962. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ـ رضى الله عنهم ـ فَكُلُّهُمْ كَانُوا يُصَلُّونَ قَبْلَ الْخُطْبَةِ.
பாடம் : 8 பெருநாள் தொழுகைக்குப் பிறகே குத்பா (உரை)
962. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் பெருநாள் தொழுகையில் கலந்துகொண் டுள்ளேன். அவர்கள் அனைவரும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுப வர்களாக இருந்தனர்.


அத்தியாயம் : 13
963. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ.
பாடம் : 8 பெருநாள் தொழுகைக்குப் பிறகே குத்பா (உரை)
963. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இரு பெருநாட்களிலும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுவார்கள்.


அத்தியாயம் : 13
964. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ الْفِطْرِ رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا، ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ، فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلْنَ يُلْقِينَ، تُلْقِي الْمَرْأَةُ خُرْصَهَا وَسِخَابَهَا.
பாடம் : 8 பெருநாள் தொழுகைக்குப் பிறகே குத்பா (உரை)
964. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்கள் (கூடுதலாக எதையும்) தொழ வில்லை. (உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு நபி (ஸல்) அவர்கள் வந்து (அறிவுரை கூறினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித் தார்கள்.

உடனே பெண்கள் (தம்மிடம் இருந் ததை பிலால் அவர்களின் கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும் தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர்.


அத்தியாயம் : 13
965. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا زُبَيْدٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ نَحَرَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسْكِ فِي شَىْءٍ "". فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ يَا رَسُولَ اللَّهِ، ذَبَحْتُ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. فَقَالَ "" اجْعَلْهُ مَكَانَهُ، وَلَنْ تُوفِيَ أَوْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ "".
பாடம் : 8 பெருநாள் தொழுகைக்குப் பிறகே குத்பா (உரை)
965. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஈதுல் அள்ஹா பெருநாளின்போது) நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது (யாதெனில்), நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையி-ருந்து திரும்பிவந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்போம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றிவிட்டார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானி பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொன்னார்கள்.

அப்போது அன்சாரிகளில் அபூபுர்தா பின் நியார் எனப்படும் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தொழுகைக்கு முன்பே நான் குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டை விடச் சிறந்தது (அதை நான் அறுக்க லாமா?)” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “முத-ல் அறுத்த தற்குப் பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் ஒருபோதும் ‘அது நிறைவேறாது’ அல்லது ‘போதுமாகாது’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 13
966. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى أَبُو السُّكَيْنِ، قَالَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُوقَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ حِينَ أَصَابَهُ سِنَانُ الرُّمْحِ فِي أَخْمَصِ قَدَمِهِ، فَلَزِقَتْ قَدَمُهُ بِالرِّكَابِ، فَنَزَلْتُ فَنَزَعْتُهَا وَذَلِكَ بِمِنًى، فَبَلَغَ الْحَجَّاجَ فَجَعَلَ يَعُودُهُ فَقَالَ الْحَجَّاجُ لَوْ نَعْلَمُ مَنْ أَصَابَكَ. فَقَالَ ابْنُ عُمَرَ أَنْتَ أَصَبْتَنِي. قَالَ وَكَيْفَ قَالَ حَمَلْتَ السِّلاَحَ فِي يَوْمٍ لَمْ يَكُنْ يُحْمَلُ فِيهِ، وَأَدْخَلْتَ السِّلاَحَ الْحَرَمَ وَلَمْ يَكُنِ السِّلاَحُ يُدْخَلُ الْحَرَمَ.
பாடம் : 9 பெருநாளின்போதும் ‘ஹரம்’ புனித எல்லைக்குள்ளும் (அச்சு றுத்தும் வகையில்) ஆயுதங்களை எடுத்துச் செல்லலாகாது. “பெருநாள் தினத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாதென மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது; ஆனால், எதிரிகள் பற்றிய அச்சம் இருந்தால் தவிர!” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
966. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(வாகனத்தில் அமர்ந்திருந்த) இப்னு உமர் (ரலி) அவர்களின் உள்ளங்கா-ல் (ஹிஜாஸின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் ஆட்களில் ஒருவர் பாய்ச்சிய) ஈட்டியின் முனை பாய்ந்தபோது, நானும் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களின் பாதம் வாகனத்தில் ஒட்டிக் கொண்டது. உடனே நான் (வாகனத்தி-ருந்து) இறங்கி அதைப் பிடுங்கி எடுத்தேன். -இது மினாவில் இருந்தபோது நடந்தது.- இந்தச் செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டி, அவர் இப்னு உமர் (ரலி) அவர் களை உடல் நலம் விசாரிக்க (வர)லானார்.

அப்போது ஹஜ்ஜாஜ், “உங்களைத் தாக்கியவர் யாரென்று தெரிந்தால் (தக்க நடவடிக்கை எடுப்போம்)” என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீர்தான் என்னைத் தாக்கினீர்” என்றார்கள். “அது எப்படி?” என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆயுதம் எடுத்துச் செல்லக் கூடாத (பெரு நாள்) தினத்தில் நீர்தான் ஆயுதம் ஏந்திட உத்தரவிட்டீர். ஹரம் புனித எல்லைக்குள் ஆயுதம் கொண்டுவரக் கூடாது என்றி ருக்க, ஹரமுக்குள் ஆயுதங்களை நடமாட விட்டதும் நீர்தான்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 13
967. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ، قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلَ الْحَجَّاجُ عَلَى ابْنِ عُمَرَ وَأَنَا عِنْدَهُ، فَقَالَ كَيْفَ هُوَ فَقَالَ صَالِحٌ. فَقَالَ مَنْ أَصَابَكَ قَالَ أَصَابَنِي مَنْ أَمَرَ بِحَمْلِ السِّلاَحِ فِي يَوْمٍ لاَ يَحِلُّ فِيهِ حَمْلُهُ، يَعْنِي الْحَجَّاجَ.
பாடம் : 9 பெருநாளின்போதும் ‘ஹரம்’ புனித எல்லைக்குள்ளும் (அச்சு றுத்தும் வகையில்) ஆயுதங்களை எடுத்துச் செல்லலாகாது. “பெருநாள் தினத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாதென மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது; ஆனால், எதிரிகள் பற்றிய அச்சம் இருந்தால் தவிர!” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
967. சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (உடல் நலம் விசாரிக்க) ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் அருகில் நானும் இருந்தேன். ஹஜ்ஜாஜ் (இப்னு உமரிடம்) அவர் எப்படி இருக்கிறார்? என்று வினவினார். தாம் நலமுடன் இருப்பதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

பிறகு “உம்மைத் தாக்கியவர் யார்?” என்று கேட்டார் ஹஜ்ஜாஜ். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாத (பெருநாள்) தினத்தில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கினார்” என்று -ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக்- குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 13
968. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ، قَالَ خَطَبَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ قَالَ "" إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ عَجَّلَهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَىْءٍ "". فَقَامَ خَالِي أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَنَا ذَبَحْتُ قَبْلَ أَنْ أُصَلِّيَ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. قَالَ "" اجْعَلْهَا مَكَانَهَا ـ أَوْ قَالَ اذْبَحْهَا ـ وَلَنْ تَجْزِيَ جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ "".
பாடம் : 10 பெருநாள் தொழுகைக்குக் காலையிலேயே (நேரத்தோடு) செல்வது “(சூரியன் உதயமாகி) கூடுதல் தொழுகை தொழப்படும் இந்த நேரத்தில் எல்லாம் நாங்கள் (பெருநாள் தொழுகை யைத் தொழுது) முடித்துவிடுவோம்” என அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
968. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்), “நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை யாதெனில், (பெருநாள் தொழுகை) தொழுவதுதான்.5 பின்னர் திரும்பி வந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்போம். இவ்வாறு யார் செய்கிறாரோ அவரே நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெருநாள் தொழுகை) தொழுவதற்கு முன்பே (பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக அவசரப்பட்டு (முன்கூட்டியே அறுத்து)விட்ட இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் அறவே சேராது” என்று கூறினார்கள்.

அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டேன். (ஆனால்) என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது; அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்தது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “‘முத-ல் அறுத்ததற்குப் பதிலாக ‘இதை வைத்துக்கொள்வீராக’ அல்லது ‘இதை அறுத்துவிடுவீராக’. ஆனால், உங்களுக் குப் பிறகு வேறெவருக்கும் ஒரு வயதுடைய வெள்ளாட்டுக்குட்டி ஒரு போதும் போதுமாகாது” என்று பதிலளித் தார்கள்.

அத்தியாயம் : 13
969. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" مَا الْعَمَلُ فِي أَيَّامِ الْعَشْرِ أَفْضَلَ مِنَ الْعَمَلِ فِي هَذِهِ "". قَالُوا وَلاَ الْجِهَادُ قَالَ "" وَلاَ الْجِهَادُ، إِلاَّ رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَىْءٍ "".
பாடம் : 11 அய்யாமுத் தஷ்ரீக் (எனும் துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட் களில் நற்செயல் புரிவதன் சிறப்பு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்” (22:28) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள ‘குறிப் பிட்ட நாட்கள்’ என்பது, ‘(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களைக் குறிக்கும். “(விரல் விட்டு எண்ணப்படும் குறிப் பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (2:203) எனும் வசனத்திலுள்ள) ‘எண்ணப்படும் நாட்கள்’ என்பது ‘அய்யாமுத் தஷ்ரீக்’ நாட்களைக் குறிக்கும். இப்னு உம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் கடைவீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும்போது மக்களும் அவர்களுடன் (சேர்ந்து) தக்பீர் சொல்வார்கள். கூடுதலான தொழுகைக்குப் பிறகு முஹம்மத் பின் அலீ அல்பாகிர் (ரஹ்) அவர்கள் தக்பீர் சொன்னார்கள்.
969. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளை யும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 13
970. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الثَّقَفِيُّ، قَالَ سَأَلْتُ أَنَسًا وَنَحْنُ غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَاتٍ عَنِ التَّلْبِيَةِ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كَانَ يُلَبِّي الْمُلَبِّي لاَ يُنْكَرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ الْمُكَبِّرُ فَلاَ يُنْكَرُ عَلَيْهِ.
பாடம் : 12 (துல்ஹஜ் 10,11,12,13 ஆகிய) ‘மினா’ நாட்களிலும் (துல்ஹஜ் 9ஆம் நாள் காலையில்) அரஃபாவுக்குப் புறப்பட்டுச் செல்லும்போதும் ‘தக்பீர்’ சொல்வது உமர் (ரலி) அவர்கள், மினாவில் (தங்கி யிருக்கும் நாட்களில்) தமது கூடாரத்தி-ருந்தபடி தக்பீர் கூறுவார்கள். அதைக் கேட்டு பள்ளிவாசலில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். கடைவீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். எந்த அளவுக்கென்றால் தக்பீர் முழக்கத்தால் ‘மினா’வே அதிரும். இப்னு உமர் (ரலி) அவர்கள், மினாவில் இந்த நாட்களில் தக்பீர் கூறுவார்கள். தொழுகைகளுக்குப் பிறகும், தமது படுக்கையில் இருக்கும்போதும், தமது கூடாரத்தில் இருக்கும்போதும், அமரும்போதும், நடக்கும்போதும், அந்த அனைத்து நாட்களிலும் தக்பீர் கூறுவார்கள். மைமூனா (ரலி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். (அப்துல் ம-க் பின் மர்வான் காலத்தில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அபான் பின் உஸ்மான், (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோருக்குப் பின்னால் ‘அய்யாமுத் தஷ்ரீக்’ (11, 12, 13) நாட்களில் பள்ளிவாச-ல் ஆண்களுடன் பெண்களும் தக்பீர் கூறுவார்கள்.
970. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ் ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவி-ருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘தல்பியா’ சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவி-ருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியா’ சொல்பவர் தல்பியா சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்பட வில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 13
971. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ الْعِيدِ، حَتَّى نُخْرِجَ الْبِكْرَ مِنْ خِدْرِهَا، حَتَّى نُخْرِجَ الْحُيَّضَ فَيَكُنَّ خَلْفَ النَّاسِ، فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ، وَيَدْعُونَ بِدُعَائِهِمْ يَرْجُونَ بَرَكَةَ ذَلِكَ الْيَوْمِ وَطُهْرَتَهُ.
பாடம் : 12 (துல்ஹஜ் 10,11,12,13 ஆகிய) ‘மினா’ நாட்களிலும் (துல்ஹஜ் 9ஆம் நாள் காலையில்) அரஃபாவுக்குப் புறப்பட்டுச் செல்லும்போதும் ‘தக்பீர்’ சொல்வது உமர் (ரலி) அவர்கள், மினாவில் (தங்கி யிருக்கும் நாட்களில்) தமது கூடாரத்தி-ருந்தபடி தக்பீர் கூறுவார்கள். அதைக் கேட்டு பள்ளிவாசலில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். கடைவீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். எந்த அளவுக்கென்றால் தக்பீர் முழக்கத்தால் ‘மினா’வே அதிரும். இப்னு உமர் (ரலி) அவர்கள், மினாவில் இந்த நாட்களில் தக்பீர் கூறுவார்கள். தொழுகைகளுக்குப் பிறகும், தமது படுக்கையில் இருக்கும்போதும், தமது கூடாரத்தில் இருக்கும்போதும், அமரும்போதும், நடக்கும்போதும், அந்த அனைத்து நாட்களிலும் தக்பீர் கூறுவார்கள். மைமூனா (ரலி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். (அப்துல் ம-க் பின் மர்வான் காலத்தில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அபான் பின் உஸ்மான், (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோருக்குப் பின்னால் ‘அய்யாமுத் தஷ்ரீக்’ (11, 12, 13) நாட்களில் பள்ளிவாச-ல் ஆண்களுடன் பெண்களும் தக்பீர் கூறுவார்கள்.
971. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் திரையினுள் இருக்கும் குமரிப் பெண்களையும் புறப் படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளை யிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம்.

பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும்போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் அருள் வளத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்.

அத்தியாயம் : 13
972. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ تُرْكَزُ الْحَرْبَةُ قُدَّامَهُ يَوْمَ الْفِطْرِ وَالنَّحْرِ ثُمَّ يُصَلِّي.
பாடம் : 13 பெருநாளன்று ஈட்டியை(த் தடுப்பாக வைத்துக்கொண்டு அதை) நோக்கித் தொழுதல்
972. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திறந்தவெளித் திட-ல் தொழுகை நடைபெறும்போது) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக) ஒரு ஈட்டி நட்டு வைக்கப்படும். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழு வார்கள்.

அத்தியாயம் : 13
973. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَغْدُو إِلَى الْمُصَلَّى، وَالْعَنَزَةُ بَيْنَ يَدَيْهِ، تُحْمَلُ وَتُنْصَبُ بِالْمُصَلَّى بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا.
பாடம் : 14 பெருநாளன்று (தொழுகைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது) இமாமுக்கு முன்னால் கைத் தடியோ அல்லது ஈட்டியோ எடுத்துச் செல்வது
973. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்களுக்கு முன்னால் (கைப்பிடி உள்ள) கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் திடலில் அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக) நட்டு வைக்கப்படும். அதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்.

அத்தியாயம் : 13
974. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أُمِرْنَا أَنْ نُخْرِجَ، الْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ. وَعَنْ أَيُّوبَ عَنْ حَفْصَةَ بِنَحْوِهِ. وَزَادَ فِي حَدِيثِ حَفْصَةَ قَالَ أَوْ قَالَتِ الْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ، وَيَعْتَزِلْنَ الْحُيَّضُ الْمُصَلَّى.
பாடம் : 15 (பெருநாளில்) தொழும் திடல் நோக்கி மாதவிடாய் ஏற்பட்டவர் கள் உட்பட எல்லாப் பெண்களும் புறப்பட்டுச் செல்வது
974. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பெருநாளில்) திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களை (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், ‘அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள்’ அல்லது ‘ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள்’ “கன்னிப் பெண் களையும் திரைக்குள்ளிருக்கும் பெண் களையும் புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம். ஆனால், மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கிருப்பார்கள்” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 13
975. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ خَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى، فَصَلَّى ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ.
பாடம் : 16 தொழும் திடலுக்குச் சிறுவர் களும் புறப்பட்டுச் செல்வது
975. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (சிறுவனாக இருந்தபோது) ‘நோன்புப் பெருநாளிலோ’ அல்லது ‘ஹஜ்ஜுப் பெருநாளிலோ’ நபி (ஸல்) அவர்களுடன் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்; (மறுமை குறித்து) அவர்களுக்கு நினைவூட்டிப் பேசினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அத்தியாயம் : 13
976. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ زُبَيْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ أَضْحًى إِلَى الْبَقِيعِ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ وَقَالَ "" إِنَّ أَوَّلَ نُسُكِنَا فِي يَوْمِنَا هَذَا أَنْ نَبْدَأَ بِالصَّلاَةِ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ وَافَقَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ ذَلِكَ فَإِنَّمَا هُوَ شَىْءٌ عَجَّلَهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَىْءٍ "". فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ذَبَحْتُ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. قَالَ "" اذْبَحْهَا، وَلاَ تَفِي عَنْ أَحَدٍ بَعْدَكَ "".
பாடம் : 17 பெருநாள் உரையின்போது இமாம் மக்களை முன்னோக்குவது “நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையை முடித்ததும்) மக்களை முன்னோக்கியபடி நின்றார்கள்” என அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.6
976. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று ‘அல்பகீஉ’ எனும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, இரண்டு ரக்அத்கள் (பெருநாள் தொழுகையைத்) தொழுவித்தார்கள்.

பிறகு எங்களை முன்னோக்கியபடி, “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டிய வழிபாடு (யாதெனில்), முத-ல் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று (குர்பானி பிராணிகளை) அறுப்போம். எனவே, யார் இவ்வாறு செய்கிறாரோ அவரே நமது வழிமுறையைப் பின் பற்றியவர் ஆவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே யார் (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக (முன்கூட்டியே) அவசரமாகத் தயார் செய்த ஒரு பொருளாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது (அபூபுர்தா எனப்படும்) ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தொழுகைக்கு முன்பே குர்பானி பிராணியை) நான் அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயதுடைய (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(முத-ல் அறுத்ததற்குப் பதிலாக) இதை நீர் அறுத்துவிடுவீராக! உங்களுக்குப் பிறகு வேறவருக்கும் இது போதுமாகாது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 13
977. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قِيلَ لَهُ أَشَهِدْتَ الْعِيدَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ، وَلَوْلاَ مَكَانِي مِنَ الصِّغَرِ مَا شَهِدْتُهُ، حَتَّى أَتَى الْعَلَمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ فَصَلَّى ثُمَّ خَطَبَ ثُمَّ أَتَى النِّسَاءَ، وَمَعَهُ بِلاَلٌ، فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَرَأَيْتُهُنَّ يُهْوِينَ بِأَيْدِيهِنَّ يَقْذِفْنَهُ فِي ثَوْبِ بِلاَلٍ، ثُمَّ انْطَلَقَ هُوَ وَبِلاَلٌ إِلَى بَيْتِهِ.
பாடம் : 18 தொழுகைத் திட-ல் அமைக்கப்படும் அடையாளம்
977. அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “பெருநாள் தொழுகையில் நபி (ஸல்) அவர் களுடன் நீங்களும் கலந்துகொண்டீர் களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆம். (உறவின் காரணத்தினால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் அவர்களுடன் கலந்துகொண்டிருக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டு) கஸீர் பின் அஸ்ஸல்த் அவர்களின் வீட்டிற்கு அருகே அடையாளம் இருந்த இடத்திற்கு வந்து (பெருநாள் தொழுகை) தொழுவித்து விட்டு, உரை நிகழ்த்தினார்கள்.

பிறகு பிலால் (ரலி) அவர்கள் தம்முட னிருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். அவர்களிடம் (மறுமையை) நினைவூட்டி னார்கள்; தர்மம் செய்யுமாறு அவர்களுக் குக் கட்டளையிட்டார்கள்.

அப்போது பெண்கள் தம் கைகளை நீட்டி பிலால் (ரலி) அவர்கள் (கையில் ஏந்தப்பட்டிருந்த) துணியில் அ(வர்களது தர்மத்)தை இட்டுக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் இல்லம் நோக்கி நடந்தனர்.

அத்தியாயம் : 13
978. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الْفِطْرِ، فَصَلَّى فَبَدَأَ بِالصَّلاَةِ ثُمَّ خَطَبَ، فَلَمَّا فَرَغَ نَزَلَ فَأَتَى النِّسَاءَ، فَذَكَّرَهُنَّ وَهْوَ يَتَوَكَّأُ عَلَى يَدِ بِلاَلٍ وَبِلاَلٌ بَاسِطٌ ثَوْبَهُ، يُلْقِي فِيهِ النِّسَاءُ الصَّدَقَةَ. قُلْتُ لِعَطَاءٍ زَكَاةَ يَوْمِ الْفِطْرِ قَالَ لاَ وَلَكِنْ صَدَقَةً يَتَصَدَّقْنَ حِينَئِذٍ، تُلْقِي فَتَخَهَا وَيُلْقِينَ. قُلْتُ أَتُرَى حَقًّا عَلَى الإِمَامِ ذَلِكَ وَيُذَكِّرُهُنَّ قَالَ إِنَّهُ لَحَقٌّ عَلَيْهِمْ، وَمَا لَهُمْ لاَ يَفْعَلُونَهُ
பாடம் : 19 பெருநாளன்று பெண்களுக்கு இமாம் அறிவுரை கூறல்
978. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து தொழுதார்கள். (பெருநாள்) தொழுகையை முத-ல் நடத்திவிட்டுத்தான் (குத்பா) உரை நிகழ்த்தினார்கள். உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுப் பெண்கள் பகுதிக்குச் சென்று (தம்முடனிருந்த) பிலால் (ரலி) அவர்களின் கைமீது சாய்ந்தபடி பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்திக்கொண்டிருக்க, பெண்கள் (தமது) தர்மத்தை அதில் இட்டுக்கொண்டிருந்தனர்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

இதை எனக்கு அறிவித்த அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் நான், “நோன்புப் பெருநாள் (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மத்தையா (அப்பெண்கள் இட்டனர்)?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், “இல்லை. அப்போது தாமாக (விரும்பி)ச் செய்யும் தர்மப் பொருட் களையே போட்டனர். அவர்கள் தம் (கால் விர-ல் அணிந்திருந்த) மெட்டிகளையும் போடலாயினர். இன்னும் (பிற அணிகலன் களையும்) அவர்கள் போட்டனர்” என்று பதிலளித்தார்கள்.

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “இவ்வாறு (பெண்கள் பகுதிக்குச் சென்று) போதனை செய்வது இன்றைக்கும் இமாம்கள்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர் களா?” என்றும் கேட்டேன். அதற்கு அவர்கள், “நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யாம-ருக்க முடியும்?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 13
979. قَالَ ابْنُ جُرَيْجٍ وَأَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ شَهِدْتُ الْفِطْرَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ـ رضى الله عنهم ـ يُصَلُّونَهَا قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ يُخْطَبُ بَعْدُ، خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجْلِسُ بِيَدِهِ، ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى جَاءَ النِّسَاءَ مَعَهُ بِلاَلٌ فَقَالَ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} الآيَةَ ثُمَّ قَالَ حِينَ فَرَغَ مِنْهَا "" آنْتُنَّ عَلَى ذَلِكَ "". قَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ مِنْهُنَّ لَمْ يُجِبْهُ غَيْرُهَا نَعَمْ. لاَ يَدْرِي حَسَنٌ مَنْ هِيَ. قَالَ "" فَتَصَدَّقْنَ "" فَبَسَطَ بِلاَلٌ ثَوْبَهُ ثُمَّ قَالَ هَلُمَّ لَكُنَّ فِدَاءٌ أَبِي وَأُمِّي، فَيُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ. قَالَ عَبْدُ الرَّزَّاقِ الْفَتَخُ الْخَوَاتِيمُ الْعِظَامُ كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ.
பாடம் : 19 பெருநாளன்று பெண்களுக்கு இமாம் அறிவுரை கூறல்
979. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டுள்ளேன். அவர்கள் அனைவரும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர். அதன் பிறகே அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.

(உரை முடிந்தபின்) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து நகர்ந்து, (மக்களைத்) தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பதைப் போன்று உள்ளது. பிறகு ஆண்(கள் அமர்ந்திருந்த வரிசை)களைப் பிளந்துகொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

அப்போது “நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களா யின்...” என்று தொடங்கும் (60:12ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதி முடித்துவிட்டு, “இந்த உறுதிமொழியில் நீங்கள் (நிலையாக) இருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

ஒரேயொரு பெண்மணி மட்டும், “ஆம் (இருக்கிறோம்)” என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. -அந்தப் பெண்மணி யாரென்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹசன் பின் முஸ்-ம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தர்மம் செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்தியபடி “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், வாருங்கள்!” என்று கூறினார்கள். அப்பெண்கள் மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலாயினர்.7

அத்தியாயம் : 13
980. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، قَالَتْ كُنَّا نَمْنَعُ جَوَارِيَنَا أَنْ يَخْرُجْنَ يَوْمَ الْعِيدِ، فَجَاءَتِ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ فَأَتَيْتُهَا فَحَدَّثَتْ أَنَّ زَوْجَ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً فَكَانَتْ أُخْتُهَا مَعَهُ فِي سِتِّ غَزَوَاتٍ. فَقَالَتْ فَكُنَّا نَقُومُ عَلَى الْمَرْضَى وَنُدَاوِي الْكَلْمَى، فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، عَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ فَقَالَ "" لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا فَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ "". قَالَتْ حَفْصَةُ فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ أَتَيْتُهَا، فَسَأَلْتُهَا أَسَمِعْتِ فِي كَذَا وَكَذَا قَالَتْ نَعَمْ، بِأَبِي ـ وَقَلَّمَا ذَكَرَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم إِلاَّ قَالَتْ بِأَبِي ـ قَالَ "" لِيَخْرُجِ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ ـ أَوْ قَالَ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ شَكَّ أَيُّوبُ ـ وَالْحُيَّضُ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى، وَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ "". قَالَتْ فَقُلْتُ لَهَا آلْحُيَّضُ قَالَتْ نَعَمْ، أَلَيْسَ الْحَائِضُ تَشْهَدُ عَرَفَاتٍ وَتَشْهَدُ كَذَا وَتَشْهَدُ كَذَا
பாடம் : 20 பெருநாள் தொழுகைக்குச் செல்லும் பெண்களுக்குத் துப்பட்டா இல்லாவிட்டால் என்ன செய்வது?
980. ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பெருநாளன்று எங்கள் இளம்பெண்கள் (தொழும் திடலுக்கு) வெளியேறக் கூடாது என்று நாங்கள் தடுத்துவந்தோம். இந் நிலையில், ஒரு பெண்மணி ‘பனூ கலஃப்’ குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா -ர-) வழியாக வந்த ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்:

-என் சகோதரியின் கணவர் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பன்னிரண்டு போர் களில் கலந்துகொண்டார். என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவருடன் இருந்தார்- என் சகோதரி கூறினார்:

(பெண்களாகிய) நாங்கள் (போர்கள் நடை பெறும்போது) காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனிப் போம். நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு பெண்ணுக்குத் துப்பட்டா இல்லாவிட்டால், (பெருநாளன்று தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லாமல் (வீட்டிலேயே) அவள் இருப்பது குற்றமா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஒரு பெண்ணிடம் துப்பட்டா இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டுமே! பெண்களும் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கை யாளர்களின் பிரார்த்தனையிலும் கலந்துகொள்ளட்டுமே!” என்று சொன்னார்கள்.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உம்மு அத்தியா (ரலி) அவர்கள் வந்தபோது நான் அவர்களிடம் சென்று, “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “என் தந்தை (நபியவர்களுக்கு) அர்ப்பணமாகட்டும்! ஆம் (நான் செவியுற்றேன்)” என்று பதிலளித்தார்கள். உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதெல்லாம் “என் தந்தை (நபியவர்களுக்கு) அர்ப் பணமாகட்டும்” என்று கூறாமல் இருந்தது அபூர்வமே.

‘திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண் களும்’ அல்லது ‘கன்னிப் பெண்களும், திரைக்குள்ளிருக்கும் பெண்களும்’ மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லட்டும். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்; நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர் களின் பிரார்த்தனையிலும் அவர்கள் கலந்துகொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள் உம்மு அத்திய்யா (ரலி).

பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்த அந்தப் பெண்மணி தொடர்ந்து கூறுகிறார்:

நான் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்குச் செல்வார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “ஆம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் அரஃபா (மினா, முஸ்த-ஃபா போன்ற) இன்ன இன்ன இடங்களுக்குச் செல்வதில்லையா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அத்தியாயம் : 13
981. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَتْ أُمُّ عَطِيَّةَ أُمِرْنَا أَنْ نَخْرُجَ فَنُخْرِجَ الْحُيَّضَ وَالْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ. قَالَ ابْنُ عَوْنٍ أَوِ الْعَوَاتِقَ ذَوَاتِ الْخُدُورِ، فَأَمَّا الْحُيَّضُ فَيَشْهَدْنَ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَدَعْوَتَهُمْ، وَيَعْتَزِلْنَ مُصَلاَّهُمْ.
பாடம் : 21 தொழுமிடத்தைவிட்டு மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் ஒதுங்கியிருப்பது
981. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பெருநாளில் பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லுமாறு (நபியவர்களால்) கடடளையிடப்பட்டோம். அப்போது மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள், கன்னிப் பெண்கள், திரைக்குள்ளிருக்கும் பெண்கள் ஆகியோரையும் புறப்படச் செய்யும்படி கட்டளையிடப்பட்டோம்.

-இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள், ‘அல்லது திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களையும்’ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்-

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களோ முஸ்-ம்கள் கூடும் இடங்களிலும் அவர் களின் பிரார்த்தனையிலும் கலந்துகொள் வார்கள். ஆனால், அவர்கள் தொழும் இடத்தி-ருந்து ஒதுங்கியிருப்பார்கள்.

அத்தியாயம் : 13