பாடம் : 8 பாவமற்ற விஷயங்களில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமான செயலில் கட்டுப்படுவது தடை செய்யப்பட்டதாகும்.
3744. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவனுடைய தூதருக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள்" (4:59) எனும் இறைவசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33

3745. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். (என்னால் நியமிக்கப்பட்ட) தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார்; தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

3746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3747. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர்" என்றே இடம்பெற்றுள்ளது. "என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு" என்று இடம்பெறவில்லை. இச்சொல் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இடம்பெறவில்லை.

3748. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் உம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (கட்டளையைச்) செவியுற்று (தலைமைக்குக்) கீழ்ப்படிந்து நடப்பீராக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3749. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் உற்ற தோழர் (நபி -ஸல்) அவர்கள், "தலைவரின் சொல்லைச் செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்பாயாக! அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே!" என எனக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையாக இருந்தாலும் சரியே!" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே" என்றே இடம்பெற்றுள்ளது.

3750. உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், "அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப் பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபிசீனிய அடிமையொருவர் (உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும்)" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய அடிமையொருவர்" என்று காணப்படுகிறது.

அதில் "உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனியர்" எனும் குறிப்பு இல்லை. ("அடிமை" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.) மேலும், "மினாவில் அல்லது அரஃபாத்தில் உரையாற்றும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டேன்" எனக் கூடுதல் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
- உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜுக்காக நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற, உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட கறுப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.

3751. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாதவரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்ட ளையைச்) செவியுறுவதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியுறுவதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3752. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு ஒரு மனிதரைத் தளபதியாக்கினார்கள். (ஒரு கட்டத்தில் அவர் படைவீரர்கள் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, அதில் குதிக்கச் சொன்னார். சிலர் அதில் குதிக்க முன்வந்தனர். வேறுசிலர் "(நரக) நெருப்பிலிருந்து (தப்பிக்கத்)தானே நாம் வெருண்டோடி (நபிகளாரிடம்) வந்தோம்" என்றனர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டபோது, நெருப்பில் குதிக்க முற்பட்டவர்களிடம் "அதில் மட்டும் நீங்கள் குதித்திருந்தால் மறுமை நாள் வரை அதிலேயே நீங்கள் கிடந்திருப்பீர்கள்" என்றும், மற்றவர்களிடம் நல்லபடியாகவும் பேசினார்கள். மேலும் "அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்" என்று சொன்னார்கள்.

3753. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவரது கட்டளையைச் செவியுற்றுக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஒரு கட்டத்தில்) ஏதோ ஒரு விஷயத்தில் படைவீரர்கள் அவரைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அவர், "விறகைச் சேகரியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்ததும் "நெருப்பை மூட்டுங்கள்" என்று உத்தரவிட்டார்.
அவ்வாறே அவர்கள் நெருப்பை மூட்டிய பின், "நீங்கள் எனது சொல்லைச் செவியுற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?" என்று கேட்டார். படைவீரர்கள், "ஆம்" என்றனர். "அவ்வாறாயின் நெருப்பில் குதியுங்கள்" என்று அவர் உத்தரவிட்டார்.
அப்போது படைவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, "(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத் தானே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வெருண்டோடி வந்தோம்!" என்று கூறினர். அவ்வாறே அவர்கள் (சிறிது நேரம்) இருந்துகொண்டிருக்க, அவருடைய கோபம் தணிந்தது; நெருப்பும் அணைந்தது.
பிறகு (மதீனா திரும்பியதும்) நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அதில் (மட்டும்) அவர்கள் குதித்திருந்தால் அதிலிருந்து அவர்கள் (ஒருபோதும்) வெளியேறியிருக்கமாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3754. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ் ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3755. ஜுனாதா பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அவர்களிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், "அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை) எங்களுக்கு அறிவியுங்கள். அதனால் அல்லாஹ் பயன் அளிப்பான்" என்று சொன்னோம்.
அதற்கு உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம். எங்களுக்கு விருப்பமான விஷயத்திலும் எங்களுக்கு விருப்பமில்லாத விஷயத்திலும் நாங்கள் சிரமத்திலிருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் எங்களைவிட மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும்கூட (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், ஆட்சியதிகாரத்தில் இருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பான விஷயத்தில் நாங்கள் சண்டையிடமாட்டோம் என்றும் உறுதிமொழி அளித்தோம்.
"எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர" என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

பாடம் : 9 ஆட்சித் தலைவர் ஒரு கேடயம்; அவரோடுதான் எதிரிகள் போரிடுகின்றனர்; அவர் மூலமே மக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
3756. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3756. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 10 கலீஃபாக்களில் முதலாவதாக வருபவருக்கே முன்னுரிமை அளித்து உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும்.
3757. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கல்வி கற்பதற்காக) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"பனூ இஸ்ராயீல் மக்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். ஓர் இறைத்தூதர் இறக்கும்போது மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். (ஆனால்,) எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், எனக்குப் பின் கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) பலர் தோன்றுவார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "(அவர்கள் வரும்போது) நாங்கள் என்ன செய்ய வேண்டுமெனத் தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?" என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (அளிக்க வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடமே அல்லாஹ் கேட்கவிருக்கின்றான்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3758. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை அன்சாரிகளிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்குப் பின் விரைவில் உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரம் மற்றும் போர் நிதிகளைப் பங்கிடுதல் ஆகியவற்றில்) முன்னுரிமை வழங்கப்படுதலும் நீங்கள் வெறுக்கின்ற சில நிகழ்வுகளும் நடக்கும்" என்று கூறினார்கள். அன்சாரிகள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் அவற்றைச் சந்திக்கக்கூடியவர் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆட்சியாளர்களான) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3759. அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்றேன். கஅபாவின் நிழலில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் கூடியிருந்தனர். நான் அங்கு சென்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் சிலர் தம் கூடாரங்களைச் சீரமைத்துக்கொண்டிருந்தனர். வேறுசிலர் அம்பெய்து (பயிற்சி எடுத்துக்)கொண்டிருந்தனர். மேலும் சிலர் தம் கால்நடைகள் மேயுமிடத்தில் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர் "கூட்டுத் தொழுகை நடைபெறப் போகிறது" என அறிவித்தார்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒன்றுகூடினோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வாழ்ந்த ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கு எது நன்மை என்பதை அறிந்திருந்தாரோ அதை அவர்களுக்கு அறிவித்துவிடுவதும் அவர்களுக்கு எது தீமையென்பதை அறிந்திருந்தாரோ அது குறித்து அவர்களை எச்சரிப்பதும் அவர்மீது கடமையாகவே இருந்தது.
உங்களுடைய இந்தச் சமுதாயத்தின் நிம்மதியான வாழ்வு அதன் ஆரம்பக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்தில் இறுதியானவர்களுக்குச் சோதனைகளும் நீங்கள் வெறுக்கின்ற பல விஷயங்களும் ஏற்படும். ஒரு குழப்பம் தோன்றும். அது இன்னொரு குழப்பத்தை எளிதானதாகக் காட்டும்.
பிறகு மற்றோரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், "இதில்தான் என் அழிவு உள்ளது" என்று கூறுவார். பிறகு அந்தக் குழப்பம் விலகிவிடும். பிறகு மற்றொரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், "இதுதான்; இதுதான்" என்பார்.
ஆகவே, (நரக) நெருப்பிலிருந்து ஒதுக்கப்பட்டு, சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட யார் விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலேயே இறப்பு அவரைத் தழுவட்டும். தமக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரோ அதையே மக்களுக்கும் அவர் விரும்பட்டும். ஓர் ஆட்சித் தலைவருக்கு வாக்குறுதிப் பிரமாணம் (பைஅத்) அளித்தவர், அவருடன் தமது கரத்தை இணைப்பதுடன் உளப்பூர்வமான ஆதரவையும் அவருக்கு வழங்கட்டும்; தம்மால் இயன்ற வரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கட்டும். அவரு(டைய ஆட்சி)க்கெதிராக அவருடன் சண்டையிடுவதற்காக மற்றொருவர் வந்தால் அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்.
இவ்வாறு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதும் நான் அவர்களை நெருங்கி, அல்லாஹ்வின் பெயரால் நான் உங்களிடம் கேட்கிறேன். "இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் தம் கரங்களால் தம் காதுகளையும் உள்ளத்தையும் நோக்கி சைகை செய்துகாட்டி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை என் காதுகள் கேட்டன; என் உள்ளம் அதை மனனமிட்டது" என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், "இதோ! உங்கள் தந்தையின் சகோதரர் புதல்வர் முஆவியா (ரலி) அவர்கள் (கலீஃபா அலீ (ரலி) அவர்களுக்கெதிராக நிதியும் படையும் திரட்டி) எங்கள் பொருட்களை எங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணும்படியும் நம்மை நாமே கொலை செய்யும்படியும் எங்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால், அல்லாஹ்வோ, "இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான் (4:29) என்று கூறுகின்றானே?" என்று கேட்டேன்.
அதற்கு (பதிலளிக்காமல்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் அவருக்கு நீ கட்டுப்படு! அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் அவருக்கு மாறுசெய்துவிடு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3760. மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா அஸ்ஸாஇதீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் இறையில்லம் கஅபா அருகில் ஒரு கூட்டத்தைக் கண்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

பாடம் : 11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் (உரியவர்களை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கும்போதும் பொறுமைகாக்குமாறு வந்துள்ள கட்டளை.
3761. உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து, "தாங்கள் இன்ன மனிதரை அதிகாரியாக நியமித்ததைப் போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?" என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அன்சாரிகளே!) எனக்குப் பிறகு (உங்களைவிட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் "ஹவ்ளுல் கவ்ஸர்" எனும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

பாடம் : 12 உரிமைகளைத் தர மறுத்தாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல்.
3762. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் யஸீத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எங்களை நிர்வகிக்கும் ஆட்சித் தலைவர்கள், அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய உரிமைகளைக் கோருகின்றவர்களாகவும், எங்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய உரிமைகளை மறுப்பவர்களாகவும் அமைந்துவிட்டால், அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், கூறுங்கள்?" என்று கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலமா (ரலி) அவர்களைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
பிறகு மீண்டும் சலமா (ரலி) அவர்கள் கேட்டபோதும் அவர்களைவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இரண்டாவது தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ (அவ்வாறு) சலமா (ரலி) அவர்கள் கேட்டபோது,அவர்களை அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் இழுத்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,) "நீங்கள் (உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்" என்று சொன்னார்கள்.

3763. மேற்கண்ட ஹதீஸ் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் சலமா (ரலி) அவர்களை இழுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்" என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.