6661. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَزَالُ جَهَنَّمُ تَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ حَتَّى يَضَعَ رَبُّ الْعِزَّةِ فِيهَا قَدَمَهُ فَتَقُولُ قَطْ قَطْ وَعِزَّتِكَ. وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ "". رَوَاهُ شُعْبَةُ عَنْ قَتَادَةَ.
பாடம்: 12
அல்லாஹ்வின் கண்ணியம், அவனுடைய பண்புகள், அவனுடைய உரைகள் ஆகியவை பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், “(இறைவா!) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள்.47
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில் நரகத்திலிருந்து இறைநம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டபிறகு) சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர் “என் இறைவா! நரகத்தை விட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று கூறுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அந்த மனிதரைப் பார்த்து) அல்லாஹ், “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இன்னும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று கூறுவான்.
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.49
(இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள், “(இறைவா!) உன் கண்ணியத் தின் மீதாணையாக! உன் அருள் வளத்தைவிட்டு நான் தேவையற்றவன் அல்லன்” என்றார்கள்.50
6661. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
(நரகவாசிகள் நரகத்தில் போடப்படு வார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத் தால்) “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தமது பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது “போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!” என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 83

6662. حَدَّثَنَا الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ، وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ ـ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاسْتَعْذَرَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ، فَقَامَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ فَقَالَ لِسَعْدِ بْنِ عُبَادَةَ لَعَمْرُ اللَّهِ لَنَقْتُلَنَّهُ.
பாடம்: 13
‘அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக’ என்று ஒரு மனிதர் சொல்வது52
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (15:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல அம்ருக’ எனும் சொல்லுக்கு ‘உமது வாழ்நாள் மீதாணையாக! என்பது பொருளாகும்.
6662. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், (அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மை யானவர்களென இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன்.
அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அதில் (பின்வருமாறு உள்ளது):
அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபைக்கு எதிராக உதவி கோரினார்கள். உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம்” என்று கூறினார்கள்.53
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

6663. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها {لاَ يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ} قَالَ قَالَتْ أُنْزِلَتْ فِي قَوْلِهِ لاَ، وَاللَّهِ بَلَى وَاللَّهِ.
பாடம்: 14
நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தியங்களுக்காக உங்களை அல்லாஹ் தண்டிக்கமாட்டான். மாறாக, உங்களுடைய உள்ளங்கள் முடிவெடுத்தவற்றின் காரண மாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனும் சகிப்புத்தன்மை மிக்கவனும் ஆவான். (2:225)
6663. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக உங்களை அல்லாஹ் தண்டிக்கமாட்டான்” எனும் (2:225ஆவது) இறைவசனம் ‘லா வல்லாஹி’ (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், ‘பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கருதாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுபவர் தொடர்பாக அருளப்பெற்றது.54

6664. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا زُرَارَةُ بْنُ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَرْفَعُهُ قَالَ "" إِنَّ اللَّهَ تَجَاوَزَ لأُمَّتِي عَمَّا وَسْوَسَتْ أَوْ حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ أَوْ تَكَلَّمْ "".
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6664. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை;) மன்னித்து விடுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.56

6665. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، أَوْ مُحَمَّدٌ عَنْهُ عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ ابْنَ شِهَابٍ، يَقُولُ حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ يَخْطُبُ يَوْمَ النَّحْرِ إِذْ قَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ كُنْتُ أَحْسِبُ يَا رَسُولَ اللَّهِ كَذَا وَكَذَا قَبْلَ كَذَا وَكَذَا. ثُمَّ قَامَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كُنْتُ أَحْسِبُ كَذَا وَكَذَا لِهَؤُلاَءِ الثَّلاَثِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" افْعَلْ وَلاَ حَرَجَ "" لَهُنَّ كُلِّهِنَّ يَوْمَئِذٍ، فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَىْءٍ إِلاَّ قَالَ "" افْعَلْ وَلاَ حَرَجَ "".
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6665. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளில் (தமது ஒட்டகத்தின்மேல் இருந்தவாறு) உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒருவர் எழுந்து, “நான் (ஹஜ்ஜில்) இன்னின்னதற்கு முன் இன்னின்னது (ஷைத்தானுக்குக் கல் எறிவதற்குமுன் பலியிடல், பலியிடலுக்குமுன் தலைமுடி களைதல்) என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.
பிறகு மற்றொருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (முடி களைதல், பலியிடல், கல்லெறிதல் ஆகிய) இம்மூன்றையும் நான் இன்னின்னவாறு நினைத்துக்கொண்டிருந்தேன்” என்று சொன்னார்.
இவை அனைத்துக்குமே நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறே) செய்யுங்கள். (முன்பின்னாகச் செய்வதில்) குற்றமில்லை” என்றே பதிலளித்தார்கள். அன்று கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்துக்கும் “(அப்படியே) செய்யுங்கள்; (அப்படியே) செய்யுங்கள். (அதனால்) குற்றமில்லை” என்றே நபியவர்கள் விடையளித்தார்கள்.57

6666. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" لاَ حَرَجَ "". قَالَ آخَرُ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ "" لاَ حَرَجَ "". قَالَ آخَرُ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" لاَ حَرَجَ "".
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6666. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், “கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபுஸ் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை” என்று சொன்னார்கள். மற்றொருவர், “பலியிடுவதற்கு முன்பே தலைமுடி களைந்துவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள். இன்னொருவர், “கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள்.58

6667. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، دَخَلَ الْمَسْجِدَ يُصَلِّي وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَجَاءَ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ لَهُ "" ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ "". فَرَجَعَ فَصَلَّى، ثُمَّ سَلَّمَ فَقَالَ "" وَعَلَيْكَ، ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ "". قَالَ فِي الثَّالِثَةِ فَأَعْلِمْنِي. قَالَ "" إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَأَسْبِغِ الْوُضُوءَ، ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ فَكَبِّرْ، وَاقْرَأْ بِمَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ، سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَسْتَوِيَ وَتَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَسْتَوِيَ قَائِمًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا "".
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6667. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவிட்டு, பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முகமன் (சலாம்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.
அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! எனப் பதில் சலாம் கூறிவிட்டு,) “திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். (இவ்வாறு மூன்று தடவை நடந்தது.) மூன்றாவது தடவையில் அந்த மனிதர், “அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள்!” என்று கேட்டார்.
“நீர் தொழ நினைத்தால் (முதலில்) நிறைவாக அங்கத் தூய்மை (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவீராக! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதுவீராக! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக!
பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உமது தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59

6668. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ هُزِمَ الْمُشْرِكُونَ يَوْمَ أُحُدٍ هَزِيمَةً تُعْرَفُ فِيهِمْ، فَصَرَخَ إِبْلِيسُ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ فَإِذَا هُوَ بِأَبِيهِ فَقَالَ أَبِي أَبِي. قَالَتْ فَوَاللَّهِ مَا انْحَجَزُوا حَتَّى قَتَلُوهُ، فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ. قَالَ عُرْوَةُ فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهَا بَقِيَّةٌ حَتَّى لَقِيَ اللَّهَ.
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6668. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அது அவர்களில் (வெளிப்படையாகவே) தெரிந்தது. அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கூச்சலிட்டான். உடனே முஸ்óம்களில் முன்அணியினர் (எதிரிகள் என் றெண்ணி), பின்அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக்கொண்ட னர். அப்போது ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள், தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்.
உடனே, “(அவர்) என் தந்தை! என் தந்தை!” என்று (சப்தமிட்டுக்) கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரை விட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(என் தந்தையைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட) உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அன்னாருடைய வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.60

6669. حَدَّثَنِي يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنِي عَوْفٌ، عَنْ خِلاَسٍ، وَمُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَكَلَ نَاسِيًا وَهْوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ "".
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6669. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால், அவர் தமது நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும்வைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 83
6669. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால், அவர் தமது நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும்வைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 83
6670. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ، فَمَضَى فِي صَلاَتِهِ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ انْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، وَسَجَدَ قَبْلَ أَنْ يُسَلِّمَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَسَلَّمَ.
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6670. அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களுக்குத் தொழுவித் தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்திற்காக மறதியாக) எழுந்து தொழுகையைத் தொடர்ந்தார்கள். தொழுகை முடியும் தறுவாயில் நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுப்பதை மக்கள் எதிர்ப்பார்த்திருந்தபோது (அமர்விலேயே) சலாம் கொடுப்பதற்கு முன்பாக தக்பீர் கூறி சஜ்தா செய்தார்கள். பிறகு (முதல் சஜ்தாவிóருந்து) தலையைத் தூக்கி மீண்டும் தக்பீர் கூறி (இரண்டாவது) சஜ்தா செய்து பின்னர் தலையை உயர்த்தி சலாம் கொடுத்தார்கள்.62

6671. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ عَبْدَ الْعَزِيزِ بْنَ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ صَلاَةَ الظُّهْرِ، فَزَادَ أَوْ نَقَصَ مِنْهَا ـ قَالَ مَنْصُورٌ لاَ أَدْرِي إِبْرَاهِيمُ وَهِمَ أَمْ عَلْقَمَةُ ـ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَقَصُرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ قَالَ "" وَمَا ذَاكَ "". قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا. قَالَ فَسَجَدَ بِهِمْ سَجْدَتَيْنِ ثُمَّ قَالَ "" هَاتَانِ السَّجْدَتَانِ لِمَنْ لاَ يَدْرِي، زَادَ فِي صَلاَتِهِ أَمْ نَقَصَ، فَيَتَحَرَّى الصَّوَابَ، فَيُتِمُّ مَا بَقِيَ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ "".
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6671. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹ்ர் தொழுகையை தொழுவித்தார்கள். அப்போது ‘(ஐந்து ரக்அத்களாக) அதிகமாக்கி’ அல்லது ‘(மூன்று ரக்அத்களாகக்) குறைத்துத்’ தொழுவித்தார்கள். -அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்சூர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இடத்தில் சந்தேகத்துடன் அறிவித்தது இப்ராஹீம் (ரஹ்) அவர்களா? அல்லது அல்கமா (ரஹ்) அவர்களா என்று எனக்குத் தெரியாது- (தொழுகை முடிந்தபின்), “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத் எண்ணிக்கை) குறைந்துவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். மக்கள், “இப்படி இப்படி நீங்கள் தொழுவித்தீர்கள்” என்று சொன்னார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் சேர்ந்து இரண்டு சஜ்தா செய்தார்கள். பிறகு, “இந்த இரண்டு சஜ்தாக்கள், தமது தொழுகையில் அதிகப்படுத்திவிட்டோமா அல்லது குறைத்துவிட்டோமா என்று (உறுதியாகத்) தெரியாதவர் செய்ய வேண்டியவையாகும்; (முதலில்) யோசித்து முடிவு செய்ய வேண்டும். பிறகு எஞ்சியுள்ள (ரக்அத்)தை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள்.63

6672.
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6672. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விஷயத்தில் நீங்கள் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று (களிரிடம் மூசா) கூறினார்” எனும் (18:73ஆவது) வசனத்(தின் விளக்கத்)தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முதல் முறையில் மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியால் ஆகும்” என்று சொன்னார்கள்.64
அத்தியாயம் :

6673. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَتَبَ إِلَىَّ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ قَالَ الْبَرَاءُ بْنُ عَازِبٍ وَكَانَ عِنْدَهُمْ ضَيْفٌ لَهُمْ فَأَمَرَ أَهْلَهُ أَنْ يَذْبَحُوا قَبْلَ أَنْ يَرْجِعَ، لِيَأْكُلَ ضَيْفُهُمْ، فَذَبَحُوا قَبْلَ الصَّلاَةِ، فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الذَّبْحَ. فَقَالَ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي عَنَاقٌ جَذَعٌ، عَنَاقُ لَبَنٍ هِيَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ. فَكَانَ ابْنُ عَوْنٍ يَقِفُ فِي هَذَا الْمَكَانِ عَنْ حَدِيثِ الشَّعْبِيِّ، وَيُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ بِمِثْلِ هَذَا الْحَدِيثِ، وَيَقِفُ فِي هَذَا الْمَكَانِ وَيَقُولُ لاَ أَدْرِي أَبَلَغَتِ الرُّخْصَةُ غَيْرَهُ أَمْ لاَ. رَوَاهُ أَيُّوبُ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6673. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். ஆகவே, நான் என் வீட்டாரிடம் (ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை முடித்துக்கொண்டு) நான் திரும்பி வருவதற்குள் விருந்தாளி சாப்பிடுவதற்காக (குர்பானி பிராணியை) அறுத்திடுமாறு கட்டளையிட்டேன். அதன்படி அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பாகவே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். பிறகு இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மறுபடியும் (வேறொரு) குர்பானி பிராணியை அறுத்திடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.
அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி என்னிடம் உள்ளது. அது இரு இறைச்சி ஆடுகளை விடச் சிறந்தது (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்டேன். (நபியவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்.)65
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள், ஆமிர் அஷ் ஷஅபீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பை இத்துடன் நிறுத்திவிட்டு, முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் (அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவித்துள்ள இதே போன்ற ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு இத்துடன் நிறுத்திவிட்டு, “பராஉ (ரலி) அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் இச்சலுகை பொருந்துமா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

6674. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جُنْدَبًا، قَالَ شَهِدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ عِيدٍ ثُمَّ خَطَبَ ثُمَّ قَالَ "" مَنْ ذَبَحَ فَلْيُبَدِّلْ مَكَانَهَا، وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ "".
பாடம்: 15
மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5)
மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்:
“நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6674. ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்துகொண்டேன். (தொழுகை முடிந்த) பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் “யார் தொழுகைக்குமுன் (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டாரோ அவர் அதற்கு மாற்றாக மற்றொன்றை (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும். யார் அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.66

6675. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا فِرَاسٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْكَبَائِرُ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَالْيَمِينُ الْغَمُوسُ "".
பாடம்: 16
பொய்ச் சத்தியம்67
நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே தவறாகப் பயன்படுத் தாதீர்கள். அவ்வாறு செய்தால் (பூமியில்) பதிந்தபின், பாதம் பிறழ்ந்துவிடும். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்த காரணத்தால் (இம்மையில்) துன்பத்தை அனுபவிப்பீர்கள்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. (16:94)
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தகல்’ (தவறு) எனும் சொல்லுக்குச் சூழ்ச்சி, வஞ்சகம் என்று பொருள்.
6675. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியவை பெரும் பாவங்களாகும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6676. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம்: 17
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்த கையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட் டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு. (3:77)
மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் நன்மைகள் புரிவதற்கும், தீமையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கும், மக்களிடையே சமாதா னம் செய்வதற்கும் தடையாக, நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ் வை(க் கருவி) ஆக்கிவிட வேண்டாம். அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கு அறிவோனுமாவான். (2:224)

அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் எது உள்ளதோ அதுதான் உங்களுக்கு மேலானதாக இருக்கும். (16:95)
நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற் றுங்கள். அல்லாஹ்வைப் பொறுப்பாளியாக்கி, நீங்கள் செய்யும் சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை நீங்கள் முறித்துவிடாதீர்கள். (16:91)
6676. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக்கொள்வதற்காக யார் திட்டமிட்டு, (பொய்ச்) சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்” என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தைஉறுதிப்படுத்தும் விதமாக அல்லாஹ், “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை” எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான்.68

6677. فَدَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فَقَالَ مَا حَدَّثَكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، فَقَالُوا كَذَا وَكَذَا. قَالَ فِيَّ أُنْزِلَتْ، كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " بَيِّنَتُكَ أَوْ يَمِينُهُ ". قُلْتُ إِذًا يَحْلِفُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، وَهْوَ فِيهَا فَاجِرٌ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ، وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ".
பாடம்: 17
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்த கையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட் டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு. (3:77)
மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் நன்மைகள் புரிவதற்கும், தீமையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கும், மக்களிடையே சமாதா னம் செய்வதற்கும் தடையாக, நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ் வை(க் கருவி) ஆக்கிவிட வேண்டாம். அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கு அறிவோனுமாவான். (2:224)
மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் எது உள்ளதோ அதுதான் உங்களுக்கு மேலானதாக இருக்கும். (16:95)
நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற் றுங்கள். அல்லாஹ்வைப் பொறுப்பாளியாக்கி, நீங்கள் செய்யும் சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை நீங்கள் முறித்துவிடாதீர்கள். (16:91)
6677. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப் பாளர்) அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பின்னர் அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அங்கு வந்து, “அபூஅப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களுக்கு என்ன அறிவித்தார்?” என்று கேட்டார்கள். “இப்படி, இப்படி” என மக்கள் கூறினார்கள்.
அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் அறிவித்தது உண்மைதான்.) இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனக்கொரு கிணறு இருந்தது. (அக்கிணறு தொடர்பாக எனக்கும் ஒரு யூதருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.) எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்(து விஷயத்தைத் தெரிவித்)தேன். அப்போது அவர்கள் “(ஒன்று) உன்னுடைய சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவரது சத்தியம்” என்று கூறினார்கள். (உடனே) நான் “அப்படியானால், அந்த யூதர் (தயங்காமல்) அது தொடர்பாக(ப் பொய்)ச் சத்தியம் செய்துவிடுவாரே, அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காக யார் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்” என்று கூறினார்கள்.69

6678. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ أَرْسَلَنِي أَصْحَابِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَسْأَلُهُ الْحُمْلاَنَ فَقَالَ "" وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ عَلَى شَىْءٍ "". وَوَافَقْتُهُ وَهْوَ غَضْبَانُ فَلَمَّا أَتَيْتُهُ قَالَ "" انْطَلِقْ إِلَى أَصْحَابِكَ فَقُلْ إِنَّ اللَّهَ ـ أَوْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ـ يَحْمِلُكُمْ "".
பாடம்: 18
தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத் துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்70
6678. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்களை ஏற்றியனுப்ப ஊர்தி ஒட்டகம் கேட்கும்படி நபி (ஸல்) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தனர். (நான் சென்று அவர்களிடம் ஒட்டகம் கேட்டேன்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நான் எதன் மீதும் ஏற்றியனுப்ப இயலாது” என்று கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் கோபமாய் இருந்தார்கள்.
பிறகு நான் அவர்களிடம் சென்றபோது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சென்று, ‘அல்லாஹ்’ அல்லது ‘அல்லாஹ்வின் தூதர்’ உங்களை ஏற்றியனுப்ப வாகனம் வழங்குவார்கள் என்று சொல்லுங்கள் என்றார்கள்.71

6679. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنَا الْحَجَّاجُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ الأَيْلِيُّ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِمَّا قَالُوا ـ كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ ـ فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ} الْعَشْرَ الآيَاتِ كُلَّهَا فِي بَرَاءَتِي. فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ـ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحٍ لِقَرَابَتِهِ مِنْهُ ـ وَاللَّهِ لاَ أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا، بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ. فَأَنْزَلَ اللَّهُ {وَلاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى} الآيَةَ. قَالَ أَبُو بَكْرٍ بَلَى وَاللَّهِ إِنِّي لأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي. فَرَجَعَ إِلَى مِسْطَحٍ النَّفَقَةَ الَّتِي كَانَ يُنْفِقُ عَلَيْهِ وَقَالَ وَاللَّهِ لاَ أَنْزِعُهَا عَنْهُ أَبَدًا.
பாடம்: 18
தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத் துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்70
6679. இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:)
அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளினான்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறியபின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்- அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டுவந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் கூறினார்கள்.72

6680. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ الْقَاسِمِ، عَنْ زَهْدَمٍ، قَالَ كُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ، فَوَافَقْتُهُ وَهْوَ غَضْبَانُ فَاسْتَحْمَلْنَاهُ، فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا ثُمَّ قَالَ "" وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَتَحَلَّلْتُهَا "".
பாடம்: 18
தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத் துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்70
6680. ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் (ஏதோ) கோபத்தில் இருந்தார்கள். அன்னாரிடம் நாங்கள் (எங்கள் பயணத்திற்குத் தேவையான) வாகனங்களைக் கோரினோம். அப்போது அவர்கள், எங்களுக்கு வாகனங்கள் தரமாட்டேன் என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள்.
பிறகு (எங்களுக்கு ஊர்தி ஒட்டகங் களைத் தந்துவிட்டு) “அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே நான் செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரமும் செய்வேன்” என்று சொன்னார்கள்.73