924. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ ذَاتَ لَيْلَةٍ مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي الْمَسْجِدِ، فَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا فَكَثُرَ أَهْلُ الْمَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ الْمَسْجِدُ عَنْ أَهْلِهِ حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الْفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَىَّ مَكَانُكُمْ، لَكِنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ فَتَعْجِزُوا عَنْهَا "". تَابَعَهُ يُونُسُ.
பாடம் : 29 உரை நிகழ்த்தும்போது இறை வனைப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
924. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) ஒரு நாள் நள்ளிரவில் (வீட்டி-ருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளிவாசலில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயி னர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர்.

(மூன்றாம் நாள்) கலையிலும் இது பற்றி மக்கள் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிக மானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர்.

நான்காம் நாள் இரவு வந்தபோது, மக்கள் கூட்டத்தால் பள்ளிவாசல் இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வரவில்லை.) சுப்ஹு தொழுகைக்குத்தான் அவர்கள் வந்தார்கள்.

ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் ‘அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப்பின்...) எனக் கூறிவிட்டு, “நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும், (இத்தொழுகை) உங்கள்மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான், நேற்றிரவு நான் பள்ளிவாசலுக்கு வரவில்லை)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 11
925. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَشِيَّةً بَعْدَ الصَّلاَةِ، فَتَشَهَّدَ وَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ "". تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ وَأَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي حُمَيْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَمَّا بَعْدُ "". تَابَعَهُ الْعَدَنِيُّ عَنْ سُفْيَانَ فِي أَمَّا بَعْدُ.
பாடம் : 29 உரை நிகழ்த்தும்போது இறை வனைப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
925. அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மாலையில் தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதி மொழி கூறி அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின்...) என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 11
926. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ يَقُولُ "" أَمَّا بَعْدُ "". تَابَعَهُ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 29 உரை நிகழ்த்தும்போது இறை வனைப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
926. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுவதற்காக) எழுந்து நின்றார்கள். அப்போது அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி ‘அம்மா பஅத்’ என்று கூறி (உரையைத் துவக்கி)யதை நான் செவியுற்றேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 11
927. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْغَسِيلِ، قَالَ حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمِنْبَرَ وَكَانَ آخِرَ مَجْلِسٍ جَلَسَهُ مُتَعَطِّفًا مِلْحَفَةً عَلَى مَنْكِبَيْهِ، قَدْ عَصَبَ رَأْسَهُ بِعِصَابَةٍ دَسِمَةٍ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" أَيُّهَا النَّاسُ إِلَىَّ "". فَثَابُوا إِلَيْهِ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَإِنَّ هَذَا الْحَىَّ مِنَ الأَنْصَارِ يَقِلُّونَ، وَيَكْثُرُ النَّاسُ، فَمَنْ وَلِيَ شَيْئًا مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَاسْتَطَاعَ أَنْ يَضُرَّ فِيهِ أَحَدًا أَوْ يَنْفَعَ فِيهِ أَحَدًا، فَلْيَقْبَلْ مِنْ مُحْسِنِهِمْ، وَيَتَجَاوَزْ عَنْ مُسِيِّهِمْ "".
பாடம் : 29 உரை நிகழ்த்தும்போது இறை வனைப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
927. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தமது இறுதிக் காலத்தில்) சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீது ஏறி (அமர்ந்து)கொண்டார்கள். அதுவே அவர்கள் அமர்ந்த இறுதி அமர்வாக அமைந்தது -அப்போது அவர்கள் தம் தோள்கள்மீது ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தார்கள்; தலையில் கறுப்புத் துணியொன்றால் கட்டுப் போட்டிருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “மக்களே! என்னை நெருங்கி வாருங்கள்” என்று கூறியதும், மக்கள் அவர்கள் அருகில் திரண்டனர்.

பிறகு ‘அம்மா பஅத்’ (இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின்...) (இதோ) இந்த அன்சாரிக் கூட்டத்தார் குறைந்துவிடுவார் கள்; (இஸ்லாத்தில் இணையும்) மக்கள், (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். முஹம்மதின் சமுதாயத்தில் ஓர் அதிகாரப் பொறுப்பை ஏற்பவர், (தமது பொறுப்பைப் பயன்படுத்தி) ஒருவருக்கு நன்மை புரியவோ அல்லது யாரேனும் ஒருவருக் குத் தீங்கு செய்யவோ சக்தி பெற்றால், அன்சாரிகளில் நன்மை புரிகின்றவரின் நன்மையை ஏற்றுக்கொள்ளட்டும்; அவர் களில் தவறிழைப்பவரை (பெருந்தன்மை யோடு) மன்னித்துவிடட்டும்!” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 11
928. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ خُطْبَتَيْنِ يَقْعُدُ بَيْنَهُمَا.
பாடம் : 30 வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சொற்பொழிவுகளுக் கிடையே அமர்வது
928. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை ஜுமுஆவில்) இரண்டு சொற்பொழிவு (‘குத்பா’க்)கள் நிகழ்த்துவார்கள்; அவ்விரண்டுக்குமிடையே அமர்வார்கள்.

அத்தியாயம் : 11
929. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ، وَقَفَتِ الْمَلاَئِكَةُ عَلَى باب الْمَسْجِدِ يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً، ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً، ثُمَّ كَبْشًا، ثُمَّ دَجَاجَةً، ثُمَّ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ، وَيَسْتَمِعُونَ الذِّكْرَ "".
பாடம் : 31 சொற்பொழிவைச் செவிதாழ்த்திக் கேட்பது
929. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால், வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாச-ன் நுழைவாயி-ல் நின்று கொண்டு, முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர் களை) எழுதிப் பதிவு செய்துகொண்டி ருப்பார்கள்.

நேரத்தோடு (ஜுமுஆவுக்கு) வருப வரது நிலை ஓர் ஒட்டகத்தை ‘குர்பானி’ கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டை ‘குர்பானி’ கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றோர் ஆவர்.

இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால், வானவர்கள் தங்கள் (பதிவு) ஏடுகளைச் சுருட்டி (வைத்து)விட்டு (அவரது) உரையைச் செவிதாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
930. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ "" أَصَلَّيْتَ يَا فُلاَنُ "". قَالَ لاَ. قَالَ "" قُمْ فَارْكَعْ "".
பாடம் : 32 இமாம் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது யாரேனும் ஒருவர் (பள்ளிவாசலுக்குள்) வரக் கண்டால், அவரை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு பணித்தல்
930. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மக்களுக்கு உரையாற்றிக்கொண்டி ருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே! தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இல்லை’ என்றார். “எழுந்து, (இரண்டு ரக்அத்கள்) தொழுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.12

அத்தியாயம் : 11
931. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، قَالَ دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ "" أَصَلَّيْتَ "". قَالَ لاَ. قَالَ "" فَصَلِّ رَكْعَتَيْنِ "".
பாடம் : 33 இமாம் சொற்பொழிவு நிகழ்த் திக்கொண்டிருக்கும்போது (பள்ளிவாசலுக்குள்) வருபவர் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவது
931. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), “நீர் தொழுது விட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இல்லை’ என்றார். “(எழுந்து) இரண்டு ரக்அத்கள் (சுருக்கமாகத்) தொழுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 11
932. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ،. وَعَنْ يُونُسَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَ الْكُرَاعُ، وَهَلَكَ الشَّاءُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا. فَمَدَّ يَدَيْهِ وَدَعَا.
பாடம் : 34 சொற்பொழிவின்போது (இமாம் தம்) கைகளை உயர்த்துவது
932. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது ஒரு (கிராமப்புற) மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்துவிட்டன; ஆடுகளும் அழிந்துவிட்டன. ஆகவே, எங்களுக்கு மழை பொழிய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை ஏந்திப் பிரார்த்தனை புரிந் தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 11
933. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَمْرٍو، قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فِي يَوْمِ جُمُعَةٍ قَامَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ، فَادْعُ اللَّهَ لَنَا. فَرَفَعَ يَدَيْهِ، وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا وَضَعَهَا حَتَّى ثَارَ السَّحَابُ أَمْثَالَ الْجِبَالِ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ صلى الله عليه وسلم فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ، وَمِنَ الْغَدِ، وَبَعْدَ الْغَدِ وَالَّذِي يَلِيهِ، حَتَّى الْجُمُعَةِ الأُخْرَى، وَقَامَ ذَلِكَ الأَعْرَابِيُّ ـ أَوْ قَالَ غَيْرُهُ ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ، فَادْعُ اللَّهَ لَنَا. فَرَفَعَ يَدَيْهِ، فَقَالَ "" اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا "". فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّحَابِ إِلاَّ انْفَرَجَتْ، وَصَارَتِ الْمَدِينَةُ مِثْلَ الْجَوْبَةِ، وَسَالَ الْوَادِي قَنَاةُ شَهْرًا، وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلاَّ حَدَّثَ بِالْجَوْدِ.
பாடம் : 35 வெள்ளிக்கிழமை சொற்பொழி வின் இடையில் மழை வேண் டிப் பிரார்த்திப்பது
933. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு முறை பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக் கிழமை அன்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக்கொண்டி ருந்தபோது, ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக் காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரார்த்திக்க) தம் கைகளை ஏந்தினார்கள்.- அப்போது எந்த மழை மேகத்தையும் வானத்தில் நாங்கள் காணவில்லை- என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் தமது கையைக் கீழே விடுவதற்கு முன்பாகவே மலைகளைப் போன்ற மேகங்கள் பரவத் தொடங்கின. நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவு மேடையைவிட்டு இறங்கியிருக்கவில்லை. மழை பெய்து அவர்களது தாடியில் வழிந்ததை நான் பார்த்தேன். எங்களுக்கு அன்றைய தினமும் மறுதினமும் அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த ஜுமுஆ வரையிலும் மழை பொழிந்தது.

(அடுத்த ஜுமுஆவில்) ‘அதே கிராமவாசி’ அல்லது ‘வேறொருவர்’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்துகொண்டிருக்கின்றன; செல்வங்கள் வெள்ள நீரில் மூழ்குகின்றன. எனவே, எங்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங் கள்” என்றார்.

அப்போதும் நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவாயாக! எங்களுக்கெதிராக (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.

மேகத்தின் எந்தப் பகுதியை நோக்கி நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார் களோ அம்மேகம் விலகிச் செல்லாமல் இருக்கவில்லை. மதீனா(வைச் சூழ்ந்திருந்த மேகம் விலகியதால் வானில்) வட்டமான பள்ளம் ஏற்பட்டதைப் போன்று மாறியது. ‘கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியி-ருந்து யார் வந்தாலும் இந்த அடை மழை பற்றிப் பேசாமால் இருக்கவில்லை.

அத்தியாயம் : 11
934. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ. وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ "".
பாடம் : 36 வெள்ளிக்கிழமை இமாம் சொற் பொழிவு நிகழ்த்தும்போது மௌனமாக இருப்பது ஒருவர் தமக்குப் பக்கத்தி-ருப்பவரிடம், ‘மௌனமாக இரு’ என்று கூறினாலும் அவர் வீண் பேச்சே பேசுகிறார். இமாம் உரையாற்றும்போது வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
934. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றும்போது உமக்கு அருகிலிப்பவரிடம் நீ ‘மௌனமாக இரு’ என்று கூறினாலும், நீர் வீண்பேச்சு பேசியவர் ஆவீர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
935. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ "" فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ، وَهْوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ "". وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا.
பாடம் : 37 வெள்ளிக்கிழமை அன்று (துஆ ஏற்கப்படுவதற்கு) உள்ள நேரம்
935. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில், “வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு

முஸ்-ம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ் விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்ப தில்லை.” என்று கூறினார்கள்.

(அந்த நேரத்தைப் பற்றிக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதைத் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்.

அத்தியாயம் : 11
936. حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، قَالَ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَقْبَلَتْ عِيرٌ تَحْمِلُ طَعَامًا، فَالْتَفَتُوا إِلَيْهَا حَتَّى مَا بَقِيَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ اثْنَا عَشَرَ رَجُلاً، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا}
பாடம் : 38 ஜுமுஆ தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது மக்கள் சிலர் இமாமைவிட்டு விலகிப் போனால், இமாமின் தொழுகை யும் எஞ்சிய மக்களின் தொழுகையும் நிறைவேறும்.
936. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆ) தொழுதுகொண்டிருந்தோம். அப்போது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டக (வணிக)க் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை.

இந்த நேரத்தில்தான், “அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக்கூடியதையோ கண்டால், உம்மை நிற்க விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்” (62:11) என்ற இறைவசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 11
937. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ الْعِشَاءِ رَكْعَتَيْنِ وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّي رَكْعَتَيْنِ.
பாடம் : 39 ஜுமுஆ தொழுகைக்குப் பின் பும் முன்பும் உள்ள (சுன்னத் தான) தொழுகை
937. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்களும் அதற்குப்பின் இரண்டு ரக்அத்களும், மஃக்ரிப் தொழுகைக்குப் பின்பு தமது இல்லத்தில் இரண்டு ரக்அத் களும் தொழுவார்கள்; இஷா தொழுகைக் குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஜுமுஆ தொழுகைக்குப்பின் தமது இல்லத்திற்குத் திரும்பிச் செல்லாத வரை தொழமாட்டார்கள். (இல்லத்திற்குச் சென்றதும்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.13

அத்தியாயம் : 11
938. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا، فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ، ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا، فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ، وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلاَةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا، فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ، وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ.
பாடம் : 40 (“ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டதும், (பள்ளிவாசலி-ருந்து வெளியேறி) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்” (62:10) எனும் இறைவசனம்.
938. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாய்க்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டு தான் அந்த உணவில் இறைச்சி போன்று அமையும்.

நாங்கள் ஜுமுஆ தொழுகை தொழுது விட்டுத் திரும்பி வந்து அவருக்கு ‘சலாம்’ சொல்வோம். அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவரது அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக் கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்.


அத்தியாயம் : 11
939. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، بِهَذَا وَقَالَ مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ.
பாடம் : 40 (“ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டதும், (பள்ளிவாசலி-ருந்து வெளியேறி) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்” (62:10) எனும் இறைவசனம்.
939. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் காலை உணவு அருந்துவோம்; மதிய ஓய்வு மேற்கொள்வோம்.

அத்தியாயம் : 11
940. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُقْبَةَ الشَّيْبَانِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كُنَّا نُبَكِّرُ إِلَى الْجُمُعَةِ ثُمَّ نَقِيلُ.
பாடம் : 41 ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு மதிய ஓய்வு மேற்கொள்வது
940. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஜுமுஆ தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்திலேயே சென்று விடுவோம். அதற்குப் பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம்.


அத்தியாயம் : 11
941. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُمُعَةَ ثُمَّ تَكُونُ الْقَائِلَةُ.
பாடம் : 41 ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு மதிய ஓய்வு மேற்கொள்வது
941. சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆ தொழுகை தொழுவோம். அதன் பிறகே மதிய ஓய்வு நிகழும்.

அத்தியாயம் : 11

942. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَأَلْتُهُ هَلْ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْنِي صَلاَةَ الْخَوْفِ قَالَ أَخْبَرَنِي سَالِمٌ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ نَجْدٍ، فَوَازَيْنَا الْعَدُوَّ فَصَافَفْنَا لَهُمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي لَنَا فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ تُصَلِّي، وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ وَرَكَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَنْ مَعَهُ، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي لَمْ تُصَلِّ، فَجَاءُوا، فَرَكَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِهِمْ رَكْعَةً، وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ.
பாடம் : 1 அச்சமான நேரத்தில் தொழு வது உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: நீங்கள் பூமியில் பயணம் செய்யும் போது இறைமறுப்பாளர்கள் உங்களைத் தாக்குவார்கள் என நீங்கள் அஞ்சினால், (அப்போது) தொழுகையைச் சுருக்கித் தொழுவதால் உங்கள்மீது தவறேதுமில்லை. இறைமறுப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான எதிரிகளாகவே இருக்கிறார்கள். (4:101) (நபியே!) நீர் (போர்க்களத்தில்) அவர்களுடனிருந்து, அவர்களுக்கு நீர் தொழுகை நடத்தும்போது, அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உம்முடன் (தொழுகை யில்) நிற்கட்டும். அவர்கள் சஜ்தா செய்து (ஒரு ரக்அத்தை முடித்து)விட்டால் அவர்கள் உங்களுக்கு அப்பால் (பாதுகாப்பில்) இருக்கட்டும். பின்னர் தொழாமலிருக்கும் மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். அவர்களும் தம் ஆயுதங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துக்கொள்ளட் டும். (ஏனெனில்,) நீங்கள் ஆயுதங்களிலும் உங்கள் தளவாடங்களிலும் கவனக் குறைவாக இருக்கும்போது, உங்கள்மீது திடீர்த் தாக்குதல் நடத்த வேண்டும் என இறைமறுப்பாளர்கள் விரும்புகின்றனர். மழையால் உங்களுக்கு இடையூறு ஏற்பட்டாலோ, நீங்கள் நோயாளிகளாக இருந்தாலோ உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவது உங்கள்மீது குற்றமாகாது. எனினும், உங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நீங்கள் (எப்போதும்) மேற்கொள்ளுங்கள். இறைமறுப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை அல்லாஹ் தயார் செய்துவைத்திருக்கின்றான். (4:102)
942. ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் அச்சநேரத் தொழுகை (ஸலாத்துல் ஃகவ்ஃப்) தொழுதுள்ளார்களா?” என்று கேட்டேன். அதற்கு சா-ம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த (பின்வரும்) ஹதீஸை ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (‘தாத்துர் ரிகாஉ’ எனும்) போருக்காக நஜ்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றேன். அங்கு நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணி வகுத்து நின்றோம். (போர் நடக்காவிட்டா லும் பீதி நிலவிக்கொண்டிருந்த அந்தப் போர் முனையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவிப்பதற்காக நின்றார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) நின்றனர். மற்றோர் அணியினர் எதிரிகளை நோக்கி நின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தம்மோடு இருந்த வர்களுடன் ருகூஉ செய்து இரு சஜ்தாக் கள் செய்தார்கள். பிறகு (நபியவர்களுடன் தொழுத) அந்த அணியினர், தொழாமல் (எதிரிகளைக் கண்காணித்துக்கொண்டு) இருந்த மற்றோர் அணியினரின் இடத்துக் குச் சென்றுவிட்டனர். அந்த அணியினர் வந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அணியினருடன் ஒரு ருகூஉம் இரு சஜ்தாக்களும் செய்தார்கள்; பிறகு சலாம் கொடுத்தார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து ஒரு ருகூஉம் இரண்டு சஜ்தாக்களும் செய்து (மீதியிருந்த ஒரு ரக்அத்தைத்) தமக்காக நிறைவேற்றிக்கொண்டனர்.

அத்தியாயம் : 12
943. حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، نَحْوًا مِنْ قَوْلِ مُجَاهِدٍ إِذَا اخْتَلَطُوا قِيَامًا. وَزَادَ ابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" وَإِنْ كَانُوا أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلْيُصَلُّوا قِيَامًا وَرُكْبَانًا "".
பாடம் : 2 நின்றுகொண்டும் ஊர்தியில் அமர்ந்துகொண்டும் அச்சநேரத் தொழுகையை நிறைவேற்றல் (2:239ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘ரிஜால்’ எனும் சொல் ‘ராஜில்’ என்பதன் பன்மையாகும். அந்த) ‘ராஜில்’ எனும் சொல்லுக்கு ‘நிற்பவன்’ என்பது பொருளாகும்.2
943. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“முஸ்லிம் வீரர்கள் (தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால், நின்றவர்களாகவே (சைகை செய்து) தொழுதுகொள்வார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்களின் கூற் றைப் போன்றே இப்னு உமர் (ரலி) அவர் களின் மேற்கண்ட கூற்றும் அமைந்துள் ளது. ஆனால், இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கூடுத லாகப் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்:

எதிரிகள் இதைவிடவும் அதிகமாக இருந்தால் நின்றுகொண்டோ ஊர்தியில் அமர்ந்துகொண்டோ அவர்கள் தொழுது கொள்ளட்டும்.

அத்தியாயம் : 12