6641. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا كَانَ مِمَّا عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ أَخْبَاءٍ ـ أَوْ خِبَاءٍ ـ أَحَبَّ إِلَىَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ ـ أَوْ خِبَائِكَ، شَكَّ يَحْيَى ـ ثُمَّ مَا أَصْبَحَ الْيَوْمَ أَهْلُ أَخْبَاءٍ ـ أَوْ خِبَاءٍ ـ أَحَبَّ إِلَىَّ مِنْ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ أَوْ خِبَائِكَ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَأَيْضًا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ "". قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَىَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ قَالَ "" لاَ إِلاَّ بِالْمَعْرُوفِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6641. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார்) ‘ஹின்த் பின்த் உத்பா பின் ரபீஆ’ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் இழிவடைவதே (இதற்கு முன்பு) எனக்கு விருப்பமானதாய் இருந்தது. பிறகு எல்லா வீட்டார்களிலும் உங்களுடைய வீட்டார் கண்ணியமடைவதே இன்று எனக்கு விருப்பமானதாய் மாறிவிட்டது” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உனது இந்த விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று கூறினார்கள்.

அவர் “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதராவார். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (எங்கள் பிள்ளைகளுக்கு) நான் உணவளிப்பது என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமாகாது” என்று பதிலளித்தார்கள்.24

‘வீட்டார்கள்’ என்பதைக் குறிக்கப் பன்மையை (அக்பாஉ) பயன்படுத்தினார்களா? ஒருமையை (கிபாஉ) பயன்படுத்தினார்களா? என்பதில் அறிவிப்பாளர் யஹ்யா பின் புகைர் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 83
6642. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُضِيفٌ ظَهْرَهُ إِلَى قُبَّةٍ مِنْ أَدَمٍ يَمَانٍ إِذْ قَالَ لأَصْحَابِهِ "" أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ "". قَالُوا بَلَى. قَالَ "" أَفَلَمْ تَرْضَوْا أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ "". قَالُوا بَلَى. قَالَ "" فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنِّي لأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6642. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை யமன் நாட்டுத் தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி இருந்தபோது தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்பமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘ஆம்’ (விரும்புவோம்) என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.25


அத்தியாயம் : 83
6643. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6643. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். விடிந்ததும் அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத்திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும்” என்று சொன்னார்கள்.26


அத்தியாயம் : 83
6644. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَتِمُّوا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَرَاكُمْ مِنْ بَعْدِ ظَهْرِي إِذَا مَا رَكَعْتُمْ وَإِذَا مَا سَجَدْتُمْ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6644. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(தொழுகையில்) ருகூவையும் (குனி தலையும்) சஜ்தாவையும் (சிரவணக்கத் தையும்) பரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் ருகூஉ செய்யும்போதும் சஜ்தா செய்யும்போதும் என் முதுகுக்குப் பின்னால் உங்களை நான் பார்க்கிறேன்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 83
6645. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ امْرَأَةً، مِنَ الأَنْصَارِ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم مَعَهَا أَوْلاَدٌ لَهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّكُمْ لأَحَبُّ النَّاسِ إِلَىَّ "". قَالَهَا ثَلاَثَ مِرَارٍ.
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6645. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் தம் குழந்தைகளுடன் அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என்னுயிர் எவன் கையிலுள் ளதோ அவன்மீது சத்தியமாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே என் பேரன்பிற்குரியவர்கள்” என்று மூன்று முறை கூறினார்கள்.27

அத்தியாயம் : 83
6646.
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6646. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் தமது வாகனத்தில் பயணம் செய்தபடி தம்முடைய தந்தை பெயரால் சத்தியம் செய்துகொண்டிருந்தபோது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றடைந்தார்கள்.

மேலும், “அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (ஆகவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் :
6647. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ سَالِمٌ قَالَ ابْنُ عُمَرَ سَمِعْتُ عُمَرَ، يَقُولُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ "". قَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا مُنْذُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ذَاكِرًا وَلاَ آثِرًا. قَالَ مُجَاهِدٌ {أَوْ أَثَرَةٍ مِنْ عِلْمٍ} يَأْثُرُ عِلْمًا. تَابَعَهُ عُقَيْلٌ وَالزُّبَيْدِيُّ وَإِسْحَاقُ الْكَلْبِيُّ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ ابْنُ عُيَيْنَةَ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عُمَرَ.
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6647. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும்போதும் சரி; பிறரது பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: (‘பிறரது பேச்சை எடுத்துரைத் தல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆஸிர்’ எனும் சொல்லின் இனத்திலுள்ளதும், 46:4ஆவது வசனத் தின் மூலத்தில் இடம்பெற்றுள்ளதுமான) ‘அஸாரதின் மின் இல்மின்’ எனும் சொற்றொடருக்கு ‘ஞானத்தை அறிவித்தல்’ என்பது பொருள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

வேறு இரு அறிவிப்புகளில், உமர் (ரலி) அவர்கள் (இவ்விதம்) சத்தியம் செய்வதை நபி (ஸல்) அவர்களே செவியுற்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 83
6648. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهُ صلى الله عليه وسلم "" لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ "".
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6648. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 83
6649. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، وَالْقَاسِمِ التَّمِيمِيِّ، عَنْ زَهْدَمٍ، قَالَ كَانَ بَيْنَ هَذَا الْحَىِّ مِنْ جَرْمٍ وَبَيْنَ الأَشْعَرِيِّينَ وُدٌّ وَإِخَاءٌ، فَكُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فِيهِ لَحْمُ دَجَاجٍ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ أَحْمَرُ كَأَنَّهُ مِنَ الْمَوَالِي، فَدَعَاهُ إِلَى الطَّعَامِ فَقَالَ إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ، فَحَلَفْتُ أَنْ لاَ آكُلَهُ. فَقَالَ قُمْ فَلأُحَدِّثَنَّكَ عَنْ ذَاكَ، إِنِّي أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ فَقَالَ "" وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ "". فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنَهْبِ إِبِلٍ فَسَأَلَ عَنَّا. فَقَالَ "" أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ "". فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا مَا صَنَعْنَا حَلَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَحْمِلُنَا وَمَا عِنْدَهُ مَا يَحْمِلُنَا ثُمَّ حَمَلَنَا، تَغَفَّلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمِينَهُ، وَاللَّهِ لاَ نُفْلِحُ أَبَدًا، فَرَجَعْنَا إِلَيْهِ فَقُلْنَا لَهُ إِنَّا أَتَيْنَاكَ لِتَحْمِلَنَا فَحَلَفْتَ أَنْ لاَ تَحْمِلَنَا، وَمَا عِنْدَكَ مَا تَحْمِلُنَا. فَقَالَ "" إِنِّي لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، وَاللَّهِ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَتَحَلَّلْتُهَا "".
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6649. ஸஹ்தம் பின் முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(குளாஆ குலத்தைச் சேர்ந்த) இந்த (எங்கள்) ஜர்ம் கோத்திரத்தாருக்கும் (யமன் நாட்டவர்களான) அஷ்அரீ குலத்தாருக்குமிடையே நட்புறவும் சகோதரத்துவமும் இருந்துவந்தது. (ஒரு முறை) நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அபூமூசா (ரலி) அவர்களுக்கு அருகில் உணவு வைக்கப்பட்டது. அதில் கோழி இறைச்சி இருந்தது. அபூமூசா (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் ‘பனூ தைம்’ குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் அடிமைகளில் ஒருவரைப் போன்று காணப்பட்டார்.

அபூமூசா (ரலி) அவர்கள் அந்த மனிதரையும் உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், “இந்தக் கோழி (இனம், அசுத்தம்) ஒன்றைத் தின்பதை நான் கண்டேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனிமேல் நான் உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன்” என்று சொன்னார்.

(இதைக் கேட்ட) அபூமூசா (ரலி) அவர்கள், “எழுந்து (இங்கே) வாருங்கள்! இதைப் பற்றி உங்களுக்கு நான் (நபிகளாரின் சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை) அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்துசெல்ல ஒட்டகங்கள் தரும்படி கேட்டுச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (ஊர்தி) ஒட்டகங்கள் என்னிடம் இல்லை. எனவே, உங்களை நான் (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பமாட்டேன்” என்று கூறினார்கள். (ஆகவே நாங்கள் திரும்பிச் சென்றுவிட்டோம்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த (ஃகனீமத்) ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே, “அஷ்அரீ குலத்தார் எங்கே?” என எங்களைக் குறித்து கேட்டுவிட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.

நாங்கள் (அவர்களிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்டு) சென்றுகொண்டிருந்த போது (நாங்கள் எங்களுக்குள்) “நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு (ஊர்தி) ஒட்டகங்கள் வழங்கப் போவதில்லையெனச் சத்தியம் செய்தார்கள்; அவர்களிடம் (அதற்கான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. பிறகு (என்ன நடந்ததோ!) நமக்கு ஒட்டகங்களை வழங்கினார்கள். (ஒருவேளை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கும்படி செய்துவிட்டோமா! (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை” என்று பேசிக்கொண்டோம்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். அவர்களிடம், “நாங்கள் தங்களிடம் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் கேட்டு (முதலில்) வந்தபோது எங்களுக்கு ஒட்டகங்கள் தரப்போவதில்லையெனத் தாங்கள் சத்தியம் செய்தீர்கள். தங்களிடம் எங்களை ஏற்றியனுப்ப(த் தேவையான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. (பிறகு எங்களுக்கு ஒட்டகங்கள் தரும்படி மறதியாகச் சொல்லிவிட்டீர்களோ?)” என்று கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களை ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (பொதுவாக) நான் எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே நான் செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்வேன்” என்று கூறினார்கள்.29

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 83
6650. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ بِاللاَّتِ وَالْعُزَّى. فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ. فَلْيَتَصَدَّقْ "".
பாடம்: 5 லாத், உஸ்ஸா உள்ளிட்ட (பொய்த் தெய்வச்) சிலைகள் பெயரால் சத்தியம் செய்யலாகாது.
6650. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் சத்தியம் செய்யும்போது, (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், “வா சூதாடலாம்” என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30

அத்தியாயம் : 83
6651. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَكَانَ يَلْبَسُهُ، فَيَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ، فَصَنَعَ النَّاسُ خَوَاتِيمَ ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَنَزَعَهُ، فَقَالَ "" إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتِمَ وَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ "". فَرَمَى بِهِ ثُمَّ قَالَ "" وَاللَّهِ لاَ أَلْبَسُهُ أَبَدًا "". فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.
பாடம்: 6 சத்தியம் செய்யும்படி கோரப்படாதபோதும் சத்தியம் செய்தல்31
6651. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன்மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்துகொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்துக்கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்த னர். பிறகு நபி (ஸல்) அவர்கள், சொற் பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழற்றிவிட்டு, “நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்” என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள்.

பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்.” என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.32

அத்தியாயம் : 83
6652.
பாடம்: 7 இஸ்லாம் அல்லாத வேறொரு மார்க்கத்தின் பெயரால் சத்தியம் செய்வது “யார் ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’ ஆகியவற்றின் பெயரால் சத்தியம் செய்தாரோ, அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.33 (ஆனால், இவ்வாறு) சத்தியம் செய்தவரை இறைமறுப்பின் பக்கம் நபியவர்கள் சேர்க்கவில்லை.34
6652. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகின்றார். எதன்மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அதன்மூலம் அவர் நரக நெருப்பில் வேதûனை செய்யப்படுவார். ஓர் இறை நம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். எவர் ஓர் இறைநம்பிக்கையாளரை இறை மறுப்பாளர் (காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.

இதை ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

அத்தியாயம் :
6653. وَقَالَ عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ ثَلاَثَةً فِي بَنِي إِسْرَائِيلَ أَرَادَ اللَّهُ أَنْ يَبْتَلِيَهُمْ، فَبَعَثَ مَلَكًا فَأَتَى الأَبْرَصَ فَقَالَ تَقَطَّعَتْ بِي الْحِبَالُ، فَلاَ بَلاَغَ لِي إِلاَّ بِاللَّهِ، ثُمَّ بِكَ "". فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம்: 8 ‘அல்லாஹ்வும் நீயும் நாடினால்’ என்று கூறலாகாது. ‘அல்லாஹ் வால், பிறகு உன்னால்’ என்று கூறலாமா?36
6653. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் (தொழுநோயாளி, வழுக்கைத் தலையர், குருடர் ஆகிய) மூவரைச் சோதிக்க அல்லாஹ் நாடினான். ஆகவே, அவன் வானவர் ஒருவரை அனுப்பினான். அவர் (அம்மூவரில் ஒருவரான) தொழுநோயாளியிடம் வந்து, “பயணத்தில் என் வாழ்வா தாரம் அறுபட்டுவிட்டது (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது). இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும் பிறகு உம்மையும் தவிர வேறெவருமில்லை” என்று கூறினார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாகக் கூறினார்கள்.37

அத்தியாயம் : 83
6654. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَشْعَثَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِإِبْرَارِ الْمُقْسِمِ.
பாடம்: 9 “தங்களிடம் ஏதேனும் சான்று வருமாயின் அதை நிச்சயமாக நாங்கள் நம்புவோம் என்று அவர்கள் பலமாகச் சத்தியம் செய்தார்கள்” எனும் (6:109ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒருமுறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இக்கனவுக்குச் (சொன்ன விளக்கத்தில் நான்) செய்த தவறென்ன என்பதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “(இதற்காகவெல்லாம்) சத்தியம் செய்யாதீர்கள்” என்றார்கள்.38
6654. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சத்தியம் செய்தவர் (அதை) நிறை வேற்ற உதவும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.39

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 83
6655. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَاصِمٌ الأَحْوَلُ، سَمِعْتُ أَبَا عُثْمَانَ، يُحَدِّثُ عَنْ أُسَامَةَ، أَنَّ ابْنَةً لِرَسُولِ اللَّهِ، صلى الله عليه وسلم أَرْسَلَتْ إِلَيْهِ وَمَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُسَامَةُ بْنُ زَيْدٍ وَسَعْدٌ وَأُبَىٌّ أَنَّ ابْنِي قَدِ احْتُضِرَ فَاشْهَدْنَا. فَأَرْسَلَ يَقْرَأُ السَّلاَمَ وَيَقُولُ "" إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَمَا أَعْطَى وَكُلُّ شَىْءٍ عِنْدَهُ مُسَمًّى فَلْتَصْبِرْ وَتَحْتَسِبْ "". فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ، فَقَامَ وَقُمْنَا مَعَهُ، فَلَمَّا قَعَدَ رُفِعَ إِلَيْهِ، فَأَقْعَدَهُ فِي حَجْرِهِ وَنَفْسُ الصَّبِيِّ تَقَعْقَعُ، فَفَاضَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدٌ مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ "" هَذَا رَحْمَةٌ يَضَعُهَا اللَّهُ فِي قُلُوبِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ "".
பாடம்: 9 “தங்களிடம் ஏதேனும் சான்று வருமாயின் அதை நிச்சயமாக நாங்கள் நம்புவோம் என்று அவர்கள் பலமாகச் சத்தியம் செய்தார்கள்” எனும் (6:109ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒருமுறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இக்கனவுக்குச் (சொன்ன விளக்கத்தில் நான்) செய்த தவறென்ன என்பதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “(இதற்காகவெல்லாம்) சத்தியம் செய்யாதீர்கள்” என்றார்கள்.38
6655. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் புதல்வியார் ஒருவர் (ஸைனப் -ரலி) தம்முடைய மகன் (அல்லது மகள்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், ஆகவே அங்கு வந்துசேர வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும், சஅத் பின் உபாதா (ரலி) அவர்களும், ‘என் தந்தை (ஸைத் பின் ஹாரிஸா-ரலி) அவர்களும்’ அல்லது ‘உபை பின் கஅப் (ரலி) அவர்களும்’ இருந்தோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வியாருக்கு) முகமன் (சலாம்) கூறி அனுப்பியதோடு, “அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியவை. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, பொறுமையைக் கைகொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!” என்றும் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாகத் தம்மிடம் வரவேண்டுமென)க் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம்.

(புதல்வியின் வீட்டுக்குள் நுழைந்த) நபியவர்கள் (அங்கு) அமர்ந்தார்கள். அப்போது அவர்களிடம் குழந்தை தரப்பட்டது. குழந்தையைத் தமது மடியில் படுக்கவைத்தார்கள். குழந்தை சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந் தது. (இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.

அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்களே)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்” என்று சொன்னார்கள்.40


அத்தியாயம் : 83
6656. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَمُوتُ لأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ، تَمَسُّهُ النَّارُ، إِلاَّ تَحِلَّةَ الْقَسَمِ "".
பாடம்: 9 “தங்களிடம் ஏதேனும் சான்று வருமாயின் அதை நிச்சயமாக நாங்கள் நம்புவோம் என்று அவர்கள் பலமாகச் சத்தியம் செய்தார்கள்” எனும் (6:109ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒருமுறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இக்கனவுக்குச் (சொன்ன விளக்கத்தில் நான்) செய்த தவறென்ன என்பதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “(இதற்காகவெல்லாம்) சத்தியம் செய்யாதீர்கள்” என்றார்கள்.38
6656. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்து போனால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது; (‘உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது’ என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.41


அத்தியாயம் : 83
6657. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَلاَ أَدُلُّكُمْ عَلَى أَهْلِ الْجَنَّةِ، كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ، وَأَهْلِ النَّارِ كُلُّ جَوَّاظٍ عُتُلٍّ مُسْتَكْبِرٍ "".
பாடம்: 9 “தங்களிடம் ஏதேனும் சான்று வருமாயின் அதை நிச்சயமாக நாங்கள் நம்புவோம் என்று அவர்கள் பலமாகச் சத்தியம் செய்தார்கள்” எனும் (6:109ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒருமுறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இக்கனவுக்குச் (சொன்ன விளக்கத்தில் நான்) செய்த தவறென்ன என்பதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “(இதற்காகவெல்லாம்) சத்தியம் செய்யாதீர்கள்” என்றார்கள்.38
6657. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை பின்வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்க வாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின்மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.

(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; கர்வம் கொண்டவர்கள் ஆவர்.42

அத்தியாயம் : 83
6658. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَىُّ النَّاسِ خَيْرٌ قَالَ "" قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ قَوْمٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ "". قَالَ إِبْرَاهِيمُ وَكَانَ أَصْحَابُنَا يَنْهَوْنَا وَنَحْنُ غِلْمَانٌ أَنْ نَحْلِفَ بِالشَّهَادَةِ وَالْعَهْدِ.
பாடம்: 10 ‘நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்’ என்றோ, ‘நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்கினேன்’ என்றோ ஒருவர் கூறினால் (அது சத்தியமாகுமா)?43
6658. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், “மக்களில் சிறந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(மக்களில் சிறந்த வர்கள்,) என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்.” என்று விடையளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் “சிறுவர்களான எங்களை எங்கள் சான்றோர்கள் (நபித்தோழர்கள்) ‘அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ ‘அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி’ என்றோ கூறுவதைத் தடுத்துவந்தார்கள்.44

அத்தியாயம் : 83
6659. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ أَوْ قَالَ أَخِيهِ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَهُ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ}
பாடம்: 11 ‘அல்லாஹ்விற்கு நான் அளித்த வாக்குறுதியின் பெயரால்’ என்று கூறுவது45
6659. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “ ‘ஒரு முஸ்லிமின்’ அல்லது ‘தம் சகோதரனின்’ செல்வத்தைப் பறித்துக்கொள்வதற்காக (ஒரு பிரமாண வாக்குமூலத்தின்போது துணிவுடன்) பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்” என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை, உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், “அல்லாஹ்வின் (‘அஹ்த்’ எனும்) ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிட்டவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை” எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 83
6660. قَالَ سُلَيْمَانُ فِي حَدِيثِهِ فَمَرَّ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فَقَالَ مَا يُحَدِّثُكُمْ عَبْدُ اللَّهِ قَالُوا لَهُ فَقَالَ الأَشْعَثُ نَزَلَتْ فِيَّ، وَفِي صَاحِبٍ لِي، فِي بِئْرٍ كَانَتْ بَيْنَنَا.
பாடம்: 11 ‘அல்லாஹ்விற்கு நான் அளித்த வாக்குறுதியின் பெயரால்’ என்று கூறுவது45
6660. சுலைமான் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மேற்கண்ட ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் மக்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அந்த வழியே சென்றார்கள். அப்போது அவர்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்?” என்று கேட்டார்கள். மக்கள் அன்னாரிடம் (விஷயத்தைக்) கூறினார்கள்.

அப்போது அஷ்அஸ் (ரலி) அவர்கள், “எனக்கும் என் தோழர் ஒருவருக்குமிடையே இருந்த ஒரு கிணறு தொடர்பாக எங்கள் விஷயத்தில் அருளப்பெற்றதே இந்த வசனமாகும்” என்று சொன்னார்கள்.46

அத்தியாயம் : 83