904. حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ.
பாடம் : 16
ஜுமுஆ தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும் (ஆரம்பிக்கிறது).
இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர்
(ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
904. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி சாயும் நேரத்தில் ஜுமுஆ தொழுகை தொழுவிப்பார்கள்.
அத்தியாயம் : 11

905. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ، وَنَقِيلُ بَعْدَ الْجُمُعَةِ.
பாடம் : 16
ஜுமுஆ தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும் (ஆரம்பிக்கிறது).
இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர்
(ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
905. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜுமுஆ தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுது விடுவோம். ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம்.

906. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو خَلْدَةَ ـ هُوَ خَالِدُ بْنُ دِينَارٍ ـ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اشْتَدَّ الْبَرْدُ بَكَّرَ بِالصَّلاَةِ، وَإِذَا اشْتَدَّ الْحَرُّ أَبْرَدَ بِالصَّلاَةِ، يَعْنِي الْجُمُعَةَ. قَالَ يُونُسُ بْنُ بُكَيْرٍ أَخْبَرَنَا أَبُو خَلْدَةَ فَقَالَ بِالصَّلاَةِ، وَلَمْ يَذْكُرِ الْجُمُعَةَ. وَقَالَ بِشْرُ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا أَبُو خَلْدَةَ قَالَ صَلَّى بِنَا أَمِيرٌ الْجُمُعَةَ ثُمَّ قَالَ لأَنَسٍ ـ رضى الله عنه ـ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ
பாடம் 17
வெள்ளிக்கிழமை வெப்பம் கடுமையாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)
906. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும்போது தொழுகையை -அதாவது ஜுமுஆ தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும்போது தொழு கையை -அதாவது ஜுமுஆ தொழு கையை- வெப்பம் தணிந்தபின் தொழு வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் பின் புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஜுமுஆ தொழுகை என்ற குறிப்பு இல்லாமல் பொது வாக) ‘தொழுகை’ என்றே இடம்பெற் றுள்ளது.
பிஷ்ர் பின் ஸாபித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “எங்களுக்கு (ஆட்சித்) தலைர் ஜுமுஆ தொழுவித்தார். (வழக்கம் போல நீண்ட சொற்பொழிவும் நெடு நேரத் தொழுகையும் நடந்தது.) பிறகு அவர் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு லுஹ்ர் தொழுகை தொழுவார்கள்?’ என்று கேட்டார். (அப்போதுதான் மேற்கண்டவாறு அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்)” என்று அபூகல்தா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

907. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا عَبَايَةُ بْنُ رِفَاعَةَ، قَالَ أَدْرَكَنِي أَبُو عَبْسٍ وَأَنَا أَذْهَبُ، إِلَى الْجُمُعَةِ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ "".
பாடம் : 18
ஜுமுஆ தொழுகைக்கு நடந்துசெல்வது
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர விரைந்துசெல்லுங்கள். (62:9)
(இதில் ‘விரைந்து செல்லல்’ என்பதைக் குறிக்கும் ‘சஃயு’ எனும் சொல்லுக்கு ஓடிச் செல்லல் என்பது பொருளன்று.) இங்கு ‘சஃயு’ என்பது, தொழுகைக்குத் தயாராகிப் புறப்படுவதைக் குறிக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளனர். ‘மறுமைக்காக உழைத்தல்’ எனும் பொருளில் இச்சொல் வேறொரு வசனத்தில் (17:19) பயன்படுத்தப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.
(இதனால்தான், ஜுமுஆ தொழுகை யின் அழைப்பைக் கேட்டபின் தொழு கைக்குத் தயாராகாமல்) அந்த நேரத்தில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்ட தாகும் (ஹராம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(அந்த நேரத்தில்) எல்லாத் தொழில்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால், ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும்.
907. அபாயா பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜுமுஆ தொழுகைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அபூஅப்ஸ் (அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர்-ர-) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களில் புழுதி படிகின்றதோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று சொன்னார்கள்.

908. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَعِيدٍ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ عَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا "".
பாடம் : 18
ஜுமுஆ தொழுகைக்கு நடந்துசெல்வது
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர விரைந்துசெல்லுங்கள். (62:9)
(இதில் ‘விரைந்து செல்லல்’ என்பதைக் குறிக்கும் ‘சஃயு’ எனும் சொல்லுக்கு ஓடிச் செல்லல் என்பது பொருளன்று.) இங்கு ‘சஃயு’ என்பது, தொழுகைக்குத் தயாராகிப் புறப்படுவதைக் குறிக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளனர். ‘மறுமைக்காக உழைத்தல்’ எனும் பொருளில் இச்சொல் வேறொரு வசனத்தில் (17:19) பயன்படுத்தப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.
(இதனால்தான், ஜுமுஆ தொழுகை யின் அழைப்பைக் கேட்டபின் தொழு கைக்குத் தயாராகாமல்) அந்த நேரத்தில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்ட தாகும் (ஹராம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(அந்த நேரத்தில்) எல்லாத் தொழில்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால், ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும்.
908. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் ஓடிவராதீர்கள்; நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பிறகு எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
908. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் ஓடிவராதீர்கள்; நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பிறகு எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
909. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنِي أَبُو قُتَيْبَةَ، قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ـ لاَ أَعْلَمُهُ إِلاَّ عَنْ أَبِيهِ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ "".
பாடம் : 18
ஜுமுஆ தொழுகைக்கு நடந்துசெல்வது
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர விரைந்துசெல்லுங்கள். (62:9)
(இதில் ‘விரைந்து செல்லல்’ என்பதைக் குறிக்கும் ‘சஃயு’ எனும் சொல்லுக்கு ஓடிச் செல்லல் என்பது பொருளன்று.) இங்கு ‘சஃயு’ என்பது, தொழுகைக்குத் தயாராகிப் புறப்படுவதைக் குறிக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளனர். ‘மறுமைக்காக உழைத்தல்’ எனும் பொருளில் இச்சொல் வேறொரு வசனத்தில் (17:19) பயன்படுத்தப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.
(இதனால்தான், ஜுமுஆ தொழுகை யின் அழைப்பைக் கேட்டபின் தொழு கைக்குத் தயாராகாமல்) அந்த நேரத்தில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்ட தாகும் (ஹராம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(அந்த நேரத்தில்) எல்லாத் தொழில்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால், ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும்.
909. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் அவசரப்படாதீர்கள்.) என்னை நீங்கள் காணாதவரை எழாதீர்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

910. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ وَدِيعَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ، ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ، فَصَلَّى مَا كُتِبَ لَهُ، ثُمَّ إِذَا خَرَجَ الإِمَامُ أَنْصَتَ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى "".
பாடம் : 19
வெள்ளிக்கிழமை அன்று (பள்ளிவாசலுக்குள் சேர்ந்து அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்கக் கூடாது.
910. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு, தம்மால் இயன்ற வரை தூய்மைப் படுத்திக்கொண்டு, பிறகு எண்ணெய்யோ நறுமணமோ பூசிக்கொள்கிறார். பிறகு அவர் (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து, (சேர்ந்து அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும் (அவர் ஆற்றும் உரையைச் செவியுற) மௌனம் காக்கிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

911. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ. قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا.
பாடம் : 20
வெள்ளிக்கிழமை (பள்ளிவாச லுக்கு வரும்) ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு, அந்த இடத்தில் தாம் அமரக் கூடாது.
911. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் சகோதரரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து எழுப்பி விட்டு, அந்த இடத்தில் தாம் அமர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், “ஜுமுஆவின்போதா (இப்படிச் செய்யக் கூடாது)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஜுமுஆவிலும், ஜுமுஆ அல்லாத மற்ற நேரங்களிலும் (அப்படித்)தான்” என்று கூறினார்கள்.

912. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ فَلَمَّا كَانَ عُثْمَانُ ـ رضى الله عنه ـ وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ.
பாடம் : 21
வெள்ளிக்கிழமை தொழுகை அறிவிப்பு
912. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் வெள்ளிக்கிழமை அன்று இமாம் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்ததும் முதலாவது பாங்கு சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்தபோது, ‘அஸ்ஸவ்ரா’ எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.10

913. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ الَّذِي، زَادَ التَّأْذِينَ الثَّالِثَ يَوْمَ الْجُمُعَةِ عُثْمَانُ بْنُ عَفَّانَ ـ رضى الله عنه ـ حِينَ كَثُرَ أَهْلُ الْمَدِينَةِ، وَلَمْ يَكُنْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مُؤَذِّنٌ غَيْرَ وَاحِدٍ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الْجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ، يَعْنِي عَلَى الْمِنْبَرِ.
பாடம் 22
வெள்ளிக்கிழமை அன்று ஒரே யொரு தொழுகை அறிவிப் பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்வது
913. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை அன்று மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத் தியவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களே ஆவார்கள்.- மதீனாவாசி களின் எண்ணிக்கை அதிகமானபோது (இவ்வாறு செய்தார்கள்.)- (ஜுமுஆ நாளில் பாங்கு சொல்ல) நபி (ஸல்) அவர்களிடம் ஒரேயொரு தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) மட்டுமே இருந்தார்.
(ஆரம்பக் காலத்தில்) இமாம் அமரும்போதுதான்- அதாவது சொற்பொழிவு மேடையின் மீது அமரும்போதுதான்- ஜுமுஆ நாளில் பாங்கு சொல்லப்பட்டு வந்தது.11

914. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ،، وَهُوَ جَالِسٌ عَلَى الْمِنْبَرِ، أَذَّنَ الْمُؤَذِّنُ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. قَالَ مُعَاوِيَةُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ مُعَاوِيَةُ وَأَنَا. فَقَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَقَالَ مُعَاوِيَةُ وَأَنَا. فَلَمَّا أَنْ قَضَى التَّأْذِينَ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى هَذَا الْمَجْلِسِ حِينَ أَذَّنَ الْمُؤَذِّنُ يَقُولُ مَا سَمِعْتُمْ مِنِّي مِنْ مَقَالَتِي.
பாடம் : 23
பாங்கைக் கேட்கும்போது சொற்பொழிவு மேடையில் அமர்ந்துள்ள இமாமும் பதில் கூற வேண்டும்.
914. அபூஉமாமா (அஸ்அத்) பின் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்திருந்தபோது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்தார்.
அவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறியதும், முஆவியா (ரலி) அவர்களும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று (பதில்) சொன்னார்கள்.
தொழுகை அறிவிப்பாளர் ‘அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன்) எனக் கூறியதும், ‘நானும் அவ்வாறே கூறுகிறேன்’ (வ அன) என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அவர் பாங்கு சொல்- முடித்ததும் “மக்களே! தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னபோது இதே இடத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதைப் போன்றே (பாங்கிற்குப் பதில்) சொல்லிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன்” என்றார்கள்.

915. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، أَخْبَرَهُ أَنَّ التَّأْذِينَ الثَّانِيَ يَوْمَ الْجُمُعَةِ أَمَرَ بِهِ عُثْمَانُ حِينَ كَثُرَ أَهْلُ الْمَسْجِدِ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الْجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ.
பாடம் : 24
(வெள்ளிக்கிழமை) பாங்கு சொல்லும்போது இமாம் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்திருப்பது
915. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை அன்று மற்றொரு தொழுகை அறிவிப்புச் செய்யும்படி உஸ்மான் (ரலி) அவர்களே கட்டளையிட் டார்கள்.- பள்ளிவாச-ல் மக்கள் அதிகரித்தபோதே (இவ்வாறு செய்தார்கள்). -(அதற்கு முன்னர்) இமாம் (சொற்பொழிவு மேடைமீது) அமரும்போது சொல்லும் பாங்கு மட்டுமே (நடைமுறையில்) இருந்தது.

916. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ إِنَّ الأَذَانَ يَوْمَ الْجُمُعَةِ كَانَ أَوَّلُهُ حِينَ يَجْلِسُ الإِمَامُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ فَلَمَّا كَانَ فِي خِلاَفَةِ عُثْمَانَ ـ رضى الله عنه ـ وَكَثُرُوا، أَمَرَ عُثْمَانُ يَوْمَ الْجُمُعَةِ بِالأَذَانِ الثَّالِثِ، فَأُذِّنَ بِهِ عَلَى الزَّوْرَاءِ، فَثَبَتَ الأَمْرُ عَلَى ذَلِكَ.
பாடம் : 25
சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்த விரும்பும்போது பாங்கு சொல்வது
916. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு), அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்குமுன்) சொற்பொழிவு மேடைமீது அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை உயர்ந்தபோது, உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட்டார்கள்.
ஆகவே, (மதீனாவின் கடைவீதியிலுள்ள) ‘அஸ்ஸவ்ரா’ எனுமிடத்தில் தொழுகை அறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு ஒரு இகாமத் எனும்) அந்த நடைமுறை நிலைபெற்றுவிட்டது.

917. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ الإِسْكَنْدَرَانِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ، أَنَّ رِجَالاً، أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مِمَّا هُوَ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ، وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى فُلاَنَةَ ـ امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ ـ "" مُرِي غُلاَمَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ "". فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا، فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَا هُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَيْهَا، وَكَبَّرَ وَهْوَ عَلَيْهَا، ثُمَّ رَكَعَ وَهْوَ عَلَيْهَا، ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعَلَّمُوا صَلاَتِي "".
பாடம் : 26
சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரை நிகழ்த்துவது
நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்றபடி) உரையாற்றி னார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
917. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(நபி (ஸல்) அவர்களது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது என்பது தொடர் பாகச் சர்ச்சை செய்தனர்.
அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அது எதனால் செய்யப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். அது வைக்கப்பட்ட முதல் நாளிலேயே நான் அதைப் பார்த்திருக்கி றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன்மீது அமர்ந்த முதல் நாளிலேயே (நான் அதைப் பார்த்திருக்கி றேன்)” என்று கூறிவிட்டு (அது பற்றிய முழுத் தகவலையும் பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்ன பெண்மணியிடம், -அப்பெண்மணியின் பெயரை சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்- ஆளனுப்பி, “நான் மக்களிடையே உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கு (ஏற்ற வகையில்) எனக்காக (சொற்பொழிவு மேடைக்குத் தேவையான) மரச்சட்டங்களைச் செய்து தரும்படி தச்சு வேலை தெரிந்த உன் அடிமைக்குக் கட்டளையிடுவாயாக!” என்று சொல்-யனுப்பினார்கள்.
அவ்வாறே அப்பெண்மணி அந்த அடிமைக்குக் கட்டளையிட, அவர் (மதீனா அருகிலுள்ள) ‘அல்ஃகாபா’ வனத்திலிருந்த ஒரு வகை சவுக்கு மரத்தினால் அதைச் செய்து அப்பெண்மணியிடம் கொண்டு வந்தார். அதை அப்பெண்மணி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, இதோ இந்த இடத்தில் அது வைக்கப்பட்டது.
அதன் பிறகு நான் பார்த்தேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன்மீது நின்று தொழு(வித்)தார்கள். (அதாவது) அதன் மீது நின்று தக்பீர் கூறினார்கள்; அதன் மீது ருகூஉ செய்தார்கள். பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாக்கில் இறங்கி அந்த மேடையின் அடிக்கட்டைப் பகுதியில் சஜ்தா செய்தார் கள். பிறகு பழையபடி (மேடைக்கே) சென்றார்கள்.
தொழுது முடித்ததும், மக்களை முன் னோக்கி, “மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் எனது தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்” என்று குறிப்பிட்டார்கள்.

918. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَنَسٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ جِذْعٌ يَقُومُ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا وُضِعَ لَهُ الْمِنْبَرُ سَمِعْنَا لِلْجِذْعِ مِثْلَ أَصْوَاتِ الْعِشَارِ حَتَّى نَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ. قَالَ سُلَيْمَانُ عَنْ يَحْيَى أَخْبَرَنِي حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ أَنَّهُ سَمِعَ جَابِرًا.
பாடம் : 26
சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரை நிகழ்த்துவது
நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்றபடி) உரையாற்றி னார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
918. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உரையாற்றும்போது) நின்றுகொள்வதற்காக (ஆரம்பத்தில்) பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்றிருந்தது. நபி (ஸல்) அவர்களுக்காகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து வைக்கப்பட்டபோது, அந்தக் கட்டையி-ருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் முனகல் சப்தத்தைப் போன்று நாங்கள் செவியுற்றோம்.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (மிம்பரி-ருந்து) இறங்கி (அதை அமைதிப்படுத்து வதற்காக) அதன் மீது தமது கையை வைத்தார்கள். (அதுவரையில் அந்தச் சப்தம் வந்துகொண்டேயிருந்தது.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

919. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ فَقَالَ "" مَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ "".
பாடம் : 26
சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரை நிகழ்த்துவது
நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்றபடி) உரையாற்றி னார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
919. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் நின்றபடி, “ஜுமுஆ தொழு கைக்கு வருபவர் குளித்துக்கொள்ளட்டும்” என்று கூறியதை நான் செவியுற்றேன்.

920. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَقْعُدُ ثُمَّ يَقُومُ، كَمَا تَفْعَلُونَ الآنَ.
பாடம் : 27
நின்றுகொண்டு சொற்பொழி வாற்றுவது
நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவில்) நின்றுகொண்டு உரையாற்றினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
920. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நீங்கள் இப்போது செய்துவருவதைப் போன்றே, நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்துவிட்டு (மீண்டும்) எழுவார்கள்.

921. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَسَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى الْمِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ.
பாடம் : 28
இமாம் சொற்பொழிவாற்றும் போது, அவர் மக்களையும் மக்கள் அவரையும் முன் னோக்க வேண்டும்.
இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் இமாமை முன்னோக்குபவர் களாக இருந்தனர்.
921. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.

922. وَقَالَ مَحْمُودٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ أَخْبَرَتْنِي فَاطِمَةُ بِنْتُ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَالنَّاسُ يُصَلُّونَ قُلْتُ مَا شَأْنُ النَّاسِ فَأَشَارَتْ بِرَأْسِهَا إِلَى السَّمَاءِ. فَقُلْتُ آيَةٌ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَىْ نَعَمْ. قَالَتْ فَأَطَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جِدًّا حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ وَإِلَى جَنْبِي قِرْبَةٌ فِيهَا مَاءٌ فَفَتَحْتُهَا فَجَعَلْتُ أَصُبُّ مِنْهَا عَلَى رَأْسِي، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَخَطَبَ النَّاسَ، وَحَمِدَ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ "". قَالَتْ وَلَغِطَ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ، فَانْكَفَأْتُ إِلَيْهِنَّ لأُسَكِّتَهُنَّ فَقُلْتُ لِعَائِشَةَ مَا قَالَ قَالَتْ قَالَ "" مَا مِنْ شَىْءٍ لَمْ أَكُنْ أُرِيتُهُ إِلاَّ قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ، وَإِنَّهُ قَدْ أُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مِثْلَ ـ أَوْ قَرِيبَ مِنْ ـ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، يُؤْتَى أَحَدُكُمْ، فَيُقَالُ لَهُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوْ قَالَ الْمُوقِنُ شَكَّ هِشَامٌ ـ فَيَقُولُ هُوَ رَسُولُ اللَّهِ، هُوَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى فَآمَنَّا وَأَجَبْنَا وَاتَّبَعْنَا وَصَدَّقْنَا. فَيُقَالُ لَهُ نَمْ صَالِحًا، قَدْ كُنَّا نَعْلَمُ إِنْ كُنْتَ لَتُؤْمِنُ بِهِ. وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوْ قَالَ الْمُرْتَابُ شَكَّ هِشَامٌ ـ فَيُقَالُ لَهُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَيَقُولُ لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ "". قَالَ هِشَامٌ فَلَقَدْ قَالَتْ لِي فَاطِمَةُ فَأَوْعَيْتُهُ، غَيْرَ أَنَّهَا ذَكَرَتْ مَا يُغَلِّظُ عَلَيْهِ.
பாடம் : 29
உரை நிகழ்த்தும்போது இறை வனைப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறுவது
நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
922. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (கிரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தபோது நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், தமது தலையால் வானை நோக்கி சைகை செய்தார்கள். “இது ஏதேனும் அடையாளமா?” என்று கேட் டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்’ எனத் தலை அசைத்தார்கள்.
அப்போது எனக்குத் தலைசுற்றல் ஏற்படும் அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள். எனக்குப் பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய தோல்பை ஒன்றிருந்தது. அதைத் திறந்து (தலை சுற்றல் நிற்க) என் தலைமீது சிறிது தண்ணீரை நான் ஊற்றலானேன். (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தார்கள். பிறகு இறைவனை அவனுக்குத் தகுதியானவற்றைக் கூறிப் புகழ்ந்து மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது ‘அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப்பின்...) என்று சொன்னார்கள்.
அன்சாரிப் பெண்கள் சிலர் ஆரவாரமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்து வதற்காக நான் அவர்களை நோக்கிச் சென்றேன். பிறகு நான் (திரும்பி வந்து) ஆயிஷா (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்:
நான் இதோ இந்த இடத்தில் (தொழுத வாறு) நின்றுகொண்டிருந்தபோது சொர்க் கம், நரகம் உட்பட இதுவரை எனக்குக் காட்டப்பட்டிராத அனைத்தையும் நான் பார்த்தேன். நீங்கள் (உங்கள்) அடக்கத் தலங்களில் மகா குழப்பவாதியான தஜ்ஜா -ன் குழப்பத்தைப் போன்ற, அல்லது அதற்கு நிகரான குழப்பத்துக்கு உள்ளாக் கப்படுவீர்கள் என எனக்கு அறிவிக்கப் பட்டது.
(நீங்கள் அடக்கத் தலங்களில் இருக் கும்போது) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), “இம்மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்?” என்று வினவப் படும். அதற்கு ‘இறைநம்பிக்கையாளர், அல்லது ‘(இறைத்தூதின் மீது) உறுதிகொண்டிருந்தவர்’- (இந்த இடத்தில் அறிவிப்பாளர் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்)- “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் எங்களிடம் சான்றுகளையும் நல்வழியையும் கொண்டுவந்தார். நாங்கள் (அவரை) நம்பினோம்; பதிலளித்தோம்; பின்பற்றினோம்; மெய்மைப்படுத்தினோம்” என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம், “நலமுடன் உறங்குவீராக!” நீர் (உலகில் வாழ்ந்த காலத்தில்) இவரை நம்பிக்கை கொண்டிருந்தீர் என்பதை நாங்கள் அறிந்தே இருந்தோம்” எனக் கூறப்படும்.
‘நயவஞ்சகன்’ அல்லது ‘சந்தேகத்துடன் இருந்தவனிடம்’ “இம்மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்?” என்று கேட்கப்படும். அவன், “(‘இவரை) எனக்குத் தெரியாது; மக்கள் ஒன்றைச் சொல்லக் கேட்டேன். நானும் அதையே சொன்னேன்” என்று பதிலளிப்பான்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இவ்வாறு) ஃபாத்திமா பின்த் அல் முன்திர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்ததை நான் மனனமிட்டுக் கொண்டேன். ஆயினும், அவர் நபி (ஸல்) அவர்கள் கூறிய கடினமான செய்தியையே குறிப்பிட்டார்.

923. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِمَالٍ أَوْ سَبْىٍ فَقَسَمَهُ، فَأَعْطَى رِجَالاً وَتَرَكَ رِجَالاً فَبَلَغَهُ أَنَّ الَّذِينَ تَرَكَ عَتَبُوا، فَحَمِدَ اللَّهَ ثُمَّ أَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَوَاللَّهِ إِنِّي لأُعْطِي الرَّجُلَ، وَأَدَعُ الرَّجُلَ، وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَىَّ مِنَ الَّذِي أُعْطِي وَلَكِنْ أُعْطِي أَقْوَامًا لِمَا أَرَى فِي قُلُوبِهِمْ مِنَ الْجَزَعِ وَالْهَلَعِ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الْغِنَى وَالْخَيْرِ، فِيهِمْ عَمْرُو بْنُ تَغْلِبَ "". فَوَاللَّهِ مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُمْرَ النَّعَمِ. تَابَعَهُ يُونُسُ.
பாடம் : 29
உரை நிகழ்த்தும்போது இறை வனைப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறுவது
நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
923. அம்ர் பின் தஃக்-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘சில பெருôட்கள்’ அல்லது ‘கைதிகள் சிலர்’ கொண்டுவரப் பட்டபோது, அவற்றை நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக் கொடுத் தார்கள். அப்போது அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். யாருக்குக் கொடுக் காமல் விட்டுவிட்டார்களோ அவர்கள் குறைகூறியது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில்) உரையாற்றினார்கள்.
(ஆரம்பமாக) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘அம்மா பஅத்’ (இறை வாழ்த்துக்குப்பின்...) எனக் கூறி “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சிலருக்குக் கொடுக்கிறேன் (சிலருக்குக் கொடுப்பதில்லை). நான் யாருக்குக் கொடுக்காமல் விட்டுவிடுகிறேனோ அவர், நான் யாருக்குக் கொடுக்கிறேனோ அவரைவிட என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருப்பார்.
எனினும், சிலரது உள்ளத்தில் பதற்றத்தையும் கலக்கத்தையும் நான் காண்பதால் அவர்களுக்குக் கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் அமைத்துள்ள தன்னிறைவையும் (பொறுமையும் தன்மானமும் உடைய) ந(ல்ல மனப்பா)ன்மையையும் நம்பி(க் கொடுக்காமல் விட்டு)விடுகிறேன். இத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் அம்ர் பின் தஃக்-பும் ஒருவராவார்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தப் பாராட்டுக்குப் பகரமாக (விலை உயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் (எனக்குக்) கிடைப்பதாக இருந்தாலும் நான் அதை விரும்பமாட்டேன்.