாளி) ஒட்டகத்தை உங்களிடம் விற்றுவிட்டார்; அவர் உங்களை யாரென்று அறியவில்லை” என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியானால், அதை ஓட்டிச் செல்வீ ராக!” என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அதை விட்டுவிடுவீராக! யிதொற்று நோய் கிடையாது!› என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் முழுமனதுடன் ஏற்கிறேன். (இந்த நோயுள்ள ஒட்டகத்தால் என் ஏனைய ஒட்டகங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது)” என்றார்கள்.

அத்தியாயம் : 34
2100. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَفْلَحَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ حُنَيْنٍ، فَأَعْطَاهُ ـ يَعْنِي دِرْعًا ـ فَبِعْتُ الدِّرْعَ، فَابْتَعْتُ بِهِ مَخْرَفًا فِي بَنِي سَلِمَةَ، فَإِنَّهُ لأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ فِي الإِسْلاَمِ.
பாடம் : 37 கலவரச் சூழ்நிலையிலும் மற்ற நேரங்களிலும் ஆயுதங்களை விற்றல் கலவரச் சூழ்நிலையில் ஆயுதங்கள் விற்பதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் வெறுத்திருக்கிறார்கள்.
2100. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுனைன் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (போரில் எதிரியிடமிருந்து நான் கைப்பற்றிய) கவசம் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கொடுத்தார்கள். நான் அந்தக் கவசத்தை விற்று, அதைக் கொண்டு பனூ சலிமா குலத்தார் வசிக்கும் பகுதியில் ஒரு பேரீச்சந்தோட்டத்தை விலைக்கு வாங்கி னேன். அதுதான், நான் இஸ்லாத்திற்கு வந்தபின் வாங்கிய முதல் சொத்தாகும்.25

அத்தியாயம் : 34
2101. حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ بْنَ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ، وَكِيرِ الْحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ ثَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً "".
பாடம் : 38 நறுமணப் பொருள் வியாபாரியும் கஸ்தூரி விற்பதும்
2101. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம், கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையும் ஆகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம். கொல்லனின் உலையானது, உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்துவிடும்; அல்லது அவனிடமிருந்து துர்வாடையையாவது நீர் அடைந்தே தீருவாய்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2102. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ حَجَمَ أَبُو طَيْبَةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ لَهُ بِصَاعٍ مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا مِنْ خَرَاجِهِ.
பாடம் : 39 குருதி உறிஞ்சி எடுப்பவர் பற்றிய குறிப்பு
2102. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையான) அபூதைபா என்பவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குருதி உறிஞ்சி எடுத்தார்; அவருக்கு (கூலியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைக்கு மாறு அவருடைய உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


அத்தியாயம் : 34
2103. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ ـ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَعْطَى الَّذِي حَجَمَهُ، وَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُعْطِهِ.
பாடம் : 39 குருதி உறிஞ்சி எடுப்பவர் பற்றிய குறிப்பு
2103. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருவரிடம்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கு (கூலி) கொடுத்தார்கள். அது தடை செய்யப் பட்டதாக இருந்திருந்தால், அவருக்கு (கூலி) கொடுத்திருக்கமாட்டார்கள்.

அத்தியாயம் : 34
2104. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ أَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى عُمَرَ ـ رضى الله عنه ـ بِحُلَّةِ حَرِيرٍ ـ أَوْ سِيرَاءَ ـ فَرَآهَا عَلَيْهِ، فَقَالَ "" إِنِّي لَمْ أُرْسِلْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا، إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لاَ خَلاَقَ لَهُ، إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتَسْتَمْتِعَ بِهَا "". يَعْنِي تَبِيعُهَا.
பாடம் : 40 ஆண்களும் பெண்களும் அணியத் தகாத ஆடைகளை விற்பது
2104. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு, கோடு போட்ட ஒரு ஜோடி பட்டு அங்கியை அனுப்பி வைத்தார்கள். அதை உமர் (ரலி) அவர்கள் அணிந்திருப்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீர் அணிவதற்காக நான் உமக்கு அனுப்பிவைக்கவில்லை. (மறுமையின்) நற்பேறற்றவர்கள்தான் இதை அணிவார்கள். இதைக் கொண்டு நீர் பயன் அடைவதற்காகவே லிஅதாவது விற்பதற்காகவேலி உமக்குக் கொடுத்த னுப்பினேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 34
2105. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْبَابِ، فَلَمْ يَدْخُلْهُ، فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مَاذَا أَذْنَبْتُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ "". قُلْتُ اشْتَرَيْتُهَا لَكَ لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يَوْمَ الْقِيَامَةِ يُعَذَّبُونَ، فَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ "". وَقَالَ "" إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ الْمَلاَئِكَةُ "".
பாடம் : 40 ஆண்களும் பெண்களும் அணியத் தகாத ஆடைகளை விற்பது
2105. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று வினவினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். ‘‘நீங்கள் இதன்மேல் அமர்வதற்காகவும் தலை சாய்த்துக்கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; ‘நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்படும். உருவப்படங்கள் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” எனக் கூறினார்கள்.26

அத்தியாயம் : 34
2106. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ "". وَفِيهِ خِرَبٌ وَنَخْلٌ.
பாடம் : 41 பொருளின் உரிமையாளரே விலை கூறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்.
2106. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவில் பள்ளிவாசல் கட்ட எண்ணியபோது), ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதில் பாழடைந்த கட்டடங் களும் பேரீச்ச மரங்களும் இருந்தன.

அத்தியாயம் : 34
2107. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ سَمِعْتُ نَافِعًا، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْمُتَبَايِعَيْنِ بِالْخِيَارِ فِي بَيْعِهِمَا، مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَكُونُ الْبَيْعُ خِيَارًا "". قَالَ نَافِعٌ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا اشْتَرَى شَيْئًا يُعْجِبُهُ فَارَقَ صَاحِبَهُ.
பாடம் : 42 வியாபாரத்தை எத்தனை நாட்களில் முறித்துக்கொள்ளலாம்?27
2107. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை தமது வியாபாரத்தில் (ஒரு முடிவு எடுக்க) உரிமை பெற்றிருக்கிறார்கள்; (முன்நிபந் தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபார மாக இருந்தால் தவிர! (அப்போது முன் நிபந்தனையின்படி நடந்துகொள்ளலாம்.)

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான ஒரு பொருளை விலைக்கு வாங்கி(ட எண்ணி)னால், (அதை உறுதி செய்யும் வகையில்) விற்றவரைப் பிரி(ந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரு)வார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறி யுள்ளார்கள்.28


அத்தியாயம் : 34
2108. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَفْتَرِقَا "". وَزَادَ أَحْمَدُ حَدَّثَنَا بَهْزٌ، قَالَ قَالَ هَمَّامٌ فَذَكَرْتُ ذَلِكَ لأَبِي التَّيَّاحِ فَقَالَ كُنْتُ مَعَ أَبِي الْخَلِيلِ لَمَّا حَدَّثَهُ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بِهَذَا الْحَدِيثِ.
பாடம் : 42 வியாபாரத்தை எத்தனை நாட்களில் முறித்துக்கொள்ளலாம்?27
2108. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) உரிமை பெறுகிறார்கள்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2109. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ "". وَرُبَّمَا قَالَ أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ.
பாடம் : 43 வியாபாரத்தை முறித்துக்கொள்ள ஒரு காலக்கெடு நிர்ணயிக்கா விட்டால் அந்த வணிகம் செல்லுமா?
2109. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை, (வியாபாரத்தை முறிக்க) உரிமை பெறுகிறார்கள்; ஒருவர் மற்றவரிடம் ‘(வணிகத்தைத் தொடரவோ முறிக்கவோ) உமக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தால் தவிர’ அல்லது ‘அது (முன் நிபந்தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபாரமாக இருந்தால் தவிர!›.

அத்தியாயம் : 34
2110. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ قَتَادَةُ أَخْبَرَنِي عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، قَالَ سَمِعْتُ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا "".
பாடம் : 44 விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.29 இப்னு உமர் (ரலி), ஷுரைஹ், ஷஅபீ, தாவூஸ், அதாஉ, இப்னு அபீமுலைக்கா (ரஹ்) ஆகியோர் இவ்வாறே கூறுகின் றனர்.
2110. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால், அவர் களின் வணிகத்தில் அவர்களுக்கு வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி(க் குறையை) மறைத்தால் அவர்களுக்கு வணிகத்தின் வளம் அகற்றப்படும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2111. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْمُتَبَايِعَانِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ عَلَى صَاحِبِهِ مَا لَمْ يَتَفَرَّقَا، إِلاَّ بَيْعَ الْخِيَارِ "".
பாடம் : 44 விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.29 இப்னு உமர் (ரலி), ஷுரைஹ், ஷஅபீ, தாவூஸ், அதாஉ, இப்னு அபீமுலைக்கா (ரஹ்) ஆகியோர் இவ்வாறே கூறுகின் றனர்.
2111. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன்நிபந்தனை) உரிமை வழங்கப் பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியா பாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை ஒவ்வொருவரும் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2112. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" إِذَا تَبَايَعَ الرَّجُلاَنِ فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ، مَا لَمْ يَتَفَرَّقَا، وَكَانَا جَمِيعًا، أَوْ يُخَيِّرُ أَحَدُهُمَا الآخَرَ فَتَبَايَعَا عَلَى ذَلِكَ، فَقَدْ وَجَبَ الْبَيْعُ، وَإِنْ تَفَرَّقَا بَعْدَ أَنْ يَتَبَايَعَا، وَلَمْ يَتْرُكْ وَاحِدٌ مِنْهُمَا الْبَيْعَ، فَقَدْ وَجَبَ الْبَيْعُ "".
பாடம் : 45 வணிக(ப் பேர)ம் முடிந்தபின் ஒருவர் மற்றவருக்கு முறித்துக்கொள்ளும் உரிமை வழங்கி(யும் அவர் அதைப் பயன்படுத்தா)விட்டால், வணிகம் ஏற்பட்டுவிடும்.30
2112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வணிகம் செய்தால், அவ்விருவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாமல் சேர்ந்து இருக்கும்வரை (பேரத்தை) முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக்கொள்ளும் உரிமையை வழங்கியும் அதை அவர் பயன்படுத்தாமல் இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டால் வணிகம் ஏற்பட்டுவிடும்; இருவரும் ஒப்பந்தத்தை முடித்தபின் வியாபாரத்தை முறிக்காமல் பிரிந்துவிட்டால் அப்போதும் வணிகம் ஏற்பட்டுவிடும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2113. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ بَيِّعَيْنِ لاَ بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا، إِلاَّ بَيْعَ الْخِيَارِ "".
பாடம் : 46 விற்பவர் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கும்போது, அந்த வணிகம் செல்லுமா?
2113. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்கக்கூடியவரும் வாங்கக்கூடியவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை அவர்களுக்கிடையே வணிகம் ஏற்படுவதில்லை; (முன்நிபந்தனை) உரிமை வழங்கப்பட்ட வியாபாரமாக இருந்தால் தவிர!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34