2074. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ "".
பாடம் : 15 கைத்தொழில் செய்தும் உழைத்தும் பொருளீட்டுவது13
2074. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் விறகுக் கட்டு ஒன்றைத் தமது முதுகில் சும(ந்து விற்றுப் பிழை)ப்பதானது, பிறரிடம் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். பிறர் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2075.
பாடம் : 15 கைத்தொழில் செய்தும் உழைத்தும் பொருளீட்டுவது13
2075. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் கயிறுகளை எடுத்துக்கொண்டு... (என ஆரம்பித்து மேற்கண்டபடி இறுதிவரை).

இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் :
2076. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" رَحِمَ اللَّهُ رَجُلاً سَمْحًا إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى "".
பாடம் : 16 விற்கும்போதும் வாங்கும்போதும் பெருந்தன்மையோடு தாராளமாக நடந்துகொள்ளல் உரிமையைக் கோரும் ஒருவர் அதை எல்லைமீறாமல் கோரட்டும்!14
2076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வாங்கும்போதும் விற்கும்போதும் உரிமையை நிறைவேற்றக் கோரும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2077. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، أَنَّ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَلَقَّتِ الْمَلاَئِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ قَالُوا أَعَمِلْتَ مِنَ الْخَيْرِ شَيْئًا قَالَ كُنْتُ آمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا وَيَتَجَاوَزُوا عَنِ الْمُوسِرِ قَالَ قَالَ فَتَجَاوَزُوا عَنْهُ "". وَقَالَ أَبُو مَالِكٍ عَنْ رِبْعِيٍّ "" كُنْتُ أُيَسِّرُ عَلَى الْمُوسِرِ وَأُنْظِرُ الْمُعْسِرَ "". وَتَابَعَهُ شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ رِبْعِيٍّ. وَقَالَ أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ رِبْعِيٍّ "" أُنْظِرُ الْمُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ "". وَقَالَ نُعَيْمُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ رِبْعِيٍّ "" فَأَقْبَلُ مِنَ الْمُوسِرِ، وَأَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ "".
பாடம் : 17 வசதி படைத்த கடனாளிக்கும் அவகாசம் அளித்தல்
2077. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று அவரிடம், ‘‘நீர் (உமது வாழ் நாளில்) ஏதேனும் நன்மை செய்திருக் கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘‘(நான் மக்களுக்கு கடன் கொடுத்துவந்தேன்.) வசதியான கடனாளிக் கும் அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டுகொள்ளாமல் விட்டு விடும்படியும் நான் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்” என்று கூறினார்.

உடனே ‘‘அவருடைய தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்” என்று (அல்லாஹ் வானவர்களிடம்) கூறினான்.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூமாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மென்மையாக நடப்பவனாகவும் இருந் தேன்” என்று அவர் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அப்துல் மலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும்வந்தேன்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

நுஐம் பின் அபீஹின்த் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘‘வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்துவந்தேன்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 34
2078. حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَانَ تَاجِرٌ يُدَايِنُ النَّاسَ، فَإِذَا رَأَى مُعْسِرًا قَالَ لِفِتْيَانِهِ تَجَاوَزُوا عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَتَجَاوَزَ اللَّهُ عَنْهُ "".
பாடம் : 18 சிரமப்படும் கடனாளிக்கு அவகாசம் அளித்தல்
2078. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக்கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம், ‘‘இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம் தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும்” என்று கூறுவார். அல்லாஹ்வும் அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2079. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ـ أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا ـ فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا "".
பாடம் : 19 விற்பவரும் வாங்குபவரும் (பொருட் களில் உள்ள) குறைகளை மறைக் காமல் தெளிவுபடுத்தி நலம் நாடுதல் அத்தாஉ பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (என்னிடமிருந்து ஓர் அடிமையை விலைக்கு வாங்கிய போது), ‘‘அத்தாஉ பின் காலித் என்பாரிட மிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) இவரை விலைக்கு வாங்கிக்கொண்டார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; (இந்த அடிமையிடம் மறைக்கப்பட்ட) எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமுமில்லை, குற்றம் புரியும் தன்மையுமில்லை” என்று எனக்கு எழுதித்தந்தார்கள். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இங்கு யிகுற்றம் புரியும் தன்மை’ என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஃகாஇலா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது விபசாரம் செய்தல், திருடுதல், ஓடிப்போதல் போன்ற குற்றங்களைக் குறிக்கும். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் (பின்வருமாறு) சொல்லப்பட்டது: (கால்நடைகளை விற்றுக்கொடுக்கும்) தரகர்கள் சிலர், (உள்ளூர் தொழுவங்களுக்கே வெளியூர்களான) யிகுராசான்’ தொழுவம், யிசிஜிஸ்தான்’ தொழுவம் என்று பெயரிட்டுக்கொண்டு, இது நேற்று குராசானிலிருந்து வந்தது; இது இன்றுதான் சிஜிஸ்தானிலிருந்து வந்தது என்று (வாங்குவோரை ஏமாற்றுவதற்காகச்) சொல்கிறார்கள். இதை இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள். ‘‘விற்பனை செய்யும் பொருளில் குறை இருப்பதை அறிந்திருக்கின்ற எவரும் அதைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல” என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
2079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும்வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் வளம் (பரக்கத்) வழங்கப் படும். இருவரும் குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள வளம் அகற்றப்படும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2080. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُرْزَقُ تَمْرَ الْجَمْعِ، وَهْوَ الْخِلْطُ مِنَ التَّمْرِ، وَكُنَّا نَبِيعُ صَاعَيْنِ بِصَاعٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ صَاعَيْنِ بِصَاعٍ، وَلاَ دِرْهَمَيْنِ بِدِرْهَمٍ "".
பாடம் : 20 பல வகைப் பேரீச்சம் பழங்களைக் கலந்து விற்றல்
2080. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பலதரப்பட்ட பேரீச்சம் பழங்கள் கலந்து எங்களுக்கு வழங்கப்படும்; அவை கலப்புப் பேரீச்சம் பழங்களாகும். (அவற்றில்) இரண்டு ‘ஸாஉ’களுக்கு ஒரு ‘ஸாஉ’ (உயர் ரகப் பேரீச்சம் பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்துவந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு ‘ஸாஉ’க்கு இரண்டு ‘ஸாஉ’கள் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது” என்று கூறினார்கள்.15

அத்தியாயம் : 34
2081. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُكْنَى أَبَا شُعَيْبٍ فَقَالَ لِغُلاَمٍ لَهُ قَصَّابٍ اجْعَلْ لِي طَعَامًا يَكْفِي خَمْسَةً، فَإِنِّي أُرِيدُ أَنْ أَدْعُوَ النَّبِيَّ صلى الله عليه وسلم خَامِسَ خَمْسَةٍ، فَإِنِّي قَدْ عَرَفْتُ فِي وَجْهِهِ الْجُوعَ. فَدَعَاهُمْ، فَجَاءَ مَعَهُمْ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ هَذَا قَدْ تَبِعَنَا، فَإِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ فَأْذَنْ لَهُ، وَإِنْ شِئْتَ أَنْ يَرْجِعَ رَجَعَ "". فَقَالَ لاَ، بَلْ قَدْ أَذِنْتُ لَهُ.
பாடம் : 21 இறைச்சி வணிகம் செய்பவர், (பிராணியை) அறுப்பவர் ஆகியோர் தொடர்பாகக் கூறப்பட்டவை
2081. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஷுஐப் என்ற அன்சாரி, (பிராணியை) அறுத்துத் துண்டுபோடும் தம் ஊழியரிடம், ‘‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப்போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்” என்று கூறிவிட்டு, ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் மற்றொரு மனிதரும் சேர்ந்து வந்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு அனுமதியளிக்க நீர் விரும்பினால் அனுமதி அளிப்பீராக! இவர் திரும்பிவிட வேண்டும் என நீர் விரும்பினால் திரும்பிவிடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள் ‘‘இல்லை; அவருக்கு நான் அனுமதியளித்துவிட்டேன்” என்றார்கள்.

அத்தியாயம் : 34
2082. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْخَلِيلِ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ـ أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا ـ فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا "".
பாடம் : 22 வணிகத்தில் பொய் சொல்வதும் குறைகளை மறைப்பதும் அதை அழித்துவிடும்.
2082. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால், அவர்களது வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந் தால் அவர்களின் வணிகத்தில் உள்ள வளம் அகற்றப்படும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2083. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يُبَالِي الْمَرْءُ بِمَا أَخَذَ الْمَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ "".
பாடம் : 23 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பல்கிப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள். (3:130)16
2083. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒரு மனிதர், தாம் பொருளீட் டியது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா; அல்லது அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பது குறித்துப் பொருட்படுத்தமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2084. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا نَزَلَتْ آخِرُ الْبَقَرَةِ قَرَأَهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِمْ فِي الْمَسْجِدِ، ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 24 வட்டி உண்பவர், வட்டிக்குச் சாட்சியாக இருப்பவர், வட்டிக்கு எழுத்தராக இருப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: வட்டி உண்போர், ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுவதைப் போலன்றி (மறுமை நாளில் வேறு விதமாக) எழமாட்டார்கள். (2:275)
2084. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டி தொடர்பான) இறுதி வசனங்கள் (2:275லி281) அருளப்பெற்றபோது, அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பின்னர் மதுபான வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள்.


அத்தியாயம் : 34
2085. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي، فَأَخْرَجَانِي إِلَى أَرْضٍ مُقَدَّسَةٍ، فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى نَهَرٍ مِنْ دَمٍ فِيهِ رَجُلٌ قَائِمٌ، وَعَلَى وَسَطِ النَّهْرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةٌ، فَأَقْبَلَ الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ فَإِذَا أَرَادَ الرَّجُلُ أَنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بِحَجَرٍ فِي فِيهِ فَرَدَّهُ حَيْثُ كَانَ، فَجَعَلَ كُلَّمَا جَاءَ لِيَخْرُجَ رَمَى فِي فِيهِ بِحَجَرٍ، فَيَرْجِعُ كَمَا كَانَ، فَقُلْتُ مَا هَذَا فَقَالَ الَّذِي رَأَيْتَهُ فِي النَّهَرِ آكِلُ الرِّبَا "".
பாடம் : 24 வட்டி உண்பவர், வட்டிக்குச் சாட்சியாக இருப்பவர், வட்டிக்கு எழுத்தராக இருப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: வட்டி உண்போர், ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுவதைப் போலன்றி (மறுமை நாளில் வேறு விதமாக) எழமாட்டார்கள். (2:275)
2085. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) மனிதர்க(ளின் தோற்றத்தில் வந்த வானவர்க)ள் இரு வரைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டி ருந்தார்.

ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து, முன்பு நின்ற இடத்திற்கே அவரைத் திருப்பிவிடுகிறார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்றுகொண்டிருந்தார்.

‘‘இவர் யார்?” என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன்: அதற்கு அவர்கள் ‘‘ஆற்றில் நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்” எனக் கூறினார்கள்.

இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2086. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ أَبِي اشْتَرَى عَبْدًا حَجَّامًا، فَسَأَلْتُهُ فَقَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَثَمَنِ الدَّمِ، وَنَهَى عَنِ الْوَاشِمَةِ وَالْمَوْشُومَةِ، وَآكِلِ الرِّبَا، وَمُوكِلِهِ، وَلَعَنَ الْمُصَوِّرَ.
பாடம் : 25 வட்டி கொடுப்பவர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (உண்மையான) நம்பிக்கையாளர் களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; (உங்களுக்கு) வரவேண்டிய வட்டியை விட்டுவிடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விட மிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போரை உறுதியாக எதிர்பாருங்கள். நீங்கள் பாவமன்னிப்புக் கோரி (வட்டியை விட்டு)விட்டால் உங்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதியிழைக்கவும் வேண்டாம்; அநீயிழைக்கப்படவும் வேண்டாம். (உங்களிடம் கடன் வாங்கியவர் நிதி) நெருக்கடி உள்ளவராக இருந்தால் வசதி வருகின்றவரை அவகாசம் அளிக்க வேண்டும். நீங்கள் அறிந்தவர்களாயிருப்பின் (அந்தக் கடனைத்) தர்மமாக வழங்கிவிடுவதே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும். (இறப்பிற்குப்பின்) அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படும் நாளை அஞ்சுங்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவரவர் தேடிக்கொண்டது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்படமாட்டார்கள். (2:278, 279) ‘‘இதுதான் நபி (ஸல்) அவர்களுக்கு இறுதியாக அருளப்பெற்ற (இறை)வசனம் ஆகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
2086. அவ்ன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்), குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். (பிறகு அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிடும்படி உத்தரவிட்டார்கள்.) (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் குருதி (உறிஞ்சி எடுப்பது)க்கான கூலியையும் தடை செய்தார்கள்; வட்டி வாங்குவதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள். மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.17

அத்தியாயம் : 34
2087. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ الْمُسَيَّبِ إِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" الْحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ "".
பாடம் : 26 ‘‘அல்லாஹ் வட்டியை அழிக்கின் றான்; தர்மங்களை வளர்க்கின்றான். (தனக்கு) மாறு செய்யும் எந்தப் பாவியையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்” (2:276) எனும் இறைவசனம்
2087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; வளத்தை அழித்துவிடும்.18

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2088. حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا الْعَوَّامُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَقَامَ سِلْعَةً، وَهُوَ فِي السُّوقِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطَ، لِيُوقِعَ فِيهَا رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ، فَنَزَلَتْ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً }
பாடம் : 27 வணிகத்தில் (பொதுவாகச்) சத்தியம் செய்வது விரும்பத் தக்கதன்று.
2088. அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பிவைத்துக்கொண்டு, தாம் (கொள்முதல் செய்தபோது) கொடுக்காத விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்: முஸ்லிம்களில் ஒருவரை அ(ந்தப் பேரத்)தில் சிக்கவைப்பதற்காக (அவர் இவ்வாறு செய்தார்).

அப்போதுதான், ‘‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங் களையும் அற்ப விலைக்கு விற்றுவிட்டவர் களுக்கு மறுமையில் எந்த நற்பேறும் கிடையாது” (3:77) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.19

அத்தியாயம் : 34
2089. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ كَانَتْ لِي شَارِفٌ مِنْ نَصِيبِي مِنَ الْمَغْنَمِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْطَانِي شَارِفًا مِنَ الْخُمْسِ، فَلَمَّا أَرَدْتُ أَنْ أَبْتَنِيَ بِفَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاعَدْتُ رَجُلاً صَوَّاغًا مِنْ بَنِي قَيْنُقَاعَ أَنْ يَرْتَحِلَ مَعِي فَنَأْتِيَ بِإِذْخِرٍ أَرَدْتُ أَنْ أَبِيعَهُ مِنَ الصَّوَّاغِينَ، وَأَسْتَعِينَ بِهِ فِي وَلِيمَةِ عُرُسِي.
பாடம் : 28 பொற்கொல்லர் தொடர்பாகக் கூறப்பட்டவை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘‘புனித (ஹரம்) எல்லையிலுள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், யிஇத்கிர்’ எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களின் உலோகத் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கு (கூரை மேயவு)ம் பயன்படு கிறதே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், யிஇத்கிரைத் தவிர!› என்று கூறினார்கள்.
2089. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பத்ர்) போரில் கிடைத்த செல்வங்களில் என் பங்காகக் கிடைத்த வயதான ஓர் ஒட்டகம் என்னிடம் இருந்தது; நபி (ஸல்) அவர்கள் (தமது பொறுப்பில் வந்த) ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து (குமுஸ்) வயதான மற்றோர் ஒட்டகத்தையும் எனக்குக் கொடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமாவுடன் தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்க நான் விரும்பினேன்.

அப்போது யிபனூ கைனுகா’ குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரிடம், அவர் என்னுடன் வந்து யிஇத்கிர்’ புல்லை நாங்கள் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று, அ(ந்தப் பணத்)தை என் மணவிருந்துக்கு (வலீமா) பயன்படுத்திக்கொள்ள விரும்பியிருந்தேன்.


அத்தியாயம் : 34
2090. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ، وَلَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ لأَحَدٍ بَعْدِي، وَإِنَّمَا حَلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، وَلاَ يُخْتَلَى خَلاَهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا وَلاَ يُلْتَقَطُ لُقَطَتُهَا إِلاَّ لِمُعَرِّفٍ "". وَقَالَ عَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ إِلاَّ الإِذْخِرَ لِصَاغَتِنَا وَلِسُقُفِ بُيُوتِنَا. فَقَالَ "" إِلاَّ الإِذْخِرَ "". فَقَالَ عِكْرِمَةُ هَلْ تَدْرِي مَا يُنَفَّرُ صَيْدُهَا هُوَ أَنْ تُنَحِّيَهُ مِنَ الظِّلِّ، وَتَنْزِلَ مَكَانَهُ. قَالَ عَبْدُ الْوَهَّابِ عَنْ خَالِدٍ لِصَاغَتِنَا وَقُبُورِنَا.
பாடம் : 28 பொற்கொல்லர் தொடர்பாகக் கூறப்பட்டவை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘‘புனித (ஹரம்) எல்லையிலுள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், யிஇத்கிர்’ எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களின் உலோகத் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கு (கூரை மேயவு)ம் பயன்படு கிறதே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், யிஇத்கிரைத் தவிர!› என்று கூறினார்கள்.
2090. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) ‘‘நிச்சயமாக, அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தி யிருக்கிறான். (இங்கு போர் செய்வது) எனக்குமுன் எவருக்கும் அனுமதிக்கப்பட வில்லை; எனக்குக்கூட பகலில் சிறிதுநேரம்தான் அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள புற்பூண்டுகள் பறிக்கப்படக் கூடாது! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது! இங்குள்ள வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக்கூடாது! இங்கே கீழே விழுந்துகிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது!” என்று கூறினார்கள்.

அப்போது அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், ‘‘எங்கள் வீடுகளின் கூரைகளுக்கும் பொற்கொல்லர் களுக்கும் பயன்படும் யிஇத்கிரை’த் தவிரவா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் யிஇத்கிரைத் தவிர!› என்றார் கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘‘வேட்டைப் பிராணி விரட்டப்படுவது என்றால் என்னவென்று உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் அதை விரட்டிவிட்டு, அந்த இடத்தில் நீங்கள் தங்குவதுதான்” என்று கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிஎங்கள் பொற்கொல்லர்களுக்கும் எங்கள் அடக்கத் தலங்களுக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.20

அத்தியாயம் : 34
2091. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ خَبَّابٍ، قَالَ كُنْتُ قَيْنًا فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ لِي عَلَى الْعَاصِ بْنِ وَائِلٍ دَيْنٌ، فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ قَالَ لاَ أُعْطِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم. فَقُلْتُ لاَ أَكْفُرُ حَتَّى يُمِيتَكَ اللَّهُ، ثُمَّ تُبْعَثَ. قَالَ دَعْنِي حَتَّى أَمُوتَ وَأُبْعَثَ، فَسَأُوتَى مَالاً وَوَلَدًا فَأَقْضِيَكَ فَنَزَلَتْ {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا * أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمَنِ عَهْدًا }
பாடம் : 29 பொற்கொல்லரும் இரும்புக் கொல்லரும்
2091. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறியாமைக் காலத்தில் கொல்லராக இருந்தேன். (இணைவைப்பாள ரான) ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அப்போது அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்கு (திருப்பி)த்தரமாட்டேன்”’என்றார்.

நான், ‘‘அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படாத வரை நான் (முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” எனக் கூறினேன். அதற்கு அவர் ‘‘நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் அடைத்துவிடுகிறேன்” என்றார்.

அப்போதுதான், ‘‘நம் வசனங்களை நிராகரித்துக்கொண்டு ‘(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்’ என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்துகொண்டுவிட்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) அளவற்ற அருளாள(னான இறைவ)னிடம் உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கின்றானா? (19 :77, 78) எனும் இறைவசனங்கள் அருளப்பெற்றன.

அத்தியாயம் : 34
2092. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَهُ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى ذَلِكَ الطَّعَامِ، فَقَرَّبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خُبْزًا وَمَرَقًا فِيهِ دُبَّاءٌ وَقَدِيدٌ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَىِ الْقَصْعَةِ ـ قَالَ ـ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ.
பாடம் : 30 தையல்காரர் பற்றிய குறிப்பு
2092. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் சுரைக்காயும் உப்புக் கண்டமும் உள்ள குழம்பையும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்: நபி (ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.

அத்தியாயம் : 34
2093. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ ـ قَالَ أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ فَقِيلَ لَهُ نَعَمْ، هِيَ الشَّمْلَةُ، مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا ـ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا. فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا. فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ. فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ، اكْسُنِيهَا، فَقَالَ "" نَعَمْ "". فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْمَجْلِسِ، ثُمَّ رَجَعَ فَطَوَاهَا، ثُمَّ أَرْسَلَ بِهَا إِلَيْهِ. فَقَالَ لَهُ الْقَوْمُ مَا أَحْسَنْتَ، سَأَلْتَهَا إِيَّاهُ، لَقَدْ عَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلاً. فَقَالَ الرَّجُلُ وَاللَّهِ مَا سَأَلْتُهُ إِلاَّ لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ. قَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ.
பாடம் : 31 நெசவாளர் பற்றிய குறிப்பு
2093. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) சால்வை (புர்தா) ஒன்றைக் கொண்டு வந்தார்” எனக் கூறிவிட்டு, ‘‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம்! அது ஓரத்தில் குஞ்சம் கட்டப்பட்ட சால்வைதான்” என்று கூறப்பட்டது. (தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) அப்பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நானே என் கையால் நெய்தேன்” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றுக்கொண்டார்கள். (அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதைக் கீழாடையாக அணிந்திருந்தார்கள்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி (தருகிறேன்)” என்று சொல்லிவிட்டு, சபையில் (சிறிது நேரம்) அமர்ந்திருந்தார் கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து, அதைச் சுருட்டி (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.

அப்போது அவரிடம் மக்கள், ‘‘நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங் கையாக திருப்பியனுப்பமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கேட்டுவிட்டீரே!” எனக் கூறினர். அதற்கு அம்மனிதர், ‘‘நான் இறக்கும் நாளில் அது எனக்குச் சவக்கோடியாக (கஃபன்) ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்” என்றார். அது அவ்வாறே, அவரது கஃபனாக ஆனது.21

அத்தியாயம் : 34