6832. قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي عُرْوَةَ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، غَرَّبَ، ثُمَّ لَمْ تَزَلْ تِلْكَ السُّنَّةَ.
பாடம்: 32
திருமணமாகாத இருவர் (விபசாரம் புரிந்துவிட்டால்) அவர்களுக்கு (நூறு) சாட்டையடிகளும் நாடுகடத்தலும் தண்டனையாக வழங்கப்படும்.
(அல்லாஹ் கூறுகின்றான்:)
விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி வழங்குங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்று)தில், அவ்விருவர்மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைநம்பிக்கையாளர் களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க் கட்டும்.
விபசாரம் செய்த ஆண் ஒரு விபசாரியையோ அல்லது இணை வைப்பவளையோ தவிர வேறு யாரையும் மணமுடிக்கமாட்டான். விபசாரியை, விபசாரம் செய்த ஓர் ஆண், அல்லது இணைவைப்பாளன் தவிர வேறு யாரும் மணமுடிக்கமாட்டார். இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடை செய்யப்பட்டுள்ளது (24:2,3).
(இந்த வசனத்திலுள்ள) ‘இரக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதற்கு இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் ‘தண்டனைகளை நிலைநாட்டும் விஷயத்தில் இரக்கம் காட்டக் கூடாது’ என்று (விளக்கம்) கூறினார்கள்.
6832. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நாடுகடத்தும் தண்டனையை நடைமுறைப்படுத்தினார்கள். பிறகு, அதுவே வழிமுறையாக நீடித்தது.47
அத்தியாயம் : 86

6833. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ بِنَفْىِ عَامٍ بِإِقَامَةِ الْحَدِّ عَلَيْهِ.
பாடம்: 32
திருமணமாகாத இருவர் (விபசாரம் புரிந்துவிட்டால்) அவர்களுக்கு (நூறு) சாட்டையடிகளும் நாடுகடத்தலும் தண்டனையாக வழங்கப்படும்.
(அல்லாஹ் கூறுகின்றான்:)
விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி வழங்குங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்று)தில், அவ்விருவர்மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைநம்பிக்கையாளர் களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க் கட்டும்.
விபசாரம் செய்த ஆண் ஒரு விபசாரியையோ அல்லது இணை வைப்பவளையோ தவிர வேறு யாரையும் மணமுடிக்கமாட்டான். விபசாரியை, விபசாரம் செய்த ஓர் ஆண், அல்லது இணைவைப்பாளன் தவிர வேறு யாரும் மணமுடிக்கமாட்டார். இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடை செய்யப்பட்டுள்ளது (24:2,3).
(இந்த வசனத்திலுள்ள) ‘இரக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதற்கு இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் ‘தண்டனைகளை நிலைநாட்டும் விஷயத்தில் இரக்கம் காட்டக் கூடாது’ என்று (விளக்கம்) கூறினார்கள்.
6833. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்துவிட்டவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நூறு சாட்டையடி) தண்டனை கொடுத்து அவரை ஓராண்டு காலம் நாடுகடத்துமாறு தீர்ப்பளித் தார்கள்.

6834. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ، وَقَالَ "" أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ "". وَأَخْرَجَ فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا.
பாடம்: 33
பாவங்கள் புரிவோரையும் (ஆணுமல்லாத பெண்ணுமல் லாத) அரவானிகளையும் (வீடு களிலிருந்து) வெளியேற்றுவது48
6834. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண் களையும் சபித்தார்கள். மேலும், “அவர்க(ளில் அரவானிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!” என்றும் சொன்னார்கள்.
அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்; உமர் (ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.49

6835. حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَعْرَابِ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ جَالِسٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اقْضِ بِكِتَابِ اللَّهِ. فَقَامَ خَصْمُهُ فَقَالَ صَدَقَ اقْضِ لَهُ يَا رَسُولَ اللَّهِ بِكِتَابِ اللَّهِ، إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا فَزَنَى بِامْرَأَتِهِ فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ بِمِائَةٍ مِنَ الْغَنَمِ وَوَلِيدَةٍ، ثُمَّ سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ، فَزَعَمُوا أَنَّ مَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ. فَقَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا الْغَنَمُ وَالْوَلِيدَةُ فَرَدٌّ عَلَيْكَ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَأَمَّا أَنْتَ يَا أُنَيْسُ فَاغْدُ عَلَى امْرَأَةِ هَذَا فَارْجُمْهَا ". فَغَدَا أُنَيْسٌ فَرَجَمَهَا.
பாடம்: 34
ஆட்சித் தலைவர், தாம் இருக்கும் இடத்திற்கு வெளியே தண்ட னையை நிறைவேற்றுமாறு அடுத்தவருக்கு உத்தரவிடுவது
6835. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
கிராமவாசிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) அமர்ந் திருந்தார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! (எங்கள் விவகாரத்தில்) அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங் கள்” என்று கூறினார். அவருடைய எதிரி (பிரதிவாதி) எழுந்து, “அவர் சொல்வது உண்மைதான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளியுங்கள்” என்றார்.
(பின்னர் கிராமவாசி,) “என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தபோது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (அதற்குத் தண்டனையாக) என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் மக்கள் தெரிவித்தார்கள். ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றும் நோக்கில்) அதற்குப் பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத்தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடுகடத்தலும்தான் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என்று என்னிடம் கூறினர்” என்று சொன்னார்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலம் நாடுகடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி, “உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று (அவள் விபசாரக் குற்றத்தை ஒப்புக்கொண்டால்) அவளுக்கு (அங்கேயே) கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று தீர்ப்புக் கூறினார்கள்.
அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் சென்று (குற்றத்தை ஒப்புக்கொண்ட) அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.50

6837. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الأَمَةِ إِذَا زَنَتْ وَلَمْ تُحْصَنْ قَالَ " إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ ". قَالَ ابْنُ شِهَابٍ لاَ أَدْرِي بَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ.
பாடம்: 35
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
“உங்களில் யாருக்கு இறைநம்பிக்கை யுள்ள சுதந்திரமான பெண்களை மணமுடித்துக்கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் இறைநம்பிக்கையுள்ள அடிமைப் பெண்களில் தமக்கு உடைமையானவர்களை (மணமுடித்துக்கொள்ளலாம்;) அல்லாஹ் உங்களது இறைநம்பிக்கையை நன்கறிவான். உங்களில் சிலர் மற்றச் சிலரிலிருந்து வந்தவர்கள்தான். ஆகவே, அவர்களை அவர்களுடைய உரிமையாளர்களின் அனுமதியின்பேரில் மணந்துகொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக்கொடையை முறைப்படி கொடுத்துவிடுங்கள். அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபசாரம் செய்யாதவர்களாகவும், கள்ள நட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
முறைப்படி அவர்கள் திருமணம் செய்துகொண்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், மணமுடித்துக்கொண்ட சுதந்தரமான பெண்கள்மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அவர்களுக்கு விதிக்கப்பெறும். தவிர, உங்களில் யார் பாவத்தில் ஈடுபட்டுவிடுவோம் என அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் இந்தச் சட்டம். எனினும், நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும். இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்” எனும் (4:25ஆவது) இறைவசனம்.51
பாடம்: 36
அடிமைப் பெண் விபசாரம் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?
6837. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகி யோர் கூறியதாவது:
“ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்... (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்)?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், “அவள் விபசாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள். மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்டையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(அவளை விற்றுவிட வேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா? அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா?” என்பது எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.52

6839. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا زَنَتِ الأَمَةُ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَجْلِدْهَا وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ "". تَابَعَهُ إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 37
அடிமைப் பெண் விபசாரம் செய்துவிட்டால் அவளிடம் கடுமையாக நடந்துகொள்ளலா காது; அவளை நாடுகடத்த லாகாது.
6839. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்து அது வெளிப்பட்டுவிட்டால், அவளுக்கு (எசமான்) சாட்டையடி வழங்கட்டும்; (அதற்குமேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம். பிறகு (மறுபடியும்) அவள் விபசாரம் செய்தால் அவளுக்குக் சாட்டையடி கொடுக்கட்டும்; (அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம். மூன்றாம் முறையும் அவள் விபசாரம் செய்துவிட்டால் அவளை ஒரு முடிக் கற்றைக்காவது விற்றுவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

6840. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى عَنِ الرَّجْمِ، فَقَالَ رَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَقُلْتُ أَقَبْلَ النُّورِ أَمْ بَعْدَهُ قَالَ لاَ أَدْرِي. تَابَعَهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ وَالْمُحَارِبِيُّ وَعَبِيدَةُ بْنُ حُمَيْدٍ عَنِ الشَّيْبَانِيِّ. وَقَالَ بَعْضُهُمُ الْمَائِدَةُ. وَالأَوَّلُ أَصَحُّ.
பாடம்: 38
இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் திருமணமானபின் விபசாரம் செய்து ஆட்சித் தலைவர்முன் நிறுத்தப்பட்டால் சட்டம் என்ன?
6840. அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்” என்று சொன்னார்கள். நான் (குர்ஆனின் 24ஆவது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா? அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.54
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் (‘அந்நூர் அத்தியாயம்’ என்பதற்குப் பதிலாக) ‘அல்மாயிதா அத்தியாயம்’ என்று இடம்பெற்றுள்ளது. (அந்நூர் அத்தியாயம் எனும்) முதல் அறிவிப்பே சரியானதாகும்.

6841. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ إِنَّ الْيَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلاً مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ "". فَقَالُوا نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ. فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا. فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ. فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ. قَالُوا صَدَقَ يَا مُحَمَّدُ فِيهَا آيَةُ الرَّجْمِ. فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا، فَرَأَيْتُ الرَّجُلَ يَحْنِي عَلَى الْمَرْأَةِ يَقِيهَا الْحِجَارَةَ.
பாடம்: 38
இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் திருமணமானபின் விபசாரம் செய்து ஆட்சித் தலைவர்முன் நிறுத்தப்பட்டால் சட்டம் என்ன?
6841. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து யூதர்களில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்து ‘தவ்ராத்’ வேதத்தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், விபசாரம் செய்தவர்களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்களுக்குச் சாட்டையடி வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.
(அப்போது யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தைத் தழுவிய) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கல்லெறி தண்டனை (ரஜ்ம்) உண்டு என தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் கல்லெறி தண்டனை பற்றிக் கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து (மறைத்து)க்கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை வாசித்தார்.
அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு!” என்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருந்தது.
யூதர்கள், “இவர் (அப்துல்லாஹ் பின் சலாம்) சொன்னது உண்மையே. முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது.
அப்போது அந்த ஆண் அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து காப்பதற்காக அவள்மீது கவிழ்ந்து மறைத்துக்கொள்வதை நான் பார்த்தேன்.55

6842. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، أَنَّهُمَا أَخْبَرَاهُ أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَحَدُهُمَا اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ. وَقَالَ الآخَرُ وَهْوَ أَفْقَهُهُمَا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَأْذَنْ لِي أَنْ أَتَكَلَّمَ. قَالَ " تَكَلَّمْ ". قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا ـ قَالَ مَالِكٌ وَالْعَسِيفُ الأَجِيرُ ـ فَزَنَى بِامْرَأَتِهِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَبِجَارِيَةٍ لِي، ثُمَّ إِنِّي سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّ مَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَإِنَّمَا الرَّجْمُ عَلَى امْرَأَتِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا غَنَمُكَ وَجَارِيَتُكَ فَرَدٌّ عَلَيْكَ ". وَجَلَدَ ابْنَهُ مِائَةً وَغَرَّبَهُ عَامًا، وَأَمَرَ أُنَيْسًا الأَسْلَمِيَّ أَنْ يَأْتِيَ امْرَأَةَ الآخَرِ، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا، فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا.
பாடம்: 39
ஒருவர் நீதிபதியிடமும் பொதுமக்களிடமும் தம் மனைவிமீதோ, மற்றவரின் மனைவிமீதோ விபசாரக் குற்றம்சாட்டினால், அவளுக்கு ஆளனுப்பி அந்தக் குற்றச்சாட்டு குறித்து நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமா?
6842. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகி யோர் கூறியதாவது:
இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஒருவர், “(நபியே!) அல்லாஹ்வின் சட்டப்படி எங்களிடையே தீர்ப்பளியுங்கள்” என்றார். அவரைவிட விளக்கமுடையவராயிருந்த மற்றவர், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். (பின்னர் கிராமவாசியான முதல் நபர்) “என்னைப் பேச அனுமதியுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “பேசு” என்றார்கள்.
அவர், “என் மகன், இதோ இவரிடம் கூலிக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் மக்கள் கூறினர். நான் (இந்த தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் என்னுடைய அடிமைப் பெண்ணையும் பிணைத்தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர்” என்று சொன்னார்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: உம்முடைய ஆடுகளும் உம்முடைய அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, அவருடைய மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு சாட்டையடிகள் வழங்கினார்கள். ஓராண்டு காலத்திற்கு அவருடைய மகனை நாடு கடத்தினார்கள். (அருகிலிருந்த) உனைஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம், “அந்த மற்றொரு மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (தன் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!” என்று கூறினார்கள்.
அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரணை செய்தபோது, அவளும் (தனது குற்றத்தை) ஒப்புக்கொண்டாள். ஆகவே அவளுக்கு உனைஸ் (ரலி) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.56

6844. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَ أَبُو بَكْرِ ـ رضى الله عنه ـ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ. فَعَاتَبَنِي، وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي، وَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ.
பாடம்: 40
ஆட்சியாளர் (அனுமதி) இல்லாமல் ஒருவர் தம் குடும்பத்தாருக்கோ மற்றவர்களுக்கோ பாடம் புகட்டுதல்57
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் தொழுதுகொண்டிருக்கும்போது, தமக்குக் குறுக்கே மற்றொருவர் நடந்துசெல்ல முனைந்தால், அவரைத் தடுத்து நிறுத்தட்டும். அதற்கு அவர் மறுத்தால் அவருடன் போராடட்டும்.
இதை அறிவிக்கும் அபூசயீத் (ரலி) அவர்கள் (தமது வாழ்க்கையில்) இதைக் கடைப்பிடித்தார்கள்.58
6844. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தமது தலையை என் மடி மீது வைத்துக்கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (எனக்கருகில் வந்து), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களை யும் தண்ணீரில்லாத இடத்தில் தடுத்து (தங்கவைத்து)விட்டாயே!” எனக் கடிந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் தமது கையால் என் இடுப்பில் குத்த ஆரம்பித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தலை என் மடிமீது இருந்த காரணத்தால்தான் நான் அசையாது இருந்தேன். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ உடைய வசனத்தை அருளினான்.59

6845. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَقْبَلَ أَبُو بَكْرٍ فَلَكَزَنِي لَكْزَةً شَدِيدَةً وَقَالَ حَبَسْتِ النَّاسَ فِي قِلاَدَةٍ. فَبِي الْمَوْتُ لِمَكَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَوْجَعَنِي. نَحْوَهُ. لَكَزَ وَوَكَزَ وَاحِدٌ.
பாடம்: 40
ஆட்சியாளர் (அனுமதி) இல்லாமல் ஒருவர் தம் குடும்பத்தாருக்கோ மற்றவர்களுக்கோ பாடம் புகட்டுதல்57
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் தொழுதுகொண்டிருக்கும்போது, தமக்குக் குறுக்கே மற்றொருவர் நடந்துசெல்ல முனைந்தால், அவரைத் தடுத்து நிறுத்தட்டும். அதற்கு அவர் மறுத்தால் அவருடன் போராடட்டும்.
இதை அறிவிக்கும் அபூசயீத் (ரலி) அவர்கள் (தமது வாழ்க்கையில்) இதைக் கடைப்பிடித்தார்கள்.58
6845. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் கழுத்தணியை நான் தொலைத்துவிட்டதால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் நீர் நிலைகள் இல்லாத ஓரிடத்தில் நாங்கள் தங்க நேரிட்டபோது என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை வேகமாக ஓர் அடி அடித்தார்கள். மேலும், “ஒரு கழுத்தணிக்காக மக்களை (செல்ல விடாமல்) தடுத்துவிட்டாயே!” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்துக் கொண்டிருந்ததால் நான் அசையாதிருந் தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னை அடித்த அடியில்) எனக்கு ஏற்பட்ட வலியால் எனக்கு மரணம் வந்துவிட்டதைப் போன்று இருந்தது. (தொடர்ந்து) முந்தைய ஹதீஸைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

6846. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ عَنِ الْمُغِيرَةِ، قَالَ قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ لَوْ رَأَيْتُ رَجُلاً مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفَحٍ. فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَتَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ، لأَنَا أَغْيَرُ مِنْهُ، وَاللَّهُ أَغْيَرُ مِنِّي "".
பாடம்: 41
ஒருவர் தம் மனைவியுடன் அந்நிய ஆடவர் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டு அவரைக் கொன்றுவிட்டால் (என்ன சட்டம்)?
6846. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்” என்று கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்” என்று சொன்னார்கள்.60

6847. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ. فَقَالَ "" هَلْ لَكَ مِنْ إِبِلٍ "". قَالَ نَعَمْ. قَالَ "" مَا أَلْوَانُهَا "". قَالَ حُمْرٌ. قَالَ "" فِيهَا مِنْ أَوْرَقَ "". قَالَ نَعَمْ. قَالَ "" فَأَنَّى كَانَ ذَلِكَ "". قَالَ أُرَاهُ عِرْقٌ نَزَعَهُ. قَالَ "" فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ عِرْقٌ "".
பாடம்: 42
குறிப்பால் உணர்த்துவது தொடர் பாக வந்துள்ளவை61
6847. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! (வெள்ளை நிறமுடைய எனக்கு) என் மனைவி கறுப்பான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளாள். (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)” என்று (சாடையாகக்) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆம்’ என்றார். “அவற்றின் நிறம் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “சிவப்பு” என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள், “உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல்நிற ஒட்டகம் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “(தனது தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?” என்று கேட்டார்கள். அவர், “அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் என நான் கருதுகின்றேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று சொன்னார்கள்.62

6848. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يُجْلَدُ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ "".
பாடம்: 43
கண்டிப்பதற்காகவும் பாடம் புகட்டுவதற்காகவும் எத்தனை தடவை அடிக்கலாம்?63
6848. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்ற வியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடி களுக்குமேல் வழங்கப்படலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

6849. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ، عَمَّنْ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ عُقُوبَةَ فَوْقَ عَشْرِ ضَرَبَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ "".
பாடம்: 43
கண்டிப்பதற்காகவும் பாடம் புகட்டுவதற்காகவும் எத்தனை தடவை அடிக்கலாம்?63
6849. அப்துர் ரஹ்மான் பின் ஜாபிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவி யுற்ற (நபித்தோழர்) ஒருவர் கூறினார்:
“அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்ற வியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எந்த (சாதாரண) குற்றத்திற்காகவும் பத்து அடிகளுக்கு மேலான தண்டனை கிடையாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6850. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ قَالَ بَيْنَمَا أَنَا جَالِسٌ، عِنْدَ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ إِذْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ فَحَدَّثَ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا سُلَيْمَانُ بْنُ يَسَارٍ فَقَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا بُرْدَةَ الأَنْصَارِيَّ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تَجْلِدُوا فَوْقَ عَشْرَةِ أَسْوَاطٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ "".
பாடம்: 43
கண்டிப்பதற்காகவும் பாடம் புகட்டுவதற்காகவும் எத்தனை தடவை அடிக்கலாம்?63
6850. அபூபுர்தா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கும் மேல் வழங்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
புகைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அப்துர் ரஹ்மான் பின் ஜாபிர் (ரஹ்) அவர்கள் வந்து, சுலைமான் அவர்களுக்கு ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு சுலைமான் (ரஹ்) அவர்கள் எங்களை முன்னோக்கி, அப்துர் ரஹ்மான் தம் தந்தை ஜாபிர் (ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அபூபுர்தா (ரலி) அவர்களிடம் செவியுற்றதாகத் தெரிவித்தார்கள் என்றார்கள்.

6851. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ فَقَالَ لَهُ رِجَالٌ مِنَ الْمُسْلِمِينَ فَإِنَّكَ يَا رَسُولَ اللَّهِ تُوَاصِلُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَيُّكُمْ مِثْلِي إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ "". فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ وَاصَلَ بِهِمْ يَوْمًا ثُمَّ يَوْمًا ثُمَّ رَأَوُا الْهِلاَلَ فَقَالَ "" لَوْ تَأَخَّرَ لَزِدْتُكُمْ "". كَالْمُنَكِّلِ بِهِمْ حِينَ أَبَوْا. تَابَعَهُ شُعَيْبٌ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَيُونُسُ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 43
கண்டிப்பதற்காகவும் பாடம் புகட்டுவதற்காகவும் எத்தனை தடவை அடிக்கலாம்?63
6851. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சூரியன் மறைந்தபின் துறக்காமல்) தொடர்நோன்பு நோற்க வேண்டாமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது முஸ்óம்களில் சிலர், “அவ்வாறாயின், நீங்கள் தொடர்நோன்பு நோற்கின்றீர்களே, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உணவும் பானமும் அளிக்கின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்று சொன்னார்கள்.
தொடர்நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மக்கள் மறுத்தபோது ஒருநாள் தொடர்நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர்நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தி யிருப்பேன்” என்று -மக்கள் தொடர் நோன்பிóருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்தில்- கூறினார்கள்.64
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.