6812. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، رضى الله عنه حِينَ رَجَمَ الْمَرْأَةَ يَوْمَ الْجُمُعَةِ وَقَالَ قَدْ رَجَمْتُهَا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 21
திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6812. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன்” என்று சொன்னார்கள்.29
அத்தியாயம் : 86

6813. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى هَلْ رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ. قُلْتُ قَبْلَ سُورَةِ النُّورِ أَمْ بَعْدُ قَالَ لاَ أَدْرِي.
பாடம்: 21
திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6813. அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ (வழங்கினார்கள்) என்று பதிலளித்தார்கள். நான், “(குர்ஆனின் 24ஆவது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா; அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?” என்று கேட்டேன். அவர்கள், “எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.30

6814. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَحَدَّثَهُ أَنَّهُ قَدْ زَنَى، فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَ، وَكَانَ قَدْ أُحْصِنَ.
பாடம்: 21
திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6814. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘பனூ அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த (மாஇஸ் பின் மாலிக் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். மேலும், நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார். ஆகவே, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். அவர் திருமணமானவராக இருந்தார்.

6815. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ. فَأَعْرَضَ عَنْهُ، حَتَّى رَدَّدَ عَلَيْهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، دَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَبِكَ جُنُونٌ ". قَالَ لاَ. قَالَ " فَهَلْ أَحْصَنْتَ ". قَالَ نَعَمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ ".
பாடம்: 22
(விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது.
உமர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், “பைத்தியக்காரன் தெளிவடை யும்வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும்வரையிலும் தூங்குபவன் விழிக்கும்வரையிலும் அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (தண்டனை யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது) என்று தங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.31
6815. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
அவர் திரும்பத்திரும்ப அதையே நான்கு தடவை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை அழைத்து நபி (ஸல்) அவர்கள், “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர், “(எனக்குப் பைத்தியம்) இல்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமணமாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (திருமணமாகிவிட்டது)” என்று சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள்.32
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

6816. قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ هَرَبَ، فَأَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ.
பாடம்: 22
(விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது.
உமர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், “பைத்தியக்காரன் தெளிவடை யும்வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும்வரையிலும் தூங்குபவன் விழிக்கும்வரையிலும் அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (தண்டனை யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது) என்று தங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.31
6816. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந் தேன். அப்போது அவர்மீது (மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். கற்கள் அவர்மீது விழுந்தபோது (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோட ஆரம்பித்தார். அவரை நாங்கள் (விரட்டிச்சென்று பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் பிடித்து அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்.33

6817. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اخْتَصَمَ سَعْدٌ وَابْنُ زَمْعَةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ "". زَادَ لَنَا قُتَيْبَةُ عَنِ اللَّيْثِ "" وَلِلْعَاهِرِ الْحَجَرُ "".
பாடம்: 23
விபசாரம் செய்தவனுக்கு இழப்பு தான்.
6817. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் புதல்வரும் (ஓர் அடிமைப் பெண்ணின் மகன் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகச்) சர்ச்சை செய்துகொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன். தாய் யாருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை சொந்தமாகும்” என்று கூறிவிட்டு, (தம் துணைவியாரான சவ்தா அவர்களிடம்) “சவ்தா! ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!” என்று சொன்னார்கள்.
(அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகிறேன்:) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள், “விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்” என்பதையும் கூடுதல் தகவலாக எமக்கு அறிவித்தார்கள்.34

6818. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ "".
பாடம்: 23
விபசாரம் செய்தவனுக்கு இழப்பு தான்.
6818. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத் தாளோ அவருக்கே குழந்தை உரியது. விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

6819. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَهُودِيٍّ وَيَهُودِيَّةٍ قَدْ أَحْدَثَا جَمِيعًا فَقَالَ لَهُمْ "" مَا تَجِدُونَ فِي كِتَابِكُمْ "". قَالُوا إِنَّ أَحْبَارَنَا أَحْدَثُوا تَحْمِيمَ الْوَجْهِ وَالتَّجْبِيَةَ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ادْعُهُمْ يَا رَسُولَ اللَّهِ بِالتَّوْرَاةِ. فَأُتِيَ بِهَا فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، وَجَعَلَ يَقْرَأُ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا فَقَالَ لَهُ ابْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ. فَإِذَا آيَةُ الرَّجْمِ تَحْتَ يَدِهِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا. قَالَ ابْنُ عُمَرَ فَرُجِمَا عِنْدَ الْبَلاَطِ، فَرَأَيْتُ الْيَهُودِيَّ أَجْنَأَ عَلَيْهَا.
பாடம்: 24
(மஸ்ஜிதுந் நபவீ அருகிலிருந்த) ‘பலாத்’ எனுமிடத்தில் கல்லெறி தண்டனை நிறைவேற்றுதல்36
6819. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்துவிட்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?” என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், “எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங்கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்” என்று சொன்னார்கள்.
(அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “தவ்ராத்தைக் கொண்டுவருமாறு அவர்களிடம் கூறுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அவ்வாறே ‘தவ்ராத்’ கொண்டுவரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை (‘ரஜ்ம்’) பற்றிய வசனத்தின் மீது தமது கையை வைத்(து அந்த வசனத்தை யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன்பின் இருந்த வசனங்களை வாசித்துக்காட்டலானார்.
அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு!” என்று சொன்னார்கள். அவர் தமது கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரது கைக்குக் கீழே இருந்தது. ஆகவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அப்போது அவர்கள் இருவருக்கும் ‘பலாத்’ எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்கள்மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவள்மீது (கல் விழாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக்கொண்டதை நான் பார்த்தேன்.

6820. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاعْتَرَفَ بِالزِّنَا فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ. قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبِكَ جُنُونٌ "". قَالَ لاَ. قَالَ "" آحْصَنْتَ "". قَالَ نَعَمْ. فَأَمَرَ بِهِ فَرُجِمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ فَرَّ، فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْرًا وَصَلَّى عَلَيْهِ. لَمْ يَقُلْ يُونُسُ وَابْنُ جُرَيْجٍ عَنِ الزُّهْرِيِّ فَصَلَّى عَلَيْهِ.
பாடம்: 25
(பெருநாள்) தொழுகைத் திடலில் கல்லெறி தண்டனை நிறை வேற்றுதல்
6820. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் (மாஇஸ் பின் மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர், “(எனக்குப் பைத்தியம்) இல்லை. (நான் தெளிவுடன்தான் பேசுகிறேன்)” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமண மாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். எனவே, நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்மீது கற்கள் விழத் தொடங்கியதும் அவர் (வலி தாங்க முடியாமல்) தப்பியோட ஆரம்பித்தார். பிறகு, அவர் பிடிக்கப்பட்டு, இறக்கும்வரை அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்ல விதமாகப் பேசியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தாôர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அறிவிப்பாளர்களான யூனுஸ் பின் யஸீத் (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோர் தம் அறிவிப்புகளில் “அவருக்கு (ஜனாஸா) தொழவைத்தார்கள்” என்பதைக் கூறவில்லை.
அபூஅப்தில்லாஹ் (புகாரியான என்) இடம், “நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழவைத்தார்கள் என்ற தகவல் சரியானதா?” என வினவப்பட்டது. “(ஆம்) அறிவிப்பாளர் மஅமர் (ரஹ்) அவர்கள் அவ்வாறே அறிவித்தார்கள்” என்று பதிலளித்தேன். “மஅமர் அல்லாதோர் அவ்வாறு அறிவித்துள்ளனரா?” என்று கேட்கப்பட்டது. ‘இல்லை’ என்று கூறினேன்.

6821. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَاسْتَفْتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" هَلْ تَجِدُ رَقَبَةً "". قَالَ لاَ. قَالَ "" هَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ "". قَالَ لاَ. قَالَ "" فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا "".
பாடம்: 26
குற்றவியல் தண்டனைக்கு உரியதல்லாத பாவம் ஒன்றை ஒருவர் செய்துவிட்டு அது குறித்து (ஆட்சித்) தலைவரிடம் தெரி வித்தால்..?
அவர் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திய பின்னால் அவர் ஆட்சித் தலைவரிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “இத்தகைய மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்க வில்லை” என்று சொன்னார்கள்
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ரமளான் மாதத்தில் (பகல் நேரத்தில்) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்ட ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) மான் வேட்டையாடிய (கபீஸா என்ப)வரை உமர் (ரலி) அவர்கள் தண்டிக்கவில்லை.
மேலும், இந்தத் தலைப்பை ஒட்டி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவித்துள் ளார்கள்.37
6821. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டு (இது குறித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக விடுதலை செய்ய) உன்னிடம் ஓர் அடிமை உண்டா?” என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை’ என்றார்.
நபி (ஸல்) அவர்கள், “இரண்டு மாதங்கள் உம்மால் நோன்பு நோற்க முடியுமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை (இயலாது)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!” என்றார்கள்.38

6822. وَقَالَ اللَّيْثُ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ قَالَ احْتَرَقْتُ. قَالَ "" مِمَّ ذَاكَ "". قَالَ وَقَعْتُ بِامْرَأَتِي فِي رَمَضَانَ. قَالَ لَهُ "" تَصَدَّقْ "". قَالَ مَا عِنْدِي شَىْءٌ. فَجَلَسَ وَأَتَاهُ إِنْسَانٌ يَسُوقُ حِمَارًا وَمَعَهُ طَعَامٌ ـ قَالَ عَبْدُ الرَّحْمَنِ مَا أَدْرِي مَا هُوَ ـ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَيْنَ الْمُحْتَرِقُ "". فَقَالَ هَا أَنَا ذَا. قَالَ "" خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ "". قَالَ عَلَى أَحْوَجَ مِنِّي مَا لأَهْلِي طَعَامٌ قَالَ "" فَكُلُوهُ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الْحَدِيثُ الأَوَّلُ أَبْيَنُ قَوْلُهُ "" أَطْعِمْ أَهْلَكَ "".
பாடம்: 26
குற்றவியல் தண்டனைக்கு உரியதல்லாத பாவம் ஒன்றை ஒருவர் செய்துவிட்டு அது குறித்து (ஆட்சித்) தலைவரிடம் தெரி வித்தால்..?
அவர் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திய பின்னால் அவர் ஆட்சித் தலைவரிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “இத்தகைய மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்க வில்லை” என்று சொன்னார்கள்
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ரமளான் மாதத்தில் (பகல் நேரத்தில்) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்ட ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) மான் வேட்டையாடிய (கபீஸா என்ப)வரை உமர் (ரலி) அவர்கள் தண்டிக்கவில்லை.
மேலும், இந்தத் தலைப்பை ஒட்டி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவித்துள் ளார்கள்.37
6822. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் கரிந்துபோனேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “எதனால் அப்படி?” என்று கேட்டார்கள். அவர், “நான் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்றார். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “தர்மம் செய்!” என்று சொன்னார்கள். அவர், “(தர்மம் செய்ய) என்னிடம் ஏதுமில்லை” என்று கூறிவிட்டு, (அப்படியே) அமர்ந்து கொண்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தமது கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடம் உணவு இருந்தது.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டுவந்த உணவு என்ன என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.-
அப்போது நபி (ஸல்) அவர்கள், “கரிந்துபோனவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், “இதோ நான் இங்குதான் இருக்கிறேன்”. என்றார். நபி (ஸல்) அவர்கள், “இதை வாங்கிக்கொண்டுபோய் தர்மம் செய்!” என்றார்கள். அவர், “என்னைவிடத் தேவையானவருக்கா? என் குடும்பத்தாருக்கு உணவே இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், அவர்களுக்கே உண்ணக்கொடு” என்றார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: முந்தைய ஹதீஸ் இதைவிடத் தெளிவாக உள்ளது. (அதில்) “உம் வீட்டாருக்கே உண்ணக்கொடு” என்றே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.39

6823. حَدَّثَنِي عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ عَاصِمٍ الْكِلاَبِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ. قَالَ وَلَمْ يَسْأَلْهُ عَنْهُ. قَالَ وَحَضَرَتِ الصَّلاَةُ فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم الصَّلاَةَ قَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْ فِيَّ كِتَابَ اللَّهِ. قَالَ "" أَلَيْسَ قَدْ صَلَّيْتَ مَعَنَا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَإِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ ذَنْبَكَ "". أَوْ قَالَ "" حَدَّكَ "".
பாடம்: 27
ஒருவர் (தாம் செய்த குற்றத் தைத்) தெளிவாகக் குறிப்பிடா மல் தண்டனையை நிறைவேற் றுமாறு முன்மொழிந்தால், (ஆட்சித்) தலைவர் அவரது குற்றத்தை (துருவிக் கேட்காமல்) மறைத்திடலாமா?
6823. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்ற மொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, என்மீது தண்டனையை நிறைவேற்றுங் கள்” என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், “எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (தொழுதேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் அல்லாஹ் ‘உமது பாவத்தை’ அல்லது ‘உமக்குரிய தண்டனையை’ மன்னித்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

6824. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا أَتَى مَاعِزُ بْنُ مَالِكٍ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ "" لَعَلَّكَ قَبَّلْتَ أَوْ غَمَزْتَ أَوْ نَظَرْتَ "". قَالَ لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" أَنِكْتَهَا "". لاَ يَكْنِي. قَالَ فَعِنْدَ ذَلِكَ أَمَرَ بِرَجْمِهِ.
பாடம்: 28
(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்ப வரிடம், “(அவளை) நீ தொட்டிருக் கக்கூடும்” என்றோ, “அவளை நோக்கி (கண்ணால் அல்லது கையால்) சைகை செய்திருக்கக் கூடும்” என்றோ (ஆட்சித்) தலைவர் சொல்லலாமா?
6824. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திருக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!” என்று சொன்னார்கள். அவர், “(அவ்வாறெல்லாம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல், “அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

6825. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ مِنَ النَّاسِ وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ. يُرِيدُ نَفْسَهُ، فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ. فَأَعْرَضَ عَنْهُ، فَجَاءَ لِشِقِّ وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّذِي أَعْرَضَ عَنْهُ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَبِكَ جُنُونٌ "". قَالَ لاَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" أَحْصَنْتَ "". قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" اذْهَبُوا فَارْجُمُوهُ "".
பாடம்: 29
(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம், “உனக்குத் திருமணமாகிவிட்டதா?” என்று (ஆட்சித்) தலைவர் கேட்பது
6825. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று தம்மைக் குறித்தே கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். (மீண்டும்) அவரைவிட்டு நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர் (திரும்ப வும்) நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்ட பக்கம் வந்தார். (இவ்வாறு) அவர் (தாம் விபசாரம் புரிந்து விட்டதாக) தமக்கெதிராகத் தாமே நான்கு தடவை சாட்சியம் அளித்தபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள்.
அவர், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “இவரைக் கொண்டுசென்று, இவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று கூறினார்கள்.40

6826. قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرًا، قَالَ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ، فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ جَمَزَ حَتَّى أَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ.
பாடம்: 29
(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம், “உனக்குத் திருமணமாகிவிட்டதா?” என்று (ஆட்சித்) தலைவர் கேட்பது
6826. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒருவர் (ஜாபிர் கூறியதாகத்) தெரிவித்தார்: அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவர்மீது (பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம்.
அவர்மீது கல் விழத்தொடங்கியதும் (வலி தாங்காமல்) அவர் வேகமாக குதித்தோடினார். அவரை நாங்கள் (பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் பிடித்து கல்லெறி தண்டனை நிறை வேற்றினோம்.41

6827. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنْ فِي الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ وَزَيْدَ بْنَ خَالِدٍ قَالاَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ رَجُلٌ فَقَالَ أَنْشُدُكَ اللَّهَ إِلاَّ قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ. فَقَامَ خَصْمُهُ ـ وَكَانَ أَفْقَهَ مِنْهُ ـ فَقَالَ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ وَأْذَنْ لِي. قَالَ " قُلْ ". قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ، ثُمَّ سَأَلْتُ رِجَالاً مِنْ أَهْلِ الْعِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ، وَعَلَى امْرَأَتِهِ الرَّجْمَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ جَلَّ ذِكْرُهُ، الْمِائَةُ شَاةٍ وَالْخَادِمُ رَدٌّ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ". فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا. قُلْتُ لِسُفْيَانَ لَمْ يَقُلْ فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ. فَقَالَ أَشُكُّ فِيهَا مِنَ الزُّهْرِيِّ، فَرُبَّمَا قُلْتُهَا وَرُبَّمَا سَكَتُّ.
பாடம்: 30
விபசார(க் குற்ற)த்தை ஒப்புக் கொள்ளல்
6827. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிந் நபவீ பள்ளிவாசலில்) இருந் தோம். அப்போது (கிராமவாசி) ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: தாங்கள் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே எங்களிடையே தீர்ப்பளிக்க வேண்டும்” என்று சொன்னார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி எழுந்து, “(ஆம்) எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்!” என்று கூறினார். (பின்னர் அந்தக் கிராமவாசி) “என்னைப் பேச அனுமதியுங்கள்” என்று கேட்டுக்கொள்ள நபி (ஸல்) அவர்கள், “பேசு!” என்றார்கள்.
அவர், “என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் சில அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உன்னிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி, “உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!” என்று சொன்னார்கள்.
அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். ஆகவே, அவளுக்கு உனைஸ் (ரலி) கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.42
அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என்று அவர் கூறவில்லையா?” எனக் கேட்டேன். அவர்கள், “இது தொடர்பாக எனக்குச் சந்தேகம் உள்ளது. ஆகவே, சில வேளைகளில் அதை அறிவிக்கிறேன். சில வேளைகளில் மௌனமாகிவிடுகிறேன்” என்று கூறினார்கள்.

6829. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ عُمَرُ لَقَدْ خَشِيتُ أَنْ يَطُولَ بِالنَّاسِ زَمَانٌ حَتَّى يَقُولَ قَائِلٌ لاَ نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللَّهِ. فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ، أَلاَ وَإِنَّ الرَّجْمَ حَقٌّ عَلَى مَنْ زَنَى، وَقَدْ أَحْصَنَ، إِذَا قَامَتِ الْبَيِّنَةُ، أَوْ كَانَ الْحَمْلُ أَوْ الاِعْتِرَافُ ـ قَالَ سُفْيَانُ كَذَا حَفِظْتُ ـ أَلاَ وَقَدْ رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمْنَا بَعْدَهُ.
பாடம்: 30
விபசார(க் குற்ற)த்தை ஒப்புக் கொள்ளல்
6829. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: காலப்போக்கில் மக்களில் சிலர் “இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்ம்) தண்டனை காணப்படவில்லையே?” என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன்மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.
அறிந்துகொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் உண்டானாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப்பின் நாங்களும் அதை நிறைவேற்றினோம்” (என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன்.

6830. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ أُقْرِئُ رِجَالاً مِنَ الْمُهَاجِرِينَ مِنْهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَبَيْنَمَا أَنَا فِي مَنْزِلِهِ بِمِنًى، وَهْوَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا، إِذْ رَجَعَ إِلَىَّ عَبْدُ الرَّحْمَنِ فَقَالَ لَوْ رَأَيْتَ رَجُلاً أَتَى أَمِيرَ الْمُؤْمِنِينَ الْيَوْمَ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَلْ لَكَ فِي فُلاَنٍ يَقُولُ لَوْ قَدْ مَاتَ عُمَرُ لَقَدْ بَايَعْتُ فُلاَنًا، فَوَاللَّهِ مَا كَانَتْ بَيْعَةُ أَبِي بَكْرٍ إِلاَّ فَلْتَةً، فَتَمَّتْ. فَغَضِبَ عُمَرُ ثُمَّ قَالَ إِنِّي إِنْ شَاءَ اللَّهُ لَقَائِمٌ الْعَشِيَّةَ فِي النَّاسِ، فَمُحَذِّرُهُمْ هَؤُلاَءِ الَّذِينَ يُرِيدُونَ أَنْ يَغْصِبُوهُمْ أُمُورَهُمْ. قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لاَ تَفْعَلْ فَإِنَّ الْمَوْسِمَ يَجْمَعُ رَعَاعَ النَّاسِ وَغَوْغَاءَهُمْ، فَإِنَّهُمْ هُمُ الَّذِينَ يَغْلِبُونَ عَلَى قُرْبِكَ حِينَ تَقُومُ فِي النَّاسِ، وَأَنَا أَخْشَى أَنْ تَقُومَ فَتَقُولَ مَقَالَةً يُطَيِّرُهَا عَنْكَ كُلُّ مُطَيِّرٍ، وَأَنْ لاَ يَعُوهَا، وَأَنْ لاَ يَضَعُوهَا عَلَى مَوَاضِعِهَا، فَأَمْهِلْ حَتَّى تَقْدَمَ الْمَدِينَةَ فَإِنَّهَا دَارُ الْهِجْرَةِ وَالسُّنَّةِ، فَتَخْلُصَ بِأَهْلِ الْفِقْهِ وَأَشْرَافِ النَّاسِ، فَتَقُولَ مَا قُلْتَ مُتَمَكِّنًا، فَيَعِي أَهْلُ الْعِلْمِ مَقَالَتَكَ، وَيَضَعُونَهَا عَلَى مَوَاضِعِهَا. فَقَالَ عُمَرُ أَمَا وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لأَقُومَنَّ بِذَلِكَ أَوَّلَ مَقَامٍ أَقُومُهُ بِالْمَدِينَةِ. قَالَ ابْنُ عَبَّاسٍ فَقَدِمْنَا الْمَدِينَةَ فِي عَقِبِ ذِي الْحَجَّةِ، فَلَمَّا كَانَ يَوْمُ الْجُمُعَةِ عَجَّلْنَا الرَّوَاحَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، حَتَّى أَجِدَ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ جَالِسًا إِلَى رُكْنِ الْمِنْبَرِ، فَجَلَسْتُ حَوْلَهُ تَمَسُّ رُكْبَتِي رُكْبَتَهُ، فَلَمْ أَنْشَبْ أَنْ خَرَجَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَلَمَّا رَأَيْتُهُ مُقْبِلاً قُلْتُ لِسَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، لَيَقُولَنَّ الْعَشِيَّةَ مَقَالَةً لَمْ يَقُلْهَا مُنْذُ اسْتُخْلِفَ، فَأَنْكَرَ عَلَىَّ وَقَالَ مَا عَسَيْتَ أَنْ يَقُولَ مَا لَمْ يَقُلْ. قَبْلَهُ فَجَلَسَ عُمَرُ عَلَى الْمِنْبَرِ، فَلَمَّا سَكَتَ الْمُؤَذِّنُونَ قَامَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ قَالَ أَمَّا بَعْدُ فَإِنِّي قَائِلٌ لَكُمْ مَقَالَةً قَدْ قُدِّرَ لِي أَنْ أَقُولَهَا، لاَ أَدْرِي لَعَلَّهَا بَيْنَ يَدَىْ أَجَلِي، فَمَنْ عَقَلَهَا وَوَعَاهَا فَلْيُحَدِّثْ بِهَا حَيْثُ انْتَهَتْ بِهِ رَاحِلَتُهُ، وَمَنْ خَشِيَ أَنْ لاَ يَعْقِلَهَا فَلاَ أُحِلُّ لأَحَدٍ أَنْ يَكْذِبَ عَلَىَّ، إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ فَكَانَ مِمَّا أَنْزَلَ اللَّهُ آيَةُ الرَّجْمِ، فَقَرَأْنَاهَا وَعَقَلْنَاهَا وَوَعَيْنَاهَا، رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمْنَا بَعْدَهُ، فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ وَاللَّهِ مَا نَجِدُ آيَةَ الرَّجْمِ فِي كِتَابِ اللَّهِ، فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ، وَالرَّجْمُ فِي كِتَابِ اللَّهِ حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أُحْصِنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، إِذَا قَامَتِ الْبَيِّنَةُ أَوْ كَانَ الْحَبَلُ أَوْ الاِعْتِرَافُ، ثُمَّ إِنَّا كُنَّا نَقْرَأُ فِيمَا نَقْرَأُ مِنْ كِتَابِ اللَّهِ أَنْ لاَ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، فَإِنَّهُ كُفْرٌ بِكُمْ أَنْ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، أَوْ إِنَّ كُفْرًا بِكُمْ أَنْ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، أَلاَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُطْرُونِي كَمَا أُطْرِيَ عِيسَى ابْنُ مَرْيَمَ وَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ "". ثُمَّ إِنَّهُ بَلَغَنِي أَنَّ قَائِلاً مِنْكُمْ يَقُولُ وَاللَّهِ لَوْ مَاتَ عُمَرُ بَايَعْتُ فُلاَنًا. فَلاَ يَغْتَرَّنَّ امْرُؤٌ أَنْ يَقُولَ إِنَّمَا كَانَتْ بَيْعَةُ أَبِي بَكْرٍ فَلْتَةً وَتَمَّتْ أَلاَ وَإِنَّهَا قَدْ كَانَتْ كَذَلِكَ وَلَكِنَّ اللَّهَ وَقَى شَرَّهَا، وَلَيْسَ مِنْكُمْ مَنْ تُقْطَعُ الأَعْنَاقُ إِلَيْهِ مِثْلُ أَبِي بَكْرٍ، مَنْ بَايَعَ رَجُلاً عَنْ غَيْرِ مَشُورَةٍ مِنَ الْمُسْلِمِينَ فَلاَ يُبَايَعُ هُوَ وَلاَ الَّذِي بَايَعَهُ تَغِرَّةً أَنْ يُقْتَلاَ، وَإِنَّهُ قَدْ كَانَ مِنْ خَبَرِنَا حِينَ تَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم إِلاَّ أَنَّ الأَنْصَارَ خَالَفُونَا وَاجْتَمَعُوا بِأَسْرِهِمْ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، وَخَالَفَ عَنَّا عَلِيٌّ وَالزُّبَيْرُ وَمَنْ مَعَهُمَا، وَاجْتَمَعَ الْمُهَاجِرُونَ إِلَى أَبِي بَكْرٍ فَقُلْتُ لأَبِي بَكْرٍ يَا أَبَا بَكْرٍ انْطَلِقْ بِنَا إِلَى إِخْوَانِنَا هَؤُلاَءِ مِنَ الأَنْصَارِ. فَانْطَلَقْنَا نُرِيدُهُمْ فَلَمَّا دَنَوْنَا مِنْهُمْ لَقِيَنَا مِنْهُمْ رَجُلاَنِ صَالِحَانِ، فَذَكَرَا مَا تَمَالَى عَلَيْهِ الْقَوْمُ فَقَالاَ أَيْنَ تُرِيدُونَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ فَقُلْنَا نُرِيدُ إِخْوَانَنَا هَؤُلاَءِ مِنَ الأَنْصَارِ. فَقَالاَ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَقْرَبُوهُمُ اقْضُوا أَمْرَكُمْ. فَقُلْتُ وَاللَّهِ لَنَأْتِيَنَّهُمْ. فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَاهُمْ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَإِذَا رَجُلٌ مُزَمَّلٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا هَذَا سَعْدُ بْنُ عُبَادَةَ. فَقُلْتُ مَا لَهُ قَالُوا يُوعَكُ. فَلَمَّا جَلَسْنَا قَلِيلاً تَشَهَّدَ خَطِيبُهُمْ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَنَحْنُ أَنْصَارُ اللَّهِ وَكَتِيبَةُ الإِسْلاَمِ، وَأَنْتُمْ مَعْشَرَ الْمُهَاجِرِينَ رَهْطٌ، وَقَدْ دَفَّتْ دَافَّةٌ مِنْ قَوْمِكُمْ، فَإِذَا هُمْ يُرِيدُونَ أَنْ يَخْتَزِلُونَا مِنْ أَصْلِنَا وَأَنْ يَحْضُنُونَا مِنَ الأَمْرِ. فَلَمَّا سَكَتَ أَرَدْتُ أَنْ أَتَكَلَّمَ وَكُنْتُ زَوَّرْتُ مَقَالَةً أَعْجَبَتْنِي أُرِيدُ أَنْ أُقَدِّمَهَا بَيْنَ يَدَىْ أَبِي بَكْرٍ، وَكُنْتُ أُدَارِي مِنْهُ بَعْضَ الْحَدِّ، فَلَمَّا أَرَدْتُ أَنْ أَتَكَلَّمَ قَالَ أَبُو بَكْرٍ عَلَى رِسْلِكَ. فَكَرِهْتُ أَنْ أُغْضِبَهُ، فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَكَانَ هُوَ أَحْلَمَ مِنِّي وَأَوْقَرَ، وَاللَّهِ مَا تَرَكَ مِنْ كَلِمَةٍ أَعْجَبَتْنِي فِي تَزْوِيرِي إِلاَّ قَالَ فِي بَدِيهَتِهِ مِثْلَهَا أَوْ أَفْضَلَ مِنْهَا حَتَّى سَكَتَ فَقَالَ مَا ذَكَرْتُمْ فِيكُمْ مِنْ خَيْرٍ فَأَنْتُمْ لَهُ أَهْلٌ، وَلَنْ يُعْرَفَ هَذَا الأَمْرُ إِلاَّ لِهَذَا الْحَىِّ مِنْ قُرَيْشٍ، هُمْ أَوْسَطُ الْعَرَبِ نَسَبًا وَدَارًا، وَقَدْ رَضِيتُ لَكُمْ أَحَدَ هَذَيْنِ الرَّجُلَيْنِ، فَبَايِعُوا أَيَّهُمَا شِئْتُمْ. فَأَخَذَ بِيَدِي وَبِيَدِ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَهْوَ جَالِسٌ بَيْنَنَا، فَلَمْ أَكْرَهْ مِمَّا قَالَ غَيْرَهَا، كَانَ وَاللَّهِ أَنْ أُقَدَّمَ فَتُضْرَبَ عُنُقِي لاَ يُقَرِّبُنِي ذَلِكَ مِنْ إِثْمٍ، أَحَبَّ إِلَىَّ مِنْ أَنْ أَتَأَمَّرَ عَلَى قَوْمٍ فِيهِمْ أَبُو بَكْرٍ، اللَّهُمَّ إِلاَّ أَنْ تُسَوِّلَ إِلَىَّ نَفْسِي عِنْدَ الْمَوْتِ شَيْئًا لاَ أَجِدُهُ الآنَ. فَقَالَ قَائِلٌ مِنَ الأَنْصَارِ أَنَا جُذَيْلُهَا الْمُحَكَّكُ، وَعُذَيْقُهَا الْمُرَجَّبُ، مِنَّا أَمِيرٌ، وَمِنْكُمْ أَمِيرٌ، يَا مَعْشَرَ قُرَيْشٍ. فَكَثُرَ اللَّغَطُ، وَارْتَفَعَتِ الأَصْوَاتُ حَتَّى فَرِقْتُ مِنَ الاِخْتِلاَفِ. فَقُلْتُ ابْسُطْ يَدَكَ يَا أَبَا بَكْرٍ. فَبَسَطَ يَدَهُ فَبَايَعْتُهُ، وَبَايَعَهُ الْمُهَاجِرُونَ، ثُمَّ بَايَعَتْهُ الأَنْصَارُ، وَنَزَوْنَا عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ قَائِلٌ مِنْهُمْ قَتَلْتُمْ سَعْدَ بْنَ عُبَادَةَ. فَقُلْتُ قَتَلَ اللَّهُ سَعْدَ بْنَ عُبَادَةَ. قَالَ عُمَرُ وَإِنَّا وَاللَّهِ مَا وَجَدْنَا فِيمَا حَضَرْنَا مِنْ أَمْرٍ أَقْوَى مِنْ مُبَايَعَةِ أَبِي بَكْرٍ خَشِينَا إِنْ فَارَقْنَا الْقَوْمَ وَلَمْ تَكُنْ بَيْعَةٌ أَنْ يُبَايِعُوا رَجُلاً مِنْهُمْ بَعْدَنَا، فَإِمَّا بَايَعْنَاهُمْ عَلَى مَا لاَ نَرْضَى، وَإِمَّا نُخَالِفُهُمْ فَيَكُونُ فَسَادٌ، فَمَنْ بَايَعَ رَجُلاً عَلَى غَيْرِ مَشُورَةٍ مِنَ الْمُسْلِمِينَ فَلاَ يُتَابَعُ هُوَ وَلاَ الَّذِي بَايَعَهُ تَغِرَّةً أَنْ يُقْتَلاَ.
பாடம்: 31
விபசாரத்தால் கர்ப்பமுற்ற பெண் மணமுடித்தவளாக இருக்கும்போது கல்லெறி தண்டனை வழங்குதல்43
6830. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் முஹாஜிர்களில் சிலருக்குக் குர்ஆனை ஓதிக்கொடுத்துவந்தேன். அவர்களில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவராவார். (இந்நிலையில் ஒருநாள்) நான் ‘மினா’ பெருவெளியில் அவரது முகாமில் இருந்துகொண்டிருந்தபோது அவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் இருந்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார். இது உமர் (ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது நடந்தது.
(திரும்பி வந்த) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்குத் தெரியுமா? இன்று ஒரு மனிதர் இறைநம்பிக்கை யாளர்களின் தலைவர் (கலீஃபா உமர்-ரலி) அவர்களிடம் சென்று, ‘இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! உமர் அவர்கள் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (முதல் கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரகோலமாக நடைபெற்று முடிந்தது என்று கூறிய இன்னாரைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகு, “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) இன்று மாலை நான் மக்கள்முன் நின்று, தங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையீடு செய்ய நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யப்போகிறேன்” என்று சொன்னார்கள்.
உடனே நான், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவ காலத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் தரம் தாழ்ந்தோரும் குழுமுகின்றனர். நீங்கள் (உரையாற்றுவதற்காக) மக்கள்முன் நிற்கும்போது அவர்கள்தான் உங்களுக்கருகே மிகுதியாக இருப்பர். நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல, அதற்கு உரிய பொருள்தந்து முறையாக விளங்காமல் அவரவர் (மனம்போனபோக்கில்) தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். ஆகவே, நீங்கள் மதீனா சென்று சேரும்வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், மதீனாதான் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியாகும். நீங்கள் (அங்கு சென்று) மார்க்க ஞானம் உடையவர்களையும் பிரமுகர்களையும் தனியாகச் சந்தித்து நீங்கள் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால், அறிவுபடைத்தோர் உங்கள் கூற்றை அறிந்து அதற்கு உரிய இடமளிப்பர்” என்று சொன்னேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் மதீனா சென்றபின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்” என்று சொன்னார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பிந்திய பகுதியில் மதீனா வந்துசேர்ந்தோம். வெள்ளிக் கிழமை (ஜுமுஆ நாள்) அன்று சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது (பள்ளிவாசலை நோக்கி) நான் விரைந்தேன். அப்போது ‘சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல்’ (ரலி) அவர்களைச் சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) ஓர் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். உடனே நான் அவர் அருகில் என் முட்டுக்கால் அவருடைய முட்டுக்காலைத் தொட்டுக்கொண்டிருக்கும் வண்ணம் அமர்ந்துகொண்டேன்.
சிறிது நேரம்தான் கழிந்திருக்கும்; அதற்குள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (சொற்பொழிவு மேடையை நோக்கி) வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்ட நான் ‘சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல்’ (ரலி) அவர்களிடம், “உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நாளிலிருந்து (இந்த நேரம்வரை எப்போதுமே) சொல்óயிராத ஒன்றை இன்று மாலை சொல்ல இருக்கிறார்கள்” என்று கூறினேன். அதற்கு சயீத் அவர்கள், “அப்படியெல்லாம் எதையும் உமர் கூறுவதற்கில்லை” என்று கூறி என்னிடம் மறுத்தார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மௌனமானதும் உமர் (ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, “நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன்.
இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை யார் (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறாரோ அவர் தமது வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! யார் இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிறாரோ (அவர் மட்டுமல்ல; வேறு) யாரும் என்மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்” (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)
நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மணமுடித்தவர் விபசாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம்.
காலப்போக்கில் மக்களில் சிலர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.
மணமுடித்த ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் உண்டானாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைவேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதிவந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொருவரை தந்தையாக்கிவிட வேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி கொல்வதாகும்.
அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘மர்யமின் புதல்வர் ஈசா எல்லைமீறிப் புகழப்பட்ட தைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
மேலும், உங்களில் ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுத்திருப்பேன்’ என்று கூறுவதாக எனக்குச் செய்தி எட்டியது. ‘(கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசர கோலமாகத்தான் நடைபெற்று முடிந்தது’ என்று கூறி எந்த மனிதரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஆம்! அது அப்படி (அனைவரிடமும் ஆலோசிக்காமல் அவசரமாக)த் தான் நடந்தது. ஆனால், அதன் தீமைகளிலிருந்து அல்லாஹ் (நம்மைப்) பாதுகாத்து விட்டான். உங்களில் ஒட்டகங்களில் அதிகமாகப் பயணிக்கும் (அரபியர்) எவரும் (மூப்பிலும் மேன்மையிலும்) அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்று இல்லை.44
யார் முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒரு மனிதருக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்கிறாரோ அவரும் அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்பட மாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.
மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச்செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூ சாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறுசிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.)
முஹாஜிர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் போய் ஒன்றுகூடினர். நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அபூபக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்” என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம்.
அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான சஅத் பின் உபாதா (ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒருமனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, “முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு நாங்கள், “எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்” என்றோம்.
அதற்கு அவர்கள் இருவரும், “அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)” என்று சொன்னார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்” என்று கூறிவிட்டு நடந்தோம். பனூ சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.
அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், “இவர்தான் சஅத் பின் உபாதா” என்று பதிலளித்தனர். “அவருக்கென்ன நேர்ந்துள்ளது?” என்று நான் கேட்டேன். மக்கள், “அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினர்.
நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்த போது அன்சாரிகளின் பேச்சாளர் ஓரிறை உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, “பின்னர், நாங்கள் (அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர்தான். உங்கள் கூட்டத்திóருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும் ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்” என்று கூறினார்.
(உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிட வேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த வெப்பத்தில் சிறிதளவையேனும் தணித்திட வேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள், “நிதானத்தைக் கையாளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் (அபூபக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை.
இதையடுத்து அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும் விட்டுவிடாமல் அதைப் போன்று, அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது உரையில்) குறிப்பிட்டார்கள்: (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண)நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே.
(ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்த குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தான் அரபியரிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் (போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்)முன் கொண்டுவரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே நான் விரும்பினேன். (இன்றுவரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான், சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக்கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்” என்றார்.
அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். ஆகவே, “அபூபக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)” என்று நான் சொன்னேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள்தான் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்துகொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்துகொடுத்தனர்.
நாங்கள் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்து வதற்காக) விரைந்துசென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நீங்கள் சஅத் பின் உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்” என்று சொன்னார்.
உடனே நான், “அல்லாஹ்தான் சஅத் பின் உபாதாவைக் கொன்றான் (நாங்களல்ல)” என்று கூறினேன்.45
மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததைவிட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள்.
அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்துகொடுக்க வேண்டிவரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம்.
ஆக, யார் முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறாரோ அவரும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

6831. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْمُرُ فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ.
பாடம்: 32
திருமணமாகாத இருவர் (விபசாரம் புரிந்துவிட்டால்) அவர்களுக்கு (நூறு) சாட்டையடிகளும் நாடுகடத்தலும் தண்டனையாக வழங்கப்படும்.
(அல்லாஹ் கூறுகின்றான்:)
விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி வழங்குங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்று)தில், அவ்விருவர்மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைநம்பிக்கையாளர் களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க் கட்டும்.
விபசாரம் செய்த ஆண் ஒரு விபசாரியையோ அல்லது இணை வைப்பவளையோ தவிர வேறு யாரையும் மணமுடிக்கமாட்டான். விபசாரியை, விபசாரம் செய்த ஓர் ஆண், அல்லது இணைவைப்பாளன் தவிர வேறு யாரும் மணமுடிக்கமாட்டார். இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடை செய்யப்பட்டுள்ளது (24:2,3).
(இந்த வசனத்திலுள்ள) ‘இரக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதற்கு இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் ‘தண்டனைகளை நிலைநாட்டும் விஷயத்தில் இரக்கம் காட்டக் கூடாது’ என்று (விளக்கம்) கூறினார்கள்.
6831. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்துவிட்டவருக்கு நூறு சாட்டையடிகள் கொடுத்து, அவரை ஓராண்டு காலம் நாடுகடத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட நான் கேட்டுள்ளேன்.46