624. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ـ ثَلاَثًا ـ لِمَنْ شَاءَ "".
பாடம் : 14
பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும், தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்படுவதை யார் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.
624. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடை யில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என மூன்று முறை கூறிவிட்டு, “விரும்பிய வருக்கு (அதைத் தொழுதுகொள்ள உரிமை உண்டு)” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 10

625. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الأَنْصَارِيَّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَىْءٌ. قَالَ عُثْمَانُ بْنُ جَبَلَةَ وَأَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ لَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلاَّ قَلِيلٌ.
பாடம் : 14
பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும், தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்படுவதை யார் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.
625. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்யத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித்தோழர்களில் (முக்கியமான) சிலர் பள்ளிவாச-ன் தூண்களை நோக்கி (அதைத் தடுப்பாக ஆக்கி ‘சுன்னத்’ தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள்.
அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்).
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அவற்றில் சில அறிவிப்புகளில் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) அவ்விரண்டுக்கும் இடையில் சிறிதே (இடைவெளி) இருக்கும் நிலையில்” என்று கூறியுள்ளதாக இடம்பெற்றுள்ளது.

626. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ بِالأُولَى مِنْ صَلاَةِ الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ بَعْدَ أَنْ يَسْتَبِينَ الْفَجْرُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلإِقَامَةِ.
பாடம் : 15
‘இகாமத்’ சொல்வதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது
626. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாவது தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்- முடித்ததும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ரு டைய சுன்னத்) தொழுவார்கள்.
பின்னர் (இரண்டாவது தொழுகை அறிவிப்பான) ‘இகாமத்’ சொல்(- தொழுகை நடத்து)வதற்காகத் தம்மிடம் முஅத்தின் வரும்வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்திருப்பார்கள்.

627. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ـ ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ ـ لِمَنْ شَاءَ "".
பாடம் : 16
ஒவ்வொரு பாங்கிற்கும் இகாமத் திற்கும் இடையில் ஒரு (கூடு தல்) தொழுகை உண்டு. விரும்பியவருக்கு (அதைத் தொழ உரிமை உண்டு).
627. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை ‘விரும்பியவருக்கு’ என்றார்கள்.

628. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنْ قَوْمِي فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا قَالَ "" ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَصَلُّوا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ "".
பாடம் 17
பயணத்தில் ஒருவர் மட்டுமே பாங்கு சொல்ல வேண்டும் என்ற கருத்து9
628. மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் எங்கள் (பனூ லைஸ்) கூட்டத்தார் சிலருடன் (தபூக் போர் ஆயத்தம் நடந்துகொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவ ராகவும் மென்மையானவராகவும் இருந் தார்கள்.-
(பிறகு) எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் (திரும்பிச்) செல்ல ஆசைப்படு வதைக் கண்டபோது நபியவர்கள், “நீங்கள் (உங்கள் குடும்பத்தாரிடம்) திரும்பிச் சென்று அவர்களிடையே (தங்கி) இருங் கள்; அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்; (என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே) நீங்கள் தொழுங்கள்; தொழுகை நேரம் வந்ததும் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

629. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ. فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". حَتَّى سَاوَى الظِّلُّ التُّلُولَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم {إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ}
பாடம் : 18
பயணிகள் குழுவாகச் செல்லும்போதும், (ஹஜ்ஜில்) அரஃபா மற்றும் முஸ்த-ஃபாவில் இருக்கும்போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான அல்லது மழைபெய்யும் இரவுகளில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்’) என்று அறிவிப்புச் செய்வதும்
629. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர் பாங்கு சொல்ல முற்பட்டார். அப்போதும் அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள்.
பிறகு (மூன்றாவது முறையாக) அவர் பாங்கு சொல்ல முற்பட்டபோதும் அவரிடம் “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். (எனவே, நாங்கள் வெப்பம் தணியும்வரை அந்த நாளின் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்.) எந்த அளவுக்கென்றால் மணல்மேடு களு(டைய உயரத்து)க்குச் சமமாக அவற்றின் நிழல் படிந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகி றது” என்று சொன்னார்கள்

630. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صلى الله عليه وسلم يُرِيدَانِ السَّفَرَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا "".
பாடம் : 18
பயணிகள் குழுவாகச் செல்லும்போதும், (ஹஜ்ஜில்) அரஃபா மற்றும் முஸ்த-ஃபாவில் இருக்கும்போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான அல்லது மழைபெய்யும் இரவுகளில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்’) என்று அறிவிப்புச் செய்வதும்
630. மா-க் பின் அல்ஹுவைரிஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
பயணம் புறப்படவிருந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பயணம் புறப்பட்டுச் செல்லும்போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக ‘பாங்கு’ சொல்-ப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்!” என்று சொன்னார்கள்.

631. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، أَتَيْنَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا أَوْ قَدِ اشْتَقْنَا سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا فَأَخْبَرْنَاهُ قَالَ "" ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ ـ وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا ـ وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ "".
பாடம் : 18
பயணிகள் குழுவாகச் செல்லும்போதும், (ஹஜ்ஜில்) அரஃபா மற்றும் முஸ்த-ஃபாவில் இருக்கும்போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான அல்லது மழைபெய்யும் இரவுகளில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்’) என்று அறிவிப்புச் செய்வதும்
631. மா-க் பின் அல்ஹுவைரிஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ லைஸ் கூட்டத்தைச் சேர்ந்த) ஒத்த வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். - (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த (எங்கள் குடும்பத்)தவர் களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரி வித்தோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். (நான் கட்டளையிட்டதைச் செய்யுமாறு) அவர் களை ஏவுங்கள்- என்று கூறி, சில விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். ‘அவற்றை நான் மனனமிட்டுள்ளேன்’ அல்லது ‘அவற்றை நான் மனனமிட வில்லை’- என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால், உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

632. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، قَالَ أَذَّنَ ابْنُ عُمَرَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ بِضَجْنَانَ ثُمَّ قَالَ صَلُّوا فِي رِحَالِكُمْ، فَأَخْبَرَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ مُؤَذِّنًا يُؤَذِّنُ، ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِهِ، أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ. فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوِ الْمَطِيرَةِ فِي السَّفَرِ.
பாடம் : 18
பயணிகள் குழுவாகச் செல்லும்போதும், (ஹஜ்ஜில்) அரஃபா மற்றும் முஸ்த-ஃபாவில் இருக்கும்போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான அல்லது மழைபெய்யும் இரவுகளில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்’) என்று அறிவிப்புச் செய்வதும்
632. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவை அடுத்துள்ள) ‘ளஜ்னான்’ எனும் இடத்தில் குளிரான ஓர் இரவில் பாங்கு சொன்னார்கள். பிறகு “உங்கள் இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்’) என்று அறிவித்தார்கள்.
மேலும், பயணத்தின்போது குளிரான அல்லது மழை பொழியும் இரவில் தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லும்போது பாங்கின் இறுதியில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்) என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்.

633. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِالأَبْطَحِ فَجَاءَهُ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ، ثُمَّ خَرَجَ بِلاَلٌ بِالْعَنَزَةِ حَتَّى رَكَزَهَا بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالأَبْطَحِ وَأَقَامَ الصَّلاَةَ.
பாடம் : 18
பயணிகள் குழுவாகச் செல்லும்போதும், (ஹஜ்ஜில்) அரஃபா மற்றும் முஸ்த-ஃபாவில் இருக்கும்போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான அல்லது மழைபெய்யும் இரவுகளில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்’) என்று அறிவிப்புச் செய்வதும்
633. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் (மக்காவின் புறநகரில்) ‘அப்தஹ்’ எனுமிடத்தில் கண்டேன். (அங்கு இருந்தபோது தொழுகை நேரம் வந்தது). அப்போது பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தொழுகை (நேரம் வந்து விட்டது) பற்றித் தெரிவித்தார்கள்.
பிறகு பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ‘அப்தஹ்’ எனும் அந்த இடத்தில் (தடுப்பாக) நட்டு வைத்துவிட்டு, தொழுகைக்காக ‘இகாமத்’ சொன்னார்கள்.

634. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى بِلاَلاً يُؤَذِّنُ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا بِالأَذَانِ.
பாடம் : 19
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லும் போது தமது வாயை இங்கு மங்குமாக (வலம் இடமாக)த் திருப்ப வேண்டுமா? அவர் பாங்கு சொல்லும்போது (‘ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறுகையில் வலப் பக்கமும் இடப் பக்கமும்) திரும்ப வேண்டுமா?
பாங்கு சொல்லும்போது பிலால் (ரலி) அவர்கள் தம் (சுட்டு) விரல்களின் நுனிகளை இரு காதுகளுக்குள் வைத்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்படுகிறது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும்போது தம்மிரு (சுட்டு)விரல் நுனிகளை காதுகளுக்குள் வைக்கமாட்டார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், “அங்கத் தூய்மை (உளூ) இல்லாமல் பாங்கு சொல்வதில் தவறில்லை” என்று கூறினார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(பாங்கு சொல்வதற்காக) அங்கத் தூய்மை (உளூ) செய்வது (மார்க்கத்தில்) உள்ளதுதான்; நபிவழியே” என்று கூறியுள்ளார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் (அங்கத் தூய்மை உள்ளபோதும் இல்லாதபோதும்) அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (தொழுகை அறிவிப்பும் அல்லாஹ்வை நினைவு கூர்வதுதான்.)
634. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிலால் (ரலி) அவர்கள், பாங்கு சொல்லும்போது (இரு திசைகளிலும் உள்ள மக்களுக்குக் கேட்பதற்காக) தமது வாயை இங்குமங்கும் (வலம் இடமாகத்) திருப்பிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.10

635. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ فَلَمَّا صَلَّى قَالَ "" مَا شَأْنُكُمْ "". قَالُوا اسْتَعْجَلْنَا إِلَى الصَّلاَةِ. قَالَ "" فَلاَ تَفْعَلُوا، إِذَا أَتَيْتُمُ الصَّلاَةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا "".
பாடம் : 20
“எங்களுக்குத் தொழுகை தவறி விட்டது” என்று கூறல்
இவ்வாறு கூறுவதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் விரும்பவில்லை. மாறாக, “(தொழுகையை) நாங்கள் அடைந்துகொள்ளவில்லை” என்று கூறலாம் என்றார்கள்.
(ஆனால், பின்வரும் ஹதீஸில் ‘தவறிப் போனது’ என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே,) நபி (ஸல்) அவர்களின் சொல்லே சரியானதாகும்.
635. அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது (வேகமாக வரும்) சிலரது காலடி ஓசையை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தொழுது முடித்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சலசலப்பு எழுந்தது)?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)” என்று பதிலளித்தனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங் கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) நிறைவு செய்யுங்கள்” என்று கூறினார்கள்.11

636. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلاَةِ، وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا "".
பாடம் : 21
தொழுகையில் சேர்வதற்காக யாரும் வேகமாகச் செல்லக் கூடாது; நிதானமாகவும் கண்ணியமாகவும் செல்ல வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், “(இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். தவறிப்போன (ரக்அத்)தை (பின்னர்) நிறைவு செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
636. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கூட்டுத் தொழுகைக்காக) ‘இகாமத்’ சொல்வதை நீங்கள் செவியுற்றால் தொழுகைக்கு(ச் சாதாரணமாக) நடந்தே செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். (அவசரப்பட்டு) ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பின்னர்) நிறைவு செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

637. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ كَتَبَ إِلَىَّ يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي "".
பாடம் : 22
(தொழுகைக்கு) ‘இகாமத்’ சொல்லப்படும்போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் எப்போது எழ வேண்டும்?
637. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழுந்திருக்க வேண்டாம்.12
“இதை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்” என ஹிஷாம் அத்துஸ்துவாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

638. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ "". تَابَعَهُ عَلِيُّ بْنُ الْمُبَارَكِ.
பாடம் : 23
தொழுகைக்கு அவசரப்பட்டு விரைந்து செல்லலாகாது; நிதான மாகவும் கண்ணியமாகவும் எழுந்து செல்ல வேண்டும்.
638. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழ(வோ செல்லவோ) வேண்டாம்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

639. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ وَعُدِّلَتِ الصُّفُوفُ، حَتَّى إِذَا قَامَ فِي مُصَلاَّهُ انْتَظَرْنَا أَنْ يُكَبِّرَ انْصَرَفَ قَالَ "" عَلَى مَكَانِكُمْ "". فَمَكَثْنَا عَلَى هَيْئَتِنَا حَتَّى خَرَجَ إِلَيْنَا يَنْطُفُ رَأْسُهُ مَاءً وَقَدِ اغْتَسَلَ.
பாடம் : 24
(இகாமத் சொன்னபிறகு) ஏதாவது காரணத்திற்காகப் பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லலாமா?
639. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டு, தொழுகை வரிசைகள் சீர் செய்யப் பட்டுவிட்டபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தாம் தொழும் இடத்தில் (போய்) நின்றதும் (முதல்) ‘தக்பீர்’ சொல்வார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம்.
ஆனால், (தாம் பெருந்துடக்கிற்காகக் கடமையான குளியலை நிறைவேற்றாதது நினைவுக்கு வரவே) “அப்படியே இருங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பி (தமது இல்லத்திற்கு)ச் சென்றார்கள். ஆகவே, அவர்கள் நீராடிவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும்வரை நாங்கள் (அவர்களை) எதிர்பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தோம்.13

640. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَسَوَّى النَّاسُ صُفُوفَهُمْ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَقَدَّمَ وَهْوَ جُنُبٌ ثُمَّ قَالَ "" عَلَى مَكَانِكُمْ "". فَرَجَعَ فَاغْتَسَلَ ثُمَّ خَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً فَصَلَّى بِهِمْ.
பாடம் : 25
(இகாமத் சொல்லப்பட்டபின்) இமாம், “நான் திரும்பி வரும் வரை அப்படியே இருங்கள்” என்று (மக்களிடம்) சொல்-விட்டுச் சென்றால், (அவர் வரும்வரை) அவரை மக்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
640. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது அவர்கள் பெருந்துடக்குடன் இருந்தார்கள். (நினைவு வந்தவுடன்) “அப்படியே இருங்கள்” என்று (மக்களிடம்) கூறிவிட்டு, (தமது இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தலையி-ருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

641. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمَ الْخَنْدَقِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، وَذَلِكَ بَعْدَ مَا أَفْطَرَ الصَّائِمُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَاللَّهِ مَا صَلَّيْتُهَا "" فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى ـ يَعْنِي الْعَصْرَ ـ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
பாடம் : 26
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் ‘நாம் தொழவில்லை’ என்று சொன்னது
641. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! சூரியன் மறையும் நேரம் நெருங்கும்வரை என்னால் (அஸ்ர் தொழுகையைத்) தொழ முடியா மற் போய்விட்டது” என்று கூறினார்கள். அ(வ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறிய)து, நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்திற்குப் பிறகேயாகும்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதைத் தொழ (முடிய)வில்லை” என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கி னார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். (அங்கு) அங்கத் தூய்மை (உளூ) செய்து சூரியன் மறைந்தபின் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள்.14

642. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِي رَجُلاً فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ.
பாடம் : 27
‘இகாமத்’ சொன்னபின் இமா முக்கு ஏதேனும் தேவை ஏற் படுவது
642. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் இஷா) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் ஒரு பகுதியில் ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். (எவ்வளவு நேரம் அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தினார்களெனில்) மக்கள் உறங்கிவிடும்வரை அவர்கள் தொழுகைக்கு (வந்து) நிற்கவில்லை.